முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்புக்கு மத்தியப் படையினர் தேவையில்லை: உம்மன்சாண்டி

இந்தியா

Umman-Chandiபுது தில்லி முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்புக்கு மத்திய பாதுகாப்புப் படையினர் தேவையில்லை; கேரள போலீஸாரால்தான் திறமையாகப் பாதுகாக்க முடியும் என்று கேரள முதல்வர் உம்மன் சாண்டி தெரிவித்துள்ளார். கேரள மாநில நலன்கள் குறித்து மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக கேரள முதல்வர் உம்மன் சாண்டி 2 நாள் பயணமாக நேற்று செவ்வாய்க்கிழமை தில்லிக்கு வந்தார். அவர் பிரதமர் நரேந்திர மோடி, கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி ஆகியோரை சந்தித்து பேசினார். அதன் பின்னர் கேரளா ஹவுஸில் செய்தியளார்களிடம் பேசினார். அப்போது, முல்லைப் பெரியாறு அணை கேரள எல்லைக்குள் உள்ளது. அதனால் அணையைப் பாதுகாப்பது கேரள அரசின் கடமை. அணையை கேரள மாநில போலீசாரால்தான் முழுமையாகப் பாதுகாக்க முடியும். முல்லைப் பெரியாறு அணையை பாதுகாக்கும் பணியில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரை ஈடுபடுத்தத் தேவையில்லை” என்றார். முல்லைப் பெரியாறு அணையைப் பாதுகாக்கும் பணியில் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரை ஈடுபடுத்த வேண்டும் என தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. கடந்த மாதம் இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் இது குறித்து 4 வார காலத்துக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று கேரள மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்நிலையில் உம்மன் சாண்டி இவ்வாறு தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.