Home Blog Page 6087

விண்ணப்பம் செய்து 60 நாட்களில் புதிய ரேஷன் கார்டு: அமைச்சர் அறிவுறுத்தல்

சென்னை: புதிதாக விண்ணப்பம் செய்பவர்களுக்கு 60 நாட்களுக்குள் ரேஷன் கார்டு வழங்க வேண்டும் என்று உணவுத் துறை அமைச்சர் காமராஜ் அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அலுவலர்களின் செயல்பாடுகள் குறித்த மாநில அளவிலான ஆய்வு கூட்டம், சென்னை, சேப்பாக்கம் எழிலகத்தில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தலைமையில் நடைபெற்றது. விலையில்லா அரிசி வழங்கும் திட்டத்திற்கு, மாதாந்திர ஒதுக்கீட்டு ஆணை அந்த மாதத்தின் 3–ந் தேதிக்குள்ளாகவே பிறப்பிக்கப்பட வேண்டும் என்று அதிகாரிகளை அமைச்சர் வலியுறுத்தினார். மாதந்தோறும் 2–ம் சனிக்கிழமைகளில் நடத்தப்படும் குறைதீர் முகாம்களில், இம்மாதத்தில் இதுவரையில், 3 லட்சத்து 53 ஆயிரத்து 914 மனுக்கள் பெறப்பட்டு, அவற்றில் 3 லட்சத்து 37 ஆயிரத்து 661 மனுக்கள் அன்றைய தினத்திலேயே தீர்வு செய்யப்பட்டும், மீதமுள்ள 16 ஆயிரத்து 253 மனுக்கள் பின்னரும் தீர்வு செய்யப்பட்டுள்ளன. இன்று வரை 11 லட்சத்து 10 ஆயிரத்து 871 புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், 24 ஆயிரத்து 626 புதிய குடும்ப அட்டைகள் மனுதாரர்களுக்கு வழங்குவதற்கு தயாராக உள்ளது. இன்று வரை, 3 லட்சத்து 70 ஆயிரத்து 538 போலி அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டு ரத்து செய்யப்பட்டுள்ளன. அத்தியாவசியப் பொருட்கள் கடத்தல் தடுப்பு நடவடிக்கைகள் மூலம் 23 ஆயிரத்து 339 நபர்கள் கைது செய்யப்பட்டு அவர்களுள் 663 பேர் தடுப்புக்காவல் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்று இந்த கூட்டத்தில் அமைச்சர் காமராஜ் பேசினார். புதிய ரேஷன் அட்டைகள் கோரி பெறப்படும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து 60 நாட்களுக்குள் அட்டைகள் வழங்கப்பட வேண்டுமென்றும் அதிகாரிகளை அவர் அறிவுறுத்தினார்.

ஐபிஎல் 8 -மும்பையுடன் வெற்றி: சென்னைக்கு ‘ஹாட்ரிக்’

bravo-raina-cskvsmi-ipl மும்பை: ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி சீஸன் 8ல், நேற்று நடந்த சென்னை மும்பை அணிகளுக்கு இடையிலான போட்டியில், சென்னை அணி அபாரமாக சேஸ் செய்து மும்பை அணி நிர்ணயித்த 183 ரன்களைக் கடந்து வெற்றி பெற்றது. மும்பை வாங்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற 12ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை அணியும், மும்பை அணியும் மோதின. சென்னை அணியில் மாற்றம் செய்யப்படவில்லை. மும்பை அணியில் காயத்தால் விலகிய ஆரோன் பிஞ்ச்க்கு பதிலாக லென்டில் சிமோன்ஸ் சேர்க்கப்பட்டார். ஸ்ரீயாஸ் கோபால், உன்முக்த் சந்த் நீக்கப்பட்டு அம்பதி ராயுடு, ஹர்பஜன்சிங் இருவரும் இடம்பெற்றனர். முதலில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். அந்த அணி முதல் 12 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது. பின்னர் வந்த ஹர்பஜன்சிங் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் என 24 ரன் எடுத்து வெளியேறினார். மும்பை அணி 10 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 62 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மாவும், பொல்லார்ட்டும் கூட்டணி அமைத்து ஆட்டத்தின் போக்கை தலைகீழாக மாற்றினர். அணியின் ஸ்கோர் 132 ரன்களை எட்டிய போது, ரோகித் சர்மா 50 ரன்களில் ஆட்டம் இழந்தார். சிறிது நேரத்தில் பொல்லார்ட் 21 பந்துகளில் அரைசதத்தை கடந்தார். 6ஆவது விக்கெட்டுக்கு இறங்கிய அம்பதி ராயுடுவும் அதிரடி காட்ட மும்பை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 183 ரன் குவித்தது. 184 ரன் என்ற இலக்கை நோக்கி களம் இறங்கிய சென்னை அணியில் வெய்ன் ஸ்மித்தும், பிரன்டன் மெக்கல்லமும் நல்ல துவக்கத்தை அளித்தனர். இந்த ஜோடியின் எக்ஸ்பிரஸ் வேகத்திற்கு சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் முற்றுப்புள்ளி வைத்தார். பிரன்டன் மெக்கல்லம் 46 ரன்னிலும், ஸ்மித் 62 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். பின்னர். பிளிஸ்சிஸ் 11 ரன்னிலும், கேப்டன் தோனி 3 ரன்னிலும் ஆட்டம் இழந்த போதும், சுரேஷ் ரெய்னாவும், வெய்ன் பிராவோவும் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். பிராவோ ஒரு சிக்சருடன் ஆட்டத்தை முடித்து வைத்தார். இதை அடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 16.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரெய்னா 43 ரன்களுடனும் பிராவோ 13 ரன்னுடனும் ஆட்டத்தை நிறைவு செய்தனர். இதை அடுத்து சென்னை அணி தொடர்ச்சியாக 3வது வெற்றி பெற்றது.

3 நாடுகள் பயணம் முடித்து நாடு திரும்பினார் மோடி

modi-harpper புது தில்லி: பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, பிரான்ஸ், ஜெர்மனி, கனடா ஆகிய 3 நாடுகளில் 9 நாட்கள் மேற்கொண்ட சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து, இன்று தாயகம் திரும்பினார். இந்தியா திரும்பிய பிரதமர் மோடிக்கு. தலைநகர் தில்லியில் பா.ஜ,க தலைவர்களும் ஆதரவாளர்களும் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். முன்னதாக, கடந்த வாரம் பிரான்ஸுக்குச் சென்று, பின்னர் ஜெர்மனி, கனடா ஆகிய மூன்று நாடுகளில் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டார் மோடி. வெள்ளிக்கிழமை நேற்று தனது பயணத்தை நிறைவு செய்து, பிரதமர் நரேந்திர மோடி கனடாவில் இருந்து தாயகம் புறப்பட்டார். கனடாவில் இருந்து இந்தியா புறப்படும் முன்பாக டிவிட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்தபோது, கனடாவில் இருந்து திருப்தியுடன் புறப்படுகிறேன். இந்தப் பயணம், இந்தியா-கனடா இடையேயான உறவுகளை மேலும் வலுப்படுத்தும். கனடா நாட்டு மக்களுக்கு நன்றி.

சிறந்த மனிதரும், அருமை நண்பருமான கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பருக்கு மனம் கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டார்.  

மோடியின் இந்தப் பயணத்தில், பிரான்ஸூடன் 36 ரஃபேல் போர் விமானங்கள் வாங்க ஒப்பந்தம், ஜெய்தாப்பூரில் அணு மின் திட்டத்தை தொடங்குவது உள்ளிட்டவை தொடர்பான முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. ஜெர்மனியுடன் இரு தரப்பு பொருளாதார ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கு இந்தியா ஒப்பந்தம் செய்துகொண்டது. இந்தியாவுக்கு அடுத்த 5 ஆண்டுகளில் 3,000 டன் யுரேனியத்தை கனடா வழங்குவதற்கான ஒப்பந்தமும், மோடியின் இந்த பயணத்தில் கையெழுத்தானது குறிப்பிடத்தக்கது.

“அந்தக் கொழந்தைக்கு எப்படி இருந்திருக்கும்னு கொஞ்சம் தெரிஞ்சுக்கிறதுக்குதான்..”

20683_671948076266709_3512172854606087227_n (பெரியவாளின் வேதனை) (வேறு சில எழுத்தாளர்களின் தட்டச்சு முன்பு பதிவு செய்துள்ளேன்.ரா.கணபதியின் எழுத்தில் முதன் முறையாக) கட்டுரை-ரா கணபதி.. தட்டச்சு-வரகூரான் நாராயணன். அவர் ஆஸ்தானம் கொண்டிருந்த தேனம்பாக்கம் சிவாஸ்தானத்தில் அன்று இளங்காலை ஒரே பரபரப்பு,பதைபதைப்பு என்றே சொல்லலாம். உடனிருந்தோர் உறக்கம் கலைந்து பார்க்கும் போது பெரியவாளைக்காணோம். சிவாஸ்தான ஆலயச் சூழலில் முழுதும் தேடிப் பார்த்தும் காண முடியவில்லை. பரபரப்பும் பதைபதைப்பும் ஏற்படாதிருக்குமா? அடியார்கள் சுற்றுப் புறம், அதைக் கடந்தும் சல்லடை போட்டுத் தேடிக் கொண்டே போனார்கள். முடிவாக, அங்கு ஓடிய சிற்றாற்றின் கரையில்…… என்ன கொடூரம்! முட்புதர்கள் மண்டிக் கிடக்கும் ஓரிடத்தில் ஸ்ரீசரணர் சுருண்டு கிடக்கிறார். “அவராக வந்து இங்கு முள்ளுப்படுக்கை உவந்தாரா, அல்லது..?- எண்ணாததெல்லாம் எண்ணி அடியர் கணம் அருகு நெருங்க, அவர் பளிச்சென எழுந்தமிர்கிறார். அந்த மட்டும் வயிற்றில் பால் வார்த்து விட்டார். ஆயினும் திருமேனியில் அப்பினாற்போல முள் அங்கி பூண்டுள்ள கோலம் அடியார்களின் நெஞ்சில் கூர்ப்பாகத் தைக்கிறது. வயது முதிர்ந்த ஒரு பக்தர், “ஐயோ, பெரியவா! இதென்ன சோதனை?” என்று வாய்விட்டு அலறுகிறார். பெரியவாள் சொல்கிறார். “இந்த நாள்ல ஜனஸமூஹத்தை வசீகரிச்சுப் பிடிச்சுண்டிருக்கிறதா, கை நெறய ஸம்பாதிக்கிறதுக்குத் தினுஸு தினுஸாப் படிப்புகள் இருக்கு. அப்படி இருக்கிறப்ப, என் வார்த்தையை மதிச்சு,(நெகிழ்ந்த குரலில்) என்னை நம்.பிண்டு சில தாயார்-தோப்பனார்மார் தங்கள் குழந்தைகளை வருமானம், ‘ஆனர்’,’ஃபாஷன்’ எதையும் கவனிக்காம, (வேத) பாடசாலைகளுக்கு அனுப்பிண்டிருக்கா. அந்தக் கொழந்தைகளும் ஊர் ஒலகத்துல ஒடனொத்த கொழந்தைகள் தினம் ஒரு ட்ரெஸ், வேளைக்கு ஒரு ஹோட்டல்னு இருந்துண்டிருக்கிறப்ப, ஒரு மூணறை மொழ சோமனைச் சுத்திண்டு, போடற உண்டைக் கட்டியைத் தின்னுக்கிண்டு, வெளில தலை காட்டினாலே, ‘சிண்டுடோய்!னு பரிஹாஸத்தை வாங்கிக் கட்டிக்கிண்டு, தொண்டை தண்ணிவத்த ஸந்தை சொல்லிண்டிருக்குகள்.” ஏதோ ஓரிடத்தில் ஸ்ரீ மடத்தின் ஆதரவில் நடைபெறும் பாடசாலையைக் குறிப்பிட்டுவிட்டுத் தொடர்கிறார். “அங்கே கொழந்தைகள் என்னமோ விஷமம் பண்ணிடுத்துகள்-ங்கிறதுக்காகச் சமையக்கார அம்மா புதுத் தொடைப்பத்தால் அடிச்சுட்டாளாம். வேதம் படிக்கிற அந்தக் கொழந்தைகளுக்கு எப்படி இருந்திருக்கும்னு கொஞ்சம் தெரிஞ்சுக்கிறதுக்குத்தான்.

ஹிந்துத்வம் மதமல்ல; வாழ்க்கை முறை: மோடி

modi-canada வான்கூவர்: ஹிந்துத்துவம் என்பது மதமல்ல; அது வாழ்க்கை முறை என்று, கனடாவில் பிரதமர் நரேந்திர மோடி கூறினார். வான்கூவர் நகரில் உள்ள சீக்கியர் கோயிலுக்கு வியாழக் கிழமை சென்றிருந்த பிரதமர் மோடியும், கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பரும், அங்கு நடைபெற்ற பிரார்த்தனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அப்போது, அவருக்கு நினைவுப் பரிசாக வழங்கப்பட்ட வாளையும், நீள அங்கியையும் இருவரும் பெற்றுக் கொண்டனர். அதன் பின்னர் மோடி பேசுகையில், “கனடாவில் வாழும் சீக்கியர்கள், தங்களின் உழைப்பால் இந்தியாவுக்கு நன்மதிப்பைப் பெற்றுத் தந்திருக்கிறார்கள். தியாகத்துக்கு முன்னுதாரணமாக சீக்கியர்கள் திகழ்வதுபோல, மனிதநேயம் வளர்வதற்கு அனைவரும் பாடுபட வேண்டியது அவசியம்’ என்றார். சீக்கிய மதத்தைத் தோற்றுவித்தவரான குருநானக்கின் போதனைகளையும், சுதந்திரப் போராட்டத்தில் பகத் சிங் உள்ளிட்ட சீக்கியர்களின் பங்களிப்பைக் குறித்தும் மோடி நினைவுகூர்ந்தார்.

தொடர்ந்து, லட்சுமி நாராயண் கோவிலுக்கு மோடியும், ஸ்டீபன் ஹார்ப்பரும் சென்றனர். அங்கே கூடியிருந்தவர்கள் மத்தியில் மோடி பேசியபோது… “மனிதநேயம் வளர்வதற்கு ஹிந்துத்துவம் மூலமாகப் பாடுபட வேண்டியது அவசியம். ஹிந்துத்துவம், என்பது மதம் அல்ல; அது வாழ்க்கை முறை என்ற அருமையான விளக்கத்தை, இந்திய உச்ச நீதிமன்றம் அளித்திருக்கிறது. அந்த விளக்கத்தை நான் நம்புகிறேன். ஹிந்து மதம், அறிவியல் பூர்வமான வழியில் இயற்கையின் நன்மைக்காக செயலாற்றி வருகிறது” என்று கூறினார்.

யூனியன் கூட்டம்

pavoorchatram பாவூர்சத்திரம் கீழப்பாவூர் யூனியன் ரூ.2கோடியே 30லட்சத்திற்கு திட்டப்பணிகள் தேர்வு கீழப்பாவூர் யூனியன் கவுன்சிலர்கள் கூட்டம், union meet தலைவர் எஸ்.செல்வமோகன்தாஸ் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. ஆணையாளர் செல்லப்பாண்டியன், துணைத்தலைவர் உத்திரகுணப்பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குருசாமிபுரத்தில் சிமெண்ட் ரோடு , தெற்கு கழுநீர்குளத்தில் பள்ளிக்கூடம் அருகில் சிமெண்ட் சாலை , இராஜபாண்டி முதல் தாயார்தோப்பு வரை தார் சாலை அமைத்தல் உட்ப்பட 90 திட்டப்பணிகளுக்கு ரூ.2கோடியே 30லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. பாவூர்சத்திரம் அரசு தினசரி சந்தையில் புதிதாக கட்டப்பட்டுள்ள 10கடைகளை விரைவில் திறக்கவும், திறப்பு விழாக்களில் அரசு விதிமுறைப்படி கல்வெட்டுகள் வைக்கவும் முடிவு செய்யப்பட்டது. கவுன்சிலர்கள் மேலும் பல திட்டப்பணிகளுக்கு நிதி ஒதுக்க கோரிக்கை வைத்தனர்.

காஞ்சியில் சுவாமி தரிசனம்: தமிழர்கள் கொலை தொடர்பில் கருத்து கூற ஆந்திர ஆளுநர் மறுப்பு

காஞ்சிபுரம்: ஆந்திரப் பிரதேச ஆளுநர் நரசிம்மன் தமது மனைவியுடன் கார் மூலம் காஞ்சிபுரத்துக்கு வந்தார். அங்கே, 108 திவ்யதேசக் கோயில்களான பாண்டவதூதப் பெருமாள்- உலகளந்த பெருமாள் உள்ளிட்ட கோயில்களில் சுவாமி தரிசனம் செய்தார். கோவில் வளாகத்தில் அவரிடம் ஆந்திராவில் தமிழர்கள் 20 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர் எதுவும் கருத்து கூற இயலாது என்று கூறிச் சென்றார். பின்னர் அவர், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சுற்றுலா மாளிகைக்குச் சென்றார். ஆந்திர ஆளுநர் நரசிம்மன் வருகையை ஒட்டி, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

நாளை குருவாயூர் கோவிலுக்கு வருகிறார் இலங்கைப் பிரதமர்

திருவனந்தபுரம்: கேரளத்தில் உள்ள புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றான குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணர் கோவிலுக்கு இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாளை வருகிறார். இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், அவரது குடும்பத்தினரும் உச்சபூஜை முடிந்த பின்னர் ஸ்வாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் பொதுத் தேர்தல் நடைபெறும் முன்பு ரணில் விக்கிரமசிங்க குருவாயூர் வந்து சென்றார். இப்போது அவர் இலங்கையில் பிரதமராக உள்ளார். பதவி ஏற்ற பின்பு முதல் முறையாக குருவாயூருக்கு அவர் வருகிறார். ரணில் வருகையையொட்டி அங்கே பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பள்ளிசெல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு

பாவூர்சத்திரம் பள்ளிசெல்லா குழந்தைகள் மற்றும் மாற்று திறன் குழந்தைகள் கணக்கெடுப்பு அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் கீழப்பாவூர் வட்டார வள மையத்திற்க்குட்பட்ட 193 குடியிருப்பு பகுதிகள் மற்றும் 36வார்டுகளிலும் 6 வயது முதல் 18வயது வரையிலான மாற்று திறன் மாணவ மாணவியர் கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது இந்த கணக்கெடுப்பில் மேற்ப்பார்வையாளர்கள் ,10ஆசிரிய பயிற்றுனர்கள் 5 சிறப்பாசிரியர்கள் 5 குழுக்களாக ஒவ்வொரு வீடு வீடாக சென்று பள்ளி செல்லா மாணவர்களை கண்டறிந்து அவர்கள் முறையாக கல்வி பயிலவும் சிறப்பு மையங்களில் பயிலவும் வழி வகை செய்யப்பட்டு வருகிறது மேலும் இவர்களுக்கு தேவையான கல்வி புகுத்திடவும் உரிய நலத்திட்டங்கள் பெற்று வழங்கிடவும் ஆவன செய்யப்பட்டு வருகிறது

சீன பயணம் வெற்றி: சந்திரபாபு நாயுடு டிவிட்

தனது சீன பயணம் வெற்றி அடைந்ததாக, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு டிவிட்டரில் பதிவு இட்டிருந்தார். ஹாங்காங்கில் இருந்து ஹைதராபாத் திரும்பிக் கொண்டிருப்பதாகவும், சீன பயணம் வெற்றி கரமாக அமைந்ததாகவும், ஆந்திரப் பிரதேசத்தைக் கட்டமைப்பதில் பல முதலீட்டாளர்களைக் கவர்ந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.