Home Blog Page 5895

தென்காசி தனி மாவட்டமாக அறிவிக்கப்படுமா ? பொதுமக்கள் கோரிக்கை

தென்காசி தனி மாவட்ட இயக்க அமைப்பாளர் இராம. உதயசூரியன்,பொது மக்கள் சார்பில் தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் அமைத்திட அரசுச் செயலர்,முதல்வர் தனிப்பிரிவு,தலைமைச் செயலர்.உள்துறைச் செயலாளர், அரசுச் செயலர் வருவாய்த்துறை, அரசுச் செயலர், உள்ளாட்சித் துறை மற்றும்  திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு மனு அனுப்பியுள்ளார்
வரலாற்றுச் சிறப்பு மிக்கதும், வர்த்தக நகரமுமான தென்காசியானது, பாண்டிய மன்னர்களால், தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்யப் பெற்ற சீரும், சிறப்பும் வாய்ந்தது.  உலகப் புகழ் பெற்ற காசி விஸ்வநாதர்  ஆலயம் மற்றும் குற்றால அருவிகளைத் தன்னகத்தே பெற்று, பெயரும் நீங்காப் புகழும் பெற்றது.தென்காசியானது, தற்போது திருநெல்வேலி மாவட்டத்தில் அடங்கிய தாலுகா மற்றும் வருவாய் கோட்டமாக உள்ளது.  இந்நகரமானது மாவட்டத்தின் மற்றும் மாநிலத்தின் தென் மேற்கு எல்லையாக, கேரள மாநிலத்தை ஒட்டி அமைந்துள்ளது.  தென்காசி மற்றும் அதனைச் சார்ந்த பகுதிகள் மேற்கு எல்லையில் அமைந்துள்ள படியால், பொது மக்கள், வணிகர்கள், மாணவர்கள் மற்றும் அரசு, தனியார் துறை ஊழியர்கள் சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் செலவு செய்து, மிகுந்த சிரமங்களுக்கிடையே, மாவட்ட தலை நகரை அடைய வேண்டிய நிலை உள்ளது.  வடகிழக்கில் வசிக்கும் மக்கள் 5 மணி நேரத்தை செலவு செய்து தான் மாவட்ட அலுவலகம், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா; அலுவலகம், மாவட்ட கருவூலம் மற்றும் மாவட்ட அரசு வருவாய் துறை அலுவலகங்களை மிக்க சிரமத்துடன் அணுக வேண்டிய நிலை நீடித்து வருகிறது.மேலும், – இப்பகுதியைச் சார்ந்த நோயாளிகள் பாளைங்கோட்டையில் அமைந்துள்ள மாவட்ட அரசு தலைமை மருந்துவமனையை அணுகி, சிகிச்சை பெறுவதிலும் மிகுந்த சிரமம் உள்ளது.  பயண நேரம் மற்றும் போக்குவரத்து நெருக்கடியால் பலர்  உயிர்  இழக்க நேரிடுகிறது.எல்லாவற்றிற்கும் மேலாக மாவட்டத்தின் பரப்பளவு அதிகமாக இருப்பதால் இம்மாவட்டத்தை நிர்வகிப்பது அரசு அதிகாரிகளுக்கு மிகவும் சிரமமாக உள்ளது.  மாவட்டத்தின் பிற பகுதிகளுக்கு அலுவல் நிமித்தம் உயார் அதிகாரிகள் சென்று வர ஒரு நாளை செலவிட வேண்டியுள்ளது.  மாவட்டத்தின் மேற்கு, தென்மேற்கு, வடகிழக்கு ஆகிய பகுதிகளில் வாழும் மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்கும் சம்பவங்கள் நிகழும் போதும், சட்டம் ஒழுங்கு பிரச்சினை மற்றும் இயற்கை இடர்பாடுகள் ஏற்படும் போதும், மக்கள் நலன் சார்ந்த வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வது என்றாலும் குறிப்பிட்ட இடத்திற்கு மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிற அரசு அதிகாரிகள் ஆகியோர்; குறித்த நேரத்திற்குள் வந்து சேர முடிவதில்லை.  இதனால் பொதுமக்கள் அதிகமாக பாதிக்கப்படுவதோடு, மாவட்ட நிர்வாகம் செயல்பட முடியாத நிலை ஏற்படுகிறது.மேற்கண்ட சூழ்நிலைகள் காரணமாக சுமார்; 30 வருடங்களுக்கு முன்னரே தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு தனிமாவட்டம் உருவாக்கிட வேண்டும் என பொது மக்கள், மற்றும் வணிகர்களால் கோரிக்கை எழுப்பப்பட்டு தொடர்ந்து சமூகத்தின் அனைத்து தரப்பினராலும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.மேலும், அரசாணை 279 நாள் 09.06.2003-ன் படி (வருவாய் துறையின் படி) உத்தேசிக்கப்பட்டுள்ள மாவட்டத்தின் பரப்பளவு 2500 ச.கி.மீ வரும் பட்சத்தில் அதனை பாpசீலித்து தனி மாவட்டம் உருவாக்கிடலாம் என்ற கருத்துரை உள்ளது.  இங்கு தென்காசி கோட்டத்தின் அளவு மட்டுமே 1903.3805 ச.கி.மீ ஆகும்.  மற்றும் அருகிலுள்ள சேரன்மகாதேவி கோட்டத்தின் சில பகுதிகளை இணைத்தாலே தனி மாவட்டத்திற்கு தேவையான 2500 ச.கி.மீ பரப்பளவு கிடைத்துவிடும்.மேலும் தென்காசி என்ற பெயரில் சட்டமன்ற தொகுதி மற்றும் பாராளுமன்றத் தொகுதி உள்ளது.  2004-ஆம் ஆண்டு பாராளுமன்ற தொகுதியில் அடங்கிய 1. தென்காசி, 2. கடையநல்லூர் 3. சங்கரன்கோவில், 4. வாசுதேவநல்லூர், 5. ஆலங்குளம், 6. அம்பாசமுத்திரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கி தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் அமைப்பது பொது நலன் கருதி மிக்க அவசியமாக உள்ளது.  இந்த ஆறு சட்டமன்ற தொகுதிகளையும் இணைத்து தனி மாவட்டம் உருவாக்கினால் அரசு ஆணையில் குறிப்பிட்டுள்ள படி 2500 ச.கி.மீ பரப்பளவு 10,00,000 மக்கள் தொகையும், 200 கிராமங்கள் மற்றும் 5 வட்டங்கள் தேவை என்ற நிலை பூர்த்தியாகிவிடும்.  எனவே எல்லா தகுதியும் கொண்ட இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான, தென்காசியை தலைமையிடமாகக் கொண்ட தனி மாவட்டம் அமைத்திட வேண்டும் என்ற நியாயமான கோரிக்கையை பரிசீலித்து உரிய உத்தரவினை பிறத்திட பொது மக்கள் சார்பில் பணிவுடன் வேண்டுகிறேன்.

ஜல்லிக்கட்டு போராட்டம் : திமுக தற்காலிகமாக ஒத்திவைப்பு

 
 
 
திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது :-
 
 
இது குறித்து அவர், பொங்கல் நாள், தமிழர் திருநாள், புத்தாண்டு தொடக்கம் என்பதையொட்டி ஆண்டுதோறும் “ஜல்லிக்கட்டு – ஏறு தழுவல் – மஞ்சுவிரட்டு” என்ற பெயரில் தமிழக கிராமங்களில் எல்லாம் இளைஞர்கள் பங்கேற்கும் வீர விளையாட்டு;
 
இந்த விளையாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தும் விழாக் குழுவினர் என்னையும், கழகப் பொருளாளர் மு.க. ஸ்டாலினையும் 18-12-2015 அன்று நேரில் சந்தித்து பேசியதையொட்டி, அவர்களது வேண்டுகோளையும், உணர்வுகளையும் மதித்தும்; ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு விதிக்கப்படும் தடையினால் ஏற்படும் சட்டம் – ஒழுங்கு விளைவுகளை எண்ணிப் பார்த்தும்; தமிழர்களின் பண்பாட்டுப் பாரம்பரியத்தின் அடையாளத்தைக் காப்பாற்றுவதற்காகவும்; மத்திய, மாநில அரசுகள் இந்தப் பிரச்சினையிலே உடனடியாகத் தலையிட்டு, ஜல்லிக்கட்டுப் போட்டிகள் தொடர்ந்து நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை அவசியம் செய்ய வேண்டுமென்பதை வலியுறுத்தி, மதுரை மாவட்டத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வரும் 28-12-2015 அன்று ஜல்லிக்கட்டு விழாவினை ஆண்டுதோறும் சிறப்பாக நடத்தி வந்த அலங்காநல்லூரில் உண்ணாவிரதம் மேற்கொள்ளவும், அதிலே அனைத்துக் கட்சியினரும் பங்கு பெற வேண்டுமென்றும் 18-12-2015 அன்றே கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
 
28-1-2015 அன்று அலங்காநல்லூரில் கழகப் பொருளாளர், மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜல்லிக்கட்டு விளையாட்டை வலியுறுத்தி, உண்ணாவிரதம் நடைபெறும் என்று 18-12-2015 அன்று செய்தியாளர்களிடம் கூறப்பட்ட பிறகு, 23ஆம் தேதியன்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இந்தியப் பிரதமருக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.
 
23-12-2015 அன்று மத்திய அமைச்சர், பொன். இராதாகிருஷ்ணன் தொலைக் காட்சிகளில் ஜல்லிக்கட்டு பற்றி அளித்த பேட்டியைத் தொடர்ந்து மத்திய இணை அமைச்சருக்கு நான் எழுதிய அவசரக் கடிதத்தில் ஜல்லிக்கட்டு இந்த ஆண்டு எவ்வித இடையூறுமின்றி நடைபெற பிரதமரைச் சந்தித்து தேவையான முயற்சிகளை உடனே மேற்கொள்ள வேண்டு மென்று வலியுறுத்தியிருந்தேன். அந்தக் கடிதத்திற்கு அன்றிரவே பதில் எழுதிய மத்திய இணை அமைச்சர், “ஜல்லிக்கட்டை நடத்த தாங்கள் எடுத்த முயற்சிகள் குறித்து மகிழ்ச்சி அடைகிறேன். தமிழர்களின் பண்பாட்டு வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு விளையாட்டை மீண்டும் நடத்த வேண்டும் என்று கடந்த ஓராண்டுக் கும் மேலாக தொடர்ந்து நான் முயன்று வருகிறேன்.
 
நேற்றையதினம் (22-12-2015) பிரகாஷ் ஜாவ்டேகர் தனது துறையைச் சார்ந்த அதிகாரிகளை அழைத்து, ஜல்லிக்கட்டை நடத்த எந்த வழிமுறைகளைக் கையாளலாம் என்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நானும் கலந்து கொண்டேன். 23-12-2015 அன்று ஜல்லிக்கட்டு குழுத் தலைவர் ராஜசேகர் அவர்களோடு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவ்டேகர் அவர்களைச் சந்தித்து, ஜல்லிக்கட்டை ஜனவரி 2016இல் தைப்பொங்கல் அன்று நடத்த அனுமதி வேண்டுமென்று வலியுறுத்தினேன். கடந்த ஒரு மாத காலமாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் வருகின்ற ஜனவரி மாதம், தமிழர் திரு நாளாம் தைப் பொங்கல் அன்று ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்த அனுமதி பெற்று விடுவோம் என்கின்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இவை அனைத்திற்கும் பிரதமர் மோடி அவர்களின் முழு ஆதரவு உள்ளது என்பதையும் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவசரக் கடிதம் எழுதியதையும் இந்த நேரத்தில் நாம் மனதில் கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறோம்.
 
தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் இவ்வாறு கடிதம் எழுதியுள்ள நிலையில் 28ஆம் தேதியன்று அலங்காநல்லூரில் நமது கழகப் பொருளாளர், மு.க.ஸ்டாலின் தலைமையில் நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ள உண்ணாவிரதத்தை தற்காலிகமாக ஒத்தி வைக்கலாம் என்று கருதுகிறேன். ஜல்லிக் கட்டு விழாவினை நடத்த வேண்டு மென்று கோரி என்னைச் சந்தித்த குழுவினரும் மத்திய அரசின் இணை அமைச்சர் தெரிவித்துள்ள நம்பிக்கையை ஏற்று, இந்த முடிவினை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
 
மேலும் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் உறுதி அளித்துள்ளதை அடுத்து திமுக நடத்துவதாக அறிவிக்கப்பட்ட உண்ணாவிரதத்தை தற்காலிகமாக ஒத்தி வைக்கலாம் என்று கருதுவதாக வெளியிட்ட அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.

சூரிய ஒளி மின்சார கொள்முதல் விலை சலுகையை மீண்டும் நீட்டிக்கக் கூடாது: ராமதாஸ்

சென்னை:

சூரிய ஒளி மின்சார கொள்முதலில், விலைச் சலுகையை மீண்டும் நீட்டிக்கக் கூடாது என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார்.

அவர் இன்று வெளியிட்ட அறிக்கை:

தமிழ்நாட்டில் பெய்த வரலாறு காணாத மழை மற்றும் வெள்ளத்தால் பொதுமக்களும், விவசாயிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஏற்பட்ட இழப்புக்களை அரசு ஈடுசெய்யுமா? என்பது மில்லியன் டாலர் வினாவாக உருவெடுத்துள்ள நிலையில், மழையை காரணம் காட்டி மிகப்பெரிய சலுகைகளை பெற சூரிய ஒளி மின்நிறுவனங்கள் முயன்று வருகின்றன. அவை கோரும் சலுகையை அளித்தால் கிடைக்கும் லாபத்தை கருதி ஆளுங்கட்சியும் அதற்கு சம்மதித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் சூரிய ஒளி மின்சாரக் கொள்கையை கடந்த 2012ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20 ஆம் தேதி முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டார். 2013, 2014, 2015 ஆகிய ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் 1000 மெகாவாட் வீதம் 3 ஆண்டுகளில் 3000 மெகாவாட் திறன்கொண்ட சூரிய ஒளி மின்சாரக் கட்டமைப்புகளை தமிழக அரசு ஏற்படுத்தும் என்று அறிவித்தார். 2015 ஆம் ஆண்டு இன்னும் ஒரு வாரத்தில் முடிவடைய உள்ள நிலையில், இதுவரை ஒரு மெகாவாட் அளவுக்கு கூட சூரிய ஒளி மின்சாரக் கட்டமைப்புகள் தமிழகத்தில் ஏற்படுத்தப்படவில்லை. சூரிய ஒளி மின்சாரம் அரசால் தயாரிக்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்த ஜெயலலிதா, அதை தலைகீழாக மாற்றிக் கொண்டு தனியார் நிறுவனங்கள் சூரிய ஒளி மின்சாரத்தைத் தயாரிக்கும்; அதை தமிழ்நாடு மின்சார வாரியம் விலை கொடுத்து வாங்கிக் கொள்ளும் என்று விளக்கம் அளித்தார். அதன்படி, சூரிய ஒளி மின்சாரம் தயாரித்து வழங்க விண்ணப்பித்த நிறுவனங்களையெல்லாம் கண்டுகொள்ளாமல் தமக்கு வேண்டிய அதானி குழுமம் (648 மெகாவாட்) உள்ளிட்ட நிறுவனங்களுடன் மொத்தம் 2000 மெகாவாட் அளவுக்கு மின்சாரம் தயாரிக்க பல்வேறு காலகட்டங்களில் அ.தி.மு.க. அரசு ஒப்பந்தம் செய்திருக்கிறது.

சூரியஒளி மின்சாரத்தை ஒட்டுமொத்தமாக கொள்முதல் செய்வதற்கான விலையை மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தான் தீர்மானிக்கும். அதன்படி தமிழகத்தில் 12.09.2015க்குள் உற்பத்தியைத் தொடங்கும் நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் சூரிய ஒளி மின்சாரத்தை ஒரு யூனிட் ரூ.7.01 என்ற விலையில் கொள்முதல் செய்ய முடியும். அதற்குப் பிறகு உற்பத்தியைத் தொடங்கும் நிறுவனங்களிடம் ரூ.5.87 என்ற விலையில் தான் மின்சாரத்தை கொள்முதல் செய்ய வேண்டும். ஆனால், சூரிய ஒளி மின்நிறுவனங்களுக்கு ஆதரவாக, 31.03.2016 வரை உற்பத்தியைத் தொடங்கும் நிறுவனங்களிடமிருந்தும் ரூ.7.01 என்ற விலையிலேயே மின்சாரத்தைக் கொள்முதல் செய்யலாம் என தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. அதன்பிறகு தான் அதானி உள்ளிட்ட நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. ஆனால், அதானி குழுமம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களால் 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் மின்னுற்பத்தியை தொடங்க முடியாது. அவ்வாறு தொடங்க முடியாவிட்டால் 2016 ஆம் ஆண்டிற்கு கொள்முதல் விலை என்ன நிர்ணயிக்கப்படுகிறதோ, அந்த விலைக்குத் தான் அந்த நிறுவனங்களிடம் இருந்து மின்சாரத்தைக் கொள்முதல் செய்ய முடியும். 2016 ஆம் ஆண்டில் ஒரு யூனிட் மின்சாரத்தின் கொள்முதல் விலை ரூ.5-க்குள் தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், சூரிய ஒளி மின்சார நிறுவனங்கள் எப்போது உற்பத்தியைத் தொடங்கினாலும், அவற்றிடம் இருந்து ரூ.7.01 என்ற விலையில் மின்சாரத்தைக் கொள்முதல் செய்து கொள்வதாக தமிழக அரசு எழுதப்படாத ஒப்பந்தத்தை செய்து கொண்டிருப்பதாகவும், அதனால் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்கு பிறகும் இதே விலை நீட்டிக்கும் என்றும் முன்பே குற்றஞ்சாற்றியிருந்தேன். அதைப்போலவே, வரும் மார்ச் மாதத்திற்குள் இந்த நிறுவனங்களில் ஒன்று கூட உற்பத்தியைத் தொடங்க வாய்ப்பு இல்லை. மார்ச் மாதத்திற்கு பிறகு உற்பத்தியைத் தொடங்கும் நிறுவனங்களுக்கு புதிய விலை தான் வழங்க முடியும். அப்படி ஒரு நிலை ஏற்படுவதைத் தடுக்க தமிழகத்தில் பெய்த மழையால் தாங்கள் ஏற்படுத்திய கட்டமைப்பு வசதிகள் சேதமடைந்து விட்டதாகவும், அதனால் உற்பத்தி தொடங்குவதற்கான கெடுவை மார்ச் மாதத்திற்கு பிறகு நீட்டிக்க வேண்டும் என்றும் அரசை சூரியஒளி நிறுவனங்கள் கோரியுள்ளன.

தமிழ்நாட்டில் சூரிய ஒளி மின்திட்டங்கள் பெரும்பாலும் இராமநாதபுரம், கரூர் ஆகிய மாவட்டங்களில் தான் செயல்படுத்தப்படுகின்றன. அந்த மாவட்டங்களில் மழை&வெள்ளத்தால் எந்த பாதிப்பும் இல்லை. அதிக கொள்முதல் விலையை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான் இல்லாத பாதிப்பைக் காரணம் காட்டி இப்படி ஒரு கோரிக்கையை சூரியஒளி நிறுவனங்கள் முன்வைத்துள்ளன. 2016 ஆம் ஆண்டில் ஒரு யூனிட் சூரியஒளி மின்சாரம் ரூ.4.50 என்ற விலைக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. அதை விடுத்து பழைய விலைக்கே சூரிய ஒளி மின்சாரத்தைக் கொள்முதல் செய்தால் மெகாவாட்டுக்கு ரூ.11.25 கோடி இழப்பு ஏற்படும். வரும் மார்ச் மாதத்திற்குள் மொத்தம் 10,000 மெகாவாட் அளவுக்கு கொள்முதல் ஒப்பந்தம் செய்து கொள்ள தமிழக அரசு முடிவு செய்திருப்பதால் ரூ.1 லட்சத்து 12,500 கோடி இழப்பு ஏற்படும். ஆனால், இதையெல்லாம் தெரிந்து கொண்டே விலைச்சலுகையை நீட்டித்து வழங்க தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது. அவ்வாறு செய்தால் அது மிகப்பெரிய ஊழலாக அமையும். எனவே, சூரிய ஒளி மின்சாரத்திற்கான விலைச்சலுகையை தமிழக அரசு நீட்டிக்கக்கூடாது. அவ்வாறு நீட்டித்தால், அதில் நடந்த ஊழல்கள் குறித்து விசாரணை கோரி பா.ம.க. வழக்குத் தொடரும்.

ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக செங்கோட்டை-சென்னை சிறப்பு ரயில் இயக்க வேண்டுகோள்

செங்கோட்டை:

ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக சென்னையில் இருந்து செங்கோட்டைக்கு சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தமிழகம், ஆந்திரம், தெலங்கானா, கர்நாடக மாநிலங்களைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் ரயில் மூலம் தென்காசி அல்லது செங்கோட்டையில் இறங்கி சுற்றுலா வாகனங்களின் மூலம் ஐயப்பனின் படை வீடுகளான அச்சன்கோவில், ஆரியங்காவு, குளத்துப்புழா மற்றும் கொட்டாரக்கரை, சாஸ்தாங்கோட்டை சென்று தரிசனம் செய்துவிட்டு பத்தனம்திட்டா வழியாக பம்பை – சபரிமலை சென்று வந்தனர். அச்சங்கோவில், ஆரியங்காவு, குளத்துப்புழை உள்ளிட்ட தலங்கள் செங்கோட்டையில் இருந்து செல்லும் வகையிலேயே அமைந்துள்ளன. இங்கிருந்து கேரளப் பேருந்துகள் இயக்கப் படுகின்றன. ஆனால், செங்கோட்டை வருவதற்கு, மற்ற மாநில மக்களுக்கு சென்னையில் இருந்து வரும் பொதிகை விரைவு ரயில் ஒன்றே தற்போது உள்ளது.

2 ஆண்டுகளுக்கு முன்னர் ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக இயக்கப்பட்ட சென்னை-செங்கோட்டை சிறப்பு விரைவு ரயில் தற்போது இயக்கப்படாததால் ஐயப்ப பக்தர்கள் அவதிப்படுகின்றனர். மதுரையில் இருந்து செங்கோட்டைக்கு மாலை 5.20க்குப் பின்னர் ரயில் கிடையாது. செங்கோட்டையில் இருந்து மதுரைக்கு மாலை 6.30க்குப் பின்னர் ரயில்கள் இல்லை. எனவே, இரவு நேரத்தில் செங்கோட்டைக்கோ, மதுரைக்கோ பக்தர்கள் ரயிலில் பயணிக்க முடிவதில்லை. இதனால் ரயிலில் செல்லும் ஐயப்ப பக்தர்கள் செங்கோட்டை, மதுரை ரயில் நிலையங்களில் தங்கி மறுநாள் காலையில்தான் ரயிலில் பயணிக்கின்றனர்.

தற்போது அதிக அளவில் தமிழகம் மற்றும் வெளி மாநில பக்தர்கள் சபரிமலைக்கு வருகின்றனர். இவர்களின் வசதிக்காக சிறப்பு ரயில்களை பெங்களூரு, சென்னையில் இருந்து செங்கோட்டைக்கு இயக்க வேண்டும் என தமிழக ஐயப்ப சேவா சங்கங்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன் அகல ரயில்பாதை அமைப்பதற்காக செங்கோட்டை-புனலூர் வழித்தடத்தில் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. இதனால் தென்காசி, செங்கோட்டைக்கு ரயிலில் வந்து அங்கிருந்து சுற்றுலா வாகனம் மூலம் பயணிக்க வசதி இல்லாதவர்கள் பேருந்துகளுக்காக பல மணி நேரம் காத்திருந்து பிற வழிபாட்டுத் தலங்களுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே செங்கோட்டை-புனலூர் அகல ரயில் பாதை பணிகளை விரைந்து முடிக்க பொதுமக்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மதுவிலக்கு பாதயாத்திரை: குமரி அனந்தன் நிகழ்ச்சியில் இளங்கோவன் பங்கேற்கவில்லை

சென்னை:

மூத்த காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன் இன்று “நமது இலக்கு மதுவிலக்கு ” என்ற கோரிக்கையை முன் வைத்து சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை பாதயாத்திரை துவங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் ப.சிதம்பரம், திருநாவுக்கரசர், தங்கபாலு, எச்.வசந்தகுமார் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களும் தொண்டர்களும் கலந்து கொண்டனர். மேலும், மு .க ஸ்டாலின், வைகோ., திருமாவளவன், முத்தரசு, பழ.நெடுமாறன், சரத்குமார், தமிழருவி மணியன் மற்றும் முன்னணித் தலைவர்களும் தொண்டர்களும் திரளாகக் கலந்துகொண்டனர்.

இருப்பினும், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் EVKS இளங்கோவன் சென்னையில் இருந்தும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.

வாஜ்பாய் 91-வது பிறந்த தினம்: பாஜக.,வினர் இனிப்பு கொடுத்து கொண்டாட்டம்

சென்னை:

வேற்றுக் கட்சியினராலும் மதிக்கப்படும் இந்தியாவின் மூத்த தலைவர், முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் .

அரசியல் வரலாற்றில் முதல் முறையாக காங்கிரஸ் அல்லாத அரசை 5 ஆண்டுகள் முழுமையாக வழிநடத்திய பெருமைக்குரியவர். இவர்,

1924-ம் ஆண்டு டிசம்பர் 25-ம் தேதி மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் நடுத்தர குடும்பத்தில் பிறந்தார்.

வாஜ்பாயின் வாழ்க்கைச் சுவடுகள் ஒவ்வொன்றும் இந்தியாவின் சரித்திரம்.

மற்ற பாஜக தலைவர்களைப் போல் வாஜ்பாயும் ஆர்எஸ்எஸ் மூலமே அரசியலில் அடியெடுத்து வைத்தார்.

அரசியலில் ஈடுபடுவதில்லை; அமைப்பு ரீதியாகவே இயங்குவோம் என்பது ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் கொள்கை. இந்நிலையில், அப்போதைய ஆர்.எஸ்.எஸ். தலைவராக இருந்த ‘குருஜி’ என்று அழைக்கப்பட்ட மாதவ சதாசிவ கோல்வல்கரின் அறிவுரைப்படி, 1951-ல் நேருவின் அமைச்சரவையில் அமைச்சராக இருந்த ஷியாம பிரசாத் முகர்ஜியும், ஆர்எஸ்எஸ் முழு நேர ஊழியரான தீனதயாள் உபாத்தியாயவும் ‘பாரதிய ஜன சங்கம்’ என்ற புதிய அரசியல் கட்சியைத் தொடங்கினர்.

அவர்களுக்கு துணையாக வாஜ்பாய், அத்வானி ஆகியோரை அக்கட்சிக்கு அனுப்பி வைத்தார் எம்.எஸ்.கோல்வல்கர்.

அப்போது வாஜ்பாய் ஆர்எஸ்எஸ்ஸின் இந்தி வார இதழான ‘பாஞ்சஜன்ய’வின் ஆசிரியாக இருந்தார்.

தனது பேச்சாற்றல், அமைப்புத் திறன், போராட்ட குணம், நகைச்சுவை உணர்வு ஆகியவற்றால் சில ஆண்டுகளிலேயே அக்கட்சியில் முக்கியத் தலைவராக உயர்ந்தார்.

1957 முதல் 10 முறை மக்களவை, 2 முறை மாநிலங்களவை உறுப்பினராக இருந்த அவர், ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தார். இந்திரா காந்தி ஆட்சியில் நாட்டில் நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டபோது அதை எதிர்த்ததால் சிறையில் அடைக்கப்பட்டார்.

 1977-ல் மொரார்ஜி தேசாய் தலைமையில் முதல் முறையாக காங்கிரஸ் அல்லாத அரசு அமைந்த போது வாஜ்பாய் வெளியுறவுத் துறை அமைச்சர் ஆனார். ஐ.நா. சபையிலும். பல்வேறு வெளிநாடுகளில் அவர் ஆற்றிய பணிகள் இந்தியாவுக்கு பெருமையைத் தேடித் தந்தன.

 1977-ல் ஜனதா கட்சியில் இணைந்த பாரதிய ஜன சங்கம், பின்னர் 1980-ல் பாரதிய ஜனதா கட்சியாக (பாஜக.,) உருவெடுத்தது. அதன் முதல் தலைவராகப் பொறுப்பேற்ற வாஜ்பாய் கட்சிக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றினார். அதன் விளைவாக காங்கிரஸுக்கு மாற்றாக பாஜக விரைவாக வளரத் தொடங்கியது.

 1996-ல் முதல் முறையாக பிரதமரான வாஜ்பாய் 13 நாட்களில் பதவியை இழந்தார். ஆர்.எஸ்.எஸ்., பாஜக.,வை கடுமையாக விமர்சிப்பவர்கள் கூட வாஜ்பாயை ஏற்றுக் கொண்டார்கள். கொண்டாடவும் செய்தார்கள். ‘சேற்றில் மலர்ந்த செந்தாமரை’, ‘தவறான கட்சியில் இருக்கும் சரியான மனிதர்’ என்றெல்லாம் எதிர்க்கட்சித் தலைவர்கள் அவரை பாராட்டினர்.

இதனால் 1998, 1999 தேர்தல்களில் பாஜக.,வை ஏற்காதவர்கள்கூட அக்கட்சியுடன் கூட்டணி அமைத்தனர்.

1998-ல் அதிமுகவும், 1999-ல் திமுகவும் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டன.

1999-ல் அதிமுக ஆதரவை வாபஸ் பெற்றுக் கொண்டதால் 13 மாதங்களில் வாஜ்பாய் அரசு கவிழ்ந்தது.

1999-ம் ஆண்டு தேர்தலில் திமுக உள்ளிட்ட 23 கட்சிகள் துணையுடன் வெற்றி பெற்று மத்தியில் காங்கிரஸ் அல்லாத அரசை 5 ஆண்டுகள் வழிநடத்தினார் வாஜ்பாய்.

 1998 மே 11, 13 தேதிகளில் பொக்ரானில் அணுகுண்டு சோதனை நடத்த பச்சைக் கொடி காட்டினார். இது, இந்தியாவை உலக நாடுகள் அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்துடன் பார்க்க வைத்தது. இந்த அணுகுமுறை வாஜ்பாயை புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றது.

1999 மே முதல் ஜூலை வரை கார்கில் எல்லையில் பாகிஸ்தானுடன் நடைபெற்ற போரில் இந்தியா வெற்றி பெற்றாலும், ஊடுருவலைத் தடுக்க முடியவில்லை என்ற விமர்சனமும் எழுந்தது. இந்நிலையில், அமைதி நடவடிக்கைகளை எடுத்தார் வாஜ்பாய்.

பாகிஸ்தானுக்கு பேருந்து போக்குவரத்து, அமைதிப் பேச்சுவார்த்தை என தனது ஆட்சிக் காலத்தில் நல்லுறவுக்கு பல்வேறு நடவடிக்கைகளை வாஜ்பாய் எடுத்தார்.

ஆனாலும், காந்தகார் விமானக் கடத்தல், தீவிரவாதிகள் விடுதலை, நாடாளுமன்ற வளாகத்தில் தீவிரவாதிகள் தாக்குதல், குஜராத் இனக் கலவரம் உள்ளிட்டவை வாஜ்பாய் அரசுக்கு கரும்புள்ளியாக அமைந்தன.

 வயது முதிர்ச்சியால் ஏற்பட்ட உடல் நலக்குறைவால் கடந்த 10 ஆண்டுகளாக அரசியலில் இருந்து முழுமையாக ஒதுங்கியிருக்கும் வாஜ்பாய், டிச.25 இன்று தனது 91-ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.

இதை ஒட்டி, நாடு முழுதும் பாஜகவினர் இனிப்புகள் கொடுத்து தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்தனர். 

புத்தாண்டு விழாவை புறக்கணியுங்கள்!: இயக்குனர் வ.கௌதமன்

தாய் தமிழ் உறுவுகளுக்கும், கலந்து கொள்ளவிருக்கும் நடிகர் – நடிகையர்களுக்கும் அன்பான வேண்டுகோள் என்று இயக்குனர் வ.கௌதமன் வெளியிட்ட அறிக்கை:

சமீபத்தில் பெய்த கன மழையிலிருந்து நம் மக்கள் இன்னும் மீண்டு வராத நிலையில் அவர்களது துயரத்தில் பங்கெடுக்கும் விதமாக தாய்தமிழகத்து உறவுகளுக்கும் என் திரை குடும்பத்து கலைஞர்களான நடிகர் நடிகையர்களுக்கும் 2016 புத்தாண்டு கொண்டாட்டத்தை புறக்கணிக்குமாறு அன்போடும் உரிமையோடும் கேட்டுக் கொள்கிறேன்.

மழை பற்றிய வரலாற்று குறிப்பின்படி கடந்த 1918ம் ஆண்டு நவம்பர் மாதம் பெய்த மழையை விடவும் 2015 நவம்பர் மற்றும் டிசம்பரில் பெய்த மழையே பெருமழை என்றும் தமிழ் மண்ணில் நடந்த பேரிடர் மழை என்றும் நீரியல் வல்லுனர்களால் வர்ணிக்கப்படுகிறது.

மழைக்கொட்டி பெருக்கெடுத்த வெள்ளத்தால் குடிசையில் வசித்தோருக்கு வீடே பறிபோனது. வீட்டில் வசித்தோருக்கு விட்டிலிருந்த ஒரு பொருளும் இல்லாமல் போனது. முதல்முறையாக நகரத்துக்கு வந்து பல ஆண்டுகள் கடுமையாக உழைத்து வாழ்வை தொடங்கிய பல்லாயிரக் கணக்கானோர் இப்போது வீதிக்கு வந்துவிட்டனர்.

கிட்டத்தட்ட ஒரு லட்சம் வீடுகள் நாசமானது. ஏறத்தாழ தொண்ணூறு ஆயிரம் கோடிகள் இழப்பு. ஐநூறுக்கும் மேற்பட்டவர்கள் இறந்திருக்கிறார்கள். காணாமல் போனவர்களின் பட்டியல் நீண்டு கொண்டேயிருக்கிறது. நிதி பற்றாக்குறையால் மாநில அரசு திகைத்து நிற்கிறது. வழக்கம்போல் மத்திய அரசு பாராமுகமாக கிடக்கிறது.

பேரழிவு ஒன்று நடக்கும்போது இந்த உலகை காப்பதும் மீட்பதும் அதிகார வர்க்கங்களுக்கு முன் மனிதம்தான் என்பதை இந்த மண் மீண்டும் நிருபித்தது.

சாதி, மதம், இனம் பார்க்காமல் குடிநீரானாலும், உணவானாலும், உடைகள் மற்றும் மருந்தானாலும், வீதி வீதியாக ஊர் ஊராக உதவிகள் வந்து குவிந்தன. நம் வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவுக்கு ஒட்டுமொத்த தமிழ் சமுகமும் மாபெரும் மனிதாபிமானத்தை பகிர்ந்து கொண்டது. யுத்தத்தால் சிதறடிக்கப்பட்டு உலகம் முழுக்க விழுந்த நம் தமிழீழ உறவுகள் கூட எங்கள் தொப்புள்கொடி உறவுகளுக்கு நாங்களும் உதவுவோம் என நிதி சேகரித்து உதவிக்கொண்டிருக்கிறார்கள்.

மற்றவர்களுக்கு இணையாக நம் திரைத்துறையினரும் முடிந்தவரை நிதிகள் தந்து உதவினர். பிறமொழி கலைஞர்களும் முதலமைச்சர் நிவாரண நிதியாக பெருமளவு தந்தனர்.

சில கலைஞர்கள் தங்களது புகழையும், பொருளையும் பார்க்காமல் சிரமத்தையும் பொருட்படுத்தாமல் நேரில் சென்று பணிவிடை செய்தனர். ஆனால் இன்னும் நம் மக்களுக்கு ஒரு விடிவு பிறக்கவில்லை. ஒரு நிரந்தர தீர்வில்லை.

நடந்து முடிந்த சிதைவுகளை வைத்தே கொண்டாட்டம் வேண்டாமென கிருஸ்துமஸ் நிகழ்வையே ரத்து செய்திருக்கிறது தமிழ்நாடு அரசு.

வருமானத்தை பிரதானமாக கருதும் இன்றைய காலகட்டத்தில் தமிழ்நாடு ஒட்டல்கள் சங்கம் தங்களது விடுதிகளில் நடக்கவிருந்த புத்தாண்டு கொண்டாட்டங்களை ரத்து செய்துவிட்டு அதற்கு பதிலாக பாதிக்கப்பட்டவர்களுக்கு பணிவிடை செய்யப்போகிறோம் என பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட முதலாளிகள் ஒன்றுகூடி பெருந்தன்மையோடு அறிவித்திருக்கிறார்கள்.

ஜன்னலை திறந்து தாய்மனதோடு பாருங்கள். ஒரு பெரும் கூட்டம் படுக்க பாய்கூட இல்லாமல் அலைந்து கொண்டிருக்கிறது. மாற்று உடுப்புக்கும், மறுவேளை உணவுக்கும் வழியில்லாமல் பல்லாயிரக் கணக்கானவர்கள் திரிந்து கொண்டிருக்கையில், ஒரு வேளை அலைந்து திரியும் அந்த கூட்டத்தில் நாமோ அல்லது நம் குடும்பத்து உறுப்பினர்களோ நின்றிருந்தால் எப்படி இருக்கும் என ஒருமுறை கற்பனை செய்து பார்த்தாலே தாங்க முடியாமல் நெஞ்சம் வெடித்து விடும்.

எனது வேண்டுகோள் எல்லோருக்குமானது அல்ல. இந்த துயரங்கள் எதனையும் உள்வாங்காமல் புத்தாண்டு கொண்டாட்டதிற்கு தயாராகிக் கொண்டிருக்கும் என தாய்தமிழ் உறுவுகளுக்கும் என் திரைக்குடும்பத்தை சார்ந்த ஒரு சில கலைஞர்களுக்கும்தான்.

இதற்கான செலவு செய்ய ஏதோ ஒரு தொகையினை இந்நேரம் நீங்கள் கணிக்கிட்டுருப்பீர்கள். உங்களால் முடிந்தால் ஒரு நபரையோ அல்லது ஒரு குடும்பத்தையோ கரையேற்றினால் காலம் முழுக்க உங்களை அவர்கள் வாழ்த்துவார்கள். பிறப்பின் அற்புதமே ஒரு உயிர் இன்னொரு உயிரை மகிழ்விப்பதுதான் என்பதை செயலால் உணர்வோம்.

 

மனிதத்தை உயர்த்துவோம்.

 

2016 மனிதநேய ஆண்டாக உலகுக்கு பிரகடணப்படுத்துவோம்.

வானில் அதிசய நிகழ்வு: இன்று இரவு காணத் தவறாதீர்

இன்று இரவு சர்வதேச விண்வெளி நிலையம் கடப்பதை நாம் வெறும் கண்களால் காணலாம் என்று தாம்பரம் வானவியல் கழகம் தெரிவித்துள்ளது. 

அந்த அமைப்பின் பாலு.சரவண சர்மா தெரிவித்தது…

இன்று (25.12.2015) இரவு வானத்தை காணத்தவறாதீர்கள்! இரவு 7:01 மணி முதல் 7:06 மணி வரை சுமார் 5 நிமிடங்கள் மட்டும் தமிழக வானில் சர்வதேச விண்வெளி நிலையம் கடப்பதை வெறும் கண்களில் காணலாம்.

வடமேற்கு திசையில் அடிவானில் இருந்து மேல் நோக்கி எழும்பி தென்கிழக்கு திசையாக இது கடந்து மறையும். வரும் டிச 26, 27, 31, ஜன 2 ஆகிய தேதிகளிலும் இதைக் காணலாம். இது குறித்து விரிவாக அறிய கீழ்க்காணும் இணையத்தை பார்வையிடலாம்…
https://www.heavens-above.com/PassSummary.aspx…

ஆங்கிலப் புத்தாண்டு மோகம்

ஜனவாி 1 NEW YEAR நெருங்கி கொண்டிருக்கிறது..அன்றைய தினத்தை சிறப்பாக கொண்டாட தயாராகி கொண்டு இருப்பீா்கள்.

ஆனால் என் கேள்வி?? நாம் ஏன் NEW YEAR கொண்டாடவேண்டும்? நமக்கும் ஜனவாி 1 NEW YEAR தின கொண்டாட்டத்திற்கும் என்ன சம்பந்தம்? சொல்லப்போனால் ஒரு கிறிஸ்துவ பண்டிகையை நம்மீது திணித்து NEW YEAR என்றால் அதை கொண்டாடியே ஆகவேண்டும் எனும் நிலைமையை உருவாக்கி நம்மை அடிமைப்படுத்தி வைத்துள்ளனா்..

டிசம்பா் 25 இயேசு பிறக்கிறாா்..அன்றிலிருந்து ஏழாவது நாள் அவருக்கு பெயா் சூட்டப்படுகிறது..ஆகவே அவா் பிறந்த டிசம்பா் 25ஐ கிறிஸ்துமஸ் ஆகவும்,அவருக்கு பெயா் சூட்டப்பட்ட ஜனவாி 1 தினத்தை NEW YEAR எனவும் பெயாிட்டு கிறிஸ்துவா்கள் அவா்களது பண்டிகைகளாக கொண்டாடி வருகிறாா்கள்.

அவா்கள் கொண்டாடுவதில் அா்த்தம் உள்ளது..ஆனால் முழுக்க முழுக்க கிறிஸ்துவா்களின் பண்டிகையான NEW YEAR தினத்தை நாம் ஏன் கொண்டாடி கொண்டு இருக்கின்றோம்.

இன்னும் சொல்லப்போனால் நம் கலாச்சாரத்தை சீரழித்து கொண்டு இருப்பதில் NEW YEAR கொண்டாட்டங்களுக்கு மிகப்பொிய பங்கு உண்டு..பெரும் நகரங்கள் முதல் சிறு கிராமங்கள் வரை இந்த கேடுகெட்ட NEWYEAR கொண்டாட்ட மோகம் நம்மை(இந்துக்களை)அடிமைப்படுத்தி வைத்திருக்கிறது.

டிசம்பா் 31 இரவு முழுவதும் ஹோட்டல்களிலும்,கிளப்களிலும்,ரோட்டிலும் கிறிஸ்துவ NEWYEAR பண்டிகை எவ்வளவு கேவலமாக,நமது கலாச்சாரத்தை சீரழித்து கொண்டாடப்பட்டு வருவதை நாம் அனைவரும் கண்கூடாக பாா்த்துவருகிறோம்..இப்படிப்பட்ட படுமோசமான,கேவலமான ஒரு கிறிஸதுவ பண்டிகை கொண்டாட்டங்கள் நமக்கு(இந்துக்களுக்கு)தேவையா?? இதில் இன்னும் ஒரு உச்சகட்ட கொடுமை என்னவென்றால் டிசம்பா் 31 இரவு சா்ச்களுக்கு செல்லும் நம்மவா்களும் இருக்கிறாா்கள்..இதுவும் ஒருவகை மதமாற்றம்தான்..NEWYEAR கொண்டாட்டங்களில் ஈடுபட்டா்கிறிஸ்துவ மதத்தை நாம் ஏற்றுக்கொள்கிறோம் என்றுதான் அா்த்தம்.

கொண்டாட்டங்கள் மட்டுமல்லாது NEWYEAR என்று சிறப்பு அந்தஸ்து கொடுத்து அன்றைய தினம் நமது கோவில்களுக்கு சென்று சிறப்பு வழிபாடு செய்வது,அா்ச்சனை செய்வது போன்ற நிகழ்வுகளையும் நாம் நிறுத்தவேண்டும்..நம்மை பொறுத்தவரை இந்த மாா்கழி மாதம் முழுவதுமே சிறப்பான நாட்கள்தான்.அந்தவகையில் நாம் கோவில்களுக்கு சென்று வழிபடலாம்..நம்மை பொறுத்தவரை இனிமேல் ஜனவாி 1 என்பது நம் வீட்டீல் பழைய காலண்டருக்கு பதில் புது காலண்டா் மாறுகிறது அவ்வளவுதான்.மற்றபடி அன்றைய தினத்திற்கு எந்த முக்கியத்துவமும் தராமல் புறக்கிணப்போம்..NEWYEAR என்று வாழ்த்து சொல்வதைக்கூட இனிமேல் முற்றிலும் புறக்கணிப்போம்..நாம் இனிமேல் நாமாக(இந்துவாக)மட்டும் இருப்போம்…
“நம்மால் முடியும்”..

– நாகேந்திரன் விஸ்வநாதம்

ராமர் கோவில் கட்ட இஸ்லாமியர்கள் உதவவேண்டும் என அழைப்பு விடுத்த அமைச்சர் நீக்கம்

லக்னோ:

‘கோவில் கட்ட இஸ்லாமியர்கள் உதவவேண்டும்’ என்று அழைப்பு விடுத்த உ.பி. அமைச்சர் நீக்கப்பட்டார்

இஸ்லாமியர்கள் அயோத்தியா, மதுரா மற்றும் காசியில் விட்டுகொடுத்து கோவில்கட்ட உதவிசெய்ய வேண்டும் என்று உ.பி. அமைச்சர் ஓம்பால் நெக்ரா அழைப்பு விடுத்தார்.

உத்தரபிரதேச மாநில அமைச்சர் ஓம்பால் நெக்ரா நேற்று மாலை பிஜ்னோரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த அழைப்பினை விடுத்தார். இந்நிலையில் மாநில முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ் இன்று காலை அமைச்சரவையில் இருந்து நீக்கி உத்தரவிட்டு உள்ளார். 

நெக்ரா பேசுகையில், “அயோத்தியில் இல்லாமல் வேறுஎங்கு ராமர் கோவில் கட்டுவது? அயோத்தியில் ராமர் கோவில் கட்டவும், மதுராவில் கிருஷ்ணா கோவில் கட்டவும் இஸ்லாமியர்கள் உதவிசெய்யவேண்டும், அங்குள்ள மசூதிகளில் கோரிக்கையை விடவேண்டும். உண்மையில் நான் சொல்கின்றேன், இஸ்லாமியர்கள் ராமர் கோவில் கட்ட கர சேவாவில் இணையவேண்டும்,” என்று கூறிஉள்ளார். 

அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் திட்டத்துக்காக விசுவ இந்து பரிஷத் சேகரித்த கற்கள், சமீபத்தில் 2 லாரிகளில் அயோத்திக்கு வந்து சேர்ந்தன. அங்கு நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ராமர் கோவில் கட்ட புதியதாக அங்கு கற்கள் வந்து இறங்கியது சர்ச்சையை ஏற்படுத்திஉள்ளது. இதனை குறிப்பிட்டு அமைச்சர் இக்கருத்தினை தெரிவித்து உள்ளார்.