Home Blog Page 6072

மணிரத்னம் படங்களில் ‘தாலி’

o kadhal kanmani- poster1 இயக்குனர் மணிரத்னம் படங்களில் தாலி சென்டிமென்ட் எந்த அளவுக்கு பயன்படுத்தப் பட்டுள்ளது என்பது, தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது. பேஸ்புக், வாட்ஸ் அப் ஆகியவற்றில் இந்த விஷயம், முனைவர் பட்ட ஆய்வுக்கு எடுத்துக் கொடுக்கப்படும் தலைப்பைப் போல், தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகின்றன. மணிரத்னம் தனது படங்களின் கதைகளில் எவ்வாறு ‘தாலி’யைப் புகுத்தியிருக்கிறார். இதோ பட்டியல்… தாலி கட்டி அவரவர் வீட்டில் வாழ்ந்தால் – அலைபாயுதே தாலி கட்டாமல் ஊருக்கு தெரிய வாழ்ந்தால் – ஓ காதல் கண்மணி தாலி கட்டியும் வாழாமல் இருந்தால் – மௌன ராகம் இன்னொருவன் தாலி கட்டிய பெண்ணை கடத்தி கொண்டு போனால் -ராவணன் தாலி கட்டலாமா வேண்டாமா என சிந்தித்தால் – கடல் ஸ்கூல் பொண்ணுக்கு தாலி கட்டினால் – நாயகன் ஒரு மனைவிக்கு தாலி கட்டிவிட்டு இரு மனைவியுடன் சேர்ந்து வாழ்ந்தால் – அக்னி நட்சத்திரம் ஒரு பொண்ணுக்கு இரண்டு பேர் தாலி கட்ட நினைத்தால் – திருடா திருடா தாலி கட்டிவிட்டு புருஷனுக்காக போராடினால் – ரோஜா இன்னொருத்தர் மனைவிக்கு தாலி கட்டினால் – தளபதி இது மணிரத்னம் இயக்கும் படங்களில் இழையோடும் கதைக் கருவாகப் பார்க்கப் படுகிறது. ஆக, மெய்யாலுமே எவரேனும் முனைவர் பட்ட ஆய்வுக்கு தலைப்பு தேடினால்… இந்தத் தலைப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்…. #ஜஸ்ட்ஃபார்ஃபன்

அநாகரிகச் செயல்கள் அனுமதிக்கத் தக்கதல்ல – ஜீவா

காறித் துப்பிய ஜீவா – கண்டுகொள்ளாத ஈ.வெ.ரா: 1957 ஆம் வருடம் டிசம்பர் மாதம் கடைசி வாரத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலப் பிரதிநிதிகளின் சிறப்பு மாநாடு திருச்சியில் நடந்தது. அந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விளக்கி, பின்னர் நடந்த பொதுக்கூட்டத்தில் தலைவர் ஜீவா அவர்கள் பேசியது: தோழர்களே! இனி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட மற்றொரு முக்கியத் தீர்மானமான ‘ஜாதி ஒழிப்பும் திராவிடக் கழகப் போராட்டமும் ‘ என்பதைப் பற்றிய தீர்மானத்தை உங்களிடம் சற்று விளக்கிச் சொல்ல விரும்புகிறேன். இந்தப் போராட்டமுறை சரியா, தவறா என்பதைப்பற்றி பின்னால் கவனிப்போம். முதலில் இந்தப் போராட்டத்தின் லட்சியம் என்ன என்பதைக் கவனிக்க வேண்டும். ஜாதி ஒழிப்புக்காகவே இந்தப் போராட்டத்தை நடத்துவதாக ஈ.வே.ரா. கூறுகிறார்.ஜாதி ஒழிப்பு என்ற பெயரால் நடத்தப்படும் இந்தப் போராட்டத்தை அழுத்தமாகக் கண்டிக்கிறேன் இனி ஈவேரா நடத்தும் ஜாதி ஒழிப்பைப் பற்றி சில செய்திகளை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். காங்கிரஸிலிருந்து வெளியேறிய ஈவேரா ‘காங்கிரஸில் பார்ப்பனர் ஆதிக்கம் ஒழிய வேண்டும் ‘ என்றும், அப்பால் ‘பார்ப்பனர் ஆதிக்கம் ஒழிய வேண்டும் ‘ என்றும், அப்பால் ‘பார்ப்பனீயம் ஒழிய வேண்டும் ‘ என்றும், அப்பால் ‘வருணாசிரம தர்மம் ஒழிய வேண்டும் ‘ என்றும், அப்பால் ‘சனாதன தர்மம் ஒழிய வேண்டும் ‘ என்றும், அப்பால் ‘இந்துமதம் ஒழிய வேண்டும் ‘ என்றும், அப்பால் ‘மதங்களே ஒழிய வேண்டும் ‘ என்றும் போகப்போக பிரச்சாரம் செய்து கொண்டே போனார்.(சிரிப்பு) நெடுகலும் அவருடைய போக்கு இப்படித்தான். விரும்பினால் ராமமூர்த்தியை ஆதரிப்பார், ராஜகோபால ஆச்சாரியை ஆதரிப்பார், மாவூர் சர்மாவை ஆதரிப்பார். இது ஒரு சித்தம். வேறொரு பித்தம் கிளம்பினால் அக்ரகாரத்தை ஒரு கை பார்ப்பேன் என்று ஆவேசம் காட்டுவார். நேற்று நடந்த பொதுத் தேர்தலில் காஞ்சிபுரம் டாக்டர் சீனிவாசனையும், சீரங்கம் வாசுதேவனையும், மதுரை சங்கரனையும் ஆதரித்தார். அதற்காக காரணம் சொன்னார்.(சிரிப்பு) இன்று ஜாதி ஒழிப்பு சாக்கில் பிராமணர் மீது பாய்கிறார். இத்றகு ஒரு காரணம் சொல்கிறார். கடந்த 30 ஆண்டுகளாக அவர் ஜாதியை எப்படி ஒழித்து வந்திருக்கிறார், அதில் எவ்வளவு தூரம் வெற்றி பெற்றிருக்கிறார் என்பதைத் தமிழ்நாடு நன்கறியும். அவர் காட்டிய வழியால் தமிழ்நாட்டில் ஜாதியவெறியும் ஜாதிப்பூசலும் ஒழியவில்லை என்பது மட்டுமல்ல, மாறாக, பெருகி வந்திருக்கிறது என்பதே என்னுடைய பணிவான கருத்து. அன்பர்களே! ஜாதி ஒழிப்புக் கொள்கையைப் பொறுத்தமட்டில் ஒரு திட்டவட்டமான கருத்து இல்லாதவர் ஈவேரா என்பதை உங்களுக்கு எடுத்துக்காட்டவே இதுவரை நான் சில கருத்துக்களைச் சொன்னேன். இனி இன்று அவர் நடத்தும் போராட்ட முறைகளை ஒவ்வொன்றாகக் கவனிப்போம். காவிரி ஆற்றங்கரையில் நாலைந்து பார்ப்பனர்கள் – இந்த நாட்டில் ஜாதி பிறந்ததற்கும், அது வளர்ந்ததற்கும், அதன் பேரால் நடைபெறும் பலப்பல கொடுமைகளுக்கும் நேருக்குநேர் ஒரு தொடர்பும் இல்லாத நிரபராதிகள், தங்கள் வழக்கப்படி குளித்து பூசை செய்து கொண்டிருந்தார்கள். சிலர் அவர்கள் வைத்திருந்த சொம்பைத் தூக்கி காவிரி ஆற்றில் எறிந்தார்கள்; அவர்களுடைய பூணூலை அறுத்தார்கள்; அவர்களுடைய உச்சிக்குடுமியைக் கத்தரித்தார்கள்; ஓட ஓடத் துரத்தினார்கள். ஈவேராவைப் பின்பற்றுகிற திகவினர் எடுத்த ஜாதி ஒழிப்பு நடவடிக்கை இது. சொம்பைத் தூக்கி காவிரி ஆற்றில் எறிந்தால் ஜாதி ஒழிந்து விடுமா ? (ஒரே சிரிப்பு) காவிரி ஆற்றுவெள்ளம் ஒரு தனிமனிதனுடைய சொம்பை அடித்துக் கொண்டு போகிறபொழுதே, ஆயிரம் காலமாக சமுதாயத்தில் வேரூன்றிக் கிடக்கும் ஜாதி முறையையும் அடித்துக் கொண்டு போகும் என்று நினைக்கிறார்களா ? (சிரிப்பு) – நாலைந்து ஆட்களுடைய உச்சிக்குடுமியையும் பூணூலையும் அறுத்தால் எந்த ஜாதியை எப்படி ஒழித்ததாக அர்த்தம் ?(சிரிப்பு) குடுமியைக் கத்தரித்தால் ஜாதி போய்விடுமா ? குருட்டு ஆவேசத்தால் பார்ப்பன ஓட்டல்களில் கல்லடி நடத்தினால் ஜாதிமுறையைக் கல்லால் அடித்ததாகுமா ? (சிரிப்பு  ஓட்டல்களில் உள்ள ட்யூப்லைட்களை உடைத்து நொறுக்கினால் சாதிமுறையை உடைத்து நொறுக்கி விட்டதாகக் கருதுகிறார்களா ? (சிரிப்பு) பூணூலையும், உச்சிக்குடுமியையும் அறுப்பது என்று வந்தால், நாடு முழுவதிலும் உள்ள பூணூல்களையும், உச்சிக்குடுமிகளையும் ஒரு சிலர் அறுக்க அனுமதிப்பார்களா ? அல்லது தாக்குதலுக்கு பயந்து ஓடுவார்களா ? எதிர்த்துத் தற்காப்பிற்குத் துணியமாட்டார்களா ? இப்படிச் சிலர் மனம் போன போக்கில் மற்றவர்களைத் தாக்கும்போது பக்கத்தில் இருப்போர்கள் எல்லாம் பார்த்துக் கொண்டிருப்பார்களா ? அராஜகக் குழப்பத்தின் நடுவிலன்றி, தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்கின்ற தாறுமாறு பிடித்தாட்டும் சூழ்நிலையிலன்றி, சில கட்டுத்திட்டத்தில் இயங்கும் எந்தச் சர்க்காரும் இதை அனுமதித்துக் கொண்டிருப்பார்களா ? எந்த வகையாலும் இந்தகைய அநாகரிகச் செயல்கள் அனுமதிக்கத் தக்கதல்ல என்பதை என்னோடு நீங்களும் ஒப்புக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

  • கட்டுரை: நா.சடகோபன்

தி.க.வினரா? நகை திருட்டு கும்பலா?: பூணூல் அறுப்பு விவகாரத்தில் பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி

சென்னை: வயதான அர்ச்சகர்களின் பூணூலை 6 பேர் கொண்ட கும்பல் அறுத்து தாக்கி காயப்படுத்திச் சென்ற சம்பவம் குறித்து கருத்துதெரிவித்துள்ள மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், அவர்கள் தி.க.வினரா அல்லது நகை திருட்டு கும்பலா  என்ற சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை… சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த 80 வயது முதியவர் திரு.விஸ்வநாத குருக்கள் அவர்கள் கோவிலில் பூஜையை முடித்துவிட்டு இரவு வீடு திரும்பும்போது திராவிடர் கழகத்தைச் சேர்ந்த சிலர் இரு சக்கர வாகனத்தில் வந்து முதியவரின் கன்னத்தில் அறைந்து அவரது கையை முறித்து அவர் அணிந்திருந்த பூணூலை அறுத்து அவமானபடுத்தி உள்ளனர். அவரது வேட்டியையும் கழற்றி எறிந்து கோழைத்தனமான செயலை செய்துவிட்டு துணிச்சலுக்கு பெயர் பெற்ற பெரியார் அவர்களின் பெயரை முழங்கிவிட்டு சென்றுள்ளனர். இந்த நபர்கள் திராவிட கழகத்தை சேர்ந்தவர்களா அல்லது நகை பறிக்கும் திருட்டுக் கும்பலை சேர்ந்தவர்களா என்று சந்தேகம் இருப்பதாக அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள்.

கொள்கையோடு கொள்கை மோத வேண்டிய தருணத்தில் கொலைவெறித் தாக்குதலை முதியவர் மீது காட்டி இருக்கிற கோழைத்தனமான நபர்களை அந்த இயக்கம் எப்படி ஏற்றுக்கொள்கிறது என்று எனக்கு தெரியவில்லை. இது போன்ற சம்பவங்கள் தொடரும் போது அது மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் புரிந்துக்கொண்டால் நல்லது என்று கருதுகிறேன். இது மாதிரியான தவறுகள் மேலும் நடக்காத வண்ணம் அந்த இயக்கங்களை சேர்ந்தவர்கள் கவனம் செலுத்துவார்கள் என்று நம்புகிறேன். முதியோர் கொலைவெறித் தாக்குதல் நடத்தியவர்கள் மீது தமிழகக் காவல்துறை உரிய நடவடிக்கை எடுப்பதோடு, அவ்வியக்கத்தின் செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்

ஐ ஆம் வெயிடிங்… விஜய் ஸ்டைலில் கலக்கும் அனிருத்

vijay anirudh கொலவேறி பாடலுக்கு பிறகு அனிருத்திற்கு பெரிய பிரேக் கொடுத்த படம் விஜய்யின் கத்தி. அதுவரை தனுஷ், சிவகார்த்திகேயன் படங்களுக்கு மட்டும் இசையமைத்து வந்த அனிருத்திற்கு பல பெரிய நடிகர்களின் படமும் கிடைத்ததுள்ளது. விக்ரம், அஜித், சூர்யா ஆகியோரின் அடுத்த படங்களுக்கு இவர்தான் இசை. அதோடு பாலிவுட் படத்திற்கும் அனிருத் இசையமைத்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் அனிருத் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கத்தி படத்தில் விஜய் பேசும் ஐ ஆம் வெயிடிங் டயலாக்கை விஜய்யை போல் சிரித்துக்கொண்டே கோபத்துடன் கத்துவது போன்று டப்பிங் கொடுத்துள்ளார். மேலும் இந்த வசனத்திற்கு நான் அடிமை என்று கூறியுள்ளார் அனிருத். இது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

அரியானா அரசின் அந்தஸ்தை மறுத்தார் பாபா ராம்தேவ்

அரியானா அரசால் வழங்கப்படுவதாக அறிவித்த கேபினட் அமைச்சருக்கு உண்டான அந்தஸ்தை தனக்கு வழங்க வேண்டாம் என யோகா குரு பாபா ராம்தேவ் மறுத்துள்ளார். கடந்த ஏப்ரல் 13ல் அரியானா மாநில அரசு பாபா ராம்தேவுக்கு கேபினட் அமைச்சருக்கான அந்தஸ்து வழங்கப்படும் என்றும், பாபா ராம்தேவ் யோகா மற்றும் ஆயுர்வேதத்தை ஊக்குவிக்க மாநில அரசின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் அறிவித்திருந்தது. இதனை மாநில கல்வித் துறை அமைச்சர் ராம்விலாஸ் சர்மா அறிவித்திருந்தார். இந்நிலையில், அரியானா அரசு இன்று ராம்தேவை கௌரவிப்பதற்காக பஞ்ச்குலா இந்தரதனுஷ் ஸ்டேடியத்தில் ஒரு விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ராஜபட்ச வீட்டுக்குச் சென்று விசாரணை நடத்த ஆணைக்குழுத் தலைவர் சம்மதம்

இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபட்சவின் இருப்பிடத்துக்கே சென்று விசாரணை நடத்த, லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக் குழுத் தலைவர் ஜெகத் பாலபத்தபென்டி சம்மதம் தெரிவித்துள்ளதாக, இலங்கை பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார். மகிந்த ராஜபட்சவை ஏப்.24ஆம் நாள் விசாரணைக்கு ஆஜராகும்படி, லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக் குழு சம்மன் அனுப்பியது. இது, கொழும்பு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று இலங்கை நாடாளுமன்றத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கோஷம் இட்டனர். இதனிடையே லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக் குழுத் தலைவர் பாலபத்தபென்டியிடம் சபாநாயகர் நேற்று பேசினார். அப்போது, மகிந்த ராஜபட்சவின் இருப்பிடத்துக்கே சென்று அவரிடம் வாக்குமூலம் பெற ஆணைக் குழுத் தலைவர் பாலபத்தபென்டி சம்மதம் தெரிவித்தாராம். இருப்பினும், இது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இதுகுறித்து இலங்கை சபாநாயகர் இன்று அறிவிப்பார் எனத் தெரிகிறது.

மயிலாப்பூரில் வயதான குருக்களின் பூணூலை அறுத்த 6 ‘காட்டுமிராண்டிகள்’ கைது

viswanatha-gurukkal-complaint-policeசென்னை: சென்னையில், மயிலாப்பூர், மேற்கு மாம்பலம் ஆகிய இடங்களில் வயதான குருக்களிடமும் பெரியவரிடமும் வீரம் காட்டி பூணூலை அறுத்துச் சென்ற காட்டுமிராண்டிகள் 6 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை மயிலாப்பூர் முண்டகக்கண்ணியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த விஸ்வநாத குருக்கள் (76) தனது மகன் சண்முக குருக்கள் பூஜை செய்யும் மயிலாப்பூர் காரணீஸ்வரர் கோவிலை நோக்கிச் சென்றார். நேற்று இரவு 7.30 மணி அளவில் மயிலாப்பூர் மாதவ பெருமாள் கோவில் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தபோது 3 மோட்டார் பைக்குகளில் வந்த காட்டுமிராண்டிகள் 6 பேர் திடீரென அவரை வழிமறித்துள்ளனர். பின்னர் அவரை திடீரெனத் தாக்கியுள்ளனர். காட்டுமிராண்டிகளின் தாக்குதலில் நிலைகுலைந்து தடுமாறிய விஸ்வநாத குருக்களின் தோளில் கிடந்த பூணூலையும் அறுத்து எறிந்து, தந்தை பெரியார் வாழ்க என கோஷமிட்ட படி அந்தக் காட்டுமிராண்டிகள் வேகமாக தப்பிச் சென்றனர். இதுகுறித்து, விஸ்வநாத குருக்கள் மயிலாப்பூர் போலீஸில் தனது மகன் மங்களம் குருக்களுடன் சென்று புகார் அளித்தார். இதை அடுத்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதுபோல், சென்னை மேற்கு மாம்பலத்தில் சந்தானகோபால் (69) என்ற வயதான பெரியவர் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, அவரின் பூணூலையும் காட்டுமிராண்டிகள் சிலர் அறுத்துள்ளனர். இவர் அங்குள்ள பெருமாள் கோவிலில் பஜனை பாடுபவர். இவர் நேற்று இரவு 8.40 மணியளவில் அந்தச் சாலையில் நடந்து வந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு காட்டுமிராண்டி கும்பல் அவரது பூணூலை அறுத்து தப்பியது. இந்த இரண்டு சம்பவங்களிலும் ஒரே கும்பல் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, திராவிடர் விடுதலைக் கழகம் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள்தான் விஸ்வநாத குருக்களை தாக்கி பூணூலை அறுத்திருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக நந்தகுமார், பிரபாகர், திவாகர், பிரதீப், ராவணன் உள்ளிட்ட 6 காட்டுமிராண்டிகளை போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீது கும்பலாகக் கூடுதல், அவதூறாகப் பேசி தாக்குதல், கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை வேப்பேரி பெரியார் திடலில் திராவிடர் கழகம் சார்பில் தாலியறுக்கும் போராட்டம் நடந்தது. அப்போது திராவிடர் கழகத்தினருக்கும் சிவசேனா தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக இரு தரப்பிலும் 20 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் திராவிடர் கழகத்தினருக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், தமிழர்களின் நம்பிக்கை சார்ந்த விஷயங்களில் திராவிடர் கழகத்தினர் ஈடுபட்டால் தமிழகம் முழுவதும் கருஞ்சட்டை அகற்றும் போராட்டம் வெடிக்கும் என்றார். இது குறித்து கருத்துக் கூறிய தமிழக பாஜக தலைவர் எச்.ராஜா, இந்துக்களின் நம்பிக்கைகளை அவமானப்படுத்தும் திராவிடர் கழகத்தினரின் வாசகங்களை அழிப்போம் என்று கூறியிருந்தார். இந்நிலையில், இதன் தொடர்ச்சியாக, பூணூல் அறுப்பு நடந்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். ஒரே நாளில் இரண்டு இடங்களில் நடந்த இந்த பூணூல் அறுப்பு விவகாரம் சென்னை மட்டுமல்லாமல் தமிழகம் முழுதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிறையில் விசாரணை கைதி சாவு

tsi lock up தென்காசி கிளை சிறையில் விசாரணை கைதி மரணம் சுரண்டையைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (38). இவரை கொலை முயற்சி வழக்கில் சுரண்டை போலீசார் கைது செய்து கடந்த 18ம் தேதி கோர்ட்டில் ஆஜர்படுத்தி தென்காசி கிளை சிறையில் அடைத்தனர் ராஜ்குமாரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் மன வேதனையடைந்த ராஜ்குமார் நேற்று காலையில் சிறையில் மயங்கி விழுந்துள்ளார் சிறைக்காவலர்கள் அவரை தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே ராஜ்குமார்இறந்து விட்டார் என தெரிவித்தனர் சிறையில் இருந்த விசாரணை கைதி திடீரென இறந்தது சிறைத்துறை மற்றும் போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜ்குமாரை போலீசார்தாக்கியதால் அவர் இறந்தாரா? அல்லது உடல் நலக்குறைவால் இறந்தாரா? என பிரேத பரிசோதனையில்தான் தெரிய வரும். இதுகுறித்து தென்காசி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் இச்சம்பவம் தென்காசி, சுரண்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அட்சய திருதியை: அறுபது மகத்துவம்

mahalakshmi_godess

  1. அட்சய திருதியை தினத்தன்று தான் கிருதயுகம் பிறந்தது.

2.அட்சய திருதியை அன்று அதிகாலையில் நீராடி ஸ்ரீமந்த் நாராயணனின் நாமங்களை சொல்லி புதிய செயல்களை தொடங்க வேண்டும். 3.குழந்தைகளுக்கு கல்வி கொடுக்கும் அட்சராயப்பியாசம் செய்யும் சடங்கு `அட்சய திருதியை’ நாளில் செய்யப்படுகிறது. 4.கங்கை, பூமியை முதல் முதலில் அட்சய திருதியை தினத்தன்று தான் தொட்டது. 5.வனவாச காலத்தில் பாண்டவர்கள் அட்சய பாத்திரம் பெற்றது அட்சய திருதியை தினத்தன்றுதான். 6.அட்சய திருதியை நாளில் தான் மணிமேகலை அட்சய பாத்திரம் பெற்றாள். 7.அட்சய திருதியையின் முக்கியத்துவத்தையும், பெருமைகளையும் `பவிஷ்யோத்தர-புராணம்’ விரிவாக விவரிக்கிறது. 8.மகாலட்சுமி திருமாள் மார்பில் நீங்காமல் இருப்ப தற்காக அட்சய திருதியை தினத்தன்றுதான் சிறப்பு வரம் பெற்றாள். 9.கும்பகோணம் பட்டீஸ்வரர் அருகில் உள்ள முழைர் ஸ்ரீபரசுநாதர் கோவிலில் அட்சய திருதியை தினத்தன்று சிவபெருமானுக்கு காசு மாலை அணிவித்து குபேர பூஜை நடத்துவார்கள். அப்போது சிவனை தரிசித்தால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. 10.தமிழ்நாட்டில் அட்சய திருதியை விழா திருப்பரங்குன்றம், திருச்சோற்றுத்துறை விளங்குளம் கோவில்களில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. 11.அட்சய திருதியை தினத்தன்று தான் ஐஸ்வர்ய லட்சுமி, தான்ய லட்சுமி அவதாரங்கள் நிகழ்ந்தன. 12.அட்சய திருதியை தினத்தன்றுதான் குபேரன் நிதி கலசங்களை பெற்றார். 13.அட்ச திருதியை தினத்தில் செய்யப்படும் பித்ரு தர்ப்பணம் பல தலைமுறைக்கு முந்தைய நமது மூதாதையர்களுக்கும் போய் சேரும் என்பது ஐதீகம். எனவே அட்சய திருயை தினத்தன்று செய்யப்படும் பித்ருகடன் மிகமுக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 14.சிவபெருமான் அன்னபூரணியிடம் பிட்சாடனராக வந்து யாசகம் பெற்றது அட்சய திருதியை தினத்தன்றுதான். 15.பராசக்தியின் ஒரு அம்சமான சாகம்பரிதேவி இந்த உலகில் காய்கறிகளையும், மூலிகைச் செடிகளையும் உருவாக்கியவர் என்று புராணம் சொல்கிறது. அட்சய திருதியை தினத்தன்றுதான் அவர் காய்கறி, மூலிகைகளை உருவாக்கினார். 16.அட்சய திருதியை தினத்தன்றுதான் விஷ்ணுவின் 6-வது அவதாரமான பரசுராமர் அவதரித்தார். 17.ரோகிணி நட்சத்திர நாளில் வரும் அட்சய திருதியை மிக,மிக சிறப்பு வாய்ந்ததாகும். 18.அட்சய திருதியை நாளில் தான் விநாயகருக்கு மகாபாரதத்தை வியாசர் போதித்தார். 19.வாசுதேவரை வணங்கி அன்னதானம் செய்வதும், கங்கையில் குளிப்பதும் அட்சய திருதியை நாளில் கூடுதல் பலன்களை தரும். 20.மேற்கு வங்காளத்தில் அட்சய திருதியை தினத்தன்று தான் விநாயகரையும், லட்சுமியையும் வணங்கி புது கணக்கு தொடங்குகிறார்கள். 21.வடமாநிலங்களில் அட்சய திருதியை தினத்தன்று திருமணம் நடத்துவதை புனிதமாக கருதுகிறார்கள். 22.அரியானா, பஞ்சாபில் அதிகமாக உள்ள ஜாட்இனத்தவர்கள் அட்சய திருதியை தினத்தன்று மறக்காமல் மண் வெட்டி எடுத்துக் கொண்டு வயலுக்கு செல்வார்கள். 23.ஏழுமலையான் தன் திருமணத்துக்கு குபேரனிடம் கடன் வாங்கியதாக புராணம் சொல்கிறது. அவ்வளவு பெரிய பணக்காரனான குபேரன் அட்சய திருதியை தினத்தன்று மகாலட்சுமியை மனம் உருகி வணங்கி செல்வத்தை பெருக்குவதாக ஐதீகம். எனவே அட்சய திருதியை தினத்தன்று குபேர லட்சுமி பூஜை செய்வது செல்வம் தரும். 24.ஜெயின் இனத்தவர்களுக்கு அட்சய திருதியை புனித நாளாகும். 25.அட்சய திருதியை தினத்தன்று அதிகாலை விஷ்ணு பூஜை செய்வது அளவிடற்கரிய பலன்களைத்தரும். 26.அட்சய திருதியை தினத்தன்று செய்யப்படும் தானங்களில் அன்னதானம் மிக உயர்வாக கருதப்படுகிறது. 27.வடஇந்தியர்கள் நீண்டதூர புனித பயணங்களை அட்சய திருதியை நாளில் தான் தொடங்குவார்கள். 28.ஒரிசாவில் வீடு கட்ட, கிணறு தோண்ட சிறந்த நாளாக அட்சய திருதியை தினம் கருதப்படுகிறது. 29.பீகார், உத்தரபிரதேசத்தில் நெல் விதைப்பை அட்சய திருதியை தினத்தன்று தொடங்குவார்கள். 30.அட்சய திருதியை நன்னாளில் தான் உணவு கடவுளான அன்னபூரணி அவதரித்தாள். 31.அட்சய திருதியை அன்று தங்கம் வாங்க இயலாதவர்கள் உப்பு வாங்கினால் கூட போதும். தங்கம் வாங்குவதற்குரிய பலன்கள் கிடைக்கும். 32.அட்சய திருதியை அன்று லட்சுமி படத்துக்கு ஒரு முழம் பூ வாங்கிப்போட்டு, மனதார பிரார்த்தனை செய்தாலே போதும், “கனகதாரை” நிச்சயம் உங்கள் வீட்டிலும் செல்வம் பெருக செய்வாள். 33.அட்சய திருதியை தினத்தன்று மிருத்யுஞ்ஜய மந்தி ரத்தை எழுதி குழந்தைகளின் தலையணை அடியில் வைத்தால் கண் திருஷ்டி கழியும். 34.அட்சய திருதியை அன்று வீட்டின் நான்கு மூலைகளிலும் சோழிகளை போட்டு வைப்பது மரபு. இது செல்வத்தை கொண்டு வரும் அம்சமாகும். 35.அட்சய திருதியை தினம் சத்ருசாந்தி பூஜைக்கு ஏற்ற தினமாகும். இதனால் எதிரிகளின் தொல்லை ஒழியும். 36.அட்சய திருதியையன்று மிருத சஞ்ஜீவினி மந்திரம் ஜெபித்தால் நோய்களின் வீரியம் குறையும். 37.அட்சய திருதியை தினத்தன்று சிவனே, அன்ன பூரணியிடம் உணவு பெற்றதால் நமசிவாய மந்திரம் அன்று முதல் சொல்லத்தொடங்கலாம். பிறகு தினமும் 108 தடவை ஓம் நமச்சிவாய சொல்லி வந்தால் பார்வதி-பரமேஸ்வரரின் அருள் கிடைக்கும். 38.அட்சய திருதியை தினத்தன்று தான் பிரம்மா, உலகை படைத்தார் என்று புராணங்கள் சொல்கின்றன. 39.அட்சய திருதியை நாளில் தான் மதுரை மீனாட்சியை சுந்தரேஸ்வரர் மணந்தார் என்று புராணங்கள் சொல்கின்றன. 40அமாவாசைக்கு 3-வது நாள் அட்சய திருதியை 3-ம் எண்ணுக்கு அதிபதி குரு, இந்த குரு உலோகத்தில் தங்கத்தை பிரதிபலிக்கிறார். எனவே குருவுக்கு `பொன்னன்’ என்ற பெயரும் உண்டு. இதனால் தான் அட்சய திருதியை நாளில் பொன் வாங்குவது சிறப்பு பெறுகிறது. 41.அட்சய திருதியை தினத்தன்று பவானி சங்க மேஸ்வரர் ஆலயத்தில் உள்ள முக்கூடல் புண்ணியத் தீர்த்தத்தில் நீராடினால் நமது எல்லா பாவங்களும் விலகிவிடும் என்பது ஐதீகம். 42.கர்நாடக மாநிலத்தில் அட்சய திருதியை தினத்தன்று பெண்கள் ஒரு மண்டபத்தில் கலசம் வைத்து அதில் கவுரியை எழுந்தருளச் செய்து சொர்ணகவுரி விரதம் கடைபிடிப்பார்கள். இதன் மூலம் பார்வதிதேவி தங்கள் வீட்டுக்கு வருவதாக நம்புகிறார்கள். 43.ஒரு தடவை சாபம் பெற்றதால் சந்திரன் தேய்ந்து தேய்ந்து அமாவாசை ஆகி விட்டார். மனம் திருந்திய சந்திரன் அட்சய திருதியை தினத்தன்று அட்சயவரம் பெற்றார். மீண்டும் அட்சய தினத்தில் இருந்து வளரத் தொடங்கினார். 44.அட்சய திருதியை தினத்தன்று கும்பகோணம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள 16 பெருமாள் கோவில்களில் இருந்து 16 பெருமாள்கள் கருடவாகனத்தில் புறப்பட்டு வருவார்கள். கும்பகோணம் பெரிய தெருவில் 16 பெருமாள்களும் ஒரு சேர அணிவகுத்து பக்தர்களுக்கு தரிசனம் தருவார்கள். இந்த அற்புத தரிசனம் ஆண்டுக்கு ஒரு தடவையே நடைபெறும். அன்று 16 பெருமாள்களையும் வழிபட்டால் வாழ்வில் வளம் பெருகும் என்பது நம்பிக்கை. 45.அட்சய திருதியை தினத்தன்று நெல், அரிசி, கோதுமை, தங்கம், பசுமாடு, பானகம், நீர்மோர், விசிறி, குடை போன்றவற்றை தானம் தரச் சொல்கிறது பவிஷ்ய புராணம். அன்றைக்குக் கொடுக்கப்படும் பொருட்கள், அளிப்பவருக்கு நிறைவாக பெருகும்.

  1. அரிதான வேலையை சந்திஅப்பதை `அலப்ய யோகம்’ என்கிறது சாஸ்திரம். அட்சய திருதியை, அலப்ய யோகத்தில் சேரும், ஆகவே அரிதான அட்சய திருதியை தவறவிட்டால் பிறகு ஒரு வருடம் காத்திருக்க வேண்டும்.

47.அட்சய திருதியை நாளில் முன்னோரை நினைத்து, எள்ளும் தண்ணீரும் அளித்து வணங்க வேண்டும் என்கிறது தர்மசாஸ்திரம். தண்ணீர் நிரம்பிய குடத்தை தானமாகத்தருவது சிறப்பு என்கிறார்கள். இதனை `தர்மகடம்’ எனப்போற்றுவர்.

  1. அட்சய திருதியைக்கு இன்னொரு காரணமும் சொல்வர். அதாவது அடிபடாத இரண்டாக உடையாத முழு அரிசிக்கு அட்சதை' என்று பெயர். சதம் என்றால் அடிப்பட்டு ஊனமாகாதது என்ëறும் அர்த்தம் உண்டு. அட்சதையால் அட்சயனை மதுசூதனை வணங்குவதால் அந்த திதிக்குஅட்சய திருதியை’ எனும் பெயர் அமைந்ததாகச் சொல்கிறது புராணம்.

  2. அட்சய திருதியை நாளில், காலையில் எழுந்து நீராடி உணவு எதுவும் உட்கொள்ளாமல், கடவுளை வழிபட்டு, தானம் அளித்து, பிறருக்கு அன்னம் அளித்த பிறகே உணவை ஏற்க வேண்டும். இது மனத்தூய்மையையும் ஆரோக்கியத்தையும் ஏற்படுத்துகிறது. இதில் அறநெறியும் சேர்ந்திருப்பதால், பிறவிப்பயனும் கிடைக்கிறது.

  3. அட்சய திருதியை நாளில் `வசந்த் மாதவாய நம’ என்று சொல்லி, 16 வகை உபசாரங்களால் வசந்த மாதவனை வழிபடுங்கள். முக்கியமான ஒன்று… தானம் செய்ய உகந்த நாளில் தங்கம், வெள்ளி வாங்கி சேமிப்பில் இறங்குவது சாஸ்திரத்துக்கு உடன் பாடில்லை.

  4. அட்சய திருதியை தினத்தை சமணர்கள் “அட்சய தீஜ்” என்றழைக் கிறார்கள்.

  5. ரிஷபதேவர் எனும் தீர்த்தங்கரரின் நினைவு நாளாக அட்சய திருதியை தினத்தை சமணர்கள் அனுசரிக்கிறார்கள்.

  6. அட்சய திருதியை தினத்தன்று ஆலம் இலையில் மிருத்யுஞ்சய மந்திரத்தை ஜெபித்து வியாபாரம் நடக்கும் கடையில் வைத் தால் வியா பாரம் பெருகும். எதிரிகள் தொல்லை நீங்கும்.

  7. அட்சய திருதியை தினத்தன்று செய்யப்படும் பித்ரு பூஜை மூவாயிரம் மடங்கு நல்ல பலன்களைத் தரும்.

  8. புதன்கிழமை வரும் அட்சய திருதியை தினத்தன்று தானம் செய்தால், அது பல கோடி மடங்கு கூடுதல் பலன்களைத் தரும்.

  9. அட்சய திருதியை விரதத்தை முதன் முதலில் கடைபிடித்தவர் மகாதயன் என்ற வியாபாரி ஆவார்.

  10. ஏழ்மையாக இருந்தாலும் அட்சய திருதியை தினத்தன்று தானம் செய்தால் செல்வம் கிடைக்கும் என்று பவிஷ்ய புராணம் சொல்கிறது.

  11. ஒவ்வொரு அட்சய திருதியைக்கும் தவறாமல் தானம் செய்தால் மறு பிறவியில் அரசனுக்கு இணையான செல்வந்தர்களாக பிறப்பார்கள் என்பது ஐதீகம்.

  12. மகாலட்சுமியின் பரி பூரண அருளை ஒவ்வொருவரும் பெற வேண்டும் என்பதே அட்சய திருதியை பண்டிகையின் முக்கிய நோக்கமாகும்.

  13. மகாலட்சுமியின் அருள் பெற வேண்டுமானால், அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து குளித்து, பூஜை அறையில் விளக்கு ஏற்றி வணங்கி, மகாலட்சுமி பெயரை உச்சரித்தாலே போதும். செல்வம் தானாக தேடி வரும்.

  • வாட்ஸ் அப், பேஸ்புக் என ஒரு சுற்று வந்துவிட்ட மகிமைச் செய்தி

அக்ரஹாரத்து பூனை -ஜெயகாந்தன்.

jeyakanthanஅக்ரஹாரத்து பூனை -ஜெயகாந்தன். நன்றி:பழைய விகடன் எங்கள் ஊர் ரொம்ப அழகான ஊர். எங்கள் அக்ரஹாரத் தெரு ரொம்ப அழகானது. எங்கள் அக்ரஹாரத்து மனிதர்களும் ரொம்ப அழகானவர்கள். அழகு என்றால் நீங்கள் என்னவென்று நினைத்துக்கொண்டிருக்கிறீர்களோ, எனக்குத் தெரியாது. என்னைப் பொறுத்தவரை ஒன்றின் நினைவே சுகமளிக்கிறது என்றால்… அது ரொம்ப அழகாகத்தான் இருக்க வேண்டும். 35 வருஷங்களுக்கு முன்னால் அங்கே அந்தத் தெருவில் ஒரு பழங்காலத்து வீட்டின் கர்ப்பக் கிரகம் மாதிரி இருளடைந்த அறையில் பிறந்து, அந்தத் தெருப் புழுதியிலே விளையாடி, அந்த மனிதர்களின் அன்புக்கும் ஆத்திரத்துக்கும் ஆளாகி வளர்ந்து, இப்போது பிரிந்து, 25 வருஷங்கள் ஆன பிறகும் அந்த நினைவுகள், அனுபவங்கள், நிகழ்ச்சிகள் யாவும் நினைப்பதற்கே சுகமாக இருக்கிறதென்றால், அவை யாவும் அழகான அனுபவங்களும் நினைவுகளும்தானே! நான் பார்த்த ஊரும் – இவை என்றுமே புதிதாக இருந்திருக்க முடியாது என்ற உறுதியான எண்ணத்தை அளிக்கின்ற அளவுக்குப் பழசாகிப்போன அந்த அக்ரஹாரத்து வீடுகளும், இவர்கள் என்றைக்குமே புதுமையுற மாட்டார்கள் என்கிற மாதிரித் தோற்றமளிக்கும் அங்கு வாழ்ந்த மனிதர்களும் இப்போதும் அப்படியேதான் இருக்கிறார்கள் என்று என்னால் நிச்சயமாகச் சொல்ல முடியாது. எனினும், அவர்கள் அப்படியே இருக்கிறார்கள் என்று நினைத்துக்கொள்வதிலே ஓர் அழகு இருக்கிறது; சுகம் இருக்கிறது. நான் இப்போது ரொம்பவும் வளர்ந்து விட்டேன்; ரொம்பவும் விஷயங்கள் தெரிந்துகொண்டுவிட்டேன். என்னிடமிருந்த குறும்புத்தனங்கள் எவ்வளவோ நீங்கிவிட்டன. ஆனாலும் கற்பனையாக இத்தனை மைல்களுக்கு அப்பாலிருந்து அந்த ஊரின் தெருவுக்குள் பிரவேசிக்கும்போது – கற்பனையால் தூரத்தை மட்டும்தான் கடக்க முடியுமா? – காலத்தையும் கடந்து நான் ஒரு பத்து வயதுச் சிறுவனாகவே நுழைகிறேன். அந்தக் குளத்தங்கரை ஓரமாக நான் வரும்போது, எனது பிரசன்னத்தைக் கொஞ்சம் கூடப் பொருட்படுத்தாமல் அந்தப் பெண்கள் குளித்துக்கொண்டிருக்கும்போது, குளக்கரைப் படியிலேயே நான் சற்று உட்கார்ந்துகொள்கிறேன். அங்கு சுகமாகக் காற்று வரும். குளத்திலே தண்ணீருக்கு மேல் ஓர் அடி உயரத்துக்கு மீன்கள் துள்ளிக் குதிக்கும். கூழாங்கற்களைப் பொறுக்கிக் குளத்துக்குள் எறிந்தவாறு எவ்வளவு காலம் வேண்டுமானாலும் உட்கார்ந்திருந்திருக்கலாமே… எங்கெங்கே பரந்து என்ன வாரிக் கட்டிக்கொண்டோம்? வெங்கிட்டு, உத்தண்டம், சுந்தரம், தண்டபாணி எல்லோரும், பெண்கள் படித்துறைக்கும் ஆண்கள் படித்துறைக்குமிடையே உள்ள கட்டைச் சுவரின் மீது வரிசையாக வந்து நின்று ஒவ்வொருவராக ‘தொபுக்’ ‘தொபுக்’ என்று குதித்த பின்னர், ஈரம் சொட்டச் சொட்ட ஒரு ‘ரிப்பன்’ கோவணத்தை இழுத்து இழுத்துச் செருகிக்கொண்டு மறுபடியும் சுவரின் மீது ஏறி வந்து வரிசை அமைக்கின்றனர நான் எப்போதுமே தனி. என்னை அவர்கள் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள். நான் துஷ்டனாம். நான் அந்தச் சிறுவர்களுடன் சேராமல் அமைதியாக உட்கார்ந்திருப்பதைப் பார்க்கும் பெரியவர்கள், என்னை உதாரணம் காட்டிப் பேசுவார்கள். நான் விஷமம் செய்யாமல் ‘தேமே’னென்றிருக்கிறேனாம். நான் அடக்கமான பதிவிசான பையனாம். ‘ச்சீ, பாவம்டா! அவனையும் சேத்துண்டு வெளையாடுங்களேன். போனாப் போறது; நீ வாடா அம்பி. அவா உன்னைச் சேத்துண்டு வெளையாடலேன்னா ஒண்ணும் கொறைஞ்சிபோயிட மாட்டே. நீ வாடா, நான் உனக்கு பட்சணம் தர்றேன்… காப்பிப் பொடி அரைக்கலாம் வரயா?’ என்றெல்லாம் என்மீது அன்பைச் சொரிகின்ற பெரியவர்களின் அரவணைப்பு, எனக்கு மனசுக்கு இதமாக வெதுவெதுவென்றிருக்கும். நான் அவர்களுக்குக் காப்பிப் பொடி அரைத்துக் கொடுக்கிறதிலிருந்து சில நேரங்களில் கால் அமுக்கிவிடுவது வரை எல்லாக் காரியங்களும் செய்வேன். என் அம்மா சொன்னால் மட்டும் கேட்க மாட்டேன். ‘போ! போ!’ என்று ஓடுவேன். எனக்குப் பத்து வயசாகறதுக்குள்ளேயே என் அம்மாவுக்கு ஐந்து கொழந்தைகள், தாயின் அன்போ அரவணைப்போ எனக்கு நினைவுகூட இல்லை. என் அம்மா என்னைக் கூப்பிடற பேரே ‘ஏ! கடன்காரா’தான். ஊருக்கு, தெருவுக்கு, மற்றவர்களுக்குப் பதிவிசாகத் ‘தேமே’னென்று தோற்றமளிக்கிற நான், வீட்டில் அவ்வளவு விஷமங்கள் செய்வேன். என்ன விஷமம்? ஏதாவது ஒரு குழந்தை ஓடி வரும்போது ‘தேமே’னென்று உட்கார்ந்திருக்கும் நான் ‘தேமே’னென்று குறுக்கே காலை நீட்டுவேன். கீழே விழுந்து ‘ஓ’வென்று அழும் குழந்தைக்குச் சில சமயங்களில் மோவாயிலிருந்தோ பல்லிலிருந்தோ ரத்தம் ஒழுகும். நான் ‘தேமே’னென்று உட்கார்ந்திருப்பேன். அந்தச் சனிகள் பேசத் தெரியாவிட்டாலும் அழுதுகொண்டே கையை நீட்டிச் சாடை காட்டி, தான் விழுந்ததுக்கு நான்தான் காரணம் என்று எப்படியோ சொல்லிக் காட்டிக் கொடுத்துவிடும்கள்.”கடன்காரா! செய்றதையும் செய்துட்டுப் பூனை மாதிரி உக்காந்திருக்கியா?” என்று அம்மா வந்து முதுகில் அறைவாள். அறைந்துவிட்டுக் ”கையெல்லாம் எரியறது… எருமை மாடே!” என்று நொந்துகொண்டு விரட்டுவாள். ”ஏண்டி அவனை அடிக்கறே! பாவம், அவன் ‘தேமே’ன்னுதானே இருக்கான்” என்று யாராவது அடுத்த வீட்டு – எதிர் வீட்டு மாமி வந்து – அவள் வந்த பிறகு அழ ஆரம்பித்த என்னைச் சமாதானப்படுத்தி அழைத்துக் கொண்டு போவார்கள். பட்சணம் கிடைத்த பிறகு சமாதானம் அடைவேன். ஆனாலும் அங்கேயும் ‘தேமே’னென்று இருந்துகொண்டே ஏதாவது செய்துவிடுவேன். எப்படியோ பழியிலிருந்து மட்டும் தப்பித்துக்கொள்வேன்… காப்பிப் பொடி அரைக்கிற மிஷின்லே மண்ணைக் கொட்டி அரைக்கறது. திடீர்னு, ”மாமி.. இங்கே வந்து பாருங்கோ. யாரோ மிஷின்லே மண்ணெப் போட்டு அரைச்சிருக்கா”னு கத்துவேன். ”வேற யாரு? எங்காத்துக் கடன்காரனாத்தான் இருக்கும்” என்று அவர்கள் வீட்டுக் கடன்காரனைத் தேடிப் பிடித்து நாலறை வாங்கி வைத்துப் பார்த்தால்தான் ஒரு சந்தோஷம்… ஒரு நிம்மதி.என் அம்மா மட்டும் என் மேல் அனுதாபம் காட்டுகிற மாமிகளை எச்சரித்துக்கொண்டே இருப்பாள்: ”அவனை நம்பாதீங்கோ… பாத்தா ‘மொசுமொசு’ன்னு பூனை மாதிரி இருந்துண்டு உடம்பே வெஷம். என்னமோ சொல்லுவாளே, பூனை செய்யறதெல்லாம் வெஷமம்… அடிச்சா பாவம்னு அந்த மாதிரி…”அதைக் கேட்டு ‘ஏண்டா, அப்படியா?’ என்று அந்த மாமி என்னைப் பார்ப்பாள். நான் தேமேனென்று அவளைப் பார்ப்பேன். ”ச்சீ, போடி! என்னத்துக்குக் கொழந்தையே இப்படிக் கரிச்சிக் கொட்டறே! நீ வாடா…” என்கிற அந்த அணைப்பும் அன்பும் எவ்வளவு இதமாக! சுகமாக இருக்கும்! ஆனால், அந்த அனுதாபம் காட்டுகிற அவர்களுக்குக்கூட நான் உண்மையாக, வெள்ளையாக இல்லை என்பது எனக்கல்லவா தெரியும்! சரி, நான் என்ன சொல்லிக்கொண்டிருக்கிறேன்! அந்த அக்ரஹாரத்துப் பூனையெப் பத்திச் சொல்ல வந்து அக்ரஹாரத்து மனுஷாளைப் பத்தியும் என்னைப் பத்தியும்னா சொல்லிக் கொண்டு இருக்கேன்? இருபத்தைந்து வருஷத்துக்கு முன்னே பத்து வயசு வரைக்கும் வாழ்ந்திருந்த ஒரு கிராமத்தையும் ஒரு அக்ரஹாரத்தையும் அதுலே வாழ்ந்த மனுஷாளையும் பத்தி இன்னும் எவ்வளவு நாளைக்கி வேணும்னாலும் என்னால் சொல்லிக் கொண்டே இருக்க முடியும். எனக்கு அலுக்காது, சலிக்காது. பாக்கப்போனா, நான் சொல்லிக்கொண்டு பேசிக்கொண்டு எழுதிக் கொண்டு இருக்கிற எல்லாருமே ஒரு ஊரை, ஒரு தெருவைச் சேர்ந்தவாளைப் பத்திதான். மீனா, ருக்கு, பட்டு, லலிதா, கௌரிப் பாட்டி, ஆனந்த சர்மா, வைத்தா, ராகவய்யர், கணபதி ஐயர், சங்கர சர்மா இவர்கள் எல்லாருக்குமே ஒருத்தரை ஒருத்தர்க்குத் தெரியும். இவா அப்ப இருந்தது. இப்ப எப்பிடி இருப்பானு நான் இப்பக் கற்பனை பண்றது, இவர்களிலே சிலபேர் எக்கச்சக்கமாப் பட்டணத்தின் ‘மெர்க்குரி லைட்’ வெளிச்சத்திலே என்னிடம் வந்து சிக்கிக்கொண்டது, காலத்தினுடைய அடிகளினாலே இவர்கள் வளைஞ்சி போனது, உடைஞ்சி போனது, அடிபடாமல் ஒதுங்கி ஓடிப் போனது, அடிபட்டும் ‘ஒண்ணுமில்லை’யேனு உடம்பெத் தொடச்சிவிட்டுண்டது, எங்கேயோ பட்ட அடிக்கு, எங்கேயோ போய் முட்டிண்டது, சமயத்திலே என்னண்டையே வந்து முட்டிக்கொண்டு குட்டு வாங்கிக் கொண்டது இதைப் பத்தியெல்லாம் எழுதறதிலே எனக்கு சலிப்பே கெடையாது; அலுப்பே கெடையாது. எனக்கு அவா மேலே அப்படி ஒரு பிரேமை. அவா சம்பந்தப்பட்ட எல்லாமே எனக்கு ரொம்ப ஒஸத்தி! ஆனா, அவர்கள்லே சிலருக்கு இதுவே அலுத்துப்போச்சுப்போலே இருக்கு… ம்ஹும்! பயமா இருக்குப் போலே இருக்கு. என்னமோ சங்கடப்பட்டுக்கிறா, ‘என்ன ஸார், அக்ரஹாரத்து மனுஷாளைப் பத்தியே எழுதிண்டு’னு. நான் என்ன பண்ணுவேன்? எனக்குத் தெரிஞ்சதைத்தானே எழுதுவேன். சரி, இந்தத் தடவை ஒரு மாற்றத்துக்கு அந்த அக்ரஹாரத்து மனுஷாளை விட்டுட்டு; எனக்குத் தெரிஞ்சு ஒரு பூனையைப் பற்றி எழுதப்போறேன். பூனைகளுக்கு நிச்சயமாய் அலுப்போ, சலிப்போ, பயமோ, சங்கடமோ வராது. பூனைகள், கதை படிக்கிறதோ கதை திருடறதோ இல்லே. பூனைகளைப் பார்த்தா நம் கண்ணுக்குத்தான் ஆஷாடபூதி மாதிரி இருக்குமே தவிர பாவம், அதுகளுக்கு அந்த மாதிரிக் குணமெல்லாம் நிச்சயம் கிடையாது. எனக்குப் பூனைகளைக் கண்டால் கொஞ்சம்கூடப் பிடிக்கிறது இல்லை. ஓர் அவெர்ஷன்! சாதாரணமா எனக்கு எந்தச் செல்லப் பிராணிகளையும் பிடிக்காது. அருவருப்பா இருக்கும். பார்த்துப் பழகிட்டா, எதுவுமே பிடிக்காமல்போறது மனுஷ இயல்புதானே? அதுவும் பூனை, நாய், பெருச்சாளி இதெயெல்லாம் யாருக்குத்தான் பிடிக்கும்? யாருக்குமே பெருச்சாளி பிடிக்காது. அப்போவெல்லாம் எனக்குப் பொழுதுபோக்கே கொலை பண்றதுதான். ‘தேமே’ன்னு உட்கார்ந்துண்டு ஒரு கட்டெறும்பைப் பிடிச்சு, ரெண்டு காலைக் கிள்ளிட்டு அது ஆடற நடனத்தை ரசிக்கிறது… ஒரு குச்சியிலே அதன் நடு முதுகிலே அழுத்திக் குத்தி, அதெ ரெண்டாக்கி, அந்த ரெண்டு துண்டும் எப்படித் துடிக்கிறதுனு ஆராயறது, பல்லியை அடிச்சு, வால் துடிக்கறதெப் பாக்கறது, தும்பியெப் பிடிச்சு, வாலிலே நூல் கட்டி சங்கீதம் பாடவைக்கிறது, மரவட்டை, வளையல் பூச்சி, ஓணான் இதுக்கெல்லாம் அந்தக் காலத்துலே நான் ஒரு யமகிங்கரன்! எங்க தெருவிலே நுழையற எந்த நாயும் என்னைப் பார்த்துட்டா அதுக்கப்புறம் தைரியமா முன்னேறி வராது. அப்படியே வாபஸ்தான்! ஜெயா மாமி வீட்டுத் திண்ணையிலே நான் பாட்டுக்குத் ‘தேமே’ன்னு உக்காந்திண்டிருக்கேன். பக்கத்திலே ஒரு குவியல் கருங்கல், நானே செலக்ட் பண்ணி சேர்த்துப் பொறுக்கிவெச்சது. அதோ, தூரத்திலே ஒரு நாய் வர்றது. இதுக்கு முன்னயே ஒரு தடவை அதை மூணு காலிலே ஓடவெச்சிருக்கேன். உடனே நான் தூணிலே மறையறேன். அடிக்கறவனுக்கே இவ்வளவு உஷார் உணர்ச்சி இருந்தா, அடிபடுற அதுக்கு இருக்காதா? இரண்டு காதையும் குத்திட்டு நிமிர்ந்துண்டு சட்டுனு என்னைப் பார்த்துடுத்து! ‘டேய்! அடிப்பியா? நான் பாட்டுக்குப் போயிடறேன்டா’ என்பதுபோல் ஒரு பார்வை. நான் உடனே அதைப் பார்க்காத மாதிரி முகத்தைத் திருப்பின்டுடறேன். அதுக்குக் கொஞ்சம் தைரியம். அந்த எதிர் வீட்டு வரிசை ஓரமா இரண்டு பின்னங்காலுக்கும் நடுவிலேயும் வாலை இடுக்கிண்டு என் மேல் வெச்ச கண்ணை எடுக்காமலேயே நகர்ந்து வரது. என் கையெல்லாம் பரபரக்கறது. பல்லைக் கடிச்சிண்டு என்னை அடக்கிக்கிறேன். இதோ அது எனக்கு நேரே வந்துட்டது… அடச்சீ! அந்த வேகமெல்லாம் இப்ப வராது. நான் என்ன பண்ணினேன்னு யாருக்கும் தெரியாது. தெருவையே கூட்டுற மாதிரி கத்திண்டு என்ன ஓட்டம் ஓடறது அது! தலையிலே குறி வெச்சாத்தான் காலிலே படும். பட்டுடுத்து! நான் ‘தேமே’ன்னு உக்காந்திருக்கேன்.சத்தம் கேட்டு ஜெயா மாமி உள்ளேருந்து வரா. ‘சடக்’னு திண்ணையிலிருந்து கல்லையெல்லாம் கீழே தள்ளிடறேன். ”ஏண்டா, நாயை யாரு அடிச்சது?” ”ஐயையோ, நான் இல்லே மாமி.” ”சரி, யாரையாவது கூப்பிடு. ‘வெந்நீர் உள்’ளே (நீர் கொதிக்க வைக்கும் இடம்) ஒரு பெருச்சாளி வெளியே போக முடியாம நிக்கறது. யாரையாவது கூப்பிடுடா அம்பி.” அவ்வளவுதான் ஒரு விறகுக் கட்டையைத் தூக்கிண்ட்டு நான் போறேன். மாமி கத்தறா: ”வேண்டாண்டா, வேற யாரையாவது கூப்பிடு, அது உன் மேலே பாஞ்சுடும்.” ‘வெந்நீர் உள்’ மூலையிலே அதை ‘கார்னர்’ பண்ணிட்டேன் நான். பெருச்சாளி தலையைத் தூக்கி என்னைப் பாத்து சீறிண்டு நிக்கறது. தலையைக் குறிபார்த்து ‘நச்’னு ஒரு அடி, சனியன்! தம்மையே பிரதட்சணம் பண்ணிக்கிற மாதிரி சுத்தி சுத்தி வெந்நீர் உள் பூரா ரத்தம் கக்கிச் செத்துடுத்து. ஜெயா மாமி பயந்துட்டாள். நானும் பயந்த மாதிரி ‘மாமி மாமி’ன்னு கத்தினேன். ஜெயா மாமி ஓடிவந்து என்னைக் கட்டிப்பிடிச்சிண்டா.. ”நோக்கு இந்த வேலை வேண்டாம்னு சொன்னேனேன்னோ… கருமத்தைப் பார்க்காதே. வா, ராக்காயி வந்தா, கழுவிவிடச் சொல்லலாம்.” பயந்து நின்னிண்டிருக்கிற என்னை ஆதரவா ஜெயா மாமி அணைச்சுக்கறாள். பெரியவா அணைச்சிண்டா என்ன சுகமா இருக்கு! அந்தப் பெருச்சாளி என்னைப் பார்த்துச் சீறலைன்னா, எனக்கு அவ்வளவு கோபம் வந்திருக்காது. அது மட்டும் என்னைப் பார்த்துச் சீறிட்டுத் தப்பிச்சும் போயிருந்தால், நான் அழுதிருப்பேன். கொலை செய்றதைத் தவிர, இன்னொரு பொழுதுபோக்கும் எனக்கு உண்டு. அது என்னன்னா, கொலை பண்றதையும், கூறு போட்டு விக்கறதையும் வேடிக்கை பார்க்கறது. அந்த அக்ரஹாரத்துக் கடைசீலே ஒரு திடல் உண்டு. அந்தத் திடல்லே இருக்கிறவாளெல்லாம் என்னமோ ஒரு பாஷை பேசுவா. ஆடு, மாடு, கோழி எல்லாம் வெச்சிருப்பா. அங்கே ஒரு கடா மீசைக்காரன் இருப்பான். வெங்கிட்டு, சுந்தரம், உத்தண்டம் இவங்களுக்கெல்லாம் அவனைக் கண்டாலே டபிள்ஸ்தான். எனக்கு அவனைக் கண்டா பயமே கிடையாது. அவன் எப்போடா நம்ம தெரு வழியா வருவான்னு காத்துண்டே இருப்பேன். அவன் சாயங்காலம் நாலு மணிக்கு எங்க தெரு வழியா அந்தத் திடலுக்கு திரும்பிப் போவான். நான் அவனையே பாத்துண்டிருப்பேன். அவன் மீசை எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஒரு துருப்பிடிச்சக் கறுப்பு சைக்கிளிலே அவன் வருவான். அந்த சைக்கிளிலே அவனைப் பார்த்தா ஆடு மேலே ஒரு ஆள் உக்காந்து சவாரி பண்றாப்ல இருக்கும். சைக்கிள் ஹாண்ட்பார்ல ஒரு காக்கிப் பை இருக்கும். அதுலே ஒரே ரத்தக்கறையா இருக்கும்; ஈ மொய்க்கும், அது உள்ளே இருக்கற கத்தியோட பிடி மட்டும் தெரியும். நான் பெரியவனானப்புறம் அவனை மாதிரியே மீசை வெச்சிண்டுடுவேன். இன்னும் பெரிய கத்தியா வெச்சிக்குவேன். யாரானும் சண்டைக்கு வந்தால், வெட்டிடுவேன், பெரியவனானால் நிச்சயமா மனுஷாளையும் வெட்டுவேன். என்னைக் கண்டு எல்லோரும் பயப்படணும். இல்லாட்டா, கத்தியாலே வெட்டுவேன். நான் என்ன சொல்லிக்கொண்டிருக்கிறேன்? அக்ரஹாரத்துப் பூனையைப் பத்தியல்லவா சொல்ல வந்தேன்? பரவாயில்லை. பூனையைப் பத்தி சொல்ல இடம் வந்தாச்சு. சொல்லிடறேன்: எங்க அக்ரஹாரத்துலே பூனையும் உண்டு. ரொம்ப ‘நொட்டோரியஸ்!’ பூனைன்னா ஒரு சின்னப் புலி மாதிரி இருக்கும். உடம்பெல்லாம் வரிவரியா இருக்கும். இந்தச் சனியனுக்கு அக்ரஹாரத்துலே என்ன வெச்சிருக்கோ? பூனை மாமிசப்பட்சிணிதானே! இது மாமிசம் கிடைக்கிற இடத்தையெல்லாம் விட்டுட்டு, இந்த அக்ரஹாரத்துலே இருக்கு. அதனாலே இந்த அக்ரஹாரத்துப் பூனை கம்பல்ஸரியா சைவப் பூனை ஆயிடுத்து. எனக்கும் அதுக்கும் ஓர் ஒத்துமை உண்டு. நானும் ‘தேமே’ன்னு இருப்பேன். அதுவும் ‘தேமே’ன்னு இருக்கும். நானும் விஷமம் பண்ணுவேன். அதுவும் விஷமம் பண்ணும். நானும் எல்லார் ஆத்துலேயும் போய் விஷமம் பண்ணுவேன். அதுவும் எல்லார் ஆத்துலேயும் போய் விஷமம் பண்ணும். ஒருநாள் ஜெயா மாமி ‘ஓ’ன்னு அலறிண்டு சபிச்சா: ”இந்தக் கட்டேல போற பூனை ஒரு படிப் பாலையும் சாச்சிக் கொட்டிடுத்தே! அந்தப் பெருச்சாளியை அடிச்ச மாதிரி இதை யாராவது அடிச்சுக் கொன்னாக்கூடத் தேவலை!” ஊஞ்சல்லே படுத்துண்டு விசிறிண்டிருந்த மாமா சொன்னார்: ”வாயே அலம்புடி… பாவம், பாவம்! பூனையைக் கொல்றதுன்னு நெனைச்சாலே மகா பாவம்!” நான் ‘தேமே’ன்னு நின்னுண்டு கேட்டிண்டிருந்தேன். பெருச்சாளியை அடிச்ச மாதிரி பூனையை அடிக்க முடியாதுன்னு எனக்கும் தெரியும். பெருச்சாளி சீறித்தே – ஆனா, பூனை பாஞ்சு கொதறிப்பிடும் கொதறி… பூனை மொதல்லே பயப்படும்; கத்தும்; ஓடப் பார்க்கும். ஒண்ணும் வழியில்லேன்னா ஸ்ட்ரெய்ட் அட்டாக்தான்! எனக்கு ஞாபகம் இல்லாத வயசிலே ஒரு பூனை என் வயத்தைக் கீறின வடு இப்பவும் அரைஞாண் கட்டற எடத்துலே நீளமா இருக்கே… சின்னக் குழந்தையாத் தவழ்ந்துண்டு இருந்த பருவம்… பூனையைப் புடிச்சுண்டு சர்க்கஸ் பண்ணி இருக்கேன்.. எக்குத்தப்பா கழுத்தெப் புடிச்சிட்டேனாம்… சீறிக் கத்திண்டு அது என்னைப் பொறண்டற தாம். நான் ‘ஓ’ன்னு அலறிண்டு அதன் கழுத்தை விடாம நெருக்கறனாம்.. அம்மா இப்பவும் சொல்லுவா. அந்த வடு இப்பவும் அடி வயத்திலே இருக்கு. அன்னக்கி சாயங்காலம் எங்க வீட்டுத் தோட்டத்திலே அந்தப் பூனையை நான் பார்த்தேன். எங்க வீட்டுக்கும் அந்த வீட்டுக்கும் நடுவே வேலியோரமாப் போய்க்கொண்டிருந்தது அந்தப் பூனை. போறபோக்கிலே ஒரு தடவை திரும்பிப் பார்த்தது. நானும் பார்த்தேன். மொறைச்சிப் பார்த்தேன். உடனே அதுவும் கொஞ்சம் உஷாராகி நன்னாத் திரும்பிண்டு என்னையே மொறைச்சிப் பார்த்தது. நான் அது மேலே பாய்கிற மாதிரி குதிச்சுப் பயம் காண்பிச்சேன். அது பயப்படலே, கொஞ்சம் தரையிலே பம்மி நிமிர்ந்தது; அவ்வளவுதான். இது என்ன பயப்பட மாட்டேங்கறதேன்னு எனக்குக் கோவம். ஆத்திரத்தோட நானும் மொறைக்கறேன். அலட்சியமா அதுவும் மொறைக்கிறது. அது ஒரு மௌனமான சவால் மாதிரி இருந்தது. சிவப்பா வாயைத் தெறந்து என்னைப் பார்த்துண்டே… ‘மியாவ்’னு அது கத்தினப்போ, அது தன் பாஷையிலே என்னை சவாலுக்கு அழைக்கிற மாதிரியே இருந்தது. ‘அதெல்லாம் பெருச்சாளிகிட்டே வைச்சிக்கோ… நம்ம கையிலே நடக்காது.’ ‘இரு… இரு… ஒரு நாளைக்கு உன்னைப் பிடிச்சுக் கோணியிலே அடைச்சுத் துவைக்கிற கல்லிலே அடிச்சுக்…’ ‘மியாவ் – சும்மா பூச்சி காட்டாதே; மொதல்லே என்னைப் பிடிக்க முடியுமா உன்னாலே?’ – சட்டுன்னு வேலியைத் தாண்டிடுத்து. அடுத்தாத்துத் தோட்டத்துலெ நின்னுண்டு வேலி வழியா என்னைப் பார்த்து மொறைக்கிறது. ‘எங்கே போயிடப் போறே?’ உன்னைப் பிடிக்கலேன்னா, பேரை மாத்தி வெச்சிக்கோன்னேன் நான்.அதுக்குப் பதில் சொல்ற மாதிரி ஒரு சின்ன மியாவ் – ‘பார்ப்போமா’னு அதுக்கு அர்த்தம்.ம்… பார்க்கலாம்…’னேன். அன்னிக்கு ராத்திரி பூரா நான் தூங்கலை. அந்தப் பூனையும் தூங்கலை. ராத்திரிப் பூரா குடுகுடுன்னு ஓட்டு மேலே ஓடறது. இன்னொரு பூனையையும் ஜோடி சேர்ந்துண்டு ஒரு ராட்சஸக் குழந்தை அழற மாதிரி ரெண்டும் அலறிண்டு காச்சுமூச்சுனு கத்தி ஒண்ணு மேலே ஒண்ணு பாஞ்சு பிறாண்டிண்டு… எங்க வீட்டு ஓட்டுக் கூரை மேலே ஒரே ஹதம். எங்கேயோ ஒரு ஓடு வேறே சரிஞ்சு ‘பொத்’னு தரையிலே விழறது. திண்ணையிலே படுத்திண்டிருந்த தாத்தா தடிய எடுத்துத் தரையிலே தட்டி ‘சூச்சூ’னு வெரட்டறா. ரெண்டும் ஒண்ணு பின்னாடி ஒண்ணு குதிச்சுத் தெருவிலே குறுக்கா ஓடி ஜெயா மாமி ஆத்துக் கூரையிலே ஏறினதை நிலா வெளிச்சத்திலே நான் நன்னாப் பார்த்தேன். அடுத்த நாள் அதை வேட்டையாடிடறதுன்னு தீர்மானம் பண்ணிட்டேன். ஜெயா மாமி ஆத்து ‘வெந்நீர் உள்’ளே ஒரு தட்டு நிறையப் பாலை வெச்சேன். ஒரு கதவை மட்டும் திறந்து வெச்சிண்டேன். ஜன்னல் கதவை மூடிட்டேன். மத்தியானம் சாப்பிடக்கூட ஆத்துக்குப் போகாமே காத்திண்டிருந்தேன். கடைசிலே மத்தியானம் மூணு மணிக்குப் ‘பூனைப் பெரியவாள்’ வந்தா. சொல்லிவெச்ச மாதிரி ‘வெந்நீர் உள்’ளே போனா. நான் கிணற்றடியிலிருந்து இவ்வளவையும் பார்த்துண்டே இருக்கேன்… மெதுவா அடி மேலே அடிவெச்சுப் பூனை மாதிரி போனேன். ‘அவா’ பின்னம் பக்கம் மட்டும்தான் தெரியறது. ஒரு தட்டுப் பாலையும் புகுந்து விளாசிண்டிருக்கா. ‘டப்’னு கதவை மூடிட்டேன்… உள்ளே சிக்கிண்ட உடனே பாலை மறந்துட்டுக் கதவைப் பிறாண்டறதே. ”மாமி… மாமி! ஓடி வாங்கோ ஓடி வாங்கோ! ‘பெரியவா’ இங்கே சிக்கிண்டா”ன்னு கத்தறேன். மாமி வந்து பாக்கறா… பூனை உள்ளேயே கத்திண்டிருக்கு. ”என்னடா! ‘வெந்நீர் உள்’ளே பூனையெ வெச்சு மூடிட்டா, நாம எப்படி உள்ளே போறது? நாம உள்ளே போறச்சே அது வெளியே போயிடாதோ!” ”இப்பத்தான் முதல் கட்டம் முடிஞ்சி ருக்கு மாமி. அதிலேயே ஜெயம். நீங்க உள்ளே போங்க… கடைசிக் கட்டத்திலே கூப்பிடறேன்.” மாமி மனசிலே அந்தப் பெருச்சாளி வதம் ஞாபகம் வரது போல இருக்கு. ”அம்பி வேண்டாண்டா. அதை ஒண்ணும் பண்ணிடாதே. ஜன்மத்திற்கும் மகா பாவம், வேண்டாம்.” ”நான் அதைக் கொல்லலை மாமி. கோணியிலே போட்டுக் கொண்டுபோய் வெரட்டிவிட்டுடறேன்.” ”ஆமா.. வெரட்டிட்டு நீ திரும்பி வரதுக் குள்ளே அது இங்கே வந்து நிக்கும்.” – ஜெயா மாமி பரிகாசம் செய்துவிட்டுப் போனாள். நான் மனத்திற்குள்ளே நெனச்சுண்டேன். அதைத் ‘திரும்பி வராத ஊரு’க்கு அனுப்பிச்சுட்டுத்தானே வரப் போறேன். அக்ரஹாரத்திலே அன்னிக்கு நான்தான் ஹீரோ! விளையாடும்போது என்னைச் சேர்த்துக்காத பையன்களெல்லாம் அன்னிக்கு என் பின்னாடி வரான்கள். நான் பூனையைக் கோணியிலே கட்டிண்டு போறேன். ‘ஹோ’ன்னு கத்திண்டு என் பின்னாடி பையன்களெல்லாம் வரா. எங்கம்மா வாசல்லே வந்து நின்னுண்டு திட்டறா. ”ஏ, கடன்காரா! கட்டேல போறவனே..அழிஞ்சிப்போகாதே. பூனை பாவத்தைக் கொட்டிக்காதே. ஒரு முடி விழுந்தாலும் எடைக்கு எடை தங்கம் தரணும்பா. உங்கப்பா வரட்டும்… சொல்லி உன்னைக் கொன்னு குழியை வெட்டி…” அதை நான் காதிலேயே வாங்கிக்கலை. கோணியைத் தூக்கிண்டு தெருக்கோடியிலே இருக்கற மண்டபத்திலே போய் உக்காந்துட்டோம் எல்லோரும். ”கோணியிலேருந்து பூனையை எடுத்து ஒரு கயித்திலே கட்டிப் பிடிச்சுண்டா. வேடிக்கை காட்டலாம்டா”னு உத்தண்டம் யோசனை சொல்றான். ஆனால், பூனைக்கு யார் கயிறு கட்டறது? ”அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். அந்தக் கடா மீசைக்காரன் இப்போ வருவான். அவன்கிட்டே குடுத்தாப் போதும். அப்படியே கோணியோட வச்சு ஒரு ‘சதக்’… ஆட்டம் குளோஸ்!” ”அவன்கிட்டே நீதான் கேக்கணும்” என்று அவன் வருவதற்கு முன்னாடியே பயப்பட ஆரம்பிச்சுட்டான் சுந்தரம். இந்தப் பையன்களை வெச்சிண்டு இந்தக் காரியம் செய்யறது சரின்னு தோணலை. பயந்துடுவான்கள். ”டேய்..! நீங்கள்லாம் ஆத்துக்குப் போங்க. அவன் வெட்டறதைப் பார்த்துப் பயப்படுவேள். அப்புறம் உங்கம்மா என்னை வைவா!” பையன்களையெல்லாம் வெரட்டறேன். ”அன்னிக்கு அங்கே ஆட்டை நறுக்கினாளே… நீ, காட்டினியே… நான் பயந்தேனா?… நான் இருக்கேண்டா.” ”ஆனா, ஒண்ணு… இந்த விஷயத்தை யாரும் ஆத்துலே போய் சொல்லப்படாது. சத்தியம் பண்ணுங்கோ!”ன்னு கேட்டேன். ”சத்தியமா சொல்ல மாட்டோம்.” – எல்லோரும் சேர்ந்து ஒரு கோரஸ். கடாமீசைக்காரனை நாங்களெல்லாம் எதிர்பார்த்திண்டிருக்கோம். கடைசீலே சாயங்காலம் நாலு மணிக்கு ஆட்டு மேலே உட்கார்ந்து ஆள் சவாரி பண்ற மாதிரி தெருக்கோடியிலே அவன் வரது தெரியறது. பையன்களெல்லாம் மண்டபத்துலே ஆளுக்கொரு தூண் பின்னாலே ஒளிஞ்சிண்டாங்க: ”நாங்கெல்லாம் இங்கேயே இருக்கோம், நீ போய் கேளுடா”ன்னு என்னைத் தள்ளிவிட்டான்கள். எனக்கென்ன பயம்? கடா மீசைக்காரன் கிட்டக்கே வந்துட்டான். நான் ஒரு குட்மார்னிங் வச்சேன். அவனும் எனக்கு ஒரு சலாம் போட்டானே! அவன் என் பக்கத்திலே வந்து இரண்டு காலையும் தரையிலே ஊணிண்டு சைக்கிள்லேருந்து எழுந்திருக்காமயே நிக்கிறான். அம்மாடி… அவன் எவ்வளவு உசரம்! நான் அவனை அண்ணாந்து பார்த்துச் சொல்றேன். ”ஒரு சின்ன உதவி…” ”அதென்ன கோணியிலே?” – அவன் குரல் கிருஷ்ணலீலாவிலே வர்ற கம்சன் குரல் மாதிரி இருந்தது.”பூனை… ரொம்ப லூட்டி அடிக்கிறது. அதுக்காக அதைக் கொன்னுடறத்துக்காகப் பிடிச்சுண்டு வந்திருக்கேன்.” ”நீயேவா புடிச்சே?” – நான் பெருமையா தலையை ஆட்டறேன். அவன் மண்டபத்திலே ஒளிஞ்சிண்டிருக்கிற பையன்களையெல்லாம் ஒரு தரம் பார்க்கறான். என்னையும் பார்க்கறான். நான் அந்தக் காக்கிப் பைக்குள்ளே இருக்கற கத்தியோட பிடியையே பார்க்கறேன். ”வெட்டறதுக்குக் கத்தி வேணுமா?”ன்னு அவன் என்னைப் பார்த்துக் கேக்கறான்.”ஊஹூம்… நீங்கதானே ஆடெல்லாம் வெட்டுவேள். அதனாலே நீங்களே இதை வெட்டணும்.””ஓ!”ன்னு யோசிச்சிண்டே அந்தக் கத்தியை எடுக்கறான். பெரிய கத்தி! விளிம்பிலே கட்டை விரலை வெச்சு கூர் பார்த்துண்டே அவன் சொல்றான்; ”பூனையை இதுவரைக்கும் நான் வெட்டினதே இல்லே… ஏன்னா, நாங்க பூனையைச் சாப்பிடறதுமில்லே… நான் வெட்டித் தரேன். நீங்க சாப்பிடுவீங்களா?” ”உவ்வே! வெட்டிக் குழியிலே புதைச்சுடலாம்.” ”அப்பத்தான் பாவம் இல்லே. நான் எதுக்கு ஆட்டை வெட்டறேன்? எல்லாரும் அதைத் தின்றாங்க. அவங்க சாப்பிடலேன்னா நான் வெட்டவும் மாட்டேன். நான் ஆடு வெட்டறப்ப, நீ பார்த்திருக்கிறியா?” ”ஓ, பார்த்திருக்கேனே, நீங்க ஏதோ மந்திரம் சொல்லி வெட்டுவீங்க. அதே மந்திரத்தைச் சொல்லி இதையும் வெட்டுங்க. அப்போ பாவமில்லே.” ”மந்திரம் சொல்றது அதுக்கில்லே தம்பி. ஒரு தொளிலை ஆரம்பிக்கறப்ப ஆண்டவனைத் தொளுவறது இல்லையா? அதான். வெட்டறது விளையாட்டு இல்லே தம்பி. அதுதான் என் குடும்பத்துக்கெல்லாம் கஞ்சி ஊத்தற தொளில். அதுக்காவ உங்கிட்டே காசுகீசு கேக்கலே. நான் வெட்டறேன். யாராவது சாப்பிட்டா சரி. எதையும் வீணாக்கக் கூடாது. வீணாக்கினா அது கொலை. அது பாவம். என்னா சொல்றே?” ”இன்னிக்கு மட்டும் ஒரு தடவை விளையாட்டுக்காக இந்தப் பூனையை வெட்டுங்களேன்.” அவன் லேசாச் சிரிச்சு, என் மோவாயை நிமிர்த்தி, கையிலே ஏத்திண்டே சொன்னான்; (அவன் விரல் எல்லாம் பிசுபிசுன்னு இருந்தது) ”வெளையாட்டுக்குக் கொலை பண்ணச் சொல்றியா? த்சு… த்சு..! வெளையாட்டுக்கு வெட்ட ஆரம்பிச்சா, கத்தி பூனையோட நிக்காது தம்பி. நான் உன்னைக் கேக்கறேன். வெளையாட்டுக்கு உன்னை வெட்டினா என்ன?” எனக்கு உடல் வெடவெடக்கிறது. ”ம்… அந்தப் பூனை விஷமம் பண்றதே?” ”நீ வெஷமம் பண்றது இல்லியா? பூனைன்னா வெஷமம் பண்ணும். வெஷமம் பண்ணாத்தான் பூனைன்னு பேரு. அதே மாதிரி நீயும் வெஷமம் பண்ணுவே, சின்னப் பிள்ளைங்கன்னா வெஷமம் பண்ணும்தான். பூனையும் வெஷமம் பண்ணட்டுமே! வீட்டிலே அடுப்பங்கரையைப் பூட்டிவெக்கச் சொல்லு”ன்னு சொல்லிண்டே என் கையிலே இருந்த கோணியைப் பிரிச்சு உதறினான். ஒரே ஜம்ப்! திரும்பிப் பார்க்காமே ஓடிடுத்து பூனை. பையன்களெல்லாம் சிரிச்சாங்க. கடா மீசைக்காரனும் சிரிச்சான். நானும் சிரிச்சேன்! அன்னிக்கு ராத்திரியெல்லாம் நான் அழறேன். பூனை தப்பிச்சுப் போயிடுத்தேன்னு இல்லே… ‘நான் விளையாட்டாக் கொலை செய்த வளையல் பூச்சி, மரவட்டை, தும்பி, ஓணான், பெருச்சாளி, பாவம்! அந்த நாய்… எல்லாத்தையும் நெனைச்சிண்டு அழுதேன்… நான் இப்ப அந்த அக்ரஹாரத்திலே இல்லே. இப்பவும் அந்த அக்ரஹாரத்திலே அந்த மாதிரி ஒரு பூனை இருக்கும், இல்லையா?