Home Blog Page 5736

‘தமிழ் ஐகான்ஸ்’  கேட்லாக் வெளியீட்டுவிழா !

மறைந்த இசைமேதை  எம் எஸ் என்கிற எம் எஸ்.சுப்புலட்சுமி பற்றிய ஆர்ட் கேலரியின் நிறைவு விழா இன்று நடைபெற்றது.

நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் ஏ.எல்.எஸ் குடும்பத்தைச் சேர்ந்த ஜெயந்தி கண்ணப்பன் மற்றும்  வருமான வரித்துறை ஆணையர் டாக்டர் சீனிவாசராவ்.  ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு’கேட் லாக்’ கை வெளியிட்டனர்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் திருமதி ஜெயந்தி கண்ணப்பன் பேசும் போது,

“நான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் பெருமைப்படுகிறேன். இங்கே எம்.எஸ் அவர்கள் பற்றிய ஓவியக் கண்காட்சியைச் சுற்றிப் பார்த்தேன். மிக அருமையாக இருந்தது. எம்.எஸ். அம்மா எனறாலேஅவரது அழகிய தோற்றமும்,  மூக்கின் இரு பக்கமும் ஜொலிக்கும் வைரமுக்குத்தியும் ,காதுகளில் மின்னும் வைரத்தோடும் , நெற்றியில் பளிச்சிடும் குங்குமப் பொட்டும் மனதில் வரும். அவரது்  தோற்றமேஇந்தியப் பெண்ணின் அடையாளமாக இருந்தது.

அவர் சினிமாவிலும் பெரிய வெற்றி பெற்று இசையுலகிற்காகத்  தன்னை அர்ப்பணித்துப் புகழ் பெற்று விளங்கினார். அவருக்குக் கிடைக்காத விருதுகளும் இல்லை . பெருமைகளும் இல்லை எனலாம். .அப்படிப்பட்ட எம், எஸ். அம்மா அவர்களின் பலவித முக பாவங்கள் கொண்ட ஓவியங்கள், பலவித தோற்றத்திலான ஓவியங்கள் என அரிய முயற்சியாக இருந்தது.

அது மட்டுமல்ல எம்.எஸ். பற்றிய அரிய புகைப்படங்களின் கண்காட்சியும் இருந்தது. இம் முயற்சியில்  வெங்கடேசன், உதயசங்கர் என இரு இளைஞ ர்கள் ஈடுபட்டு செய்து இருப்பது பாராட்டுக்குரியது. இதைநார்வே, ஸ்வீடன், பிரான்ஸ் போன்ற ஏழு நாடுகளிலும் நடத்த இருக்கிறார்கள்.

நம் நாட்டு தொன்மையை கலைப்பெருமையை நாடு கடந்து கொண்டு சேர்க்கும் இம்முயற்சி  பாராட்டுக்குரியது. “என்றார்.

வருமான வரித்துறை ஆணையாளர் டாக்டர் சீனிவாசராவ் பேசும் போது,

‘”நான் ஆந்திராக்காரர் . இன்று இங்கே கூடியிருப்பவர்களைப் பார்த்து ஆச்சரியப்படுகிறேன். உண்மையிலே இது ஒரு மிராக்கள் தான் வெவ்வேறு துறையைச் சேர்ந்தவர்கள் நாம் இங்கே ஒன்றாக இருப்பதேநம்மை இணைத்து இருப்பதே இசையின் எம்.எஸ்ஸின் தெய்வீக சக்தி என்றே சொல்ல வேண்டும். இங்கே கண்காட்சியை பார்த்தேன். பாவங்களில் நவரசங்கள்தான்  இருக்கிறது என்பார்கள் ஆனால் இங்குவரையப்பட்டு கண்காட்சியில் வைக்கப்பட்டு இருக்கிற ஓவியங்களில் நவரசங்களைத் தாண்டிய பாவங்களைப் பார்த்தேன்.
இந்த அவசர உலகத்தில் கலையை ரசிக்கவும்  கலைஞர்களை மரியாதை செய்யவும் யாருக்கும் தோன்றுவதில்லை. அதற்கு நேரமில்லை. இந்தக் காலத்தில் இம் முயற்சியில் ஈடுபட்டுள்ள வெங்கடேசன்,உதயசங்கர் இருவரையும் பாராட்டுகிறேன். இது உலகின் பிற நாடுகளுக்கும் செல்ல இருப்பது மகிழ்ச்சிக்குரியது ” என்றார்.

நிகழ்ச்சியில் இயக்குநர் வெங்கடேசன் பேசும் போது ,

” தமிழ்ச் சினிமா நூற்றாண்டு விழா கொண்டாடும் இந்த ஆண்டு எம் எஸ் அம்மாவின் நூற்றாண்டும் கூட.
இதையொட்டி ,’தமிழ் ஐகான்ஸ்’  கேட்லாக் வெளியீட்டுவிழா : படங்கள்: கேலரி! என்கிற பெயரில் தமிழ் சினிமாவின் புகழ் பெற்ற சிறந்த ஆளுமைகளை மக்கள் முன் கொண்டு சேர்க்கும் பணியை சாய்மீராமீடியாஸ் கொண்டு செல்ல விருக்கிறது. முதலில் எம் எஸ் அம்மாவிடமிருந்து தொடங்குகிறோம். இந்த  ஆரட் கேலரி யை நிறைய பேர் பார்த்துப் பாராட்டினார்கள். இம்முயற்சியில் என்னுடன் இணைந்துகொண்டிருக்கிறார் உதயசங்கர்.எங்கள் பணி தொடரும்” என்றார்.

இந்நிகழ்ச்சியில் ‘மியூசி மியூசிக்கல்’ ஹரிச்சரன்தாஸ் உள்ளிட்ட இசை ஆர்வலர்கள் பலரும்  கலந்து கொண்டனர்.

நவராத்திரி பற்றிய 50 குறிப்புகள்!

1.சோழர் காலத்தில் நவராத்திரி திருவிழா அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டது.

2. நவராத்திரி நாட்களில் பெண்கள் கன்யா பூஜை செய்வதால் சகல செல்வங்களையும் பெறலாம்.

3. விஜயதசமி தினத்தன்று பெருமாள் கோவில்களில் வன்னி மரக்கிளையை வைத்து அதில் பெருமாளை எழுந்தருளச் செய்து பூஜை நடத்துவார்கள். இந்த வழிபாட்டில் கலந்து கொண்டால் கிரக தோஷங்கள் விலகி ஓடி விடும்.

4. நவராத்திரி பண்டிகையை முதன் முதலில் ராமர்தான் கொண்டாடியதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

5. நவராத்திரி நாட்களில் இரவு 7 மணி முதல் 9.30 மணி வரை தேவி வழிபாடு செய்ய உகந்த நேரமாகும்.

6. ஈசனம், அம்மையும் ஒன்று சேர்ந்து ஊஞ்சலில் ஆடுகின்ற தரிசனத்தை 9 நாட்களும் கண்டால் நவராத்திரி பூஜை செய்தபலன் கிடைக்கும்.

7. நவராத்திரி நாளில் வரும் சப்தமி திதியன்று வழிபட்டால் ஸ்ரீஹயக்ரிவப் பெருமாளின் அருளைப் பெறலாம். அன்று ஸ்ரீலலிதாசகரஸ்ர நாமத்தையும் நவாக்சரி மந்திரத்தையும் ஓதுவது கூடுதல் பலன்களைத் தரும்.

8. பிரம்ம நவராத்திரி, கிருஷ்ண நவராத்திரி, ரிஷி நவராத்திரி, தேவ நவராத்திரி, பஞ்ச கல்ப நவராத்திரி, பாக்ய நவராத்திரி,
போக நவராத்திரி, தாத்பர்ய நவராத்திரி, சற்குரு நவராத்திரி, தேவதா நவராத்திரி என்று பல வகை நவராத்திரிகள் உள்ளன.

9. பங்குனி மாதம் அமாவாசைக்குப் பிறகு பிரதமையில் தொடங்கும் லலிதா நவராத்திரி, மாசி மாதம் வரும் ராஜ மாதங்கிநவராத்திரி ஆடியில் வரும் மகாவராகி நவராத்திரி, புரட்டாசியில் வரும் சாரதா நவராத்திரி ஆகிய 4 நவராத்திரிகளையும் பெண்கள் கடைபிடித்தால் அம்பிகையின் அருளை பரிபூரணமாகப் பெறலாம்.

10. அனைத்திலும் தேவியே உள்ளாள் என்பதை உலகுக்கு உணர்த்தவே நவராத்திரி நாட்களில் கொலு வைக்கப்படுகிறது.

11. எல்லாரும் புரட்டாசி நவராத்திரியில் மட்டுமே கொலு வைக்கிறார்கள். ஆனால் 4 நவராத்திரி நாட்களிலும் கொலுவைத்தால்தான் அம்பிகை அருள் கிடைக்கும்.

12. வீட்டில் கொலு வைத்தால், அம்பிகை அனைத்து அம்சமாக நம் வீட்டில் எழுந்தருளி விட்டாள் என்பது நம்பிக்கையாகும்.

13. ஒரு நவராத்திரிக்கு கொலு வைத்தால் பிறகு வாழ்நாள் முழுவதும் நவராத்திரி நாட்களில் கொலு வைக்க வேண்டும் என்கிறார்கள்.

14. நவராத்திரி பூஜையை அஸ்தம், சித்திரை அல்லது மூலம் நட்சத்திர நாட்களில் தொடங்குவது நல்லது. இந்த நாட்களில் வைதிருதி யோக நேரம் இருந்தால் மிகவும் நல்லது.

15. விஜய தசமி தினத்தன்று ஸ்ரீஆயுர் தேவியை போற்றி வழிபட வேண்டும். இதுதான் நவராத்திரி பூஜையின் நிறைவான பூஜையாகும்.

16. நவராத்திரி நாட்களில் பகலில் சிவ பூஜையும் இரவில் அம்பிகை பூஜையும் செய்வதே சரியான வழிபாடாகும்.

17. நவராத்திரி 9 நாட்களும் தினமும் பகலில் 1008 சிவ நாமாவளிகளை ஜெபித்து வழிபாட்டால் அளவிடற்கரிய பலன்கள் கிடைக்கும்.

18. நவராத்திரி வழிபாட்டை தினமும் தொடங்கும் போது ஸ்யவன மகரிஷியையும் சுகன்யா தேவியையும் தியானித்தபடியே தினசரி பூஜையை தொடங்க வேண்டும்.

19. நவராத்திரி நாட்களில் சுண்ணாம்பு மாவினால் கோலம் போடக்கூடாது. அரிசி மாவைப் பயன்படுத்திதான் கோலமிட வேண்டும். அவ்வாறு செய்வதால் குடும்ப ஒற்றுமையும், செல்வமும் வளரும். சுண்ணாம்பு மாவு பயன்படுத்தினாலோ, எதிர்மறையான விளைவுகளே உருவாகும்.

20. ஒன்பது நாட்களிலும் தேவியாக பாவித்துத் துதிக்க, நமக்குச் சொந்தமல்லாத, பிறர் வீட்டுக் குழந்தையையே அழைத்து
வந்து உபசரிக்க வேண்டும். நம் வீட்டு அல்லது நம் உறவினர்களின் குழந்தைகளையே தேர்ந்தெடுப்பது கூடாது.

21. தினந்தோறும் நவராத்திரி பூஜையின் நிறைவாக, பலவிதமான மங்கலப் பொருட்களை (மஞ்சள், குங்குமம், வளையல்,ரிப்பன் போன்றவை) ஏழைகளுக்கு தானமாக அளிக்க வேண்டும்.

22. தனித்து தானம் செய்வதை விட, சத்சங்கமாகப் பலரும் ஒன்று சேர்ந்து, மங்கலப் பொருட்களை மிகப் பெரிய அளவில் தானமாக அளிப்பதே சிறப்பானது.

23. தான தர்மங்கள்தான் நவராத்திரி பூஜைகளை நிறைவு செய்ய உதவிகின்றன. ஆகவே நவராத்திரியில் தானமளிப்பதே
மிகமிக முக்கியம்.

24. கன்னிப் பெண்களுக்குப் புதிய ஆடை முதலியவை பரிசாக அளிக்கப்படவேண்டும் என்பது நவராத்திரி விழாவின் முக்கிய
அம்சமாகும்.

25. நவராத்திரி ஒன்பது நாளும் பூஜையைத் திருமகளே ஏற்றுக் கொள்கிறாள்.

26. சரஸ்வதி பூஜை என்ன கிழமையானாலும் கடலை சுண்டல் எதுவும் செய்ய முடியாதவர்கள் பழங்கள் கொடுக்கலாம்.

27. நவதானியச் சுண்டல் நவக்கிரக நாயகர்களைத் திருப்திப்படுத்தும். கோள்களால் வரக்கூடிய துன்பங்களைத் தடுக்கும்.

28.ஷோடச லஷ்மி பூஜை நவராத்திரி வெள்ளிக்கிழமையில் செய்தால் ஐஸ்வர்யம் பெருகும். இது கிரியா சக்தி வழிபாடு.

29. நவராத்திரி காலத்தில் முடிந்தவரை பாராயணம் செய்வது தேவிக்கு அளவில்லாத மகிழ்ச்சியைத் தரும்.

30. அந்த நாளில் கொலுவுக்கு வரும் கன்னியரின் நடையுடை, பாவனை, பேச்சு, பாட்டு, நடந்து கொள்ளும் விதம் இவற்றை முனிவர்கள் தீர்மானித்து தன் மகனுக்கோ, தன் உறவினர் மைந்தனுக்கோ இவள் ஏற்றவள் என்று தீர்மானிப்பர். பல திருமணங்கள் அப்படி முடிவாகி கார்த்திகை அல்லது தையில் நடந்திருக்கின்றன.

31. நவராத்திரி விரதம் இருப் பவர்கள் தரையில் தான் படுத்து தூங்க வேண்டும்.

32. அம்பிகை சங்கீதப் பிரியை. எனவே நவராத்திரி நாட்களில் தினமும் ஏதாவது ஒரு பாட்டாவது பாட வேண்டும்.

33. நவராத்திரி 9 நாட்களும் மகா சக்தியை ஐதீகப்படி வணங்கினால் முக்திப் பேறு உண்டாகும்.

34. நவராத்திரி கோலத்தை செம்மண் கலந்து போட்டால் அம்பாள் மனமகிழ்ந்து வருவார்.

35. நவராத்திரி 9 நாட்களும் வாசலில் மாவிலை கட்டி பூஜை செய்தால் ஐஸ்வர்யம் உண்டாகும்.

36. கொலு வைத்திருப் பவர்கள் அதன் முன் நவக் கிரக கோலம் போட்டால் அம்பாள் அனுக்கிரகமும், நவக்கிரகப் பலன்களும் கிடைக்கும்.

37. நவராத்திரி 9 நாட்களும் வீட்டுக்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு பரிசுப் பொருட்களுடன் பூந்தொட்டி, புத்தகத்தை தானமாக கொடுக்கும் பழக்கம் கடந்த சில ஆண்டுகளாக சென்னையில் அதிகரித்துள்ளது.

38. முத்தாலத்தி என்றொரு வகை கோலம் உள்ளது. நவராத்திரி நாட்களில் இந்த வகை கோலம் போட்டால் அம்பாள் அருள் நமக்கு எளிதாக கிடைக்கும்.

39. நவராத்திரி 9 நாட்களில் வரும் வெள்ளிக் கிழமையன்று 5 சுமங்கலி பெண்களுக்கு அன்னதானம் செய்து புடவை மற்றும் தாம்பூலம் கொடுத்து ஆசி பெற்றால் உடனடியாக திருமணம் கைகூடும்.

40. நவராத்திரி 5-ம் நாளான வரும் திங்கட்கிழமை லலிதாம்பிகையின் அவதார தினமாக கொண்டாடப்படுகிறது. அன்று 9 சிறுமிகளுக்கு பட்டுப்பாவாடை தானம் செய்தால் நினைத்தது நடக்கும்.

41. நவராத்திரி 9 நாட்களும் சர்க்கரைப் பொங்கல், உளுந்து வடை, நைவேத்தியம் செய்தால் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.

42. நவராத்திரி தொடர்பான சுலோகம் மந்திரம் தெரியவில்லையாப கவலை படாதீர்கள் ஓம் ஸ்ரீ லலிதா தேவியே நம என்பதை 108 தடவை சொன்னாலே போதும். உரிய பலன் கிடைக்கும்.

43. நெமிலியில் திரிபுர சுந்தரி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒரு நவராத்திரிக்கு கலசத்தில் வைக்கப் படும் தேங்காய் அடுத்த ஆண்டு நவராத்திரி வரை கெடாமல் இருக்கும்.

44. நவராத்திரி நாட்களில் முப்பெரும் தேவி யரின் கதைகளை கேட்டால் அம்மைநோய் தாக்காது என்பது நம்பிக்கை.

45. சுகமான வாழ்வு வேண்டும், கல்வியில் சிறந்து விளங்க வேண்டும், அரசியலிலும், வேலையிலும் பதவி தொடர வேண்டும்,எந்த தொழிலில் ஈடுபட்டாலும் வெற்றி மீது வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் நவராத்திரி பூஜையை அவசியம் செய்ய வேண்டும்.

46. ராமபிரான் நவராத்திரி விரதத்தை கடைபிடித்த பிறகுதான் அவருக்குச் சீதை இருக்குமிடம் தெரிந்தது என்று தேவி பாகவதம் சொல்கிறது.

47. கொலு பொருட்களை பாதுகாக்க வேண்டியது முக்கியம். அவைகளில் மந்திர ஆவர்த்தி இருக்கும்.

48. தேவியை நவராத்திரி சமயத்தில் ஒன்பது மடங்கு அதிகமாகப் பூஜிக்க வேண்டும் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.

49. ஸ்ரீராமர், விஷ்ணு, விசுவாமித்திரர், காளிதாசர், அபிராமி பட்டர், பிரம்மா, வனவாசத்தில் பாண்டவர்கள் ஆகியோர் நவராத்திரி பூஜைகள் செய்து அம்பிகையின் அருளுக்குப் பாத்திரமானார்கள் என்று புராணங்கள் சொல்கின்றன.

50. வசதி, வாய்ப்பு உள்ளவர்கள் நவராத்திரி பூஜையை தினமும் முறைப்படி ஸங்கல்பம், கணபதி பூஜை, ப்ரதான பூஜை, கண்டா பூஜை ப்ராணப் பிரதிஷ்டை, அங்கபூஜை, அஷ்டோத்திர நமாவளி, நவதுர்கா பூஜை, ஜோதி பூஜை என்று விஸ்தாரமாகச் செய்யலாம்.

பாமாலை பெற்று புகழ்மாலை தந்த பிரான்

அது 18ஆம் நூற்றாண்டின் முற்பகுதி. தென்பாண்டி நாடான நெல்லைச் சீமையை நாயக்க மன்னரின் அரசப் பிரதிநிதியாக ஆண்டு வந்தவர் வடமலையப்ப பிள்ளை. ஆலயத் திருப்பணிகள் பல ஆற்றியவர்.  பக்தர், புலவர், புரவலர்.. இப்படி எல்லாம்தான்.

நெல்லையிலிருந்து திருச்செந்தூர் செல்லும் வழியில் உள்ளது தென்திருப்பேரை தலம். பாண்டிநாட்டுத் திருப்பதிகள் பதினெட்டுள் ஒன்றான இது நம்மாழ்வார் அபிமானித்த நவ திருப்பதிகளுள் ஒன்று.  இவ்வூரை திருப்பேரை என்கிறது திருவாய்மொழி. இத்தலத்தின் பெருமான் மகரநெடுங்குழைக்காதர். இக்குழைக்காதரைக் கண்ணனாகக் கண்டு, தாம் வகுளபூஷண நாயகியாகி மோகித்துப் பார்க்கிறார்  நம்மாழ்வார்.

நம்மாழ்வாரின் உள்ளம் கவர்ந்த குழைக்காதர், திருப்பேரைத் தலத்தில் வாழ்ந்துவந்த நாராயண தீட்சிதர் என்பாரது உள்ளத்தையும் தன்பால் ஈர்த்துவிடுகிறார். வடமலையப்பரின் காலத்தில் வாழ்ந்துவந்த நாராயண தீட்சிதர், மகர நெடுங்குழைக்காதரிடம் மட்டுமல்லாது நம்மாழ்வாரிடத்தும் தீவிர பக்தி கொண்டவர். தினமும் தவறாது திருப்பேரையில் இருந்து  திருநகரிக்குப் போய் ஆழ்வாரை தரிசித்த பின்பே மற்ற வேலைகளைத் தொடங்குவார். கவிபாடும் ஆற்றல் கைவரப் பெற்ற தீட்சிதர் தமக்குரிய நில புலன்கள் கொண்டு மனநிறைவோடு வாழ்ந்து வந்தவர்.

ஒரு வருடம்… வானம் பொய்த்தது. எங்கும் வறட்சி. விளைச்சல் குன்றியது. இவரால் அரசு வரியை உரிய காலத்தில் செலுத்த முடியவில்லை. திருப்பேரைவாசிகள் சிலருக்கும் இதே நிலை வரி  வசூலிக்கும் அதிகாரியோ கொடுமையானவன். அவன் கையில் அதிகாரம் கிடைத்தால்.. வாட்டி வதைக்கத் தொடங்கினான்.

தீட்சிதரும் பிறரும் தங்கள் குறையைச் சொல்லி தவணை கேட்டனர். அதிகாரி அதைக் காதில் போட்டுக் கொள்ளவே இல்லை. அவர்களை நெல்லைக்குக் கொண்டு சென்று சிறையிலிட்டான். தீட்சிதர்  தமக்கு சிறைவாசம் நேர்ந்தது பற்றி மனம் நொந்தார்.

விதியின் சதியெனத் தேற்றிக் கொண்டார். மதிப்பு, மரியாதை இழந்தோமே உற்றார் உறவினர், வீடு, மனை, நிலம், மக்கள் என சகல வசதிகளையும் இழந்து இப்படி சிறைப்பட்டோமே என்று அவர்  வருந்தவில்லை. மாறாக குழைக்காதரையும் நம்மாழ்வாரின் மோன வடிவையும் முத்திரைக் கையையும் தினமும் தரிசித்து வந்தோமே அது முடியாமல் போய்விட்டதே என்று அழுது புலம்பினார்.

போதெலாம் போது கொண்டு உன் பொன்னடி புனைய மாட்டேன்… என்றவாறு பூமாலை தொடுத்துப் பார்க்க இயலாத நிலையில் பாமாலை தொடுத்துப் பாடத் தொடங்கியது அவருள்ளம். இப்படி  உருவானதுதான் மகர நெடுங்குழைக்காதர் பாமாலை என்ற பக்திப் பனுவல்.

நாட்கள் சில சென்றன. தீட்சிதர் பக்த கவி ஆயிற்றே. பிரார்த்தனையே பக்தர்களின் உயிர்மூச்சு அல்லவா நாளொரு பாடலாக மலர்ந்தது. மாதம் ஒன்று கழிந்தது. அவர் பாமாலையில் இருபது பா மலர்கள்  தொடுக்கப்பட்டிருந்தன.

21 ஆம் பாட்டில் – திங்கள் ஒன்றாகச் சிறையிலிருந்தோம் இச்சிறை அகற்றி எங்கள்தம்பால் இரங்காத தென்னோ- என்று தீட்சிதர் பெருமூச்சு விடுகிறார்.

திடீரென இவர் உள்ளம் வடமலையப்பரைப் பற்றி எண்ணுகிறது. அவர் நீதிமான். புலவர். நல்ல தமிழ் ரசிகரும் அல்லவா – எண்ணியபோது, தம் நிலையை அவரிடம் யார் எடுத்துரைப்பார் என்றும் மனது  சஞ்சலப்படுகிறது. அதேநேரம் உள்மனம் அருள்கடைக்கண்பார் என்று பிரார்த்திக்கிறது.

இப்படிப் பகுத்தறிவு எய்த்து விழுந்த இடத்திலேயே குழைக்காதர் அருள்புரிகிறார். பாமாலையின் 23 ஆம் பாட்டில் மெய்யுருக மீண்டும் பாடுகிறார் தீட்சிதர்.

வள்வார் முரசதிர்கோமான் வடமலையப்பன் முன்னே

விள்வாருமில்லை, இனி எங்கள் காரியம் வெண்தயிர்பால்கள்வா அருட்கடைக்கண்பார் கருணைக் களிறு அழைத்தபுள்வாகனா

அன்பர்வாழ்வே தென்பேரைப் புராதனனே

இப்பாடலைக் கண்ணீர் மல்க பாடிப் பாடிக் கசிந்துருக, இவர் படும் பாட்டைச் சற்று தமிழ் பயின்ற காவலன் கேட்கிறான். பாடல் அவன் மனத்தைக் கவர்ந்தது. கரைத்தது. தம் தலைவன் வடமலையப்பன்  பெயர் இப்பாடலில் வர, ஏதோ விஷயம் இருக்கிறது என்று எண்ணி, வடமலையப்பரிடம் சென்று சொல்கிறான். பதறித் துடித்த வடமலையப்பர் தீட்சிதரையும் அவரைச் சேர்ந்தவர்களையும் விடுவிக்கிறார்.

அவர்களுக்குத் தக்க உதவிகள் செய்து நடந்துவிட்ட தவறுக்கு மன்னிக்க வேண்டுகிறார். பிறகு தீட்சிதரின் நிலங்களை வரியில்லாத நிலங்களாகச் செய்து விடுகிறார். பாமாலை சூட்டிய பக்தருக்கு மகரநெடுங்குழைக்காதர் அளித்த புகழ்மாலை, பெருமான் நிகழ்த்திய எத்தனையோ அற்புதங்களில் ஒன்றாகிப் போனது.

ராம்குமார் தற்கொலை: பேச்சும் பின்னணியும்

ரா.கு. தற்கொலை(?)க்கு முன் – 1 (ஆகஸ்ட் மாத பதிவு!)
*
ராம்குமார் குற்றவாளி என்று காவல்துறை தரும் ஆதாரம் என்ன ?
ராம்குமார் ஸ்வாதி பின்தொடர்ந்து வந்ததற்கான செல்போன் சிக்னல் தொடர்ச்சியாக காலை மாலை இருவேளையும் ஸ்வாதி செல் போன் சிக்னல்செல்லும் இடங்களில் எல்லாம் ராம்குமாரின் சிக்னல் இருந்துள்ளது.
அடுத்ததாக நேரில் பார்த்த சாட்சிகள் இவை இரண்டும் முக்கிய சாட்சிகள்.
இப்போது ராம்குமாரின் வழக்கறிஞர் என்ன செய்ய வேண்டும்??
ராம்குமார் ஸ்வாதியை பின்தொடரவில்லை என்பதை நிரூபிக்க வேண்டும்..
காவல்துறை குறிப்பிடும் நேரத்தில் ராம்குமார் எங்கே இருந்தார் யாரிடம் பேசி கொண்டு இருந்தார் என்பதை ஆதார பூர்வமாக எடுத்துவைக்க வேண்டும்..
நேரில் பார்த்ததாக சொல்லப்படும் சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்து அவர்களிடம் இருந்து உண்மையை வெளிவர வைக்கவேண்டும்….
அதை விடுத்தது இந்த வக்கீல் வண்டு முருகன் என்ன செய்கிறார் ??
தினமும் மீடியா முன்பு வந்து நின்று கொண்டு
**ஸ்வாதிக்கு வெர்ஜினிட்டி இல்லை ..
ஆதாரம் எங்கே என கேட்டால் இல்லை என்கிறார்.
**ஸ்வாதிக்கு திருமணம் ஆகிவிட்டது என்கிறார்.
ஆதாரம் எங்கே என கேட்டால் இல்லை என்கிறார்.
**ஸ்வாதிக்கு மதம் மாற இருந்தார் நோம்பு இருந்தார் என்கிறார்.
ஆதாரம் எங்கே என கேட்டால் இல்லை என்கிறார்.
**ஸ்வாதி நூறுக்கு மேற்பட்ட சிம்காடுகளை பயன்படுத்தினார் என்கிறார்.
ஆதாரம் எங்கே என கேட்டால் இல்லை என்கிறார்.
**ஸ்வாதிக்கு பெங்களூரில் திருமணம் முடிந்துவிட்டது என்கிறார்.
ஆதாரம் எங்கே என கேட்டால் இல்லை என்கிறார்.
**ஸ்வாதி அவர் அப்பா இல்லை.வளர்ப்பு அப்பா என்றார் .. பிறகு வைப்பாட்டி மகள் என்றார் .
ஆதாரம் எங்கே என கேட்டால் இல்லை என்கிறார்.
**ஸ்வாதி வாட்ஸுப் பேஸ் புக்கில் யாருடனெல்லாம் பேசி உள்ளார் என்ற தகவலை காவல் துறை வெளியிட வேண்டும் என்கிறார். அதாவது அந்த பெண் பலருடன் தொடர்பு வைத்து இருந்தார் என சொல்ல வருகிறார்
**ஸ்வாதி லேப்டாப்பை எல்லோருக்கும் காமிக்க வேண்டும் என்கிறார்
ஒரு பெண் பிள்ளையை பெற்றெடுத்து தினம் தினம் எப்படி வீடு திரும்புவாள் என்று வயிற்றில் மரண பயதோடு பள்ளிக்கு அனுப்பி கல்லூரிக்கு அனுப்பி வேலைக்கு அனுப்பி தினம் தினம் அவள் வீடு திரும்பும் வரை வயிற்றில் நெருப்பை கட்டி கொண்டு திரிந்த தகப்பனே தான் சீராட்டி வளர்த்த பெண்ணை வாயை இரண்டாக பிளக்குமாறு நட்ட நடு ரோட்டில் இருகூறாக வெட்டி விட்டாராம் ..
வெட்டணும்னு நினைத்தவர் ஏன்டா ரயில்வே ஸ்டேஷன்ல வெச்சு வெட்டணும் ??
எங்காவது ஓரமா வைத்து வெட்டி இருக்கலாம் .
கொஞ்சம் விஷம் குடுத்து கூட கொன்னு இருக்கலாம்.
இப்படி எல்லாம் கேள்விகளை எழுப்பி பார்ப்பவர்களுக்கு இவளை வெட்டியது தவறே இல்லை என்ற எண்ணத்தை தோன்ற வைப்பதுதான் எண்ணமா ?
ஏண்டா வக்கீல் வண்டுமுருகா ராம்குமாரை விடுதலை செய்ய வாதாட..
ராம்குமார் காவல்துறை குறிப்பிட்ட நாளில் எங்கே இருந்தார் என்ற ஆதாரத்தை முதலில் மீடியவிடம் காட்டுடா அதை விட்டு விட்டு நியாயம் கேட்டு நிற்கும் குடும்பத்தை தரக்குறைவாக கேவலமாக பேசினால் அவர்களே இந்த வழக்கை விட்டு விலகிவிடுவார்கள் என்றும், தாழ்த்த பட்டவன் என்பதாலேயே ராம்குமார் தண்டிக்க போட்டுவிட்டான் என்று கடைசில் எல்லாம் முடிந்த பின்பு ஊளை விட்டு அவனை தியாகி ஆகும் வேலையை விட்டு விட்டு, அவன் நிரபராதி என்று நினைத்தால் அதற்காக வாதாடு. அதை விட்டு விட்டு இறந்த பெண்ணையும் அந்த குடும்பத்தையும் இதற்கு மேல் அசிங்க படுத்தாதே..
இதை விட ஒரு கொடுமை தமிழச்சி சொல்லிட்டார் சொல்லிட்டார் என்று குதிக்கிறானுங்க ..
தமிழச்சி என்கிற யுமா இதுவரை எவ்ளோ ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வைத்து முகநூலில் அசிங்க பட்ட கதை தெரியாது போல ..
கேவலம்டா சாதியை தூக்கி கொண்டு சண்டை கேள்வி கேட்கவேண்டும் என்று நினைக்கும் கும்பல் பதிவை நன்கு படித்து விட்டு வரவும் ..
ராம்குமார் குற்றவாளியா அல்லது குற்றவாளி இல்லை என்னவோ இந்த பதிவு சொல்லவில்லை ராம்குமார் நிரபராதி என்று நினைத்தால் அவரை எப்படி காப்பாற்ற வேண்டும் என்பதே இந்த பதிவின் நோக்கம்
***
ரா.கு., தற்கொலை(?)க்குப் பின்: (செப்டம்பர் மாத பதிவு)
*
ராம்குமார் குற்றவாளி அல்ல என கூறுபவர்களுக்கு எனது சில கேள்விகள்

1) சுவாதியின் ரத்தகரை படிந்த சட்டை எப்படி ராம்குமார் அறைக்கு வந்தது??
2) சுவாதியின் செல்போன் எப்படி ராம்குமாரிடம் வந்தது??
3) கொலைநடந்த அன்றே அவன் அறையை விட்டு விட்டு அவசரமாக சொந்த ஊர் செல்ல வேண்டிய அவசியம் என்ன??
4) அவனது செல்போன் டவர் எப்படி கொலையோடு ஒத்து போனது ??
5) தவறு செய்யாத போது எப்படி அவனால் மிக சரியாக நடித்து காட்ட முடிந்தது??
6) அவன் குற்ற்றவாளி இல்லை என்றால் சம்பவம் நடந்த நேரத்தில் ராம்குமார் எந்த இடத்தில் யாருடன் இருந்தான்? அதையேன் இதுவரை ராம்குமார் தரப்பு விளக்கவில்லை?
7) போலீஸ் கேசை முடிப்பதற்காகவோ அல்லது யாரையோ காப்பாற்ற முயல்வதாக இருந்தால்கூட சென்னையிலிருந்து 600 km தொலைவிலுள்ள ராம்குமாரை ஏன் குற்றவாளியாக்க வேண்டும். சென்னையில் வேறு அப்பாவிகள் யாருமே இல்லையா.???
8) கைது செய்யும் போது போலீஸ் தான் ராம்குமார் கழுத்தை அறுத்ததாக அவனது தந்தை இரண்டு நாள் கழித்துதான் கூறினார் ஏன் அன்றே அவர் அதை சொல்லி இருக்கலாமே???
9) ராம்குமார் எந்த சமுகத்தை சார்ந்தவன் என்று தெரியாதவரை இந்த வழக்கு சரியான பாதையில் சென்றுக் கொன்டிருந்தது,
10) ராம்குமாரை கைது செய்தபோது அரசியல் கட்சி தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்தனர் திருமாவளவன் உள்பட. தற்போது உள்ளாட்சி தேர்தல் நெருங்குவதால் பிணத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேட பார்கிறார்கள் .
இவற்றிற்கான உங்களுடைய பதில் என்ன?

*
பின்குறிப்பு:
இது இரண்டும் முகநூலில் யாரோ எழுதி பகிர்ந்தது. நான் எழுதியதில்லை!
இந்த விவகாரத்தில் துவக்கம் முதலே நான் ஆர்வம் காட்டவில்லை! பின்னணி குறித்து எனக்கு வேறு சில அனுமானங்கள் உண்டு!
எனக்கு பெரும் வருத்தத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்திய ஒரே விஷயம்…
யாரோ ஒரு அனாமதேயப் பெண்மணி (உள்நாட்டில் கூட இல்லை; வெளிநாட்டில் இருந்து கொண்டு, எந்த விதத்திலும் நம் நாட்டின் சட்ட திட்ட நடைமுறைகளுக்கு உட்படாத பாதுகாப்பு வளையத்துக்குள் இருந்து கொண்டு, ஏதோ கதைகளை புனைந்து கொண்டு உளறிக் கொட்டுகிறார் என்றால், அதையெல்லாம் பெரிய எவிடன்ஸ் போல், யாரோ ஒரு பெரிய தலைவர் சொல்வது போல் நினைத்துக் கொண்டு – வெரி வெரி சீப் என்று சொல்லத்தக்க வகையில் இருப்பதை எல்லாம் பிரசுரிக்கவும், பெரிய விஷயமாக்கவும் எண்ணி செயல்பட்ட சூனிய விகடனை நினைத்துதான்! இவ்வளவு கேவலமாக இதழியல் துறையை அசிங்கப் படுத்துவார்கள் என்பதை ஜீரணிக்க இயலவில்லை!
இதற்குப் பதில் ஆனந்த விகடனுக்கு கதைகளை எழுதி அனுப்பியிருக்கலாம்!
இதற்குப் பெயர்தான் புலனாய்வோ?
நண்பர் விகேஷ் உள்பட உடனிருந்த சிலரை நினைத்துப் பார்க்கிறேன்!

இந்துமுன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை: பேருந்து மீது கல்வீச்சு

திருப்பூர் : கோவையில் இந்து முன்னனி பிரமுகர் கொலை செய்யப்பட்ட நிலையில் , திருப்பூரில் அரசு பேருந்துகள் உட்பட 5 பேருந்துகள் மீது கல்வீசித்தாக்குதல் . திருப்பூர் போலிசார் விசாரனை. கோவையில் இந்து முன்னனி பிரமுகர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு இந்து முன்னனி அழைப்பு விடுத்திருந்த நிலையில் திருப்பூரில் பலத்த போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கோவையில் பெரும்பாலான இடங்களில் பேருந்துகள் ஓடவில்லை.

திருப்பூரில் ஐந்து பேருந்துகள் கண்ணாடி உடைப்பு.
திருப்பூர் தாராபுரம் ரோடு கோவில் வழி அருகே மர்ம நபர்களால் அரசுப் பேருந்து கண்ணாடி உடைப்பு

கோவை இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் சசிகுமார் படுகொலை

கோவை: கோவையில் இந்து முன்னணி பிரமுகர் நள்ளிரவில் படுகொலை செய்யப்பட்டார். இதனால் பதற்றம் ஏற்பட்டதையடுத்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கோவை இந்து முன்னணியின் செய்தி தொடர்பாளர் சசிகுமார், தனது பணிகளை முடிந்து நள்ளிரவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். கோவை சுப்பிரமணியம்பாளையம், சக்கரை விநாயகர் கோயில் அருகே அவர் வந்தபோது, அப்பகுதியில் பதுங்கியிருந்த மர்ம நபர்கள் சிலர் அவரை வழிமறித்து ஆயுதங்களால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்து உயிருக்கு பேராடிய சசிகுமாரை மீட்ட அப்பகுதியினர் அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சசிகுமார் பலியானார். இச்சம்பவத்தையடுத்து அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பதற்றத்தை தணிக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

பஸ்கள் இயக்கப்படவில்லை:

கோவை – மேட்டுப்பாளையம் புறநகர் மற்றும் நகரப் பேருந்துகள் இயக்கப்படவில்லை. கவுண்டம்பாளையம், சுப்ரமணியம்பாளையம், துடியலூர் உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் அசுடைக்கப்பட்டன. கோவை – மேட்டுப்பளையம் சென்ற தனியார் பஸ் கண்ணாடி உடைக்கப்பட்டது.

திருப்பூரில் பஸ் கண்ணாடி உடைப்பு:

திருப்பூரிலும் கல்வீசி பஸ் கண்ணாடி உடைக்கப்பட்டது. பெரும்பாலான பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பல்லடம் ரோடு, ஊத்துக்குளி ரோடு, கொங்கு மெயின்ரோடு, அவினாசி ரோடுகளில் தனியார் பஸ்கள் எதுவும் இயக்கப்படவில்லை.

இந்து முன்னணி சசிக்குமாா் படுகாெலையை கண்டித்து சத்தியமங்கலத்தில் அரசு பேருந்து கண்ணாடி உடைப்பு. காேவை திருப்பூா் மேட்டுப்பாளையம் ஆகிய ஊா்களுக்கு செல்ல வேண்டிய அரசு மற்றும் தனியாா் பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதி. அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு ள்ளது.

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதி: நலமாக உள்ளதாக தகவல்

தமிழக முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் நலமாக உள்ளதாக டாக்டர்கள் தகவல் தெரிவித்தனர்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவர் நலமாக இருக்கிறார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா, சென்னை க்ரீம்ஸ் ரோடு அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக வியாழக்கிழமை நள்ளிரவு அனுமதிக்கப்பட்டார். காய்ச்சல் மற்றும் அஜீரணக்கோளாறால் பாதிக்கப்பட்ட அவர் சிகிச்சைக்காக இரவு 10.15 மணிக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும், தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும், உடல்நிலை சீராக உள்ள நிலையில், பொது பிரிவில் மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ளதாகவும் மருத்துவமனை அறிக்கை தெரிவிக்கிறது.
ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் பரவியதையடுத்து மருத்துவமனை முன்பு ஏராளமான தொண்டர்கள் குவியத் துவங்கியுள்ளனர். இதன் காரணமாக அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது. இதையடுத்து அங்கு பாதுகாப்புக்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.
முதல்வர் ஜெயலலிதாவுக்கு சர்க்கரை நோய் இருந்ததாக கூறப்படுகிறது. வீட்டில் வைத்து சிகிச்சை அளித்து வந்ததால் ஏற்பட்ட சுகவீனப் பிரச்சினையின் காரணமாக நேற்று திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கர்நாடக அரசை கலைப்பது தான் தீர்வா? : ராமதாஸ்

காவிரி பிடிவாதம் பிடிப்பதால், கர்நாடக அரசை கனத்த
இதயத்துடன் கலைப்பது தான் தீர்வாஎன்று பாமக நிறுவுனர் ராமதாஸ் அறிக்கையில் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை:
காவிரியில் தமிழகத்திற்கு வினாடிக்கு 3000 கனஅடி வீதம் நாளை முதல் 10 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்ற காவிரி மேற்பார்வைக்குழுவின் தீர்ப்பை ஏற்க முடியாது என்று கர்நாடகம் அறிவித்துள்ளது. காவிரி பிரச்சினையில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையும், அதை பாதுகாக்கும் அமைப்புகளையும் எந்த அளவு அவமதிக்க முடியுமோ, அந்த அளவு கர்நாடகம் அவமதித்திருக்கிறது.
தமிழ்நாட்டில் சம்பா சாகுபடிக்காக வினாடிக்கு 3000 கன அடி தண்ணீர் வழங்க வேண்டும் என்ற காவிரி மேற்பார்வை குழுவின் தீர்ப்பு தமிழகத்திற்கு பெரிய அளவில் பயனளிக்காது. சம்பா சாகுபடிக்கு  அந்த நீர் போதுமானதல்ல. இதை நேற்று வெளியிட்ட அறிக்கையில் புள்ளி விவரங்களுடன் நான் விளக்கியிருந்தேன். ஆனால், அந்த நீரைக் கொடுப்பதற்கு கூட கர்நாடகம் மறுத்து பிடிவாதம் காட்டுகிறது. காவிரி மேற்பார்வைக் குழு தீர்ப்பு வெளியாவதற்கு முன்பே, தமிழ்நாட்டிற்கு காவிரியில் ஒரு சொட்டு தண்ணீர் கூட வழங்க முடியாது என கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் கூறியிருக்கிறார். மேற்பார்வைக் குழு தீர்ப்பு வெளியான பிறகு அதுபற்றி கருத்து தெரிவித்த கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா, ‘‘காவிரி மேற்பார்வைக் குழு தீர்ப்பை ஏற்றுக் கொள்ள முடியாது. அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு  செய்வோம்’’ என்று மிரட்டல் விடுத்திருக்கிறார்.
கர்நாடக எதிர்க்கட்சிகளும் காவிரி விவகாரத்தில் பிடிவாதத்தையும், வெற்றுப்புணர்வையும் உமிழ்ந்து வருகின்றன. பெங்களூருவில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதலமைச்சரும், மாநில பாரதிய ஜனதா தலைவருமான எடியூரப்பா,‘‘ காவிரி மேற்பார்வைக் குழுவின் தீர்ப்பை கர்நாடக அரசு ஏற்கக்கூடாது. எத்தகைய விளைவுகள் ஏற்பட்டாலும் அதைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை. தமிழகத்திற்கு ஒரு சொட்டு நீர் கூட திறந்துவிடக் கூடாது’’ என்று கூறியிருக்கிறார். அக்கட்சியின் இன்னொரு மூத்தத் தலைவரான ஈஸ்வரப்பாவும் இதேகருத்தை வலியுறுத்தியிருக்கிறார். தேவகவுடா தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளமும் தமிழகத்திற்கு நீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மற்றொரு புறம் கன்னட இனவாத அமைப்புகள் மாண்டியா மாவட்டத்தில் வன்முறையை நடத்தியுள்ளன.
காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் தரக்கூடாது என்பதற்காக கர்நாடக அணைகளின் நீர் இருப்பைக் குறைத்துக் காட்டும் மோசடியிலும் கர்நாடகம் ஈடுபட்டிருக்கிறது. உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி கடந்த 05.09.2016 அன்று நள்ளிரவிலிருந்து தான் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. அப்போதைய நிலவரப்படி கர்நாடக அணைகளின் நீர் இருப்பு 56.81 டி.எம்.சி ஆகும். அன்று முதல் நேற்று வரை  தமிழகத்திற்கு கிடைத்துள்ள தண்ணீரின் அளவு 14 டி.எம்.சிக்கும் குறைவு தான். அதன்படி கர்நாடக அணைகளில் குறைந்தது 43 டி.எம்.சி தண்ணீர் இருக்க வேண்டும். ஆனால், நேற்றைய நிலவரப்படி கர்நாடக அணைகளில் 26.17 டி.எம்.சி மட்டுமே தண்ணீர் இருப்பதாக அம்மாநில அரசின் இணைய தளங்களில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அப்படியானால், மீதமுள்ள 17 டி.எம்.சி தண்ணீர் என்னவானது? என்ற கேள்விக்கு கர்நாடகம் பதிலளிக்க வேண்டும். கர்நாடகத்தில் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப் படவில்லை; குடிநீருக்காக மட்டுமே தண்ணீர் எடுக்கப்படுகிறது என்று அம்மாநில அரசே கூறியுள்ளது.
குடிநீருக்காக ஒவ்வொரு நாளும் அதிகபட்சமாக வினாடிக்கு 2000 கன அடி தண்ணீர் எடுக்கப்படுவதாக வைத்துக் கொண்டாலும் கடந்த 15 நாட்களில் 2.55 டி.எம்.சி தண்ணீர் மட்டுமே எடுக்கப்பட்டிருக்க வேண்டும்.  அதன்படி பார்த்தால் அணைகளின் நீர் இருப்பை 14 டி.எம்.சி அளவுக்கு கர்நாடக அரசு குறைத்துக் காட்டுவதாகவே கருத வேண்டியிருக்கிறது. மேலும் சுமார் 500 ஏரிகளில் தண்ணீரை நிரப்பி அதை கணக்கில் காட்டாமல் மறைக்கும் முயற்சியிலும் கர்நாடக அரசு ஈடுபட்டுள்ளது. ஒரு மாநிலத்திற்கு உரிமைப்படி வழங்க வேண்டிய நீரை வழங்காமல் இருப்பதற்காக, நீர் இருப்பைக் குறைத்துக் காட்டி நீதிமன்றங்களையும், மக்களையும் ஏமாற்ற முயல்வது நல்ல அரசுக்கு அழகல்ல.
வன்முறைகளை தூண்டி விடுவதன் மூலமும், கர்நாடக அணைகளில் தண்ணீர் இல்லை எனக்கூறி மோசடி செய்வதன் மூலமும் தமிழகத்திற்குரிய தண்ணீரை தர மறுப்பது ஏற்றுக் கொள்ள முடியாததாகும். இது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையும், கூட்டாட்சி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டுத் தத்துவத்தையும் அவமதிக்கும் செயலாகும். இதை மத்திய அரசு அனுமதிப்பது நாட்டின் ஒற்றுமைக்கு ஆபத்தாக முடியும். எனவே, உரிமைப்படி தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நீரை தொடர்ந்து வழங்க வேண்டும் என்று  கர்நாடக அரசுக்கு பிரதமர் நரேந்திரமோடி ஆணையிட வேண்டும். அதன்பிறகும் தமிழகத்திற்கு நீர் வழங்க கர்நாடக அரசு மறுத்தால், கர்நாடக முதலமைச்சர் ‘கனத்த இதயத்துடன்’ சில செயல்களை செய்வதைப் போல மத்திய அரசும் ‘கனத்த இதயத்துடன்’ சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அவற்றில் அரசியலமைப்பு சட்டத்தின் 356 ஆவது பிரிவை பயன்படுத்தி கர்நாடக அரசை கலைப்பதும்  ஒன்றாக இருக்க வேண்டுமா? என்பதை நாம் முடிவு செய்ய வேண்டிய தருணம் நெருங்கி விட்டது.

கீழப்பாவூரில் சமுதாய வளைகாப்பு விழா கே.ஆர்.பி.பிரபாகரன் எம்.பி நடத்திவைத்தார்

கீழப்பாவூர் பேரூராட்சி சமுதாய நலக் கூடத்தில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது விழாவில் நெல்லை புறநகர் மாவட்ட செயலாளர் கே.ஆர்.பி.பிரபாகரன் எம்.பி கலந்து கொண்டு கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழாவினை நடத்தி வைத்தார் முன்னதாக அவர் பேசுகையில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அனைத்து மக்களும் பயன்பெறுகின்ற வகையில், எண்ணற்ற பல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார் . திருமணத்திற்கு நிதியுதவியும், தாலிக்கு தங்கமும் வழங்கிய ஒரே முதல்வர் இந்தியாவிலேயே சிறந்த முதல்வர் ஜெயலலிதா தான் கர்ப்பிணித்தாய்மார்களுக்கு முன்பு ரூ.12,000 வழங்கி வந்த மகப்பேறு நிதியுதவி ரூ.18,000 ஆக உயர்த்தி வழங்க ஆணையிட்டுள்ளார்.மேலும் ஏழை எளிய பெண்கள் தனக்கு வளைகாப்பு நடத்த முடிய வசதியில்லை என்ற எண்ணத்தை போக்கவே இப்படி ஒரு சிறந்த திட்டத்தை மக்களுக்கு தந்துள்ளார் மேலும் தாயுள்ளத்தோடு திட்டங்களை மக்களுக்கு முழுமையாக கொண்டு சோ்க்கும் வகையில் திட்டங்கள் தீட்டி வருகிறார் . ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்பணிகள் திட்டத்தின் சார்பில் வழங்கப்பட்டுள்ள கர்ப்பிணி தாய்மார்களுக்கும் சமுதாய வளைகாப்பு, குழந்தைகளுக்கு ஆரோக்கிய பூரிப்பு என்ற கையேடு அதையும் படித்து கருவுற்ற தாய்மார்கள் கர்ப்ப காலத்தில்கருவிலுள்ள குழந்தை ஆரோக்கியமாக வளர்வதற்கு எப்படி பட்ட உணவுகளை உண்ண வேண்டும். எந்தெந்த பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என பல்வேறு குறிப்புகளை அறிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார் பின்னர் 80க்கும் மேற்பட்ட கர்ப்பிணித்தாய்மார்களுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கினார்கள். நிகழ்சியில் மாவட்ட கவுன்சிலர் மு.சேர்மபாண்டியன், நகர செயலாளர் பாஸ்கர் ,தீப்பொறி அப்பாதுரை குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சரஸ்வதி,மேலவைப் பிரதிநிதிகள் ஜெயராமன் ,கணபதி ,இளைஞரணி இருளப்பன் ,அம்மா பேரவை சாமிநாதன் ,விவேகானந்தர்,மேற்பார்வையாளர்கள் தாமரைச்செல்வி,ஜெயலட்சுமி தமிழ்க்கொடி மற்றும் அலுவலர்கள், அங்கன்வாடிப்பணியாளர்கள், கர்ப்பிணித்தாய்மார்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்

ஸ்ரீராமானுஜ வைபவம்

 

உலகமே வியந்து போற்றிய, இராமானுசரின் முக்கிய சரித்திரங்களுள் ஒன்றை இன்று நாம் காண உள்ளோம்.

ramanujaஸ்ரீஆளவந்தார் எனும் மஹாராஜா இளவரசன் என்று வருணிக்கும் படியான இராமானுசருக்குத் தான் கொடுக்க வேண்டிய அர்த்தங்கள் அனைத்தையும், மந்திரி மார்கள் எண்ணும்படியான தனது ஐந்து சிஷ்யர்கள் மூலம் சேர்ப்பித்துச் சென்றார். அதன்படி பெரிய நம்பிகளிடம் முன்னரே த்வயத்துக்கு அர்த்தம் பெற்றார் இராமானுசர்.

அரங்கத்தில் இராமானுசர் கோயில் சீரமைப்பு பணிகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றி வந்தார். அப்போது பெரிய நம்பிகள் இராமானுசரிடம் “நீர் அடுத்து நம் ஆசார்யர் ஆளவந்தார் நியமனப்படி, திருக்கோட்டியூர் நம்பிகளிடம் சென்று திருமந்திரத்திற்கும்,சரம ஸ்லோகத்திற்கும் அர்த்தங்களைப் பெற்று வாரும்” என்று இராமானுசரைப் பணித்தார்.

இராமானுசரும் ஆர்வம் பொங்க, சுமார் 60 மைல்கள் தொலைவில் உள்ள திவ்விய தேசமான திருக்கோட்டியூருக்கு நடைப்பயணம் ஆனார்.
அவ்வாறு செல்கையில் தனது தண்டும், பவித்ரம் என்னும் படியான கூரத்தாழ்வானையும்,முதலியாண்டானையும் அழைத்துக் கொண்டே சென்றார். திருக்கோஷ்டியூர் சென்று சேர்ந்தார்.

“இங்கு திருக்கோட்டியூர் நம்பிகளின் திருமாளிகை எங்குள்ளது?” என்று அங்கு இருந்தவரைக் கேட்க,
“அதோ தெரிகிறதே அது தான் அவரின் திருமாளிகை” என்று கூறினர்.

அவ்வண்ணம் காட்டிய உடனே, இராமானுசர் ஆசார்யனை சேவிக்கப் போகும் பூரிப்பில், தாம் வீதியில் நின்றிருந்த இடத்தில் இருந்து தண்டம் சமர்ப்பித்துக்கொண்டே, அதாவது விழுந்து சேவித்து, தலைப் படும் இடத்தில் எழுந்து நின்று, மீண்டும் விழுந்து சேவித்து இப்படியே வீதியின் கோடியில் இருந்து அவரின் திருமாளிகை வரை தண்டன் சமர்பித்துக்கொண்டே சென்றார்.

இதைப் பார்த்து வியந்த அந்த ஊர்க்காரர்களுக்கு அப்போதுதான் திருக்கோட்டியூர் நம்பியின் பெருமை என்னவென்றே புரிந்தது.

அப்படிச் சென்ற இராமானுசர், திருக்கோட்டியூர் நம்பியைக் கண்டு சாஷ்டாங்கமாக விழுந்து சேவித்து, தம்மை அறிமுகம் செய்துகொண்டு, “தமக்குத் திருமந்திரத்திற்கான அர்த்தமும், சரம ஸ்லோகத்திற்கான அர்த்தத்தையும் கொடுக்க வேண்டும்.” என்று வேண்டி நின்றார்.

அதற்கு திருக்கோட்டியூர் நம்பிகள், “உமக்கு அதற்குரிய தகுதி இன்னும் வந்ததாகத் தெரியவில்லை. நீர் போய் வாரும்.” என்று கூறி அனுப்பி விட்டார்.
வருத்தத்துடன் இராமானுசர் திரும்பி ஸ்ரீரங்கம் திரும்பினார்.

இப்படியே இராமானுசர் அடுத்து ஒவ்வொரு முறையும் செல்லும்போதும் திருக்கோட்டியூர் நம்பிகள் தர மறுத்து விட்டார்.,
இப்படியே பதினேழு தடவை இராமானுசர் நடையாய் நடந்து சென்று கேட்ட போதும், அவர் “உமக்கு இன்னென்ன தகுதிகள் இன்னும் வரவில்லை, நீர் போய் பிறகு வாரும் பார்க்கலாம்.” என்று கூறி அனுப்பி விட்டார்.
இராமானுசர் தாமும் மிக்க வருத்தமுற்றார். ஆனால் தன் ஆவலையும் ஆர்த்தியையும் விடவில்லை.

இத்தகைய ஆர்த்தியும் ஆத்மகுண பூர்த்தியும், பாகவத க்ருபையும் பெற்றவர் என்பதனை, திருக்கோட்டியூர் நம்பிகள் தெரிந்துகொண்டார்.

திருமந்திரம் பெறுதல்:
பதினெட்டாவது தடவையாக திருக்கோட்டியூர் நம்பிகளிடம் சென்று, “அடியேனுக்கு அர்த்தம் ஸாதிக்க (தந்தருளல்) வேண்டும்” என்று வேண்டித் தண்டனிட்டு நின்றார் இராமானுசர் .

“சரி உமது தண்டும், பவித்ரம் மட்டும் கொண்டு உள்ளே வாரும்” என்று சொல்லி உள்ளே சென்றார் திருக்கோட்டியூர் நம்பிகள்.

இராமானுசர் தானும் தன்னுடன் வந்த கூரத்தாழ்வானையும், முதலியாண்டானையும் ஒரு சேர அழைத்துக்கொண்டு உள்ளே சென்றார்.
“உம்மை ஒருவரை மட்டும் அன்றோ வரச்சொன்னோம்?” என்று வினவினார் நம்பிகள்.
“தேவரீர் எம்மைத் தண்டும், பவித்ரமுமாக வரச்சொன்னீர், எனது தண்டும், பவித்ரமும் இவர்கள் தான்” என்று கூறினார்இராமானுசர்.

“சரி ஆகட்டும், அப்படியானால் இந்த அர்த்தங்களை இவர்களைத் தவிர வேறு யாருக்கும் சொல்லல் ஆகாது.” என்று நியமனம் செய்தார் திருக்கோட்டியூர் நம்பிகள்.

பின் நலம் தரும் சொல்லான திருவெட்டெழுத்தினையும், அதன் சாரமான அர்த்தங்களையும் இராமானுசருக்கு உபதேசித்து அருளினார் திருக்கோட்டியூர் நம்பிகள்.

அவர் மேலும் பேசினார், “இராமானுசரே, நீர் எப்பேர்ப்பட்ட ஞான, பக்தி, வைராக்ய, அனுஸ்டான சீலர் என்பது எமக்குத் தெரியும். ஆயினும் உம்மை ஒவ்வொரு முறையும் திருப்பி அனுப்பி, இருக்க வேண்டிய பதினெட்டு தகுதிகள் (அறியவேண்டிய பதினெட்டு தகுதிகள் அல்லது விஷயங்கள் அல்லது இரகசியங்கள் என்று சம்பிரபதாயத்தில் இருப்பவை) உள்ளனவா என்று சோதித்த பின்னரே உமக்கு பதினெட்டாவது தடவையாக இந்த அர்த்தங்களைக்கொடுத்தோம்.
நீர் இதை யாருக்கும் சொல்லக் கூடாது. அப்படியே சொல்வதாயினும், நீர் பல முறைகள் சோதித்த பின்னரே கொடுக்க வேண்டும். இதற்கிடையில் பெரிய பெருமாளும் எமக்கு சொப்பனமதில் கொடுக்குமாறு கூறி இருந்தான். எனினும்உம்மையே நாம் எப்படிச் சோதித்து கொடுத்தோம் பாரும்.” என்றார் நம்பிகள்.

கிடைத்தற்கரிய திருமந்திரத்தினை பெற்று விட்ட உடையவர் உள்ளம் உவகை கொண்டது. உற்சாகம் மேலிட்டது. இப்பேர்பட்ட பொருள் நிறைந்ததும், ஆத்ம க்ஷேமத்திற்கு வழிகோலுவதும், உஜ்ஜீவனத்திற்கு ஆதாரமாய் இருப்பதுமான இந்தத் திருமந்திரத்தினை யாரேனும் பிறர் செவிகளில் விழாமல் தடுப்பார்களோ?? மறைபொருளைத் திரையிட்டு மறைப்பார்களோ??

எவ்வளவு ஆர்த்தியோடும், முயற்சியோடும் இருந்தும், நமக்குப் பல பரீட்சை செய்து, பதினெட்டு தரம் நடந்த பின்னரே இவர் கொடுத்தார். இன்று இந்த கலியுலகில் இதன் மகத்துவம் அறிந்தவர் யார் ??
சம்சாரம் என்னும் பெரும் கடலில் விழுந்துதத்தளிக்கும் இவர்கள் கரையேறும் காலம் எப்போது??
எம்பெருமானுக்கே உரிய இவர்கள் பிறர்க்காகி அனர்த்தப்படுவானேன்??
வாழ வேண்டிய இவர்கள் தாழ்ந்து போவானேன்?? என்றெல்லாம் உள்ளம் பாரித்தார் இராமானுசர்.

பாரினும் பரந்த நெஞ்சம்:
கருணைப் பெருக்கெடுத்து, பிறவித்துயரில் தவிக்கும் ஆத்மாக்கள் எல்லாம் உய்யும் வண்ணம், இதனை விரும்புவோர்க்கெல்லாம் இப்போதே உபதேசித்தால் என்? என்று எண்ணினார்.
உடனே தன் எண்ணத்திற்கு உயிரோட்டமும்அளித்தார் இராமானுசர்.

அதே ஊரிலேயே,
“ஆத்ம க்ஷேமத்தில் ‘ஆசை’ உடையோரெல்லாம் வாருங்கள்” என்று அனைவருக்கும் அழைப்பு விடுத்தார். அதைக்கேட்டு அநேக ஸ்ரீவைஷ்ணவர்கள் வந்து கூடினர்.
திருக்கோட்டியூரின் பெருமான் கோயில் கோபுரத்தின் (தெற்காழ்வான் திருவோலக்கத்தின்) மீது ஏறி, அவர்களுக்குத் தான் பெற்ற திருமந்திரத்தின் அர்த்தங்களை எல்லாம் கொடுத்தருளினார் உலகம் உய்ய அவதரித்த உடையவர்.

இந்தச் செய்தி பரபரப்புடன் ஊரெங்கும் பரவியது. கோஷ்டிபுரத்து நம்பிக்கும் தெரிந்து, உடனே அவர் இராமானுசரை அழைத்து வர ஆள் அனுப்பி வரவைத்தார்.
இராமானுசர் சென்று தண்டனிட்டர். அடியார்களின் பெரும் கூட்டமும் உடன் சென்றது.

எம்பெருமானார் தரிசனம்:
“இந்தப் பரம ரகஸ்யத்தினை வேறு ஒருவர்க்கும் சொல்லாதே என்றல்லவா நாம் உமக்குச் சொன்னோம்; அதை மதியாது நீர் அநேக ஸ்ரீவைஷ்ணவருக்குச் சொன்னீர் என்று கேட்டோமே.” என்று நம்பிகள் கேட்க,
இராமானுசரும் “உண்மை, தேவரீர் திருவடிகளை முன்னிட்டுக் கொண்டு சொன்னேன்.” என்றார்.

“ஒருவருக்கும் சொல்ல வேண்டா” என்று நியமித்தன்றோ சொன்னோம்; அத்தை மறுத்துச் சொன்ன உமக்கு ஏற்படும்விளைவு ஏது தெரியுமா?” என்று நம்பி கேட்க,

“ஆசார்ய நியமனத்தை மீறிய எனக்கு நரகமே கிட்டும்” என்றார் இராமானுசர்.
“இதனை அறிந்திருந்தும் சொல்வானேன்?” கேட்டார் நம்பிகள்.

“தேவரீரின் திருவடி முன்னிட்டுக் கொண்டு அடியேன் சொன்ன அந்த ரகஸ்யத்தினாலே,
அனைவரும் உஜ்ஜீவனம் பெறுவார்களே ஆயின், அதற்காக அடியேன் ஒருவன் நரகம் புகவும் தயார்.” என்று கூறினார் இராமானுசர்.

இந்த பதிலைக் கேட்ட நம்பி, அயர்ந்து நின்றார்.
இத்தகைய பரந்த உள்ளம் எனக்கு கூடிற்றில்லையே என்று எண்ணி, அவரின் விசாலமான இதயத்தையும், மற்றவர் வாழ்வினில் அவர் கொண்ட கருணையையும் கண்டு வியந்து, அவரை வாரியணைத்து,
“வாரீர் எம்பெருமானாரே- எம்பெருமானே நீர்” இதுவரை நம் தரிசனம் பரம வைதீக ஸித்தாந்தம் என்று இருந்தது; இன்று முதல் அதை “எம்பெருமானார் தரிசனம்” என்னுங்கொள்.
“இதுவே அரங்கன் திருவுள்ளம்” என்று அருளிச்செய்தார் திருக்கோட்டியூர் நம்பிகள்.

இராமானுசரின் இப்பேர்பட்ட தயைக்கும், திருவுள்ளத்திற்கும் இணையாக, ஆயிரமாயிரம் தாய் தந்தையரின் தயைகுணங்களை வைத்தாலும், அவைகள் ஒருபோதும் ஈடாக மாட்டாது என்று மனதில் கொள்ளுங்கள்.
(எம்பெருமானார் தரிசனம் மேலும் வளரும்..)

இனி அமுதனார் இராமானுசரை போற்றிய “ப்ரபன்ன காயத்ரி” என்கிற பெருமைக்குரிய இராமானுச நூற்றந்தாதியின் அடுத்த இன்தமிழ் பாசுரத்தையும்,அது தாங்கி வந்த பொருளை எளிய தமிழ் நடையிலும் காண்போம்.

பாசுரம்: 22
கார்த்திகையானும் கரிமுகத்தானும் * கனலும் முக்கண்
மூர்த்தியும் மோடியும் வெப்பும் முதுகிட்டு * மூவுலகும்
பூத்தவனே! என்று போற்றிட வாணன் பிழை பொறுத்த
தீர்த்தனை ஏத்தும் * இராமானுசன் எந்தன் சேமவைப்பே.

பொருள்:
சென்ற துவாபர யுகத்திலே ஸ்ரீயப் பதியான ஸ்ரீமந்நாராயணன், கண்ணனாய் வந்து அவதரித்தான்.
அப்போது மஹாபாரத யுத்தம் நிறைவடைந்திருந்த தருணம். கண்ணனின் பேரனான அநிருத்தன், பாணாசூரன் எனும் பெரும் அசுரனின் மகளான உஷை என்பவள் மீது அன்பு கொண்டு, உஷையை அந்தரங்கமாகச் சந்திக்க சென்றிருந்த தருணத்தில், பாணாசூரன் அநிருத்தனை நாக பாஷாணம் மூலம் சிரைப்பிடித்தான்.

அங்கே துவாரகையில் ஸ்ரீகிருஷ்ணன் முதலானோர் அநிருத்தனைக் காணாது தேடி, ஒருவழியாக விஷயம் அறிந்தனர். பின்பு இறுதியில் இருதரப்பினருக்கும் இடையே யுத்தம் மூண்டது. ஒவ்வொரு புறமும் 12 அக்ரோணி சேனைகளுடன்போரும் தொடங்கியது.

பாணாசூரன் தீவிர சிவ பக்தன், அதனால் அவனுக்குப் போரில் உதவி புரியும் பொருட்டு, ருத்திரனாரும்,கார்த்திகையானும்,கணபதியும், அக்கினி தேவதையும், துர்க்கையும் மற்றும் ஜ்வர தேவதையும் சேர்ந்து ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவையே எதிர்க்கத் துணிந்தனர்.

அப்போது நடந்த பெரும் போரில், கண்ணன் அவர்கள் அனைவரையும் ஒடுக்கி, புறமுதுகிட்டு ஓடச் செய்தார்.
அவ்வண்ணம் ஓடிய அவர்கள் சற்று தூரம் சென்று திரும்பி கண்ணனை பார்த்து கேட்கின்றனர்,
“தேவரீர் தானே அடியோங்களைப் படைத்தீர்? இன்னென்ன காரியங்களையும் எமக்காகக் கொடுத்தீர்??
அப்படியிருக்க எங்களுடைய பக்தர்களை யாம் காக்க வேண்டும் அன்றோ??
இப்படி எங்களையே நீர் அடித்தால், எங்கள் பக்தர்கள் எங்களை மதிக்க மாட்டார்களே!!
ஆகையால் எங்களை விட்டு விட வேண்டும்.” என்று கண்ணனை வேண்டினர்.

பின் கண்ணன் பேசினார்,
“ஏ தேவதைகளே! மானிடர்களுக்கு எம்மிடத்தில் பக்தியை வளர்ப்பதற்காகவன்றோ உங்களை யான் படைத்தேன்?? நீங்களேஇப்படி தமோ, ரஜோ குணங்கள் (துர் குணங்கள்) மேலிட்டு எம்மையே எதிர்த்தால்,
பின் எப்படி அவர்களுக்கு நீங்கள்உபதேசம் செய்வீர்???
இதோ உங்களுக்கு யாம் இன்று சாபம் இடுகிறேன்..
‘என்னுடைய பக்தன் யாரேனும் உங்களிடம் வந்தான் எனில்,
இப்படி நடந்த இந்தச் சரித்திரத்தை அறிந்தான் எனில்,
அவன் செய்த பன்னியிரண்டு கால கிருஷ்ண (விஷ்ணு) பக்தி உங்களால் அழிந்து போகும்'” என்று சாபம் இட்டார்.

அந்த அளவிற்கு விஷ்ணு பக்தர்கள் ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும் என்று மனதில் கொள்க. ஏனெனில் இந்தச் சிருஷ்டியையும் இதில் உள்ளடங்கிய மேற்சொன்ன அந்த தேவதைகள் முதலிய அனைத்து ஜீவாத்மாக்களையும் படைத்து, காத்து அழிப்பவன் பரம்பொருளான ஸ்ரீமந் நாராயணன்.
அந்த பரம்பொருளை மட்டுமே பக்தி செய்து மிக உயரிய நிலையான உஜ்ஜீவனம் (மோக்ஷம், பிறவாநிலை, நற்கதி) பெற இயலும். அவனால் மட்டுமே அதைக் கொடுக்கவும் இயலும்.

இதை நம்மாழ்வார் தம்முடைய திருவாய் மொழியில்,

“ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதும் இல்லா
அன்று நான்முகன் தன்னோடு தேவர் உலகோடு உயிர் படைத்தான்
குன்றம் போல் மணி மாடம் நீடு திருக்குருகூர் அதனுள்
நின்ற ஆதிப்பிரான் நிற்க மற்றைத் தெய்வம் நாடுதிரே?” -என்று அருளிச் செய்தார்.

அதன் பொருள்: “தேவாதி தேவர்களும், அன்னவர்கள் வாழும் லோகங்களும், அதில் உள்ள உயிர் வாழ்விகளும் ஆக எதுவுமே பிரளய காலத்தில் இல்லாமல் இருந்தன.
சிருஷ்டிக்காக முதலில் நான் முகனைப் (ப்ரம்மனைப்) படைத்து, அவன் மூலம் சிவன், இந்திரன் முதலிய அனைத்துத் தேவாதி தேவர்களையும், அவர்கள் வசிக்கும் லோகங்களையும்,திரியக்குகளான மனித, பசு, பறவை முதலிய விலங்குகளையும், தாவரங்களையும், மற்றும் உள்ள யாவற்றையும்படைத்து வேத சாஸ்திரங்களில் ‘பரம்பொருள்’ என்று நின்ற ஆதிப்பிரானாகிய (தனக்கு முன்னவர்கள் அற்றவன்) எம்பெருமான் மலைபோன்ற திருமாளிகைகள் உயர்ந்து நிற்கும் ஆழ்வார் திருநகரியிலே காட்சி தந்து கொண்டிருக்கும்போது,
வேறு தெய்வங்களை தேடியோடுகின்றீர்களே. இது தகுமோ??” என்கிறார் ஆழ்வார்.

ஆக ஒருவன் இன்று இதர தேவதைகளிடம் இருந்தால் கூட, சிறிது சிறிதாய் தானே விலகி நாளடைவில் தன் புண்ணியகர்மங்களினால் ஓர் நாள் விஷ்ணுவின் பக்தன் ஆகிறான் (ஆக வேண்டும்).
அதுவே ஒவ்வொரு ஜீவாத்மாவின் முன்னேற்றப் பாதை.
அப்படியிருக்க ஒருவன் விஷ்ணுவின் பக்தனாய் இருந்து, இவ்வுலக(அற்ப) இன்பங்கள் தரும் இதர தேவதைகள் பக்கம்ஒருவன் போவானே ஆயின், அதுவே அவனின் கீழ் நிலையும், துர் பாக்கியமும், துர் குணத்தின் வெளிப்பாடும் ஆகும்.ஆகவே அற்ப பலன்களை எதிர்பார்த்து அந்த தேவதைகளிடம் சென்ற அவன் தண்டனைக்கு உரியவனே. ஆகவே அவனுக்கு அந்த தேவதைகளை மையமாகக் கொண்டே அவர்களுக்கு அன்று சாபமும் இட்டார் கண்ணன்.

இப்படி தன்னை காக்க வந்த தேவதைகளே தன்னை விட்டு ஓடிய பின், தானும் போரில் தோற்றுப்போய் கண்ணனின் திருவடி பணிந்தான் பாணாசூரன். பின் கண்ணனை ஸர்வலோக நாதன் என்று புரிந்து கொண்ட அவன்
“ஏ ப்ரபோ, சர்வலோகங்களையும் உம்முடைய திருநாபிக் கமலத்தில் படைத்த மஹா விஷ்ணு நீர் என்பதனை அறிந்து கொண்டேன். என்னை மன்னித்து, என் பிழை பொருத்தருள வேண்டும்.” என்று வேண்டித் தொழுதான்.

கண்ணனும் அவனை மன்னித்து விட்டார். (ஆதாரம்:ஸ்ரீமத் பாகவதம் ஸ்கந்தம்-10 அத்யாயம்-63)

“அப்பேர்பட்ட சர்வபாப நிவர்த்தனான எம்பெருமான் ஸ்ரீமந் நாராயணனே தனக்கு கதி” என்று கொண்ட எம்பெருமானாரே எனக்குக் கதி என்கிறார் அமுதனார்!!

English Translation:
Subramanya, Vinayaka, Siva, Parvali, Agni and all the other gods turned their backs and fied, then hailed, “O Lord of the three worlds, O Maker!” such was the mercy that Krishna showed on Sana, Ramanuja, who worships him, is our Provident Fund.

எம்பெருமான் கண்ணனின் திருவடிகளே சரணம்.
எம்பெருமானார் திருவடிகளே சரணம்.
அமுதனார் திருவடிகளே சரணம்.

(ஆதாரம்: பூர்வாசார்யர்களான ஸ்வாமி மணவாளமாமுனிகள் உரை, ஸ்வாமி பிள்ளைலோகம் ஜீயர் உரை, ஸ்வாமி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சார்யார் உரை மற்றும் ஸ்ரீதரன் ஸ்வாமி உரை.)

*எம்பெருமானாரின் ஆயிரமாவது ஆண்டு விசேஷங்கள் – மே 2017***