Home Blog Page 5737

ஆய கலைகள் அறுபத்து நான்கு எவை தெரியுமா!

ஆய கலைகள் அறுபத்து நான்கு எவை தெரியுமா!

1. அக்கரவிலக்கணம்
2. இலிகிதம்
3. கணிதம்
4. வேதம்
5. புராணம்
6. வியாகரணம்
7. நீதி சாத்திரம்
8. சோதிட சாத்திரம்
9. தர்ம சாத்திரம்
10. யோக சாத்திரம்
11. மந்திர சாத்திரம்
12. சகுன சாத்திரம்
13. சிற்ப சாத்திரம்
14. வைத்திய சாத்திரம்
15. உருவ சாத்திரம்
16. இதிகாசம்
17. காவியம்
18. அலங்காரம்
19. மதுரபாடனம்
20. நாடகம்
21. நிருத்தம்
22. சத்தப்பிரமம்
23. வீணை
24. வேணு
25. மிருதங்கம்
26. தாளம்
27. அத்திரப்பரீட்சை
28. கனகபரீட்சை
29. ரத பரீட்சை
30. கசபரீட்சை
31. அசுவபரீட்சை
32. ரத்திரனப்பரீட்சை
33. பூமிபரீட்சை
34. சங்ககிராம இலக்கணம்
35. மல்யுத்தம்
36. ஆகரூடணம்
37. உச்சாடணம்
38. விந்து வேடணம்
39. மதன சாத்திரம்
40. மோகனம்
41. வசீகரணம்
42. ரசவாதம்
43. காந்தருவவாதம்
44. பைபீலவாதம்
45. கவுத்துக வாதம்
46. தாது வாதம்
47. காருடம்
48. நட்டம்
49. முட்டி
50. ஆகாயப் பிரவேசம்
51. ஆகாய கமணம்
52. பரகாயப் பிரவேசம்
53. அதிரிசயம்
54. இந்திரசாபம்
55. மகேந்திரசாபம்
56. அக்கினித்தம்பம்
57. சலத்தம்பம்
58. வாயுத்தம்பம்
59. நிட்டித்தம்பம்
60. வாக்குத்தம்பம்
61. சுக்கிலத்தம்பம்
62. கன்னத்தம்பம்
63. கட்கத் தம்பம்
64. அவத்தைப் பிரயோகம்

9ன் சிறப்பு தெரியுமா?

ஒன்பதின் தத்துவம்,என்ன என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்
9ன் சிறப்பு தெரியுமா?

எண்களில் விசேஷமான எண்ணாக கருதப்படுவது ஒன்பது.

அந்த எண்ணில் நீண்ட வாழ்வு எனும் அர்த்தம் பொதிந்திருப்பதாகச் சொல்கின்றனர்,

சீனர்களின் சொர்க்க கோபுரம், ஒன்பது வளையங்களால் சூழப்பட்டுள்ளது.
எகிப்து, ஐரோப்பா, கிரீக் முதலான நாடுகளும்  9-ஆம் எண்ணை  விசேஷமாகப் பயன்படுத்திப் போற்றுகின்றன.

புத்த மதத்தில், மிக முக்கியமான  சடங்குகள் யாவும் ஒன்பது துறவிகளைக் கொண்டே
நடைபெறும். தங்கம்,வெள்ளி மற்றும் பிளாட்டினத்தின் சுத்தத்தை 999 என்று மதிப்பிடுவார்கள்

பெண்களின் கர்ப்பம், பூரணமாவது ஒன்பதாம் மாத நிறைவில்தான்!
ஒன்பது எனும் எண்  இன்னும் மகத்துவங்கள்  கொண்டது.
ஒன்பது என்ற எண்ணுக்கு வடமொழியில் நவம் என்று பெயர்.

நவ என்ற சொல்  புதிய, புதுமை எனும் பொருள் உடையது.

நவ சக்திகள்:

1,வாமை,
2,ஜேஷ்டை,
3,ரவுத்ரி,
4,காளி,
5,கலவிகரணி,
6,பலவிகரணி,
7,பலப்பிரமதனி,
8,சர்வபூததமனி,
9,மனோன்மணி,

நவ தீர்த்தங்கள்:

1,கங்கை,
2,யமுனை,
3,சரஸ்வதி,
4,கோதாவரி,
5,சரயு,
6.நர்மதை,
7,காவிரி,
8,பாலாறு,
9,குமரி

நவ வீரர்கள்:

1,வீரவாகுதேவர்,
2,வீரகேசரி,
3,வீரமகேந்திரன்,
4,வீரமகேசன்,
5,வீரபுரந்திரன்,
6,வீரராக்ஷசன்,
7,வீரமார்த்தாண்டன்,
8,வீரராந்தகன்,
9,வீரதீரன்

நவ அபிஷேகங்கள்:

1,மஞ்சள்,
2,பஞ்சாமிர்தம்,
3,பால்,
4,நெய்,
5,தேன்,
6,தயிர்,
7,சர்க்கரை,
8,சந்தனம்,
9,விபூதி.

நவ ரசம்:

1,இன்பம்,
2,நகை,
3,கருணை,
4,கோபம்,
5,வீரம்,
6,பயம்,
7,அருவருப்பு,
8,அற்புதம்,
9,சாந்தம் ,
ஆகியன நவரசங்கள் ஆகும்.

நவக்கிரகங்கள்:

1,சூரியன்,
2,சந்திரன்,
3,செவ்வாய்,
4,புதன்,
5,குரு,
6,சுக்கிரன்,
7,சனி,
8,ராகு,
9.கேது

நவமணிகள்:-

நவரத்தினங்கள்:

1,கோமேதகம்,
2,நீலம்,
3,வைரம்,
4,பவளம்,
5,புஸ்பராகம்,
6,மரகதம்,
7,மாணிக்கம்,
8,முத்து,
9,வைடூரியம்

நவ திரவியங்கள்:

1,பிருதிவி,
2,அப்பு,
3,தேயு,
4,வாயு,
5,ஆகாயம்,
6,காலம்,
7, திக்கு,
8,ஆன்மா,
9,மனம்

நவலோகம் (தாது):

1,பொன்,
2,வெள்ளி,
3,செம்பு,
4,பித்தளை,
5,ஈயம்,
6,வெண்கலம்,
7,இரும்பு,
8,தரா,
9,துத்தநாகம்

நவ தானியங்கள்:

1,நெல்,
2,கோதுமை,
3,பாசிப்பயறு,
4,துவரை,
5,மொச்சை,
6,எள்,
7,கொள்ளு,
8,உளுந்து,
9,வேர்க்கடலை

சிவ விரதங்கள் ஒன்பது:

1,சோமவார விரதம்,
2,திருவாதிரை விரதம்,
3,உமாகேச்வர விரதம்,
4,சிவராத்ரி விரதம்,
5,பிரதோஷ விரதம்,
6,கேதார விரதம்,
7,ரிஷப விரதம்,
8,கல்யாணசுந்தர விரதம்,
9,சூல விரதம்

நவசந்தி தாளங்கள்:

1,அரிதாளம்,
2,அருமதாளம்,
3,சமதாளம்,
4,சயதாளம்,
5,சித்திரதாளம்,
6,துருவதாளம்,
7,நிவர்த்திதாளம்,
8,படிமதாளம்,
9,விடதாளம்

அடியார்களின் பண்புகள்:

1,எதிர்கொள்ளல்,
2,பணிதல்,
3,ஆசனம் (இருக்கை) தருதல்,
4,கால் கழுவுதல்,
5,அருச்சித்தல்,
6,தூபம் இடல்,
7,தீபம் சாட்டல்,
8,புகழ்தல்,
9,அமுது அளித்தல்,

(விக்ரமார்க்கனின் சபையிலிருந்த 9 புலவர்கள்; நவரத்னங்கள் எனச் சிறப்பிக்கப்படுவர்)

1,நவரத்னங்கள் (முனிவர்கள்)தன்வந்த்ரி
2,க்ஷணபகர்,
3,அமரஸிம்ஹர்,
4,சங்கு,
5,வேதாலபட்டர்,
6,கடகர்ப்பரர்,
7,காளிதாசர்,
8,வராகமிஹிரர்,
9,வரருசி

அடியார்களின் நவகுணங்கள்:

1,அன்பு,
2,இனிமை,
3,உண்மை,
4,நன்மை,
5,மென்மை,
6,சிந்தனை,
7,காலம்,
8,சபை,
9,மவுனம்.

நவ நிதிகள்:

1,சங்கம்,
2,பதுமம்,
3,மகாபதுமம்,
4,மகரம்,
5,கச்சபம்,
6,முகுந்தம்,
7,குந்தம்,
8.நீலம்,
9.வரம்

நவ குண்டங்கள்:

யாகசாலையில் அமைக்கப்படும்
ஒன்பது வகையிலான
யாக குண்ட அமைப்புக்கள்:

1,சதுரம்,
2,யோனி,
3,அர்த்த சந்திரன்,
4,திரிகோணம்,
5,விருத்தம் (வட்டம்),
6.அறுகோணம்,
பத்மம்,
எண்கோணம்,

பிரதான விருத்தம்.

1,நவவித பக்தி :
2,சிரவணம்,
3,கீர்த்தனம்,
4,ஸ்மரணம்,
5,பாத சேவனம்அர்ச்சனம்,
6,வந்தனம்,
7,தாஸ்யம்,
8,சக்கியம்,
9,ஆத்ம நிவேதனம்

நவ பிரம்மாக்கள் :

1,குமார பிரம்மன்,
2,அர்க்க பிரம்மன்,
3,வீர பிரம்மன்,
4,பால பிரம்மன்,
5,சுவர்க்க பிரம்மன்,
6,கருட பிரம்மன்,
7,விஸ்வ பிரம்மன்,
8,பத்ம பிரம்மன்,
9,தராக பிரம்மன்

நவக்கிரக தலங்கள் –

1,சூரியனார் கோயிவில்,
2,திங்களூர்,
3,வைத்தீஸ்வரன் கோவில்,
4,திருவெண்காடு,
5,ஆலங்குடி,
6,கஞ்சனூர்,
7,திருநள்ளாறு,
8,திருநாகேஸ்வரம், 9,கீழ்ப்பெரும்பள்ளம்

நவபாஷாணம் –

1,வீரம்,
2, பூரம்,
3, ரசம்,
4,ஜாதிலிங்கம்,
5,கண்டகம்,
6,கவுரி பாஷாணம்,
7,வெள்ளை பாஷாணம்,
8,ம்ருதர்சிங்,
9,சிலாஷத்

நவதுர்க்கா –

1,ஸித்திதத்ரி,
2,கஷ்முந்தா,
3,பிரம்மாச்சாரினி,
5,ஷைலபுத்ரி,
7,மகா கவுரி,
8,சந்திரகாந்தா,
9,ஸ்கந்தமாதா,
6.மகிஷாசுரமர்த்தினி, -,காளராத்ரி

நவ சக்கரங்கள் –

1,த்ரைலோக்ய மோகன சக்கரம்,
2,சர்வசாபுரக சக்கரம்,
3,சர்வ சம்மோகன சக்கரம்,
4,சர்வ சவுபாக்ய சக்கரம்,
5,சர்வார்த்த சாதக சக்கரம்,
6,சர்வ ரக்ஷõகர சக்கரம்,
7,சர்வ ரோஹ ஹர சக்கரம்,
8,சர்வ ஸித்தி ப்ரத சக்கரம்,
9,சர்வனந்தமைய சக்கரம்.

நவநாதர்கள் –
1,ஆதிநாதர்,
2,உதய நாதர்,
3,சத்ய நாதர்,
4,சந்தோஷ நாதர்,
5,ஆச்சாள் அசாம்பயநாதர்,
6,கஜ்வேலி கஜ்கண்டர் நாதர்,
7,சித்த சொவ்றங்கி
8,நாதர், மச்சேந்திர நாதர்,
9,குரு கோரக்க நாதர்

உடலின் நவ துவாரங்கள் :
இரண்டு கண்கள்,
இரண்டு காதுகள்,
இரண்டு மூக்குத் துவாரங்கள்,
ஒரு வாய்,
இரண்டு மலஜல துவாரங்கள்

உடலின் ஒன்பது சக்கரங்கள் :
1,தோல்,
2,ரத்தம்,
3,மாமிசம்,
4,மேதஸ்,
5,எலும்பு,
6,மஜ்ஜை,
7,சுக்கிலம்,
8,தேஜஸ்,
9,ரோமம்

ஸ்ரீவேங்கடேச சுப்ரபாதம்: ஒரு விளக்கம்

ஸ்ரீவேங்கடேச சுப்ரபாதம்
ஒரு விளக்கம் :-

திருமலை – திருப்பதிக்கு உறக்கம் என்பதே இல்லை. நள்ளிரவில் ‘ஏகாந்த சேவை’ முடிந்து, நடை சாத்திய சிறிது நேரத்திலேயே, அடுத்த நாளின் முதல் சேவையான ‘சுப்ரபாத சேவை’ தொடங்கிவிடுகிறது.

பக்தர்கள் கூட்டமும், வாகனப் போக்குவரத்தும், கடைகளின் வியாபாரமும் கடல் அலை போல்தான். எதற்கும் ஓவே இல்லை. எல்லாம் அதுபாட்டுக்குத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது திருமலை – திருப்பதியில்.

தினம்தோறும் அதிகாலையில் திருப்பதி-திருமலையில் நடை திறக்கும் போது பதிவு செய்யப்பட்ட ஸ்ரீவேங்கடேச சுப்ரபாதத்தை இசைக்க விடுகிறார்கள் தேவஸ்தானத்தார். இந்த வேளையில் நடைபெறும் தரிசனத்துக்கு, ‘சுப்ரபாத தரிசனம்’ அல்லது ‘விஸ்வரூப தரிசனம்’ என்று பெயர். சுமார் 200-லிருந்து 250 பக்தர்கள் வரை இந்த தரிசனத்துக்கு அனுமதி உண்டு. இதற்கான முன்பதிவை, ஆன்லைனிலும் நேரடியாகவும் பதிவு செய்து கொள்ளலாம்.

‘சுப்ரபாத சேவை’ தரிசனம் அரை மணி நேரம் மட்டுமே. இந்த சேவையின் முடிவில், வாத்திய முழக்கங்களுடன் ஸ்ரீவேங்கடவனின் கருவறைக்கு முன்னால் உள்ள தங்கக் கதவுகள் திறக்கப்படும். திருமலா ஸ்ரீமடத்தின் ராமானுஜ ஜீயர் கற்பூரத்தை ஏற்றி கருவறையில் இருக்கும் பிரதான அர்ச்சகரிடம் தருவார். அவர் அதை வாங்கி, மூலவர் ஸ்ரீவேங்கடாசலபதிக்கு ஸ்ரீமந் நாராயணனின் திருநாமங்களை ராகத்துடன் சொல்லி ஆரத்தி செய்வார்.

குலசேகரப்படி வரை பக்தர்கள் ஒவ்வொருவராக நகர்ந்து வந்து ஸ்ரீவேங்கடவனின் விஸ்வரூப தரிசனத்தைக் கண்டு பரவசத்துடன் நகர்வார்கள்.

ஸ்ரீவேங்கடவனின் கருவறையில் ஒவ்வொரு தினமும் முதன்முதலில் காட்டப்படும் இந்த ஆரத்தியை, கர்நாடக மாநில அரசின் அறநிலையத் துறை ஸ்பான்சர் செய்கிறது. இது இன்று நேற்று இருந்து வரும் வழக்கம் அல்ல… மன்னர் கிருஷ்ணதேவராயர் காலத்தில் இருந்து தொடர்ந்து நடந்து வருகிறது. ஸ்ரீவேங்கடவன் மீது அதீத பக்தி கொண்ட அந்த மன்னர், இப்படி ஒரு கட்டளையைத் தன் காலத்தில் தொடங்கி வைத்து விட்டுப் போனார். அவர் காலத்தில் இருந்து இது தொடர்கிறது. இன்றைக்கும் கர்நாடக மாநிலத்தில் எந்த ஆட்சியாளர் பதவியில் இருந்தாலும், இந்த சேவையை மட்டும், மாநிலத்தின் அறநிலையத் துறை பொறுப்பேற்றுக் கொண்டு, தொடர்ந்து செய்து வருகிறது.

மார்கழி மாதம் மட்டும், திருமலை – திருப்பதியில் பெருமாள் சன்னிதானத்தில் சுப்ரபாதம் ஒலிப்பதில்லை. காரணம் – அந்த ஒரு மாதம் மட்டும் சுப்ரபாதத்துக்குப் பதிலாக ஆண்டாளின் திருப்பாவை பாடப்படுகிறது.

இந்த ஸ்ரீவேங்கடேச சுப்ரபாதம், பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியார் எனும் வைணவப் பெரியவரால் எழுதப்பட்டது. ஐநூறு வருடத்துக்கும் பழமையான மூல ஸ்லோகத்தை அடிப்படையாகக் கொண்டும், ஆழ்வார் பாசுரங்களின் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டும், இந்த சுப்ரபாதத்தை இயற்றி இருக்கிறார் இந்தப் பெரியவர்.

சுப்ரபாதத்தை இயற்றிய பெருமைக்கு மட்டும் அண்ணங்கராச்சாரியார் சொந்தமல்ல. அவரது குரலில்தான் ஸ்ரீவேங்கடேச சுப்ரபாதம் திருமலை திருச்சன்னிதியில் நீண்ட காலமாக ஒலிபரப்பப்பட்டு வந்தது. தினமும் சுப்ரபாத சேவை தொடங்கப்படும் வேளையில் அண்ணங்கராச்சாரியார் குரலில் ஆலயப் பகுதியில் சுப்ரபாதம் ஆங்காங்கே ஒலிக்கத் தொடங்கிவிடும். இதற்கென இவரது குரலில் சுப்ரபாதத்தைப் பதிவு செய்து வைத்திருந்து, அதை ஒலிபரப்புவது தேவஸ்தானத்தாரின் வழக்கம். அப்போதெல்லாம் சுப்ரபாத சேவைக்கு டிக்கெட் வாங்கி, பெருமாளின் விஸ்வரூப தரிசனத்துக்குக் காத்திருக்கும் பக்தர்கள், அண்ணங்கராச்சாரியாரின் குரலோடு இணைந்து மனம் உருகி சுப்ரபாதம் பாடுவது வழக்கம்.

இந்த வேளையில் அவரைப் பற்றி ஓரிரு தகவல்கள் தெரிந்து கொள்வது அவசியம்.

வைணவத் துறைக்கு எண்ணற்ற சேவைகள் புரிந்த இந்த வைணவ மேதை காஞ்சிபுரத்தில் வாழ்ந்தவர். ‘பிரதிவாதி பயங்கரம்’ என்பது இவரது பட்டப் பெயர். எதிராளியுடன் நடக்கும் வாதப் போரில், எதிர் அணியினருக்குப் பயங்கரமானவராக இருப்பவர் என்ற பொருளில் இந்தப் பட்டப் பெயர் இவருக்கு அமைந்தது. 1983, ஜூன் 21-ஆம் தேதி இவர் இவ்வுலக வாழ்வை நீத்தார்.

இவருக்கு நான்கு மொழிகளில் புலமை உண்டு. வைணவர்களால் ஓர் ஆழ்வாராகவே மதித்துப் போற்றப்பட்டவர் இவர். தன் காலத்தில் 1,207 புத்தகங்கள் எழுதி இருக்கிறார் என்பது ஆச்சரியமூட்டும் தகவல். ஒரே நேரத்தில் வலது கையால் தமிழிலும், இடது கையால் சம்ஸ்க்ருதத்திலும் எழுதும் வல்லமை இவருக்கே உரித்தான சிறப்பம்சம்.

‘சரி… இப்போது திருமலை – திருப்பதியில் தினமும் காலை வேளையில் கர்நாடக இசை மேதை எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்களின் தேனினும் இனிய குரலில் அல்லவா சுப்ரபாதம் கேட்டு வருகிறோம்’ என்கிறீர்களா?

உண்மைதான்! சரியாகச் சொன்னால், 1975-லிருந்துதான் எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்களின் குரலில் திருமலையில் சுப்ரபாதம் ஒலிக்கத் தொடங்கியது. அதற்கு முன்வரை, பிரதிவாதி பயங்கரம் ஸ்வாமியின் குரலில்தான், சுப்ரபாதம் திருமலையில் ஒலித்துக் கொண்டிருந்தது.

எம்.எஸ். சுப்புலட்சுமி பாடிய வேங்கடேச சுப்ரபாதம், பஜ கோவிந்தம் போன்ற அருமையான தொகுப்புகளை பிரபல எச்.எம்.வி. நிறுவனம் இசைத்தட்டாக வெளியிட்டபோது, அது பட்டி தொட்டி எங்கும் பரவியது. இசைத்தட்டு வெளியிட்ட நிறுவனத்துக்கும், எம்.எஸ். அவர்களுக்கும் இது மாபெரும் வெற்றியைத் தேடித் தந்தது. அதன் பின்னர்தான் திருமலை – திருப்பதி தேவஸ்தானத்தார், எம்.எஸ். பக்கம் திரும்பினார்கள். 1975-லிருந்து எம்.எஸ். அவர்களின் குரலில் ஒலித்துக் கொண்டிருக்கிற சுப்ர பாதத்தைதான், நாம் இன்றுவரையில் திருமலையில் கேட்டு வருகிறோம்.

எம்.எஸ். அவர்களின் சுப்ரபாதம் கேட்டுத்தான் ஸ்ரீவேங்கடவன் துயில் எழுகின்றான். இனி காலாகாலத்துக்கும் எம்.எஸ். அவர்களின் குரல்தான் இங்கே ஒலிக்கும். அகில உலகத்தையும், தன் குரலால் கட்டிப்போட்ட அந்த இசை மேதைக்கு, இந்த ஆந்திர அரசாங்கம் கொடுத்த அங்கீகாரம் இது” என்று பெருமைப்படுகிறார் திருப்பதியில் வாழும் அன்பர் ஒருவர்.

இந்த மாபெரும் கௌரவத்தை அங்கீகரிக்கும் வகையில் – எம்.எஸ். அவர்கள் மறைந்த ஒரு சில நாட்களுக்குள், திருப்பதியின் நுழைவாயிலில் அவரது சிலையை அமைத்துப் பெருமைப்படுத்தியது ஆந்திர அரசு.

முழு உருவச் சிலையான இது, 14 அடி உயரம் கொண்டது. கையில் தம்புராவுடன் எம்.எஸ். அவர்கள் அமர்ந்திருப்பது போல் இந்த சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. 4,000 கிலோ எடையில், முழுக்க முழுக்க வெண்கலத்தாலான இந்த சிலையை, அப்போதைய ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி திறந்து வைத்தார்.

ஸ்ரீவேங்கடேச சுப்ரபாதத்தில் மொத்தம் 70 ஸ்லோகங்கள் உள்ளன. இவை நான்கு பகுதிகளாக அமைந்துள்ளன.

முதல் பகுதியான சுப்ரபாதம், யோக நித்திரையில் இருக்கும் வேங்கடவனைத் துயில் எழச் செய்வது குறித்ததாகும். இதில் 29 ஸ்லோகங்கள் காணப்படுகின்றன.

இரண்டாம் பகுதியான ஸ்தோத்திரம், ஸ்ரீவேங்கடவனை துதி செய்தல் – அதாவது போற்றி வணங்கும் பகுதியாகும். இதில் 11 ஸ்லோகங்கள் உண்டு.

மூன்றாம் பகுதியான பிரபத்தி, திருமகளின் பெருமை குறித்தும், ஸ்ரீவேங்கடவன் திருவடிகளில் சரணாகதி அடைவது குறித்தும் சொல்லப்பட்டிருக்கிறது. இதில் 16 ஸ்லோகங்கள் உண்டு.

நான்காவது பகுதியான மங்களம், நிறைவுப் பகுதி. மங்களகரமான அருளை வேண்டும் வகையில் துதிக்கப்படும் இந்தப் பகுதியில், 14 ஸ்லோகங்கள் அமைந்துள்ளன.

திரு வேங்கடவனின் திருப்பாதங்களே சரணம் ..

உலகளந்த உத்தமன்

ஸ்ரீமந் நாராயணனின் பேரருளைப் பெற்ற பிரகலாதனின் மகனான விரோசனனுக்கும், தேவிக்கும் பிறந்தவன் மாபலி. தன் தந்தையார், பாட்டனாரைப் போலவே பலியும், அறிவு, அழகு, அருள், ஆற்றல், ஆண்மை, பக்தி என அனைத்தும் நிறைந்த மாவீரன். பரம்பரைத் தொடர்பால் கிடைத்த நாராயண பக்தியும், பெற்ற வரங்களும், குரு சுக்ராசாரியாரின் அருளும், வேள்விப் பயனும் ஒருங்கே நிறைந்தன. மற்ற எல்லாரையும் விட கூடுதல் பேராற்றல்கள் நிரம்பவே, அவனிடம் ஆணவமும் மேலோங்கியது.

இதனால், முதலில் தேவருலகை முற்றுகையிட்டான். இந்திரன் உள்ளிட்டோர் தேவகுரு பிரகஸ்பதியிடம் அடைக்கலம் புகுந்தனர். அவரும் “”இப்போது பலியை வெல்வது கடினம். நீங்கள் மறைந்திருந்து பொறுத்திருங்கள். ஸ்ரீமந் நாராயணன் அவனின் ஆணவத்தை அடக்கி உங்கள் உலகை மீட்டுத் தருவார்” என்றார். பலி மூவுலகும் வென்றான். மாமன்னன் ஆக முடிசூடினான். அவனுடைய ஆணவமும் அதிகமானது.

இதே நேரம், தேவர்களின் மாதாவான அதிதி, தேவர்கள் தோற்றதால் கலக்கமடைந்தாள். காசிபர் அறிவுறுத்தியபடி நாராயணனின் திவ்யத் திருமேனியைப் பொன்னால் வடித்து வழிபட்டாள். பசும்பாலை மட்டும் பருகிப் பன்னிரண்டு நாள்கள் விரதம் காத்தாள்.

அதிதியின் வேண்டுகோளை நிறைவேற்ற ஸ்ரீமந் நாராயணன் வாமன அவதாரத்தை மேற்கொண்டார். இரண்டடி உயரமுள்ள குள்ளன், குறளன், பிரமச்சாரி. தானம் கேட்பதற்குரிய கச்சிதமான வடிவத்தை எம்பெருமான் ஏற்றருளினார். மாபலி நர்மதைக் கரையில் அசுவமேத யாகம் செய்து கொண்டிருந்தான். அங்கு வந்த வாமனன், பலியிடம் “எனக்கு மூன்றடி மண் தானமாக வேண்டும். அதையும் என் கால்களால் அளந்தெடுத்துக் கொள்வேன்’ என்று யாசித்தான்.

மாபலி ஒரு வள்ளல். யாகம் நடைபெறுகிறபோது தானம் தர உடனே ஒப்புக் கொண்டான். ஆணவத்தாலே அலட்சியப் புன்னகை பூத்தான். ஆனால், சுக்கிராசாரியாரோ, “வாமனனாக வந்திருப்பவன் மாயம் புரியும் நாராயணன். தேவர்களைக் காத்து அசுரர்களைத் தண்டிக்கவே வஞ்சனையாய்த் தானம் கேட்கிறான்’ என்று எச்சரித்தார். ஆனால், “வந்திருப்பவன் நாராயணன் என்றால் அவனுக்கு நான் நிச்சயம் தானம் தர வேண்டும். ஏனென்றால், அவன் செல்வத்துக்குரிய இலக்குமியின் கணவன். நான் தானம் தரும்போது இலக்குமியைத் தீண்டிய அவனது திருக்கை தாழ்ந்திருக்கும். என் கை உயர்ந்திருக்கும். இதைவிட மேலான பேறு எனக்கு எப்போதும் கிடைக்கப் போவதில்லை’ என்று மாபலி கூறி, நிலத்தைத் தாரை வார்த்துத் தர முனைந்தான். எள்ளும், நீரும் கொண்டு வருமாறு தன் மனைவி வித்யாவலிக்கு ஆணையிட்டான். தாரை நீருடன் தானம் பெறும்போதே வாமனன் விஸ்வரூபமெடுத்து காட்சி தந்தான்.

தன் முதலடியால் மேல் உலகையும், இரண்டாமடியால் நிலவுலகத்தையும் அளந்தான். மூன்றாம் அடியை எங்கே வைப்பது என்று மாபலியை வினவினான். வாமனனாக வந்தவன் திரிவிக்கிரமனாக நின்றதைக் கண்டு மாபலி செயலற்றுத் திகைத்தான்.

சத்திய குணமும், வள்ளல் தன்மையும் மாறவே கூடாது என்பதால், மூன்றாம் அடியைத் தன் தலைமீது பொருத்தி அளக்க வேண்டினான் மாபலி. சரணடைந்து தலை தாழ்த்தினான்.

திரிவிக்கிரமன் மாபலியின் தலைமீது தன் திருவடியை வைத்து, அவனைக் கீழுலகத்தில் ஒன்றான அதலத்தில் அழுத்தி, அங்கே சக்கரவர்த்தியாக நிலைத்திருந்து அரசாளும்படி ஆணையிட்டான். அப்போது முதல் மாபலி மன்னன் மாபலிச் சக்கரவர்த்தியாக உயர்ந்து மேலும் மேன்மையடைந்தான். நாராயணனின் திருவடி தரிசனம் மூவுலகிலும் கிடைத்தது. மாபலிச் சக்கரவர்த்தி சிரஞ்சீவியர் எழுவரில் ஒருவனாக இப்போதும் வழ்கிறான்.

“ஆவணி மாதம், திருவோண நாளன்று, ஆண்டுக்கொரு நாள், நான் ஆண்ட நிலவுலகத்திற்கு வந்து, என் மக்களை வாழ்த்த வரம் தர வேண்டும்” என்று நாராயணனை இறைஞ்சிய மாபலியின் வேண்டுகோளுக்கு எம்பெருமானும் இசைந்து வரம் அருளினார்.

ஆணவ குணத்தால் தேவருலகை இழந்தான். வள்ளல் குணத்தால், ஆண்டு தோறும் ஒரு நாள் நிலவுலகம் வந்து மக்களுக்கு அருளும் வரம் பெற்றான் மாபலி. அதன்படி ஆவணித் திருவோணத்தன்று மக்களுக்குத் தரிசனம் தருகிறான்.

மகாவிஷ்ணுவின் ராம, கிருஷ்ண, நரஸிம்ம, வராஹ அவதாரங்களை உணர்த்தும் கோயில்கள் அதிகம் இருந்தாலும், வாமன அவதாரத்தை நினைவூட்டும் கோயில்கள் மிகச் சிலவே உண்டு.

மாமல்லபுரம்: வராகக் குகையில் அமைந்த திரிவிக்கிரமனின் வடிவம் நேர்த்தியானது. எட்டு திருக்கைகளுடன் கம்பீரமாகக் காட்சி தரும் திரிவிக்கிரமனை பிரமனும், சிவனும், சூரியனும், சந்திரனும் வழிபடுகின்றனர்.

திருக்கோவிலூர்: முதன் முதலில் ஆழ்வார்களால் பாடப் பெற்ற திவ்யதேசம். மிருகண்டு முனிவர் வாமன-திரிவிக்கிரம அவதாரத்தைத் தரிசிக்க விரும்பினார். தம் மனைவி மித்ராவதியுடன் கடுந்தவம் புரிந்தார். முடிவில், திரிவிக்கிரமன் அவருக்குத் திருக்காட்சி தந்து மூலவராக நிலைத்தார். மூலவர் பதினெட்டடி உயரமானவர். இடக்காலை ஊன்றியவர். வலக்காலை உயர உயர்த்தியவர். வலக்காலின் அருகில் முன் வலக்கை நீண்டுள்ளது. இச்சிலை மரத்தாலானது. மூலவரின் வலக்கையில் சங்கும், இடக்கையில் சக்கரமும் இடம் மாறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் திருக்கோவில்: இங்கே, உலகளந்த பெருமாளின் சிலாரூபம் 35 அடி உயரம், 24 அடி அகலம் கொண்டது. சுதையாலான இது, திரிவிக்கிரமனின் சிலா ரூபங்களில் மிக மிகப் பெரியது. பேரகத்தான் என்பது இவரது திருநாமம். இடக்காலை விண்ணோக்கி உயர்த்தி, வலக்காலை மாபலியின் தலை மீது ஊன்றியுள்ளார். இடக்கையில் இரண்டு விரல்களையும், வலக்கையில் ஒரு விரலையும் உயர்த்திக் காட்டுகிறார். அதாவது, விண்ணுலகையும், மண்ணுலகையும் ஈரடிகளால் அளந்து முடித்ததை இடக்கை இரு விரல்களால் சுட்டினார். தூக்கிய ஓரடியை எங்கே வைப்பது என்று மாபலியிடம் வினாவும் பாவனையில் வலக்கை ஒரு விரலை உயர்த்திக் காட்டுகிறார்.

இந்தத் தலத்துக்கு தனித்துவ வரலாறும் உண்டு. தானம் தந்தபோது மாபலியால் வாமனனை முழுமையாகத் தரிசிக்க முடிந்தது. ஆனால், திரிவிக்கிரமனின் ஊன்றிய திருவடிக்கீழ் அகப்பட்ட மாபலி, முழுமையாகச் சேவிக்க முடியாமல் துன்பமுற்றான். எனவே, தவத்தை மேற்கொண்டான். எம்பெருமானும் திருவுள்ளம் நெகிழ்ந்து இங்கே உலகளந்த பெருமாளாக தரிசனம் தந்தார்.

அப்படியும் மாபலியால் பெருமாளைக் கண்ணார சேவிக்க முடியவில்லை. எனவே சந்நிதிக்கு அருகில் சிறிய திருமேனியுடன் ஐந்து தலை ஆதிசேடனாக பிரகாசிக்கிறார். இவரைப் போன்ற நாக மூர்த்தியை வேறு எங்கும் காணமுடியாது.

கேரளத்தில்: இங்கே ஆவணி மாதமே ஆண்டின் முதல் மாதம். ஆவணித் திருவோணத்தின் முன்வரும் அஸ்த நட்சத்திரம் தொடங்கிய பின் வரும் மக நட்சத்திரம் வரை மொத்தம் இருபத்தைந்து நாள்கள் திருவோண விழாவைப் பெரு விழாவாகக் கொண்டாடுகின்றனர். அவரவர் வசதி, வளப்பங்களுக்குத் தக்க விழா நாள்களின் எண்ணிக்கை வேறுபடுகிறது. திருவோண நாளுக்குப் பத்து நாள்கள் முந்தியது அஸ்த நட்சத்திர நாள். இந்த நாளில் திருவோணவிழா பூக்கோலங்களுடன் தொடங்குகிறது.

திருக்காட்கரை: மலை நாட்டு திவ்யதேசம். இங்கே மூலவர் வாமன மூர்த்தி. சங்கு, சக்கரம், கதை, பத்ம திருக் கைகளுடன் மாபலிக்குக் காட்சி கொடுத்த அதே கோலத்துடன் சேவை சாதிக்கிறார். ஆகவே, இது வாமனத் திருத்தலம். தாயார்- பெருஞ்செல்வ நாயகி. அப்பனிடம் ஓர் அடியார் பொன் வாழைக்குலைகளைச் சமர்ப்பித்து நேர்ந்து கொண்டு வழிபட்டதால் நேந்திர வாழை என்ற இனமே உருவானது என்பர். நம்மாழ்வார் பதினொரு பாசுரங்களால் இத்திவ்ய தேசத்தை மங்களாசாசனம் செய்துள்ளார். இத்திவ்யதேசம் தோன்றிய பிறகே கேரளத்தில் திருவோண விழா மிக்க புகழ் பெற்றது என்பர்.

மாதந்தோறும் திருவோண நாளில் நாராயணனை வழிபட்டு விரதம் இருந்தால், சீர் குலைந்த மனநலம் சீராகும். உறவினர் கொண்ட பகை அகலும். பகைவர் நண்பராவர். பொதுவாக, துன்பங்கள் அனைத்தும் நீங்கும். குறிப்பாக வாமனன் அவதரித்த நாளான ஆவணி-வளர்பிறை-துவாதசி-திருவோண நாளன்று, வாமனனை வழிபட்டால், அனைத்து வித நலன்களும் பெறலாம்.

தற்பெருமை கொள்தல் தற்கொலைக்குச் சமம்

sri krishna arjuna
sri krishna arjuna

தர்மோ ரக்ஷதி ரக்ஷித:’ என்பது ஆன்றோர் வாக்கு. தர்மத்தை நாம் கடைப்பிடித்துக் காத்தால், தர்மம் நம்மைக் காக்கும் என்பது அனுபவ உண்மை. இப்படி தர்மத்தைப் போதிக்க வந்தவையே இதிகாசங்கள். இரு கண்களான அவை நமக்குக் காட்டாத தர்ம நெறியா…?

மனிதன் சுக துக்கங்களை தனக்குத் தானே தேடிக் கொள்கிறான். ஒருவரின் சொல்லும் செயலுமே அவரை சுக துக்கங்களின்பால் அமிழ்த்துகிறது என்பது அனுபவம். ஆனால் சிலர் தம் தகுதியை மீறி சுய தம்பட்டம் அடிப்பதும், தற்பெருமை பேசித் திரிவதும், சாயம் வெளுத்தால் மனதை மீறிய சுமை அழுத்தி மாய்வதும் சக மனிதர் வாழ்வில் காண்கிறோம். இந்த உண்மையை விளக்க மகாபாரதத்தில் ஒரு சூழ்நிலைக் கதையை ஆன்றோர் எடுத்துக் காட்டியிருக்கிறார்கள்.

குருசேக்ஷத்ரம். பிரமாண்டமான போர்க் களம் அது. நடைபெறுவதும் உலகு கண்டிராத உக்கிரமான பாரதப் போர். உரிமைப் போர்தான் என்றாலும், சகோதரர்களே தங்களுக்குள் சண்டையிட்டார்கள். மண்ணுரிமை சார்ந்த போர்… ஆனாலும் சுய கெüரவம் கிளர்ந்தெழ, மதிப்புரிமையும் முன்னால் நின்றது.

அன்றைய உக்கிரப் போரின் கதாநாயகன் மாவீரன் கர்ணன். கள்ளம் அற்ற உள்ளத்தினன் கர்ணன், நண்பன் துரியோதனனிடம் கொடுத்த வாக்கினால் களம் கண்டான். பாண்டவரை வீழ்த்திக் காட்டுவேன் என்பது அவன் செய்த சங்கல்பம். அந்த எண்ணத்தால் உக்கிரப் போர் செய்தான்.

கர்ணனின் முன் முதலில் வந்தவன் தர்மபுத்திரன். பாண்டவரில் மூத்தவன். சேனையின் தலைவன் என்பதால் அவனை வீழ்த்துவதில் கவனம் செலுத்தினான். கர்ணனின் வில்லுக்கு முன் தர்மனின் போர்த்திறம் பலம் குன்றியது. கர்ணன் அம்புமழையில் தர்மன் நினைவிழந்தான்.

பதறியது கண்ணன் உள்ளம். “பாண்டவர்கள் என் உயிர். அவர்களின் உயிரைக் காப்பது என் விரதம்’ என்று சொல்லியிருந்தான் கண்ணன். இப்போது தர்மனின் உயிரைக் காக்க வேண்டுமே என்ன செய்வது? கர்ணனோ கண்கள் சிவக்க வெறித் தாக்குதல் தொடுக்கிறான். சிந்தித்தான் கண்ணன். கர்ணனைத் தாக்குமாறு அர்ஜுனனுக்கு ஆணையிட்டான். போர்க் களத்தில் மயங்கிச் சரிந்த தர்மனை அங்கிருந்து வெளியேற்றினான். முதலுதவிக்கு ஏற்பாடாயிற்று.

கர்ணனின் மீது அம்புமழை பொழிந்தான் என்றாலும், அண்ணன் குறித்த கவலையில் கொதித்தது அர்ஜுனன் மனம். அவனது இயல்பை அறிந்தவன் கண்ணன். ஆதலால், பீமனை கர்ணனோடு மோதவிட்டு, அர்ஜுனனை அங்கிருந்து அழைத்து வந்தான்.

பாசறையின் ஓர் ஓரம். தர்மனுக்கு சிகிச்சை நடந்தது. நினைவு மீண்டு, அங்கே பார்த்தன் அடி எடுத்து வைப்பதை ஆவலோடு பார்த்தான் தர்மன். தன்னை விலக்கிவிட்டு கர்ணனோடு போர் புரிந்தவன் என்பது வரை தருமனுக்கு நினைவு இருந்தது. எனவே, அவன் கர்ணனைக் கொன்றுவிட்டு இங்கே வந்திருப்பான் என்று எண்ணினான் தர்மன். அவன் உள்ளம் மகிழ்ச்சியில் திளைத்தது. “கர்ணனைக் கொன்று வந்த உன்னை வரவேற்கிறேன்’ என்று தர்மன் சொன்னபோது, பார்த்தனால் பதில் பேச முடியவில்லை. இடையில் புகுந்த கண்ணன், “தர்மத்தை நாடும் உன் வாக்கு ஒருபோதும் பொய்க்காது. நிச்சயம் அவன் கர்ணனை வீழ்த்தி வருவான்’ என்றவுடன், தர்மனுக்கு இருந்த மகிழ்ச்சி நொடியில் காணாமல் போனது.

தன்னுடலின் குருதிப் பெருக்கால் சோர்வு கண்டிருந்திருந்த தர்மன், துயரால் புலம்பத் தொடங்கினான். “காண்டீவி ஸவ்யஸôசி என்றெல்லாம் புகழ்கிறார்களே இந்த உலகத்தார்… எல்லாம் பொய்தானோ! உன் கையிலுள்ள காண்டீபமும் அலங்காரப் பொருளோ! கர்ணனை முடிக்காத உன் காண்டீபத்தைத் தூர எறிந்துவிடு…’ என்று இகழ்ந்தான் தர்மன்.

தந்தைக்குச் சமமானவன் அண்ணன் என்ற தர்மத்தைக் கடைப்பிடிக்கும் அர்ஜுனனுக்கு, அவன் தன்னை இகழ்ந்து பேசியதில் வருத்தம் இல்லை. ஆனால், காண்டீபத்தை இகழ்ந்ததில் அவன் கோபம் மிகக் கொண்டான். காண்டீபத்தை இகழ்பவரைக் கொல்வேன் என்பது அர்ஜுனன் செய்த சத்தியம். எனவே கோபம் தலைக்கேற, கத்தியை உருவியபடி தர்மனைக் கொல்லப் பாய்ந்தான்.

விருட்டெனப் பாய்ந்து, அவன் கத்தியைப் பிடுங்கி எறிந்தான் கண்ணன். “அர்ஜுனா, என்ன செய்யத் துணிந்தாய்? அண்ணனைக் கொல்வது அதர்மம். அதிலும் ஒரு தர்மாத்மாவாகத் திகழ்பவனைக் கொல்வது தகாது’ என்றான். அர்ஜுனனோ, தன் சபதத்தைக் கூறி, “காண்டீபத்தை இகழ்ந்த தர்மனைக் கொல்லாமல் விட்டால், எனது தர்மத்திலிருந்து மீறுவதாகுமே’ என்றான்.

தர்ம வழி நடப்பவரைத் தடுத்தல் அதர்மம் என்பதை அறிந்திருந்த கண்ணன், அர்ஜுனனுக்கு ஒரு யோசனை சொன்னான். “”அர்ஜுனா, மிகவும் உயர்வாகப் போற்றும் ஒருவரை இகழ்ந்து பேசினாலும், ஒருமையில் திட்டினாலும் அவரைக் கொலை செய்வதற்குச் சமம் என்பர். அதனால் நீ உன் தமையனை திட்டித் தீர்த்து, உன் தர்மத்தைக் காத்துக் கொள்” என்றான்.

அதை ஏற்ற அர்ஜுனன், தர்மனைத் திட்டித் தீர்த்தான். “”கர்ணன் ஒருவன் அடித்த அம்புக்குத் தாங்காமல் இப்படி சுருண்டு கிடக்கிறாயே, உன்னைப் போய் போர்க்களத்தில் முன்னிறுத்தி யுத்தம் செய்கிறோமே. நீயெல்லாம் ஒரு வீரனா?” என்று இகழ்ந்தான். தர்மனுக்கு கண்களில் தாரையாக நீர் பெருக்கெடுத்தது.

அடுத்த நொடி, கீழே கிடந்த கத்தியை மீண்டும் எடுத்து, தன் கழுத்தைத் தானே அறுத்துக் கொள்ள முயன்றான் அர்ஜுனன். இப்போதும் கண்ணன் பாய்ந்து, கத்தியைப் பிடுங்கி தூர எறிந்தான்.

“அர்ஜுனா, என்ன செய்கிறாய் தற்கொலை செய்துகொள்வது மகாபாபம் என்பது தெரியாதா?” என்று கேட்டான் கண்ணன்.

“கண்ணா, உனக்குத் தெரியாததல்ல. என் முன்னால், என் அண்ணன் தர்மனை எவனாவது இகழ்ந்தால் அவனைக் கொல்வேன் என்று சபதம் செய்திருந்தேன். இப்போது நானே அவனை இகழ்ந்துவிட்டேன் அதனால் என்னை நானே மாய்த்துக் கொள்வதே என் தர்மத்துக்கு உகந்தது” என்றான் அர்ஜுனன்.

பாண்டவர் ஐவரையும் காப்பேன் என்று சபதம் செய்த கண்ணனுக்கு, அர்ஜுனனைத் தடுத்தாக வேண்டிய நிலை. இப்போது இன்னொரு உபாயம் சொன்னான் கண்ணன்.

“தற்கொலைக்குச் சமமான ஒரு செயலும் உண்டு. அது தற்பெருமை பேசுவது. எனவே நீ உன்னைப் பற்றியே புகழ்ந்து பேசி, உனது சபதத்தை நிறைவேற்று” என்றான்.

அதை ஏற்ற அர்ஜுனன், “காண்டவ வனத்தை தீக்கிரையாக்கி, போருக்கு வந்த தேவேந்திரனை ஒருவனாகவே எதிர்த்து வெற்றி கண்டேன். வேடன் உருவில் வந்த கயிலைநாதனை வென்றேன். இந்திரலோகம் சென்று வில்வித்தை கற்று, இந்திரனின் பகைவர்களை வென்றேன். என்னைப் போன்ற வில்லாளி உண்டோ” என்று பலவாறாக தன்னையே புகழ்ந்து பேசி, தான் தற்கொலை செய்வதற்கு ஈடான ஒன்றை நிறைவேற்றிக் கொண்டான்.

பெரியோரை இகழ்வது தகாது என்றும், தற்பெருமை பேசுவது தற்கொலைக்குச் சமம் என்றும் வழி காட்டிய கண்ணன், அர்ஜுனனுக்கு மட்டுமா இந்த உபாயத்தைக் காட்டினான்..!?

நடிகை லிஸி லட்சுமி விவாகரத்து

திருமண பந்தம் என்பது, நம் சமுதாயத்தில் சில பத்து வருடங்களுக்கு முன்னர் வரையிலான மனநுட்ப உலகில் எத்தகையதாக இருந்தது! ; இன்றைய தொழில்நுட்ப உலகில் எவ்வாறு இருக்கிறது என்பதை யோசித்துப் பார்க்கும் போது… வருத்தமாகத்தான் உள்ளது.

எதற்காகத் திருமணம் செய்து கொள்கிறார்கள்?

இவ்வாறு சில நாட்கள் / மாதங்கள்/ வருடங்களுக்குள் பிரிந்து போகவா?

முன்பெல்லாம் விவாக ரத்தாகும் அல்லது கணவனை விட்டுப் பிரிந்து வாழும் பெண்களைக் கண்டால், கழிவிரக்கம் ஏற்படும்! தவறு பெண்ணிடமா அல்லது ஆணிடமா என்பதெல்லாம் உடனடியாக வெளித்தெரியாது; அது விவாதத்துக்குரியது! எதுவாக இருந்தாலும், பிரிந்து பட்டு தனியாக வாழ்வது எத்தகைய வலி என்பதை இருவருமே உணர வேண்டும்!

பொருளாதாரச் சார்பு என்ற பணியிட ஊக்கம், வேலை வாய்ப்பு வசதி, எவரையும் சார்ந்திராத தன்மை இவை மட்டுமே பெரும்பாலான பெண்களை விவாகரத்து என்ற மலை முகட்டுக்கு இழுத்துச் செல்வதாய்க் கருதுகிறேன்.

20 வயதில் ஈர்ப்பின் காரணத்தால் காதலிக்கிறார்கள், மணம் செய்கிறார்கள், அடுத்த ஐந்தாறு வருடங்களில் கசந்து பந்தத்தை அறுத்து வெளி வருகிறார்கள்! உடலில் சக்தியும் தெம்பும் இருக்கும் அடுத்த பத்து/ பதினைந்து ஆண்டுகளுக்கு வேலை வாய்ப்பு, வாழ வைக்கும்! 45 அல்லது 50 ஐக் கடந்துவிடும்போது, வழி தெரியாத வலி தெரியும்!

ஐ.டி., துறை பெண்களைப் பார்க்கும்போதும் இதுதான் தோன்றுகிறது. 35ல் இருந்து 40 வரை நல்ல பணிச்சூழல் இருக்கும்! அதன் பின்னர் புதியவர்கள் இந்தப் பணியிடத்தைப் பிடித்துவிடுவார்கள்! இன்றைய ’கைநிறைய சம்பளம்’ கணக்கு நிரந்தரமா என்பதை அவர்கள் யோசிப்பதே இல்லை!

***

டி.வி., சினிமா என ஊடக வெளிச்சத்துக்கு ஆசைப்பட்டு நடிக்கவோ அல்லது திரையில் தோன்றும் ஏதோ ஒன்றுக்காகவோ வந்துவிடும் பெண்களின் மண வாழ்க்கை சரியாக அமைந்து விடுவதில்லை என்பது பெருகிவரும் தற்போதைய விவாகரத்துகள் காட்டிக் கொடுக்கின்றன.

உண்மையில் எனக்கும் சினிமாத் துறைக்கும் வெகு தூரம். நான் சினிமாக்கள் பார்ப்பதில்லை; நடிகையர் விவரங்கள், பெயர்களைக் கூட தெரிந்து வைத்துக் கொள்வதில்லை!

நான் லிசா லட்சுமி என்ற இந்தப் பெண்ணை நடிகையாகப் பார்க்காமல், ஒரு சாதாரண பெண்ணாகவே பார்க்கிறேன். நடிகை என உடல் ரீதியாக ஏளனமாகப் பார்க்கும் சமூகம் இது. ஆனால், அவருக்குள்ளும் ஒரு மனசு இருக்கும்! என்பதை நான் உணர்கிறேன். திரைக்குப் பின் நடிப்பவர்கள், அதைத் தக்க வைக்க, திரைக்கு முன்னும் நடித்தாக வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள் இவர்கள்!

இந்தப் பெண்ணின் மன வலி… இந்த ஊடக அறிக்கையில் தெரிகிறது! தவறு யார் பக்கமாக வேண்டுமானாலும் இருக்கலாம்! ஆனால் தவறைச் சரிசெய்யும் மன வலிமையை இருவருமே பெறாமல் போவது, வருந்தத் தக்கது!

இந்தப் படத்தில் இவர் புன்னகைத்துக் கொண்டிருந்தாலும், கண்களில் தெரியும் சோக நிழலை நான் கவனிக்கத்தான் செய்கிறேன்!

நடிகை லிஸ்ஸி லக்ஷ்மி பத்திரிகை செய்தி :

இன்று திரு. பிரியதர்ஷன் உடனான எனது விவாகம் அதிகார்வபூர்வமாக ரத்து செய்யப்பட்டு விட்டது. இன்று சென்னையில் நாங்கள் இருவரும் அதற்க்கான அதிகார்வபூர்வ படிவங்களில் நாங்கள் இருவரும் கையெழுத்திட்டுவிட்டோம். விவாகரத்திற்க்காக விண்ணப்பித்து விட்டு நான் காத்திருந்த காலம் எனக்கு மிகவும் சோதனையாக அமைந்தது. சமீப காலங்களில் ஹிரித்திக் ரோஷன் – சுசேன், திலீப் – மஞ்சு, விஜய் – அமலா பால் ஆகியோ விவகாரத்திற்க்கு விண்ணப்பித்ததாக வந்த தகவல்கள் அறிந்து நான் அவர்களுக்காக பெரிதும் வருந்தியிருக்கிறேன். அது போன்ற நிகழ்வுகள் அவர்களுக்கும் மன வருத்ததையே அளித்திருக்கும். இருந்தும் அவர்கள் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் மரியாதையளித்தே பிரிந்தனர். ஆனால் எனது நிலையோ இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது. சென்னை உயர்நீதி மன்றம் தலையீட்டு வரை என்னை கடுமையாக காடுமிராண்டி தனத்துடனேயே என்னை அனுகினர். எங்கள் விவகாரத்தே நான் எங்கள் வாழ்க்கை எப்படியொரு அருவருக்கத்தக்கதாக இருந்திருக்குமென பறைசாற்றியிருக்கும். என் வாழ்வில் கடினமான நெடிய பாதை இத்துடன் நிறைவடைந்து விட்டதாக கருதுகிறேன். இத்தருணத்தில் இது போன்ற ஒரு நெருக்கடியான சூழ்நிலையில் எந்த வித எதிர்பார்ப்புமின்றி என்னுடன் இருந்த வழக்கறிஞர்கள், நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்கு எனது நன்றியினை தெரிவித்து கொள்கிறேன். எனக்கு பெரிதும் உறுதுனையாக இருந்த ஊடக நண்பர்களுக்கும் இத்தருணத்தில் நன்றியினை தெரிவித்து கொள்கிறேன். என் இரு குழந்தைகளின் காதலும், பாசத்திற்க்கும் என்றும் நான் நன்றி கடன் பட்டிருக்கிறேன். இவை அனைத்தையும் தாண்டி எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி.

தருமனின் கேள்வியும் பீஷ்மரின் பதிலும்

ஆறு கேள்விகளைக் கேட்கிறான் தருமன்.

1) கிம் ஏகம் தைவதம் லோகே?

2) கிம் வா அபி ஏகம் பராயணம்?

3) ஸ்துவந்த கம் ப்ராப்நுயுர் மாநவா: சுபம்?

4) கம் அர்ச்சந்த: ப்ராப்நுயுர் மாநவா: சுபம்?

5) கோ தர்ம: ஸர்வ தர்மாணாம் பவத: பரமோ மத:?

6) கிம் ஜபந் முச்யதே ஜந்து: ஜந்ம ஸம்ஸார பந்தநாத்?

*

கிம் ஏகம் தைவதம் லோகே?

லோகத்தில் ஒரே தெய்வம் எது? – இது என்ன கேள்வி புரியவில்லை. லோகத்தில் ஒரே தெய்வம் என்றால்? லோகத்தில் எவ்வளவோ நாடுகள், மக்கள், பண்பாடுகள், மதங்கள், அந்தந்த மதங்களில் தெய்வங்கள். லோகத்தில் ஒரே தெய்வம் என்றால் என்ன சொல்வது?

லோகம் லோகம் என்றால் கடல் சூழ்ந்த இந்தப் பரந்த பூமி என்று பொருளன்று. லோகம் என்றால் இங்கு பொருளே வேறு.

Statistics என்னும் துறையில் universe என்று ஒரு சொல்லைப் பயன்படுத்துவார்கள். அங்கு உடனே ஆஹா கலாக்ஸி எல்லாம் இருக்குமே, வானவெளி மண்டலம், மில்கி வே என்றெல்லாம் அந்தத் துறையில் அந்த வார்த்தை வந்ததும் பொருள் செய்துகொள்ளக் கூடாது. அங்கு யுனிவர்ஸ் என்றால் ஸ்டாடிஸ்டிகள் ஆய்வுக்கு நிர்ணயிக்கப்படும் தகவல் பரப்புக்குப் பெயர் யுனிவர்ஸ் என்பது.

அது போல் இங்கு ’லோகம்’ என்றால் கண்ணுக்குப் புலப்படாத அதீந்திரிய விஷயங்களைப் பற்றிச் சாத்திரங்களால் நிர்ணயிக்கப்படும் பொருள் நிச்சயங்களால் ஆன அறிவுத்தளம் என்று பொருள். அதாவது கடவுளைப்பற்றிய அறிவை ஏற்படுத்தும் பிரமாண நூல்களின் லோகம் என்பது அர்த்தம்.

‘அறிவை ஏற்படுத்தும் பதினான்கு வித்யா ஸ்தானங்கள்’ என்று பொருள் சொல்லுகிறார் ஸ்ரீ ஆதிசங்கரர். ‘அறிவுக்குக் காரணமான பதினான்கு வித்யா ஸ்தாங்களிலும் சிறந்தவராக நிர்ணயிக்கப்படும் அந்த ஒரே கடவுள் யார்?’ என்று ஸ்ரீ ஆதிசங்கரர் விளக்கமாக இந்தக் கேள்வியைப் புரியும்படி உரையில் எழுதிகிறார்.

‘சாத்திரங்களில் சொல்லப்பட்ட ஒப்புயர்வற்ற கடவுள் யார்?’ என்பது ஸ்ரீபராசர பட்டரின் உரையில் இந்தக் கேள்வியின் வடிவம்.

பதினான்கு வித்யா ஸ்தானங்கள் என்று ஸ்ரீ ஆதிசங்கரர் சொன்ன கணக்கு என்ன என்ன?

நான்கு வேதங்கள், ஆறு வேதாங்கங்கள், மீமாம்ஸை, நியாய் சாஸ்திரம், தர்ம சாஸ்திரம், புராணம் ஆக மொத்தம் பதினான்கு. இந்தப் பதினான்காலும் ஒட்டு மொத்தமாக அர்த்த நிர்ணயம், தாத்பர்யம் என்றபடிச் சிறந்தவராகக் கூறப்பட்ட அந்தக் கடவுள் யார்? என்று கேட்கிறான் தருமன் என்கிறார் ஸ்ரீ ஆதிசங்கரர்.

இப்பொழுது இந்தக் கேள்வி தெளிவாகப் புரிகிறது.

ஐந்தாவது கேள்வியில் ‘பவத: பரமோ மத:’ என்று ஒரு சொல் கோவை இருக்கிறது. அதற்கு ’தாங்கள் உங்களுக்கென்று உயர்ந்தது என்று கொண்டிருக்கும் கருத்து’ என்று பொருள்.

அதாவது தெய்வத்தன்மை பூரணமாகவும், தத்வ சாத்திரங்களால் மிகச் சிறந்த தெய்வம் என்று நிர்ணயிக்கப்பட்டிருப்பது என்று தாங்கள் எந்தத் தெய்வத்தை உங்கள் கருத்து முடிவாகக் கொண்டிருக்கிறீர்கள்? என்பது ஸ்ரீபராசர பட்டரின் உரை விளக்கும் கேள்வியின் வடிவம்.

’பவத: பரமோ மத:’ என்னும் பகுதியை எல்லாக் கேள்விகளும் சேர்த்து படிக்க வேண்டும் என்று சொல்கிறார் ஸ்ரீபராசர பட்டர்.

ஆக பீஷ்மர் மரபு சார்ந்த அறிவனைத்தும் திரண்ட பெருங்கடல் என்று ஸ்ரீகிருஷ்ணன் சொல்கிறார். பீஷ்மர் மறைந்துவிட்டால் அவருக்குத் தெரிந்த மரபுச் செல்வங்கள் அனைத்தும் மறைந்துவிடும். எனவே அந்த செல்வங்களை பின்வரும் சந்ததிகள் இழக்காவண்ணம் காக்க நீ விரும்பினால் போ போய் பீஷ்மரிடம் சென்று அனைத்தையும் கேள் என்பது ஸ்ரீகிருஷ்ணனின் அறிவுரை தருமனுக்கு.

அச்சுதன் உரைத்தவண்ணமே அறப்புதல்வன் கேட்கிறான். இவ்வளவு படித்த பாட்டன் தன் நிச்சயமாக எந்தக் கருத்தை, எந்த நிச்சயத்தைக் கொண்டிருக்கிறார் என்று அறிய வேண்டும் என்பது தருமனின் வேட்கை.

இதை நன்கு விளக்கிக் காட்டுகின்றனர் உரையாசிரியர்களாகிய ஸ்ரீஆதிசங்கரரும், ஸ்ரீபராசர பட்டரும். முன்னவர் அத்வைத ஆசாரியர். பின்னவர் விசிஷ்டாத்வைத ஆசாரியர். பரம தத்துவ நிலையைப் பற்றிய சித்தாந்த முடிவில் இருவருக்கும் கருத்து வேறுபாடு. ஆனால் வேத வேதாந்த சாத்திரங்களின் அடிப்படையில் உயர்ந்த மோக்ஷத்திற்காக வேண்டி வழிபடத்தக்கதாக நிர்ணயிக்கப்பட்ட அந்தச் சிறந்த தெய்வம் எது? என்னும் விஷயத்தில் இருவருக்கும் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை போலும்!

இவர்கள் என்ன? சங்கப் புலவர்களே கூட இந்தக் கருத்தைத்தான் மோக்ஷம் என்னும் உயர்ந்த இலட்சியத்திற்கு அருள் செய்யும் தெய்வம் என்னும் விஷயத்தில் கொண்டிருந்தார்களோ என்று நினைக்க வேண்டியிருக்கிறது. பரிபாடலில் ‘நாறிணர்த் துழாயோன் நல்கின் அல்லதை ஏறுதல் எளிதோ வீறுபெறு துறக்கம்?’ என்றல்லவா கேட்கின்றனர்!

வீறுபெறு துறக்கம் — மீண்டும் பிறவிச் சுழலில் திரும்பி வந்து சிக்காத உயர்ந்த மோக்ஷம்.

ஸ்ரீமத்வாசாரியரின் துவைத சித்தாந்தப்படி இந்த ஸஹஸ்ர நாமத்திற்கு உரை எழுதியிருக்கிறார்கள். அவை என்னிடம் இப்பொழுது இல்லை. எனவே ஒப்பீட்டுக்கு அந்தக் கருத்துகளை என்னால் அளிக்கமுடியவில்லை. மேலும் இந்த இழையில் என் மனம் போன போக்கில் நான் ரசித்துப் படிப்பது என்பதுதான் என் நோக்கம். எனவே அனைத்து உரைக் களஞ்சியம் என்று ஆக்கும் நிர்பந்தம் எனக்கும் இல்லை.

அத்வைதம் என்னும் பார்வையில் ஒருவர் பார்க்கிறார். விசிஷ்டாத்வைதம் என்னும் பார்வையில் ஒருவர் பார்க்கிறார். எவற்றை? ஒரே கடவுளின் ஆயிரம் நாமங்களை.

இரண்டுமே அத்வைதம்தான். ஒன்று அத்வைதம் அப்படியே. மற்றொன்று சித் அசித் ஆகிய இரண்டையும் என்றும் தன்னைவிட்டுப் பிரியாத உடலாகக் கொண்ட அத்வைதம்.

ஸ்ரீமத்வரின் கருத்து நேர் எதிரானது. துவைதம். அபேதம் என்பது சரியில்லாத கருத்து. உயிருக்கும் கடவுளுக்கும் இடையே பேதம், கடவுளுக்கும் உலகத்திற்கு இடையே பேதம். உயிர்களுக்குள் பேதம். உயிர்கள், உயிரற்ற பொருள் இவற்றிடையே பேதம்.

இவற்றைத் தவிர சுத்தாத்வைதம், பேதாபேதம், அசிந்த்ய பேதாபேதம் என்று பல.

எனக்கு பாரத நாட்டின் மெய்ப்பொருள் ஆய்வுகளில் மிகவும் பிடித்ததே இந்த மாதிரியான பார்வைகளின் பன்மைதான். எவ்வளவு சித்தாந்தங்கள்! எவ்வளவு ஆகமங்கள்! எவ்வளவு கடவுள்இயல் ஆய்வுகள்!

’யோசிக்கும் வேளையில் பசி தீர உண்பதும் உறங்குவதுமாக முடியும்’ என்று ஸ்ரீ தாயுமானவர் சொன்னபடிதான் வாழ்வு போகிறது என்றாலும் இவற்றில் ஆழும் போது அமர வாழ்வின் அடுப்பில் உலை கொதிக்கத்தான் செய்கிறது.

***

ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்

ஒருதலைக் காதல் விபரீதம்: நிச்சயிக்கப் பட்ட பெண்ணை கத்தியால் குத்தி தற்கொலைக்கு முயன்ற இளைஞர்

கோவை:

தமிழகத்தில் ஒரு தலைக்காதலுக்கு மேலும் ஒரு பெண் பலியாகியுள்ளார். கோவையில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்ணை வீடு புகுந்து கத்தியால் குத்திக் கொலை செய்த இளைஞர் தாமும் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

கோவை மாவட்டம் அன்னூர் தென்னம்பாளையம் ரோட்டை சேர்ந்தவர் சோமு (வயது 52). டெய்லர். இவருடைய மனைவி சாரதா. இவர்களது மகள் தன்யா(23). இவர் பி.எஸ்.சி (ஐ.டி) படித்து விட்டு பொங்கலூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

கேரள மாநிலத்தை சேர்ந்தவர் ஜஹீர் (30). இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சோமுவின் பக்கத்து வீட்டில் வாடகைக்கு தங்கி இருந்து, அன்னூர் ரோட்டில் உள்ள தனது சித்தப்பா பேக்கரியில் வேலை செய்து வந்தார். அப்போது தன்யா பள்ளியில் படித்து வந்தார். அப்போது தன்யாவிடம், ஜஹீர் அடிக்கடி பேசுவது வழக்கம். பக்கத்து வீட்டை சேர்ந்தவர் என்பதால், சோமுவின் குடும்பத்தினரும் இதனை கண்டு கொள்ளவில்லை.

இந்தவ் பேச்சும், பழக்கமும், ஜஹீரின் மனதில் ஒருதலைக் காதலாக உருவெடுத்தது. இந்த காதல் எண்ணங்களை அறிந்து கொள்ளாமல், தன்யாவும் அவருடன் பேசுவது உண்டு. ஆனால் இந்த பேச்சும், பழக்கமும் விபரீதம் ஆகிவிடக்கூடாது என்று, தன்யாவின் பெற்றோர், மகளிடம் அறிவுரை கூறினர். இதனால் தன்யாவும், பெற்றோர் சொல்லை கேட்டு, ஜஹீரிடம் பேசுவதை நிறுத்திக் கொண்டார்.

சந்தர்ப்பம் பார்த்து ஒருநாள், தன்யாவை வழிமறித்து தனது காதலை சொல்லி உள்ளார். இதனை சற்றும் எதிர்பார்க்காத தன்யா, தயவு செய்து என்னை மறந்து விடு. உன்னை பற்றிய எண்ணம் என்னிடம் துளிகூட இல்லை. நீ நினைத்தாலும், எனது பெற்றோர் இதற்கு சம்மதிக்க மாட்டார்கள். ஏனெனில் நீ வேறு மதம், நாங்கள் வேறு மதம் என்று கூறி விட்டு சென்று விட்டார்.

தன்யாவின் பேச்சில் நிலை குலைந்துபோன ஜஹீர், வாழ்ந்தால் உன்னோடு தான் வாழ்வேன் என்று வைராக்கியத்துடன் மீண்டும், மீண்டும் தன்யாவை தொந்தரவு செய்துள்ளார். இது பற்றி அறிந்த தன்யாவின் பெற்றோர் ஜஹீரை கண்டித்து உள்ளனர்.

இருந்த போதிலும் தன்யாவின் பெற்றோர், இந்த பிரச்சினைக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமானால் அவளுக்கு, நல்ல மாப்பிள்ளையாக பார்த்து திருமணம் முடித்து விட வேண்டியது தான் என்று நினைத்தனர். அதன்படி அன்னூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து வந்தவரை தன்யாவுக்கு திருமணம் பேசி முடித்து நிச்சயம் செய்தனர்.

திருமணம் அடுத்த மாதம் நடப்பதற்கு தேதி குறித்து, திருமணத்துக்கு தடபுடலாக ஏற்பாடுகளை செய்து வந்தனர். இந்நிலையில் நேற்று தன்யாவின் பெற்றோர், தன்யாவை வீட்டில் இருக்க சொல்லி விட்டு, உறவினர் வீட்டுக்கு சென்றனர். வீட்டில் தன்யாவை தனியாக விட்டு விட்டு செல்வதால், அப்போது ஜஹீர் வந்து பிரச்சினை செய்து விடுவானோ? என்று பயந்து வீட்டின் முன்பக்க கதவை பூட்டி விட்டு சென்று விட்ட னர். ஆனால் ஜஹீர் இந்த விஷயத்தை எப்படியோ? தெரிந்து கொண்டார். வீட்டின் முன் புறத்தில் பூட்டப்பட்டு இருப்பதை அறிந்து, பின்புறமாக சென்று கதவை தட்டி உள்ளார்.

இந்நிலையில் தனது பெற்றோர் தான் வந்து கதவை தட்டுகிறார்கள் என்று அறிந்து, கதவை திறந்து உள்ளார். அப்போது ஜஹீர் வீட்டுக்குள் புகுந்து, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தன்யாவை குத்தியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில், தன்யா கீழே சரிந்து விழுந்து பரிதாபமாக இறந்தார். இதைத்தொடர்ந்து ஜஹீர் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார். இந்த நிலையில் வீட்டுக்கு வந்து பார்த்த தன்யாவின் பெற்றோர், மகள் படுகொலை செய்யப்பட்டு கிடப்பதை அறிந்து கண்ணீர் விட்டு கதறினர்.

தன்யா படுகொலை செய்யப்பட்ட தகவல் கிடைத்ததும், அவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்ட மணமகன் தினேஷ் அழுதபடி வீட்டுக்கு ஓடிவந்தார். அங்கு ரத்த வெள்ளத்தில் தன்யாவின் சடலம் கிடந்ததை கண்டு தினேஷ் கதறி துடித்தார். கொஞ்ச நேரத்துக்கு முன் தானே ஒன்றாக வெளியே போய்ட்டு வீட்டுக்கு கொண்டு வந்து விட்டேன். அதற்குள்ளே கொலை செஞ்சிட்டானே பாவி. இப்படி நடக்கும் தெரிஞ்சா இன்னும் கொஞ்ச நேரம் கழித்து கொண்டு வந்து விட்டிருப்பேனே என்று கதறினார்.

இது குறித்த புகாரின் பேரில் அன்னூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்து ஜஹீரை போலீசார் தேடினர். இந்நிலையில் அவர் சாணிபவுடரைக் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவர் குறித்து தகவல் அறிந்த போலீஸார், ஜஹீரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

தமிழகத்தில் ஒருதலை காதலில், கடந்த ஜூன் மாதம் முதல் நேற்றுவரை 6 பெண்கள் பலியாகியுள்ளனர். சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் பெண் இன்ஜினீயர் சுவாதி படுகொலை செய்யப்பட்டார். இவரை தொடர்ந்து, விழுப்புரத்தில் நவீனா, கரூரில் கல்லூரிக்குள் புகுந்து மாணவி சோனாலி, தூத்துக்குடி கிறிஸ்தவ ஆலயத்துக்குள் புகுந்து ஆசிரியை பிரான்சினா ஆகிய 4 பெண்கள் அடுத்தடுத்து படுகொலை செய்யப்பட்டனர். கடந்த வாரம் விருத்தாச்சலத்தை சேர்ந்த புஷ்பலதா என்ற நர்ஸ் ஒருதலை காதல் காரணமாக தற்கொலை செய்துகொண்டார். நேற்று அன்னூரில் தன்யா படுகொலை செய்யப்பட்டார். தமிழகத்தில் ஒருதலைக்காதலுக்கு ேநற்று வரை 6 பெண்கள் பலியாகியுள்ளனர்.

“மண்ணாங்கட்டி என்று பெயர் வை”

(பெரியவாளுடைய சில உத்திரவுகள் ரொம்பவும்
வேடிக்கையாக இருக்கும்! + அகச் சுவையும் இருக்கும்)

இரண்டு சம்பவங்கள்

முப்பத்தைந்து வயதைத் தாண்டாத தம்பதிகள்.
முகத்தில் சோகம் அப்பிக்கொண்டிருந்தது.

பெரியவாளுக்கு வந்தனம் செய்தார்கள்.

“ஒரே பிள்ளை…..போ..யி..டுத்து…”

இருவரும் கூட்டாக அழுதார்கள்.அழுகை ஓர்
ஆறுதல்.சிறிது நேரத்திற்குப் பின் அழுகை நின்றது.

“இந்தப் பிரபஞ்சத்திலே எதுவும் நம்முடையது இல்லே.
பணம் – சொத்து, பிள்ளை – குட்டி,அண்ணன் – தம்பி
எதுவுமே சொந்தம் இல்லே.கவலைப்படாதே.
உங்களுக்கு ஒரு பையன் பிறப்பான்.
மண்ணாங்கட்டி என்று பெயர் வை….”

அருகிலிருந்தவர்களுக்கு இதைக் கேட்டதும்,
வாய்விட்டு சிரிக்க வேண்டும் போலிருந்தது.
(ஆனால் சிரிக்கவில்லை)

கொசுறு செய்தி.

ஓர் ஆண்டுக்குப் பிறகு அந்தத் தம்பதிகள்
மண்ணாங்கட்டியுடன் தரிசனத்துக்கு வந்தார்கள்.
………………………………………………………………………………….

மரத்தாலான சிறு குடம்,டம்ளர்,உத்தரிணி,தட்டு,
கிண்ணங்கள் கொண்டுவந்து சமர்ப்பித்தார் ஒரு பக்தர்.

பெரியவாள் ஒவ்வொன்றாகக் கையிலெடுத்து
ஆசையுடன் தடவிக் கொடுத்தார்கள்.

பின்னர், குறும்புச் சிரிப்புடன் சொன்னார்கள்.

“இங்கே (ஸ்ரீமடத்தில்) தான்
மரப்பாத்திரங்களுக்கு மதிப்பு; குடுமிக்கு மதிப்பு;
சந்த்யாவந்தனம் செய்பவர்களுக்கு மதிப்பு…!”

இதை நகைச்சுவை போலச் சொன்னார்களே தவிர,இது
லைட்டான விஷயம் அல்ல.பெரியவாளின் அகச் சுவை

குரங்கு சொல்றபடி நடக்க…

“குரங்குகள் போன்ற மிருகங்களுக்கு கூட ஒரு discipline இருக்கு! லீடர் குரங்கு சொல்கிறபடி நடக்கின்றன””

(“ஆனால், ஆறறிவு படைத்த மனிதர்கள் தான் குரு சொல்கிறபடி நடப்பதில்லை. என்னை பார்த்து, நீங்களெல்லாம் ஆசார்யாள். பெரியவாள் என்றெல்லாம் சொல்கிறீர்கள். ஆனால், நான் சொல்வதை உங்களால் செய்ய முடிகிறதில்லை!”)

சொன்ன்வர்-ஸ்ரீமடம் பாலு
தொகுப்பாளர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

2012 போஸ்டானது-மறு பதிவு

பெரியவாள் பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்துகொண்டிருந்தார்கள்.

எதிரே, ஒரு பெரிய மரம். தடினமான குரங்கு ஒன்று வந்து மரத்தில் ஏறியது. பின், இருபது – முப்பது குரங்குகள் அந்த லீடர் குரங்கை தொடர்ந்து மரத்தில் ஏறின.

பெரியவாள், ஒரு கூடை மாம்பழத்தை மரத்தடியில் போட சொன்னார்கள்.

லீடர் குரங்கு என்ன உத்தரவு எப்படி போட்டதோ தெரியவில்லை! ஆனால், மற்ற குரங்குகள் ஒவ்வொன்றாக வந்து பழத்தை எடுத்துகொண்டு மேலே சென்றன. லீடர்குரங்கு மட்டும் ஒரு பழத்தை கூட தொடவில்லை!

பெரியவாள் சொன்னார்கள்:

“குரங்குகள் போன்ற மிருகங்களுக்கு கூட ஒரு discipline இருக்கு! லீடர் குரங்கு சொல்கிறபடி நடக்கின்றன.

“காட்டில், யானைகளுக்கு ஒரு தலைமை யானை இருக்கும். அந்த லீடர் யானையை follow பண்ணித்தான் மற்ற யானைகள் செல்லும்.

“ஒரு கட்டெறும்பு செத்துபோனால், மற்ற கட்டெறும்புகள் அதை இழுத்துச் செல்லும்.

“ஒரு காக்கை இறந்து போனால், மற்ற காக்கைகள் மரத்தில் உட்கார்ந்துகொண்டு துக்கமாய் கதறும்.

“ஆனால், ஆறறிவு படைத்த மனிதர்கள் தான் குரு சொல்கிறபடி நடப்பதில்லை. என்னை பார்த்து, நீங்களெல்லாம் ஆசார்யாள். பெரியவாள் என்றெல்லாம் சொல்கிறீர்கள். ஆனால், நான் சொல்வதை உங்களால் செய்ய முடிகிறதில்லை!”

கவனமாக கேட்டுகொண்டிருந்த பக்தர்கள், ஒரே குரலாக, “பெரியவா என்ன உத்தரவு போட்டாலும் செய்கிறோம்” என்று பக்தியோடு பதிலளித்தார்கள்.

“சரி, காலையில் இரண்டு நிமிஷம், சாயங்காலம் இரண்டு நிமிஷம், எனக்காக ஒதுக்குங்கள். இருபத்திநான்கு மணி நேரத்தில், நாலு நிமிஷம் தான் கேட்கிறேன்.

“காலையில், இரண்டு நிமிஷம் “ராம, ராம” என்று சொலுங்கோ; சாயங்காலம் இரண்டு நிமிஷம்
“சிவ, சிவ” ன்னு சொலுங்கோ…”

“அப்படியே செய்கிறோம்” என்று சுமார் நூறு பேர்கள் தெரிவித்து கொண்டார்கள்.

அமளி அடங்கியதும், பெரியவாள் அருகிலிருந்த தொண்டர்களிடம், “பத்து பன்னிரண்டு பேர்களாவது , சொன்ன சொல்லை காப்பாத்துவா” என்றார்கள்.

அந்த, யாரோ பத்து பன்னிரண்டு புண்ணியாத்மாக்களை உருவாக்குவதற்காகத்தான்., ஆழமான கருத்துடன், அரைமணி லெக்சர்!

குரங்கு, காட்டு யானை, கட்டெறும்பு, காக்கை – நமக்கு நல்ல வழிகாட்டிகள்; “ஆச்சார்யர்கள்”.

அவர்களை (அவைகளை) யாவது follow பண்ணலாம் தானே?