Home Blog Page 6244

ஐ.ஐ.டி, என்.ஐ.டி. கல்லூரிகளுக்கு ஒரே கலந்தாய்வு

புதுதில்லி: ஐஐடி, என்.ஐ.டி. மற்றும் சி.எப்.டி.ஐ பொறியில் கல்லூரி நிறுவனங்கள் அனைத்திற்கும் சேர்த்து ஒரே கலந்தாய்வு மட்டுமே நடத்தப்படும். இது வரும் கல்வி ஆண்டு 2015 – 2016 முதல் நடைமுறைபடுத்தப்படும். இந்த முடிவை இந்திய தொழில்நுட்ப கழகம் மற்றும் தேசிய தொழில்நுட்பக் கழகம் எடுத்துள்ளது. இதனை மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிருதி இரானி இன்று மக்களவையில் தெரிவித்துள்ளார்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களில் 24 ஆயிரம் பேர் இந்த ஆண்டு ஓய்வு: 50 சதவீத காலியிடம் நேரடியாக நிரப்பப்படுவதால் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு.

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களில் 24 ஆயிரம் பேர் இந்த ஆண்டு பணியிலிருந்து ஓய்வுபெறுகிறார்கள். இக்காலியிடங்களில் 50 சதவீதம் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படுவதால் இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு ஏற்படும். தமிழக அரசின் பல்வேறு துறைகளில் 12 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள், அலுவலர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் பணியிலிருந்து ஓய்வு பெறுவதற்கு 5 ஆண்டுகளுக்கு முன்னரே அவர்களைப் பற்றிய முழு விவரங்கள் அடங்கிய பட்டியல் துறை வாரியாக தமிழக அரசின் நிதித்துறைக்கு அனுப்பப்படும்.
 
ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய பணிக்கொடை (கிராஜுவிட்டி) உள்ளிட்ட பணப்பயன்கள் குறித்து முன்கூட்டியே திட்டமிட்டு பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டியதிருப்பதால் இந்த ஏற்பாடு செய்யப்படுகிறது.
அரசுப் பணியாளர்கள் டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வு மூலமாகவும், ஆசிரியர்கள் டிஆர்பி எனப்படும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலமாகவும் தேர்வுசெய்யப்படுகிறார்கள். மேலும், வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு (சீனியாரிட்டி) மற்றும் கருணை அடிப்படையிலும் பணி நியமனம் நடைபெறுகிறது.
இந்த நிலையில், 2015-16-ம் நிதி ஆண்டில் அரசு ஊழியர்கள், அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களில் ஏறத்தாழ 24 ஆயிரம் பேர் ஓய்வுபெற இருப்பதாக நிதித்துறையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். காவலர், அலுவலக உதவியாளர் தொடங்கி, குரூப்-சி பணியாளர்கள், குரூப்-பி, குரூப்-ஏ அலுவலர்கள், ஆசிரியர்கள், கல்லூரி பேராசிரியர்கள் என அனைத்து வகை ஊழியர்களும் இதில் அடங்குவர். ஒரே ஆண்டில் இவ்வளவு பேர் ஓய்வுபெறுவது அரிதான ஒன்றாகும்.
பொதுவாக, அரசுப் பணியில், 50 சதவீத காலியிடங்கள் பதவி உயர்வு மூலமாகவும், எஞ்சிய 50 சதவீத இடங்கள் நேரடி நியமனம் மூலமாகவும் நிரப்பப்படும். அந்த வகையில், 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படும் சூழல் இருப்பதால் படித்த இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு ஏற்படும். இதற்காக டிஎன்பிஎஸ்சி மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக அதிகளவில் பணி நியமனங்கள் நடைபெறும். இந்த ஆண்டு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள் நிரப்பப்படும் என அண்மையில் துறை வட்டாரங்கள் தெரிவித்தன
காவலர், அலுவலக உதவியாளர் தொடங்கி, குரூப்-சி பணியாளர்கள், குரூப்-பி, குரூப்-ஏ அலுவலர்கள், ஆசிரியர்கள், கல்லூரி பேராசிரியர்கள் என அனைத்து வகை ஊழியர்களும் இதில் அடங்குவர். ஒரே ஆண்டில் இவ்வளவு பேர் ஓய்வுபெறுவது அரிதான ஒன்றாகும்.

அரசு தரும் டிஜிட்டல் லாக்கர்..!

digital-lockerபொதுமக்களின் முக்கிய சான்றிதழ்கள் ‘டிஜிட்டல்’ முறையில் இருந்தால் அதை பாதுகாப்பாக வைக்க ‘டிஜிலாக்கர்’ என்ற இணைய வசதியை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. கல்விச் சான்றிதழ்கள், வங்கி டிபாசிட் சான்றிதழ்கள் போன்ற சான்றிதழ்களை வீடுகளில் பாதுகாப்பாக தாள்களாக பத்திரமாக வைத்திருப்போம். அது போல அந்த சான்றிதழ்களை டிஜிட்டல் முறையில் பாதுகாப்பாக வைக்கும் புதிய முறை அறிமுகம் இப்போது செய்யப்பட்டுள்ளது.

இதற்காக ஒரு இணையதளத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. http:/digitallocker.gov.in/ என்ற இணையதளத்திற்கு சென்று ஆதார் எண் மற்றும் பிற தகவல்களை பதிவு செய்து ‘பீட்டா வெர்சன்’ எனப்படும் டிஜிட்டல் முறையில் வைத்திருக்கும் சான்றிதழ்களை இந்த லாக்கரில் எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் பத்திரமாக வைத்திருக்கலாம். தற்போது இந்த வசதி ஒவ்வொரு தனிநபர்களுக்கும் 10 எம்.பி., அளவுக்குத் தான் அனுமதிக்கப்பட்டுள்ளது. யார் இந்த சான்றிதழ்களை இந்த டிஜிட்டல் லாக்கரில் வைக்கிறாரோ அவர் தான் அதை எடுக்க முடியும். அதற்காக ரகசிய பாஸ்வேர்டு குறியீடு எண்கள் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. மகாராஷ்டிரா போன்ற சில மாநிலங்கள் தங்களுக்கு என தனியாக டிஜிட்டல் லாக்கர் வசதியை கொண்டுள்ளன. இதில் சாதாரண தாள் வடிவில் உள்ள சான்றிதழ்களை பாதுகாக்க முடியாது. பீட்டா வெர்சன் என்ற கம்ப்யூட்டர் நகல் வடிவில் உள்ள சான்றிதழ்களை மட்டுமே பாதுகாப்பாக வைக்க முடியும்.

லிட்டருக்கு 48.2 கிமீ மைலேஜ் தரும் மாருதி ஸ்விஃப்ட்..!

கடந்த வாரம் டெல்லியில் நடந்த இன்டர்நேஷனல் க்ரீன் மொபிலிட்டி எக்ஸ்போ 2015 நிகழ்ச்சியில் மாருதி ஸ்விஃப்ட் Range Extender கான்செப்ட்டை அறிமுகப்படுத்தியது மாருதி சுஸூகி. ஏற்கெனவே 2014 ஆட்டோ எக்ஸ்போவில் இந்த கான்செப்ட்டை காட்சிக்கு வைத்திருந்தது மாருதி. Plug-in Hybrid வகை காரான இந்த ஸ்விஃப்ட் Range Extender கான்செப்ட் லிட்டருக்கு 48.2 கிமீ மைலேஜை அளிக்கிறதாம்.

ஐரோப்பிய நாடுகளில் விற்பனையாகும் ஸ்விஃப்ட் காரை அடிப்படையாகக் கொண்டது இந்த கான்செப்ட் கார் லிட்டருக்கு 48.2 கிமீ மைலேஜ் அளிப்பது மட்டுமில்லாமல் ப்யூர் எலெக்ட்ரிக் மோடில் 25.5 கிமீ வரை செல்கிறது. இதில் 658 சிசி, 3 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜினுடன் 73 hp சக்தியை அளிக்கும் எலெக்ட்ரிக் மோட்டார் உள்ளது. சிங்கிள் ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸும் உள்ளது. 1,600 கிலோ எடை கொண்ட இந்த கான்செப்ட் காரில் லித்தியம்-அயான் பேட்டரி உள்ளது. இது முழுமையாக சார்ஜ் ஆக ஒன்றரை மணிநேரம் ஆகும். 2017-ம் ஆண்டில் அடுத்த தலைமுறை ஸ்விஃப்ட் காரில் ஹைபிரிட் மாடலும் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம்.maruti-swift

வேந்தர் மூவீஸ் மதன் குறித்து தவறான தகவல் கசிவதாக விளக்கம்

சென்னை: வேந்தர் மூவீஸ் மதன் குறித்து தவறான தகவல் பரவுவதாக அதன் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இன்று அந்நிறுவனம் சார்பில் வெளியிட்டப்பட்ட அறிக்கையில், இன்று காலை முதல் வேந்தர் மூவீஸ் எஸ். மதன் அவர்களைப் பற்றி தவறான தகவல்கள் கசிந்து கொண்டிருக்கின்றன. அதில் சிறிதளவும் உண்மை இல்லை என்பதை தங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். – என்று வேந்தர் மூவீஸ் பங்குதாரர் பா.பாலகுருநாதன் பெயரில் அறிக்கை வெளியானது. vendhar-movies  

வீடு வாங்கினால் மனைவி இலவசம்: இந்தோனேஷியாவில் விநோத விளம்பரம்

indonesia-advt-house-free-wife இந்தோனேசியாவில் வீடு வாங்குபவருக்கு மனைவி இலவசம் என்ற விநோத விளம்பரம் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ளது. வீடு வாங்குபவர்களுக்கு ரியல் எஸ்டேட் நடத்தும் நிறுவனங்கள் பரிசுப் பொருட்கள் வழங்குவது வாடிக்கையான ஒன்றுதான். ஆனால் விநோதமாக மனைவி இலவசம் என்ற பெயரில் விளம்பரம் இந்தோனேஷியாவில் வெளியாகியுள்ளது. “இது ஒரு அரிய வாய்ப்பு. நீங்கள் இந்த வீட்டை வாங்கினால், இந்த வீட்டின் உரிமையாளரை நீங்கள் திருமணம் செய்து கொள்ள கேட்கலாம். ” என இந்த விளம்பரம் வெளியாகி, இப்போது இணையத்தில் மிகப் பிரபலமடைந்துள்ளது. இந்த விளம்பரத்தில், 40 வயது மதிக்கத்தக்க வீட்டு பெண் உரிமையாளரான லீனா காரில் சாய்ந்தபடி இருக்கும் புகைப்படமும் வெளியிடப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் ஜாவா தீவில் பல்வேறு வசதிகளுடன் இந்த வீடு உள்ளது. இரண்டு படுக்கை அறை, இரு குளியல் அறை, வாகனம் நிறுத்துமிடம் மற்றும் சிறிய மீன்குளம் ஆகிய வசதிகள் வீட்டில் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. விளம்பரத்தில் நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளது. ஜாவா தீவில் உள்ள இந்த வீட்டின் மார்க்கெட் விலை 999 மில்லியன் ரூபயா (75 ஆயிரம் அமெரிக்க டாலர்கள்) என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த வீட்டை விற்பனை செய்தாலும், தொடர்ந்து உரிமையாளராக நீடிக்கவே லீனா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்று இணையதள தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுதொடர்பான செய்திகள் வெளியானதும், லீனாவை அணுகிய செய்தியாளர்கள், அவரிடம் இது குறித்துக் கேட்டனர். இதனால் லீனாவும் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுதொடர்பாக போலீசாரும் விசாரித்து உள்ளனர். போலீஸாரிடம் இது என் யோசனை அல்ல என்று விவரித்தேன் என்றார் லீனா. இரண்டு குழந்தைகளுக்குத் தாயான லீனா பேசுகையில், வீட்டை விற்பனை செய்ய ஆட்களை கண்டுபிடிக்கவே என் நண்பரிடம் உதவி கேட்டேன். கணவர் தொடர்பாகவும் பேசினேன். குறிப்பிட்ட நபர்களிடம் இந்தத் தகவலை அவர் தெரிவிப்பார் என்றே அவரிடம் கூறினேன். இணையதளங்களில் பதிவு செய்யச் சொல்லவில்லை. வீடு வாங்க விருப்பம் உள்ளவர் திருமணம் ஆகாதவர், மனைவியை இழந்தவர், மனைவியைத் தேடுபவர் என்ற பிரிவில் இருந்தால் எனக்குத் தெரியப் படுத்துங்கள் என்றே நான் அவரிடம் கேட்டுக் கொண்டேன். நானும் விதவை என்பதால் என்னை அவர் அறிந்து கொள்ள முடியும் என்பதால் அப்படிக் கூறினேன் என்று தெரிவித்துள்ளார். இஸ்லாமிய நாடான இந்தோனேசியாவில் இதுபோன்ற விளம்பரம் வெளியாகி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஒரு குழந்தைக்கு ரூ.5 வீதம் ஒதுக்கி அங்கன்வாடி மையங்களுக்கு வழங்க தமிழிசை சௌந்தர்ராஜன் கோரிக்கை

tamilisai-soundararajan சென்னை: ஊட்டச்சத்து இன்றி குழந்தைகள் இருப்பார்கள் என்பதால், தற்போதைய விலைவாசிக்கு ஏற்ப, ஒரு குழந்தைக்கு ரூ.5 வீதம் ஒதுக்கி அங்கன்வாடி மையங்களுக்கு வழங்க தமிழக பாஜக., தமிழிசை சௌந்தர்ராஜன் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகம் முழுவதும் உள்ள சத்துணவு, அங்கன்வாடி மையங்களின் ஊழியர்கள் காலியாக உள்ள சுமார் 40,000 பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உட்பட பல கோரிக்கைகளை தமிழக அரசு ஏற்க வேண்டும் என்று மார்ச் 15-ந் தேதி காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். இதனால் குழந்தைகள் பெரும்அளவிற்கு பாதிக்கப்படுவார்கள். அதுமட்டுமல்லாமல் 1 முதல் 5-ம் வகுப்பு வாரியான குழந்தைகளுக்கு காய்கறி வாங்கவும், சமைக்கவும் தலா 1.30 ரூபாயும், 6 முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு 1.40 ரூபாயும் தமிழக அரசு வழங்குகிறது. இப்போதுள்ள விலைவாசியால் இது சாத்தியப்படாது என்பது மட்டுமல்ல ஊட்டச்சத்தோடு வளர வேண்டிய குழந்தைகள், குறைபாடோடும், ஊட்டச்சத்து குறையோடும் வளரும் நிலை ஏற்படும். இது தடுக்கப்பட வேண்டும். இந்த அளவு குறைந்த ஒதுக்கீட்டை ஓர் குழந்தைக்கு ஒதுக்கும் போது அது மறைமுகமாக அவர்களுக்குக் கொடுக்கும் காய்கறி அளவிலும், உணவு அளவிலும் குறை ஏற்பட்டு அவர்கள் சோகை பாதித்த குழந்தைகளாகவும், ஊட்டச்சத்தில்லாத குழந்தைகளாகவும், வளர்ச்சி குன்றிய குழந்தைகளாக மாறுவதற்கு வாய்ப்பிருப்பதனால் தமிழக அரசாங்கம் உடனே ஊழியர்களுக்குக் கொடுக்க வேண்டிய அளவீட்டை இன்றைய விலைவாசிக்கேற்றார் போல் ஓர் குழந்தைக்கு குறைந்த பட்சம் 5 ரூபாயாவது ஒதுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன். இதை பணமாகப் பார்க்காமல் எதிர்கால ஏழைக் குழந்தைகளின் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும் அரசு செய்யும் முதலீடாக மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். ஆக அங்கன்வாடி குழந்தைகளின் ஆரோக்கியம் இன்று தமிழக அரசின் கையில் இருக்கிறது. தமிழக அரசு உடனே தலையிட்டு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன்.

சொத்துக் குவிப்பு வழக்கு: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு

karnataka-high-court பெங்களூரு: பெங்களூரு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரின் சொத்துக் குவிப்பு வழக்கில், வாத பிரதிவாதங்கள் அனைத்தும் இன்று முடிவடைந்தன. இதையடுத்து, இன்று மதியம் தீர்ப்பு தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இதனால், கட்சியினர் மத்தியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது. இந்நிலையில், ஜெயலலிதா சசிகலா சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு, தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

86 தமிழக மீனவர்கள் நாளை விடுவிப்பு

புது தில்லி: இலங்கை சிறையில் இருக்கும் 86 தமிழக மீனவர்கள் நாளை விடுதலை செய்யப்படுவார்கள் என இலங்கை தெற்கு மாகாண எம்.எல்.ஏ., செந்தில் தொண்டைமான் தெரிவித்துள்ளார். தமிழக மீனவர்களின் படகுகளும் ஓரிரு நாளில் விடுவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். தில்லியில் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனை சந்தித்த பிறகு அவர் இதனை தெரிவித்தார்.

கைதிகள் விடுதலை விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவுக்கு கட்டுப்படுவோம்: பிடிபி

  ஜம்மு அரசியல் கைதிகளை விடுதலை செய்யும் விவகாரத்தில், நீதிமன்ற உத்தரவுகளுக்கு கட்டுப்பட்டு ஜம்மு-காஷ்மீர் அரசு செயல்படும் என்று பிடிபி கட்சி தெரிவித்தது. இதுதொடர்பாக ஜம்முவில் அக்கட்சியின் மூத்த தலைவரும், மாநில அமைச்சருமான இம்ரான் ராசா அன்சாரி கூறுகையில், “உச்ச நீதிமன்றமும், நீதிமன்றங்களும் என்ன உத்தரவுகளை பிறப்பிக்கிறதோ, அதற்கு கட்டுப்பட்டு செயல்படுவோம்’ என்றார். இந்த விவகாரம் தொடர்பாக பாஜகவுடனோ, மத்திய அரசுடனோ விவாதம் நடத்தப்பட்டதா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் பதிலளிக்கையில், “நீதிமன்ற உத்தரவை நாங்கள் செயல்படுத்தினோம்’ என்றார்.