ஹிட் கொடுத்த இயக்குனர் ஆனந்த் ஷங்கர் சீயான் விக்ரம் , கோலிவுட்டின் no.1 ஹீரோயின் நயன்தாராவுடன் கை கோர்த்திருப்பதால் எதிர்பார்ப்புக்கு பஞ்சமில்லாத படம் இருமுகன் . ஆனால் படம் அதை பூர்த்தி செய்ததா ? பார்க்கலாம் …
சுஜாதா கதையில் கமல் நடித்த விக்ரம் படத்தை கொஞ்சம் கெமிக்கல் கலந்து வில்லனாக வும் விக்ரமை நடிக்க வைத்திருப்பதே இருமுகன் . மனைவி கொலை செய்யப்பட்ட பிறகு வேலையை விட்டுவிட்டு தனி வாழ்க்கை வாழ்கிறார் ரா ஏஜென்ட் அகிலன் ( விக்ரம் ) . தன் மனைவியை ( நயன்தாரா ) கொன்ற லவ் ( விக்ரம் ) சம்பந்தப்பட்ட கேஸுக்கு ரா அவரது உதவியை நாட மீண்டும் களத்தில் குதிக்கிறார் விக்ரம் . அதில் அவர் ஜெயித்தாரா என்பதை லாஜிக் என்கிற வஸ்துவை சுத்தமாக மறந்து விட்டு கொஞ்சம் சுவாரஸ்யமாகவும் , கொஞ்சம் நீளமாகவும் சொல்வதே இருமுகன் …
விக்ரம் எந்த ஒரு கேரக்டருக்கும் தன்னை முழுமையாக அர்ப்பணிப்பவர் . அகிலன் , லவ் என்று இரண்டு வேடங்களிலும் உடல்மொழிகளில் வித்தியாசம் காட்டும் விக்கிரமின் நடிப்பு இதிலும் தொடர்கிறது . ஆனால் தனது மேனரிசம் மூலம் முதலில் கவரும் லவ்கேரெக்டர் போகப்போக படம் ஜவ்வாக இழுப்பதால் போரடிக்கிறது . நயன்தாரா வின் உடை குறைய குறைய சம்பளம் ஏறிக்கொண்டே போகிறது போல . இடைவேளையில் அவர் கொடுக்கும் ட்விஸ்ட் ரசிக்கவைக்கிறது . அதன் பிறகு நடக்கும் சம்பவங்கள் நம் பசிக்கு தீனி போடவில்லை . ரா ஆபீஸராக வரும் நித்யா மேனன் விபச்சாரியாக வேஷம் போடுவதும் அதற்கு தம்பி ராமையாவின் கவுண்டரும் ரணகளம் . ரித்விகா கபாலியின் கன்டினியூட்டி போல மலேசியா வில் நடக்கும் படத்தில் வந்து போகிறார் …
மலேசியாவில் உள்ள இந்திய தூதரகத்தை தனி மனிதனாக ஒரு கிழவன் வந்து அட்டாக் செய்வதும் , ஸ்பீட் என்கிற கெமிக்கல் வஸ்துவே அந்த கிழவரின் ஆக்ரோஷத்துக்கு காரணம் என்பதும் நம்மை நிமிர்ந்து உட்கார வைக்கின்றன . அகிலன் இந்த கேஸை கையில் எடுப்பதும் , அதை தொடர்ந்து மலேசியாவில் நடக்கும் சம்பவங்களும் ரசிக்கவே வைக்கின்றன . இறந்துவிட்டதாக நினைத்த நயன்தாரா இண்டெர்வெளில் ஆஜராவது ட்விஸ்ட்டாக இருந்தாலும் அதற்கு சொல்லப்படும் காரணங்கள் நம்பும்படியாக இல்லை . ஸ்பீட் கெமிக்கலை இன்ஹேள் செய்த ஐந்து நிமிடங்களுக்கு நடக்கும் ஆக்சன் காட்சிகள் அதிரடி . ஆனால் ஐந்து நிமிடங்களுக்கு பிறகு அதை எடுத்துக்கொண்டவர்கள் மயங்கி விட விக்ரம் மட்டும் கேசுவலாக இருப்பது குளறுபடி . அதே போல காவல்நிலையத்தையே காலி செய்து விட்டு எஸ்கேப் ஆகும் லவ் விக்ரம் மாடல் போல மெதுவாக அங்குமிங்கும் உலாத்திக் கொண்டிருப்பது காதில் பூக்கூடை …
ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பின்னணி இசை பட்டையை கிளப்புகிறது . இரண்டு பாடல்கள் ரசிக்க வைத்தாலும் மற்றவை ஸ்பீட் ப்ரேக்கர்ஸ் . ஆர்.டி ராஜசேகரின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் . கொஞ்சம் லாஜிக் சொதப்பல்கள் இருந்தாலும் முதல் படம் அரிமா நம்பி யின் வேகமான திரைக்கதையை இதில் மிஸ் செய்திருக்கிறார் இயக்குனர் . விக்ரமின் நடிப்பு , ஆர்டி யின் ஒளிப்பதிவு , ஹாரிஸ் ஸின் இசை , ஆக்சன் என டெக்கனிகளாக சவுண்டாக இருக்கும் இருமுகன் லாஜிக்கலாக வீக்காக இருக்கிறான் …
ஸ்கோர் கார்ட் : 41
ரேட்டிங் : 2.5 * / 5 *





