கோவை: கோவையில் இந்து முன்னணி பிரமுகர் நள்ளிரவில் படுகொலை செய்யப்பட்டார். இதனால் பதற்றம் ஏற்பட்டதையடுத்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கோவை இந்து முன்னணியின் செய்தி தொடர்பாளர் சசிகுமார், தனது பணிகளை முடிந்து நள்ளிரவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். கோவை சுப்பிரமணியம்பாளையம், சக்கரை விநாயகர் கோயில் அருகே அவர் வந்தபோது, அப்பகுதியில் பதுங்கியிருந்த மர்ம நபர்கள் சிலர் அவரை வழிமறித்து ஆயுதங்களால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்து உயிருக்கு பேராடிய சசிகுமாரை மீட்ட அப்பகுதியினர் அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சசிகுமார் பலியானார். இச்சம்பவத்தையடுத்து அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பதற்றத்தை தணிக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
பஸ்கள் இயக்கப்படவில்லை:
கோவை – மேட்டுப்பாளையம் புறநகர் மற்றும் நகரப் பேருந்துகள் இயக்கப்படவில்லை. கவுண்டம்பாளையம், சுப்ரமணியம்பாளையம், துடியலூர் உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் அசுடைக்கப்பட்டன. கோவை – மேட்டுப்பளையம் சென்ற தனியார் பஸ் கண்ணாடி உடைக்கப்பட்டது.
திருப்பூரில் பஸ் கண்ணாடி உடைப்பு:
திருப்பூரிலும் கல்வீசி பஸ் கண்ணாடி உடைக்கப்பட்டது. பெரும்பாலான பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பல்லடம் ரோடு, ஊத்துக்குளி ரோடு, கொங்கு மெயின்ரோடு, அவினாசி ரோடுகளில் தனியார் பஸ்கள் எதுவும் இயக்கப்படவில்லை.
இந்து முன்னணி சசிக்குமாா் படுகாெலையை கண்டித்து சத்தியமங்கலத்தில் அரசு பேருந்து கண்ணாடி உடைப்பு. காேவை திருப்பூா் மேட்டுப்பாளையம் ஆகிய ஊா்களுக்கு செல்ல வேண்டிய அரசு மற்றும் தனியாா் பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதி. அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு ள்ளது.



