Home Blog Page 6106

மோடிக்கு ஓவியம் பரிசளித்த பிரான்ஸ் அதிபர்

picture-presented-france-president பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்திய பாரம்பரியத்தை எடுத்துரைக்கும் வகையிலான ஓவியத்தைப் பரிசளித்தார் பிரான்ஸ் அதிபர். பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ், ஜெர்மனி, கனடா உள்ளிட்ட நாடுகளுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு அவர் பிரான்ஸ் அதிபர் ஃபிரான்ஸ்வா ஹொலாண்டை சந்தித்த போது அவர் பிதமர் மோடிக்கு லைப் ஆப் ட்ரீ என்ற தலைப்பிலான ஓவியத்தை பரிசாக அளித்தார். மோடி இது குறித்து தனது ட்விட்டர் பகத்த்தில் செய்தி பகிர்ந்துள்ளார். இந்த ஓவியமானது இந்தியாவின் பாரம்பரியத்தை விளக்கும் வகையில் “ஒரு ஆலமரம் பல வேர்கள் மற்றும் கிளைகள் கொண்டுள்ளது. அது மரத்தின் பழம், விதைகள், தங்குமிடம், கருணை, இனப்பெருக்கத்தைப் குறிப்பது போலும் அமைந்துள்ளது. பிரான்ஸ் பயணம் வெற்றிகரமாக அமைந்ததையடுத்து பிரதமர் நரேந்திர மோடி இன்று திட்டமிட்டப்படி ஜெர்மனி செல்கிறார்.  

ஆற்காடு அருகே ஆழ்துளைக் கிணறில் விழுந்த குழந்தை: மீட்புப் பணி தீவிரம்

ஆழ்குழாய்க்கான விதிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை என்பதால், அடுத்தடுத்து கர்நாடகம் மற்றும் தமிழகத்தில் நடக்கும் ஆழ்துளை கிணறு பிரச்னை. ஆற்காடு அருகே 400 அடி ஆழ்துளை கிணற்றில் 2 ½ வயது குழந்தை தவறி விழுந்தது. மீட்பு பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது. ஆற்காடு அடுத்த சாம்பவ சிவபுரம் பகுதியை சேர்ந்தவர் குட்டி, வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கீதா. இவர்களது மகன் தமிழரசன் (வயது2½) தமிழரசனின் தாத்தா கனகசபை வீடு கூராம்பாடி பகுதியில் உள்ளது. குழந்தை தமிழரசன் தனது அம்மா கீதாவுடன் இன்று காலை தனது தாத்தா வீட்டிற்கு சென்றான். இன்று காலை 8.30 மணிளவில் வீட்டு முன்பு தமிழரசன் விளையாடி கொண்டிருந்தான். அப்போது அங்குள்ள விளை நிலங்களுக்கு முன்பு மூடப்படாமல் வைத்திருந்த ஆழ்குழாய் கிணற்றில் தவறி விழுந்து விட்டான். விளையாடி கொண்டிருந்த குழந்தையை காணவில்லை என்று தாய் கீதா மற்றும் பாட்டி தேடிப் பார்த்தனர். அப்போது அங்குள்ள ஆழ்துளை கிணற்றில் இருந்து குழந்தையின் அழுகுரல் சத்தம் வந்தது. இதனால் பதறியடித்து கொண்டு அவர்கள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது குழந்தை ஆழ்துளை கிணற்றில் விழுந்துவிட்டது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த குழந்தையின் தாய் மற்றும் பாட்டி அழுது புரண்டனர். இதற்குள் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு திரண்டனர். இதுகுறித்து ஆற்காடு தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து சென்று குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 400 அடி ஆழ்துளை கிணற்றில் குழந்தை 40 அடி ஆழத்தில் சிக்கியுள்ளது தெரியவந்துள்ளது. உடனடியாக சம்பவ இடத்திற்கு ஜேசிபி எந்திரங்கள் வரவழைக்கப்பட்டு அருகில் குழி தோண்டப்பட்டு வருகிறது. அந்த இடத்தை சுற்றிலும் மண் பகுதியே உள்ளதால் 2 பொக்லைன் எந்திரங்கள் மூலம் வேகமாக பள்ளம் தோண்டி வருகின்றனர். இதுவரை 20 அடி ஆழம் தோண்டி உள்ளனர். மூச்சு திணறல் ஏற்பாடாமல் இருக்க குழந்தைக்கு ஆக்சிஜன் செலுத்த ஏற்பாடு செய்துள்ளனர். மருத்துவ குழுவினரும் ஆம்புலன்ஸ் வாகனமும் தயார் நிலையில் உள்ளது. இதுபற்றி சம்பவம் அறிந்ததும் கலெக்டர் நந்தகோபால், எஸ்.பி. செந்தில்குமாரி மற்றும் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். அவர்கள் மீட்பு பணியை துரிதப்படுத்தி வருகின்றனர். குழந்தை ஆழ்துளை கிணற்றில் சிக்கி 4 மணி நேரம் ஆகியுள்ளது. குழந்தையிடம் இருந்து எந்த விதமான சத்தமும் வரவில்லை. இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதே போல கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 14 ம் தேதி

நெல்லை மாவட்டம், சங்கரன்கோவில் அருகே ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டான். சங்கரன்கோவிலை அடுத்த குத்தாலப்பேரியைச் சேர்ந்த கணேசன் என்பவரின் மூன்றரை வயது குழந்தை ஹர்ஷன், கடந்த வருடம் ஏப்ரல் மாதம் காலை 10.30 மணியளவில் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தான். தந்தையுடன் தோட்டத்திற்குச் சென்றிருந்த போது, இந்த சம்பவம் நிகழ்ந்தது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர், மீட்புப் பணியைத் தொடங்கினர். 15 அடி ஆழத்தில் குழந்தை சிக்கியுள்ளதை அறிந்ததும், அருகில் குழி தோண்டி குழந்தையை மீட்கும் பணி தொடங்கி12-04-15 TamilNadu Bore Well News photo 02 நவீன கருவிகளின் உதவியுடன் குழந்தையை மீட்க முயற்சி மேற்கொண்டனர். இடையில் மழையால் மீட்பு பணி சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. இறுதியில் நவீன கருவியின் உதவியுடன் சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டான். பல மணி நேரப் போராட்டத்திற்குப் பின் குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக மீட்புக் குழுவினர் தெரிவித்தனர். இதே போல தான் கடந்த வருடம் ஆகஸ்ட் 11 ம் தேதி கர்நாடகா மாநிலம் பாகல்கோட்டை மாவட்டத்தில், திறந்திருந்த ஆழ்துளை கிணற்றில் விழுந்த 6 வயது சிறுவன் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஒரு வாரம் தாண்டி சடலமாக அச்சிறுவனின் சடலம் ஒரு வாரத்திற்கு பிறகு  மீட்கப்பட்டுள்ளது. ஆழ்துளைக் கிணறுக்கான விதிமுறைகள்12-04-15 TamilNadu Bore Well News photo 01 ஆழ்துளை கிணறுகளில் குழந்தைகள் தவறி விழும் சம்பவம் தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றன. ஆனால், ஆழ்துளை கிணறுகள் அமைப்பது தொடர்பாக பல்வேறு விதிமுறைகளை நடைமுறைப்படுத்த, கடந்த 2009-ஆம் ஆண்டே உச்சநீதிமன்றம் மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது. அந்த உத்தரவு குறித்த விவரங்கள்… ஆழ்துளை கிணறு அமைக்கப்படுவதற்கு முன்னர், குறைந்தது 15 நாட்களுக்கு முன்பாக உள்ளாட்சி நிர்வாகத்திடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும். ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்படும் இடத்தில் விளம்பரப் பலகைகளை கண்டிப்பாக நிறுவ வேண்டும். பலகையில் ஆழ்துளைக் கிணறு அமைக்கும் நிறுவனத்தின் முழுமையான முகவரி, ஆழ்துளைக் கிணறு அமைக்கும் இடத்தின் உரிமையாளரின் முகவரி மற்றும், புனரமைக்கும் நிறுவனத்தின் முகவரி ஆகிய விவரங்கள் கட்டாயம் இருக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

எரிகல்லுக்கு மலாலா பெயர்

malala-pakistanபாகிஸ்தானில் தலீபான்களுக்கு எதிராகவும், பெண் கல்விக்கு ஆதரவாகவும் செயல்பட்ட மலாலா. அதற்காக 2012, அக்டோபர் 9-ஆம் தேதி, பள்ளி சென்று வரும்போது தலீபான் பயங்கரவாதிகளால் சுடப்பட்டார். பின்னர் அவர் லண்டன் நகரில் சிகிச்சை பெற்று குணமடைந்தார். தற்போது இங்கிலாந்தில் வசித்து வரும் அவருக்கு கடந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு, இந்தியரான கைலாஷ் சத்யார்த்தியுடன் இணைந்து வழங்கப்பட்டது. இப்போது விண்ணில் கண்டுபிடிக்கப்பட்ட ‘316201’ என்ற எரிகல்லுக்கு மலாலாவின் பெயரை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசாவின் ஜெட் உந்துவிசை ஆய்வுக்கூட வானியல் ஆராய்ச்சி விஞ்ஞானி ஆமி மைன்ஸர் சூட்டியுள்ளார். இந்தப் பெயர்க்காரணம் குறித்து அவர் கூறுகையில், “எரிகல்லுக்கு மலாலாவின் பெயரைச்சூட்டியது மரியாதைக்குரியது. ஏற்கெனவே எத்தனையோ எரிகற்களுக்கு பெயர் சூட்டி இருந்தாலும், பெண்களின் பெயர் சூட்டியதில்லை என்பதை என் சக விஞ்ஞானி டாக்டர் கேரி நியூஜென்ட் நினைவு படுத்தினார். அதைத் தொடர்ந்தே செவ்வாய், வியாழன் கிரகங்களுக்கு இடையே நான் கண்டுபிடித்துள்ள எரிகல்லுக்கு மலாலாவின் பெயரைச் சூட்டினேன்” என்றார்.

திருச்சி அருகே லாரி கவிழ்ந்து விபத்து

திருச்சி: திருச்சி அருகே லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது,. இந்த விபத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ராஜபாளையத்தில் இருந்து டீத்தூள் ஏற்றி வந்த லாரி செந்தண்ணீர்புரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தால் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பாரீஸில் விமானம் வாங்கப் போகாமல் கோவாவில் மீன் கடை திறந்த பாரிக்கர்

manaohar-parikkar பனாஜி: பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப் பயணம் மேற்கொண்டு, ரஃபேல் விமானம் வாங்க நடவடிக்கை எடுத்த நேரத்தில், அந்தத் துறையின் மிக முக்கியப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் மனோகர் பாரிக்கர் கோவாவில் நடமாடும் மீன் கடை திறந்து கொண்டிருந்தார். இது இப்போது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. பிரதமர் மோடி, பிரான்சுடன் 36 ரஃபேல் போர் விமானங்கள் வாங்குவது குறித்த முக்கிய முடிவை எடுத்த நேரத்தில், பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் கோவாவின் பானாஜியில் மொபைல் மீன் ஸ்டால்…. என அரசு மீன் கடையை திறந்து வைத்துக் கொண்டிருந்தார். இந்த நிகழ்வை இப்போது கையில் எடுத்துக் கொண்டு அரசியல் சர்ச்சையாக்கியுள்ளது காங்கிரஸ். இது குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் துர்காதாஸ் காமத் கூறுகையில், ‘பாதுகாப்புத் துறை என்ற மிக முக்கியமான துறையை கவனித்துக் கொண்டிருக்கும் மனோகர் பாரிக்கர், இப்போதும் மாநில அரசியலில் எவ்வளவு ஆர்வம் கொண்டு, எந்தளவுக்கு தன் துறையில் ஆர்வம் கொண்டிருக்கிறார் என்பதை பிரதமர் மோடி இப்போது புரிந்து கொண்டிருப்பார்’ என தெரிவித்துள்ளார். மேலும் லக்ஷ்மி காந்த் பர்சேகர் அரசுக்கு இணையாக தனது பழைய பொறுப்பை மனதில் கொண்டு ஒரு அரசை பாரிக்கர் நிர்வகிக்கிறார் என்று குற்றம் சாட்டியுளார். இதைப் போல எதிர்க்கட்சியினரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளனர்.

பிரான்ஸ் விண்வெளி ஆய்வு மையத்தில் இந்திய மாணவர்களுடன் செல்ஃபி

modi-selfie-france டவ்லவுஸ்: பிரான்ஸ் விண்வெளி ஆய்வு மையத்தில் இந்திய மாணவர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டார் பிரதமர் மோடி. பிரான்ஸ் பயணத்தின் இரண்டாவது நாளான நேற்று, டவ்லவுசில் உள்ள பிரெஞ்சு விண்வெளி நிறுவனத்தை மோடி பார்வையிட்டார். அப்போது தேசிய விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள இந்திய மாணவர்கள் “மோடி”…”மோடி” என்று மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தபடி பிரதமர் நரேந்திர மோடியைச் சூழ்ந்து கொண்டனர். மாணவர்களின் விருப்பத்திற்கு இணங்க அவர்களுடன் புன்னகைத்தபடி மோடி செல்ஃபி எடுத்துக் கொண்டார். இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டரில் “தேசிய விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள இளைய நண்பர்களுடன் செல்ஃபிக்களை எடுத்துக் கொண்டேன். நாங்கள் அட்டகாசமான செல்ஃபியை எடுக்க முயற்சி செய்தோம்” என்று எழுதியிருந்தார். முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி, பிரான்ஸ், ஜெர்மனி, கனடா ஆகிய 3 நாடுகளுக்கு 9 நாட்கள் அரசு முறை சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். முதல்கட்டமாக, பிரான்ஸ் நாட்டில் 4 நாட்கள் சுற்றுப் பயணம் செய்யும் மோடி, ஏப். 9-ஆம் தேதி இரவு பிரான்ஸ் வந்தார். அவருக்கு நேற்று முன்தினம் எலிசி அரண்மனையில் பாரம்பரிய வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரெஞ்சு வீரர்களின் ராணுவ அணிவகுப்பு மரியாதையை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டார். https://www.youtube.com/watch?feature=player_embedded&v=lYQQRtSlCs0  

கிரேக்கத்துக்கான இந்திய தூதராக தமிழக பெண் அதிகாரி

manimegalai-murugesanபுது தில்லி: கிரேக்க நாட்டுக்கான இந்திய தூதராக மணிமேகலை முருகேசன் (57) நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. தற்போது ருமேனியாவில் இந்திய தூதராக பதவி வகிக்கும், மணிமேகலை முருகேசன், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். விரைவில் அவர் கிரேக்க நாட்டின் தலைநகரான ஏதென்ஸ் சென்று இந்திய தூதராகப் பொறுப்பேற்பார். இவர் 1981ம் ஆண்டு, ஐ.எப்.எஸ். தொகுப்பைச் சேர்ந்தவர்.

அக்ரி கிருஷ்ணமூர்த்தியைத் தொடர்ந்து மேலும் ஒரு முன்னாள் அமைச்சர் கைதாவார்?

நெல்லை: திருநெல்வேலியில் வேளாண் பொறியாளர் முத்துக்குமாரசாமி தற்கொலை செய்து கொண்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி சி,.பி.சி.ஐ.டி., போலீசாரால் கைது செய்யப்பட்டார். மேலும், வேளாண் துறையின் தலைமைப் பொறியாளர் செந்திலும் கைதானார். இந்த வழக்கு விசாரணை முக்கியமான கட்டத்தில் இருப்பதாகவும், இந்த விசாரணையில் மேலும் சில முக்கியப் புள்ளிகள் கைதாவார்கள் என்றும் கூறப்படுகிறது. மேலும், அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் உதவியாளரான வெங்கடேசன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த வழக்கில் மேலும் ஒரு முன்னாள் அமைச்சர் விரைவில் கைதாவார் என்று கூறப்படுகிறது.

தாஜ்மஹாலை சிவன் கோயிலாக அறிவிக்கக் கோரி மீண்டும் மனு

ஆக்ரா: தாஜ்மஹாலை தேஜோமஹாலயா என்ற சிவன் கோயிலாக அறிவிக்கக் கோரி, ஆக்ரா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு அது நிராகரிக்கப்பட்ட நிலையில், அதே கோரிக்கையுடன் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவுக்கு பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கும், தொல்லியல் துறைக்கும் ஆக்ரா நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதுகுறித்து மனுதாரர்களில் ஒருவரான ராஜேஷ் குல சிரேஷ்டா தெரிவித்தபோது, 17ஆவது நூற்றாண்டைச் சேர்ந்த தாஜ்மஹாலை ஹிந்துக் கோயிலாக அறிவிக்கக் கோரியும், அந்தக் கட்டடத்தில் மூடப்பட்டுள்ள பகுதிகளைத் திறந்து, ஹிந்துக்களின் மதச் சடங்குகளைச் செய்ய அனுமதிக்குமாறும் ஆக்ரா மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் உள்ளூர் வழக்குரைஞர்கள் மனு தாக்கல் செய்துள்ளோம். அதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, இது தொடர்பாக அடுத்த மாதம் 6ஆம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு தொல்லியல் துறை, மத்திய உள்துறை, மத்திய சுற்றுலா, கலாசாரத் துறை ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார் என்று கூறினார்.

நேர்மையற்றவர்கள் சமூக அந்தஸ்தில் இருப்பவர்களுக்கே பத்ம விருதுகள்: சரத் யாதவ் சர்ச்சை

Sharad-Yadavமும்பை: பத்மஸ்ரீ மற்றும் பத்மபூஷன் விருதுகள் நேர்மையற்றவர்கள் மற்றும் சமூகத்தின் உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்களுக்கு மட்டுமே கொடுக்கப்படுகிறது என்று கூறி மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளார் சரத் யாதவ். மும்பையில் நேற்று இரவு நடந்த கூட்டம் ஒன்றில் பேசிய ஐக்கிய ஜனதா தள கட்சித் தலைவர் சரத் யாதவ், இந்த ஆண்டு பத்ம விருது பெற்றவர்களில் ஒரு தலித்தோ, ஆதிவாசியோ அல்லது ஒரு விவசாயியோ இல்லை. சோசலிசத்தை பின்பற்றுபவர்கள் பத்ம விருதுகளைப் புறக்கணித்து உதறித் தள்ள வேண்டும். பத்ம விருதுகள் நேர்மையற்றவர்கள் மற்றும் சமூகத்தின் உயர்ந்த அந்தஸ்துகளில் இருப்பவர்களுக்கு மட்டுமே கொடுக்கப்படுகிறது என்றார். கூட்டம் முடிந்த பின் செய்தியாளர்கள் இதுகுறித்துக் கேட்டபோது, தமது கருத்தில் எந்த மாற்றமும் இல்லை என்றார் அவர்.