Home Blog Page 6071

சரத்குமார் எம்.எல்.ஏ இரங்கல்

TENKASI தென்காசி சரத்குமார் எம்.எல்.ஏ இரங்கல் குற்றாலத்தில்  அருவியில்  குளித்து கொண்டிருந்த போது ஏற்பட்டதிடீர் வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்ட பண்பொழியை சேர்ந்த முருகன் என்பவரது மகள் துர்காதேவி  (12)  இறந்துவிட்டார் என்ற செய்தியை கேட்டு மிகவும் வருந்துகிறேன் துர்கா தேவியை இழந்து வாழும் அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்தஇரங்கலை தெரிவித்து கொள்கிறேன் இறைவன் இவர்கள் குடும்பத்திற்கு துணை இருக்கட்டும் sarath 22.4இவ்வாறு தென்காசி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.சரத்குமார்  இரங்கல் குறிப்பில் தெரிவித்துள்ளார்

குற்றால வெள்ளத்தில் சிக்கிய சிறுமியின் சடலம் மீட்பு

TENKASI தென்காசி

நேற்று முன்தினம் குற்றாலத்தில் ஏற்பட்டதிடீர் வெள்ளத்தில் இழுத்துசெல்லப்பட்ட
பண்பொழி யை சேர்ந்த முருகன் என்பவரது மகள் துர்காதேவி  (  12 )என்ற  சிறுமியை தீயணைப்புதுறை மற்றும் காவல் துறையினர் இணைந்து தேடிவந்தனர் இந்நிலையில் அந்த சிறுமியின் சடலம் குற்றாலத்திலிருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் காசிமேஜர்புரம் அருகே சிற்றாற்றில் தீயணைப்புதுறை மற்றும் காவல் துறையினரால் மீட்கப்பட்டது

மனுக்கள் ஆய்வு சரத்குமார் எம். எல் .ஏ

sarath officeTENKASI தென்காசி தென்காசி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.சரத்குமார் தொகுதி மக்களிடம் இருந்த பெறப்பட்ட மனுக்களை படிக்கிறார் பொதுமக்களின் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கிறார் ,தான் தொகுதியில் இல்லாத சமயம் பொதுமக்களின் மனுக்களை பெற அவர்களுக்கு தேவையான தகவல்களை வழங்க ஓய்வு பெற்ற அரசு அதிகாரியை நியமித்துள்ளார்

குற்றாலம் வெள்ளத்தில் சிக்கிய சிறுமி

தென்காசி, குற்றாலம் மெயினருவியில்
வெள்ளத்தில் சிக்கிய சிறுமி குற்றாலம் பகுதியில் பெய்த கன மழையால் மெயினருவியில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிறுமி இழுத்துச் செல்லப்பட்டார்.
நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் கோடை வெயிலின் தாக்கம் குறைந்து காணப்படுகிறது. மாலையில் குற்றாலம், தென்காசி மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் கன மழை பெய்தது. குற்றாலம் மலை பகுதியில் கன மழை நீடித்ததால் அருவிக்கு வரும் தண்ணீர்வரத்து அதிகரித்து திடீர் வௌ;ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது அருவியில் குளித்துக் கொண்டிருந்த பண்பொழி முருகன் மகள் துர்க்காதேவி (12) என்ற சிறுமி வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டார்
இதனை அறிந்த சுற்றுலாப் பயணிகள் அச்சிறுமியை காப்பாற்ற போராடினார்கள். சிறுமி வெள்ளத்தில் அண்ணாசிலை ரோடு வரை இழுத்து வரப்பட்டதை சுற்றுலாப் பயணிகள் பார்த்துள்ளனர்அதன் பின்னர்பள்ளத்தில் தண்ணீர் சீறி பாய்ந்ததில் சிறுமி மாயமானார். தீயணைப்பு வீரர்கள், போலீசார் மற்றும் பொதுமக்கள் சிறுமியை தேடும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்

மதுரை சித்திரைத் திருவிழா – 2015

மதுரை ஸ்ரீ மீனாக்ஷியம்மன் திருக்கோயில் சித்திரைத் திருவிழா நேற்று(ஏப்ரல் 21,2015) நற்பகல் கொடியேற்றத்துடன் துவங்கியது. அதனைத் தொடர்ந்து, மாலையில் மதுரையின் நான்கு மாசிவீதிகளில் நடந்த திருவீதி உலாவில், ஸ்ரீ சுந்தரேஸ்வரர் உடனுறை பிரியாவிடை கற்பக விருட்ச வாகனத்திலும், ஸ்ரீ மீனாக்ஷி அம்மன் சிம்ம வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இன்று முதல் 17 நாட்களுக்கு வெகு விமரிசையாக இந்தத் திருவிழா கொண்டாடப்படுகிறது. அதன் விபரம் வருமாறு: ஏப்ரல் 21: செவ்வாய்க்கிழமை – கொடியேற்றம் , கற்பக விருட்சம், சிம்ம வாகனம் ஏப்ரல் 22: புதன்கிழமை – பூதவாகனம், அன்ன வாகனம், ஏப்ரல் 23: வியாழக்கிழமை – கைலாச பர்வதம், காமதேனு வாகனம், ஏப்ரல் 24: வெள்ளிக்கிழமை – தங்கப்பல்லக்கு ஏப்ரல் 25: சனிக்கிழமை – வேடர் பரி லீலை, தங்கக் குதிரை வாகனம், ஏப்ரல் 26: ஞாயிற்றுகிழமை – சைவ சமய ஸ்தாபித வரலாறு லீலை, ரிஷப வாகனம், ஏப்ரல் 27: திங்கட்கிழமை – நந்தீஸ்வரர், யாழி வாகனம், ஏப்ரல் 28: செவ்வாய்க்கிழமை – ஸ்ரீ மீனாக்ஷி பட்டாபிஷேகம், வெள்ளி சிம்ஹாசன உலா, ஏப்ரல் 29: புதன்கிழமை – ஸ்ரீ மீனாக்ஷியம்மன் திக்விஜயம், இந்த்ர விமான உலா, ஏப்ரல் 30: வியாழக்கிழமை – ஸ்ரீ சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், யானை வாகனம், புஷ்பபல்லக்கு. மே 1: வெள்ளிக்கிழமை – திருத்தர், – சப்தாவர்ண சப்பரம் மே 2: சனிக்கிழமை – தீர்த்தம், – வெள்ளி ரிஷப சேவை. மே 3: ஞாயிற்றுக்கிழமை – தள்ளாகுளத்தில் எதிர்சேவை. மே 4: திங்கட்கிழமை – ஸ்ரீ கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல் மே 5: செவ்வாய்க்கிழமை – வண்டியூர் தேனூர் மண்டபம், இரவு தசாவதார காட்சி – ராமராயர் மண்டபம். மே 6: புதன்கிழமை – காலை- மோகன அவதாரம், இரவு-புஷ்பபல்லக்கு மே 7: வியாழக்கிழமை – ஸ்ரீ கள்ளழகர் திருமலை எழுந்தருளல். இதற்கான ஏற்பாடுகளை தக்கார் திரு. கருமுத்துக் கண்ணன் அவர்களும், இணை ஆணையர் திரு. நடராஜன் அவர்களும் செய்து வருகின்றனர்.

கருணைக் காஞ்சி கனகதாரை – பாகம் 10

கன்னடத்துல ‘ஓடையாரு’—ஸ்வாமி – உடையவர் ஒரே அர்த்தம்-கிறது தெரியுமோ?” என்று கேட்டார். “பெரியவா சொல்லித் தெரியும். ‘ஸ்வம்’-னா சொத்து, ‘ஸ்வம்-த’-ங்கிறதுலேந்துதான் ‘சொந்தம்’, ‘சொத்து’ ரெண்டும் வந்திருக்கு. அதுக்கு சுத்தத் தமிழ் வார்த்தை ‘உடைமை’. ஸகல சராசரமும் எவனுக்கு ‘ஸ்வம்’மோ, உடைமையோ அவனே ‘ஸ்வாமி’, ‘உடையவர்’-னு பெரியவா சொல்லியிருக்கா.” ஸ்ரீ சரணர் முகத்தில் சந்தோஷம் தெரிந்தது. சொன்னார்:’வைஷ்ணவா ராமானுஜரை உடையவர்-னா, விஜயநகர டைனாஸ்டிக்கரா இங்கே ஆட்சி பண்ணிண்டு இருக்கச்சே, நம்ம ஆசார்யாளை ஓடையாரு-வா நெனச்சு, அப்டியே சொல்லி, ஜனங்ககிட்டேயும் அதுவே பழக்கத்துல வந்து, அதுவே ‘லீக’லாக்கூட எங்க டைட்டிலாயி, ‘சிக்குடையார் மேரை’, ‘சிக்குடையார் மான்யம்’ எல்லாமே காணிக்கைகளுக்குப் பத்ரங்கூட எழுதறதா ஆச்சு. “ஏன் ‘ஒடையாரு’ன்னு மட்டுமில்லாம, ‘சிக்க’ன்னும் போட்டு ‘சின்ன ஸ்வாமி’யாகத்தான் சொன்னா-ன்னு கேள்வி வரதோல்லியோ? இந்தக் காஞ்சிபுரத்துல ‘ஸ்வாமி’- ‘ஒடையாரு’ன்னு மொத ஸ்தானம் குடுத்து அவா சொன்னது ஏகாம்பரேச்வரரைத்தான். அவரும் ஸ்வாமி, அவருக்கு அடுத்தாப்ல ரெண்டாம் ஸ்தானம் இந்த மடத்து ஸ்வாமிகளுக்குத்தான்-னு வெச்சு இவரும் ஸ்வாமிதான்-னு அவா பெரிய மரியாதைதான் பண்ணினா; ஆசார்யாளைக் கொளச்சு சொல்லலை, ஆனாலும் ரெண்டையும் ‘ஒடையாரு’-ன்னா கொழறுபடியாத்தானே ஆகும்? வித்யாஸம் தெரியனுமோல்லியோ? அதுக்காகத்தான் ஏகாமபரேச்வரருக்கு ‘தொட்ட ஒடையாரு’- ‘தொட்ட’ன்னா ‘பெரிய’ அவர் பெரிய ஸ்வாமி – சங்கராசார்யார் ‘சிக்க ஒடையாரு’, ‘சின்ன ஸ்வாமி’ன்னு சொன்னா__ பெரியசாமி, சின்னசாமி என்ற பேர் வெச்சுக்றதே இதிலேருந்துதான் வந்ததோ, என்னவோ?—“ “இப்டி ஆசார்யாளை, ஆசார்யாள் மடத்து ஸ்வாமிகள் எல்லாரையும் ‘சின்ன ஸ்வாமி’ன்னு சொல்றதா ஏற்பட்டிருப்பதால், நீ கலவைப் பெரியவா விஷயமா சொன்னதுக்கும் வேறே ஒரு மாத்தம் (மாற்றம்) சொல்றேன். கலவை ஸ்வாமிகள் ரெண்டு பேர்ல, பெரியவரை ‘பெரிய ஸ்வாமி’-ன்னும், அடுத்தவரை ‘சின்ன ஸ்வாமி’ன்னும் வேணா சொல்லலாம்-“ ஆயினும் ‘சின்னப் பெரியவா’ளை ஸ்ரீ சரணர் ஏற்கவில்லைதான்! அவ்வாறு எழுதிய என்னிடம் அவர் குறைகண்டதாக அடிகொண்ட அகந்தை துரத்திக் கொண்டு வந்தது. என்னை ஜஸ்டிஃபை செய்து கொள்ள, “நம்மாழ்வார் ‘சிறுமா மனிசர்’னு சின்னதையும் பெரிசையும் சேத்து மஹான்களைக் குறிப்பிட்டுப் பாடியிருக்கிறார்’ என்றேன். பெரியவாளையே நான் அவரைப் பற்றி எழுத ஆரம்பித்த வரலாற்றில் அப்படி வர்ணித்திருந்தேன். அவரது ஜயந்தியான வைகாசி அனுஷத்தின் பல பெருமைகளைச் சொல்லுமிடத்தில், அதே நாளில் பிறந்த ஸ்ரீ வைஷ்ணவப் பெரியாரான பராசர பட்டரைச் சொல்லி, அவர் குழந்தையாயிருந்த போதே ‘சிருமாமனிசர்’ என்பதற்குப் பொருள் கேட்டுத்தெரிந்து கொண்ட பொருத்தத்தைக் காட்டியிருந்தேன். -தொடரும்.. ஸ்ரீ ரா.கணபதி அண்ணா அவர்களின் தொகுப்பில் இருந்து பிரசுரிக்கபட்டுள்ளது.

பூஷணை நீக்கி சர்வாதிகாரி என கேஜ்ரிவார் நிரூபித்துவிட்டார்: ஷாசியா இல்மி

புது தில்லி: ஆம் ஆத்மி கட்சியிலிருந்து பிரசாந்த் பூஷன் மற்றும் யோகேந்திர யாதவ் ஆகியோரை நீக்கியதன் மூலம் அரவிந்த் கேஜ்ரிவால் சர்வாதிகாரி என நிரூபித்துவிட்டார் என அக்கட்சியிலிருந்து விலகிய ஷாசியா இல்மி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், அரவிந்த் கேஜ்ரிவால் சர்வாதிகாரி என்பதை இது காட்டுகிறது. கட்சியின் கொள்கைகளை அவர் அலட்சியம் செய்வதுடன், கட்சியையே தனது கைக்குள் கொண்டு வந்துவிட்டார் ” என்று கூறியுள்ளார். கேஜ்ரிவாலின் நடவடிக்கைகள் பிடிக்காமல் தில்லி சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பே அக்கட்சியிலிருந்து இல்மி விலகினார். பின்னர் அவர் பாஜகவில் சேர்ந்தார்.

சர்ச்சைப் பேட்டி: ஈ.வி.கே.எஸ்., மீது அமைச்சர் விஜய பாஸ்கர் அவதூறு வழக்கு

சென்னை: அதிகாரி மரணத்தில் தொடர்புள்ளதாக குற்றம் சாட்டி பேட்டியளித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு எதிராக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். சென்னை மாவட்ட முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில், தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சார்பில், மாநகர அரசு வழக்கறிஞர் அவதூறு வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில்… கடந்த மார்ச் 23ஆம் தேதி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அளித்த பேட்டி ஒன்றில், அதிகாரி மரணத்தில் அமைச்சருக்கு தொடர்பு என்று கூறியுள்ளார். அவர் தெரிவித்த கருத்து ஆதாரமற்றது. இதனால், பொதுமக்கள் மத்தியில் அமைச்சருக்கு உள்ள நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. எனவே, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் ஏண்று கூறப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

மத்திய அரசு மொழி விருதுகளில் இந்திரா, ராஜீவ் பெயர் நீக்கம்: காங்கிரஸ் கண்டனம்

புதுதில்லி: இந்தி மொழி விருதுகளுக்கு முன்னர் சூட்டப்பட்டிருந்த இந்திரா மட்டும் ராஜீவ் காந்தி பெயர்களை மத்திய அரசு நீக்கி உள்ளது. இதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி பெயர்களில் வழங்கப்பட்ட விருதுகள் தற்போது, ராஜ் பாஷா கீர்த்தி புரஸ்கார், ராஜ் பாஷா கவுரவ் புரஸ்கார் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. ஒவ்வோர் ஆண்டும் இந்தி மொழி நாளில் மத்திய உள்துறை அமைச்சகம் இந்த விருதை வழங்கும். கடந்த மாதம் 25-ம் தேதி இந்த விருதுகளுக்கு பெயர் மாற்றம் செய்யப்பட்டதாக நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை சிறுபிள்ளைத்தனமானது என காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. விருதுகளின் பெயர்கள் மாற்றப்பட்டதில் அரசியல் எதுவும் இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நிர்வாக நடவடிக்கையாகவே இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

பூசாரிகள் பூணூல் அறுப்புக்கு தமிழிசை சௌந்தரராஜன் கண்டனம்

சென்னை: சென்னையில் பூசாரிகளின் பூணூலை திராவிடர் விடுதலைக் கழகத்தினர் அறுத்துள்ளதற்கு பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

மயிலாப்பூர் கோவிலில் பிரார்த்தனை முடித்துக் கொண்டு மாதவப்பெருமாள் கோவில் தெருவில் உள்ள தன் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த 80 வயது நிரம்பிய விஸ்வநாத குருக்களைத் தாக்கி துன்புறுத்தி அவரது பூணூலையும்  திராவிடர் விடுதலை கழகத்தினர் அறுத்தெறிந்துள்ளனர். இந்தச் செயல் மிக வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அவரவர் கொள்கைகளை ஓங்கிப்பிடித்து கருத்துகளை வெளிப்படுத்த அனைவருக்கும் உரிமை உண்டு.

அதற்காக ஏதுமறியாத அப்பாவி பெரியவரை அவரது வீட்டுக்கு அருகிலேயே, நடுத்தெருவில் தாக்கியது மிகக் கொடூரமான செயல் என்பதோடு, அனைத்து தரப்பினராலும் வன்மையாகக் கண்டிக்கத்தக்க ஒன்றாகும்.மதம் மற்றும் கடவுள் நம்பிக்கைகளும் அவரவரின் விருப்பு, வெறுப்புகளைப் பொருத்தது. இதில் மற்றவர் தலையீடு என்பது தனிநபர் சுதந்திரத்தில் தலையிடுவதற்கு ஒப்பாகும்.

வன்முறையில் ஈடுபட்டுள்ள திராவிட விடுதலைக் கழகத்தின் 4 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது சற்றே ஆறுதல் அளிக்கும் செய்தியாக உள்ளது. எனினும், தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து இம்மாதிரியான அராஜகங்கள் தொடராத வண்ணம் சட்டம் ஒழுங்கினைப் பேண வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.