‘நிர்பயா’ குற்றவாளியின் பேட்டி: திகார் சிறை நிர்வாகத்திடம் விளக்கம் கேட்கிறது உள்துறை

delhi-student-nirbhaya புது தில்லி: கடந்த 2012ம் ஆண்டு தில்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ துணை மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளியிடம் ஆவணப் படத்துக்காக பேட்டி எடுக்கப் பட்ட விவகாரம் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இந்த நிலையில், திகார் சிறை நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டுள்ளது மத்திய உள்துறை அமைச்சகம். தில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பலாத்கார சம்பவ குற்றவாளி முகேஷ் சிங்கிடம் பிரிட்டிஷ் ஆவணப் படத் தயாரிப்பாளர் லெஸ்லீ உட்வின் பேட்டி ஒன்றை எடுத்தார். அதில் அவர் சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்திருந்தார். இந்தக் கருத்துகள் இன்று ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் மகளிர் அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து அறிக்கை தருமாறு திகார் சிறைத் துறையிடம் உள்துறை அமைச்சகம் விளக்கம் கேட்டுள்ளது. திகார் சிறை நிர்வாகம், இந்தப் பேட்டி விவகாரத்தில், சரியான நடைமுறைகளைப் பின்பற்றியுள்ளதா, குற்றவாளியிடம் பேட்டி காண்பதற்குத் தேவையான அனுமதியை முறையாகப் பெற்றிருந்தாரா என்பது குறித்தெல்லாம் உள்துறை விளக்கம் கேட்டுள்ளது. இந்த விவகாரத்தில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அதிருப்தி அடைந்துள்ளார். இதனிடையே, அந்த ஆவணப் படத் தயாரிப்பாளர், தான் பதிவு செய்த பேட்டியினை சிறைத் துறை அதிகாரிகளிடம் போட்டுக் காட்டியதாகவும் அதன் பின்னரே வெளியில் அதனைத் தெரிவித்துள்ளார் என்றும் சிறைத் துறை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த விவகாரத்தில் முறையான புகார் பதிவு செய்ய உள்துறை அமைச்சகம் திகார் சிறை நிர்வாகத்திடம் எதிர்பார்க்கிறதாம். வரும் மார்ச் 8ஆம் தேதி இந்த ஆவணப் படம் பிரிட்டனில் பிபிசி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது. தொடர்புடைய செய்தி: [su_permalink id=”3651″ target=”blank”][/su_permalink]  

ALSO READ:  ஐபிஎல் - 2026: கலக்கும் இளம்புயல் சூர்யவன்ஷி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories