சென்ன்னை: பாடகர் நாகூர் ஹனீபா மறைவு தொடர்பாக எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம் தெஹ்லான் பாகவி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், இசை முரசு E.M.நாகூர் ஹனிபா அவர்கள் இன்று மரணமடைந்து விட்டார்கள் என்ற செய்தி மிகுந்த வருத்தத்திற்குரியது. தனது சிம்மக்குரலால் லட்சக்கணக்கான மக்களின் உள்ளங்களை கொள்ளை கொண்ட E.M.நாகூர் ஹனிபாவின் மறைவு பேரிழப்பாகும். திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிரச்சாரக்களத்திலும் அதன் வளர்ச்சியிலும் தனிப்பெரும் முத்திரை பதித்தவர். இஸ்லாமிய இன்னிசை உலகின் முடிசூடா மன்னராக திகழ்ந்தவர். அவர் பாடிய ஆயிரக்கணக்கான பாடல்கள் அவர் புகழை என்றும் நிலை நிறுத்தும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றேன். அவருக்காக எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன் – என்று தெரிவித்துள்ளார்.
இசை முரசு நாகூர் ஹனிபா மறைவு: எஸ்.டி.பி.ஐ கட்சி இரங்கல்
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari