Home Blog Page 6110

மே 9 அன்று திரைக்கு வருகிறது சிம்புவின் வாலு

Vaalu_B சிம்பு, ஹன்சிகா, சந்தானம் உள்ளிட்ட பலர் நடிப்பில் நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்து வரும் படம் ‘வாலு’. தமன் இசையமைத்து இருக்கும் இப்படத்தை நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி தயாரித்திருக்கிறார். விஜய் சந்தர் இயக்கி இருக்கிறார். படத்தின் ரிலீஸ் தேதி கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஒவ்வொரு தேதியாக அறிவிக்கப்பட்டு பின் மாற்றலாகி வருகிறது. இறுதியில் மே 1ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் தள்ளிவைக்கப்பட்டு மே 9 ஆம் தேதி வெளியாகவுள்ளது. வேட்டை மன்னன் படத்தை நிறுத்திவிட்டுதான் வாலு படத்தை சிம்பு அறிவித்தார். இரண்டே மாசம் படப்பிடிப்பு நடத்தி மூன்றாவது மாசம் படம் ரிலீஸ் என பில்டப்பெல்லாம் பலமாக இருந்தும், படத்தை வருடக்கணக்கில் இழுத்தடித்து அண்மையில்தான் நிறைவடைந்தது. மே 9 ஆம் தேதி சனிக்கிழமை படத்தை வெளியிடுகின்றனர். பொதுவாக வெள்ளிக்கிழமை படங்கள் வெளியாகும். பண்டிகைகள் இருந்தால் வார தினங்களில் வெளியிடுவார்கள். ஆனால் வாலு – பேருக்கு ஏற்ப சனிக்கிழமை வெளியாகிறது வாலுபட போஸ்டர் வெளியீட்டையடுத்து ட்விட்டரில் #Vaalu என பலரும் டிவிட்டில் கலக்கி வருகின்றனர்.

மாஸ் படத்தில் 8 பேய்களா?

mass3சூர்யா, வெங்கட் பிரபு முதன் முறையாக இணைந்துள்ள மாஸ் படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். விரைவில் இப்படத்தின் இசைவெளியீட்டு விழா நடைபெறவிருக்கிறது. மாஸ் படம் மே மாதம் 1ம் தேதி ரிலீஸாகிறது. இது ஒரு பேய் படம் என்பது அனைவருக்கும் தெரியும்.

சூர்யாவும் இந்த படத்தில் பேயாக நடிக்கிறார். இவருடன் சேர்ந்து இந்த படத்தில் மொத்தம் 8 பேய்கள் இருக்கிறதாம். தமிழ் சினிமாவில் பேய்கள்தான் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அந்த நம்பிக்கையில் தான் சூர்யா இந்த கதையில் நடித்துள்ளாராம்.

வைகோ மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க தேசிய மனித உரிமை ஆணையத்திடம் கோரிக்கை

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆந்திரத்தைச் சேர்ந்த வழக்குரைஞர் சாய்கிருஷ்ணா ஆஜாத் பூஜாலா தேசிய மனித உரிமைகள் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். ஆந்திர துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து தமிழகத்தில் வசிக்கும் தனது மாநிலத்தைச் சேர்ந்த மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அதில் கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் தேசிய மனித உரிமைகள் ஆணையத்துக்கு அனுப்பிய மனுவில்… ஆந்திர மாநில வனப் பகுதிகளில் தமிழகத்தைச் சேர்ந்த சிலர் சட்டவிரோதமாக செம்மரக் கடத்தலில் ஈடுபடுகின்றனர். வனப் பகுதியில் செம்மரக் கடத்தலில் ஈடுபடுவோரைப் பிடிக்கும் முயற்சியாக மாநில அதிரடிப்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த 20 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தைக் கண்டித்து தமிழகத்தில் ஆந்திர பேருந்துகள் அடித்து நொறுக்கப்படுகின்றன. தடா எல்லையில் ஆந்திர அரசுக்குச் சொந்தமான பேருந்து மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. சென்னையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. ஆந்திரத்தை பூர்விகமாகக் கொண்டு தமிழகத்தில் தொழில்புரிந்து வரும் உரிமையாளர்களுக்குச் சொந்தமான கடைகள், உணவகங்கள், கிளப்புகள், வங்கிகள் மீது தாக்குதல் நடத்தப்படுகின்றன. மதிமுக பொதுச் செயலர் வைகோ தமது மாநிலத்தில் உள்ள தெலுங்கு மொழி பேசும் ஆந்திர மாநிலத்தவர்களை வெளியேறும்படி மிரட்டல் விடுப்பதாக செய்திகள் வருகின்றன. ஆந்திர மாநிலத்துக்கு எதிராக அவர் மக்களிடையே கிளர்ச்சி ஏற்படும் வகையில் பேசி வருகிறார். இதனால் இரு மாநிலங்களுக்கும் இடையே அமைதி கெடும் சூழல் உருவாகியுள்ளது. இவை அனைத்தும் ஆந்திர மாநிலத்தவர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களாகக் கருதப்படுகின்றன. தமிழகத்தில் வசிக்கும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்களையும், அவர்களின் உரிமைகளையும் பாதுகாக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இந்த விவகாரம் குறித்து விசாரிக்க குழு அமைக்கவும், வைகோ மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன் என்று மனுவில் கேட்டுக் கொண்டுள்ளப்பட்டுள்ளது.

நிலம் கையகப்படுத்தல் மசோதா எதிர்ப்பில் அண்ணா ஹசாரே தமிழகத்தில் பிரச்சாரம்

anna-hazare சென்னை நிலம் கையகப்படுத்தல் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே தமிழகத்தில் மே மாதம் பிரசாரம் மேற்கொள்கிறார் என்று அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு கூறியுள்ளது. மேலும் இந்த மசோதா தொடர்பாக விவசாய சங்கங்களுடன் இணைந்து அண்ணா ஹசாரே இந்தியா முழுதும் பிரசாரம் மேற்கொள்ள இருப்பதாக முன்னர் கூறப்பட்டது. 1, 2, 3, 4, 5, 6 என வகைப்படுத்தப்பட்டுள்ள நில வகைகளில் 1, 2, 3 வகை நிலங்கள் விளை நிலங்கள். அவற்றை தொழிற்சாலைகளுக்கு வழங்கக் கூடாது. இந்த நிலம் கையகப் படுத்தல் சட்டம் அது குறித்த தேவைகளுக்கு உடனடியாக சட்டம் இயற்ற தடையாக உள்ளது. நாடாளுமன்றத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தில் விவசாய நிலங்களை தனியார் திட்டங்களுக்கு வழங்க விவசாயிகளின் 80 சதவீத ஒப்புதல் தேவை என கூறப்பட்டுள்ளது. விவசாயிகளின் ஜனநாயக உரிமைகளுக்கு எதிராக இந்த அரசு அந்த நிபந்தனைகளை நீக்கியுள்ளது. மேலும் இதுபோன்ற அனைத்துக்கும் விவசாயிகளின் ஒப்புதல் தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2013 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தில் எந்த நோக்கத்துக்காக நிலம் கையகப்படுத்தப்பட்டதோ அதற்காக 5 ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் இருந்தால் அந்த நிலத்தை மீண்டும் விவசாயிகளிடமே திருப்பி ஒப்படைக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. ஆனால் தற்போது கொண்டு வரப்பட்டுள்ள சட்டத்தில் இந்த நிபந்தனை நீக்கப்பட்டுள்ளது. 2013 ஆம் ஆண்டு சட்டத்தில் தேசநலன் கருதி அதில் சில விதிவிலக்குகள் இருந்தன. தற்போது அவற்றில் தனியார் மருத்துவமனைகள், தனியார் கல்வி நிறுவனங்களும் இடம் பெற்றுள்ளன. மக்கள் தொகை பெருக்கத்துக்கு ஏற்ப உணவு பொருட்களின் தேவையை சமாளிக்க விவசாய பொருட்களின் உற்பத்தியையும் பெருக்க வேண்டியது அவசியம். எனவே, விளை நிலங்களை மற்ற திட்டங்களுக்கு பயன்படுத்த கூடாது என்ற நிபந்தனை உள்ளது. இந்த நிபந்தனையும் இச்சட்டத்தில் நீக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நிலம் கையகப்படுத்தல் சட்டம் குறித்தும், விவசாயிகள், விவசாய நிலங்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்களை விவசாயிகளிடம் கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்திலும் தமிழகத்தில் அண்ணா ஹசாரே இந்த பிரசாரத்தைத் தொடங்க உள்ளார் என்று அவர் கூறினார்.

ஸ்ரீதிவ்யாவை பார்த்து மூக்கு மேல் விரல் வைக்கும் மக்கள்

vellakkara durai20தெலுங்கில் நடித்த ஸ்ரீதிவ்யாவிற்கு வெற்றி கனியை எட்ட முடியாததால் தமிழ் பக்கம் வந்தார். வருத்தபடாத வாலிபர் சங்கம் ஸ்ரீதிவ்யாவிற்கு நிலையான இடத்தை பிடித்து கொடுத்தது. அதன் பிறகு இவரது நடிப்பில் வெளியான அனைத்து படங்களுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதால் ஐதராபாத்து நடிகையாக இருந்த ஸ்ரீதிவ்யா கோடம்பாக்கத்து நடிகையாக இங்கேயே தங்கி விட்டார். மற்ற நடிகைகளை போல் நண்பர்களை பார்க்க வேண்டும் என்று அடிக்கடி சொந்த ஊருக்கு விசிட் அடிக்க மாட்டாராம். சென்னையில் உள்ள நண்பர்களை மட்டும் அவ்வப்போது சந்தித்து ரிலாக்ஸ் செய்து கொள்கிறாராம். அவர்களை பார்க்க செல்லும் போது எந்த பந்தாவும் இல்லாமல் நார்மலான பெண்களை போன்று உடையணிந்து செல்கிறாராம். படத்துக்கு படம் ஹீரோக்களை கலாய்க்கும் ஸ்ரீதிவ்யா மிகவும் கூச்ச கூபாவத்துடன் தான் அனைவரிடமும் பழகுவாராம். இதை பார்த்த ஸ்ரீதிவ்யா தோழிகளின் பக்கத்து வீட்டுகாரார்கள் ஹீரோக்களை காய்ச்சி எடுக்கும் நடிகையாக இவர் என்று மூக்கு மேல் விரல் வைக்கிறார்களாம்.

கரூரில் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து ஆம்னி வேன் விபத்து – 3 வயது சிறுமி சம்பவ இடத்திலேயே பலி – 8 பேர் படுகாயம்

கரூர் ரயில்வே மேம்பாலத்தில் இன்று அதிகாலை ஆம்னி வேன் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் 3 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம், கந்தம்பாளையம் பகுதியை அடுத்த நல்லூர் பகுதியை சார்ந்தவர் பெருமாள் (வயது 60). இவர் தனது குடும்பத்தாருடன் ராமேஸ்வரம்  கோயிலுக்கு சென்று கரூரை கடக்கும் போது ஆம்னி வேன் கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி வேனாது தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பெருமாளின் 3 வயது பேத்தி இளமதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவத்தில் ஆம்னி வேன் டிரைவர் சுரேஷ், பெருமாள் உள்பட 8 பேர் கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கோயிலுக்கு சாமி கும்பிட்டு விட்டு வீடு திரும்பிய போது நிகழ்ந்த இந்த விபத்தில் அப்பாவி 3 வயது சிறுமி பலியான சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து கரூர் நகர போலீஸார் வழக்கு பதிவு செய்து ஆம்னி வேன் தலைகுப்புற கவிழ்ந்ததா ? இல்லை அடையாளம் தெரியாத வாகனம் மோதியதா ? என பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.accident-1 accident-2

காதலை எதிர்த்து அரிவாள் வெட்டு: மருத்துவமனையில் தாலி கட்டிய காதலன்

திருவாரூர்: காதலை எதிர்த்து உறவினர்களே மணப்பெண்ணை வெட்டினர். மருத்துவமனையில் குற்றுயிரும் குலையுயிருமாக அனுமதிக்கப்பட்டிருந்த காதலிக்கு, காதலன் தாலியைக் கட்டி பரபரப்பை ஏற்படுத்தினார். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகேயுள்ள அரித்துவாரமங்கலம் வ.உ.சி. நகரைச் சேர்ந்தவ வரதராஜன் மகள் கலைச்செல்வி (25). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கலியபெருமாள் மகன் இளையராஜா(31) என்பவருக்கும் காதல் ஏற்பட்டது. கடந்த 2 வருடமாக அவர்கள் காதலித்து வந்த நிலையில், கலைச்செல்வியின் உறவினர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் அவருக்கு கொரடாச்சேரியில் மாப்பிள்ளை பார்த்தால் அதிர்ச்சி அடைந்த கலைச்செல்வி இதைத் தன் காதலனிடம் தெரிவித்தார். பின்னர் அவர்கள் இருவரும் எடுத்த முடிவின் படி, கலைச்செல்வி தன் காதலனுடன் சென்று அவரது வீட்டில் தங்கினார். இது குறித்து ஊர்ப் பஞ்சாயத்தில் முறையிடப்பட அவர்கள் இருவருக்கும் (இன்று) திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். திருமணத்துக்கு தேவையான தாலி மற்றும் பொருட்கள் வாங்க நேற்று இரவு இளையராஜா அம்மாப்பேட்டை வந்தார். வீட்டில் கலைச்செல்வி மற்றும் இளையராஜாவின் வயதான தாய் ஆகியோர் மட்டுமே இருந்துள்ளனர். அப்போது கலைச்செல்வியின் சித்தப்பாக்கள் கலியபெருமாள், ரகுபதி, இவரது மகன் ஆனந்த் என்கிற ரகுவரன், கலைச்செல்வியின் தம்பி மணிகண்டன் ஆகியோர் அங்கு வந்து, அரிவாளால் கலைச்செல்வியை வெட்டினர். உருட்டு கட்டையால் தாக்கியதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். இது குறித்து அரித்துவாரமங்கலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துகு விரைந்து வந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த கலைச்செல்வியை மீட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இதை அடுத்து போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து ரகுபதியை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மற்ற மூவரைத் தேடி வருகின்றனர். இந்நிலையில், கலைச்செல்வி சிகிச்சை பெற்று வந்த தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்த காதலன் இளையராஜா , அவர் காதலி அருகே இருந்து கவனித்து வந்ததுடன், ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்த இதே நாளில் கலைச்செல்வி கழுத்தில் தாலி கட்டினார்.

நேதாஜி குடும்பத்தினர் உளவு பார்க்கப்பட்ட தகவல்: ஆச்சரியப்பட ஏதுமில்லை என்கிறார் மணீஷ் திவாரி

புது தில்லி: நேதாஜி குடும்பத்தினர் உளவு பார்க்கப்பட்டது குறித்து வெளியாகியுள்ள தகவல் குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் மணீஷ் திவாரி, இதுபோல் அப்படி எதுவும் நடக்கவில்லை. இந்தச் செய்தி தவறானது. உளவு பார்ப்பது காங்கிரஸ் கலாசாரம் அல்ல. நேருவும், நேதாஜியும் இணக்கமான உறவுடன்தான் இருந்தனர். இருப்பினும் இந்தத் தகவல் பற்றி ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை என்றார். இது குறித்து கருத்து தெரிவித்த பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் எம்.ஜே.அக்பர், நேதாஜி மீது காங்கிரஸ் வைத்திருந்த அச்சத்தையே இது காட்டுகிறது. காங்கிரசுக்கு எதிரான பலம் மிகுந்த தலைவராக அவர் இருந்தார். எனவே காங்கிரஸ் இந்த உளவு வேலையைச் செய்துள்ளது என்றார்.

நேதாஜி உறவினர்கள் நேருவால் உளவு பார்க்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல்

nehru-subash-boseபுது தில்லி: நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இறந்ததாகக் கூறப்பட்ட பின்னர், அவரது உறவினர்கள் அப்போதைய பிரதமர் ஜவாஹர்லால் நேருவால் உளவு பார்க்கப்பட்டுள்ளனர் என்ற செய்தி வெளியாகி அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது நேதாஜியின் சகோதரர் மகனான சிசிர் குமார் போஸ், நெருங்கிய உறவினர் அமியாநாத் போஸ், நேதாஜியின் ஜெர்மனி நாட்டு மனைவி எமிலி சூசென்கல் ஆகியோர் உளவு பார்க்கப் பட்டுள்ளனர். அவர்கள், ஜவாஹர்லால் நேரு பிரதமராக இருந்த 1948ஆம் ஆண்டு முதல் 1968ஆம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் உளவு பார்க்கப்பட்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர்கள் அனைவரும் உளவுத்துறையின் வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டு, அவர்களின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அனுஜ் தர் என்னும் எழுத்தாளர் ‘இண்டியாஸ் பிக்கஸ்ட் கவர் அவ்’ என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். அதில் நேதாஜியின் மர்ம மரணம் தொடர்பான இத்தகைய தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் தேசிய ஆவணக் காப்பகத்தில் சில மாதங்களுக்கு முன்பு வரை பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த 2 முக்கிய கோப்புகளும் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. இதுகுறித்து அனுஜ்தர் கூறியபோது, ‘ரகசியமான இந்தக் கோப்புகள் இரண்டும் தவறுதலாக தேசிய ஆவணக் காப்பகத்துக்கு வந்துவிட்டன. இந்தக் கோப்புகள் முக்கியத் தகவல்களைக் கொண்டவை. ஏனெனில் அவற்றிலுள்ள சின்னச் சின்ன விஷயங்கள் கூட உன்னிப்பாகக் கவனித்து எழுதப்பட்டுள்ளன’ என்றார். உளவு பார்க்கப்பட்டது தொடர்பான கோப்புகள் பலவற்றில் உளவுத்துறை அதிகாரிகள் நேதாஜி குடும்பத்தினரின் தொலைபேசி உரையாடல்கள் குறித்து கையால் எழுதப்பட்ட ஆவணங்களாகக் காணப்படுகின்றன. அமியாநாத் போஸ் கல்கத்தாவில் வசித்தபோதும், தில்லி உள்ளிட்ட இந்திய நகரங்களிலும், வெளிநாடுகளுக்கு பயணம் சென்றபோதும் அவருடைய நடவடிக்கைகள் உளவு பார்க்கப்பட்டுள்ளது இந்தக் கோப்புகள் மூலம் தெரிய வந்துள்ளது. மேலும், நேதாஜியின் ஜெர்மனி நாட்டு மனைவி எமிலி சூசென்கல், சிசிர்குமார் போஸ், வரலாற்று நிபுணர் லியோனார்டு கார்டன், ஜப்பான், ஐரோப்பா, அமெரிக்காவில் வசித்தவர்களுக்கு எழுதிய கடிதங்களும் உளவு பார்க்கப்பட்டுள்ளன. இந்தக் கடிதங்கள் அனைத்தும் மத்திய உளவுத்துறையால் பிரித்துப் பார்க்கப்பட்டிருப்பதுடன் அவை நகல் எடுக்கப்பட்டுள்ளன. நேதாஜி இறந்துவிட்டதாகக் கூறப்பட்ட 10 ஆண்டுகளுக்குப் பிறகும் எமிலி சூசென்கல் குறித்து எழுதும்போது நேதாஜியின் மனைவி என்பதை உளவுத்துறையினர் தவறாமல் குறிப்பிட்டுள்ளனர்.

பெட்ரோல் பங்க்கள் இன்று பகலில் மட்டுமே இயங்கும்

சென்னை: பெட்ரோலிய விற்பனையாளர்களின் கொள்முதல் நிறுத்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக ஏப்.11 சனிக்கிழமை இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே பெட்ரோல், டீசல் விற்பனை நிலையங்கள் இயங்கும் என்று தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இது குறித்து அந்த சங்கத்தின் தலைவர் பி.கே.முரளி கூறிய போது… டீலர் மார்ஜின் எனப்படும் விளிம்புத் தொகையை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் உள்ள பெட்ரோலிய விற்பனையாளர்கள் சனிக்கிழமை இன்று கொள்முதல் நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டத்தின் ஒருபகுதியாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள விற்பனை நிலையங்களில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே பெட்ரோல், டீசல் விற்பனை நடைபெறும். அதன்பிறகு விற்பனை நிலையங்கள் இயங்காது. ஏப்ரல் 12ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முதல் வழக்கம்போல பெட்ரோல், டீசல் விற்பனை நிலையங்கள் இயங்கும் என்றார்.