தெலுங்கானா முதலமைச்சர் மகா சண்டி யாக பந்தலில் தீ விபத்து : பிரணாப் முகர்ஜியின் பயணம் ரத்து
ஊடக துறையினர் முகத்தில் காறி துப்பி கீழ்த்தரமாக நடந்து கொண்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த்
சினிமா இணையதளத்திற்கு நிதியுதவி அளித்த சூர்யா
சென்னையில் இருந்து இயங்கும் HeroTalkies.com, வெளிநாட்டு வாழ் தமிழ் மக்களுக்காக, தமிழ் திரைபடங்களை இணைய உரிமை பெற்று நேர்மையான முறையில் இணையம் மூலம் வழங்கி வருகின்றனர். இந்நிறுவனம் நடிகர் சூர்யாவின் 2D Entertainment நிறுவனம், மற்றும் இதர முதலீட்டாளர்கள் சஞ்சய் அர்ஜுன்தாஸ் வாத்வா (முன்னணி திரைப்பட விநியோகஸ்தர்), வெளிநாட்டு வாழ் இந்தியர்களான பாலாஜி பஞ்சபகேசன் (UK), ஷங்கர் வெங்கடேசன் (Poland), மற்றும் வசிகரன் வெங்கடேசன் (USA) இருந்து தங்களின் முதல் சுற்று முதலீட்டை பெற்றுள்ளனர்.
2014ல் தொடங்கப்பட்ட 2D Entertainment நிறுவனம், 36 வயதினிலே, பசங்க 2 போன்ற தரமான படங்களை தயாரித்துள்ளது. மேலும் அடுத்து சூர்யா நடித்து கொண்டிருக்கும் பிரமாண்ட படமான “24” படத்தை தயாரித்துக் கொண்டிருக்கிறது. “ஒரு முன்னோக்குப் பார்வையோடு இயங்கும் நிறுவனமாக, நாங்கள் வெவ்வேறு முயற்சிகளுடன் இந்த பொழுதுபோக்கு துறையில் எங்களது வளர்ச்சியை மேம்படுத்த விளைகிறோம், அதன் வழியாகவே இந்த முயற்சியில் நாங்கள் முதலீடு செயுதுள்ளோம்”. என இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு ராஜசேகர் பாண்டியன் கூறியுள்ளார்.
“நானும் என் சகோதரன் ஆதியும் மிகுந்த ஆவலுடன் எங்கள் முதலீட்டாளர்களுடன் இணைந்து செயல்பட காத்துக் கொண்டிருக்கிறோம். சூர்யா போன்ற முன்னணி நடிகர் இதில் விருப்பம் காட்டியது, எங்களை சிறந்த முறையில் ஊக்குவிப்பதாக இருக்கிறது” என இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான பிரதீப் அவர்கள் தெரிவித்தார்.
இந்த முதலீட்டில் பெரும் பங்கினை திரைப்படங்கள் மற்றும் வாடிக்கையாளர் கையகப்படுத்தலில் பயன்படுத்த முடிவு எடுக்கப்பட்டு இருகின்றது. திரைபடங்கள் விநியோகம் செய்ய ஒரு தரமான மாற்று வழியினை கொண்டு வந்து Piracy ஒழிக்கும் இந்நிறுவனத்தின் நோக்கத்தில், இது பெரும்வாரியாக உதவும்.
நாகல்குளத்தில் டெங்கு விழிப்புணர்வு மருத்துவ முகாம்
பாவூர்சத்திரத்தை அடுத்த நாகல்குளத்தில் டெங்கு விழிப்புணர்வு மருத்துவ முகாம் நடைபெற்றது
முகாமினை பி.ஜி.ராஜேந்திரன் மற்றும் கீழப்பாவூர் யூனியன் சேர்மன் செல்வமோகன் தாஸ் பாண்டியன் இணைந்து துவக்கி வைத்தனர்
முகாமில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் ,உப்பு கரைசல் நீர் வழங்கப்பட்டது
வட்டார மருத்துவ அலுவலர் ராஜ் குமார் ,மருத்துவர்கள் மணிமாலா ,ஹம்சுல்குதா ஆகியோர் இணைந்து சிகிச்சை அளித்தனர் ,
நிகழ்ச்சியில் பாபு ராஜா ,ஒன்றிய கவுன்சிலர்கள் ஞானஅருள் பொன்னுத் தாய் ,ஊராட்சிகழக செயலாளர் திருமால் முருகன் , அம்மா பேரவை வேல்முருகன் , இருளப்பன் , அருள் ஒன்றிய கவுன்சிலர் ரமேஷ் , சேர்மன் பொன்னுப்பாண்டி, கைலாசம் ,கனிராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்
முகாம் ஏற்படுகளை வட்டார சுகாதார ஆய்வாளர் இசக்கியப்பா செய்திருந்தார்
தேமுதிக சார்பில் இரத்ததான முகாம்
தமிழகம் முழுவதும் தேமுதிக சார்பில் இரத்த தான முகாம் நடைபெற்று வருகிறது. ஏராளமான பொதுமக்கள், இளைஞர்கள் கலந்து கொண்டு இரத்த தானம் வழங்கி வருகின்றனர் சென்னை பகுதியில் இரத்ததான முகாமை தேமுதிக தலைவர் விஜயகாந்த் துவக்கி வைத்தார்
அரசு ஊழியர்களை இடமாற்றம் செய்ய தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கடிதம்
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 4 பேர் பலி, 100 பேர் படுகாயம் : பொதுமக்கள் பீதி
ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் பகுதியை மையமாக கொண்டு வெள்ளிக்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் அண்டை நாடான பாகிஸ்தான் மற்றும் இந்தியாவின் வடமாநிலங்களை உலுக்கியது. ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்கி இடிந்து விழுந்ததில் பாகிஸ்தானில்
89 பேரும், ஆப்கானிஸ்தானில் 12 பேரும் படுகாயமடைந்தனர்.
ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் பகுதியை மையமாக கொண்டு வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12.44 மணிக்கு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு கீழே 203 கி.மீ ஆழத்தில் நிகழ்ந்த இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள், வீடுகள் குலுங்கின. இதனால் வீடுகளில் உறங்கிக் கொண்டி ருந்தவர்கள் அலறியடித்தபடி வீதிக்கு ஓடி வந்தனர்.
இதனால் பீதி அடைந்த மக்கள் நள்ளிரவில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் வீடுகளை விட்டு வெளியேறி ரோடுகளில் தஞ்சம் புகுந்தனர். இந்த நிலநடுக்கத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் தெரியாமல் இருந்தது. இந்த நிலநடுக்கத்தில் 4 பேர் பலியாகி உள்ளதாக தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
நிலநடுக்கத்தால் படுகாயமடைந்தவர்கள் பெஷாவர், லாகூர் உள்ளிட்ட ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கில்ஜிட்– பலுகிஸ்தான் மாகாணத்தில் பாதிப்புகள் குறித்து கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது என முதல்–மந்திரி ஹபீஷ் ஹபீசுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
இந்த நிலநடுக்கம் கைபர் பக்துன்கவா மாகாணத்தில் பாதிப்பை ஏற்படுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. அங்கும் நூற்றுக்கணக்கான வீடுகள் இடிந்து 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாக தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

