Home Blog Page 6121

சிறுதொழில் வளர்ந்தால் இந்தியா வளரும்: மோடி

சிறுதொழில்கள் வலுவாகி நல்ல வளர்ச்சி அடைந்தால், இந்தியாவும் வலுவடையும். இது தொடர்பாக இந்தியாவில் வாழும் சிறுதொழில் முனைவோர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் மோடி. அந்தக் கடிதம் .. 

பிரான்ஸ், ஜெர்மனி, கனடா பயணம்: இன்று செல்கிறார் மோடி

புது தில்லி: பிரான்ஸ், ஜெர்மனி, கனடா ஆகிய நாடுகளில் ஒன்பது நாட்கள் அரசு முறைப் பயணம் மேற்கொள்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. இதற்காக இன்று காலை தில்லியிலிருந்து புறப்படுகிறார். அவரின் இந்தப் பயணத்தின் போது, முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுப்பது, வர்த்தகம், அணுசக்தி மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் ஒத்துழைப்பை ஏற்படுத்துவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என தெரிகிறது. பிரான்ஸ், ஜெர்மனி, கனடாவு நாடுகளுக்கு பிரதமராகப் பதவியேற்ற பின், மோடி பயணம் மேற்கொள்வது, இதுவே முதல் முறை. மூன்று நாடுகள் பயணத்தில், முதல் கட்டமாக, இன்று பிரான்ஸ் புறப்பட்டுச் செல்லும் பிரதமர், அங்கு நான்கு நாட்கள் தங்கியிருப்பார். அப்போது, பிரான்ஸ் அதிபர் பிரான்ஸ்வா ஹாலண்டே, முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் தொழிலதிபர்களை சந்தித்துப் பேசுகிறார். இந்தச் சந்திப்புகளின் போது, உள்கட்டமைப்பு வசதி மற்றும் பாதுகாப்புத் துறைகளில் ஒத்துழைப்பை ஏற்படுத்துவது குறித்து விவாதிக்க உள்ளார். பிரான்ஸுக்குப் பிறகு, திங்களன்று ஜெர்மனி செல்கிறார். ஜெர்மனியின் பெர்லின் நகர் சென்றடையும் அவர், வரும் செவ்வாயன்று, அந்நாட்டின் அதிபர் ஏஞ்சலா மெர்கெலை சந்தித்து, சுத்தமான எரிசக்தி, உள்கட்டமைப்பு மேம்பாடு, ‘ஸ்மார்ட்’ நகரங்கள் உட்பட, பல விஷயங்கள் குறித்து பேச்சு நடத்துகிறார். அத்துடன், ஜெர்மன் தொழிலதிபர்கள் பங்கேற்கும் பிரமாண்டமான மாநாட்டிலும் பேசுகிறார். மேலும், இந்தியாவும், ஜெர்மனும் இணைந்து நடத்தும், கண்காட்சியையும் பார்வையிடுகிறார். இந்தக் கண்காட்சியில், 350க்கும் மேற்பட்ட இந்திய நிறுவனங்கள் பங்கேற்கின்றன. முதலீட்டாளர்கள் மாநாட்டில் பேசும் போது, இந்தியாவின், ‘மேக் இன் இந்தியா’ திட்டம் குறித்து விவரித்து, முதலீடு செய்ய வரும்படி மோடி அழைப்பு விடுக்கவுள்ளார். இந்திய – ஜெர்மன் வர்த்தக மாநாட்டில் பேசும் மோடி, 800 வர்த்தக நிறுவனங்களின் தலைவர்களுடன் கலந்துரையாடுகிறார். அதன் பின் கனடா செல்கிறார். மோடியுடன், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், பீயுஷ் கோயல், ரவிசங்கர் பிரசாத், ராஜிவ் பிரதாப் ரூடி, வெங்கையா நாயுடு, மேகாலயா, உ.பி., மற்றும் மகாராஷ்டிரா மாநில முதல்வர்களும், தொழிலதிபர்கள், 110 பேரும் செல்ல உள்ளனர். இந்தத் தகவலை மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது குறித்து தனது டிவிட்டரில் செய்தி பகிர்ந்துள்ளார் மோடி.  

நாகூர் ஹனீபா மரணம்: குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் இரங்கல்

பாடகர் நாகூர் ஹனீபா மறைவு தொடர்பாக, குவைத் இஸ்லாமியச் சங்கம் தனது இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளது. அதில், இசை முரசு நாகூர் ஈ.எம். ஹனீஃபா சென்னை, கோட்டூர் சேரியில் உள்ள அவரது இல்லத்தில் தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள். அன்னாருக்கு வயது 96. வியாழக்கிழமை நாகை மாவட்டம், நாகூர் தர்காவில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னார் அவர்களின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, மார்க்கச் சேவைகளை அங்கீகரித்து, குற்றங்களை மன்னித்து தன்னுடைய ‘ஜன்னதுல் பிர்தௌஸ்’ எனும் உயர்ந்த சுவனத்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தார், உற்றார், உறவினர், நண்பர்கள், ரசிகர்கள் மற்றும் அபிமானிகள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) பிரார்த்தனை செய்கிறது. குவைத்தில் வரும் வெள்ளிக்கிழமை (10.04.2015) K-Tic தமிழ் ஜும்ஆ ஃகுத்பா பள்ளிவாசலில் ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு அன்னார் அவர்களின் சேவைகள் நினைவுகூரப்பட்டு, மறுமை வாழ்வின் வெற்றிக்காக சிறப்பு துஆ செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இசை முரசு நாகூர் ஹனிபா மறைவு: எஸ்.டி.பி.ஐ கட்சி இரங்கல்

சென்ன்னை: பாடகர் நாகூர் ஹனீபா மறைவு தொடர்பாக எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம் தெஹ்லான் பாகவி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், இசை முரசு E.M.நாகூர் ஹனிபா அவர்கள் இன்று மரணமடைந்து விட்டார்கள் என்ற செய்தி மிகுந்த வருத்தத்திற்குரியது. தனது சிம்மக்குரலால் லட்சக்கணக்கான மக்களின் உள்ளங்களை கொள்ளை கொண்ட E.M.நாகூர் ஹனிபாவின் மறைவு பேரிழப்பாகும். திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிரச்சாரக்களத்திலும் அதன் வளர்ச்சியிலும் தனிப்பெரும் முத்திரை பதித்தவர். இஸ்லாமிய இன்னிசை உலகின் முடிசூடா மன்னராக திகழ்ந்தவர். அவர் பாடிய ஆயிரக்கணக்கான பாடல்கள் அவர் புகழை என்றும் நிலை நிறுத்தும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றேன். அவருக்காக எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன் – என்று தெரிவித்துள்ளார்.

அண்ணா நூலகத்தை சீரமைக்கக் கோரி ஏப்.,10ல் திமுக ஆர்ப்பாட்டம்

சென்னை: அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தைச் சீரமைக்க வலியுறுத்தி, திமுக சார்பில், வரும் 10-ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக முன்னாள் மேயரும், சென்னை தெற்கு மாவட்டச் செயலாளருமான மா.சுப்பிரமணியன் வெளியிட்ட அறிக்கையில், திமுக ஆட்சியில் அமைக்கப்பட்டது என்ற ஒரே காரணத்துக்காக அதிமுக ஆட்சியில் அண்ணா நூற்றாண்டு நூலகம் சீரமைக்கப்படாமல் உள்ளது. வீட்டுக்கொரு நூலகம் வேண்டும் என கூறிய அண்ணாவின் பெயரால் அமைந்த நூலகத்தைச் சீரமைக்காமல் இருப்பது கண்டிக்கத்தக்கது. இதைக் கண்டித்து, வரும் 10-ஆம் தேதி அண்ணா நினைவு நூலகத்தின் வாயிலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கூறியுள்ளார்.

க.அன்பழகன் உடல்நிலை முன்னேற்றம்

anbazhagan-dmk

சென்னை:

திமுக., பொதுச் செயலாளர் க.அன்பழகன் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவர் விரைவில் அவர் வீடு திரும்புவார் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தலை சுற்றல், மயக்கம் காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அன்பழகன் செவ்வாய்க் கிழமை அனுமதிக்கப்பட்டார்.  மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அடைப்பை நீக்குவதற்கான மருந்துகள் அவருக்கு அளிக்கப்பட்டுள்ளன. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின் அவருக்கு மயக்கம் போன்ற பிரச்னைகள் ஏற்படவில்லை என்று மருத்துவர்கள் கூறினர்.

150 திருட்டு வழக்கு: பீரோ புல்லிங் ஆசாமி கைது

nagamani-pulling-accusedசென்னையில் 150 திருட்டு வழக்குகளில் தொடர்புடைய பீரோ புல்லிங் ஆசாமி ஒருவர் கைது செய்யப்பட்டார். சென்னை மடிப்பாக்கம், ஆதம்பாக்கம், நங்கநல்லூர்,பழவந்தாங்கல்,பள்ளிக்கரணை ஆகிய பகுதிகளில் தொடர்ச்சியாக வீடுகளின் பின்கதவை உடைத்து தங்க நகை, பணம் திருடப்பட்டு வந்தது. இந்தத் திருட்டில் ஈடுபடுகிறவர்களைக் கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், செஞ்சியைச் சேர்ந்த சோ.நாகமணி (40) இந்தத் திருட்டில் ஈடுபடுவது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் தலைமறைவாக இருந்த நாகமணியை புதன்கிழமை கைது செய்து, அவரிடமிருந்து ரூ. 20 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளையும், பொருள்களையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். நாகமணி மீது ஏற்கெனவே 150 திருட்டு வழக்குகள் இருப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.

பகவத் கீதை போட்டியில் முதல் பரிசு பெற்ற முஸ்லிம் பெண்ணுக்கு ஆளுநர் பாராட்டு

maryam_siddique மும்பை: “பகவத் கீதை’ போட்டியில் வெற்றி பெற்ற முஸ்லிம் மாணவியை, மகாராஷ்டிர மாநில ஆளுநர் சி.வித்யாசாகர் ராவ் செவ்வாய்க் கிழமை நேரில் அழைத்து பாராட்டி, கெளரவித்தார். அகில உலக கிருஷ்ணா அமைப்பு இஸ்கான் சார்பில், மும்பையில் பள்ளிகளுக்கு இடையேயான பகவத் கீதை போட்டி கடந்த மாதம் நடைபெற்றது. 90 அரசுப் பள்ளிகள் மற்றும் 105 தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் இந்தப் பேட்டியில் பங்கேற்றனர். இதில், 6-ஆம் வகுப்பு பயிலும் முஸ்லிம் மாணவி மரியம் ஆசிஃப் சித்திக் முதலிடம் பெற்றார். இவரது பயிற்சியையும் சாதனையையும் பாராட்டி, மகாராஷ்டிர மாநில ஆளுநர் வித்யாசாகர் ராவ், மரியம் ஆசிஃப் சித்திக், அவரது பெற்றோர், ஆசிரியர்கள் ஆகியோரை ஆளுநர் மாளிகைக்கு அழைத்து பாராட்டினார். மரியம் ஆசிஃப் சித்திக்குக்கு புத்தகங்களைப் பரிசாக அளித்து கெளரவித்தார். காங்கிரஸ் கட்சியின் மும்பை பிரிவு தலைவர் சஞ்சய் நிரூபம், மரியம் ஆசிஃப் சித்திக்குக்கு புதன்கிழமை விருந்தளித்தார். அப்போது அவர் கூறுகையில், “மத நல்லிணக்கத்தின் அடையாளமாக சித்திக் திகழ்கிறார்’ என்று பாராட்டினார்.

ஐ.பி.எல்: சென்னையில் போக்குவரத்து மாற்றம்

chepauk-stadium சென்னை : ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டியை ஒட்டி, சேப்பாக்கத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தியன் பிரிமியர் லீக் (ஐPடு) கிரிக்கெட் விளையாட்டுப் போட்டிகள் சென்னை எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் அரங்கில் 09.04.2015 ,11.04.2015, 25.04.2015, 28.04.2015, 04.05.2015, 08.05.2015 மற்றும் 10.05.2015 ஆகிய நாட்களில் நடைபெறுவதை முன்னிட்டு பொதுமக்கள் மற்றும் போட்டியைக் காணவரும் பார்வையாளர்களின் நலன் கருதி கீழ்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் தேவைக்கேற்ப மேற்கொள்ளப்படும்.

  1. வணிகப் பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மற்றும் குறைந்த வேகத்தில் இயங்கக்கூடிய வாகனங்கள் வாலாஜா சாலை மற்றும் பாரதி சாலைகளில் அனுமதிக்கப்படமாட்டாது.
  2. போட்டியைக் காணவரும் பார்வையாளர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாகன அனுமதிச் சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள வாகன நிறுத்துமிடத்தில் அதன் பின்புறம் குறிப்பிட்டுள்ள சாலைகளின் வழியாகச் சென்று நிறுத்தலாம். பாரதி சாலை விக்டோரியா விடுதி சாலை வழியாக வரும் வாகனங்கள் விக்டோரியா விடுதி சாலை வழியாகவும் மெட்ராஸ் யூனிவர்சிட்டி பார்கிங் செல்லும் வாகனங்கள் மட்டுமே காமராஜர் சாலை மற்றும் வாலாஜா சாலையில் அரசினர் விருந்தினர் மாளிகை சந்திப்பிலிருந்து அனுமதிக்கப்படுவர். எம்.சி.சி. பார்கிங் செல்லும் வாகனங்கள் மட்டுமே பாரதி சாலை மற்றும் பெல்ஸ் சாலை மற்றும் வாலாஜா சாலை – பெல்ஸ் சாலை வழியாக அனுமதிக்கப்படும்.

  3. உழைப்பாளர் சிலை சந்திப்பில் காமராஜர் சாலையிலிருந்து வாலாஜா சாலை நோக்கி வாகனங்கள் அனுமதிக்கப்படமாட்டாது.

  4. வாகன அனுமதிச் சீட்டு இல்லாத வாகனங்கள் அண்ணா சதுக்கத்திலிருந்து உழைப்பாளர் சிலை சந்திப்பில் வலதுபுறம் திரும்ப அனுமதிக்கப்படமாட்டாது. இவ்வாகனங்கள் காமராஜர் சாலை, கண்ணகி சந்திப்பு, பாரதி சாலை வழியாக பெல்ஸ் சாலை மற்றும் வாலாஜா சாலை அடையலாம்.

  5. வாகன அனுமதிச் சீட்டு இல்லாத வாகனங்கள் அண்ணா சாலையிலிருந்து வாலாஜா சாலை வழியாக வரும்பட்சத்தில் உழைப்பாளர் சிலை சந்திப்பில் வலதுபுறம் திரும்பி மெரினா நீச்சல் குளம் அருகே கடற்கரை உட்புற சாலையில் நிறுத்தலாம்.

  6. போர் நினைவுச் சின்னம் மற்றும் பெரியார் சிலை சந்திப்பிலிருந்து வருகின்ற வாகன அனுமதிச் சீட்டு இல்லாத வாகனங்கள் சுவாமி சிவானந்தா சாலையில் நிறுத்தலாம் அல்லது மெரினா நீச்சல் குளம் அருகே கடற்கரை உட்புற சாலையில் நிறுத்தலாம்.

  7. வாகன அனுமதிச் சீட்டு இல்லாத வாகனங்கள் காந்தி சிலையில் இருந்து வரும்பட்சத்தில் சீரணி அரங்கம் அருகே வலதுபுறம் திரும்பி மெரினா நீச்சல் குளம் அருகே கடற்கரை உட்புற சாலையில் நிறுத்தலாம்.

மேற்கூறிய போக்குவரத்து மாற்றங்கள் வாகனங்கள் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் சீராக செல்வதற்காக சென்னை போக்குவரத்துக் காவலால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆகவே வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு நல்கக் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

“இறைவனிடம் கையேந்துங்கள்” புகழ் நாகூர் ஹனீபா காலமானார்

nagore-hanifaசென்னை:’ ‘இறைவனிடம் கையேந்துங்கள்” பாடல் மூலம் புகழ் பெற்ற பாடகர் நாகூர் ஹனீபா, உடல் நலக்குறைவால் நேற்று காலமானார். அவருக்கு வயது 90. சென்னை கோட்டூர்புரத்தில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார் ஹனீபா. அவர் நேற்று உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு அரசியல் கட்சியினர் மற்றும் இசை உலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் வெளிப்பட்டினத்தில், 1925இல் முகமது இஸ்மாயில் – மரியம் பீவிக்கு, மூன்றாவது மகனாகப் பிறந்தவர் ஹனீபா. அவருடைய தந்தைக்கு நாகூர் பூர்வீகம் என்பதால், தன் பெயருடன் நாகூரைச் சேர்த்துக் கொண்டாராம். 5ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்த நாகூர் ஹனீபா, கேள்வி ஞானத்தால் பாடும் திறனை வளர்த்துக் கொண்டவர். 1954ல் பாரதிதாசன் எழுதிய சங்கே முழங்கு பாடல் மூலம் புகழ் அடைந்தவர், ”இறைவனிடம் கையேந்துங்கள்” என்ற பாடலின் மூலம் புகழின் உச்சிக்கே சென்றார். அவரது குரல் இந்தப் பாடலின் மூலம் பெரும்பாலான இசை ரசிகர்களைச் சென்றடைந்தது. வானொலியில் இவரது இந்தப் பாடல் அடிக்கடி ஒலிபரப்பாகி வானொலி நேயர்கள் மத்தியில் நன்கு பிரபலம் அடைந்தது. பின்னாளில் தி.மு.க.,வினர் நடத்திய கட்சிப் பொதுக் கூட்டங்களில் பாடி வந்தார் ஹனீபா.