குமரி மாவட்டம் குளச்சல் முதல் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வரை கடலில் சூறைக்காற்று வீசும் என மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சூறைக்காற்று 45 கி.மீ. முதல் 55 கி.மீ வேகத்தில் வீசும்போது 12 அடிவரை அலைகள் எழ வாய்ப்பு உள்ளது.
நடிகர் சங்கத்தால் தமிழகத்திற்கே தலைகுனிவு பிஆர்.பாண்டியன் கண்டனம்.
திருவாரூர்.
தமிழக அனைத்து விவசாயிகள் சங்கஙகளின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பிஆர்.பாண்டியன் மன்னார்குடியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி விபரம்.
கர்நாடகத்தில் நடிகர்கள் தண்ணீர் தரக்கூடாது என தொடர்ந்து போராட்டம் நடத்தி முதல்வர் ஜெயலலிதாவையும் அவமதித்துள்ளனர். இந்நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கம் கூடி போராட்டத்தில் பங்கெடுப்பார்கள் என்று தமிழகமே எதிர்பார்த்திருந்த நிலையில் கன்னடர்களின் போராட்டத்தை ஊக்கப்படுத்தும் விதத்திலும், தமிழர்களின் உணர்வுகளை நசுக்கும் வகையிலும் போராட்டத்தில் ஈடுபடமாட்டோம் என முடிவு எடுத்திருப்பது வேதனையளிக்கிறது.
தமிழக முதல்வரை அவமதித்தற்காக கண்டனம் தெரிவிக்கும் தமிழக நடிகர்கள் கன்னடர்களை எதிர்த்து போராட்டம் நடத்த தயங்குவது ஏன்.
தமிழகத்திலிருந்து நடிக்க சென்ற நடிகர்கள் கூட கன்னடர்களுக்கு ஆதரவளித்துள்ளனர். தமிழக மக்களை நம்பி பிழைப்பு நடத்தும் நடிகர்கள் சங்கம் தமிழர்களுக்கு பாதிப்பு வரும்போது தட்டிக்கழிப்பது ஏன். உங்களுடைய தமிழ் உணர்வு எங்கே சென்றது.
காவிரி தண்ணீரை குடித்து உயிர்வாழக்கூடிய நடிகர்கள் நன்றி மறப்பது ஏன். தமிழர்களை நமது பிழைப்பிற்கு பயன்படுத்தும் நடிகர்கள் தமிழர்கள் தாக்கப்படும்போது எதிரிகளுக்கு இடம் கொடுக்கும் வகையில் ஓழிந்துகொள்ளலாமா . இதற்கெல்லாம் நடிகர் சங்கம் பதில்சொல்லியாக வேண்டும்.
இதனை தமிழக மக்களும், தமிழகமும் ஒருபோது மன்னிக்க மாட்டார்கள். தென்னிந்திய நடிகர் சங்கத்தை கலைத்துவிட்டு தமிழ்நாடு நடிகர் சங்கம் என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும். அந்த அமைப்பிற்கு தமிழர்கள்தான் பொறுப்பிற்கு வரவேண்டும். அண்டை மாநில நடிகர்கள் யாரும் தமிழகத்தில் நடிப்பதையோ தொழில் செய்வதையோ இனி அனுமதிக்கக்கூடாது. நடிகர் சங்கத்தால் தலைகுனிவு ஏற்பட்டுள்ள நிலையில் தமிழத்தில் இனி எந்த ஒரு நடிகனுக்கும் நடிகர் சங்கம் வைக்கக்கூடாது என்ற முடிவை இளைஞர்கள் எடுக்க வேண்டும். இனி தமிழக விவசாயிகளுக்கு எதிரானவர்கள் நடிகர்கள். தமிழகத்தில் உள்ள ரசிகர் மன்றங்களை சங்கங்களை உடனடியாக கலைத்திட வேண்டும் எனக்கூறியுள்ளார்.
பாஸ்போர்ட்க்கு போட்டோ எடுக்க என்ன ட்ரஸ் போடணும்?
பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு விண்ணப்பித்தவர்கள் அடர்நிற(Dark Colour) உடையை அணிந்து சென்றால் புகைப்படம் தெளிவாக இருக்கும்
வெளிர்நிற துணிகளால் முகம் தெளிவாக தெரியாது
குறிப்பாக பெண்கள் பாரம்பரிய உடை அணிவது நல்லது
கோடுகள், பூக்கள், பலநிறம் கலப்பு தவிற்கவும்
பனியன் கண்டிப்பாக தவிற்கவும்
இது எனது அநுபவத்தால் அறிந்தது
மற்ற அலுவலகம் செல்வதுபோல் “சாதாரணமாக” விருப்ப உடை அணிந்து செல்லாதீர்கள் பாஸ்போர்டில் உள்ள புகைப்படம் மிகமுக்கியமான ஆவணம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்
ஆடை ஒழுங்கு நல்லதே. எனவே அலுவலக உடை மிகவும் நல்லது
– பாலு சரவண சர்மா
தமிழரைத் தாக்கிய கன்னட இளைஞர்களை கைது செய்யாவிட்டால் எதிர்வினை ஏற்படும்: பெ.மணியரசன்
தமிழரைத் தாக்கிய கன்னட இளைஞர்களை கைது செய்யாவிட்டால் தமிழ்நாட்டில் இதற்கு எதிர்வினைகள் உருவாவதைத் தவிர்க்க முடியாது என்று காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
பெங்களுருவில் நேற்று (10.09.2016) தமிழ் இளைஞர் ஒருவர், கன்னட வெறியர்களால் அடித்து, மிதித்து, மண்டியிடச் செய்து, மன்னிப்புக் கேட்க வைத்து, கர்நாடகாவிற்கு “ஜே” போட சொல்லி, அத்துடன் நிறைவடையாமல் மேலும் மேலும் தாக்கி செத்த நாயை இழுப்பது போல், இழுத்துச் சென்று தெருவில் போட்டுவிட்டுப் போன கொடும் காட்சியை ஊடகங்களில் கண்டு உள்ளம் கொதிக்கிறது.
அந்தத் தமிழ் இளைஞன் செய்த குற்றம் என்ன? சட்டப்படி தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய காவிரி நீரை அடைத்து வைத்துக் கொண்டுள்ள கர்நாடகம், உச்ச நீதிமன்றம் ஒரு பிரிவு தண்ணீரை தமிழ்நாட்டிற்குத் திறக்க உத்தரவிட்டவுடன் அதைக் கண்டித்து கர்நாடகாவில் முழு அடைப்பை நடத்தியது. அதை முகநூலில் இந்தத் தமிழ் இளைஞர் விமர்சித்திருந்ததாகக் கூறுகிறார்கள். இதனால் ஆத்திரமடைந்து பழிவாங்குவதற்கு அந்த இளைஞனை, பகல் நேரத்தில் மக்கள் நடமாட்டமுள்ள சாலையில் மேற்கண்டவாறு தாக்கி சித்திரவதை செய்து இழிவுபடுத்தியுள்ளார்கள்.
நாம் தொடர்ந்து சொல்லி வருவது, காவிரிச் சிக்கல் கன்னடர்களைப் பொறுத்தவரை தண்ணீர் சிக்கல்ல, அது இனச்சிக்கல் என்பதாகும். கன்னடர்களைப் பொறுத்தவரை தமிழ் இனத்தை பழிவாங்கும் சிக்கல்தான் காவிரிச் சிக்கல். தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மக்களும், அனைத்து கட்சிகளும், உழவர் இயக்கங்களும் இந்த உண்மையை உணர வேண்டும்.
காவிரித் தீர்ப்பாயத்தின் இடைக்காலத் தீர்ப்பை 1991 திசம்பரில், இந்திய அரசு அரசிதழில் வெளியிட்ட போது, அப்போதிருந்த பங்காரப்பாவின் காங்கிரசு ஆட்சி, அதைக் கண்டித்து கர்நாடகத்தில் முழு அடைப்பு நடத்தியது. அந்த முழு அடைப்பின்போது, கன்னட வெறியர்கள் காலங்காலமாக கர்நாடகத்தில் வாழ்ந்து வரும் அப்பாவித் தமிழர்கள் பலரை இனப்படுகொலை செய்தார்கள். தமிழர்களின் வீடுகளை, வணிக நிறுவனங்களை பல்லாயிரக்கணக்கில் எரித்தார்கள்; சூறையாடினார்கள். தமிழ்ப் பெண்களை மானபங்கப்படுத்தினார்கள். 2 இலட்சம் கர்நாடகத் தமிழர்கள் அகதிகளாக தமிழ்நாட்டிற்கு ஓடி வந்தார்கள். எந்த வித ஆத்திரமூட்டலிலும் ஈடுபடாத கர்நாடகத் தமிழர்கள் அப்போது கன்னட இன வெறியர்கள் இவ்வாறு தாக்கப்பட்டார்கள்.
இப்பொழுது உச்ச நீதிமன்றம் கர்நாடகம் தமிழ்நாட்டிற்குத் திறந்துவிட வேண்டிய தண்ணீரை, திறந்துவிட ஆணையிட்ட உடன், உடனே ஆத்திரமடைந்து மாநில அரசின் ஆதரவுடன் முழு அடைப்பு நடத்தி, தமிழ்நாட்டு பதிவெண் கொண்ட வாகனங்களைத் தாக்கி சேதப்படுத்தினார்கள். அடுத்த கட்டமாகத் தமிழ் இளைஞரைத் தாக்கியுள்ளார்கள். அந்த இனவெறிக் கயவர்களை இதுவரை கர்நாடகக் காவல்துறை கைது செய்யவில்லை. அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யவில்லை. மாறாக, தமிழர்களுக்கு எதிரான கன்னட இனவெறித் தாக்குதலை கர்நாடக அரசும், காவல்துறையும் மறைமுகமாக ஊக்குவிக்கின்றன.
தமிழ் இளைஞர் கொடூரமாகத் தாக்கி இழிவுபடுத்தப்பட்டக் காட்சியை தொலைக்காட்சியிலும், சமூக வலைத்தளங்களிலும் பார்த்த இலட்சக்கணக்கானத் தமிழ்நாட்டு இளைஞர்கள் இரத்தம் கொதித்துப் போய் உள்ளார்கள். இது 1991 திசம்பர் அல்ல! 2016 செப்டம்பர் என்பதை கன்னட இனவெறியர்களுக்கு எச்சரிக்கையாக சொல்லிக் கொள்கிறேன்.
கர்நாடக அரசு அவர்களைக் கைது செய்து சிறையில் அடைக்கவில்லையென்றால், இது போன்ற தாக்குதல்கள் தொடர்ந்தால். அதற்கான எதிர்வினைகள் தமிழ்நாட்டிலும் பீறிட்டுக் கிளம்பும். வினை விதைத்தவன் வினையை அறுவடை செய்ய வேண்டிய நிலை தமிழ்நாட்டில் உருவாகும். எனவே, கர்நாடக அரசு உடனடியாக தமிழ் இளைஞர்களைத் தாக்கிய கயவர்களை உரியக் குற்றப்பிரிவின் கீழ் கைது செய்து, சிறையிலடைக்க வேண்டுமென்று காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
தமிழ்நாட்டு அரசு, அண்டை மாநிலங்களில் தமிழினம் தாக்கப்படும் போது வேடிக்கைப் பார்க்கக் கூடாது. தமிழ் இளைஞனைத் தாக்கியக் கயவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க, தமிழ்நாடு அரசு கர்நாடக அரசை வலியுறுத்த வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
தமிழ்நாட்டிலுள்ள மக்களும், இயக்கங்களும் காவிரிச் சிக்கலில் தமிழின உரிமைச் சிக்கலாக உணர்ந்து, இன அடிப்படையில் ஒன்று திரள வேண்டும் என்ற உண்மையை இனியாவது உணர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
பெ.மணியரசன்
ஒருங்கிணைப்பாளர்,
காவிரி உரிமை மீட்புக் குழு
மாலை நேரச் செய்திகள்: சில வரிச் செய்திகள்
சென்னையில் பெரியார் கைத்தடி ஊர்வலம் நடத்திய திராவிட விடுதலை கழகத்தினர் கைது
விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு எதிராக ஐஸ்ஹவுஸ் பகுதியில் ஊர்வலம் நடத்தியவர்கள் கைது
கடலில் சூறைக்காற்று வீசும்: மீனவர்களுக்கு எச்சரிக்கை -குமரி மாவட்டம் குளச்சல் முதல் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வரை கடலில் சூறைக்காற்று வீசும் என மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சூறைக்காற்று 45 கி.மீ. முதல் 55 கி.மீ வேகத்தில் வீசும்போது 12 அடிவரை அலைகள் எழ வாய்ப்பு உள்ளது*
1] கொரிய தீபகற்பத்தில் பதட்டம்: வட கொரிய தலைநகரை அழித்துவிட திட்டமா? -மேற்கொள்ளப்பட இருக்கும் அணு குண்டு தாக்குதலை குறிப்புணர்த்தி வட கொரியாவின் தலைநகரை முழுமையாக அழித்து விடுகின்ற திட்டம் ஒன்றை தென் கொரிய அதிகாரிகள் வெளிப்படுத்தியிருக்கும் கொரிய தீபகற்பத்தில் விவாதங்கள் அதிகரித்துள்ளன.நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்த திட்டத்தின் விவரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தென் கொரிய அரசடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ள யான் ஹப் செய்தி நிறுவனம் கூறியிருக்கிறது.
2] செளதி அரேபியாவில் ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்வதற்காக உலகம் முழுவதும் இருந்து சுமார் ஒன்றரை 15 லட்சம் இஸ்லாமியர்கள் இறுதி ஆயத்த பணிகளில் ஈடுபட்டுள்ளனர்
3] இந்திய நிர்வாகத்திற்கு உட்பட்ட காஷ்மீரில் மேலும் மோதல்கள் நடைபெற்று வருகின்றன; தீவிரவாதிகளுடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில், காவல்துறை அதிகாரி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
4] சிரியாவின் உள்ளே நடக்கும் தற்போதைய நடவடிக்கை, இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் அமைப்பிற்கு எதிரான சண்டையின் முதல் படி என்று துருக்கி அதிபர் ரிசெப் தாயிப் எர்துவான் தெரிவித்துள்ளார்
5] ஸ்பெயினில் பெரிதும் விரும்பப்படும் எருது விடும் விளையாட்டை முடிவுக்கு கொண்டு வர வேண்டுமென கோரி ஆயிரக்கணக்கானோர் மாட்ரிட் வீதிகளில் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்
6] வெனிஸ் திரைப்பட விழா: பிலிப்பைன்ஸ் திரைப்படத்திற்கு தங்க சிங்க விருது -பிலிப்பைன்ஸில் நடைபெறும் பழிவாங்கும் கதை ஒன்று வெனிஸ் திரைப்பட விழாவில் உயரியதொரு விருதை வென்றிருக்கிறது.கறுப்பு வெள்ளை வண்ணத்தில் காட்சிப்படுத்தப்பட்ட பிலிப்பைன்ஸை சேர்ந்த இயக்குநர் லே டையஸால் இயக்கப்பட்ட “த வுமென் கு லெப்ட்” என்ற திரைப்படம் அநியாயமாக சிறைப்படுத்தப்படும் ஆசிரியை பற்றி விவரிக்கிறது
7] கர்நாடகத்தில் உள்ள எழுச்சி இங்கே இல்லை. இது வருந்தத்தக்கது. இப்போது நாங்கள் தெருவில் இறங்கி போராட ஆரம்பித்தால் பற்றி எரியும் என்று நாம் தமிழர் கட்சி தலைவர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்
8] அதர்வா நடிக்கும் இமைக்கா நொடிகள் என்ற படத்தில் ரொமான்ஸ் இயக்குனர் கெளதம் மேனன் வில்லனாக நடிகவுள்ளார்
9] விஷால் “எல்லா அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களும் நடிகர் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். எனவே சங்கத்திற்குள் அரசியலை கொண்டு வர விருப்பமில்லை. தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் மேற்பார்வையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. காவிரி விவகாரம் குறித்து தனிப்பட்ட முறையில் என்னிடம் கருத்து கேட்டால் நான் கூறுவேன். ஆனால் நடிகர் சங்க நிர்வாகி என்ற முறையில் என்னால் எதுவும் கூற முடியாது. காவிரி விவகாரத்தில் நடிகர் சங்கம் தலையிடாது” என்று கூறினார்
10] ராதிகா ஆப்தே நடிப்பில் வெளிவரவுள்ள திரைப்படைத்தின் படுக்கறை காட்சிகள் இணையதளங்களில் ஏற்கனவே வெளியாகியது. அதைத்தொடர்ந்து தற்போது அந்த வீடியோ காட்சி உடைய டிவிடி ரூ.90க்கு சந்தைகளில் விற்பனை செய்யப்படுகிறது -பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான் தாயாரிப்பில் வெளிவரவுள்ள பார்ச்ட் என்ற திரைப்படத்தில் ராதிகா ஆப்தே நடித்துள்ளார். இந்த திரைப்படத்தின் படுக்கறை காட்சிகள் ஏற்கனவே இணையதளத்தில் வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.அதைத்தொடர்ந்து அந்த காட்சிகள் கொண்ட டிவிடி சந்தையில் ரூ.90க்கு விற்பனை செய்யப்படுகிறது. இப்படம் வருகிற 28ஆம் தேதி வெளிவர உள்ள நிலையில் இதுகுறித்து அஜய் தேவ்கான் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார்
11] *கமல்ஹாசன் தன்னுயை டிவிட்டர் பக்கத்தில் “நவம்பர் மாதத்திலிருந்து நான் என்னுடைய வேலையை தொடங்கலாம் என மருத்துவர்கள் கூறிவிட்டனர். எல்லோருடைய அன்பாலும் விரைவில் குணமடைந்துவிட்டேன். எல்லோருக்கும் நன்றி. சபாஷ் நாயுடு திரைப்படம் மூலம் அந்த அன்பை திருப்பித் தருவேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்
12] ஜாகிர் நாயக் ஒன்றும் ஒட்டுமொத்த இந்திய முஸ்லிகளின் தலைவர் கிடையாது, தவறு செய்தால் அரசு நடவடிக்கை எடுக்கும் என்று மத்திய மந்திரி வெங்கய்யா நாயுடு தெரிவித்து உள்ளார்
13] சுப்ரமணிய சாமிக்கு தமிழ் ரத்னா விருது: அமெரிக்க தமிழ்ச் சங்கம் வழங்கியது
14] 22 பேரை பலி கொண்ட டாக்கா ஓட்டல் பயங்கரவாத தாக்குதல் பயங்கரவாதி தற்கொலை செய்துக் கொண்டான்
15] வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி: சென்னையில் 2 நாட்களுக்கு இரவில் பலத்த மழை பெய்யும் – வானிலை மையம் தகவல்
16] டெல்லி: ஜம்மு-காஷ்மீர் நிலவரம் குறித்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். தேசிய பாதுகாப்பு ஆலோசகர், உளவுத்துறை தலைவர் ஆகியோருடன் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆலோசனை நடத்தி வருகிறார்
17] * காவிரியில் தண்ணீர் திறக்க மறுக்கும் கர்நாடக அரசின் சிறப்பு மனு நாளை காலை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. காவிரி கண்காணிப்புக்குழு கூட்டம் நாளை காலை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது*
18] திருவாடனை அருகே நாரேந்தலில் லாரி மோதி இரு சக்கர வாகனத்தில் சென்ற 2 பேர் உயிரிழந்தனர். நமுதாழை கிராமத்தைச் சேர்ந்த ராகவன் மற்றும் உத்தரகுமார் விபத்தில் உயிரிழந்தனர்
19] * மதுரை மேலப்பெருமாள் மேஸ்திரி வீதியில் மரக்கடையில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. மரக்கடைக்கு அருகே இருந்த 5 கார்களும் தீயில் எரிந்து நாசமாகியது*
20] குளித்தலை அருகே அய்யர் மலையில் மணல் லாரி மோதி ஸ்கூட்டரில் சென்ற சுருமாயி என்பவர் உயிரிழந்தார். அரசு வேகத்தில் செல்லும் மணல் லாரிகளுக்கு தடை விதிக்கக் கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்
21] இறுதிமூச்சு வரை அரசியலில் இருப்பேன்; சரத்குமார்
22] ரஷ்யா, அமெரிக்கா செல்கிறார் ராஜ்நாத்
23] பெங்களூருவில் கன்னட வெறியர்களால் தமிழ் இளைஞர் ஒருவர் தாக்கப்பட்டது அதிர்ச்சியும், வேதனையும் தருகிறது என்று பாமக நிறுவனர் டாக்டர்ராமதாஸ் கூறியுள்ளார்
vishwarubam9962023699
தமிழ் இளைஞரை தாக்கிய கன்னட வெறியர்களை கைது செய்க: ராமதாஸ்
இருமுகன்: விமர்சனம்
ஹிட் கொடுத்த இயக்குனர் ஆனந்த் ஷங்கர் சீயான் விக்ரம் , கோலிவுட்டின் no.1 ஹீரோயின் நயன்தாராவுடன் கை கோர்த்திருப்பதால் எதிர்பார்ப்புக்கு பஞ்சமில்லாத படம் இருமுகன் . ஆனால் படம் அதை பூர்த்தி செய்ததா ? பார்க்கலாம் …
சுஜாதா கதையில் கமல் நடித்த விக்ரம் படத்தை கொஞ்சம் கெமிக்கல் கலந்து வில்லனாக வும் விக்ரமை நடிக்க வைத்திருப்பதே இருமுகன் . மனைவி கொலை செய்யப்பட்ட பிறகு வேலையை விட்டுவிட்டு தனி வாழ்க்கை வாழ்கிறார் ரா ஏஜென்ட் அகிலன் ( விக்ரம் ) . தன் மனைவியை ( நயன்தாரா ) கொன்ற லவ் ( விக்ரம் ) சம்பந்தப்பட்ட கேஸுக்கு ரா அவரது உதவியை நாட மீண்டும் களத்தில் குதிக்கிறார் விக்ரம் . அதில் அவர் ஜெயித்தாரா என்பதை லாஜிக் என்கிற வஸ்துவை சுத்தமாக மறந்து விட்டு கொஞ்சம் சுவாரஸ்யமாகவும் , கொஞ்சம் நீளமாகவும் சொல்வதே இருமுகன் …
விக்ரம் எந்த ஒரு கேரக்டருக்கும் தன்னை முழுமையாக அர்ப்பணிப்பவர் . அகிலன் , லவ் என்று இரண்டு வேடங்களிலும் உடல்மொழிகளில் வித்தியாசம் காட்டும் விக்கிரமின் நடிப்பு இதிலும் தொடர்கிறது . ஆனால் தனது மேனரிசம் மூலம் முதலில் கவரும் லவ்கேரெக்டர் போகப்போக படம் ஜவ்வாக இழுப்பதால் போரடிக்கிறது . நயன்தாரா வின் உடை குறைய குறைய சம்பளம் ஏறிக்கொண்டே போகிறது போல . இடைவேளையில் அவர் கொடுக்கும் ட்விஸ்ட் ரசிக்கவைக்கிறது . அதன் பிறகு நடக்கும் சம்பவங்கள் நம் பசிக்கு தீனி போடவில்லை . ரா ஆபீஸராக வரும் நித்யா மேனன் விபச்சாரியாக வேஷம் போடுவதும் அதற்கு தம்பி ராமையாவின் கவுண்டரும் ரணகளம் . ரித்விகா கபாலியின் கன்டினியூட்டி போல மலேசியா வில் நடக்கும் படத்தில் வந்து போகிறார் …
மலேசியாவில் உள்ள இந்திய தூதரகத்தை தனி மனிதனாக ஒரு கிழவன் வந்து அட்டாக் செய்வதும் , ஸ்பீட் என்கிற கெமிக்கல் வஸ்துவே அந்த கிழவரின் ஆக்ரோஷத்துக்கு காரணம் என்பதும் நம்மை நிமிர்ந்து உட்கார வைக்கின்றன . அகிலன் இந்த கேஸை கையில் எடுப்பதும் , அதை தொடர்ந்து மலேசியாவில் நடக்கும் சம்பவங்களும் ரசிக்கவே வைக்கின்றன . இறந்துவிட்டதாக நினைத்த நயன்தாரா இண்டெர்வெளில் ஆஜராவது ட்விஸ்ட்டாக இருந்தாலும் அதற்கு சொல்லப்படும் காரணங்கள் நம்பும்படியாக இல்லை . ஸ்பீட் கெமிக்கலை இன்ஹேள் செய்த ஐந்து நிமிடங்களுக்கு நடக்கும் ஆக்சன் காட்சிகள் அதிரடி . ஆனால் ஐந்து நிமிடங்களுக்கு பிறகு அதை எடுத்துக்கொண்டவர்கள் மயங்கி விட விக்ரம் மட்டும் கேசுவலாக இருப்பது குளறுபடி . அதே போல காவல்நிலையத்தையே காலி செய்து விட்டு எஸ்கேப் ஆகும் லவ் விக்ரம் மாடல் போல மெதுவாக அங்குமிங்கும் உலாத்திக் கொண்டிருப்பது காதில் பூக்கூடை …
ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பின்னணி இசை பட்டையை கிளப்புகிறது . இரண்டு பாடல்கள் ரசிக்க வைத்தாலும் மற்றவை ஸ்பீட் ப்ரேக்கர்ஸ் . ஆர்.டி ராஜசேகரின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் . கொஞ்சம் லாஜிக் சொதப்பல்கள் இருந்தாலும் முதல் படம் அரிமா நம்பி யின் வேகமான திரைக்கதையை இதில் மிஸ் செய்திருக்கிறார் இயக்குனர் . விக்ரமின் நடிப்பு , ஆர்டி யின் ஒளிப்பதிவு , ஹாரிஸ் ஸின் இசை , ஆக்சன் என டெக்கனிகளாக சவுண்டாக இருக்கும் இருமுகன் லாஜிக்கலாக வீக்காக இருக்கிறான் …
ஸ்கோர் கார்ட் : 41
ரேட்டிங் : 2.5 * / 5 *
செய்திகள் சில வரிகளில்
காஞ்சிபுரத்தில் காவேரி பிரச்சினை குறித்து உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ. நெடுமாறன் பேட்டி .
காவேரி பிரச்சினையில் பிரதமர் மோடி உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்று காவேரி மேலாண்மை அமைக்க வேண்டும்.
பிரதமர் மோடி காவிரி பிரச்சினை குறித்து இரு மாநிலத்தின் முதலமைச்சர்களை கூப்பிட்டு பேச்சு வார்த்தை நடத்த முன்வந்திருப்பது மிகவும் கண்டிக்கதக்கது.மேலும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை அவமதிப்பதாகும்.எனவே இந்த போக்கை பிரதமர் கைவிடவேண்டும்.
♈????????????இராயபுரம் 48-வது வட்டத்தில் சிதிலமடைந்த சிறுவர் பூங்காவை புதுப்பித்து அமைச்சர் டி.ஜெயக்குமார் இன்று திறந்து வைத்தார்
———————————–
மாண்புமிகு தமிழக முதலமைச்சர்
ஜெயலலிதா அவர்களின் ஆணைக்கிணங்க இராயபுரம் தொகுதி 48-வது வட்டம் பார்த்தசாரதி நகரில் உள்ள சிறுவர் விளையாட்டு பூங்கா, நடைபயிற்சி வளாகம், சமுதாய கூடம் ஆகியவை பல ஆண்டுகளாக சிதிலமடைந்த டைந்த நிலையில் இருந்தது தற்போது அதை புதுப்பிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்காக அமைச்சர் டி.ஜெயக்குமார், அவரின் திருக்கரங்கங்களால் இன்று திறந்து வைத்தார் இதில் பகுதி செயலாளர் சி பி இராமஜெயம், மாமன்ற உறுப்பினர்கள் ஆர். பூங்கொடி, என் வி. ரவி, மற்றும்
டி. கந்தன், நா.ப.சாரதி மாவட்ட மாணவரணி செயலாளர் எஸ் எஸ் கே. கோபால், வட்ட செயலாளர் எஸ் ஆர். இராஜசேகர்,மற்றும் பா.சங்கர் உடன் மாவட்ட பகுதி வட்ட பிற அணி நிர்வாகிகள் பலர் இருந்தனர்
♈????????????வடசென்னை பத்திரிக்கையாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் ஆலோசனை கூட்டம் இன்று
மருது கணேஷ், மற்றும் பாக்யா ஆகியோரது தலைமையில் வண்ணாரப்பேட்டையில் உள்ள மன்றத்தில் நடைபெற்றது இதில் அனைவரும் ஒன்றினைத்து சங்க செயல்பாடு மற்றும் அடுத்தடுத்து கட்ட பணிகள் குறித்தும் ஆலோசனை நடைபெற்றது நிகழ்ச்சியில் நிருபர்கள் பலர் கலந்து கொண்டனர்
♈????????????chennai-ஆர் கே.நகர் திமுக கிழக்கு பகுதி கழகத்தின் சார்பில் 42-வட்டம்
174 – பாகத்தில் உள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் தகுதியுள்ள அனைத்து பொதுமக்களும் இடம் பெற ஏதுவாக 18 – வயது பூர்த்தியடைந்த புதிய வாக்காளர்களை சேர்த்தல், மற்றும் பெயர் நீக்கம் தொடர்பாக படிவங்களை பகுதி செயலாளர் என். மருது கணேஷ், தலைமையில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி இன்று நடைபெற்றது இதில் சிம்லா முத்துசோழன்,
எம் எம். சாமி, மற்றும் திமுகவினர் பலர் உடன் இருந்தனர்
♈????????????புதுக்கோட்டையில் சக வார, மாத இதழ் செய்தியாளர்களை அநாகரீகமாக சண்டை போடும் வெத்து வேட்டு மாலை நாளிதழ் நிருபர்… தீபாவளி வசூலுக்கு இப்பவே செய்தியாளர்கள் பட்டியல் தயார் செய்ய சொல்லி சங்க தலைவரை கட்டாயம் செய்யும் இந்த நிருபர்… கட்சி நிகழ்ச்சிக்கு சென்று இவர் தனியாக ஓரு கவர்… இவரது புகைப்பட கலைஞரை அனுப்பி அவரை இரண்டு கவர் வாங்குவது ஆக நாளிதழ் ஓன்றுதான் கவர் மூன்று…. இவர் நேர்மையான முறையில் செயல்படும் புலனாய்வு மாத வார இதழ் நிருபர்களை கொச்சைப்படுத்துவது கண்டிக்கத்தக்கது….
♈????????????வினாயகர் சதூர்த்தியை யொட்டி சென்னை இராயபுரம் தொகுதியில் உள்ள பல்வேறு இடங்களில் சமபந்தி விருந்து வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் டி.ஜெயக்குமார், கலந்து கொண்டு பொதுமக்களுக்கு உணவுகளை வழங்கினார். இதில் பகுதி செயலாளர் சி பி இராமஜெயம், காவல் உதவி ஆணையர் ஆனந்த் குமார், பூங்கொடி எம் சி, என் வி. இரவி எம் சி, சந்திரமதிசேகர், டி. கந்தன், நா.ப.சாரதி, மற்றும் வட்ட கழக செயளாளர்கள் மாவட்ட மாணவரணி செயலாளர் எஸ் எஸ் கே கோபால், பா. சங்கர், மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்
1] *சிரியாவில் திட்டமிடப்பட்டுள்ள போர்நிறுத்தத்திற்கு முன்னதாக, போரிடும் பல தரப்பினரும் தங்களுடைய நிலைகளை பலப்படுத்தி கொள்வதற்காக, சிரியாவின் இட்லிப் மற்றும் அலெப்போ நகரங்களில் நடத்தப்பட்ட விமானத் தாக்குதல்களில் 100-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
2] *செஷெல்ஸ் தீவில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் இரண்டு தசாப்த காலங்களில் முதல் முறையாக எதிர்க்கட்சி வெற்றி பெற்றிருக்கிறது
3] சிட்னியில் தீவிரவாதத் தாக்குதல் நடத்தியதாக ஒருவர் கைது -சிட்னியின் தென் மேற்கு பகுதியில் தீவிரவாதத் தாக்குதல் நடத்தியதாகவும், கொலை செய்ய முயற்சித்ததாவும் 22 வயதான ஒருவர் மீது ஆஸ்திரேலிய காவல் துறையினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.இந்த நபர் இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்து கொள்ளும் குழுவினரால் தூண்டப்பட்டவர் என்று அவர்கள் கூறுகின்றனர்
4] ஹஜ் போதனையிலிருந்து விலகும் செளதியின் மூத்த மதகுரு: கமேனியின் சாடல் காரணமா? -சௌதி அரேபியாவின் முன்னிலை மதகுரு, 35 ஆண்டுகளில் முதல்முறையாக, இந்த ஆண்டு பாரம்பரிய ஹஜ் போதனை வழங்கப் போவதில்லை என்று அறிக்கைகள் தெரிவிகின்றன. `இரானியர்கள் முஸ்லிம்கள் அல்ல’ என்று அவர் வெளியிட்ட கருத்தைத் தொடர்ந்து இந்தத் தகவல் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.சௌதி அரேபியாவின் ஹஜ் பயண மேலாண்மையை இரானின் உயரிய மதத் தலைவர் அயதுல்லா அலி கமேனி இழிவாகப் பேசியதைத் தொடர்ந்து இந்தக் கூற்று வெளிப்பட்டது.
5] வட கொரியா அணுகுண்டு சோதனை: தண்டனையை ஆராய்கிறது அமெரிக்கா -மிகவும் சமீபத்தில் வட கொரியா நடத்திய அணுகுண்டு சோதனைக்கு தண்டனை அளிக்கும் விதமாக தன்னிச்சையான செயல்பாடுகளை முன்னெடுக்க அமெரிக்கா ஆலோசித்து வருவதாக வட கொரியாவுக்கான அமெரிக்காவின் சிறப்பு தூதர் தெரிவித்திருக்கிறார்
6] ஸ்ரீநகர்,பாதுகாப்பு படையினர் இரவு நேரங்களில் ரெய்டு நடத்துவதாக குற்றம் சாட்டி ஆயிரக்கணக்கானோர் சாலைகளில் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது மோதல் ஏற்பட்டதில் 50 பேர் காயம் அடைந்து உள்ளனர்
7] மல்லையா பிஎம்எல்ஏ வழக்கு; அமலாக்கப்பிரிவு மூன்றாவது முறையாக சொத்துக்களை பறிமுதல் செய்கிறது
8] ஜம்மு-காஷ்மீரில் எல்லையில் பயங்கரவாதிகள் ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டது. பயங்கரவாதிகள் மூவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்
9] உ.பி.யில் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற பா.ஜனதாவின் கனவு நிறைவேறாது நிதிஷ் குமார்
10] தான்சானியா நிலநடுக்கத்தில் 13 பேர் உயிரிழப்பு, 200 பேர் காயம்
11] வங்காள தேசத்தில் பயங்கரம் ஆலையில் பாய்லர் வெடித்து தீ விபத்து; 25 பேர் கருகி சாவு
12] லக்னோ: இந்திய கிரிக்கெட் அணியின் வேகபந்து வீச்சாளர் பிரவீண் குமார் சமாஜ்வாதி கட்சியின் இணைந்தார். முதல்வர் அகிலேஷ் யாதவ் முன்னிலையில் இணைந்தார்
13] குஜராத் மாநிலம் சூரத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது
14] சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் பயிர்கள் சேதமடைந்தன. மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்
15] சென்னையை அடுத்த பெருங்களத்தூரில் முடிச்சூர், வரதராஜபுரத்தைச் சேர்ந்த மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பருவமழை முன்னதாக அடையாற்றை தூர்வார பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். தூர் வாரி அடையாறு கரைகளை பலப்படுத்தவும் முடிச்சூர், வரதராஜபுரம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
16] திருத்தணி அருகே டெங்கு காய்ச்சலுக்கு 3 வயது சிறுமி மன்விதா உயிரிழந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த மன்விதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர்
17] ஐதராபாத்தில் துணிகடையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் கடை முழுவதும் புகைமூட்டமாக காட்சியளிக்கிறது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்*
18] மேற்கு வங்கம் மாநிலம் சிலிகுரியில் மின்கம்பி அறுந்து விழுந்து 2 யானைகள் உயிரிழந்தன. இது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். யானை உயிரிழந்தது அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது. கடந்த சில மாதங்களாக தொடர்ந்து யானைகள் உயிரிழந்து வருவது குறிப்பிடத்தக்கது
19] கும்பகோணத்தில் முகமது இக்பால் என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. துக்க நிகழ்ச்சிக்காக முகமது இக்பால் வெளியூர் சென்றிருந்தபோது மர்மநபர்கள் கைவரிசைக் காட்டியுள்ளனர்
20] காஷ்மீரில் பூஞ்ச் மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் போலீஸ் ஒருவர் உயிரிழந்தார். கட்டிடம் ஒன்றில் பதுங்கியுள்ள தீவிரவாதிகளை பிடிக்க கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது
21] ராமநாதாபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்தனர். கடுகுசந்தை அருகே நின்றிருந்த போலீஸ் வாகனம் மீது மினிவேன் மோதியது. இந்த விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்தனர்
22] சென்னை திருவல்லிக்கேணியில் விநாயகர் ஊர்வலம்
23] கோவில்பட்டி அருகே லாரி மீது டிப்பர் லாரி மோதல் – ஒருவர் பலி -2பேர் காயம்
24] ஜீ.வி.பிரகாஷ், சரத்குமார் இணையும் அடங்காதே ….ஜீ.வி.பிரகாஷ் காட்டில் மழைவிட்டபாடில்லை. அரை டஜன் படங்கள் கைவசம் வைத்திருப்பவர், புதிதாக மேலும் ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்
25] அஜித் தலைமையில் நடக்கவிருக்கும் அப்புக்குட்டியின் திருமணம் -அஜித் நடித்த வேதாளம், வீரம் மற்றும் தற்போது ’தல 57’ என்கிற படத்திலும் நடித்து வருபவர் சிவபாலன் என்கின்ற அப்புக்குட்டி. சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக அஜித் சிவபாலனை வைத்து போட்டோ சூட் ஒன்றையும் நடத்தினார் என்பது குறிப்பிடதக்கது. அப்புக்குட்டியின் உண்மையான பெயரான சிவபாலனையே பயன்படுத்துமாறும் அவருக்கு அறிவுரை கூறியுள்ளார் அஜித்.இந்நிலையில், சென்னையில் உள்ள வளசரவாக்கத்தில் புதிய வீடு கட்டி வரும் அவருக்கு ஊரில் பெண் பார்த்துள்ளார்களாம். அதனை அஜித்தின் தலைமையில் நடக்க வேண்டும் என கேட்டு கொண்டராம் அப்புக்குட்டி. அதற்கு அஜித்தும் சம்மதம் தெரிவித்துள்ளாராம். விரைவில் அஜித் தலைமையில் சிபாலனுக்கு திருமணம் நடக்க போவதாக கோலிவுட் வட்டாரங்களில் எதிர்பார்க்கப்படுகிறது.
26] சூடான அஸ்வின்; தவித்த நடுவர்கள் –
தமிழ்நாடு பிரிமீயர் லீக் போட்டியில் திண்டுக்கல்-சேப்பாக்கம் ஆகிய அணிகள் இடையே நடந்த போட்டியில் சர்வதேச கிரிக்கெட் வீரர் அஸ்வின்களத்தில் கோபம் அடைந்ததால் நடுவர்கள் செய்வதறியாது திகைத்தனர். கடந்த வெள்ளிக்கிழமை நடைப்பெற்ற போட்டியில் திண்டுக்கல் அணியும் சேப்பாக்கம் அணியும் மோதியது. சர்வதேச கிரிக்கெட் வீரர் அஸ்வின் சேப்பாக்கம் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். திண்டுக்கல் அணியின் பந்து வீச்சாளர் சாய் கிஷோர் பந்தில் சேப்பாக்கம் அணியின் வீரர் ஜெகதீசன் அவுட்டாக, சாய் கிஷோர் அவரிடம் வம்பிழுக்க, களத்தில் அஸ்வின் கோபமடைந்து கிஷோரிடம் மோதலுக்கு தாயாராகி விட்டார். திண்டுக்கல் அணியின் மற்ற வீரர்கள் அஸ்வினை சமாதானம் செய்தனர். நடுவர்கள் என்ன செய்வது தெரிமால் திகைத்துபோய் நின்றனர்.
26] குத்துச்சண்டை போட்டியில் மனிதரோடு மோதும் கங்காரு : கலக்கல் வீடியோ -குத்துச்சண்டை போட்டியில் மனிதரோடு, ஒரு கங்காரு மோதும் அசத்தல் வீடியோ சமூகவலைத்தளங்களில் வலம் வருகிறது
27] சாம்சங் கேலக்ஸி நோட் 7 உரிமையாளர்கள் பேட்டரி வெடிப்பின் காரணமாக அதனை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என ஐக்கிய அமெரிக்க நாடுகளின் நுகர்வோர் தயாரிப்பு பாதுகாப்பு ஆணையம் எச்சரித்துள்ளது
28] மத்திய ராணுவ அமைச்சர் மனோகர் பரிக்கர் கூறிய கருத்திற்கு எதிர்கருத்து கூறியதால், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்பியான நடிகை ரம்யா மீது ஏற்கனவே ஒரு தேசத் துரோக வழக்கு நடைபெற்று வருகிறது -இந்நிலையில், அவர், சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசும் போது, ”சுதந்திரப் போராட்டத்தின் போது, ஆர்எஸ்எஸ் அமைப்பினர், ஆங்கிலேயர்களுடன் கூட்டு வைத்திருந்தார்கள்” என்றார்.இதையடுத்து, அவர் மீது வழக்கறிஞர் வசந்த் மரகடா என்பவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால், புகாரை ஏற்கப்படவில்லை. இதனால், அவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, நடிகை ரம்யா மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளார்
29] காக்கா முட்டை மணிகண்டனின் அடுத்த வெளியீடு ஆண்டவன் கட்டளை. பாஸ்போர்ட் பிரச்சனையை மையப்படுத்திய இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, ரித்திகா சிங் நடித்துள்ளனர்
30] செப்டம்பர் 13ஆம் தேதி பக்ரித் பண்டிகையை முன்னிட்டு ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 144 தடை உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு அம்மாநில அரசை கேட்டுக்கொண்டுள்ளது
♈????????????திருநங்கைகளுக்கு வேலைவாய்ப்பில் முக்கியத்துவம்!
சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார் தமிழ்நாடு சமூக நலத் துறை அமைச்சர் சரோஜா.
தமிழ்நாட்டில் திருநங்கைகளுக்கு வேலைவாய்ப்பில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
4000க்கும் மேற்பட்ட திருநங்கைகளுக்கு உதவிகள் செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
♈????????????இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில்
எஸ் பி ஜெயச்சந்திரன் தலைமையில் .
2 ஏடிஎஸ் பி
12 எஸ் பி மற்றும் காஞ்சிபுரம், விழுப்புரம், திருப்பூர், திருவண்ணாமலை, சேலம், கடலுர் ஆகிய 6 மாவட்டல்களை சேர்ந்த 750 போலிசார் உட்பட 2 ஆயிரம் பேர் 340 இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர் 16 இடங்களில் வீடியோ கேமராவுடன் கூடிய செக்போஸ்ட் அமைக்கப்பட்டுள்ளன மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான கடைகள் அடைப்பு
vishwarubam9962023699
ஊழலுக்கு எதிரான சட்டங்களை தீவிரமாக அமல்படுத்த வேண்டும்: உ.சகாயம்
லஞ்சம், ஊழலுக்கு எதிரான சட்டங்களைத் தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என்று சென்னை அறிவியல் நகரத்தின் துணைத் தலைவர் உ.சகாயம் வலியுறுத்தினார்.
கோவை மாவட்ட ஊழல் எதிர்ப்பு இயக்கம் சார்பில் “ஊழிக் கூத்தாடும் ஊழலில் இருந்து தாய்நாட்டைக் காப்போம்’ என்ற தலைப்பில் கோவை, வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை கருத்தரங்கு நடைபெற்றது.
இதில், சிறப்பு அழைப்பாளராக ஐ.ஏஸ்.எஸ். அதிகாரி உ.சகாயம் பங்கேற்றுப் பேசினார். அதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கிரானைட் முறைகேடு குறித்து ஆய்வு செய்து, விரிவான அறிக்கையை நீதிமன்றத்துக்கு சமர்ப்பித்துள்ளேன். நான் ஏற்கெனவே கூறியிருப்பதைப் போன்று மக்களைப் போலவே நானும் அந்த வழக்கின் தீர்ப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். ஊழல் ஒழிப்பு என்பது அரசுக்கு எதிரானது அல்ல. அது அரசுக்கு மேலும் வலுசேர்க்கக் கூடியது. ஊழல் செய்பவர்களை தண்டிக்கப் போதுமான அளவு சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இருப்பினும் அதுபோன்ற வழக்குகளில்
கூடுதல் கவனம் செலுத்தி, வலுவான ஆதாரங்களைத் திரட்டி, நீதிமன்றத்தில் சமர்ப்பித்தால் குற்றவாளிக்கு நிச்சயமாக தண்டனை கிடைக்கும். அதேநேரம் லஞ்சம், ஊழலுக்கு எதிரான சட்டங்களை அமல்படுத்தக் கூடியவர்கள் தீவிரமாக செயல்படுவதும் அவசியம் என்றார்.
காற்றழுத்த தாழ்வுப் பகுதி: இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும்
சென்னை:
காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதால், தமிழகத்தில் இடியுடன் கூடி மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேற்கு வங்கக் கடலின் வெளிமண்டலத்தில் உருவான மேலடுக்கு சுழற்சியால், தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்துள்ளது. சனிக்கிழமை காலை நிலவரப்படி, அதிகபட்சமாக சென்னையில் 40 மி.மீ. மழை பதிவானது.
புதுக்கோட்டை மாவட்டம் பெருங்கலூர், கீரனூரில் 30 மி.மீ, திருவண்ணாமலை, திண்டுக்கல் மாவட்டம் நந்தம், அரியலூர் மாவட்டம் திருமனூர், வேலூர் மாவட்டம் ஆலங்கயம், காஞ்சிபுரம் மாவட்டம் காட்டுக்குப்பம், பண்ருட்டி, விழுப்புரம் ஆகிய இடங்களில் 20 மி.மீ. மழையும், திருவள்ளூர் மாவட்டம் சோழவரம், செங்கல்பட்டு, திருச்சி மாவட்டம் மருங்காபுரி, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், வேலூர் மாவட்டம் வாணியம்பாடி, திருச்சியில் 10 மி.மீ. மழையும் பதிவானது.
இந்த நிலையில் மேற்கு வங்கக்கடலில் உருவாகியிருந்த மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாற வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு வங்கக் கடற்பகுதியில் ஒடிசாவை ஒட்டியுள்ள கடற்பகுதியில் வெளிமண்டலத்தில் உருவாகியிருந்த மேலடுக்கு சுழற்சி, காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறலாம். இதனால், தமிழகம் – புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலைமைய அதிகாரிகள் தெரிவித்தனர்.



