தென்காசி: நெல்லை மாவட்டம் தென்காசி அருகே பள்ளி மாணவனும் ஆசிரியையும் ஒரே நாளில் காணாமல் போயினர். அந்த மாணவன் ஏடிஎம் அட்டை, ஓர் ஆசிரியை, வீட்டில் இருந்த நகைகளுடன் காணாமல் போயுள்ளார். இது அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி அருகே குத்துக்கல் வலசை பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆங்கிலப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார் அந்த மாணவர். அவரது தந்தை கடையநல்லூர் பகுதியைச் சேர்ந்த எல்லைப் பாதுகாப்புப் படைப் பிரிவில் பணியாற்றி வரும் சந்திரகுமார். இவரது மனைவி மாரியம்மாள். இவர்களது மகன் சிவசுப்பிரமணியன் (15) அங்குள்ள தனியார் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், கடந்த மார்ச் 31-ஆம் தேதி இவர், வீட்டை விட்டுச் சென்றுள்ளார். அதன்பிறகு வீடு திரும்பவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து கடையநல்லூர் போலீசில் அவரது தந்தை, தனது மகன் சிவசுப்ரமணியனைக் காணவில்லை என்று புகார் கொடுத்தார். அவரது புகாரைப் பெற்றுக் கொண்ட உதவி ஆய்வாளர் முத்துலட்சுமி வழக்குப் பதிவு செய்து சிவசுப்பிரமணியன் எங்குச் சென்றார் என்று விசாரணை நடத்தி வந்தார். இந்நிலையில், அவர் படித்து வந்த பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்த செங்கோட்டை காலாங்கரையைச் சேர்ந்த கோதை (23) என்பவரும் மாயமானது தெரியவந்தது. 10-ஆம் வகுப்பு படித்து வந்த சிவசுப்பிரமணியனுக்கு ஆசிரியை கோதை பாடம் எடுத்துள்ளார். இதனால் அவர்கள் இருவரும் நெருங்கிப் பழகியுள்ளனர். இந்தப் பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் காதலாக மாறியது. இதையடுத்து இருவரும் சில இடங்களுக்குச் சென்று தனிமையில் இருந்துள்ளனர். இவர்கள் இருவரும் பழகுவது குறித்து மாணவரின் பெற்றோருக்கும், ஆசிரியையின் நட்பு வட்டம் மற்றும் சக ஆசிரியர்களும் தெரிய வந்ததால், அவர்கள் இருவரையும் அழைத்து புத்திமதி சொல்லி, சத்தம் போட்டுள்ளனர். அவர்களுக்கு அறிவுரை சொல்லியும் இருவரும் அதைக் கண்டு கொள்ளவில்லை என்று தெரிகிறது. இதனிடையே கடந்த 31-ந்தேதி முதல் இருவரும் மாயமாகியுள்ளனர். போகும் போது சிவசுப்பிரமணியன் கையில் ஏ.டி.எம். கார்டு ஒன்றை எடுத்துச் சென்றுள்ளார். மேலும் சுமார் ரூ. 500 வரை அவர் வைத்திருந்ததாகத் தெரிகிறது. மேலும் அவர்கள் வீட்டில் இருந்த ரூ.12 லட்சம் மதிப்புள்ள 60பவுன் நகைகளும் காணவில்லையாம். இந்நிலையில், இருவரும் எங்கு சென்றார்கள் என்று போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் இருவரும் காணாமல் போய் சுமார் 10 தினங்கள் கடந்த நிலையில், இவர்களைப் பற்றிய செய்திகள், சமூக வலைத்தளங்கள், வாட்ஸ் அப் ஆகியவற்றில் பரபரப்பாக பரிமாறிக் கொள்ளப்பட்டன. இதுவே, இப்போது இந்த விஷயம் வெளியில் தெரியக் காரணமாக அமைந்துவிட்டது.
தென்காசி அருகே 10ம் வகுப்பு மாணவனும் ஆசிரியையும் மாயம்! ஏடிஎம் அட்டை நகைகளுடன் மாயமானதால் பரபரப்பு
32 வயதுப் பெண் கால் டாக்ஸியினுள் பலாத்காரம் : டிரைவர் கைது
புது தில்லி: உபேர் கால் டாக்ஸியில் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு 4 மாதங்கள் ஆன நிலையில், மீண்டும் ஒரு சம்பவம் அதே போல் தில்லியில் அரங்கேறியிருக்கிறது. வியாழக்கிழமை இரவு தில்லி மெட்ரோ நிலையத்துக்கு கட்டணத்தைப் பகிர்ந்து கொண்டு ஷேர் டாக்ஸியில் சென்ற பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். டாக்ஸி டிரைவர் பின்னர் கைது செய்யப்பட்டார். மேற்கு தில்லி பகுதியில் உள்ள ரஜௌரி கார்டனில் உள்ள ஒரு மாலில் வேலை செய்யும் தில்லி துவாரஹா – மதுவிஹார் பகுதியைச் சேர்ந்த 32 வயது பெண் இரவு 9.30 மணியளவில் அருகில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வாடகைக் காரில் ஏறியுள்ளார். DL 1 T 7516 என்ற எண்ணுள்ள அந்த மாருதி ஈக்கோ காரில் வேறு சில பயணிகளும் இருந்துள்ளனர். திடீரென்று ஓட்டுநர் காரை மெதுவாக ஓட்டியுள்ளார். அப்போது பயணிகள் ஏன் என்று கேட்டதற்கு காரின் சிஎன்ஜி கேஸ் எரிபொருள் தீர்ந்துவிட்டது என்று கூறியுள்ளார். உடனே மற்ற பயணிகள் இறங்கிச் சென்றுள்ளனர். அதன் பிறகு காரில் பக்கத்து இருக்கைக்கு மெதுவாகத் தாவி, கதவைத் திறப்பது போல் முயன்று, சிஎன்ஜி செக் செய்வதாகச் சொல்லி, அந்தப் பெண்ணின் மீது தாவி ஏறியுள்ளார். ஏதோ விபரீதமாக நடக்கப் போவதை அறிந்து அந்தப் பெண் கூச்சலிட்டுள்ளார். ஆனால், தொடர்ந்து அந்தப் பெண்ணை கார் ஓட்டுநர் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். அந்தப் பெண் மறுத்ததால் பெண்ணின் முகத்தில் கத்தியால் குத்தி ஆடைகளைக் கிழித்து, கைபேசியையும் பறித்து கீழே வீசியுள்ளார். தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தால் கொலை செய்துவிடுவதாக மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். காரில் பெண்ணின் கூச்சல் சத்தம் கேட்டு அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் போலீஸூக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து குறிப்பிட்ட காரை ரோந்துப் படை போலீஸார் துரத்திச் சென்று பிடித்தனர். உடனே காரை நிறுத்தி விட்டு தப்பி ஓடிய அந்த ஓட்டுநரை போலீஸார் துரத்திச் சென்று பிடித்து கைது செய்தனர். பின்னர் அவர் குறித்து விசாரித்ததில் அவரது பெயர் ரமேஷ் குமார் (40) என்றும் இவர் நாங்கல்லி சகரவதி பகுதியில் மனைவி 3 குழந்தைகளுடன் வசித்து வருவதாகவும் கூறியுள்ளார். இவர் 8 ஆண்டுகளாக கார் ஓட்டி வருகிறார் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரது கார் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக தெற்கு துவாரகா போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண்ணை போலீசார் மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். இந்தப் பெண்ணுக்கு ஒரு குழந்தை உள்ளது. முன்பு உபேர் மூலம் நடந்த தவறு, இப்போது காலி-பீலி கறுப்பு – மஞ்சள் டாக்ஸி டிரைவர் மூலம் நடந்துள்ளது. இவர் கால் டாக்ஸி விதிகளை மீறி, வெவ்வேறு நபர்களை ஒரே காரில் ஏற்றிச் சென்றுள்ளது தெரியவந்தது.
மாநில பாசத்துடன் வெங்கய்ய நாயுடு பேசுகிறார்: ராமதாஸ் கண்டனம்
சென்னை: திருப்பதி வனப்பகுதியில் 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில், மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு மாநிலப் பாசத்துடன் கருத்துகூறியுள்ளார். அதற்கு கண்டனம் தெரிவிப்பதாக பாமக நிறுவுனர் ராமதாஸ் கூறியுள்ளார். அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், திருப்பதி வனப்பகுதியில் 20 தமிழர்கள் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட விவகாரம் குறித்து மத்திய அமைச்சர் வெங்கைய நாயுடுவிடம் செய்தியாளர்கள் கருத்து கேட்ட போது, மத்திய அமைச்சராக இருப்பதால் மாநில அரசின் நடவடிக்கைகள் குறித்து கருத்து தெரிவிக்க முடியாது என்று கூறியுள்ளார். அதேநேரத்தில், சித்தூர் வனப்பகுதியில் செம்மரக் கடத்தல் மிகப்பெரிய அளவில் நடைபெறுவதாகவும், அப்பகுதியில் தடையை மீறி பலர் நுழைந்து கடத்தலில் ஈடுபடுவதாகவும் அவர் குற்றஞ்சாற்றியுள்ளார். அதாவது தமிழகத் தொழிலாளர்கள் வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்து செம்மரக் கட்டைகளைக் கடத்துவதாகவும், அதன் காரணமாகத் தான் அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றனர் என்றும் வெங்கைய நாயுடு சொல்லாமல் சொல்லியிருக்கிறார். ஆந்திரம் மீது எந்த குற்றச்சாற்றையும் சுமத்தக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கும் வெங்கைய நாயுடு, கொல்லப்பட்ட தமிழகத் தொழிலாளர்களை கடத்தல்காரர்களாக சித்தரித்திருக்கிறார். திருவண்ணாமலையிலிருந்து சித்தூருக்கு கட்டிடப் பணிக்காக சென்று கொண்டிருந்த தமிழர்களை நகரி என்ற இடத்தில் பேரூந்தை வழிமறித்து ஆந்திரக் காவல்துறை பிடித்துச் சென்று சுட்டுக் கொன்றதை நேரில் பார்த்த சாட்சி உறுதி செய்திருக்கிறார். இதை அனைத்து ஊடகங்களும் செய்தியாக வெளியிட்டு அதன் உண்மைத் தன்மையை ஒப்புக்கொண்டுள்ளன. இவ்வளவுக்குப் பிறகும், மூத்த மத்திய அமைச்சரான வெங்கைய நாயுடு மாநில பாசத்துடன் உண்மையை மறைத்து பாதிக்கப்பட்ட தமிழர்கள் மீதே பழி சுமத்த முயன்றிருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது. – என்று கூறியுள்ளார்.
யாரையோ காப்பாற்ற துப்பாக்கிச் சூடு: பொன்.ராதாகிருஷ்ணன்
திருச்சி: யாரையோ காப்பாற்ற ஆந்திராவில் தமிழக தொழிலாளர்கள் 20 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர், இது கண்டனத்துக்குரியது என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், “ஆந்திராவில் தமிழக தொழிலாளர்கள் 20 பேர் சுட்டுக் கொல்லப்பட்டது கண்டனத்துக்குரியது. ஆந்திர போலீஸ் நினைத்திருந்தால் தமிழக தொழிலாளர்களை உயிருடன் கைது செய்திருக்கலாம். யாரையோ காப்பாற்றுவதற்காக ஆந்திர போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கிறது. தமிழகத்தில் வேலைவாய்ப்பு இல்லாததால் தொழிலாளர்கள் வேலை தேடி ஆந்திரா செல்கின்றனர். தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்புகளை தமிழக அரசு உருவாக்க வேண்டும்” என்றார்.
வாக்காளர், ஆதார் அட்டை விவரங்களை இணைக்க ஏப்ரல், மே.யில் சிறப்பு முகாம்கள்: சந்தீப் சக்சேனா
சென்னை: வாக்காளர், ஆதார் அட்டைகளில் உள்ள விவரங்களை இணைக்கும் பணிக்காக தமிழகம் முழுவதும் ஏப்ரல், மே மாதங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா கூறினார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சந்தீப் சக்சேனா…. வாக்குச் சாவடி அலுவலர்கள் மார்ச் 3-ம் தேதி முதல் வீடு வீடாகச் சென்று வாக்காளர் விவரங்களை சரிபார்த்தல், ஆதார் எண், மொபைல் எண், இ-மெயில் முகவரி உள்ளிட்ட விவரங்களைப் பெறுவதுடன் திருத்தம் இருப்பின் அதற்கான படிவத்தையும் பூர்த்தி செய்து பெறுகின்றனர். தமிழகத்தில் உள்ள 5.62 கோடி வாக்காளர்களில் 2 கோடி வாக்காளர்களின் விவரங்கள் பெறப்பட்டுள்ளன. இவற்றில் 35 லட்சம் வாக்காளர்களின் ஆதார் விவரங்கள் கணினியில் பதியப்பட்டுள்ளன. ஆதார் விவரங்களைத் தர முடியாதவர்களின் வசதிக்காக தமிழகம் முழுவதும் ஏப்ரல், மே மாதங்களில் 2, 4-வது ஞாயிற்றுக்கிழமைகளில் வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. முதல் முகாம் 12-ம் தேதி நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இதில் பொதுமக்கள் ஆதார் எண் இணைப்புடன் திருத்தம், நீக்கம், ஆதார் அட்டை மாற்றுதல், புகைப்படம் மாற்று தல் போன்ற பணிகளையும் மேற்கொள்ளலாம். மேலும் 13-ம் தேதி முதல் மே 31-ம் தேதி வரை வாரத்தில் 2 நாட்களில், அந்தந்தப் பகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், அலுவலகத்தில் சிறப்பு விசாரணைகளை நடத்துவர். வாக்காளர் அளித்த விவரங்களில் குழப்பம், ஆட்சேபணைகள் இருப்பின் அவர் அழைக்கப்பட்டு விசாரணை நடத்தி பதிவுகள் முழுமையாக்கப்படும். இப்பணிகளை கண்காணிக்க 10 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களின் ஆதார் எண்ணை சேர்ப்பதுதான் முக்கிய பணி. ஆதார் எண் இல்லை என்றால், ஆதார் இஐடி எண் பெறப்படும் அல்லது தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது வழங்கப்படும் ‘டின்’ எண் பெறப்படுகிறது. எதிர்காலத்தில் சம்பந்தப்பட்ட வாக்காளருக்கு ஆதார் எண் வழங்கப்பட்டால், அந்த எண் வாக்காளர் விவரங்களுடன் தானாக சேர்ந்துவிடும். இதன் மூலம் 100 சதவீத இலக்கை அடையமுடியும். சென்னையில் 68 சதவீதமும், இதர மாவட்டங்களில், 80 சதவீதத்துக்கு அதிகமாகவும் ஆதார் அட்டை வழங்கும் பணிகள் முடிவடைந்துள்ளன. ஆதார் வழங்கப்படாத பகுதிகளில், வருவாய் மற்றும் மாநகராட்சி துறைகளுடன் இணைந்து, நடமாடும் ஆதார் முகாம் நடத்தவும் முடிவெடுத்து உள்ளோம் என்றார் அவர்.
பெட்ரோல் பங்க் உரிமையாளர் வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு
சென்னை: சனிக்கிழமை இன்று மாலைக்குப் பின்னர் நடைபெற இருந்த பெட்ரோல் பங்க் உரிமையாளர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சில்லறை விற்பனையாளர்களுக்கு டீலர் மார்ஜின் எனப்படும் விளிம்புத் தொகையை உயர்த்தி வழங்குதல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய அளவில் அனைத்து பெட்ரோல், டீசல் விற்பனை நிலையங்களும் சனிக்கிழமை இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி நேரம் மட்டுமே இயங்கும். மாலை 6 மணிக்குப் பிறகு வேலை நிறுத்தம் நடத்த இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், வேலைநிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு பெட்ரோல் பங்க் உரிமையாளர் சங்கத் தலைவர் முரளி அறிவித்துள்ளார். ”பெட்ரோல் பங்க் உரிமையாளர்களின் கோரிக்கையை பரிசீலிப்பதாக அமைச்சர் உறுதியளித்தார் என்றும், மோடி வெளிநாட்டில் இருந்து திரும்பியவுடன் கோரிக்கை குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் அமைச்சர் அளித்த உறுதிமொழியை ஏற்று வேலைநிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
நிலம் கையகப்படுத்தும் சட்டத்திற்கு எதிராக சமூக நல ஆர்வலர் அன்னா ஹசாரே தமிழகத்தில் பிரச்சாரம் பொங்கலூர் மணிகண்டன் புனேவில் தகவல்
தமிழக விவசாயிகள் மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் உள்ள ராலேகான் சிட்டி என்ற இடத்தில் சமூகஆர்வலர்அன்னாஹசாரேவுடன்தமிழகவிவசாயிகள்சங்கங்களின்தலைவர்கள்சந்தித்துப்பேசினார்கள். கிசான்சங்கத்தன்என்றஅன்னாஹசாரேவின்விவசாயஅமைப்பின்தென்னிந்தியஒருங்கிணைப்பாளர்ரவிகிருஷ்ணமூர்த்திஏற்பாட்டில்உழவர்உழைப்பாளர்சங்கநிறுவனத்தலைவர்பொங்கலூர்இரா.மணிகண்டன்தலைமையில்ஏற்கனவே 20 மாவட்டவிவசாயிகள்சந்தித்துதமிழகத்துக்குவருமாறுஅழைப்புவிடுத்திருந்தனர். அதனைஏற்றுகொண்டஅன்னா ஹசாரேதமிழகத்தில்உள்ள ஒத்தகருத்துடையஅரசியல்சாராதஅனைத்துஇயக்கங்களையும்ஒருங்கிணைக்குமாறுகேட்டுக்கொண்டார்.அதனடிப்படையில்கிசான்சங்கத்தன்தென்னிந்தியஒருங்கிணைப்பாளர்ரவிகிருஷ்ணமூர்த்தி ,உழவர்உழைப்பாளர்சங்கநிறுவனத்தலைவர்பொங்கலூர்இரா.மணிகண்டன், தமிழ்நாட்டில்பல்வேறுபெயர்களில்செயல்படும்பொதுமற்றும்விவசாயஅமைப்புகளைஒருங்கிணைக்கும்முயற்சியில்ஈடுபட்டார்கள்.அனைத்துவிவசாயஅமைப்புகள்மற்றும்பொதுசேவைஅமைப்புகள்அனைத்தும்அன்னாஹசாரேதமிழகம்வருகையையொட்டிஒற்றுமையுடன்இணைந்துகலந்துகொண்டுசெயல்படமுடிவுசெய்தார்கள்.அதன்பிறகு 1 மகாராஷ்டிராமாநிலம்அகமத்நகர்மாவட்டம்ராலேகான்சித்தியில்உள்ளஅவரதுஅலுவலகத்தில்சமூகஆர்வலர்அன்னாஹசாரேவுடன் தமிழகவிவசாயிகள்சங்கத்தலைவர்கள் கே.செல்லமுத்து,(உழவர்உழைப்பாளர்கட்சி),பி.ஆர்.பாண்டியன் (அனைத்துவிவசாயிகள்சங்கஒருங்கிணைப்புக்குழு),என்.எஸ்.பழனிசாமி (கட்சிசார்பற்றவிவசாயிகள்சங்கம்),ராமகவுண்டர் (தமிழகவிவசாயிகள்சங்கம்டாக்டர்சிவசாமிபிரிவு),தெய்வசிகாமணி (மஞ்சள்விவசாயிகள்சங்கம்),வழக்கறிஞர் ஆர்.எஸ்.டி.ராவணன் (மதுரைமாவட்டஉழவர் உற்பத்தியாளர்கூட்டமைப்பு).என்.அருண் (மேலூர்விவசாயிகள்சங்கம்).மகாமகாபெள்ளியப்பன் (நீலகிரிமாவட்டஉழவர் உற்பத்தியாளர்கூட்டமைப்பு ),டி.நடராஜன் (காஞ்சிபுரம்-திருவள்ளூர் -சென்னைமாவட்டவிவசாயிகள்சங்கம் ),ஜோதிமுருகன் (சேலம்ஏர்முனைஇளைஞர்அணி ) உள்ளிட்டதலைவர்கள்அந்தந்தஅமைப்புகளைச்சேர்ந்த 20 க்கும்மேற்பட்டநிர்வாகிகள்கலந்துகொண்டார்கள்.
தமிழர்கள் கொலை விவகாரத்தில் சி.பி.ஐ விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட ராமதாஸ் கோரிக்கை
சென்னை: திருப்பதி வனப்பகுதியில் 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில், சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் கோரியுள்ளார். அவர் இன்று வெளியிட்ட அறிக்கை: திருப்பதி வனப்பகுதியில் 20 தமிழர்கள் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட விவகாரம் குறித்து மத்திய அமைச்சர் வெங்கைய நாயுடுவிடம் செய்தியாளர்கள் கருத்து கேட்ட போது, மத்திய அமைச்சராக இருப்பதால் மாநில அரசின் நடவடிக்கைகள் குறித்து கருத்து தெரிவிக்க முடியாது என்று கூறியுள்ளார். அதேநேரத்தில், சித்தூர் வனப்பகுதியில் செம்மரக் கடத்தல் மிகப்பெரிய அளவில் நடைபெறுவதாகவும், அப்பகுதியில் தடையை மீறி பலர் நுழைந்து கடத்தலில் ஈடுபடுவதாகவும் அவர் குற்றஞ்சாற்றியுள்ளார். அதாவது தமிழகத் தொழிலாளர்கள் வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்து செம்மரக் கட்டைகளைக் கடத்துவதாகவும், அதன் காரணமாகத் தான் அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றனர் என்றும் வெங்கைய நாயுடு சொல்லாமல் சொல்லியிருக்கிறார். ஆந்திரம் மீது எந்த குற்றச்சாற்றையும் சுமத்தக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கும் வெங்கைய நாயுடு, கொல்லப்பட்ட தமிழகத் தொழிலாளர்களை கடத்தல்காரர்களாக சித்தரித்திருக்கிறார். திருவண்ணாமலையிலிருந்து சித்தூருக்கு கட்டிடப் பணிக்காக சென்று கொண்டிருந்த தமிழர்களை நகரி என்ற இடத்தில் பேரூந்தை வழிமறித்து ஆந்திரக் காவல்துறை பிடித்துச் சென்று சுட்டுக் கொன்றதை நேரில் பார்த்த சாட்சி உறுதி செய்திருக்கிறார். இதை அனைத்து ஊடகங்களும் செய்தியாக வெளியிட்டு அதன் உண்மைத் தன்மையை ஒப்புக்கொண்டுள்ளன. இவ்வளவுக்குப் பிறகும், மூத்த மத்திய அமைச்சரான வெங்கைய நாயுடு மாநில பாசத்துடன் உண்மையை மறைத்து பாதிக்கப்பட்ட தமிழர்கள் மீதே பழி சுமத்த முயன்றிருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது. இன்னொருபுறம் ஆந்திர துணை முதல்வரும், வனத்துறை அமைச்சரும் தமிழகத் தொழிலாளர்களை சுட்டுக் கொன்றதில் எந்த தவறும் இல்லை என்று கூறுகிறார்கள். ஒரு மாநிலத்தின் துணை முதல்வரே அவரது கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறைக்கு ஆதரவாக செயல்படும்போது, அங்கு நியாயமான விசாரணை நடத்தப்படுவதற்கு வாய்ப்பே இல்லை. 20 தமிழர்கள் கொடூரமாக கொல்லப்பட்ட வழக்கை மத்திய புலனாய்வுப் பிரிவு (சி.பி.ஐ.) விசாரணைக்கு மாற்றக் கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த ஆந்திர உயர்நீதிமன்றம், இந்த விஷயத்தில் அம்மாநில காவல்துறையின் அணுகுமுறையை கடுமையாக கண்டித்திருக்கிறது. இதுகுறித்து ஆந்திரக் காவல்துறை தலைமை இயக்குனர் தாக்கல் செய்த அறிக்கையை ஏற்க மறுத்துவிட்ட நீதிபதிகள், காவல்துறையினர் மீது ஏன் கொலை வழக்கு பதிவு செய்யக் கூடாது? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். இரு மாநிலங்கள் சம்பந்தப்பட்ட வழக்கை சி.பி.ஐ. தான் விசாரிக்க வேண்டும் என்ற நடைமுறைக்கு மாறாக இவ்வழக்கை ஆந்திரக் காவல்துறையே எப்படி விசாரிக்க முடியும்? என்றும் தலைமை நீதிபதி கல்யாண் ஜோதி சென்குப்தா வினா எழுப்பியுள்ளார். இரு மாநிலங்கள் சம்பந்தப்பட்ட வழக்கு என்றாலே அதை சி.பி.ஐ. விசாரணைக்கு ஒப்படைப்பது வழக்கமாக உள்ளது. அதன்படி 20 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் கொல்லப்பட்டோர் மீது ஆந்திர அரசு அவதூறு பரப்புவதும், அதை மத்திய அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதும் கண்டிக்கத்தக்கது. 20 பேர் படுகொலை தொடர்பாக ஆந்திரக் காவல்துறை தலைமை இயக்குனர் தாக்கல் செய்த அறிக்கையை ஆந்திர உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளாத நிலையில், அதே அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்றுக்கொண்டு இந்தப் பிரச்சினையில் அமைதி காப்பது ஏன்? என்பது புரியவில்லை. இன்னொரு புறம் இப்பிரச்சினையை தமிழக அரசு கையாளுவதைப் பார்க்கும்போது தமிழக அரசுக்கு முதுகெலும்பே இல்லையோ? என்று எண்ணத் தோன்றுகிறது. இதுதொடர்பாக ஆந்திர முதலமைச்சருக்கு கடிதம் எழுதியதைத் தவிர வேறு எந்த நடவடிக்கையையுமே தமிழக முதலமைச்சர் மேற்கொள்ளவில்லை. மாறாக சென்னைக்கு கிருஷ்ணா நதி நீரை ஆந்திர அரசு திறந்து விட்டிருப்பதை பெரிய உதவியாக சித்தரிக்கும் முயற்சியில் தமிழக அரசு மறைமுகமாக ஈடுபட்டுள்ளது. ஆந்திராவுக்கு எதிராக தமிழகம் கொந்தளிக்கும் நிலையில் அதை நீர்த்துபோகச் செய்வதற்கான முயற்சியில் அரசு ஈடுபடக் கூடாது. இந்தியாவின் மிகப்பெரிய போலி மோதல் கொலை வழக்கில் மத்திய அரசு இனியும் அமைதியாக இருக்கக்கூடாது. ஆந்திரக் காவல்துறையின் மனித உரிமைகளை மீறிய, மிருகத்தனமான செயலைக் வெளிப்படையாகக் கண்டிக்க வேண்டும். அத்துடன், இனியும் தாமதிக்காமல், வழக்கமான நடைமுறையை பின்பற்றி இந்தப் படுகொலைகள் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கோ அல்லது உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையிலான நீதி விசாரணைக்கோ மத்திய அரசு ஆணையிட வேண்டும்.
உலக பார்க்கின்சன்ஸ் தினத்தையொட்டி மெரினாவில் நடிகர் ஜெயம்ரவி நடைப்பயணம் !
உலக பார்க்கின்சன்ஸ் தினத்தையொட்டி மெரீனா கடற்கரையில் இன்று காலை 6.30 மணிக்கு விழிப்புணர்வு நடைப்பயணம் நடைபெற்றது. நடிகர் ஜெயம்ரவி நடைப்பயணத்தைத் தொடங்கி வைத்து நடந்தார். நடிகர் கணேஷ் வெங்கட்ராமன் முன்னிலை வகித்து நடந்தார். இன்று உலகை அச்சுறுத்தி வரும் ஒரு நோய் பார்க்கின்சன்ஸ் நோய். இதனால் பாதிக்கப்பட்டவருக்கு முதலில் கை நடுக்கம் என்று தொடங்கி படிப்படியாக உடல் செயலிழப்பு வரை ஏற்படும். இந்தியாவில் இந்நோயால் பாதிக்கப்பட்டவர் 7.1மில்லியன் பேர் உள்ளனர். ஆனால் இது பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதால்தான் இந்த நடைப்பயண ஊர்வலத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நியூ ஹோப் ப்ரெய்ன் அண்ட் ஸ்பைன் சென்டர் மற்றும் ஆண்டனி பவுண்டேஷன் ஆகியவை இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தன. இன்று காலை நிகழ்வைத் தொடங்கி வைத்து நடிகர் ஜெயம்ரவி பேசும்போது “இந்த நடைப்பயணத்தை ஏற்பாடு செய்திருக்கும் டாக்டர் குழுவினரைப் பாராட்டுகிறேன்.அவர்களின் இம்முயற்சி வெற்றியடைய வாழ்த்துகிறேன். ” என்றார். நடிகர் கணேஷ் வெங்கட்ராமன் பேசும்போது ” நல்ல நோக்கத்தில் நடத்தப்படுகிற இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் . இந்தியாவில் இந்நோயால் பாதிக்கப்பட்டவர் 7.1மில்லியன் பேர் என்கிற விவரம் அறிந்து அதிர்ச்சியடைந்தேன். இது பற்றிமேலும் விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும். ” என்றார். இந்நோயால் முதலில் பாதிக்கப்பட்ட நபரான பார்க்கின்சன் பெயரையே இந்நோய்க்கு வைத்துள்ளனர். அதைக் கண்டுபிடித்தவரும் அவரே. பார்க்கின்சன்ஸ் நாளையொட்டி நரம்பியல் நிபுணர் டாக்டர் ராம் நாராயணன் பேசும்போது “பிரபல குத்துச் சண்டை வீரர் இந்த நோயால் பாதிக்கப் பட்டார். அதன் பின்னர்தான் இது வெளியே பிரபலமானது. இந்நோய் பற்றிய விழிப்புணர்வும் ஏற்பட ஆரம்பித்தது. சர்க்கரை நோய்வருவதற்குப் பல காரணங்கள் இருப்பது போல பார்க்கின்சன்ஸ்நோய் வரவும் பல காரணங்கள்உள்ளன. இதனால்தான் வருகிறது என்று வரையறுத்துக் கூற முடியாது. மூளையில் செயல்களைச் செய்யத்தூண்டும் டோபமீன் என்கிற வேதிப் பொருளின் அளவு குறைவதால் இது ஏற்படுகிறது. அசதி, மந்தம், தடுமாற்றம், பேச்சு குளறுதல், உணர்ச்சியை வெளிப்படுத்தாத முகம், நடுக்கம் என்று இதில் பல நிலைகள் உண்டு. ஆரம்பத்தில் கண்டறிந்தால் மருந்துகள் மூலம் கட்டுப்படுத்த முடியும். முற்றினால் அறுவை சிகிச்சை தேவைப்படும். இதைச் செய்ய எங்கள் மருத்துவமனையில் சிறப்பு நிபுணர் குழு உள்ளனர். முதலில் பார்க்கின்சன்ஸ் நோய் பற்றிய விழிப்புணார்வே மக்களிடம் இல்லை. அதனால்தான் இதை நடத்துகிறோம். ” என்றார். டாக்டர்கள் சைமன் ஹெர்குலிஸ், எம். அருண் மொழிராஜன், சேகர், எஸ்.ஈ.பி.தம்பி, சையது, ஆனந்த் நேசமணி ஆகியோர் கலந்து கொண்டனர். ஏராளமான இளைஞர்களும் இளைஞிகளும்இந்த நடைப்பயணத்தில் பங்கு பெற்று நடந்தனர். இந்த நடைப்பயணம் மெரீனா கடற்கரை கலங்கரை விளக்கத்திலிருந்து விவேகானந்தர் இல்லம் வரை அடைந்து நிறைவு பெற்றது.

