காந்தியும், நேருவும் தங்கள் பதவிக்கான அச்சுறுத்தலாக நேதாஜியைப் பார்த்தனர்: சுப்பிரமணிய சுவாமி

subramanian-swami புது தில்லி: மகாத்மா காந்தியும், நேருவும், தங்கள் பொறுப்பு, பதவிகளுக்கான அச்சுறுத்தலாக புரட்சிகரத் தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸைப் பார்த்தனர் என்று பாஜக தலைவர் சுப்பிரமணியம் சுவாமி கூறியுள்ளார். அவர் தனது டிவிட்டர் பதிவில் இவ்வாறு தெரிவித்து ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். ஞாயிற்றுக்கிழமை இன்று ஏராளமானோர் சுவாமியின் டிவிட் தகவலை ரிடிவிட் செய்திருந்தனர். முன்னதாக, இந்திய உளவுத் துறையால் நேதாஜியின் உறவினர்கள் சிசிர் குமார் போஸ், அமியா நாத் போஸ் உள்ளிட்டோர் சுமார் 20 வருட காலத்துக்கு நேருவால் உளவு பார்க்கப்பட்டதாக செய்தி வெளியானது. இதை அடுத்து, சுவாமி இவ்வாறு தனது டிவிட்டரில் பதிவிட்டார்.  

சுதந்திரத்துக்குப் பிறகான நவீன இந்தியாவில், சுயநலம்தான் முதலில்! தங்கள் பதவிகளுக்கன அச்சுறுத்தலாக நேதாஜியை காந்தியும் நேருவும் பார்த்தனர் என்றூ கடந்த ஜனவரி 24ல் சுவாமி டிவிட் செய்திருந்தார். அது, வைரலாக 194 பேரால் ரிடிவிட் செய்யப்பட்டு பரவியது. இந்நிலையில், இன்று அவர் இன்னொரு டிவிட் செய்தார். நேதாஜி கொலை விவகாரத்தில் இன்னொன்றையும் சேர்க்கவேண்டும்… நேருவினால் திருடப்பட்டதாகிய, ஜப்பானில் இருந்து இந்தியாவுக்கு திரும்பிய ஐ.என்.ஏ.வின் இதயக் கருவூலத் தகவல் இப்போது முறிந்து போனது. ..  

இந்நிலையில், உளவு வேலை விவகாரத்தில் அது காங்கிரஸின் டி.என்.ஏ (இரத்தத்தில் ஊறிய செயல்) என்று பாஜகவின் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார். ஆனால், இந்தத் தகவல் வெளியே கசிந்தபோது, காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான திக் விஜய் சிங், குஜராத்தில் உளவு பார்த்த கலையை மோடி தான் செய்தார் என்றார்.