Home Blog Page 6032

திருவேகம்ப மாலை-பட்டினத்தார்

திருவேகம்பமாலை-பட்டினத்தார்

பட்டினத்தார் காவேரிப் பூம்பட்டினத்தில் சிவநேசர் ஞானகலை எனும் பெற்றோருக்கு நன்மகனாய்ப் பிறந்தார். வாணிகத்தில் ஈடுபட்டுப் பொருட்குவித்து சிவபூசைகளில் செலவழித்தார். சிவகலை எனும் பெண்ணை மணந்தார். குழந்தைப் பேறில்லாததால் திருவிடைமருதூரில் சிவசருமர் எனும் பிராமணர் கண்டெடுத்த குழந்தையை எடைக்குப் பொன் கொடுத்து ‘மருதவாணர்’ எனப் பெயரிட்டு வளர்த்தார். அக்குழந்தை வளர்ந்து வாலிபமான பிறகு – பதினாறுவயதில் – “காதற்ற ஊசியும் வாராது காணும் கடை வழிக்கே” என்று எழுதி வைத்துச் சென்றுவிட்டது. அதன் பின்னர் மெய்யுணர்வு பெற்று இருக்கின்ற பொருளை வாரிவழங்கி துறவு மேற்கொண்டு, பிச்சையேற்று, பலதலங்கள் சுற்றித்திரிந்து இறுதியில் திருவொற்றியூரில் முக்தி பெற்றார் என்பது அவரது சுருங்கிய வாழ்க்கைச் சரிதம்.

 
1. திருவேகம்பமாலை
 
அறந்தா னியற்று மவனிலுங்கோடி யதிகமில்லந்
துறந்தான், அவனின் சதகோடி யுள்ளத்துறவுடையோன்;
மறந்தா னறக்காற் றறிவோடிருந்திரு வாதனையற்று
இறந்தான் பெருமையையென் சொல்லுவேன் ? கச்சியேகம்பனே!
 
கட்டியணைத்திடும் பெண்டிரு மக்களுங் காலத்தச்சன்
வெட்டிமுறிக்கு மரம்போற் சரீரத்தை வீழ்த்திவிட்டாற்
கொட்டிமுழக்கி யழுவார்; மயானங் குறுகியப்பால்
எட்டி யடிவைப்ப ரோ? யிறைவா ! கச்சியேகம்பனே!
 
கைப்பிடி நாயகன் தூங்கையிலே யவன்கையெடுத்து
அப்புறங்தன்னி லசையாமல் முன்வைத் தயல்வளவில்
ஒப்புடன்சென்று துயில்நீத்துப் பின்வந் துறங்குவளை
எப்படிநான் நம்புவேன்? இறைவா ! கச்சியேகம்பனே!
 
நன்னாரில் பூட்டிய சூத்திரப்பாவை நன்னார்தப்பினால்
நன்னாலுமாடிச் சலித்திடுமோ அந்தத் தன்மையைப்போல்
உன்னால்யானுந் திரிவதல்லால் மற்றுனைப் பிரிந்தால்
என்னாலிங் காவதுண்டோ? இறைவா ! கச்சியேகம்பனே!
 
நல்லா ரிணக்கமும், நின்பூசை நேசமும், ஞானமுமே
அல்லாது வேறு நிலையுளதோ? அகமும், பொருளும்
இல்லாளும் சுற்றமும் மைந்தரும் வாழ்வும் எழிலுடம்பும்
எல்லாம் வெளிமயக்கே இறைவா, கச்சியேகம்பனே!
 
பொல்லாதவன், நெறி நில்லாதவன், ஐம்புலன்கள்தமை
வெல்லாதவன், கல்வி கல்லாதவன், மெய்யடியவர்பால்
செல்லாதவன், உண்மை சொல்லாதவன், நின்திருவடிக்கன்பு
இல்லாதவன், மண்ணிலேன்பிறந்தேன் ! கச்சியேகம்பனே!
 
பிறக்கும்பொழுது கொடுவந்த தில்லை, பிறந்து மண்மேல்
இறக்கும்பொழுது கொடுபோவ தில்லை; இடைநடுவில்
குறிக்குமிச் செல்வஞ் சிவன் தந்ததென்று கொடுக்கறியாது
இறக்குங் குலாமருக் கென்சொல்லுவேன் ? கச்சியேகம்பனே!
 
அன்னவிசார மதுவேவிசாரம் அதுவொழிந்தால்
சொன்ன விசாரந் தொலையா விசாரம் நல்தோகையரைப்
பன்னவிசாரம் பலகால் விசாரமிப் பாவிநெஞ்சக்கு
என்னவிசாரம் வைத்தாய் இறைவா, கச்சியேகம்பனே!
 
கல்லாப் பிழையும், கருதாப் பிழையும், கசிந்துருகி
நில்லாப் பிழையு நினையாப் பிழையும், நின்னஞ்செழுத்தைச்
சொல்லாப் பிழையுந், துதியாப் பிழையுந், தொழாப் பிழையும்
எல்லாப் பிழையும் பொறுத்தருள்வாய் கச்சியேகம்பனே!
 
மாயநட் போரையும் மாயா மலமெனும் மாதரையும்
வீயவிட்டோடி வெளியே புறப்பட்டு மெய்யருளாம்
தாயுடன் சென்றுபின் தாதையைக் கூடிப்பின் தாயைமறந்
தேயும தேநிட்டை, யென்றா னெழிற் கச்சியேகம்பனே!
 
வரிக்கோல வேல்விழியார் அநுராக மயக்கிற்சென்று
சரிக்கோதுவேன் எழுத்தஞ்சுஞ் சொலேன், தமியேனுடலம்
நரிக்கோ? கழுகுபருந்தினுக்கோ? வெய்யநாய் தனக்கோ?
எரிக்கோ? இரையெதற்கோ? இறைவா, கச்சியேகம்பனே!
 
காதென்று மூக்கென்று கண்ணென்று காட்டியென் கண்ணெதிரே
மாதென்று சொல்லி வருமாயை தன்னை மறலிவிட்ட
தூதென் றெண்ணாமற் ககமென்று நாடுமித் துர்ப்புத்தியை
ஏதென் றெடுத்துரைப்பேன்? இறைவா, கச்சியேகம்பனே!
 
ஊருஞ் சதமல்ல, உற்றார் சதமல்ல, உற்றுப்பெற்ற
பேருஞ் சதமல்ல, பெண்டீர் சதமல்ல, பிள்ளைகளும்
சீருஞ் சதமல்ல, செல்வஞ் சதமல்ல, தேசத்திலே
யாருஞ் சதமல்ல, நின்தாள் சதங்கச்சி யேகம்பனே!
 
சீறும்வினையது பெண்ணுரு வாகித் திரண்டுருண்டு
கூறுமுலையு மிறைச்சியு மாகிக் கொடுமையினால்
பீறுமலமு முதிரமுஞ் சாயும் பெருங்குழிவிட்டு
ஏறுங்கரைகண்டி லேன், இறைவா, கச்சியேகம்பனே!
 
பொருளுடை யோரைச் செயலினும் வீரரைப் போர்க்களத்தும்
தெருளுடை யோரை முகத்தினுந் தேர்ந்து தெளிவதுபோல்
அருளுடை யோரைத் தவத்திற் குணத்தி லருளிலன்பில்
இருளுறு சொல்லினுந் காணத்தகுங் கச்சி யேகம்பனே!
 
பருத்திப் பொதியினைப்போலே வயிறுபருக்கத் தங்கள்
துருத்திக்கு அறுசுவை போடுகின்றார், துறந்தோர்தமக்கு
வருத்தி யமுதிடமாட்டார், அவரையிம் மாநிலத்தில்
இருத்திக் கொண்டேனிருந்தா யிறைவா! கச்சியேகம்பனே!
 
பொல்லா விருளகற் றுங்கதிர் கூகையென் புட்கண்ணினுக்கு
அல்லா யிருந்திடு மாறொக்குமே அறிவோ ருளத்தில்
வல்லா ரறியார் தமக்கு மயக்கங் கண்டாய்,
எல்லாம் விழிமயக் கேயிறைவா, கச்சி யேகம்பனே!
 
வாதுக்குச் சண்டைக்குப் போவார், வருவார் வழக்குரைப்பர்;
தீதுக் குதவியுஞ் செய்திடுவார், தினந்தேடி ஒன்று
மாதுக் களித்து மயங்கிடுவார் விதி மாளுமட்டும்
ஏதுக்கிவர் பிறந்தார்? இறைவா, கச்சியேகம்பனே!
 
ஓயாமற் பொய்சொல்வர், நல்லோரை நிந்திப்பர், உற்றுப்பெற்ற
தாயாரை வைவர், சதியாயிரஞ் செய்வார், சாத்திரங்கள்
ஆயார், பிறர்க்குபகாரஞ் செய்யார், தமையண்டி னர்க்கொன்
றீயா ரிருந்தென்ன போயென்னகாண் கச்சி யேகம்பனே!
 
அப்பென்றும் வெண்மையதாயினும் ஆங்கந்நிலத்தியல் பாய்த்
தப்பின்றியே குணவேற்றுமை தான்பல சார்தலினால்
செப்பில் அபக்குவம் பக்குவமாயுள்ள சீவரிலும்
இப்படி யே நிற்பன் எந்தைபிரான் கச்சியேகம்பனே!
 
நாயாய்ப் பிறந்திடில் நல்வேட்டை யாடிநயம் புரியும்
தாயார வயிற்றில் நாராய்ப் பிறந்தபின் கம்பன்னராய்க்
காயாமரமும் வறளாங் குளமும் கல்லாவு மன்ன
ஈயாமனிதரை யேன் படைத்தாய்? கச்சி யேகம்பனே!
 
ஆற்றில் கரைத்த புளியாக்கிடாமலென் னன்பை யெல்லாம்
போற்றித் திருவுளம் பற்றுமை யாபுர மூன்றெரித்துக்
கூற்றைப் பணிகொளுந் தாளுடையாய், குன்றவில்லுடையாய்
ஏற்றுக் கொடியுடையாய், இறைவா ! கச்சியேகம்பனே!
 
பெண்ணாகி வந்தொரு மாயப்பி சாசும் பிடித்திட்டென்னைக்
கண்ணால் வெருட்டி முலையால் மயக்கிக் கடிதடத்துப்
புண்ணாங் குழியிடைத் தள்ளி என்போதப்பொருள் பறிக்க
எண்ணா துனைமறந் தேனிறைவா ! கச்சியேகம்பனே!
 
நாவார வேண்டு மிதஞ்சொல்லுவார் உனைநான் பிரிந்தாற்
சாவேனென் றேயிருந்தொக்கவுண் பார்கள்கைதான் வறளின்
போய்வாரு மென்று நடுத்தலைக் கேகுட்டும் பூவையர்க்கு
ஈவார் தலைவிதியோ? இறைவா, கச்சியேகம்பனே!
 
கல்லார் சிவகதை, நல்லோர் தமக்குக் கனவிலும்மெய்
சொல்லார், பசித்தவர்க் கன்னங் கொடார், குருசொன்னபடி
நில்லார், அறத்தை நினையார், நின்நாமம் நினைவில்சற்றும்
இல்லா ரிருந்தென்? இறந்தென்? புகல், கச்சியேகம்பனே!
 
வானமு தத்தின் சுவையறி யாதவர் வன்கனியின்
தானமு தத்தின் சுவையெண்ணல் போலத் தனித்தனியே
தேனமு தத்தின் தெளிவாய ஞானஞ் சிறிதுமில்லார்க்
ஈனமு தச்சுவை நன்று அல்லவோ? கச்சியேகம்பனே!
 
ஊற்றைச் சரீரத்தை யாபாசக் கொட்டிலை யூன்பொதிந்த
பீற்றற் து ருத்தியைச் சோறிடுந் தோற்பையைப் பேசரிய
காற்றிற் பொதிந்த நிலையற்ற பாண்டத்தைக் காதல் செய்தே
யேற்றித் திரிந்துவிட் டேனிறைவா, கச்சியேகம்பனே!
 
சொல்லால் வருங்குற்றஞ் சிந்தனையால் வருந்தோடஞ்செய்த
பொல்லாத தீவினை பார்வையிற் பாவங்கள் புண்ணியநூல்
அல்லாத கேள்வியைக் கேட்டிடுந் தீங்குகள் ஆயவுமற்று
எல்லாப் பிழையும் பொறுத்தருள் வாய் கச்சியேகம்பனே!
 
முட்டற்ற மஞ்சளை யெண்ணெயிற்கூட்டி முகமினுக்கி
மெட்டிட்டுப் பொட்டிட்டுப் பித்தளையோலை விளக்கியிட்டுப்
பட்டப் பகலில் வெளிமயக் கேசெயும் பாவையர்மேல்
இட்டத்தை நீதவிர்ப்பாய் இறைவா, கச்சியேகம்பனே!
 
பிறந்துமண்மீதிற் பிணியே குடிகொண்டு பேரின்பத்தை
மறந்து சிற்றின்பத்தின் மேல்மயலாகிப் புன்மாதருக்குள்
பறந்துழன்றே தடுமாறிப்பொன் தேடியப் பாவையர்க்கீந்து
இறந்திடவோ பணித்தாய் இறைவா, கச்சியேகம்பனே!
 
பூதங்களற்றுப் பொறியற்றுச் சாரைம் புலன்களற்றுப்
பேதங்குணமற்றுப் பேராசை தானற்றுப் பின்முன்அற்றுக்
காதங்கரணங்களும் அற்ற ஆனந்தக் காட்சியிலே
ஏதங் களைந்திருப் பேனிறைவா, கச்சியேகம்பனே!
 
நல்லா யெனக்கு மனுவொன்று தந்தருள், ஞானமிலாப்
பொல்லா எனைக்கொன்று போடும்பொழுதியல் பூசைசெபஞ்
சொல்லாநற் கோயில்நியமம் பலவகைத் தோத்திரமும்
எல்லா முடிந்தபின் கொல்லுகண்டாய் கச்சியேகம்பனே!
 
சடக்கடத்துக் இரைதேடிப் பலவுயிர் தம்மைக்கொன்று
விடக்கடித்துக் கொண்டிறுமாந் திருந்து மிகமெலிந்து
படங்கடித் தின்றுழல்வார்கள் தமைக்கரம் பற்றிநமன்
இடக்கடிக்கும் பொழுதேது செய்வார்? கச்சியேகம்பனே!
 
நாறுமுடலை, நரிப்பொதி சோற்றினை, நான்தினமுஞ்
சோறுங் கறியும்நிரப்பிய பாண்டத்தைத் தோகையர்தம்
கூறும்மலமும் இரத்தமுஞ் சோருங் குழியில்விழாது
ஏறும் படியருள்வாய் இறைவா, கச்சியேகம்பனே!
 
சொக்கிட்டு அரண்மனைப் புக்குள்திருடிய துட்டர்வந்து
திக்குற்ற மன்னரைக் கேட்பதுபோல் சிவநிந்தைசெய்து
மிக்குக் குருலிங்க சங்கமம்நிந்தித்து, வீடிச்சிக்கும்
எக்குப் பெருந்தவர்க்கென் சொல்லுவேன்? கச்சியேகம்பனே!
 
விருந்தாக வந்தவர் தங்களுக் கன்னமிகக்கொடுக்கப்
பொருந்தார் வளம்பெற வாழ்வார்நின் நாமத்தைப்போற்றி நித்தம்
அருந்தா முலைப்பங்க ரெண்ணாதபாதகர் அம்புவியில்
இருந்தாவதேது? கண்டாய் இறைவா, கச்சியேகம்பனே!
 
எல்லாம் அறிந்து படித்தே யிருந்தெமக் குள்ளபடி
வல்லான் அறிந்துளன் என்றுணராது மதிமயங்கிச்
சொல்லான் மலைந்துறு சூழ்விதியின்படி துக்கித்துப்பின்
எல்லாம் சிவன்செயலே என்பார்காண் கச்சியேகம்பனே!
 
பொன்னைநினைந்து வெகுவாகத் தேடுவர், பூவையன்னாள்
தன்னைநினைந்து வெகுவாய் உருகுவார், தாரணியில்
உன்னை நினைந்திங் குனைப்பூசியாத உலுத்தரெல்லாம்
என்னையிருந்து கண்டாய் இறைவா; கச்சியேகம்பனே!
 
கடுஞ்சொலின் வம்பரை ஈனரைக்குண்டரைக் காமுகரைக்
கொடும்பாவமே செய்யும் நிர்மூடர்தம்மைக் குவலயத்துள்
நெடும்பனைபோல வளர்ந்து நல்லோர் தம்நெறியறியா
இடும்பரை என்வகுத்தாய்; இறைவா, கச்சியேகம்பனே.!
 
கொன்றேன் அனேகமுயிரை எலாம்பின்பு கொன்றுகொன்று
தின்றே அதன்றியும் தீங்குசெய்தேன் அதுதீர்கவென்றே
நின்றேன் நின்சன்னிதிக்கே அதனால் குற்றம்நீபொறுப்பாய்
என்றே யுனைநம்பினேன் இறைவா, கச்சியேகம்பனே!
 
ஊரிருந்தென்ன ? நல்லோர் இருந்தென்ன உபகாரமுள்ள
பேரிருந்தென்ன ? பெற்றதாய் இருந்தென் மடப்பெண்கொடியாள்
சீரிருந்தென்ன ? சிறப்பிருந் தென்ன இத்தேயததினில்
ஏரிருந்தென்ன ? வல்லாய் இறைவா கச்சியேகம்பனே!
 
வில்லால் அடிக்கச் செருப்பாலுதைக்க வெகுண்டொருவன்
கல்லால் எறியப் பிரம்பால் அடிக்கக் களிவண்டுகூர்ந்து
அல்லார் பொழில்தில்லை அம்பலவாணர்க்குஓர் அன்னைபிதா
இல்லாததால் அல்லவோ, இறைவா கச்சிஏகம்பனே!
 
திருவேகம்பவிருத்தம்
 
அன்னை எத்தனை எத்தனை அன்னையோ?
அப்பன் எத்தனை எத்தனை அப்பனோ?
பின்னை எத்தனை எத்தனை பெண்டீரோ?
பிள்ளை எத்தனை எத்தனை பிள்ளையோ?
முன்னை எத்தனை எத்தனை சன்மமோ?
மூடனாயடி யேனும றிந்திலேன்,
இன்ன மெத்தனை யெத்தனை சன்மமோ?
என்செய் வேன்? கச்சியேகம்ப நாதனே?

மிகச்சிறிய முட்டை

பாவூர்சத்திரம் தியாகி விஸ்வநாத தாஸ் நகரைச் சேர்ந்த முருகேசன் என்பவரது வளர்த்து வரும் கோழி மிகச் சிறிய அளவிலான முட்டை இட்டுள்ளது சாதாரண முட்டைகளை விட 3 மடங்கு சிறியதாக இருப்பதால் பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்

பூமி பூஜை

 கே.ஆர்.பி.பிரபாகரன் எம்.பி தனது தொகுதி மேம்பாட்டு நிதியின்  கீழ் பல்வேறு திட்டப்பணிகளுக்கு ரூ.1 கோடியே 11 லட்சம் ஒதுக்கீடு செய்திருந்தார்  இதில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில்  குட்டியான்குளத்தில் பாலம் மற்றும் தடுப்பு சுவர்  அமைப்பதற்கான   பூமி பூஜையை கே.ஆர்.பி.பிரபாகரன் எம்.பி துவக்கி வைத்தார்  விழாவிற்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியதலைவர் ஆர்.முருகையாபாண்டியன் தலைமை தாங்கினார்  . கலெக்டர் கருணாகரன் முன்னிலை வகித்தார்  விழாவில் திரளானோர் கலந்துகொண்டனர்

கீழப்பாவூர் செ.பிரமநாயகம்

மனதின் குரல் நிகழ்ச்சியின் சாதனை: ஓராண்டு நிறைவு குறித்து மோடி பெருமிதம்

சென்னை:

மனதின் குரல் நிகழ்ச்சியின் மூலம் நாட்டில் நடைபெற்றுள்ள மாற்றங்கள், சாதனைகள் ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி, இந்த முறை தனது மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசினார்.

செப்.20 இன்று அவர் நாட்டு மக்களுக்கு வானொலியில் ஆற்றிய உரை:

எனதருமை நாட்டு மக்களே…

உங்கள் அனைவருக்கும் என் வணக்கங்கள், இது மனதின் குரலின் 12வது நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி தொடங்கி ஓராண்டுக்காலம் நிறைவடைந்திருக்கிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 3ம் தேதியன்று முதல் மனதின் குரலை வெளிப்படுத்தக் கூடிய பேறு எனக்குக் கிட்டியது. மனதின் குரலின் ஓராண்டுக் காலத்தில் பல விஷயங்கள், இதிலிருந்து உங்களுக்கு என்ன கிடைத்தது என்பது எனக்குத் தெரியவில்லை, ஆனால் இது எனக்கு பல்வேறு விஷயங்களை அளித்திருக்கிறது என்பதை மட்டும் என்னால் உறுதியாகக் கூற முடியும். மக்களாட்சியில் மக்கள் சக்திக்கு என பெரிய மகத்துவம் இருக்கிறது. என் வாழ்கையில் அடிப்படையாக இருக்கும் ஒரு எண்ணம் இருக்கிறது, இதன் காரணமாக இந்த மக்கள் சக்தி மீது எனக்கு பெரும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால் மனதின் குரல் பல விஷயங்களைக் கற்றுக் கொடுத்திருக்கிறது, அவை அனுபவங்களாகப் பரிமளித்திருக்கின்றன, இவையெல்லாம் மக்கள் சக்தி எத்தனை மகத்தானது என்பதை நம் எல்லாருக்கும் விளங்க வைத்திருக்கிறது. நம் முன்னோர்கள், மக்கள் சக்தி மகேசன் சக்தி என்பதைத் தெளிவுபடுத்தி இருக்கிறார்கள். மனதின் குரலில் எனக்குக் கிடைத்த அனுபவங்களை வைத்து, நமது முன்னோர்களின் எண்ணத்தில், கருத்தில் பெரும் சக்தி இருக்கிறது, பெரும் உண்மை இருக்கிறது என்பதை என்னால் கூற முடியும். ஏனென்றால் இதை நானே உணர்ந்திருக்கிறேன்.

மனதின் குரலுக்காக நான் மக்களிடமிருந்து ஆலோசனைகளைப் பெற்று வந்தேன். ஒவ்வொரு முறையும் அவற்றிலிருந்து 4 அல்லது 5 ஆலோசனைகளை மட்டுமே என்னால் வெளிப்படுத்த முடிந்தது. ஆனால், இலட்சக்கணக்கான விழிப்புணர்வு உடைய குடிமக்கள் எனக்கு ஆலோசனைகளை வழங்கி வந்தார்கள். இதுவே கூட ஒரு மிகப் பெரிய சக்தி. பிரதமருக்கு ஆலோசனைகளை அளித்தோம், mygov.in இணைய தளத்தில் பதிவு செய்தோம், கடிதங்களை அனுப்பினோம், ஆனால் ஒரு முறை கூட நமக்கு வாய்ப்பு கிடைக்கவில்லையே என்ற ஏமாற்றம் அவர்களில் சிலருக்கு ஏற்பட்டிருக்க கூடும், ஆனால் நான் அப்படி கருதவில்லை. இந்த இலட்சக்கணக்கான கடிதங்கள் எனக்கு மிகப் பெரிய கல்வியை அளித்திருக்கின்றன. அரசின் பல நுணுக்கமான இடர்ப்பாடுகள் குறித்து எனக்குத் தகவல் கிடைத்தது. இந்த விஷயத்தில் நான் ஆல் இண்டியா ரேடியோவுக்கு என் பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன், அவர்கள் இந்த ஆலோசனைகளை வெறும் காகிதமாகப் பார்க்கவில்லை, இவற்றை வெகுஜனங்களின் எதிர்பார்ப்புக்களாகப் பார்த்தார்கள். இதன் பிறகு, அவர்கள் நிகழ்ச்சிகளைத் தயாரித்தார்கள். அரசின் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களை வானொலிக்கு நிகழ்ச்சிகளில் பங்கெடுக்க அழைத்தார்கள். வெகுஜனங்களின் கருத்துக்களை துறைப் பிரதிநிதிகள் முன்பாக வைத்தார்கள். சில விஷயங்களுக்கு தீர்வு காண முயற்சிகள் மேற்கொண்டார்கள். அரசின் பல்வேறு துறைகளுமே கூட இந்தக் கடிதங்களை ஆய்வு செய்தார்கள். அவற்றின் எவை கொள்கை ரீதியானவை, எவை தனி நபர் காரணமாக பிரச்சனையாக்கப்பட்டிருக்கின்றன, எவை அரசின் கவனத்திலேயே இல்லை என அடிமட்டத்திலிருந்து தொடங்கி பல விஷயங்கள் அரசின் முன்பாக வரத் தொடங்கின. நிர்வாகத்தைப் பொறுத்த மட்டில் தகவல் என்பது அடிமட்டத்திலிருந்து மேல் நோக்கியதாக இருக்க வேண்டும், வழிகாட்டுதல் என்பது மேலிருந்து கீழ் நோக்கியதாக இருக்க வேண்டும் என்பது அடிப்படைக் கோட்பாடு. தகவல்களின் ஊற்றுக்கண்ணாக மனதின் குரல் ஆகி விடும் என்று யார் நினைத்துப் பார்த்திருப்பார்கள்? ஆனால் இது அப்படித் தான் ஆகி விட்டது.

இதே போன்று மனதின் குரல் மக்கள் குரலின் வெளிப்பாடாக அமைந்தது. ஒரு முறை நான் யதார்த்தமாக selfie with daughter என்று கூறியிருந்தேன். உலகின் மூலை முடுக்கெங்கும் இது மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி, பல இலட்சம் பேர்கள் தங்கள் மகள்களோடு புகைப்படங்கள் எடுத்து அனுப்பினார்கள்; பெண் குழந்தைகளுக்கு மிகப் பெரிய கௌரவம் கிடைத்தது. அவர்கள் selfie with daughter, மகளுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட போது, அவர்களின் மகள்களின் தன்னம்பிக்கை அதிகரித்த அதே வேளையில், அவர்களுக்குள்ளே கூட ஒரு தன்முனைப்பு ஏற்பட்டது. இதைப் பார்த்தவர்களின் மனங்களில் கூட, இனி மகள்களை உதாசீனம் செய்யக் கூடாது என்ற எண்ணம் உதித்தது. ஒரு அமைதிப் புரட்சி உருவானது.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்புமுகாம்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம்
கே.ஆர்.பி.பிரபாகரன் எம்.பி.பார்வையிட்டார்
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் ,பட்டியலில் திருத்தங்கள் உள்ளிட்ட சிறப்பு முகாம் கீழப்பாவூர் ,சிவகாமிபுரம்,பட்டமுடையார்புரம் ,பெத்தநாடார் பட்டி ,கருமனூர் உள்ளிட்ட கீழப்பாவூர் ஒன்றியம் முழுவதும்  நடைபெற்ற முகாமினை நெல்லை பாராளுமன்ற உறுப்பினர் பார்வையிட்டு பணியில் உள்ள அதிகாரிகளிடம் விபரங்கள் கேட்டறிந்தார்
இதுகுறித்து கே.ஆர்.பி.பிரபாகரன் எம்.பி., கூறியதாவது
தமிழ்நாட்டில் 2016ல் 18 வயது பூர்த்தியாகும் அனைவரையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டுவருகிறது  இதையொட்டி வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் செய்திட கடந்த 15 ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்டது  ,இந்த மாதமும்  அடுத்த மாதம் 4 ஆம் தேதியும் சிறப்பு முகாம்கள் அந்தந்த வாக்குச்சாவடிகளில் நடைபெறும் அந்த  நேரத்தில் விடுபட்ட வாக்காளர்களும், இடம் மாறிய வாக்காளர்களும் 1.1.2016 அன்று 18 வயது நிரம்பக்கூடிய புதிய வாக்களர்களும் தங்கள் பெயர்களை சேர்க்க, படிவங்களை பெற்று பூர்த்தி செய்து முகாம்களில் கொடுத்தால்  பெயர்கள் சேர்க்கப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 11 ஆம் தேதி வெளியிடப்பட இருக்கிறது ,எங்கள் தலைமையின் உத்தரவின் படி  வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் மேற்கொள்ள  கட்சியினரும் மக்களை தொடர்பு கொண்டு பட்டியலை சரிபார்க்க உத்தரவிடப்பட்டுள்ளது இதையடுத்து வீடு வீடாக எங்கள் கட்சியினர் விடுபட்ட மற்றும் புதிய வாக்காளர்களை  சேர்க்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்இதுகுறித்து கட்சியினர் ஆலோசனைகள் நடத்தி வருகிறோம் இவ்வாறு அவர் கூறினார் உடன் மாவட்ட கவுன்சிலர் மு.சேர்மபாண்டியன் ,மேலவைபிரதிநிதிகள்ஜெயராமன்,கணபதி,அம்மாபேரவை சாமிநாதன் ,இளைஞரணி இருளப்பன் ,சுரேஷ் லிகோரி ,கப்பல்,இசக்கியம்மாள் உட்பட பலர் கலந்துகொண்டனர்

கீழப்பாவூர் செ.பிரமநாயகம்

 

மது, ஊழல், ஏழ்மை இல்லாத ஆட்சி அமைய உறுதி ஏற்பு: பாமக மாநாட்டு தீர்மானம்!

திருச்சி:

2016 ஆட்சி மாற்றத்திற்கான அரசியல் மாநாடு என திருச்சி பஞ்சப்பூரில் ஞாயிற்றுக் கிழமை இன்று பாட்டாளி மக்கள் கட்சி நடத்திய மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானம் :

வறுமை இல்லாத, வளமையும், செழுமையும் நிறைந்த தமிழகத்தை உருவாக்க பாட்டாளி மக்கள் கட்சியை ஆட்சியில் அமர்த்துவோம்

ஒரு நாட்டில் நிலமும், வளமும் பெருகிக் கிடந்தால் கூட அந்த நாட்டை வழி நடத்திச் செல்ல நல்ல தலைமை இல்லா விட்டால் எல்லா வளமும் வீணாகி விடும். அதே நேரத்தில் எந்த வளமும் இல்லாவிட்டால் கூட வலிமையான தலைமை இருந்தால் நாட்டை அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றிச் செல்ல முடியும். தலைமை நல்லதாக இல்லாததுடன் நாட்டை சுரண்டுவதாகவும் அமைந்து விட்டால் அதை விட அந்த நாட்டுக்கு கேடு வேறு எதுவும் இருக்க முடியாது. அப்படிப்பட்டதொரு அவல நிலை தான் தமிழகத்தில் நிலவி வருகிறது. தமிழகத்தின் வீழ்ச்சிக்கு இது தான் அடிப்படைக் காரணம் ஆகும்.

கல்வி, விவசாயம், தொழில் துறை ஆகிய மூன்று துறைகள் தான் ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கு வழி வகுப்பவை ஆகும். ஆனால், தமிழகத்தை 50 ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய இரு கட்சிகளுமே இந்த துறைகளின் வளர்ச்சிக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக மாநிலத்தையும், மக்களையும் சீரழிக்கும் விஷயங்களில் மட்டுமே அளவுக்கு அதிகமான ஆர்வம் காட்டி வருகின்றன என்பது வருத்தம் அளிக்கும் விஷயமாகும்.

திருச்சி, கரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட காவிரி பாசன மாவட்டங்களில் விவசாயமே முதன்மை தொழிலாக இருந்து வந்தது. ஆனால், இன்று நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. காரணம் பாசன ஆதாரங்கள் இல்லாததால் ஒரு காலத்தில் பால்வனமாக இருந்த காவிரி பாசன மாவட்டங்கள் பாலைவனமாக மாறிவிட்டது தான். எப்போதும் முப்போகம் விளையும் காவிரி பாசன மாவட்டங்களில் ஒரு போக சம்பா விளைவதே அதிசயமாக மாறி விட்டது. நெல் கதிர்கள் நிறைந்திருந்த வயல்கள் எல்லாம் கருங்கற்களால் பாகம் பிரிக்கப்பட்டு வீட்டு மனைகளாகிவிட்டன. இதற்கெல்லாம் காரணம் வற்றாநதியாக ஓடிக்கொண்டிருந்த காவிரி இன்று வாய்க்கால் அளவுக்கு கூட தண்ணீர் ஓடாத மண் பாதையாக மாறி விட்டது தான். தமிழகத்திற்கு காவிரியில் ஆண்டுக்கு 192 டி.எம்.சி. தண்ணீர் விட வேண்டும் என்பது நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு. இத்தீர்ப்புக்கு செயல்வடிவம் கொடுக்கப்பட்டிருந்தால் காவிரி கரை புரண்டு ஓடியிருக்கும்; காவிரி பாசன மாவட்ட விவசாயிகளின் முகங்களில் களை நிறைந்திருக்கும். ஆனால், இறுதித் தீர்ப்பு வெளியாகி 4 ஆண்டுகள் ஆட்சியிலிருந்த முந்தைய தி.மு.க. அரசு, இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிடக் கூட நடவடிக்கை எடுக்கவில்லை. அதி.மு.க. அரசு பதவியேற்று விரைவில் ஐந்தாண்டுகள் முடிவடையவுள்ள நிலையில், இறுதித் தீர்ப்பை நிறைவேற்றுவதற்காக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கச் செய்வதற்கு கடிதங்களை எழுதியதைத் தவிர துரும்பைக்கூட கிள்ளிப் போடவில்லை.

குப்புறத் தள்ளிய குதிரை குழியையும் பறித்த கதையாக காவிரி பாசன மாவட்ட விவசாயிகளுக்கு எந்த உதவியையும் செய்ய அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் உபத்திரவங்களை செய்வதற்கு மட்டும் தவறவில்லை. முந்தைய தி.மு.க. ஆட்சியின் போது, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மீத்தேன் வாயு எடுப்பதற்காக கிரேட் ஈஸ்ட்ரன் எனர்ஜி கார்ப்பரேஷன் லிமிடெட் (Great Eastren Energy Corporation Limited) என்ற நிறுவனத்திற்கு காவிரிக் கரையோரப்பகுதிகள் தாரை வார்க்கப்பட்டன. மக்கள் போராட்டத்திற்கு பிறகு அம்முயற்சி முறியடிக்கப்பட்ட நிலையில், அதே ஆபத்து இப்போது ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் வடிவில் வந்திருக்கிறது. இந்த ஆபத்தை முறியடிக்க அ.தி.மு.க. அரசு தயாராக இல்லை. இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் காவிரி பாசன மாவட்டங்களும், கடலூர், அரியலூர் மாவட்டங்களும் பாலைவனமாக மாறிவிடும் ஆபத்து இருக்கிறது. ஆனால், கடைசி நேர ஊழல் வேட்டையில் முழு வீச்சில் ஈடுபட்டிருக்கும் ஆட்சியாளர்களுக்கு உழவர்களின் பிரச்சினை காதிலும் விழவில்லை; கண்களிலும் படவில்லை.

தமிழகத்தின் ஒட்டுமொத்த தொழில் உற்பத்தியில் 60 விழுக்காடு சென்னை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளிலும், 15% கோவை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளிலும் நடைபெறுகிறது. திருச்சி மண்டலத்தைப் பொறுத்தவரை ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்ட பொன்மலை தொடர்வண்டி பணிமனை, காமராசர் ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட திருச்சி பாரத மிகு மின் நிறுவனம் (BHEL) ஆகியவற்றைத் தவிர படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் எந்த தொழிற்சாலையும் இந்தப் பகுதியில் அமைக்கப்படவில்லை. 86 லட்சம் இளைஞர்கள் படித்து விட்டு அரசு வேலைக்காக வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருக்கும் போதிலும் அவர்களின் கனவை நனவாக்க குறைந்தபட்ச நகர்வுகளைக் கூட மேற்கொள்ள ஆளும் கட்சியும், ஆண்ட கட்சியும் தயாராக இல்லை.

கடந்த 50 ஆண்டுகளில் நடந்தவை எதுவும் நல்லதாக இல்லாத நிலையில், இனி நடப்பவையாவது நல்லதாக இருக்க வேண்டும் என்பதால் தான், தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்குடன் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களை முதலமைச்சர் பதவிக்கான வேட்பாளராக முன்னிறுத்தி வரும் 2016 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை பாட்டாளி மக்கள் கட்சி எதிர்கொள்ளவிருக்கிறது. 50 ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்ட கட்சிகளுக்கு தங்களை வளப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருந்ததால், தமிழகத்தை வளப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் வரவில்லை; அதற்கான அரசியல் துணிச்சலும் இல்லை. அதன் விளைவு தான் முதன்மை மாநிலமாக உருவெடுத்திருக்க வேண்டிய தமிழகம் பொருளாதார வளர்ச்சியில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது.
இந்த நிலையை மாற்றுவதற்கான வலிமையும், திறமையும் பா.ம.க.வுக்கு மட்டுமே உண்டு….

வலிவான தலைமை
தெளிவான பொருளாதாரத் திட்டம்
ஒளிமயமான, அதிக பாதுகாப்பான எதிர்காலம் என்பதே பா.ம.க.வின் லட்சியம் -வாக்குறுதியாகும்.
எனவே,
ஒரு சொட்டு மது இல்லாத தமிழகம்,
ஒரு பைசா ஊழல் இல்லாத தமிழகம்,
வேளாண் செழுமை நிறைந்த தமிழகம்,
தொழில் வளம் மிகுந்த தமிழகம்,
வேலைவாய்ப்பு நிறைந்த தமிழகம்,
வறுமை இல்லாத தமிழகம்,
அமைதியும், மகிழ்ச்சியும் நிறைந்த தமிழகம் அமைக்க மருத்துவர் அன்புமணி இராமதாசு தலைமையில் பாட்டாளி மக்கள் கட்சியின் ஆட்சி அமைக்க பா.ம.க.வின் மத்திய மண்டல மாநாடு உறுதி ஏற்கிறது.

ஸ்ரீ வேணுகோபாலசுவாமி கோவில்

கீழப்பாவூர் ஸ்ரீ வேணுகோபால கிருஷ்ணசுவாமி கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையை யொட்டி பெருமாளுக்கு விசேஷ பூஜை ,அபிஷேகம்,நாம சங்கீர்த்தனம் சயனசேவை ,மற்றும்  கருட சேவை  நடைபெற்றது 

பூஜைகானஏற்பாடுகளை அர்ச்சகர் ரவி பட்டாச்சாரி தலைமையில் பக்தர்கள் செய்திருந்தனர்

தற்பெருமை கொள்தல் தற்கொலைக்குச் சமம் !

sri krishna arjuna
sri krishna arjuna

தர்மோ ரக்ஷதி ரக்ஷித:’ என்பது ஆன்றோர் வாக்கு. தர்மத்தை நாம் கடைப்பிடித்துக் காத்தால், தர்மம் நம்மைக் காக்கும் என்பது அனுபவ உண்மை. இப்படி தர்மத்தைப் போதிக்க வந்தவையே இதிகாசங்கள். இரு கண்களான அவை நமக்குக் காட்டாத தர்ம நெறியா…?

மனிதன் சுக துக்கங்களை தனக்குத் தானே தேடிக் கொள்கிறான். ஒருவரின் சொல்லும் செயலுமே அவரை சுக துக்கங்களின்பால் அமிழ்த்துகிறது என்பது அனுபவம். ஆனால் சிலர் தம் தகுதியை மீறி சுய தம்பட்டம் அடிப்பதும், தற்பெருமை பேசித் திரிவதும், சாயம் வெளுத்தால் மனதை மீறிய சுமை அழுத்தி மாய்வதும் சக மனிதர் வாழ்வில் காண்கிறோம். இந்த உண்மையை விளக்க மகாபாரதத்தில் ஒரு சூழ்நிலைக் கதையை ஆன்றோர் எடுத்துக் காட்டியிருக்கிறார்கள்.

குருசேக்ஷத்ரம். பிரமாண்டமான போர்க் களம் அது. நடைபெறுவதும் உலகு கண்டிராத உக்கிரமான பாரதப் போர். உரிமைப் போர்தான் என்றாலும், சகோதரர்களே தங்களுக்குள் சண்டையிட்டார்கள். மண்ணுரிமை சார்ந்த போர்… ஆனாலும் சுய கெüரவம் கிளர்ந்தெழ, மதிப்புரிமையும் முன்னால் நின்றது.

அன்றைய உக்கிரப் போரின் கதாநாயகன் மாவீரன் கர்ணன். கள்ளம் அற்ற உள்ளத்தினன் கர்ணன், நண்பன் துரியோதனனிடம் கொடுத்த வாக்கினால் களம் கண்டான். பாண்டவரை வீழ்த்திக் காட்டுவேன் என்பது அவன் செய்த சங்கல்பம். அந்த எண்ணத்தால் உக்கிரப் போர் செய்தான்.

கர்ணனின் முன் முதலில் வந்தவன் தர்மபுத்திரன். பாண்டவரில் மூத்தவன். சேனையின் தலைவன் என்பதால் அவனை வீழ்த்துவதில் கவனம் செலுத்தினான். கர்ணனின் வில்லுக்கு முன் தர்மனின் போர்த்திறம் பலம் குன்றியது. கர்ணன் அம்புமழையில் தர்மன் நினைவிழந்தான்.

பதறியது கண்ணன் உள்ளம். “பாண்டவர்கள் என் உயிர். அவர்களின் உயிரைக் காப்பது என் விரதம்’ என்று சொல்லியிருந்தான் கண்ணன். இப்போது தர்மனின் உயிரைக் காக்க வேண்டுமே என்ன செய்வது? கர்ணனோ கண்கள் சிவக்க வெறித் தாக்குதல் தொடுக்கிறான். சிந்தித்தான் கண்ணன். கர்ணனைத் தாக்குமாறு அர்ஜுனனுக்கு ஆணையிட்டான். போர்க் களத்தில் மயங்கிச் சரிந்த தர்மனை அங்கிருந்து வெளியேற்றினான். முதலுதவிக்கு ஏற்பாடாயிற்று.

கர்ணனின் மீது அம்புமழை பொழிந்தான் என்றாலும், அண்ணன் குறித்த கவலையில் கொதித்தது அர்ஜுனன் மனம். அவனது இயல்பை அறிந்தவன் கண்ணன். ஆதலால், பீமனை கர்ணனோடு மோதவிட்டு, அர்ஜுனனை அங்கிருந்து அழைத்து வந்தான்.
பாசறையின் ஓர் ஓரம். தர்மனுக்கு சிகிச்சை நடந்தது. நினைவு மீண்டு, அங்கே பார்த்தன் அடி எடுத்து வைப்பதை ஆவலோடு பார்த்தான் தர்மன். தன்னை விலக்கிவிட்டு கர்ணனோடு போர் புரிந்தவன் என்பது வரை தருமனுக்கு நினைவு இருந்தது. எனவே, அவன் கர்ணனைக் கொன்றுவிட்டு இங்கே வந்திருப்பான் என்று எண்ணினான் தர்மன். அவன் உள்ளம் மகிழ்ச்சியில் திளைத்தது. “கர்ணனைக் கொன்று வந்த உன்னை வரவேற்கிறேன்’ என்று தர்மன் சொன்னபோது, பார்த்தனால் பதில் பேச முடியவில்லை. இடையில் புகுந்த கண்ணன், “தர்மத்தை நாடும் உன் வாக்கு ஒருபோதும் பொய்க்காது. நிச்சயம் அவன் கர்ணனை வீழ்த்தி வருவான்’ என்றவுடன், தர்மனுக்கு இருந்த மகிழ்ச்சி நொடியில் காணாமல் போனது.

தன்னுடலின் குருதிப் பெருக்கால் சோர்வு கண்டிருந்திருந்த தர்மன், துயரால் புலம்பத் தொடங்கினான். “காண்டீவி ஸவ்யஸôசி என்றெல்லாம் புகழ்கிறார்களே இந்த உலகத்தார்… எல்லாம் பொய்தானோ! உன் கையிலுள்ள காண்டீபமும் அலங்காரப் பொருளோ! கர்ணனை முடிக்காத உன் காண்டீபத்தைத் தூர எறிந்துவிடு…’ என்று இகழ்ந்தான் தர்மன்.

தந்தைக்குச் சமமானவன் அண்ணன் என்ற தர்மத்தைக் கடைப்பிடிக்கும் அர்ஜுனனுக்கு, அவன் தன்னை இகழ்ந்து பேசியதில் வருத்தம் இல்லை. ஆனால், காண்டீபத்தை இகழ்ந்ததில் அவன் கோபம் மிகக் கொண்டான். காண்டீபத்தை இகழ்பவரைக் கொல்வேன் என்பது அர்ஜுனன் செய்த சத்தியம். எனவே கோபம் தலைக்கேற, கத்தியை உருவியபடி தர்மனைக் கொல்லப் பாய்ந்தான்.

விருட்டெனப் பாய்ந்து, அவன் கத்தியைப் பிடுங்கி எறிந்தான் கண்ணன். “அர்ஜுனா, என்ன செய்யத் துணிந்தாய்? அண்ணனைக் கொல்வது அதர்மம். அதிலும் ஒரு தர்மாத்மாவாகத் திகழ்பவனைக் கொல்வது தகாது’ என்றான். அர்ஜுனனோ, தன் சபதத்தைக் கூறி, “காண்டீபத்தை இகழ்ந்த தர்மனைக் கொல்லாமல் விட்டால், எனது தர்மத்திலிருந்து மீறுவதாகுமே’ என்றான்.

தர்ம வழி நடப்பவரைத் தடுத்தல் அதர்மம் என்பதை அறிந்திருந்த கண்ணன், அர்ஜுனனுக்கு ஒரு யோசனை சொன்னான். “”அர்ஜுனா, மிகவும் உயர்வாகப் போற்றும் ஒருவரை இகழ்ந்து பேசினாலும், ஒருமையில் திட்டினாலும் அவரைக் கொலை செய்வதற்குச் சமம் என்பர். அதனால் நீ உன் தமையனை திட்டித் தீர்த்து, உன் தர்மத்தைக் காத்துக் கொள்” என்றான்.

அதை ஏற்ற அர்ஜுனன், தர்மனைத் திட்டித் தீர்த்தான். “”கர்ணன் ஒருவன் அடித்த அம்புக்குத் தாங்காமல் இப்படி சுருண்டு கிடக்கிறாயே, உன்னைப் போய் போர்க்களத்தில் முன்னிறுத்தி யுத்தம் செய்கிறோமே. நீயெல்லாம் ஒரு வீரனா?” என்று இகழ்ந்தான். தர்மனுக்கு கண்களில் தாரையாக நீர் பெருக்கெடுத்தது.

அடுத்த நொடி, கீழே கிடந்த கத்தியை மீண்டும் எடுத்து, தன் கழுத்தைத் தானே அறுத்துக் கொள்ள முயன்றான் அர்ஜுனன். இப்போதும் கண்ணன் பாய்ந்து, கத்தியைப் பிடுங்கி தூர எறிந்தான்.

“அர்ஜுனா, என்ன செய்கிறாய் தற்கொலை செய்துகொள்வது மகாபாபம் என்பது தெரியாதா?” என்று கேட்டான் கண்ணன்.

“கண்ணா, உனக்குத் தெரியாததல்ல. என் முன்னால், என் அண்ணன் தர்மனை எவனாவது இகழ்ந்தால் அவனைக் கொல்வேன் என்று சபதம் செய்திருந்தேன். இப்போது நானே அவனை இகழ்ந்துவிட்டேன் அதனால் என்னை நானே மாய்த்துக் கொள்வதே என் தர்மத்துக்கு உகந்தது” என்றான் அர்ஜுனன்.

பாண்டவர் ஐவரையும் காப்பேன் என்று சபதம் செய்த கண்ணனுக்கு, அர்ஜுனனைத் தடுத்தாக வேண்டிய நிலை. இப்போது இன்னொரு உபாயம் சொன்னான் கண்ணன்.

“தற்கொலைக்குச் சமமான ஒரு செயலும் உண்டு. அது தற்பெருமை பேசுவது. எனவே நீ உன்னைப் பற்றியே புகழ்ந்து பேசி, உனது சபதத்தை நிறைவேற்று” என்றான்.

அதை ஏற்ற அர்ஜுனன், “காண்டவ வனத்தை தீக்கிரையாக்கி, போருக்கு வந்த தேவேந்திரனை ஒருவனாகவே எதிர்த்து வெற்றி கண்டேன். வேடன் உருவில் வந்த கயிலைநாதனை வென்றேன். இந்திரலோகம் சென்று வில்வித்தை கற்று, இந்திரனின் பகைவர்களை வென்றேன். என்னைப் போன்ற வில்லாளி உண்டோ” என்று பலவாறாக தன்னையே புகழ்ந்து பேசி, தான் தற்கொலை செய்வதற்கு ஈடான ஒன்றை நிறைவேற்றிக் கொண்டான்.


பெரியோரை இகழ்வது தகாது என்றும், தற்பெருமை பேசுவது தற்கொலைக்குச் சமம் என்றும் வழி காட்டிய கண்ணன், அர்ஜுனனுக்கு மட்டுமா இந்த உபாயத்தைக் காட்டினான்..!?

பகுதி நேர நியாயவிலைக் கடை திறப்பு

கீழப்பாவூர் யூனியன் கல்லூரணி பஞ்சாயத்து மலையராமபுரத்தில் பகுதிநேர நியாயவிலைக்கடை திறப்பு நடைபெற்றது கடையினை கீழப்பாவூர் யூனியன் சேர்மன் செல்வமோகன்தாஸ் பாண்டியன் திறந்து வைத்து முதல் விற்பனையை துவக்கி வைத்தார்  உடன் பஞ்சாயத்து தலைவர் இராமசாமி ,மாவட்ட கவுன்சிலர் மு.சேர்மபாண்டியன் ,தாசில்தார் நடராஜன் ,கூட்டுறவு சங்க துணைத்தலைவர் ஐவராஜா , உட்பட பலர் கலந்துகொண்டார்

கீழப்பாவூர் செ.பிரமநாயகம்

சின்னஞ்சிறு கிளியே….

சின்னஞ்சிறு கிளியே… பாரதியின் பாடல்

பாடியவர்: புவனகிரி ஜி.விஷ்ணுப்ரியா 

{YouTube}-yWOrfEUP2c{/YouTube}