Home Blog Page 6105

இருசக்கர வாகனத்தின் மீது ஜீப் மோதியது

acc கடையநல்லூரில் பாப்பான்கால்வாய் பாலத்தில் புல்கட்டு ஏற்றி கொண்டு சென்ற இருசக்கர வாகனத்தின் மீது ஜீப் மோதியதில் பிச்சையா,லக்ஷ்மி ஆகியோர் காயமடைந்தனர்.லக்ஷ்மியின் கால் முறிந்தது.இதுக் குறித்து கடையநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜீப் ஓட்டுனர் சிவசுப்ரமணியன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இருசக்கரவாகனங்கள் நேருக்குநேர் மோதி இருவர் பலி

  12.04.2015 - Tenkasi Accident 2 Death 004 12.04.2015 - Tenkasi Accident 2 Death 003 தென்காசி:தென்காசி அருகேயுள்ள சிவராம பேட்டைபகுதியை சார்ந்தவர் ராமசுப்பரமணியன் மற்றும் இவருடன் ஒருவரும் இரண்டு சக்கர வாகனத்தில் கொடிக்குறிச்சி இலிருந்து சிவராம பேட்டை நோக்கி சென்றுக்கொண்டிருந்தனர்.அப்போது சிவகிரியிலிருந்து தென்காசி நோக்கி மேலப்பாளையம் குறிச்சியை சார்ந்த ராஜேஷ் என்பவரும் அவருடன் ஒருவரும் இருசக்கர வாகனத்தில் பயணித்தனர்.அப்போது எதிர்பாராத விதமாக இவர்களது வாகனங்கள் நேருக்கு நேர் மோதியது.இதில் மேலப்பாளையத்தை சார்ந்த ராஜேஷ் என்பவரும் ,சிவராமபேட்டையை சார்ந்த ராமசுப்ரமணியன் என்பவரும் பலியாகினர்.பாதுஷா ,முருகன் ஆகிய இருவரும் காயம்பட்டு நெல்லை மாவட்ட மருத்துவ மனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.இதில் யார் யாருடன் இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் என்றும்,இறந்தவர்கள் யார்…யாரோடு வந்தார்கள் என தெரியாமல் விசாரணையில் குழப்பம் ஏற்ப்பட்டுள்ளது.இதுகுறித்து இலத்தூர் பொலிசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காந்தியும், நேருவும் தங்கள் பதவிக்கான அச்சுறுத்தலாக நேதாஜியைப் பார்த்தனர்: சுப்பிரமணிய சுவாமி

subramanian-swami புது தில்லி: மகாத்மா காந்தியும், நேருவும், தங்கள் பொறுப்பு, பதவிகளுக்கான அச்சுறுத்தலாக புரட்சிகரத் தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸைப் பார்த்தனர் என்று பாஜக தலைவர் சுப்பிரமணியம் சுவாமி கூறியுள்ளார். அவர் தனது டிவிட்டர் பதிவில் இவ்வாறு தெரிவித்து ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். ஞாயிற்றுக்கிழமை இன்று ஏராளமானோர் சுவாமியின் டிவிட் தகவலை ரிடிவிட் செய்திருந்தனர். முன்னதாக, இந்திய உளவுத் துறையால் நேதாஜியின் உறவினர்கள் சிசிர் குமார் போஸ், அமியா நாத் போஸ் உள்ளிட்டோர் சுமார் 20 வருட காலத்துக்கு நேருவால் உளவு பார்க்கப்பட்டதாக செய்தி வெளியானது. இதை அடுத்து, சுவாமி இவ்வாறு தனது டிவிட்டரில் பதிவிட்டார்.  

சுதந்திரத்துக்குப் பிறகான நவீன இந்தியாவில், சுயநலம்தான் முதலில்! தங்கள் பதவிகளுக்கன அச்சுறுத்தலாக நேதாஜியை காந்தியும் நேருவும் பார்த்தனர் என்றூ கடந்த ஜனவரி 24ல் சுவாமி டிவிட் செய்திருந்தார். அது, வைரலாக 194 பேரால் ரிடிவிட் செய்யப்பட்டு பரவியது. இந்நிலையில், இன்று அவர் இன்னொரு டிவிட் செய்தார். நேதாஜி கொலை விவகாரத்தில் இன்னொன்றையும் சேர்க்கவேண்டும்… நேருவினால் திருடப்பட்டதாகிய, ஜப்பானில் இருந்து இந்தியாவுக்கு திரும்பிய ஐ.என்.ஏ.வின் இதயக் கருவூலத் தகவல் இப்போது முறிந்து போனது. ..  

இந்நிலையில், உளவு வேலை விவகாரத்தில் அது காங்கிரஸின் டி.என்.ஏ (இரத்தத்தில் ஊறிய செயல்) என்று பாஜகவின் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார். ஆனால், இந்தத் தகவல் வெளியே கசிந்தபோது, காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான திக் விஜய் சிங், குஜராத்தில் உளவு பார்த்த கலையை மோடி தான் செய்தார் என்றார்.

‘ஓ காதல் கண்மணி’ வெளியாவதை நினைத்துக் கவலைப்படும் சல்மான்

O Kadhal Kanmani Audio Success Press Meet Event Stills (17) சென்னை: ஓ காதல் கண்மணி படம் வெளியாவதை நினைத்துக் கவலையாக இருப்பதாக படத்தின் ஹீரோ துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார். இந்தியாவின் புகழ்பெற்ற இயக்குனரான மணிரத்னம் இயக்கத்தில் துல்கர் சல்மான், நித்யா மேனன் நடித்துள்ள காதல் படம் ஓ காதல் கண்மணி. இந்தப் படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பட்டுள்ள நிலையில், ஓ காதல் கண்மணி படக்குழுவினர் சனிக்கிழமை சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது படத்தின் நாயகன் துல்கர் சல்மான் கூறுகையில், இது என் கனவுப் படம். ஓ காதல் கண்மணி படத்தில் நடித்த ஓராண்டும் கனவு போன்று இருந்தது. அந்தக் கனவில் இருந்து கண் விழிக்கவே கூடாது என்று தோன்றியது. தொடர்ந்து அதே கனவில் இருக்க வேண்டும் என்று விரும்பினேன். பி.சி.ஸ்ரீராம், மணிரத்னம் மற்றும் ஏ.ஆர். ரஹ்மானுடன் பணியாற்றியது ஒரு மேஜிக் போன்று இருந்தது. இது கனவுக் குழு. என் கனவில் இருந்து விழித்துக் கொள்ள வேண்டும் என்பதால் படம் ரிலீஸாவதை நினைத்து கவலையாக உள்ளது என்றார்.

சட்டீஸ்கரில் 18 டிரக்குகள் எரிப்பு: நக்ஸல்களின் தொடர் வெறிச்செயல்

chattisgar-naxals-attack ராய்ப்புர்: சட்டீஸ்கரில் உள்ள கான்கெர் மாவட்டத்தில், இரும்புத் தாது ஏற்றி வந்த 18 டிரக்குகளை இன்று காலை நக்சலைட்கள் தீயிட்டுக் கொளுத்தினர். 24 மணி நேரத்தில் அங்கே நிகழ்ந்த அடுத்த தாக்குதல் இது. முன்னதாக, சுக்மா மாவட்டத்தில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் சனிக்கிழமை நேற்று நடத்திய திடீர் தாக்குதலில் 7 போலீஸார் பலியாகினர். சுமார் 12 பேர் காயம் அடைந்தனர். காயமடைந்தவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. சுக்மாவில் இருந்து 265 கி.மீ. தொலைவில் உள்ளது கான்கெர். அடர்ந்த வனப்பகுதி நிறைந்த சுக்மா மாவட்டம் மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் மிக்க பகுதி. சனிக்கிழமை நேற்று மதியம் மாநில காவல்துறையின் சிறப்பு அதிரடிப்படையினர் போலம்பள்ளி- பிட்மெல் பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த போது அங்கே பதுங்கியிருந்த 100க்கும் மேற்பட்ட மாவோயிஸ்ட் பயங்கரவாதிகள் போலீஸாரை சுற்றி வளைத்து துப்பாக்கிகளால் சுட்டனர். போலீஸாரும் பதிலுக்கு சுட்டனர். இரு தரப்புக்கும் இடையே நடைபெற்ற 2 மணி நேர துப்பாக்கிச் சண்டையில் 7 போலீஸார் பலியாகினர். 12 பேர் காயம் அடைந்தனர். இதுகுறித்து, மாநில காவல்துறை கூடுதல் இயக்குநரும் சிறப்புப் படையின் தலைவருமான ஆர்.கே.விஜ் தெரிவித்தார். காயம் அடைந்த வீரர்கள் இரண்டு ஹெலிகாப்டர்களில் ஜக்தால்பூருக்கு அழைத்துச் செல்லப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள், போலீஸாரிடம் இருந்து ஆயுதங்களையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இந்தத் தாக்குதலில் கமாண்டர் சங்கர் ராவ், தலைமை கான்ஸ்டபிள்கள் ரோஹித் சோரி, மனோஜ் பாகல், மோகன், கான்ஸ்டபிள்கள் ராஜ்குமார், கிரண் தேஷ்முக், ராஜ்மன் நேத்தம் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். முதல்கட்ட விசாரணையில், மாவோயிஸ்ட் உள்ளூர் தலைவர்கள் சோனு, நாகேஷ், ஹித்மா ஆகியோர் தலைமையிலான தீவிரவாதக் குழுக்கள் தாக்குதல் நடத்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அவர்களை தேடும் பணியை போலீஸார் தீவிரப்படுத் தியுள்ளனர்.

இங்குள்ள ஊழியர்கள் தமிழர்களே!: ஆந்திர வங்கி ஊழியர்கள் ஒட்டிய உருக்கமான போஸ்டர்!

ஆந்திர வனப்பகுதியில், செம்மரங்கள் கடத்தப்படுவதாக பொய்யான குற்றச்சாட்டு தெரிவித்து அப்பாவி 20 தமிழர்களை ஆந்திரா காவல்துறையினர் சுட்டுக்கொன்றனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் தமிழ் உணர்வுள்ள பல்வேறு கட்சிகள் போராட்டம் நடத்தி வருகிறது. இந்நிலையில், திருநெல்வேலியில் ஆந்திர வங்கியை முற்றுகையிட்டு, ஆந்திர முதல்வரின் உருவ பொம்மையை எரித்த தமிழ்நாடு மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான்பாண்டியன் உள்ளிட்ட 100 பேர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர். அப்போது தமிழ்நாடு மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் ஊர்வலமாக வந்து சந்திரபாபு நாயுடு உருவபொம்மையை எரித்தனர். இந்த நிலையில், நெல்லையில் உள்ள ஆந்திர வங்கியை கடந்த 4 நாட்களாக தொடர்ந்து முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் இந்த வங்கி ஆந்திர அரசு வங்கி இல்லைங்க ! இந்திய அரசுக்கு சொந்தமானது. மேலும் இங்கு வேலை பார்க்கும் நாங்கள் எல்லாம் தமிழர்கள் தான் என போஸ்டர் எழுதி ஒட்டியுள்ளது பொதுமக்களிடையே மிகுந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கரூரில் உள்ள பழைய பை-பாஸ் ரோட்டில் ஆந்திரா வங்கியை திறக்க இந்திய துணை சபாநாயகரும், கரூர் நாடாளுமன்ற உறுப்பினருமான மு.தம்பித்துரையின் மாமனாரான வர்த்தகர் சங்க தலைவர் ராஜூவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த ஆந்திர சம்பவத்தை அடுத்து கோடீ கும்பிடு, கும்பிட்டிடு அய்யோ, நீங்கள் செல்லுங்கள் திறப்பு விழாவிற்கு நான் வரவில்லை என திருப்பி அனுப்பியுள்ளார்.12-04-15 Andra Bank News photo

கிரானைட் முறைகேடு: மேலூரில் சகாயம் முன்னர் விசாரணை

மதுரை: கிரானைட் முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சகாயம் குழு முன்னர் மேலூரில் விசாரணை நடைபெற்றது. மதுரை மாவட்டத்தில் நடந்த கிரானைட் முறைகேடு தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரி சகாயம் 11 ஆவது கட்ட விசாரணையை நடத்தி வருகிறார். கிரானைட் குவாரிகளில் காயம் அடைந்த ஊழியர்கள், பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்த விவரம் தொடர்பாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைக்கு விசாரணை குழு சம்மன் அனுப்பி இருந்தது. அதன்படி மேலூரில் உள்ள தனியார் மருத்துவமனை மருத்துவர்கள், ஊழியர்கள் சகாயம் முன்பு ஆஜரானார்கள். அவர்களிடம் சகாயம், குவாரிகளில் காயம் அடைந்தவர்கள் குறித்தும், காயத்தின் தன்மை மற்றும் அதற்காக வழங்கிய சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து விசாரணை நடத்தினார். அதன் பின்னர் மதுரை மாவட்டத்தில் கிரானைட் குவாரி உள்ள பகுதி கிராமங்களைச் சேர்ந்த 5 கிராம நிர்வாக அதிகாரிகள் சகாயம் முன்பு ஆஜரானார்கள். அவர்களிடம் அந்தந்தப் பகுதிகளில் உள்ள கிரானைட் குவாரிகளின் விவரங்கள், ஆக்கிரமிக்கப்பட்ட இடங்களின் அளவு போன்ற தகவல்களைக் கேட்டறிந்தார். இவை தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சகாயம் கேட்டுப் பெற்றுக் கொண்டார்.

கட்சியை பிளவுபடுத்த ஒரு கட்சி முயற்சி செய்கிறது: இ.கம்யூ., தா.பாண்டியன்

Tha-Pandiyan சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை பிளவுபடுத்த ஒரு தமிழக அரசியல் கட்சி தூண்டிவிடுகிறது என்றும், அதை விரைவில் பகிரங்கப்படுத்துவேன் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் தெரிவித்தார். சென்னை தி.நகரில் உள்ள பாலன் இல்லத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்,. “ஆந்திர மாநிலம் திருப்பதி வனப்பகுதியில் 20 தமிழக கூலித் தொழிலாளர்கள் கடந்த 6ஆம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டனர். அநியாயமாக கொல்லப்பட்ட தமிழக கூலித் தொழிலாளர்களுக்கு ஆந்திர அரசும், தமிழக அரசும் நிதி உதவி செய்ய வேண்டும். நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை அவசரச் சட்டமாக கையில் எடுத்திருக்கிறது மத்திய அரசு. இது விவசாய நிலத்தைப் பறிக்கும் சட்டம். அதை அதிமுக ஆதரிப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம். நாடே எதிர்க்கிற போது, தமிழக அரசும் எதிர்க்க வேண்டும். கடந்த 2 நாட்களாக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளில் செய்தி வருகிறது… கம்யூனிஸ்டு கட்சியின் மாநில மாநாட்டில் மாநிலச் செயலாளராக முத்தரசன் தேர்ந்தெடுக்கப்பட்டதில் முறைகேடு, வாக்குப்பதிவு சரியாக நடத்தவில்லை என 2 பேர் குற்றம்சாட்டி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார்கள். கட்சி உறுப்பினர்கள் என்று குறிப்பிட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவர்கள் மாநிலக்குழு உறுப்பினர்கள் அல்லர். அவர்கள் ஒழுங்குமுறையை மீறியவர்கள் ஆகிறார்கள். இந்த வழக்கைத் தொடர்ந்தவர்கள் வெறும் ஏவப்பட்ட அம்புகள் தான். தேர்தலை முன்னிட்டு இந்திய கம்யூனிஸ்டு கட்சியை பிளவுபடுத்த தமிழ்நாட்டின் ஒரு அரசியல் கட்சி தூண்டிவிடுகிறது. அதை விரைவில் பகிரங்கமாக உரிய காலத்தில் வெளியிடுவேன். எங்களைப் பொறுத்தவரையில் விதிகள் மீறப்படவே இல்லை. இதுபோன்ற சீர்குலைக்கும் செயல்களை ஒழிப்பதில் கட்சி தோழர்கள் ஒன்றுபட வேண்டும்” என்று கூறினார்.

ஜெர்மனியில் மோடி: உற்சாக வரவேற்பு

பிரான்ஸ் நாட்டைத் தொடர்ந்து ஜெர்மனி சென்றடைந்தார் பிரதமர் மோடி. அவருக்கு அங்கே உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. முன்னதாக தனது 3 நாள் பிரான்ஸ் பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு இன்று அங்கிருந்து ஜெர்மனி புறப்பட்டார் மோடி.  

‘கத்தி’ விஜய் நெஜமாவே விவசாயிகளுக்காக போராட முன்வருவாரா ?: பொங்கலூர் மணிகண்டன்

pongalur-manikandan விவசாயிகளுக்காகப் போராட சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தமிழகம் வரம் போது நடிகர் விஜய் ஆதரவு அளிப்பாரா?’ என பொங்கலூர் இரா.மணிகண்டன் கேள்வி  எழுப்பியுள்ளார். உழவர் உழைப்பாளர் சங்கத்தின் நிறுவனத் தலைவரும், சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே வின் விவசாயிகள் இயக்க தமிழக ஒருங்கிணைப்பாளருமான பொங்கலூர் இரா.மணிகண்டன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது. ”நிலம் கையக மசோதாவை எதிர்த்து நாடு முழுவதும் விவசாயிகளுக்காக போராடி வரும் சமூக ஆர்வலர் அன்னா ஹசரேவுக்கு ஆதரவு தெரிவித்து தென்னிந்திய ஒருங்கிணைப்பாளர் ரவி கிருஷ்ண மூர்த்தியும், பொஙகலூர் மணிகண்டன் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகள் மற்றும் பொது அமைப்புகள் அனைத்தையும் அணுகி விவசாயப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபடுத்தி வரும் அவருக்கு  ஆதரவு திரட்டி வருகிறோம். மேலும் ரவி கிருஷ்ண மூர்த்தியும்,தமிழக உழவர் உழைப்பாளர் சங்க தலைவர் பொங்கலூர் மணிகண்டன் தமிழக விவசாயிகள் அமைப்புகளின் பல்வேறு பிரதிநிதிகளை அழைத்துக் கொண்டு சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தமிழகத்துக்கு வர வேண்டும் என்று இரண்டு முறை அவரது சொந்த ஊருக்கே சென்று தமிழக விவசாயிகள் சார்பில் சந்தித்து பேசி அழைப்பு விடுத்து வந்துள்ளோம்.அவரும் வருவதாக ஒப்புக் கொண்டு மே மாதம் முதல் வாரத்தில் நீங்களே தேதியை முடிவு செய்து கொள்ளுங்கள் வருகிறேன் என்று ஒப்புதல் கொடுத்து விட்டார். சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே இந்தியாவில் லோக்பால் மசோதா மற்றும் தகவல் உரிமைச் சட்டத்தை உருவாக்க வேண்டி போராடி போதும்,தொடர் உண்ணாவிரதங்கள் மூலமும் இந்தியாவையே உலுக்கும் வகையில் போராடிய போதும் நாட்டின் பெரும்பாலான மக்கள் -தலைவர்கள்-திரைப்படத் துறையினர் -இளைஞர்கள்-மாணவர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்து மகாத்மா காந்திக்குப் பிறகு தானாக முன்வந்து அன்னாவை ஆதரித்தார்கள். அப்போது தமிழகத்தின் முன்னணி நடிகர் விஜய் நேரடியாக உண்ணாவிரத மேடைக்கே சென்று அன்னாவை சந்தித்து அவரது போராட்டத்தை ஆதரித்து ஆச்சரியப் படுத்தினார். இந்நிலையில் சமீபத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாளனாக காட்டிக் கொண்ட ”கத்தி ”என்ற திரைப்படத்தில் நடித்து பெரிய விவாதத்தை உருவாக்கினார்.இப்போது சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தேசிய அளவில் மத்திய அரசு கொண்டு வந்த நிலம் கையகப்படுத்துதல் சட்டத்துக்கு எதிராகப் போராடி வருகிறார்.நிழலில் விவசாயிகளுக்கு ஆதரவாகப் போராடி பாராட்டைப் பெற்ற நடிகர் விஜய் நிஜத்தில் போராடும் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவின் கரத்தை வலுப்படுத்தி விவசாயிகளைக் காக்க முன்வருவாரா என்று தமிழக விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள். எந்தவிதபிரதிபலனும்,உள்நோக்கமும்,அரசியல் இலாபமும் இன்றி மக்களின் ,விவசாயிகளின் நலன் ஒன்றை மட்டுமே கொண்டு போராடிக் கொண்டு ,விவசாயிகளிடையே விழிப்புணர்வை உருவாக்கவும்,தமிழ்நாட்டுக்கு மே மாதம் வருகை தரும் அன்னா ஹசாரே வரவேற்கும் வகையிலும்,விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் அறிக்கை வெளியிட்டு அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளிலும் நேரடியாகப் பங்கு கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.தமிழ்நாட்டில் எத்தனையோ நடிகர்கள் இருக்க விஜய்யை மட்டும் அழைப்பதன் காரணம்,ஏற்கனவே அவர் மட்டும் தான் அன்னா ஹசாரேவை சந்தித்து அவரை ஆதரித்தவர்.விவசாயிகளின் ஆதரவாளனாக  தனது கத்தி திரைப்படத்தில் போராடியவர்.எனவே எவ்வித நோக்கமும் இன்றி நடிகர் விஜய் மத்திய அரசின் நிலம் கையக மசோதாவுக்கு எதிரான எங்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பதோடு,அன்னா ஹசாரே கலந்து கொள்ளும் தமிழகப் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என நடிகர் விஜய்க்கு அழைப்பு விடுக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.