புது தில்லி: மூடப்பட்ட நோக்கியா செல்போன் தொழிற்சாலையை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பிரதமர் நரேந்திர மோடி இன்று தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலளித்துப் பேசியபோது மாநிலங்களவையில் அவர் இவ்வாறு கூறினார். மேலும் அவர் பேசியது…. இந்த விவாதத்தில் பங்கேற்ற அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி. இந்நாட்டில் அனைத்து முதல்வர்களும் நாட்டின் வளர்ச்சிக்குப் பாடுபடுபவர்கள். இதனை நான் ஒப்புக் கொள்கிறேன். நாட்டின் வளர்ச்சிக்கு அனைவரும் பாடுபட வேண்டும். மாறாக குறை கூறிக் கொண்டிருக்கக் கூடாது. ஜனநாயகத்தில் மிரட்டலுக்கு இடமில்லை. மிரட்டல் அரசியல் கூடாது. 14 வருடங்களாக, நான் சிறைக்கு அனுப்பி வைக்கப்படுவேன் என்று மிரட்டப்பட்டேன். கறுப்புப் பண விவகாரத்தில் எதிர்க் கட்சிகளை நாங்கள் மிரட்டவில்லை. குற்றவாளிகள் பலருக்கு காங்கிரஸ் காலத்தில் புகலிடம் வழங்கப்பட்டது. கறுப்புப் பணம் தொடர்பாக காங்கிரஸ் ஏன் சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்கவில்லை. தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது வர்த்தக நிறுவனங்களுக்கு சாதகமானது என விமர்சிக்கப்படுகிறது. அப்படி அல்ல. எனது தலைமையிலான அரசு ஏழைகள் நலன் பெற வேண்டும் என்பதற்காகவே செயல்படுகிறது. எதிர்க்கட்சியினருடன் பேசி சுமூக தீர்வு காண முடியும் என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு. கங்கை நதி தூய்மைப்படுத்தும் திட்டப் பணியால் இந்தியாவின் 40 சதவீத மக்களுக்கு பயன் கிடைக்கும். நிலக்கரி, சுரங்கத்தின் மூலம் வரும் ஏலத் தொகை மாநில அரசின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும். அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம், ஏழைகளுக்கு பயன் அளிக்க வேண்டும் என்ற நோக்கில் தான் அறிவிக்கப்பட்டுள்ளது. தூய்மை இந்தியா திட்டம் நாட்டின் நலன் தொடர்பான விஷயம். இதில் லாப நோக்கம் எதுவும்இல்லை. ஜன் தன் திட்டம், அனைவருக்கும் வங்கிக் கணக்கு என்பது தொழில் நோக்கமா ? பென்ஷன் – ஓய்வூதியத் திட்டம் ஏழைகளுக்கு பயன் தரும் திட்டம் . கழிப்பிடம் கட்டுவதில் தொழில் நோக்கமா உள்ளது ? விபத்து காப்பீடு இன்ஸ்சூரன்ஸ் திட்டத்தில் வர்த்தக நோக்கம் இருக்கிறதா என்ன? திட்டங்களின் பெயர்கள் மாற்றப்படுவதாக புகார் சொல்கின்றனர். ஐ.மு.கூட்டணி ஆட்சியில் தான் வாஜ்பாய் ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்ட திட்டங்களின் பெயர்களை மாற்றினார்கள். எனது அரசின் நியமனங்கள் தொடர்பாக விமர்சிக்க காங்கிரசுக்கு தகுதி கிடையாது. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில்தான் ஆளுநர்கள் , செயலாளர்கள் பந்தாடப்பட்டனர். மொபைல் நிர்வாகத்தை முழுமைப்படுத்த பெரும் முயற்சி மேற்கொண்டுள்ளோம். சென்னையில் மூடப்பட்ட நோக்கியா உள்பட பல்வேறு தொழிற்சாலைகள் துவக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம். மேக் இன் இந்தியா திட்டம் என்பது வேலையைப் பெருக்கும் நோக்கம் கொண்டது. நில சீர்திருத்த சட்ட மசோதாவில் மாற்றம் கொண்டு வர நாங்கள் தயார். அரசின் நடவடிக்கைக்கு அனைவரும் ஆதரவு தாருங்கள் என்றார் பிரதமர் மோடி.
நோக்கியா தொழிற்சாலை மீண்டும் திறக்க நடவடிக்கை: பிரதமர் மோடி
மோடியின் இலங்கை பயணம்: இரு நாட்டு மீனவர்கள் மார்ச் 11-ல் பேச்சுவார்த்தை
பிரதமர் மோடி வரும் மார்ச் மாதம் 13ம் தேதி இலங்கை செல்கிறார். அவரது இந்த பயணத்தை முன்னிட்டு, தமிழக – இலங்கை மீனவர்களின் பேச்சுவார்த்தை வரும் 11-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தியா – இலங்கை இருநாடுகளுக்கு இடையே உள்ள சர்வதேச கடல் பகுதியில் மீன் பிடிப்பது தொடர்பாக, தமிழக மீனவர்களுக்கும், இலங்கை மீனவர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடிப்பதுடன், மீன்வளத்தை முற்றிலுமாக அழித்து வருவதாக தமிழக மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள். மேலும், இலங்கையில் அதிபராக சிறிசேனா ஆட்சிக்கு வந்த பின்னர் தமிழக மீனவர்களின் அத்துமீறல் அதிகரித்துள்ளதாக இலங்கை மீனவர்கள் கூறுகின்றனர். இதனிடையே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 86 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களின் 10 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி வரும் 13-ந் தேதி இலங்கை செல்கிறார். அவர் தமிழர் பகுதியான யாழ்ப்பாணம், திரிகோணமலை உள்ளிட்ட இடங்களுக்கும் செல்வார் என்று தெரிகிறது. அவரது இலங்கை பயணத்துக்கு முன்பாக தமிழக-இலங்கை மீனவர் சங்க பிரதிநிதிகளிடையே மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது. அதன்படி, இலங்கைக்கான இந்திய தூதர் ஒய்.கே.சின்கா நேற்று இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் ஜோசப் மைக்கேல் பெரேராவை சந்தித்தார். அப்போது, இந்தியப் பிரதமரின் வருகைக்கு முன் மீனவர்கள் பிரச்னை குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். அதை ஏற்றுக் கொண்ட அவர், இதுதொடர்பாக வடக்கு மாகாண முதல்வர் விக்னேஷ்வரனையும் சந்தித்துப் பேசுமாறு கேட்டுக்கொண்டார். இதன்படி, தமிழக- இலங்கை மீனவர் சங்க பிரதிநிதிகளிடையே 11-ந் தேதி பேச்சுவார்த்தை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் மாட்டு இறைச்சி விற்றால் 5 ஆண்டு சிறை: சட்டத்துக்கு ஒப்புதல்
மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் மாட்டிறைச்சி விற்பனையை தடை செய்யும் அந்த மாநில விலங்குகள் பாதுகாப்பு மசோதாவுக்கு, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார். இந்த மசோதா நிறைவேற்றப்பட்டதன் மூலம், மாட்டிறைச்சி விற்றால், அவர்களுக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது. கடந்த, 19 ஆண்டுகளுக்கு முன்னர் மகாராஷ்டிர மாநிலத்தில், பா.ஜ.க, மற்றும் சிவசேனா கட்சிகள் ஆட்சி செய்தபோது, 1995ம் ஆண்டு அம்மாநில சட்டமன்றத்தில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நேற்று ஒப்புதல் அளித்தார். ஆனால், ஆட்டிறைச்சியின் விலையை விட மூன்று மடங்கு விலை குறைவான மாட்டு இறைச்சியை ஏழை மக்கள் வாங்குவதாகக் கூறியுள்ள மாட்டு இறைச்சி விற்பனையாளர்கள், இந்தப் புதிய சட்டத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போவதாக தெரிவித்துள்ளனர். மகாராஷ்டிராவில் 1976ம் ஆண்டு முதல் பசுவதை மற்றும் மாட்டிறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. புதிய சட்டப்படி, தற்போது காளை மாடு மற்றும் கன்றுக்குட்டியை வெட்டுவதும் குற்றம்.
முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்புக்கு மத்தியப் படையினர் தேவையில்லை: உம்மன்சாண்டி
புது தில்லி முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்புக்கு மத்திய பாதுகாப்புப் படையினர் தேவையில்லை; கேரள போலீஸாரால்தான் திறமையாகப் பாதுகாக்க முடியும் என்று கேரள முதல்வர் உம்மன் சாண்டி தெரிவித்துள்ளார். கேரள மாநில நலன்கள் குறித்து மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக கேரள முதல்வர் உம்மன் சாண்டி 2 நாள் பயணமாக நேற்று செவ்வாய்க்கிழமை தில்லிக்கு வந்தார். அவர் பிரதமர் நரேந்திர மோடி, கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி ஆகியோரை சந்தித்து பேசினார். அதன் பின்னர் கேரளா ஹவுஸில் செய்தியளார்களிடம் பேசினார். அப்போது, முல்லைப் பெரியாறு அணை கேரள எல்லைக்குள் உள்ளது. அதனால் அணையைப் பாதுகாப்பது கேரள அரசின் கடமை. அணையை கேரள மாநில போலீசாரால்தான் முழுமையாகப் பாதுகாக்க முடியும். முல்லைப் பெரியாறு அணையை பாதுகாக்கும் பணியில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரை ஈடுபடுத்தத் தேவையில்லை” என்றார். முல்லைப் பெரியாறு அணையைப் பாதுகாக்கும் பணியில் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரை ஈடுபடுத்த வேண்டும் என தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. கடந்த மாதம் இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் இது குறித்து 4 வார காலத்துக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று கேரள மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்நிலையில் உம்மன் சாண்டி இவ்வாறு தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
எஸ்.எம்.எஸ். விளம்பரம் மூலம் ரூ.46 கோடி சுருட்டல்: நடன நடிகர், பெண் தொழிலதிபர் கைது
சென்னை: செல்போன்களில் எஸ்.எம்.எஸ். மூலம் விளம்பரங்கள் அதிகம் செய்து, பொதுமக்களிடம் முதலீடாக ரூ.46 கோடி பெற்று, மோசடியில் ஈடுபட்டதாக பெண் தொழில் அதிபர் ஒருவரும், நடன நடிகர் ஒருவரும் கைது செய்யப்பட்டனர். சென்னை கோயம்பேடு, பிருந்தாவன் நகர், முல்லைத் தெருவில் கார்களை வாடகைக்கு விடும் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார் தொழில் அதிபர் நர்மதா (34). இந்த நிறுவனத்தில் 170 கார்கள் இயக்கப்படுகின்றன. இந்த நிறுவனம் மீது, சூளைமேடு வீரபாண்டியன்நகர் 2ஆவது தெருவைச் சேர்ந்த வெங்கடகிருஷ்ணன் என்பவர் புகார் மனு ஒன்றைக் கொடுத்தார். அவர் அளித்த புகார் மனுவில், சில மாதங்களுக்கு முன்பு “இந்தியா டிராக் கால் டாக்ஸி’ நிறுவனத்தில் இருந்து எனது செல்லிடப்பேசிக்கு ஒரு எஸ்.எம்.எஸ். வந்தது. அதில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் 36 மாதங்களுக்கு ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அதை படித்துப் பார்த்த எனக்கு, அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால் மாதந்தோறும் ரூ. 5 ஆயிரம் கிடைக்கும் என நினைத்தேன். இதையடுத்து நான், எனது மனைவி அமுதா, உறவினர்கள், நண்பர்கள் என மொத்தம் 34 பேர் ரூ.34 லட்சம் முதலீடு செய்தோம். சில மாதங்களுக்கு மட்டும் எங்களுக்கு சரியாக பணம் வந்ததும். ஆனால் அதன் பின்னர் பணம் வரவில்லை. எங்களது பணத்தை கேட்டபோது, அவர்கள் முறையான பதில் அளிக்கவில்லை, பணத்தையும் தரவில்லை. இதனால் நாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்தோம். எனவே, எங்களது பணத்தை மீட்டுத்தர போலீஸார் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று – குறிப்பிடப்பட்டிருந்தது. அவருடன் மேலும் 5 பேரும் புகார் மனுக்களைக் கொடுத்தனர். அந்த மனுக்களில்… தொழில் அதிபர் நர்மதா கடந்த 2010–ம் ஆண்டு முதல், குறிப்பிட்ட டிராவல்ஸ் நிறுவனத்தை நடத்தி வருகிறார். அவரது நிறுவனத்தில் கார்களை வாடகைக்கு எடுக்கும் வாடிக்கையாளர்களில் நாங்களும் இருந்தோம். எங்களுக்கு செல்போனில் எஸ்.எம்.எஸ். மூலம் நர்மதா ஒரு தகவலை அனுப்பினார். வாடிக்கையாளர்களுக்கு இனிய நற்செய்தி என்று அறிவிப்பு வெளியிட்டார். வாடிக்கையாளர் முதலீட்டுத் திட்டம் என்று அந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். ரூ.1 லட்சம் முதலீடு செய்தால், 3 ஆண்டுகளில் ரூ.1.80 லட்சமாக திருப்பித் தரப்படும் என்றும், அத்துடன் தங்கக் காசு பரிசாகக் கிடைக்கும் என்றும், ஓர் ஆண்டு காரில் இலவச பயணமும் செல்லலாம் என்றும் கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டார். செல்போன் எஸ்.எம்.எஸ். அறிவிப்புகளைத் தொடர்ந்து நாங்கள் நர்மதாவை நேரில் சென்று பார்த்துப் பேசினோம். அவரது அறிவிப்பு மட்டும் கவர்ச்சியாக இல்லை. அவரது கவர்ச்சியான பேச்சும் எங்களை அவரது மோசடி வலையில் சிக்க வைத்து விட்டது. லட்சம், லட்சமாக அவரிடம் பணத்தைக் கொண்டு கொட்டினோம். நாங்கள் ரூ.64 லட்சம் வரை முதலீடு செய்தோம். அவர் சொன்னபடி சிலருக்கு தங்கக் காசு பரிசாகக் கொடுத்தார். இதனால் மேலும் நூற்றுக்கணக்கான பேர், நர்மதாவிடம் முதலீட்டுப் பணத்தை கோடி, கோடியாகக் கொட்டினார்கள். ஒரு சிலருக்கு முதலீட்டுப் பணத்துடன் கவர்ச்சி அறிவிப்பில் சொன்னபடி பணத்தைத் திருப்பிக் கொடுத்தார். பலருக்கு வங்கி காசோலை கொடுத்தார். பணம் பெற்றவர்கள் அதிர்ஷ்டசாலிகள். வங்கி காசோலை பெற்றவர்களுக்கு ஒன்றுமில்லை. காசோலைகளுக்கு நர்மதாவின் வங்கிக் கணக்கில் பணம் இல்லை. அவை திரும்பி வந்தன. எங்களது வயிற்றில் அடித்து கொள்ளை அடித்த முதலீட்டுப் பணத்தில், நர்மதா சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தார். அவரது மோசடிகளில் சிக்கி வாடிக்கையாளர்கள் இழந்த பணம் ரூ.46 கோடி வரை இருக்கும். நர்மதா மீதும், அவரிடம் மேலாளராக வேலை செய்யும் பரத்குமார் (வயது 24) மீதும் உரிய நடவடிக்கை எடுப்பதுடன், அவர்களது மோசடிகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
- என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதை அடுத்து, தொழிலதிபர் நர்மதா மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க காவல் துறை ஆணையர் ஜார்ஜ் உத்தரவிட்டார். இதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினார். விசாரணை முடிவில் நர்மதா மீதும், அவரது நிறுவன மேலாளர் பரத்குமார் மீதும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதை அடுத்து, நர்மதாவும், பரத்குமாரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் நர்மதாவின் அலுவலகம் கோயம்பேட்டிலும், வீடு சென்னை முகலிவாக்கத்திலும் உள்ளது. அவரது சொந்த ஊர் வேலூர் மாவட்டம், முக்கூர் கிராமம். அவரது தந்தை இந்து அறநிலையத் துறையில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். பி.எஸ்சி. பட்டதாரியான நர்மதா திருமணம் ஆனவர். தனது கணவரைப் பிரிந்து வாழ்கிறார். அவருக்கு மகனும், ஒரு மகளும் உள்ளனர். நர்மதாவுடன் கைதான அவரது மேலாளர் பரத்குமார் பி.எஸ்சி. பட்டதாரி. திருமணமாகாதவர். சென்னை பிராட்வேயில் வசிக்கிறார். இவர் ஒரு நடன நடிகரும்கூட! தனியார் தொலைக்காட்சியில் ஜோடி நம்பர்–1 நடன நிகழ்ச்சியில் முதல் பரிசைப் பெற்றவர். நர்மதா இவருக்கு மாதம் ரூ.20 ஆயிரம் சம்பளம் கொடுத்துள்ளார். நர்மதாவின் வலதுகரமாகச் செயல்பட்ட பரத்குமார், அவரது மோசடிகளுக்கும் துணை போயுள்ளார். சென்னையில் இந்த மோசடிச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீலப்புரவி வீரன்- பாகம் 4
நீலப்புரவி வீரன்- பாகம் 4
நீர்நிலையை அசுத்தப்படுத்துபவன், அதை அழிக்கிறான்
மீனாளுக்கு திருமணம் முடிந்து ஒரு திங்களாகி விட்டிருந்தது. தானியில் அவர்களுக்கு என்று தனியாக சிறிய வீட்டை ஒதுக்கியிருந்தார்கள். அவளுக்கு எல்லாம் புதிதாக இருந்தது. மீனாள் அந்த வருடம் வந்த ஹோலியையும், தீபாவளியையும் ரசித்து மகிழ்ந்தாள். அங்கிருந்த வெள்ளந்தி மக்களின் அன்பும், ஆதரவும் அவளுக்கு கிடைத்தது. கொஞ்சம் கொஞ்சமாக நன்றாக விக்கிரமனின் மொழி பேசக்கற்றுக் கொண்டாள். ராஜபுத்திர பழக்கவழக்கங்கள் எல்லாம் மகாராணா பிரதாப்சிங்கின் அன்புக்கினியவளும், மேவாரின் மாதாரசியுமான மகாராணியார் புன்வார் சொல்லிக் கொடுத்தாள். அவளிடம் மிகுந்த அன்புடன் மீனாள் நடந்து கொண்டாள். எலோஜியும், கோகாஜியும் அவள் உள்ளத்தில் ஆழமாகப் பதிந்துதான் போனார்கள். பத்மநாதபுரத்திலிருந்த இனப்பாகுபாடு இங்கும் இருப்பதைக் கண்டு மீனாள் மனம் வெதும்பினாள். ஒட்டகங்களும், மாட்டுவண்டிகளும் அங்கும் இங்கும் செல்வதை அவள் ஆர்வமுடன் பார்த்துக் கொண்டிருப்பாள். விக்கிரமனுக்கு பிடித்த மிளாகாயும், பூண்டும் சேர்ந்த சட்னி செய்யவும், சோக்ரா ரொட்டிகளை செய்யவும் கற்றுக்கொண்டாள். அதை அவன் விருப்பமுடன் சாப்பிடுவதை அன்பாக பார்த்துக் கொண்டிருப்பாள். அவளுக்கு பிடிக்காது போனது டோடாதான் . அவளின் உள்ளத்தை அறிந்த விக்கிரமன் அதை கொஞ்சம் கொஞ்சமாக விட்டு விட்டான். திருமண உறவு அவளின் உடலிலும் உள்ளத்திலும் மாற்றங்களைக் கொடுத்தது. எத்தனை வேலைகளிருந்தாலும் வானத்தில் மூன்று நட்சித்திரம் மேலே வரும் பொழுது விக்கிரமன் வந்து விடுவான். அன்றும் வந்தான். வந்தவன் உதயப்பூர் குளத்தில் நன்றாக நீராடி விட்டு வந்தான். வீட்டின் கதவைச் சாத்தியவன், மீனாளை இருக்கிப் பிடித்தான். “மெல்ல வலிக்கப் போகிறது: என்றாள் மீனாள் வெட்கத்துடன். “யாருக்கு?” என்றான். மீனாள் தனது வயிற்றை அவனது கையைப் பிடித்துக் தடவி காண்பித்தாள். “எப்பொழுது?” “இன்றுதான் உறுதியாச்சு” “யார் உறுதி பண்ணியது?” “வைத்தியரின் துணையாள். இருவரும் என்மீது தீராத அன்பு கொண்டிருக்கிறார்கள். இருவருக்கும் தமிழ் பேசக் கற்றுக் கொடுத்துவிட்டேன்” விக்கிரமனின் மனதில் உற்சாகம் கரை புரண்டு ஓடியது. தனக்கு ஒரு வாரிசா? மீனாளை அப்படியே தூக்கிப் பிடித்தான். “மெல்ல, கீழே விடுங்கள்” அவளை தூக்கிக் கொண்டு போய் கட்டிலில் படுக்க வைத்தவன், அவள் முகத்தருகே தனது முகத்தை கொண்டு செல்ல, மல்லிகை வாசனை அவனை தெய்வலோகத்துக்கு கொண்டு சென்றது. மெல்ல தங்கரதத்தின் இதழில் தனது இதழைப் பதித்தவன் அனைத்தையும் மறந்தான். அவளருகே படுத்தவன் அவளை அணைத்துக் கொண்டவன், “எப்பொழுது முத்து கிடைக்கும்?” என்று கிசுகிசுத்தான். “இன்னும் எட்டு மாதத்தில்” “அதுவரை இதற்கு?” “கேட்டேன். தடையில்லையாம்” என்ற அவளை மீண்டும் இருக்கி அணைத்தவனிடம் மீனாள் கரைந்து போனாள். எல்லாம் முடிந்த பிறகு, அவளை எங்காவது அழைத்துச் செல்ல வேண்டும் என்று தோன்றியது விக்கிரமனுக்கு. மீனாளை அழைத்துக் கொண்டு ‘உதயசாகர்’ நீர்தேக்கத்துக்கு வந்தான். நீர்தேக்கத்தைப் பார்த்து மிகவும் மகிழ்வு கொண்டாள் மீனாள். ஆண்டவனின் பிரசாதமான ஒரு சொட்டு மழைத்துளி கூட வீணாக்காமல் நீர்நிலையில் சேர்த்து வருடம் முழுவதும் பயன்படுத்தும் அமைப்புகளைப் அவளிடம் காண்பித்தான். அந்த சமயத்தில், நீர்தேக்கத்தில் ஒருவன் கரியநிறத்தில் ஏதோ ஊற்றுவதைக் கண்டு விக்கிரமன் அவனிடம் மிகவும் கோபம் கொண்டான். அவனை மேவார் காவலர்கள் இழுத்துச் செல்லும் வரை அங்கே நின்றவன், அவர்கள் போனபிறகுதான் மீனாளை கவனித்தான். “ஏன் இத்தனை கோபம்?” என்று அவனிடம் மீனாள் கேட்டாள். “நீர்நிலையை அசுத்தப்படுத்துபவன், அதை அழிக்கிறான்” என்ற விக்கிரமன், “இந்த நீர்நிலை அமைய மகாராஜா உதயசிங் எத்தனை கடினப்பட்டார் என்று எனக்குத் தெரியும், அதனால் தான் கோபம் வந்தது” என்றான். “ஏதோ அசுத்த நீரைக் கலந்ததால், ஏரி அழிந்து விடுமா என்ன?” அவளைக் கவனித்த விக்கிரமன், “அழிந்துவிடும் தான் மீனா” என்றான் “எப்படிச் சொல்லுங்களேன்? “அவன் ஊற்றிய அசுத்த நீரினால், நீர்நிலையில் உள்ள மீன்கள் இறக்கும், மீன்கள் மட்டுமல்லாமல் ஏரியைச் சுற்றி இருக்கும் மரங்கள் எல்லாம் அசுத்த நீர்பட்டு அழியும். மரங்கள் அழிந்தால் மழை ஏது மீனா? மழை இல்லாவிட்டால் இந்த நீர்நிலைதான் ஏது? அதைச்சுற்றி இருக்கும் மனிதர்களும் கூட இறந்துதான் போவார்கள். அதனால்தான் எனக்கு அத்தனை கோபம் வந்தது” அவன் சொன்னதின் ஆழ்ந்த அர்த்தம் மீனாளுக்கு புரிந்தது. அவர்கள் ஏரியைத் தாண்டி மரங்கள் அடர்ந்து இருந்த இடங்களுக்குச் சென்றார்கள். “மீனா, உனக்குத் தெரியுமா இந்த மரங்களுக்காக உயிரைக் கொடுக்கும் பெண்களும் இருக்கிறார்கள்” “பெண்களா?” “ஆமாம் மீனா. இந்த மேவாரின் பழங்குடி மக்கள் மரத்தை தெய்வமாக எண்ணுபவர்கள். மரத்துக்காக உயிரையும் கொடுக்கத் தயங்கமாட்டார்கள். யாரவது மரத்தை வெட்ட வந்தால் தங்கள் உயிரைக் கொடுத்துக் காப்பாற்றுவார்கள்” மீனாள் அசந்து போனாள். “ஏன் அப்படி?” “ஒரு மரம் அழிவது என்பது ஒரு உலகமே அழிவது போல. இந்த மரத்தைப் பாரேன். இதில் எத்தனையோ உயிர்கள் வாழ்கின்றன. இந்த மரம் விழுந்தால் அத்தனையும் இறக்கும். மரத்தை வெட்டுபவன் ஒரு உயிரை அழிக்கவில்லை. கோடிக்கணக்கான உயிரை அழிக்கின்றான். அதனால் தான் இத்தனை கோபம். இது அவர்கள் மனதில் வழிவழியாக வரும் நம்பிக்கை. காடும் நாடும் அழியாமல் இந்த நம்பிக்கைதான் காப்பாற்றுகிறது” என்றான் விக்கிரமன். மரத்தின் அடியில் சிறு சிறு செடிகள் இருந்தன. “இவையெல்லாம் என்ன?” “இவை மூலிகைகள். இதைப் பாரேன்” என்ற விக்கிரமன் ஒரு மருந்துசெடியைக் காண்பித்தான். “இந்த மூலிகையை நல்லபாம்பு கடித்தாலும் கூட, கடிபட்ட இடத்தில் தடவினால் பிழைத்துக் கொள்ளுவான்” என்றான் விக்கிரமன். மீனாள் ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு இராவண யுத்தத்தில் அனுமார் எடுத்து வந்த காந்தவர்ம மலை என்று அழைக்கப்பட்ட சஞ்சீவினி ஞாபகம் வந்தது. அதை விக்கிரமனிடம் சொன்னாள். “அது போன்று மருந்துமலை கிடைத்தால் நலமாக இருக்கும்” என்றான் விக்கிரமன். வெகு தூரத்தில் மழைமேகம் தெரிந்தது. “மழை வரும் போல இருக்கிறது நாம் போகலாம்” என்றாள் மீனாள் “நமக்கு முன்னால் தெரிவது மழை மேகம் மட்டுமல்ல. யுத்தமேகமும் தெரிகிறது” “யுத்தமா? யாருக்கும் யாருக்கும் யுத்தம்? “உனக்கு இங்குள்ள சூழ்நிலை தெரியாது. அதனால் கேட்கிறாய்? “சொல்லுங்கள்” “உதயமகாராஜாவுக்கு நான்கு சகோதரர்கள் இரண்டு சகோதரிகள். மகாராணி ஜவந்தபாய் ஏழு குழந்தைகளையும் அன்புடன் வளர்த்தார். அப்பொழுது அவர்கள் சித்தூரில் இருந்தார்கள். அந்தசமயத்தில் அக்பரின் படை வந்தது. ரத்தம் சிந்திய யுத்தம் மூண்டது. யுத்தத்தில் அக்பர் வென்றார். கோட்டையிலிருந்த பெண்கள் தங்களது மானத்தைக் காக்கத் தீக்குளித்து வீரமரணமடைந்தார்கள். இருபத்தேழாயிரம் பேருக்கு மேல் யுத்தத்தில் மரணமடைந்தார்கள். அதன் பின்புதான் இங்கு வந்தோம். உதயசிங் மகராஜா எத்தனை சொல்லியும் அவரின் செல்ல மகனை ஜக்பாலை ஆட்சியில் அமர்த்தாமல், அவரின் மூத்த மகனனா மகாராணா பிரதாப்சிங்கை ஆட்சியில் அமர்த்தினார்கள் இந்த நாட்டின் உயர்குடிமக்கள். என்று நிறுத்தினான். “சொல்லுங்கள்” என்றாள் மீனாள். “அக்பர் படையினர் செய்த கொடுமையின் வடு மகாராணா பிரதாப்சிங்கின் மனதிலிருந்து போகவில்லை. அதன்பிறகு எத்தனை தூது வந்தும் மகாராணா பிரதாப்சிங் அக்பருடன் சமாதானமாகப் போகவில்லை. மகாராணா பிரதாப்சிங்கின் சகோதரர்கள் சக்திசிங்கும், சாகர்சிங்கும் கூட அக்பருக்குப் பணிந்து போனார்கள். ராஜபுத்திர பெண்களை முஸ்லீம்களுக்கு திருமணம் செய்து கொடுப்பதையும் மகாராணா பிரதாப்சிங் எதிர்த்து வந்தார்” மீனாள் கவனமாகக் கேட்டு வந்தாள். “இதெல்லாம் சேர்ந்து அக்பரின் கோபத்தை அதிகப்படுத்தியிருக்கிறது. மீண்டும் ஒரு யுத்தம் வர வாய்ப்பு இருக்கிறது” “எப்பொழுது வரும்?” எங்கு?” “உதயபூரில் இருக்காது. ஹல்டிகாடியில் இருக்கலாம்” “அது எங்கே இருக்கிறது?” “அருகில்தான்” “நீங்கள் யுத்தத்துக்குப் போவீர்களா?” “யுத்தம் என்று வந்தால் ராஜபுத்திரர்கள் போய்தான் ஆகவேண்டும். நான் திரும்பி வராவிட்டால் நீ உடன்கட்டை ஏறிவிடு” என்றான் விக்கிரமன். “நீங்கள் போனபிறகு இந்த உயிர் இருந்து என்ன செய்யப்போகிறது” என்றாள் மீனாள். வெகுதொலைவில் வெள்ளி நிலா மேலே மேலே வந்து கொண்டிருந்தது. மீனாளின் மனது கனத்து போய் கண்களில் இருந்து கண்ணீர் லேசாக வந்தது. நிலாவின் வெளிச்சத்தில் பார்த்த விக்கிரமன் மனது துடித்துப் போனது. புரவி வரும் சப்தம் கேட்டது. “மீனா, மகாராஜா வருகிறார்” என்றான் விக்கிரமன் எழுந்தபடி. மீனாளும் எழுந்தாள். “உங்களுக்கு எப்படித் தெரியும்?” “சேடக் சப்தம் எனக்குத் தெரியாதா? “சேடக்கா?” “ஆமாம் மகாராஜாவின் புரவி” “அதில் என்ன விசேசம்?” “பார் தெரியும்” என்றான் விக்கிரமன். சற்று நேரத்தில் சேடக் வந்தது. அதில் மகாராஜா மகாராணா பிரதாப்சிங் கம்பீரமாக அமர்ந்திருந்தார். அவர் இடையில் அழகான வாள் ஒன்றை செருகியிருந்தார். அந்தவாள் மிகவும் கூர்மையாக இருந்தது. அது நிலவு ஒளியில் பிரகாசித்தது. புரவியின் சேனத்தில் நிலவின் இன்னுமொரு வாளின்பிடியும் பிரகாசித்தது. எதற்கு இரண்டு வாட்கள் என்று நினைத்தவள், மகாராஜாவையும் அவர் வந்த புரவியையும் பார்த்து அசந்து போனாள் மீனாள். குள்ளமான கழுத்துடன் இருந்த அந்தப் புரவிக்குச் செறிந்த முடிகொண்ட வால் இருந்ததது. குறுகலான முதுகும், அகன்ற நெற்றியும், திரண்ட தோள்களைக் கொண்ட அந்த வெண்குதிரை தனது பெரிய விழிகளைக் கொண்டு மீனாளைப் பார்த்தது. அதைப் பார்த்த மீனாள் பரவசம் அடைந்தாள். விக்கிரமன் மகாராஜாவை வணங்கினான். மீனாளும் வணங்க, இரவில் அரண்மனைக்கு வரச் சொல்லி விட்டுச் சென்றார் மகாராஜா. அது போகும் வேகத்தைப் பார்த்த மீனாள், “இந்தப் புரவிக்கு பறக்கும் பாதங்களா” என்றாள் மெல்ல. “அது மட்டுமில்லை மீனா. நுண்ணறிவு படைத்தது, கட்டுப்பாடும் துணிவும் கொண்ட புரவி” “எதற்கு இரண்டு வாட்கள் வைத்திருக்கிறார்? “மகாராஜா இரண்டு வாட்கள் எப்பொழுதும் வைத்திருப்பார். இரண்டும் ஒன்று போல இருக்கும். எடையும் நாற்பது கிலோ அளவில் இருக்கும். சண்டை ஏற்படும் பொழுது தனது எதிரிக்கு ஒரு வாளை கொடுத்து, சற்று நேரமும் கொடுத்துதான் போரிடுவார். இரவில் அரண்மனைக்கு செல்லவேண்டும். வா, நாமும் போவோம். நமக்கு மீண்டும் ஒருமுறை முக்கிய வேலை இருக்கிறதல்லவா? “மறுபடியுமா? மீனாள் சிரித்தாள். அங்கிருந்து விலகிய அவர்கள் தங்கள் இல்லத்தை அடைந்தார்கள்.
தொடரும்
எடிட்டிங்கின் போது திடீர் மயக்கம்: எடிட்டர் கிஷோர் கோமா நிலையில் சிகிச்சை
சென்னை: எடிட்டிங் பணியின்போது திடீர் மயக்கம் அடைத எடிட்டர் கிஷோர் கோமா நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆடுகளம் படத்துக்காக தேசிய விருது பெற்றவர் எடிட்டர் கிஷோர். ‘ஈரம்’, ‘ஆடுகளம்’, ‘பயணம்’, ‘எங்கேயும் எப்போதும்’, ‘காஞ்சனா’, ‘பரதேசி’, ‘மதயானைக் கூட்டம்’, ‘நெடுஞ்சாலை’ உள்ளிட்ட பல படங்களுக்கு எடிட்டராக பணிபுரிந்தவர் கிஷோர். திருமணம் செய்துகொள்ளாத 32 வயது இளம் திரைப்பட தொழில்நுட்பக் கலைஞர். தமிழ்த் திரையுலகில் நம்பிக்கை நட்சத்திரமாகப் பார்க்கப்படுவர். இவர், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘விசாரணை’ படத்தின் எடிட்டிங் பணிகளை கவனித்து வந்தபோது மயக்கம் ஏற்பட்டிருக்கிறது. உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மூளையில் ஓர் இடத்தில் ரத்தம் கட்டியிருக்கிறது. உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறி செய்திருக்கிறார்கள். அப்போது 24 மணி நேரத்தில் நினைவு திரும்பிவிடும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், அறுவை சிகிச்சை முடிந்த பிறகும் நினைவு திரும்பவில்லை. இன்னும் கோமா நிலையிலேயே உள்ளார். மீண்டும் இன்னொரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்களாம். கிஷோருக்கு விரைவில் நினைவு திரும்பி பழைய நிலைக்கு வர திரையுலகினர் பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.
சாந்தி திரையரங்கம் விற்கப்பட்டது: நடிகர் பிரபு
சென்னை: சிவாஜி குடும்பத்துக்கு சொந்தமான சென்னை அண்ணாசாலையில் உள்ள சாந்தி திரையரங்கம் விற்பனை செய்யப்பட்டதாக நடிகர் பிரபு அறிவித்தார். சென்னை அண்ணா சாலையில் இயங்கி வந்த ஆனந்த், லிட்டில் ஆனந்த் திரையரங்கு உரிமையாளர் உமாபதியால் கட்டப்பட்டது சாந்தி திரையரங்கம். அதனை அவரிடமிருந்து 1962 -இல் சிவாஜி கணேசன் வாங்கினார். அன்று முதல் சிவாஜி மற்றும் பிரபு நடித்த அனைத்துப் படங்களும் அதில் திரையிடப்பட்டு வந்தது. 2005 -இல் சாந்தி திரையரங்கை புதுப்பித்து சாந்தி, சாய் சாந்தி என இரு திரையரங்குகளாக மாற்றினர். இந்தத் திரையரங்குகள் தனியார் கட்டுமான நிறுவனத்துக்கு விற்கப்பட்டுள்ளது. சாந்தி, சாய் சாந்தி திரையரங்குகளை இடித்துவிட்டு அதில் 4 திரையரங்குகளுடன் கூடிய வணிக வளாகம் கட்ட கட்டுமான நிறுவனம் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
Railway Protection Force (RPF) Recruitment Notification 2015 for Constables Post (17,000 Vacancies)
Railway Protection Force (RPF) Recruitment Notification 2015 for Constables Post Apply Online (17,000 Vacancies) Railway Protection Force (RPF) has released recruitment notification for 17,000 constables posts. All eligible and interested candidates can apply online on or before 31-03-2015. Vacancy details: Total No. of Posts – 17,000 posts Name And No. of Posts: Constables: 17,000 Age Limit: Candidates age should be between 18 – 25 Years As On 01-01-2015. Age relaxations will be applicable as per the rules. Educational Qualification: Candidates should have done 10th / ITI Degree or its equivalent qualification from a recognized university. Selection Process: All Eligible Candidates will Be Selected Based on Their Performance In Written Examination, Physical Test, Trade Test. Pay Scale: Rs. 5200-20200/With 2000/-Grade Pay. Application Fee: For General/OBC Candidates Application Fee is – 40/ & For All Other Candidates (PH/ST/SC) Application Fee is – Nil. How To Apply: All Eligible and Interested candidates may fill the online application through official websitehttps://www.indianrailways.gov.in before or on 31-03-2015. Important Dates: Last Date for Registration of Online Application Form Is: 31-03-2015. https://employmentexpress.blogspot.in/2015/03/railway-protection-force-rpf.html
இந்த வருட தீபாவளியில் பள்ளிகளுக்கு விடுமுறை: நியூஜெர்ஸி இந்தியர்கள் மகிழ்ச்சி
இந்த வருட தீபாவளிப் பண்டிகைக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது நியூஜெர்சி வாழ் இந்தியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் வசிக்கும் இந்திய மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று நியூஜெர்ஸி மாநிலத்தில் உள்ள ஒரு சிறு கல்வி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு தீபாவளி அன்று விடுமுறை அளிக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. நியூஜெர்ஸியின் கிலன் ராக் கல்வி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் படிக்கும் இந்திய-அமெரிக்க பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடும் வகையில் தீபாவளி தினத்தன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்திருந்தனர். இந்தக் கல்வி மாவட்டத்தில் 6 அரசுப் பள்ளிகளில் 2300-க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் இந்திய சமூகத்துக்கு மதிப்பளிக்கும் வகையில் வரும் நவம்பர் 11ஆம் தேதி தீபாவளி தினத்தன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று மாவட்ட கல்வி வாரியம் அறிவித்துள்ளது.

