Home Blog Page 5738

கோத்திரம் தெரியாவதர்களுக்கு,காசியப கோத்திரம்; ஸூத்திரம் தெரியாதவர்களுக்கு,போதாயன ஸூத்திரம்

 

அந்த அன்பருக்கு திருச்சி ரயில்வே அலுவலகத்தில் பணி, இரண்டு பையன்கள்,ஒரு பெண்.

மகா சுவாமிகளிடம் அபார பக்தி. பெரியவாள் எங்கே முகாமிட்டிருந்தாலும் வருடத்துக்கு நாலைந்து முறைகள், குடும்பத்தோடு தரிசனத்துக்கு வருவார். மின்னல் வேக தரிசனம் இல்லை.ஓரிரு நாள்கள் தங்கி பெரியவாளின் நெருக்கத்தை நிதானமாக அனுபவித்து விட்டுத்தான் போவார்.

“இந்தப் பையனுக்கு ஒன்பது வயதாயிடுத்து, உபநயனம் நடத்தணும்” என்று பெரியவாளிடம் விக்ஞாபித்துக் கொண்டார், ஒரு முறை. “செய்யேன்…”

“பையனின் கோத்திரம்…சூத்திரம் தெரியல்லே…” பெரியவாள் நிமிர்ந்து பார்த்தார்கள். “உன்னோட….பையன்தானே?”

இல்லை! பையனின் கர்ப்பவாச காலத்திலேயே தகப்பனார் சிவலோகம் போய்ச் சேர்ந்தார். இரண்டு மாதக் குழந்தையை விட்டு விட்டு தாயாரும் போய்ச் சேர்ந்து விட்டாள்.கிராமத்தில் குழந்தையைப் பராமரிக்கும் பொறுப்பை யார் ஏற்பார்கள்?” “நாங்கள் குழந்தையை எடுதுண்டு வந்தோம்.ஊர்,பெயர்,பந்து, ஜனங்கள் தெரியலை,திருநெல்வேலி பக்கம் ஏதோ அக்ரஹாரம் என்று மட்டும் கேள்வி…”

பெரியவாள் முகத்தில் அசாதாரணமான புன்னகை. அருகிலிருந்த தொண்டர் கண்ணனிடம், “பாரு….ஓர் அநாதைக் குழந்தையை எடுத்துண்டு வந்து,வளர்த்து, பூணூல் போடப் போறார்! என்ன மனஸ் இவருக்கு..” கண்ணன் சொன்னார்: “அவரோட..சொந்தப் பிள்ளைனுதான் நாங்களும் நினைத்துக் கொண்டிருன்ந்தோம்!”

பெரியவாள் மனசுக்குள்ளே ஆனந்தப்பட்டுக் கொண்டு சொன்னார்கள்”

“கோத்திரம் தெரியாவதர்களுக்கு,காசியப கோத்திரம்;
ஸூத்திரம் தெரியாதவர்களுக்கு,போதாயன ஸூத்திரம்
என்று கேள்விப்பட்டிருக்கேன்.

அது மாதிரி சொல்லி, பூணூல் போடு,ஆனா,குழந்தையை அந்நியமா நினைச்சுடாதே.உன் பையன்தான்.” பிரசாதம் பெற்றுக்கொண்டு மன நிறைவுடன் நகர்ந்தார்கள்

நியூஸிலாந்துடன் டெஸ்ட் தொடர்: இந்திய அணி அறிவிப்பு

மும்பை: நியூஸிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது.

விராட் கோலி தலைமையில் 15 பேர் கொண்ட அணியில் நட்சத்திர வீரர் ரோஹித் ஷர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆனால், ஆல்ரவுண்டரான ஸ்டூவர்ட் பின்னி அணியில் இடம்பெறவில்லை.

இந்திய டெஸ்ட் அணியில், விராட் கோலி, கே.எல். ராகுல், சட்டேஸ்வர் புஜாரா, ரஹானே, முரளி விஜய், ரோகித் ஷர்மா, ஆர். அஸ்வின், விருத்திமான் சாஹா, ரவீந்திர ஜடேஜா, முகமது சமி , இஷாந்த் ஷர்மா, புவனேஷ்வர் குமார், ஷிகர் தவான், அமித் மிஸ்ரா, உமேஷ் யாதவ் ஆகியோர் இடம்பெற்றுள்னர்.

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் நியூஸிலாந்து அணி, இந்தியாவுடன் 3 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 5 ஒரு நாள் போட்டிகளிலும் பங்கேற்க உள்ளது.
இந்தியா – நியூஸிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் கான்பூரில் 22ம் தேதி துவங்க உள்ளது.

காலை நேர செய்தித் தொகுப்பு

1] வட மேற்கு பாகிஸ்தானில் அரசின் போலியோ ஒழிப்பு திட்டத்தில் முன்னணி பிரமுகரான மருத்துவர் ஒருவரை அடையாளம் தெரியாத ஆயுததாரி சுட்டுக் கொன்றுள்ளார்

2] உகாண்டாவில் அதிபரின் பசுவை திருடிய குற்றச்சாட்டில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்; மத்திய உகாண்டாவில் அதிபர் யோவேரி முசேவேனிக்கு நீண்ட கொம்புகளை கொண்ட பசுமாட்டுப் பண்ணை உள்ளது; இந்த பசுக்கள் அங்கிருந்துதான் திருடப்பட்டதாக போலிஸார் தெரிவித்துள்ளனர்

3] லிபியாவின் கிழக்கில் உள்ள கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த எண்ணெய் நிலையங்களைக் கைப்பற்ற, புதிய மோதல்கள் வெடித்துள்ளன

4] ”அமெரிக்காவின் கொள்கைகளை பாதுகாக்க வேண்டும்”: அதிபர் ஒபாமா வேண்டுகோள் -15 ஆண்டுகளுக்குமுன், உலக வர்த்தக மைய கட்டடத்தின் வடக்கு டவர் பகுதியில் விமானம் ஒன்று மோதிய அதே நேரத்தில் அதனை குறிக்கும் விதமாக நியுயார்க் நகரில் மணிகள் ஒலித்தன.செப்டம்பர் 11 ஆம் தேதி நடந்த தாக்குதலில் சுமார் 3000 பேர் கொல்லப்பட்டனர். வெள்ளை மாளிகையில் அதிபர் ஒபாமா ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினார். 15 ஆண்டுகளுக்குமுன், விமான தாக்குதலுக்கு உள்ளான அமெரிக்க பாதுகாப்புத் தலைமையகமான பென்டகனில் இன்று நடைபெற்ற நினைவு கூட்டத்தில் பேசிய அதிபர் ஒபாமா, ஒரே தேசம் என்ற குணத்தை மீண்டும் உறுதிப்படுத்த வேண்டும் என்று அமெரிக்கர்களை வலியுறுத்தி உள்ளார்.மேலும், அமெரிக்காவை மட்டுமின்றி அதன் கொள்கைகளையும் பாதுகாக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்

5] இலங்கையில், மத்திய மாகாண சபையினால் புதிதாக நியமனம் வழங்கப்பட்டுள்ள கணிதம் , விஞ்ஞானம் மற்றும் ஆங்கில பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் 1 சதவீதத்திற்கும் குறைவான தமிழர்களே நியமனம் பெற்றுள்ளனர்

6] சிரியாவில் அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிற்கு இடையேயான ஒப்பந்தத்தால் திங்களன்று தொடங்கவுள்ள போர் நிறுத்தத்தில் கலந்து கொள்வது குறித்து சிரியா போராளி குழுக்கள் இன்னும் இறுதி முடிவெடுக்கவில்லை

7] ’அதிரடி’ – பதிவு செய்யப்படாத இணையத்தளங்களை முடக்க நடவடிக்கை -இலங்கை நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் தொலைத் தொடர்புகளை ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவிற்கும் இடையில் கலந்துரையாடல் நடைப்பெற்றது.

8] 450 குழந்தைகளின் எலும்புக்கூடுகள் கிணற்றில் கண்டுபிடிப்பு -கிரீஸ் நாட்டில் ஒரு பழைய கிணற்றில் ஏரத்தாள 450 குழந்தைகளின் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

9] பச்சமுத்து சென்னை எழும்பூர் சிபிசிஐடி அலுவலக வளாகத்தில் விசாரணை அதிகாரி முன்னிலையில் ஆஜராகி கையெழுத்திட்டார்

10] கர்நாடக காங்கிரஸ் அரசு திசை திருப்பும் விதமாக மாநில மக்களின் ஆதரவை பெறத்தான் காவிரி பிரச்சினையை கையில் எடுத்துள்ளது என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்

11] தேநீர் பிரியர்களா நீங்கள்? – அப்படியென்றால் இதைப் படியுங்கள் முதலில் -சமீபத்தில் தேயிலை மொத்த வர்த்தக நிறுவனம் ஒன்றிலிருந்து 25 டன் அளவிலான தரம் குறைந்த டீத்தூள் பாக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று உணவு பாதுகாப்பு கழக அதிகாரி தெரிவித்தது ஊடகங்களில் வெளிவந்தது. உணவு பாதுகாப்பு கழகத்தினரின் திடீர் சோதனையில் பிடிபட்ட இந்த தரம் குறைவான டீத்தூள் பாக்கெட்டுகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிகிறது.ஆய்வு முடிவுகள் வெளி வந்ததும் காலாவாதியான டீத்தூள் பாக்கெட்டுகளை விற்பனை செய்வதற்கு டீக்கடைகள் மற்றும் தேயிலை மொத்த வர்த்தக நிலையங்களுக்கு தடை விதிக்கப்படலாம்.அது மட்டுமல்லாமல் தேயிலை விற்பனை உரிமங்களை ரத்து செய்வதற்கான நடவடிக்கையில் தேயிலை வாரியம் ஈடுபடலாம் என்ற செய்தியும் வெளி வந்துள்ளது.வாடிக்கையாளர்களை கவரும் நோக்கில் தரம் குறைவான டீத்தூளில் நிறத்துக்காக பெரும்பாலும் பிஸ்மார்க் பிரவுன், பொட்டாசியம் ப்ளு, செயற்கை மஞ்சள் தூள், இண்டிகோ போன்றவைகள் உணவு பாதுகாப்பு கழகத்தால் அங்கீகரிக்கப்படாத வேதிப்பொருட்கள் சேர்க்கப்படுகின்றன.இந்த வேதிப்பொருட்கள் கல்லீரல் மற்றும் செரிமான மண்டலத்தில் அதிகபாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியவை. தொடர்ந்து இந்த தரம் குறைந்த டீத்தூளில் தயாரான டீ அருந்துபவர்களுக்கு பல விதமான உடல் நல கோளாறுகள் வரலாம்.எனவே தேநீர் பிரியர்கள் தாங்கள் அருந்தும் தேநீர் தரமானதுதானா என்பதில் கவணமாக இருப்பது நல்லது.

12] உறவு மறுத்தால் விவாகரத்து: உயர் நீதிமன்றம் -கணவன்-மனைவி இருவரில் யார் தாம்பத்யத்துக்கு மறுத்தாலும் விவாகரத்து அளிப்பதில் தவறு இல்லை என்று டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
டெல்லியை சேர்ந்த ஒருவர் அவருடைய மனைவி அவருடன் தாம்பத்யத்தில் ஈடுபட மறுத்து வந்ததால், குடும்பல நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை எதிர்த்து அவருடைய மனைவி டெல்லி உயர் நீதிமன்றத்தில் அப்பீல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கணவர் தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்டு விவாகரத்து அளிப்பதாகவும் கூறினார்கள். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-திருமணம் என்றாலே அதில் தாம்பத்திய வாழ்க்கை நிச்சயமாக இருக்க வேண்டும். தாம்பத்திய வாழ்க்கை இல்லாத திருமணம் என்று ஒன்று இல்லை. இந்த வழக்கில் மனைவி தாம்பத்யத்துக்கு சம்மதிக்காமல் இருந்துள்ளார். இது ஒரு வகையில் கணவரை கொடுமைப்படுத்துவதாகும்.எனவே, அவருக்கு பெண்ணிடம் இருந்து விவாகரத்து அளிக்கிறோம். கணவன்-மனைவி இருவரில் யார் தாம்பத்யத்துக்கு மறுத்தாலும் விவாகரத்து அளிப்பதில் தவறு இல்லை. மருத்துவ ரீதியாக பிரச்சினை இருந்தால் மட்டுமே அது வேறு மாதிரியாக அணுகப்படும், என்று தெரிவித்தனர்

13] டெல்லியில் இன்று நடைபெறும் காவிரி மேற்பார்வை குழு கூட்டத்தில் தமிழகம், கர்நாடகம் உள்ளிட்ட 4 மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் கலந்து கொள்கிறார்கள். தமிழகத்துக்கு கூடுதல் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்ற கோரிக்கை பற்றி இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது

14] உத்தரபிரதேசத்தில் யாத்திரை: பகுஜன்சமாஜ், சமாஜ்வாடி கட்சிகள் மீது ராகுல் காந்தி தாக்கு ‘யானை எல்லா பணத்தையும் சாப்பிட்டு விட்டது; சைக்கிள் பஞ்சராகி விட்டது’

15] உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ரஷியா, அமெரிக்காவில் சுற்றுப்பயணம் 18–ந்தேதி புறப்பட்டு செல்கிறார்

16} காவிரி நீர் பிரச்சினை: வெறுப்பு பிரசாரத்தை யாரும் தூண்டிவிட வேண்டாம் சித்தராமையா வேண்டுகோள்

17] 4 நாள் பயணமாக நேபாள பிரதமர் பிரசண்டா 15–ந் தேதி இந்தியா வருகிறார்

18] அமெரிக்காவுக்கு வடகொரியா ‘திடீர்’ கோரிக்கை ‘எங்களை அணுஆயுத நாடாக அறிவிக்க வேண்டும்’

19] வெள்ள பேரிடரை நினைவில் கொண்டு மக்களை பாதுகாப்பதற்கான முயற்சிகளை இப்போதே மேற்கொள்ள வேண்டும் தமிழக அரசுக்கு, கருணாநிதி வலியுறுத்தல்

20] தமிழகத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அணை பாதுகாப்பு சட்ட மசோதாவை மறுஆய்வு செய்யவேண்டும் பிரதமருக்கு, ஜெயலலிதா வலியுறுத்தல்

21] சென்னையில் 2,200 விநாயகர் சிலைகள் பிரமாண்ட ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன. இதனால் சென்னை கடற்கரையில் மக்கள் கூட்டம் அலைமோதியது

22] புயலுடன் வடகிழக்கு பருவமழை பெய்யும்போது மீட்புப்பணிகளில் ஈடுபட போலீசாருக்கு பயிற்சி அளிக்கவேண்டும் தமிழக டி.ஜி.பி.க்கு, தலைமைச் செயலாளர் கடிதம்

23] ஜம்மு-காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பூஞ்ச் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படைகளுக்கும் இடையே மீண்டும் துப்பாக்கிச்சூடு நடைபெற்று வருகிறது. பூஞ்ச் மாவட்டத்தில் நேற்று நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது

24] கேரளா மாநிலம் முழுவதும் இன்று பக்ரித் திருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. திருவனந்தபுரம் மாவட்டத்தில் இன்று அதிகாலை முதல் மசூதியில் தொழுகை செய்து வருகின்றனர்

25] யு.எஸ். ஓபன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன் ஜோகோவிச்சை வீழ்த்தி வாவ்ரிங்கா சாம்பியன் பட்டம் வென்றார். வாவ்ரிங்கா, 6-7, 6-4, 7-5, 6-3 என்ற செட் கணக்கில் ஜோகோவிச்சை வீழ்த்தி வெற்றி பெற்றார்

26] சேலம் மாநகர போலீஸ் கமிஷனராக கடந்த 2006-2008ம் ஆண்டில் பணியாற்றியவர் கோபாலகிருஷ்ணன் (67). சந்தன கடத்தல் வீரப்பனை பிடிப்பதற்கு அமைக்கப்பட்ட அதிரடிப்படையில் எஸ்பியாகவும் பணியாற்றினார். இவர் பணி ஓய்வுக்கு பின், மேட்டூர் சேலம் கேம்ப் ஆதிபராசக்திநகரில் தனது சகோதரர் குடும்பத்தாருடன் வசித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் உடல்நலக்குறைவால் சென்னை வடபழனியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் நேற்று மதியம் இறந்தார். கோபாலகிருஷ்ணன் உடல் நேற்று இரவு மேட்டூருக்கு கொண்டு வரப்பட்டது. இன்று இறுதி சடங்கு நடக்கிறது

27] * செங்கல்பட்டு, நத்தம் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடிகள் கார்த்திக் (எ) முண்டக்கண் கார்த்திக் (25), தினேஷ் (23). இவர்கள் கடந்த 20 நாட்களுக்கு முன்பு செங்கல்பட்டில் உள்ள டாஸ்மாக் கடையில் ஊழியர்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் கேட்டனர். இதுதொடர்பாக இருவரையும் செங்கல்பட்டு டவுன் போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீது ஏற்கனவே கொலை, கொள்ளை மற்றும் ஆள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. காஞ்சிபுரம் எஸ்.பி.முத்தரசி, பரிந்துரையின்படி கார்த்திக், தினேஷ் ஆகியோரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டர் உத்தரவிட்டார்*

28] வங்க தேசம் மாநிலம், பங்குரா மாவட்டத்தில் நேற்று 3 பெண்கள் மீது ஆசிட் வீசி தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து ஜாய்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

29] *சென்னை: காஞ்சிபுரம் பச்சையப்பன் விளையாட்டு மைதானத்தில், தமிழ்நாடு 3வது பட்டாலியன் மற்றும் தேசிய மாணவர்கள் இணைந்து நடத்தும் 10 நாள் பயிற்சி முகாம் நடந்து வருகிறது. முகாமுக்கு லெப்டினன்ட் கர்னல் பங்கஜ் சர்மா தலைமை வகித்தார். இதில் காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், விழுப்புரம் திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இவர்களுக்கு இப்பயிற்சி முகாமில் துப்பாக்கி சுடுதல், அணிவகுப்பு, பொது அறிவு, சுகாதாரம், கவாத்து பயிற்சி மற்றும் தமிழகம் கலாசாரம் பற்றிய பயிற்சியும் அளிக்கப்பட்டது.
இதில் வெற்றி பெறுபவர்கள் அடுத்த ஆண்டு டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் கலந்து கொள்வார்கள். மேலும் இப்பயிற்சி முகாம்களை சென்னை குரூப் கேப்டன் தினேஷ் சூரி ஆய்வு மேற்கொண்டார்*

30] நடிகர் சங்கத்தில் இருந்து சரத்குமார், ராதாரவி, வாகை சந்திரசேகர் ஆகிய முவரும் நீக்கம்

31] பஞ்சாப்பில் லூதியானாவில் சட்லஜ் நதியில் விநாயகர் சிலை கரைக்க சென்ற போது 4 பேர் ஆற்றில் மூழ்கியதாக தகவல் வந்துள்ளது

32] கர்நாடகா செல்லும் தமிழக பஸ்கள் ஓசூருடன் நிறுத்தம்

33] சென்னை ஓட்டலில் பெட்ரோல் குண்டு வீச்சு

34] ராமேஸ்வரத்தில் கர்நாடக வாகனங்கள் மீது தாக்குதல்

35] சென்னை விமான நிலையத்தில் வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்

36] திருப்பூரில் இந்து முன்னணி நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

37] திருநெல்வேலி டவுனில் பிரபல பாத்திரக் கடையில் தீ விபத்து

38] பி.எப்., வட்டி குறைகிறது: 8.6 சதவீதம் வழங்க திட்டம்

ஒரே நாளில் 9 நவக்கிரக ஆலயங்கள்!

Navagraha Temples Darshan SBR010 - 2026

ஒரே நாளில் 9 நவக்கிரக ஆலயங்கள்!

ஒன்பது நவக்கிரகஆலயங்களையும் ஒரே நாளில்  தரிசனம் செய்ய காலநேரஅட்டவணையுடன் வழிதடங்கள்  !!!

ஒன்பது நவ கிரகங்கள் ஆலயங்கள் அனைத்தும் கும்பகோணம் மயிலாடுதுறை காரைக்கால் பகுதியை  சுற்றி அமைந்திருக்கின்றன. கீழ்கண்ட கால அட்டவணை படி உரிய வழி தடங்களில்  பயணம் செய்து ஒன்பது நவக்கிரக ஆலயங்களையும் ஒரே நாளில்  தரிசனம் செய்து அருள் பெறலாம்,.

*1, திங்களூர் (சந்திரன்):*
*தரிசனம் நேரம் :1மணி நேரம்*
*காலை 6மணி*

ஒன்பது  நவகிரக ஆலயங்களில் முதலில் ஆரம்பிக்கும்
வேண்டியது திங்களூர்தான். நீங்கள் பேருந்தில் செல்ல விரும்பினால் கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து  பாபநாசம், ஐயம்பேட்டை வழியாக 33 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திங்களூரை சுமார் 1 மணி நேர நேரத்தில் அடைந்து விட முடியும். இதற்கு சரியாக காலை 5.00 மணிக்கெல்லாம் கும்பகோணத்திலிருந்து நீங்கள் கிளம்ப வேண்டும். பின்னர் திங்களூர் கைலாசநாதர் கோயிலில் சுவாமி தரிசனத்தை ஒரு மணி நேரத்திற்குள் முடித்துக்கொண்டு 7 மணிக்கு ஆலங்குடி  கிளம்பலாம்.

*2, ஆலங்குடி (குரு) :*
*தரிசனம் நேரம்:1மணி நேரம்*
*காலை 7.30மணி*

ஆலங்குடியை 30 நிமிடத்தில் அடைந்து விடலாம். பின்னர் ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் ஒரு மணி நேரத்திற்குள்  சுவாமி தரிசனத்தை முடித்துக்கொண்டு  8.30 மணியளவில் கும்பகோணம் வழியாக திருநாகேஸ்வரம் கிளம்பலாம்

காலை 8.30 மணிக்குள்  இருந்து 9.00 மணிக்குள் காலை உணவை முடித்து கொள்ளலாம்

*3, திருநாகேஸ்வரம் (ராகு) :*
*தரிசனம் நேரம்:1மணி நேரம்*
*காலை 9.30*

கும்பகோணத்திற்கு வெகு அருகிலேயே 6 கிலோமீட்டர் தொலைவில் திருநாகேஸ்வரம் அமைந்திருப்பதால் 10 அல்லது 15 நிமிடங்களில், 10.00 மணியளவில் திருநாகேஸ்வரம் ராகு கோயிலை அடைந்து விட முடியும். நாகநாதசுவாமி  பெரிய கோயில் என்பதால் தரிசனம் செய்து முடிக்க  ஒரு மணி நேரம் ஆகும். பின்னர்  கும்பகோணம் வழியாக செல்ல 21 கி.மீ தொலைவில் உள்ள சூரியனார் ஆலயம் செல்ல 10.30க்கு  புறப்பட்டு 30 நிமிடத்தில் சென்று விடலாம்.

*4, சூரியனார் கோவில் (சூரியன்) :*
*தரிசனம் நேரம்:1மணி நேரம்*
*மதியம் 11.00மணி*

நீங்கள்  11.00 மணிக்கெல்லாம் சூரியனார் கோவிலை அடைந்து விடலாம். சூரியனார் கோவிலில் உள்ள சிவசூரியநாராயண கோவில் மற்ற நவகிரக கோயில்களை போல் அல்லாமல் சூரியனை முதன்மையாக கொண்டு நவக்கிரகங்களுக்கென தனித்து அமைந்த கோயில் என்ற சிறப்பை பெற்றுள்ளது. இங்கு சூரிய பகவானை தரிசித்து முடித்தவுடன் 12.00 மணிக்கெல்லாம் கஞ்சனூர் கிளம்ப வேண்டும்.

*5, கஞ்சனூர் (சுக்கிரன்) :*
*தரிசனம் நேரம்:1மணி நேரம்*
*மதியம் 12.15*

சூரியனார் கோவிலிலிருந்து கஞ்சனூர் 5 கிலோமீட்டர் தொலைவிலேயே அமைந்திருப்பதால்  மூலமாக 15 நிமிடங்களில் கஞ்சனூரை அடைந்து விடலாம். எனவே  12.15மணிக்கே உங்களால் அக்னீஸ்வரர் ஸ்வாமி கோவிலுக்கு சென்று விட முடியும். அதோடு 1.15 மணியளவில் கோயில் நடை சாத்தப்பட்டுவிடும் என்பதால் ஒரு மணி நேரத்திற்குள்ளாக சுவாமி தரிசனத்தை முடித்துக்கொள்ளவேண்டும்.

*6, வைத்தீஸ்வரன் கோயில் (செவ்வாய்) :*
*தரிசனம் நேரம் :1மணி நேரம்*
*மாலை 4மணி*

நவகிரக கோயில்கள் அனைத்திலுமே 1.15 மணிக்கு நடை சாத்தப்பட்டால் பின்பு 4 மணிக்கே கோயில் கதவுகள் திறக்கப்படும். எனவே 1.30 மணிக்கு கஞ்சனூரிலிருந்து மயிலாடுதுறை  20 கிலோமீட்டர் தொலைவிலுள்ள மயிலாடுதுறையை 2.மணிக்கெல்லாம் அடைந்து விடலாம்.  மயிலாடுதுறையிலேயே மதிய உணவை முடித்துக்கொண்டு ஆற அமர 3.00 மணியளவில் கிளம்பினால் கூட 15 கிலோமீட்டர் தூரமுள்ள வைத்தீஸ்வரன் கோயிலை 3.30 மணிக்கெல்லாம் அடைந்து விட முடியும். பின்னர் கோயில் நடை திறந்து பின்பு சுவாமி தரிசனத்தை முடித்துக்கொண்டு 5.00மணிக்கு வைத்தீஸ்வரன் கோயிலிலிருந்து கிளம்பினால் சரியாக இருக்கும்.

*7, திருவெண்காடு (புதன்) :*
*தரிசனம் நேரம்:45 நிமிடம் நேரம்*
*மாலை 5.15மணி*

வைத்தீஸ்வரன் கோயிலிலிருந்து 5.00 மணிக்கு கிளம்பினால் 16 கிலோமீட்டரில் அமைந்துள்ள திருவெண்காடு ஸ்தலத்தை 5.15மணிக்கு அடைந்துவிட முடியும். பின்னர் ஸ்வேதாரண்யேஸ்வரர் கோயிலில் வீற்றிருக்கும் புதன் பகவானையும், சிவபெருமானையும் 45 நிமிஷம்  மணிநேரத்திற்குள் தரிசித்துவிட்டு 6.00மணிக்கு கிளம்ப வேண்டும்.

*8, கீழ்பெரும்பள்ளம் (கேது) :*
*தரிசனம் நேரம்:45 நிமிடம் நேரம்*
*மாலை 6.15மணி*

திருவெண்காட்டிலிருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில் அமையப்பெற்றுள்ள கேது பகவானின் கீழ்பெரும்பள்ளம் ஸ்தலத்தை 15 நிமிடங்களில் 6.15 அடைந்து விடலாம்.  ஜாதகத்தில் தவறான இடத்தில் கேது இருப்பதால் தோஷம் அடைந்த மக்கள், அதற்கு பரிகாரம் செய்ய இந்த கோயிலுக்கு வருகிறார்கள்.45 நிமிஷம் நேரத்திற்குள் தரிசனம் செய்து விட்டு 7.00மணிக்கு திருநள்ளாறு புறப்படலாம்

*9, திருநள்ளாறு (சனி) :*
*தரிசனம் நேரம்:1மணி நேரம்*
*இரவு 8.00மணி*

நவகிரக ஸ்தலங்களின் சுற்றுலாவில் நீங்கள் இறுதியாக செல்லவிருக்கும் இடம் சனி பகவான் வீற்றிருக்கும் திருநள்ளாறு ஸ்தலம். கீழ்பெரும்பள்ளத்திலிருந்து சரியாக 7.00, மணிக்கு புறப்பட்டால் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருநள்ளாறு ஸ்தலத்தை திருக்கடையூர், காரைக்கால் வழியாக ஒரு மணி நேரத்திற்குள் வேகம்மாக சென்றால்  8.00மணிக்கெல்லாம் அடைந்து விட முடியும். அதன் பின்னர் ஸ்ரீ தர்பாரன்யேசுவரர் திருக்கோவிலில் சனி பகவானையும், சிவபெருமானையும் ஒரு மணிநேரம்  தரிசிக்கலாம்.

9.30மணிக்கு திருநள்ளாறு ஆலயத்தோடு ஒன்பது நவக்கிரகங்களையும் தரிசனம் செய்த மிகப்பெரிய மனநிறைவோடு பூர்வஜென்ம பாக்கியமாக இறைவனின் அருள் பெற்று புறப்படலாம்

Navagraha%2BChart - 2026
Navagraha Map SBR010 - 2026

– தகவல்: சுப்பையா வீரப்பன்

நான் பதவி விலகவில்லை: வதந்தி என்கிறார் கருணாஸ்

 

நடிகர் சங்க துணைத் தலைவர் பதவியிலிருந்து நான் விலகவில்லை என்றும், சமூக வலைதளங்களில் வந்த தகவல் வதந்தி என்றும், தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்க துணைத் தலைவர் கருணாஸ் தெரிவித்தார்.

 

 

தமிழக அரசுக்கு ஆதரவு: நடிகர் சங்க தீர்மானம்

சென்னையில் நடைபெற்று வரும் நடிகர் சங்கக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

காவிரி விவகாரத்தில் தமிழக அரசுக்கு ஆதரவு அளிப்பதாகவும் கன்னட நடிகர்களின் பேச்சுக்க கண்டனம் தெரிவிப்பதாகவும் நடிகர் சங்கக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

முன்னதாக நிகழ்ந்த காரசார விவாதத்தில், நடிகர் சங்க கூட்டம் கடந்த 3 மணிநேரமாக நடந்தம் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை.

காவிரி பிரச்சனையில் போராட்ட்தில் ஈடுபட வேண்டும் என்று ஒருதரப்பு வலியுறுத்தி வருகிறது. கர்நாடகத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என மற்றொரு தரப்பு கருத்து தெரிவித்து வருகிறது.

உறுப்பினர்களின் மாறுபட்ட கருத்தால் 3 மணி நேரமாகியும் முடிவு எடுக்க முடியாமல் திணறி வந்த நிலையில், தீர்மானம் நிரைறவேற்றப்பட்டது.

 கலைஞர்கள் பொதுவானவர்கள்: பாக்யராஜ்

இனம், மொழி, மதங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் கலைஞர்கள், இதை
தமிழ் சினிமாவில் உள்ளவர்கள் எப்போதும் உணர்ந்துள்ளனர். ஒவ்வொரு முறை காவிரி பிரச்சினையின் போதும் கன்னட திரையுலகினரின் போராட்டத்தால் தர்ம சங்கடமான சூழ்நிலைகளை தமிழ் திரையுலகினர் சந்திக்க வேண்டியுள்ளது.

நாங்கள் மத்தளம் போல் இரு பக்கமும் அடி வாங்க வேண்டியுள்ளது என இயக்குநரும் நடிகருமான திரு.கே.பாக்யராஜ் பேசினார்.

 

தான்சானியாவில் நிலநடுக்கம்: 13 பேர் பலி; 200 பேர் காயம்

தான்சானியா நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 13 பேர் உயிரிழந்தனர். 200 க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

உகாண்டா மற்றும் ருவாண்டா ஆகிய நாடுகளின் எல்லைகளுக்கு அருகே நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தில் புகோபா நகர் பெரிதும் சேதமடைந்தது. அந்நகரில் பல இடங்களில் கட்டடங்கள், வீடுகள் இடிந்து பெரிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. இதில் 13 பேர் உயிரிழந்தனர். 200க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அரசியலுக்கு முழுக்கு இல்லை: சரத்குமார்

தான் பல்வேறு தடைகளை தாண்டி வந்தவன் என்றும், தான் அரசியலுக்கு முழுக்கு போடப்போவதாக வெளியான செய்தி தவறானது என்றும் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது: நான் ஆரம்ப காலத்தில் இருந்து பத்திரிகையாளராக துவங்கி பல கஷ்டங்களை பட்டு அரசியலுக்கு வந்தவன். ஒரு குறிக்கோளுடன் வந்தவன் நான். வாழ்க்கையில் நான் பல்வேறு தடைகளை கண்டவன், தோல்வியை கண்டு துவள மாட்டேன். என்னை பற்றி உண்மைக்கு புறம்பான செய்திகளை பரப்ப வேண்டாம் என கேட்டு கொள்கிறேன். பத்திரிகை இந்த நாட்டின் தூண்கள். எனவே அவர்கள் பொறுப்புடன் இருக்க வேண்டும். அரசியலுக்கு முழுக்கு என்று வெளியான செய்திக்கு எனது மறுப்பை தெரிவித்து கொள்கிறேன். தற்போது நடப்பது டிஜிட்டல் உலகம். இந்த காலத்தில் இருந்த இடத்தில் இருந்து கொண்டே எதையும் சாதிக்க முடியும். எனது பொருளாதார வளத்திற்காக நான் தற்போது சில சினிமாக்களில் நடித்து வருகிறேன். சேவை செய்யும் நோக்கத்தில் இருந்து வருகிறேன். கூடுதல் நேரம் இருப்பதால் சினிமாவில் நடிக்கிறேன். தொடர்ந்து நடிப்பேன் இதில் மாற்றம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

கர்நாடக நடிகர்களின் பேச்சுக்கு தென்னிந்திய நடிகர்கள் சங்கம் கண்டனம்

காவிரி பிரச்சினைக்காக விரைவில் அனைத்து சினிமா சங்கங்களுடன் இணைந்து உணர்வு பூர்வமான போராட்டம்… நாசர்

காவிரி பிரச்சினையில் கன்னட நடிகர்கள் பேச்சுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டனம்.தமிழக அரசுக்கு ஆதரவு. இன்றைய செயற்குழுவில் தீர்மானம்.

காவிரி நீரை சட்டப்படி பெற்று தந்த முதல்வருக்கு நன்றி. அரசுக்கு துணை நிற்போம். முதல்வரை விமர்சித்த கன்னட நடிகர்களுக்கு கண்டனம்… விஷால்

 

 

கன்னட நடிகர்களின் பேச்சுக்கு தென்னிந்திய நடிகர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியது.

காவிரி விவகாரம் தொடர்பாக விவாதிக்க தென்னிந்திய நடிகர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் பொதுச் செயலாளர் விஷால் தலைமையில் நடந்தது.

கூட்டத்திற்கு பின்னர் நடிகர் விஷால் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

காவிரி நீர் பிரச்னையில் கர்நாடக நடிகர்கள் சிலர் தமிழக முதல்வருக்கு கொச்சை படுத்தும் வகையில் பேசியுள்ளனர். இதை கண்டித்து தென்னிந்திய நடிகர் சங்க பொதுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்.

காவிரி பிரச்னையில் தமிழக அரசின் நடவடிக்கைக்கு நாங்கள் ஆதரவு அளிப்போம். தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்க உதவிய தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு எங்களது சங்கத்தின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

நடிகர் சங்க தலைவர் நாசர் கூறுகையில் ” காவிரி பிரச்னை தொடர்பாக தமிழக மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக நடிகர் சங்கம் சார்பில் போராட்டம் நடத்துவோம்” என்றார்.

நடிகர் கருணாஸ் பேசுகையில் ” காவிரி விவகாரத்தில் தமிழக அரசு எடுக்கும் அத்தனை நடவடிக்கைகளுக்கும் நடிகர் சங்கம் உறுதுணையாக இருக்கும்” என்றார்.

பொதுக் கூட்டத்தில் நடிகர் சங்க தலைவர் நாசர், துணை தலைவர் பொன்வண்ணன்,கருணாஸ், பொதுசெயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், சரத்குமார், ராதாரவி, வாகை சந்திரசேகர் மூவர் தென்னிந்திய நடிகர் சங்கத்திலிருந்து நீக்கப் பட்டுள்ளனர்..