Home Blog Page 5860

நேதாஜி குறித்த ஆவணங்கள் பாஜக.,வின் ஆர்வம் காரணமாக வெளிவருகின்றன: அனுஜ் தார்

புது தில்லி:

பாஜகவின் ஆர்வம் காரணமாகவே நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் குறித்த ஆவணங்கள் வெளிவருகின்றன என்று மூத்த பத்திரிகையாளரும், ஆய்வாளருமான அனுஜ் தார் தெரிவித்துள்ளார். நேதாஜி குறித்த ஆவணங்களை, அவரது பிறந்த தினமான ஜனவரி 23ஆம் தேதி முதல் வெளியிட மத்திய அரசு முன்னர் அறிவித்திருந்தது.

நேதாஜி மாயமானது குறித்த “இந்தியாஸ் பிக்கஸ்ட் கவர்அப்’ என்ற ஆங்கிலப் புத்தகம் தொடர்பாக தில்லி புத்தகத் திருவிழாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கலந்துரையாடலில் அவர் பேசியபோது,

netaji

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் காணாமல் போனது குறித்த ஆவணங்களை வெளியிடுவது தொடர்பாக, அவரது குடும்பத்தினரை கடந்த அக்.14ல் பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். அதன் பின்னர் அவர் குறித்த ஆவணங்கள் வெளியாகின. ஆகவே பாஜகவின் ஆர்வம் காரணமாகவே நேதாஜி பற்றிய ஆவணங்கள் வெளிவருகின்றன என்றே நான் நினைக்கிறேன். நேதாஜி மாயமானது குறித்த ஆய்வை நான் கடந்த 2001ஆம் ஆண்டு தொடங்கியபோது, அவர் மாயமான விவகாரம் தொடர்பாக யாரும் ஆர்வம் காட்டவில்லை.

இதன் காரணமாகவே, நேதாஜி மரணம் தொடர்பான அரசு ரகசியங்களைப் பற்றி பேசுவது என்று நாங்கள் முடிவு செய்தோம். கடந்த 2001ஆம் ஆண்டு நேதாஜி பற்றிய ஆவணங்களைக் கோரி மனு கொடுத்தோம். ஆனால், ஆவணங்களை வெளியிடுமாறு அழுத்தம் கொடுப்பதற்கு அந்த மனுக்களால் உதவ முடியவில்லை. அதிர்ஷ்டவசமாக, 2005ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மேலும் மனுக்களைக் கொடுத்து அழுத்தம் கொடுத்தோம்.

அதன் காரணமாக, மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில், நேதாஜியின் மரணம் தொடர்பாக நியமிக்கப்பட்ட ஷா நவாஸ் குழு, கோஸ்லா குழு ஆகியவற்றின் அறிக்கைகளைப் பார்வையிடுவதற்கு எங்களுக்கு அனுமதி கிடைத்தது. சுமார் 15,000 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கைகளின் மூலம், கடந்த 1948 முதல் 20 ஆண்டுகளுக்கு நேதாஜியின் குடும்பத்தினரை மத்திய அரசு உளவு பார்த்தது தெரியவந்தது. இதுகுறித்து, 1955ஆம் ஆண்டில் நேதாஜியின் மனைவி அவரது உறவினருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், தான் கணவரை இழந்த பெண் அல்ல என்று அவர் குறிப்பிட்டுள்ளார். விமான விபத்தில் இருந்து தப்பி இந்தியாவுக்கு வந்த நேதாஜி, உத்தரப் பிரதேச மாநிலம், ஃபைசாபாதில் கடந்த 1985 வரை பகவான்ஜி என்ற பெயரில் துறவியாக வாழ்ந்தார் என்று கூறுகின்றனர். வங்காளத்திலும், ஆங்கிலத்திலும் எழுதப்பட்டுள்ள அவரது கையெழுத்துப் பிரதிகள், நேதாஜியின் கையெழுத்துக்களுடன் ஒத்துப் போகின்றன என்றார் அனுஜ் தார்.

திமுகவினர் இருதரப்பினருக்கிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலால் பரபரப்பு

 
திமுகவினர் இருதரப்பினருக்கிடையே உருவான கோஷ்டி மோதலால் தள்ளுமுள்ளு ஏற்பட்டதன் காரணமாக திருச்சி மாவட்டத்தில் பரபரப்பு நிலவிவியது.
திமுக சார்பில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பாராளுமன்ற உறுப்பினர் சிவாவின் பெயர் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாக கூறி சிவாவின் மகன் சூர்யாவின் ஆதரவாளர்கள், முன்னாள் தமிழக அமைச்சர் நேருவின் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியிருந்தனர்.
இந்த நிலையில் நேருவின் ஆதரவாளர்கள், கன்டோன்மெண்ட் பகுதியில் உள்ள சிவாவின் வீட்டை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் அங்கிருந்த சிவாவின் பேனர்களை நேருவின் ஆதரவாளர்கள் கிழித்து எறிந்தனர். இதன்காரணமாக, இருதரப்பினருக்கிடையே மோதல் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதன் காரணமாக அங்கு பரபரப்பு நிலவியது.

பதக்கம் வென்ற வீரர்களுக்கு ரூ.4 லட்சம் ஊக்கத்தொகை வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு

தேசிய அளவிலான17 வயதுக்கு உட்பட்டோருக்கான துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற சென்னை முகப்பேரைச் சேர்ந்த பள்ளி மாணவர் ரித்திக்கிற்கு ஊக்கத்தொகையாக ரூபாய் 4 லட்சம் வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்

முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது :-.

தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கம் வென்ற மாணவர் ரித்திக்கிற்கு இந்தத் ஊக்கத்தொகை ரூபாய் 4 லட்சம் வழங்கப்படுவதாகவும் அவர் எதிர்காலத்தில் இன்னும் பல சாதனைகள்‌ படைத்து தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இதேபோல், உயர்மட்ட விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு ஊக்க உதவித் தொகைத் திட்டத்தில் ஏற்கனவே உள்ள 5 வீரர்களோடு, வாள்வீச்சுப் போட்டியில் தற்போது சிறந்து விளங்கும் சென்னை வீராங்கனை பவானிதேவியையும் சேர்த்திட உத்தரவிட்டுள்ளதாக ஜெயலலிதா வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில் கூறியுள்ளார். மேலும் பவானிதேவி சர்வதேச போட்டிகளில் மேலும் பல வெற்றிகள் முதலமைச்சர் ஜெயலலிதா பெற வாழ்த்தியுள்ளார்.

கீழப்பாவூரில் சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு கே.ஆர்.பி.பிரபாகரன் எம்.பி துவக்கி வைத்தார்

தமிழக அரசு அறிவித்துள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கான சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்தினை கே.ஆர்.பி.பிரபாகரன் எம்.பி கீழப்பாவூரில் உள்ள ரேசன் கடையில்  துவக்கி வைத்தார் ,உடன் தலைமைக்கழகப் பேச்சாளர் தீப்பொறி அப்பாதுரை ,பேரூர் கழக செயலர் பாஸ்கர் ,மேலவைப் பிரதிநிதிகள் ஜெயராமன் ,கணபதி, வார்டு செயலாளர் கப்பல்  உட்பட பலர் கலந்து கொண்டனர்

ரூ.5 லட்சம் லஞ்சம் கேட்டு மிரட்டிய தமிழக காவல்துறை ஆய்வாளர் பணியிட மாற்றம் !

 
5 லட்சம் லஞ்சம் கேட்டு வழக்கறிஞர் ஒருவரை மிரட்டிய திருவண்ணாமலை தாலுக்கா காவல் ஆய்வாளர் பழனி வேலூர் மாவட்டத்திற்க்கு பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்க வேலூர் சரக டிஜஜி தமிழ்ச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக காவல் துறையில் திருவண்ணமலை மாவட்டத்தில் ஆய்வாளராக பணியாற்றும் பழனி ஒரு குற்ற வழக்கில் இருந்து குற்றவாளியை சட்டத்தின் பிடியில் இருந்து விடுவிக்க ரூ.5 லட்சம் வழக்கறிஞர் ஒருவரிடம் பணம் கேட்டு மிரட்டும் கைப்பேசி உரையாடல் ஒலிப்பதிவு ஒன்று வாட்ஸ் ஆப்பில் வெளியாகி சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது.
மேலும் காவல் ஆய்வாளர் கைப்பேசி உரையாடல் ஒலிப்பதிவை சி.டி-யில் பதிவிட்டு அந்த ஆடியோவை அவரால் பாதிக்கப்பட்டவர்கள் உளுந்தூர்பேட்டை பகுதியில் பொதுமக்களிடம் இலவசமாக வினியோகம் செய்த செய்தியும் வாட்ஸ் ஆப்பில் தகவல் வைரலாக பரவிவருகிறது..
அந்த ஒலிப்பதிவில் காவல் ஆய்வாளர் அநாகரீகமான கீழ்த்தரமான வார்த்தைகளையும் பயன்படுத்தியுள்ளார்.
வாட்ஸ்ஆப்பில் வெளியான ஆய்வாளர் ஒலிப்பதிவுடன் கூறப்படும் இருவிதமான தகவல்களாவது :-
1) பணம் கொடுத்தால் கொலை செய்யகூட ரூட் போட்டு கொடுப்பாரு போல ஆய்வாளர் பழனி. 5 லட்சம் பணம் கேட்டு மிரட்டும் திருவண்ணாமலை தாலுக்கா காவல் ஆய்வாளர் பழனி.
டுபாக்கூர் வக்கீல்…லஞ்சப் பணத்தை அருமையாக பிரித்து கொடுக்கும் அழகு…கீழ்த்தரமான வார்த்தைகள் நாக்கில் நடனம்…எஸ்.பி க்கு நெருக்கம்…..கேடி புத்தி…..கிரிமினல் சகவாசம்….⁠⁠⁠⁠
2) மேற்கண்ட இன்ஸ்பெக்டர் உளுந்தூர்பேட்டை யில் பல்வேறு புகாரின் அடிப்படையில் தான் திருவண்ணாமலை இடமாற்றம் செய்யப்பட்டார் .
தமிழக காவல் துறையில் உயர்ந்த பதவி அதிகார இருக்கையில் நேர்மையாகவும் நியாயமாகவும் பணியாற்றும் சில அதிகாரிகள் இருக்கின்றனர். ஆனால், பலர் காட்டுதர்பார் செய்து கொண்டு பண பேரம் செய்து வருகின்றனர் என்பது இது போன்று வெளியாகும் ஆடியோக்களால் வெளியில் தெரிகிறது.
தன்னிச்சையாக பதவி அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து பண வேட்டை நடத்த சட்டத்திற்கு புறம்பான செயல்களில் சிலர் தொடர்ந்து ஈடுபட்டு வருவது வேதனை தரக்கூடியது.
மக்களின் வரி பணத்தை சம்பளமாக பெற்று கொண்டு அரசாங்க பணியில் பணியாற்றுபவர்கள் பொது மக்களின் நலனில் அக்கறையுடன் பணியாற்ற வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு என www.dhinasari.com இணைய தமிழ்ச் செய்தித் தளத்திலும் நேற்று செய்தி வெளியிப்பட்டது.
இந்த நிலையில் 5 லட்சம் லஞ்சம் கேட்டு வழக்கறிஞரை மிரட்டிய திருவண்ணாமலை தாலுக்கா காவல் ஆய்வாளர் பழனி வேலூர் மாவட்டத்திற்க்கு பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்க வேலூர் சரக டிஜஜி தமிழ்ச்சந்திரன் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காவல் ஆய்வாளர் மிரட்டிய கைப்பேசி உரையாடல் ஒலிப்பதிவு புகைப்படம் இணைக்கப்பட்ட காணொளியாக வழக்கில் இருந்து விடுவிக்க ரூ.5 லட்சம் லஞ்சம் கேட்கும் ஆய்வாளரின் உரையாடல்! எனும் தலைப்பில் www.dhinasari.com
இணைய தமிழ்ச் செய்தித் தளத்தில் நேற்று வெளியிப்பட்டுள்ளது.
 
அரசாங்கப் பணியில் பணியாற்றுபவர்கள் பதவி அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து குற்ற செயல்களில் ஈடுபடும்போது அந்த கருப்பு ஆடுகள்மீது துறைரீதியான நடவடிக்கை எனும் பெயரில் பேருக்காக உடனடி நடவடிக்கை எனும் பெயரில் தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்வதை அரசாங்கம் முதலில் ரத்து செய்யவேண்டும்.
 
மாறாக அந்த கருப்பு ஆடுகள்மீது சட்டரீதியாக வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும். மேலும் குற்ற செயலில் ஈடுபட்டவரின் வழக்கு நீதிமன்றத்தில் முடிந்து தீர்ப்பு வரும் வரை அவரை அரசாங்கப் பணியில் அமர்த்தக் கூடாது.
 
நீதிமன்றத்தில் அவர்மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டால் அந்த கருப்பு ஆட்டை மீண்டும் அரசாங்கப் பணியில் பணியாற்ற முடியாதபடி அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர்.
 
சட்டத்தின் முன் அனைவரும் சமமே.
அரசாங்கத்தில் பணியாற்றும் கருப்பு ஆடுகள் ஒன்றும் விதிவிலக்கு அல்ல !

நாடு முழுவதும் ரூ.45 ஆயிரம் கோடி சுருட்டிய பியர்ல்ஸ் நிறுவன தலைவர் உள்பட 4 பேருக்கு சி.பி.ஐ. காவல்

 
மிகக் குறைந்த விலையில் நிலம் ஒதுக்கீடு செய்து தருவதாக கூறி நாடு முழுவதும் 5 கோடி முதலீட்டாளர்களிடம் 45 ஆயிரம் கோடி ரூபாயை சுருட்டியதாக பியர்ல்ஸ் குழு நிறுவன தலைவர் நிர்மல் சிங் பாங்னு, அதன் துணை நிறுவனங்களின் அதிகாரிகள் சுக்தேவ் சிங், குர்மித் சிங், சுப்ரதா பட்டாச்சாரியா ஆகியோரை சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று முன்தினம் நேரில் அழைத்து விசாரித்தனர். பின்னர் அவர்களை கைது செய்தனர். இந்த நால்வரும் நேற்று டெல்லி மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது சி.பி.ஐ. தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 4 பேரும் பெருமளவில் முதலீட்டாளர்களின் பணத்தை மோசடி செய்து உள்ளனர். எனவே இவர்களை சி.பி.ஐ. காவலில் எடுத்து விசாரித்தால்தான் முழு உண்மையும் தெரியவரும்“ என்று வாதிட்டார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஹர்வீந்தர் சிங், பியர்ல்ஸ் குழு நிறுவன அதிகாரிகள் 4 பேரையும் 10 நாள் சி.பி.ஐ. காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

அதிமுக உள்கட்சி பூசல் காரணமாக தமிழக அமைச்சர் அலுவலகத்தில் குண்டு வீச்சா ?

 
தமிழகத்தில் கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ அலுவலகத்தில் நாட்டு வெடி குண்டுகள் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் உயிர்ச்சேதம் ஏதுமில்லை என்றாலும், பல கோண தகவலின் படி காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர் .
செல்லூர் ராஜூவின் மதுரை மேற்கு தொகுதி சட்டமன்ற அலுவலகம் காளவாசல் மதுரை சம்மட்டிபுரம் நுழைவு பகுதியில் உள்ளது ,கட்சி அலுவலகம் பனகல் தெருவில் உள்ளது இரண்டு இடங்களிலும் நேற்று நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இந்நேரத்தில் அலுவலகத்தில் யாரும் இல்லாததால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.போலீசார் இது தொடர்பாக அதிமுக வை சேர்ந்த சிலரிடம் போலீசார் ரகசிய விசாரணை நடத்தினர் .
மதுரை மாநகர ஆணையாளர் சைலேஷ் குமார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினார். இது தொடர்பாக தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார் . மேலும் முழு விவரம் குறித்து தற்போது ஏதும் கூற முடியாது, விசாரணை போய் கொண்டிருக்கிறது என்று மட்டும் செய்தியாளர்களிடம் கூறினார்.
மதுரையில் அதிமுக கட்சியினரிடையே வெகு ஆண்டுகளாக உள்கட்சி பூசல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது .
அதன் காரணமாக செல்லூர் ராஜூவின் செயல்பாட்டின் மீது வெறுப்படைந்துள்ளவர்கள் இந்த குண்டு வீச்சு சம்பவத்தை நடந்திருக்கலாம் என்று பரவலாக கூறப்படுகிறது .

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு கெட்டுவிட்டது ! : ராமதாஸ் குற்ற சாட்டு

 
தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் டி. ராஜுவின் சட்டமன்ற உறுப்பினர் அமைச்சர் அலுவலகத்தில் 
நேற்று நள்ளிரவில் குண்டுவீச்சு நடைபெற்றுள்ள நிலையில் தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு கெட்டுவிட்டடதாக பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளளார்
நடைபெற்ற குண்டுவீச்சு குறித்து மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது :-
தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சரும் மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான , செல்லூர் டி. ராஜுவின் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் மதுரை காலவாசல் சந்திப்பு அருகில் சம்மட்டிபுரத்தில் உள்ளது.
நேற்று நள்ளிரவில் இந்த அலுவலகத்திற்கு இரு சக்கர ஊர்தியில் வந்த இருவர், பெட்ரோல் குண்டு மற்றும் நாட்டு வெடிகுண்டுகளை வீசி விட்டு தப்பி ஓடிவிட்டனர். இக்குண்டுகள் வெடித்ததில் உயிர்சேதமோ, காயமோ ஏற்படவில்லை என்ற போதிலும், அலுவலகத்திற்கு சேதம் ஏற்பட்டிருக்கிறது.
அதே நேரத்தில் மதுரை கோரிப்பாளையத்தில் ராஜாஜி அரசு பொது மருத்துவமனை அருகில் உள்ள மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. அலுவலகம் மீதும் பெட்ரோல் குண்டுகளும், நாட்டு வெடிகுண்டும் வீசப்பட்டிருக்கின்றன. இவற்றில் பெட்ரோல் குண்டுகள் வெடிக்காத நிலையில், நாட்டு வெடிகுண்டு வெடித்து லேசான சேதம் ஏற்பட்டிருக்கிறது.
இந்த இரு அலுவலகங்களும் அமைச்சர் செல்லூர் ராஜு கட்டுப்பாட்டில் இருப்பவை. அவரை அச்சுறுத்த வேண்டும் என்பதற்காகவே இந்த குண்டுவீச்சு நடத்தப்பட்டிருக்கிறது என்றும், இதற்கு காரணம் யார் என்பது தெரியவில்லை என்றும் காவல்துறை கூறியுள்ளது.
மதுரையில் அமைச்சரின் அலுவலகத்தில் வெடிகுண்டுகள் வீசப்பட்டதற்கான காரணம் என்னவாக இருந்தாலும், சட்டம் ஒழுங்கு முறையாக பராமரிக்கப்படவில்லை என்பதையே இந்நிகழ்வு காட்டுகிறது.
மூத்த அமைச்சரின் அலுவலகத்துக்கே பாதுகாப்பு இல்லாத நிலையில், அப்பாவி மக்களை காவல் துறை எவ்வாறு பாதுகாக்கப் போகிறது என்பதை நினைக்கும் போது அச்சமும், கலக்கமும் தான் ஏற்படுகிறது என்று மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

சுஷ்மா ஸ்வராஜ் இலங்கைக்கு பயணம் மேற்கொள்கிறார்

புது தில்லி:
இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் விரைவில் இலங்கைக்கு பயணம் மேற்கொள்கிறார்.

சுஷ்மா விரைவில் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டு தமிழர்களின் மீள் குடியேற்றப் பிரச்னை, முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழர்களின் பிரச்னை உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து பேச்சுவார்த்தை மேற்கொள்ளவுள்ளார். இந்நிலையில் அவரது வருகை குறித்த பயண முன் ஏற்பாடுகள் விஷயமாக பேச்சுவார்த்தை நடத்த வெளியுறவுத்துறை செயலாளர் ஜெய்சங்கர் இலங்கைக்கு பயணம் மேற்கொள்கிறார்.

தமிழக அரசு மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர்கள் கைது

 
சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த சக்திவேல், பிரதாப்ராஜ் ஆகிய 2 பேர் கத்திக்குத்து காயங்களுடன் சென்னை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தனர். அவர்களை அவசர சிகிச்சை பிரிவான 201–வது வார்டில் மருத்துவர்கள் அனுமதித்து சிகிச்சை அளித்தனர்.
ஆனால் சிகிச்சை அளிக்க தாமதம் ஏற்பட்டதாக கூறி அவர்களுடன் வந்தவர்கள் 4 பேர் தகாத வார்த்தையில் கடுமையாக பேசி மருத்துவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டடு கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதனால் ஏராளமான முதுநிலை மருத்துவம் படிக்கும் மருத்துவர்கள், பாதுகாப்பு கோரி மருத்துவமனை வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவர்கள் அனைவரும் போராட்டத்தில் குதித்ததால் சிகிச்சை பெற வந்த நோயாளிகள் அனைவரும் கடுமையாக அவதிப்பட்டனர்.
தகவல் அறிந்து அங்கு வந்த சென்னை அரசு மருத்துவமனையின் தலைவர் மருத்துவர் விமலா போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.
தகராறில் ஈடுபட்டு கொலை மிரட்டல் விடுத்தவர்களை காவல் துறையினர் கைது செய்வார்கள் என்று உறுதி மருத்துவர் விமலா அளித்ததின் பேரில் உள்ளிருப்பு போராட்டத்தை மருத்துவர்கள் விலக்கி பணிக்கு சென்றனர்.
இதை தொடர்ந்து காவல் துறையினர் அதிரடி நடவடிக்கை எடுத்து கொலை மிரட்டல் விடுத்த வில்லிவாக்கத்தைச் சேர்ந்த சபரி, சரவணன் ஆகியோரை கைது செய்தனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர்களான இவர்கள் 2 பேர் மீதும் அநாகரீகமாக பேசுதல், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல், தமிழ்நாடு மருத்துவ பாதுகாப்பு சட்டம் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் தலைமறைவாக இருக்கும் சக்திவேல், பிரதீப் ஆகிய 2 பேரை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.