சென்னையில் 150 திருட்டு வழக்குகளில் தொடர்புடைய பீரோ புல்லிங் ஆசாமி ஒருவர் கைது செய்யப்பட்டார். சென்னை மடிப்பாக்கம், ஆதம்பாக்கம், நங்கநல்லூர்,பழவந்தாங்கல்,பள்ளிக்கரணை ஆகிய பகுதிகளில் தொடர்ச்சியாக வீடுகளின் பின்கதவை உடைத்து தங்க நகை, பணம் திருடப்பட்டு வந்தது. இந்தத் திருட்டில் ஈடுபடுகிறவர்களைக் கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், செஞ்சியைச் சேர்ந்த சோ.நாகமணி (40) இந்தத் திருட்டில் ஈடுபடுவது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் தலைமறைவாக இருந்த நாகமணியை புதன்கிழமை கைது செய்து, அவரிடமிருந்து ரூ. 20 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளையும், பொருள்களையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். நாகமணி மீது ஏற்கெனவே 150 திருட்டு வழக்குகள் இருப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.
150 திருட்டு வழக்கு: பீரோ புல்லிங் ஆசாமி கைது
Popular Categories


