புதுதில்லி: ஆம் ஆத்மியின் ஒருங்கிணைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால் உடல் நலக் குறைவால் அவதிப் படுகிறார். அவருக்கு தீராத இருமல் தொல்லை ஏற்பட்டுள்ளது. இதற்காக சிகிச்சை பெற அவர் 10 நாள் விடுமுறையில் செல்கிறார். அவர் இல்லாத நாட்களில், துணை முதல்வராக உள்ள மணீஷ் சிசோடியா, முதல்வர் பொறுப்பை கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 5ம் தேதி முதல் கேஜ்ரிவால், இயற்கை முறை சிகிச்சை பெற பெங்களூர் செல்ல உள்ளார்.
கேஜ்ரிவால் 10 நாள் விடுப்பு; முதல்வர் பொறுப்பில் மணீஷ் சிசோடியா
சிறப்பு அந்தஸ்து விரும்பினால் இந்திய முஸ்லிம்கள் பாகிஸ்தான் செல்லலாம்: சிவசேனா
தர்னா போராட்டத்தை கோடம்பாக்கம் பூங்காவுக்கு மாற்றினார் கவிஞர் தாமரை
சென்னை: விலகிச் சென்ற தனது கணவனை சேர்த்து வைக்கக் கோரி, ஐந்தாவது நாளாக தொடரும் திரைப்படக் கவிஞர் தாமரை தர்ணா போராட்டம் கோடம்பாக்கம் அம்பேத்கர் சிலை அருகே உள்ள பூங்கா அருகில் மாற்றப்பட்டது. கணவரை சேர்த்து வைக்கக் கோரி, கடந்த வெள்ளி பிப்ரவரி 27 ஆம் தேதி காலை 11 மணி அளவில் தர்ணா போராட்டத்தை தொடங்கிய கவிஞர் தாமரை ஐந்தாவது நாளாக இன்றும் தனது போராட்டத்தை தொடர்ந்தார். வேளச்சேரி வீட்டில் இருந்தும் கணவர் தியாகு வெளியேறிவிட்டதால், தனது போராட்டத்தை கோடம்பாக்கம் அம்பேத்கர் சிலை அருகே உள்ள பூங்கா அருகில் தனது போராட்டத்தை தொடர்ந்தார். தனக்கு தீர்வு கிடைக்கும் வரை தனது போராட்டம் தொடரும் என அவர் தெரிவித்தார். இது குறித்து அவர் வெளியிட்ட பதிவு: ஐந்தாவது நாளாக இன்றும் (3.3.15) என் போராட்டம் தொடர்கிறது. இடம் : சென்னை மாநகராட்சி, கலைஞர் பூங்கா. ( ஆற்காடு சாலை, கோடம்பாக்கம் அம்பேத்கார் சிலை அருகில்). இரண்டு நாட்கள் வேளச்சேரியில் தியாகுவின் வீட்டிற்கு எதிரே இருந்தோம். அங்கிருந்தும் ஓடித் தலைமறைவாகியுள்ள தியாகு இருக்குமிடம் தெரியவில்லை. நேற்று ஓர் ஊடகத்திற்கு இந்தப் பூங்காவிலிருந்து பேட்டி அளித்ததாக அறிந்தேன். எனவே போராட்டத்தை இந்த இடத்திற்கு மாற்றிக் கொண்டேன். இதுவும் நடுத்தெருதான்.
புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை ஆதாருடன் இணைப்பு
புதுதில்லி: இந்திய தேர்தல் ஆணையம் நாடு முழுவதும் இன்று தேசிய வாக்காளர் பட்டியல் சரிப்பார்ப்பு மற்றும் நம்பகத்தன்மை நிகழ்ச்சியை துவக்கியது. வாக்காளர் பட்டியலில் எந்தவித பிழையும் இல்லாமல் நம்பகத்தன்மையை கொண்டுவருவதே இதன் நோக்கமாகும். இந்நிகழ்ச்சியில் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை ஆதாருடன் இணைக்கப்படும். வாக்காளர்களும் புகைப்பட தரத்தை அதிகரிப்பதும் திருத்தங்கள் போன்றவற்றை சரிசெய்வதும் இந்நிகழ்ச்சியின் நோக்கமாகும். தேர்தல் ஆணைய இணையதள சேவையின் மூலம் வாக்காளர்கள் தங்களது ஆதார் எண்ணை குறுஞ்செய்தி, மின் அஞ்சல், மொபைல் அப்ளிகேஷன் மற்றும் தேசிய வாக்காளர் சேவை இணையம் ஆகிய வசதிகள் கொண்டு இணைத்துக்கொள்ளலாம். இதைத்தவிர 1950 என்ற எண்ணின் மூலம் மாநில சேவை மையத்தை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தங்கள் ஆதார் எண் விவரங்களையும் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை எண் அதன் நகல்களையும் சமர்பிக்கலாம். வாக்காளர் பதிவு அலுவலர் ஏற்பாடு செய்யும் சிறப்பு முகாம்களிலும் வாக்காளர் வசதி மையங்களிலும் இணைய சேவை மையங்களிலும் மாவட்ட தேர்தல் அலுவலர்களால் அங்கீகரிக்கப்பட்ட குடிமக்கள் சேவை மையங்களிலும் ஆதார் எண்ணை சமர்பிக்கலாம். தேர்தல் அதிகாரிகள் கணக்கெடுப்பின்போதும் இந்த தகவலை தெரிவிக்கலாம். பொது மக்கள் அதிக அளவில் பங்கேற்பதை உறுதிசெய்ய தேசிய அளவிலான சிறப்பு முகாம்களை வாக்காளர் பதிவு அலுவலர் 12.4.2015 அன்று ஏற்பாடு செய்துள்ளார். தேசிய வாக்காளர் பட்டியல் சரிப்பார்ப்பு மற்றும் நம்பகத்தன்மை நிகழ்ச்சியின் கீழ் பல்வேறு இடங்களில் பதிவு செய்துள்ள வாக்காளர்கள் தானாக முன்வந்து தகவலை அளிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த வாக்காளர்கள் படிவம் 7யை சமர்பிக்க வேண்டும். இதன்மூலம் பல்வேறு இடங்களில் பதிவுசெய்யப்பட்டுள்ள அவர்களின் பெயர் நீக்கப்பட்டு அவர்கள் தங்கி உள்ள முகவரிக்கு ஏற்றபடி வழங்கப்படும். படிவம் 7யை தேசிய வாக்காளர் சேவை இணையம் அல்லது சிறப்பு முகாம்கள் / இணைய சேவை போன்ற மற்ற மையங்களிலும் சமர்ப்பிக்கலாம்.
ஜுலை 2ல் துவங்குகிறது அமர்நாத் யாத்திரை
புது தில்லி அமர்நாத் யாத்திரை இந்த ஆண்டு ஜூலை 2, 2015 அன்று துவங்கி ஆகஸ்ட் 29, 2015 அன்று நிறைவு பெறும். பல்தல் மற்றும் பகல்காம் வழியாக இந்த யாத்திரை மேற்கொள்ளப்படும். இந்த யாத்திரை மேற்கொள்ள பதிவு அவசியமாகும். யாத்திரைக்கான அனுமதி இல்லாமல் இதனை மேற்கொள்ள முடியாது. யாத்திரைக்கான அனுமதியை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள பல்வேறு வங்கி கிளைகள் மூலம் பெற்றுக்கொள்ளலாம். (ஜம்மு-காஷ்மீர் வங்கி, பஞ்சாப் தேசிய வங்கி மற்றும் எஸ் வங்கி). பதிவுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிகளின் முகவரி ஸ்ரீ அமர்நாத்ஜி திருத்தலம் வாரியத்தின் இணைய தளமான www.shriamarnathjishrine.com. பெற்றுக்கொள்ளலாம். மார்ச் 1, 2015 முதல் இந்த யாத்திரைக்கான பதிவு தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிகள் மூலம் துவங்கும். யாத்திரைக்கான அனுமதியை பெற அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர்/ சிறந்த தனியார் மருத்துவ நிறுவனத்தால் வழங்கப்படும் சுகாதார சான்றிதழும் விண்ணப்பத்தையும் வங்கிகளில் சமர்ப்பிக்க வேண்டும். இந்த சுகாதார சான்றிதழை வழங்குவதற்காக அங்கீகரிக்கப்பட்டுள்ள மாநில வாரியான மருத்துவர்களின் பட்டியல் / சிறந்த தனியார் மருத்துவ நிறுவனத்தின் பட்டியல் மற்றும் அதற்கான மாதிரியையும் www.shriamarnathjishrine.com. என்ற இணையதளத்தில் பெற்றுக்கொள்ளலாம். பிப்ரவரி 10, 2015க்கு பிறகு வழங்கப்பட்டுள்ள கட்டாய சுகாதார சன்றிதழே மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். யாத்திரை மேற்கொள்ள உள்ள நபர் தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிகள் மூலம் ரூ.50 பதிவு கட்டணமாக செலுத்த வேண்டும். யாத்திரைக் குறித்த மேலும் விவரங்களுக்கு www.shriamarnathjishrine.com. என்ற இணையதளத்தை அணுகலாம்.
தென்னாப்பிரிக்கா 201 ரன்களில் அபார வெற்றி
கான்பெரா: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், லீக் சுற்றின் 24வது போட்டியில், பி பிரிவில் இடம்பெற்றுள்ள அயர்லாந்து, தென்னாப்பிரிக்க அணிகள் மோதிய போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 201 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து அணியை தோற்கடித்தது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி, முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்து களம் இறங்கியது. துவக்க வீரர் காக் ஒரு ரன்னில் ஆட்டம் இழந்தபோதும், பின்னர் வந்த பிளெஸிஸ் உடன் அம்லா இணைந்து அதிரடி ஆட்டம் ஆடினர். அம்லா 128 பந்தில் 159 ரன் குவித்தார். டுபிளெஸிஸ் 109பந்தில் 109 ரன் எடுத்தார். பின்னர் வந்த டிவில்லியர்ஸ் 24 ரன்னும், மில்லர் 46, ரோசோவ் 61 ரன்னும் எடுத்து 50 ஓவரில் தென்னாப்பிரிக்க அணி 4 விக்கெட் இழப்புக்கு 411 ரன்கள் குவிக்க உதவினர். இதை அடுத்து 412 ரன்கள் என்ற மிகப்பெரிய இலக்குடன் அயர்லாந்து அணி களத்தில் இறங்கியது. இமாலய இலக்கு என்பதால், அந்த அணியினர் பதட்டத்துடனேயே விளையாடினர். துவக்கம் முதலே சீரான இடைவெளியில் விக்கெட்டை இழந்து வந்த அயர்லாந்து அணி, முதல் 10 ஓவர்களில் 5 விக்கெட்டை இழந்ததால், பெரும் சரிவுக்கு உள்ளானது. நடுவரிசையில் ஓ பிரைன் 48 ரன்னும், பெல்பிர்ன் 58 ரன்னும் எடுத்தனர். அந்த அணி 45 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 210 ரன்களே எடுத்தது. இதனால் தென்னாப்பிரிக்க அணி 201 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
சிறுமியுடன் பாலியல் தொடர்பு: நட்சத்திர கால்பந்து வீரர் கைது
15 வயது சிறுமியுடன் பாலியல் தொடர்பு வைத்துக் கொண்டதாக, இங்கிலாந்து கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் ஆடம் ஜான்சன் கைது செய்யப்பட்டுள்ளார். இவர், பிரேசிலில் நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இங்கிலாந்து அணிக்காக 12 போட்டிகளில் விளையாடியுள்ளார். ஆடம் ஜான்சன் கடந்த 2012ஆம் ஆண்டு சாண்டர்லேண்ட் அணிக்காக 10 மில்லியன் பவுண்டுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். தற்போது ஆடம் ஜான்சன், இங்கிலீஷ் பிரீமியர் லீக் போட்டியில் சாண்டர்லேண்ட் அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில், இங்கிலாந்தில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்ற காவல் துறையினர் 15 வயது சிறுமியுடன் பாலியல் தொடர்பு வைத்துக் கொண்ட குற்றத்துக்காக அவரை கைது செய்தனர். அவரிடம் மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது. இதனால், விசாரணை முடியும் வரை ஆடம் ஜான்சனை சஸ்பெண்ட் செய்வதாக சாண்டர்லேண்ட் அணி அறிவித்துள்ளது.
நேஷனல் புக் டிரஸ்ட் தலைவர் மாற்றம்: சேதுமாதவனுக்கு பதிலாக ஆர்.எஸ்.எஸ். இதழாசிரியர்
புது தில்லி:
‘நிர்பயா’ குற்றவாளியின் பேட்டி: திகார் சிறை நிர்வாகத்திடம் விளக்கம் கேட்கிறது உள்துறை
புது தில்லி: கடந்த 2012ம் ஆண்டு தில்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ துணை மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளியிடம் ஆவணப் படத்துக்காக பேட்டி எடுக்கப் பட்ட விவகாரம் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இந்த நிலையில், திகார் சிறை நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டுள்ளது மத்திய உள்துறை அமைச்சகம். தில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பலாத்கார சம்பவ குற்றவாளி முகேஷ் சிங்கிடம் பிரிட்டிஷ் ஆவணப் படத் தயாரிப்பாளர் லெஸ்லீ உட்வின் பேட்டி ஒன்றை எடுத்தார். அதில் அவர் சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்திருந்தார். இந்தக் கருத்துகள் இன்று ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் மகளிர் அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து அறிக்கை தருமாறு திகார் சிறைத் துறையிடம் உள்துறை அமைச்சகம் விளக்கம் கேட்டுள்ளது. திகார் சிறை நிர்வாகம், இந்தப் பேட்டி விவகாரத்தில், சரியான நடைமுறைகளைப் பின்பற்றியுள்ளதா, குற்றவாளியிடம் பேட்டி காண்பதற்குத் தேவையான அனுமதியை முறையாகப் பெற்றிருந்தாரா என்பது குறித்தெல்லாம் உள்துறை விளக்கம் கேட்டுள்ளது. இந்த விவகாரத்தில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அதிருப்தி அடைந்துள்ளார். இதனிடையே, அந்த ஆவணப் படத் தயாரிப்பாளர், தான் பதிவு செய்த பேட்டியினை சிறைத் துறை அதிகாரிகளிடம் போட்டுக் காட்டியதாகவும் அதன் பின்னரே வெளியில் அதனைத் தெரிவித்துள்ளார் என்றும் சிறைத் துறை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த விவகாரத்தில் முறையான புகார் பதிவு செய்ய உள்துறை அமைச்சகம் திகார் சிறை நிர்வாகத்திடம் எதிர்பார்க்கிறதாம். வரும் மார்ச் 8ஆம் தேதி இந்த ஆவணப் படம் பிரிட்டனில் பிபிசி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது. தொடர்புடைய செய்தி: [su_permalink id=”3651″ target=”blank”][/su_permalink]
வடகொரியா ஏவுகணை சோதனை: தென்கொரியா, ஜப்பான் கண்டனம்
வடகொரியா ஏவுகணைச் சோதனை நடத்தியதற்கு தென்கொரியாவும் ஜப்பானும் கண்டனம் தெரிவித்துள்ளன. குறைந்த தொலைவு சென்று இலக்கினைத் தாக்கும் இரு ஏவுகணைகளை வடகொரியா சோதனை செய்துள்ளது. இது பிராந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் செயல் என தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. சுமார் 490 கிமீ. தொலைவு வரை உள்ள இலக்கைத் தாக்கும் வலிமை பெற்ற இரண்டு ஏவுகணைகளை நாட்டின் மேற்குப் பகுதியில் உள்ள நம்போ-வில் இருந்து கொரிய தீபகற்பத்தின் கிழக்கில் உள்ள கடல்பகுதியை நோக்கி ஏவியது வடகொரியா. இந்த ஏவுகணை சோதனை குறித்து குறிப்பிட்ட தென் கொரிய ராணுவம், இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்க மற்றும் தென்கொரியப் படைகளின் கூட்டுப் பயிற்சி தொடங்கி உள்ளதை அடுத்து இந்த சோதனையை வடகொரியா நடத்தியுள்ளதாக தென்கொரிய ராணுவம் குறிப்பிட்டுள்ளது. நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டே கூட்டுப்பயிற்சி நடத்தப்படுவதாக தென்கொரியா விளக்கம் கொடுத்துள்ள போதிலும், இதனை தங்கள் நாட்டிற்கு விடப்படும் அச்சுறுத்தலாக வடகொரியா கருதுகிறது. இதனால் அமெரிக்க கூட்டுப் பயிற்சிக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது வடகொரியா. அதை ஒரு புகாராக முன்வைத்து, இது போன்ற ஏவுகணைச் சோதனைகளை நடத்துவதையும் வடகொரியா வாடிக்கையாகக் கொண்டுள்ளது. இதனிடையே இங்குள்ள நிலைமையை நன்கு கண்காணித்து வருவதாகவும், தங்களை அச்சுறுத்தும் விதமான நடவடிக்கையை வடகொரியா தொடரும் என்றால் தகுந்த பதிலடி கொடுக்க தங்கள் நாட்டு ராணுவம் தயாராக உள்ளதாகவும் தென்கொரிய பாதுகாப்புத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

