Home Blog Page 6360

பொன்மொழி காட்டிய புதுமொழி!

வித்யா ஸாடங்கா ஸ்வகீதா ச க்ஷுரதிக்ஷணா ச த:க்ருதா |
சிந்தயா ச்ருமித: ஸீர்ணோ நர: கிம் வித்யயா கியா ||
எல்லா அங்கங்களுடன் கல்வி நன்கு பயிலப்பட்டது. அறிவும் கத்தி போன்று கூர் தீட்டப்பட்டது. ஆனால் கவலையில் தவித்துக் கற்றவன் தளர்ந்தால், அந்தக் கல்வியாலோ அறிவாலோ என்ன பயன்?
– இது ஒரு சுபாஷிதம். அதாவது, சம்ஸ்க்ருதப் பொன்மொழி.

New+Picture+(30) - 2026

இது எனக்குள் பலசமயங்களில் பலவித எண்ண ஓட்டங்களை ஏற்படுத்தும். பல ஞானிகளைப் பற்றி நாம் படித்தால் ஒன்று தெரியும்… அவர்கள் தேவையற்ற விஷயங்களுக்கு கவலைப் பட்டதில்லை. கவலை என்பது, அரக்கன் போன்றது. அது மனத்துள் புகுந்து விட்டால், பல நற்சிந்தனைகள் அந்த மனத்தைவிட்டு காணாமல் போய்விடும். நல்ல சிந்தனை ஓட்டம் என்பது தவம் போன்றது. ஒன்றைப் பற்றிய எண்ண அலைகள் மனத்தில் மீண்டும் மீண்டும் மோத, அது இறுதியில் ஒரு புதிய பரிணாமத்தை அடையும். அதுவே தவத்தின் இறுதியில் கிடைக்கும் வரம் போன்றது.
நல்ல சிந்தனைகள் என்று மட்டும் இல்லை… சுய நினைவும், கற்றதனால் பெற்ற அறிவும் கூட, கவலையில் தோய்ந்திருந்தால் மனத்தில் உடனே எழுவதில்லை; உடனடியாய் செயல்படுவதில்லை! குறிக்கோள் மற்றும் சுயமுயற்சியின் துணை கொண்டு அமைய வேண்டிய நம் முன்னேற்றம், கவலையின் காரணத்தால் உண்டான மழுங்கிய மனநிலையால், அமையாமல் போகிறது.
கவலைகள் பலவிதம். ஒவ்வொருவருக்கும் ஒருவிதம். அந்தக்காலத்தில் “படைப்பாளிகள், புலவர்கள் போன்றோருக்கு கவலைகள் மனத்தை அரிக்கக்கூடாது; அப்படி அரித்தால் அவர்களின் படைப்பாற்றல் போய்விடும், தமது நாட்டின் சிறப்பும் போய்விடும்’ என்று எண்ணிய புரவலர்கள், தகுந்த சன்மானம், பொற்காசுகள், நிலம், பசுக்கள் என அளித்து அவர்களை போஷித்து வந்ததை அறிவோம். தமிழில் எழுந்துள்ள இத்தனை படைப்புகளுக்கும் இலக்கியச் சிறப்புக்கும் புலவர்கள் மட்டும் காரணமில்லை; அவர்களை போஷித்த அரசர்களும் தனவான்களும் முக்கியக் காரணம் என்பதை நாம் உணரவேண்டும்.
இதை எண்ணும் போது, மகாகவி பாரதியின் உள்ள உணர்வு நம் காதுகளில் ரீங்காரமிடுகிறது.
பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும்
என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று
நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா!
கவலை என்பதோடு கூட, அதன் காரணத்தால் எழும் பதட்டம் உள்ளத்தை ஆக்கிரமித்துவிட்டால் நம் யோசிக்கும் திறனும் குறைந்து விடுகிறது. அப்போது நாம் படித்த படிப்போ கற்ற அனுபவங்களோ உடனடியாய் கைகொடுப்பதில்லை. எனவேதான் எதையும் யோசித்து, பிறகு செயல்படுத்தச் சொல்கிறார்கள். 
சென்ற வாரம் ஒருநாள், இரவு மணி 1.10. கைபேசி மணி அடித்து எடுத்தேன். இரண்டு தெரு தள்ளி இருக்கும் மூத்த சகோதரி ஒருவர் அழைத்தார். 84 வயதான அவர் அம்மாவுக்கு இதய நோய் உண்டு. அன்று இரவு அவருக்கு உடல் நிலை சற்று மோசமாகிவிட்டது. வேறு யாரும் வீட்டில் இல்லாததால் குடும்ப மருத்துவரைத் தொடர்பு கொண்டு “என்ன செய்வது’ எனக் கேட்டிருக்கிறார். அவரும் ஒரு மாத்திரையின் பெயர் சொல்லி, “இப்போது கொடுங்கள்; நாளை காலை பார்க்கலாம்’ என்றிருக்கிறார். வேறு வழியில்லாமல் அந்த இரவில் அவரும் எனக்கு போன் செய்து குறிப்பிட்ட அந்த மாத்திரையை உடனே வாங்கித் தருமாறு கேட்டார். நானும் 24 மணி நேரம் திறந்திருக்கும் மருந்துக் கடைக்குச் சென்று கேட்டேன். “எங்களிடம் ஸ்டாக் இல்லை; (ஒரு கடையின் பெயர் சொல்லி) அந்தக் கடையில் கேளுங்கள்’ என்றார். இப்படி இரண்டு கடைகள் மூன்று பெரிய மருத்துவமனைகளின் மருந்தகங்களுக்குத் துரத்தியடிக்கப்பட்டு கேட்டால், ஒரே பதில்… “எங்களிடம் ஸ்டாக் இல்லை; அங்குக் கேளுங்கள்…!’
பிறகு அந்த சகோதரிக்கு தகவல் தந்து உடனடியாக அருகிலுள்ள நர்ஸிங் ஹோமுக்கு ஆட்டோ வில்அழைத்துவரச் சொல்லி நானும் காத்திருந்தேன். ஈ.சி.ஜி மற்றும் உடனடி சோதனைகள் முடித்து அந்த மருத்துவர் எழுதிக்கொடுத்த மருந்துச் சீட்டோடு அதே மருத்துவமனையின் மருந்தகத்தில் கேட்டால், அவர், நான் முதலில் என்ன மருந்து கேட்டேனோ அதை, (இவரும் அதையேதான் எழுதியிருந்தார்) எடுத்துத் தந்தார். குழப்பத்தோடு வாங்கிச் சென்று முதலில் செய்ய வேண்டிய வேலைகளைச் செய்துவிட்டு ஆறஅமர மருந்தின் காம்பினேஷனைப் பார்த்துவிட்டு யோசித்ததில் புரிந்தது – ஏன் இத்தனைபேரும் “”எங்களிடம் ஸ்டாக் இல்லை, வேறு கடையில் வாங்கிக்கொள்ளுங்கள்” என்று! அதாவது, கல்லூரி முடித்த கையோடு திருச்சியை மையமாகக் கொண்டும் நெல்லையை மையமாகக் கொண்டும் சுமார் மூன்றரை வருடங்கள் மெடிக்கல் ரெப்ரசென்டேடிவ்வாகப் பணிபுரிந்திருக்கும் அனுபவத்தாலும் படிப்பாலும் புரிந்தது – அந்த மருந்து லோராஜிபாம் வகையறா என்று!
பெரும்பாலான கம்பெனிகள் வித்தியாசமான பெயரை வைத்திருப்பதால் உடனடியாக மருந்தின் தன்மை நம் நினைவுக்கு வருவதில்லை. மேலும் அரைகுறைத் தூக்கத்தில் எழுந்து பதட்டமான மனநிலையில் என்ன ஆகுமோ என்ற கவலை தோய்ந்த முகத்தோடு மாத்திரையைத் தேடிச் சென்றதால், அது என்ன வகையறா மருந்து என்று யோசிக்கக்கூட முடியவில்லை. இப்போது முதலில் சொன்ன சுபாஷிதத்தை மீண்டும் படியுங்கள்.
முதல் கடையில் கேட்டபோதே, அந்த நபர், “சார் இந்த மருந்தை டாக்டரின் சீட்டு இல்லாமல் தரமாட்டோ ம்’ என்று சொல்லியிருந்தால், எனக்கும் விஷயம் விளங்கியிருக்கும்; மற்ற இடங்களுக்கும் அலைந்திருக்க வேண்டாம்.
நிறையப்பேர் இப்படித்தான் தங்களை ஒரு வழிகாட்டியாக எண்ணிக் கொண்டு, தவறான வழியைக் காட்டிவிடுவார்கள், அது பயணப் பாதையோ அல்லது வாழ்க்கைப் பாதையோ எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
வழிகாட்டி என்றவுடன் கீதை சொன்ன கண்ணன் நம் நினைவுக்கு வருகிறார். கீதாசார்யனான கண்ணன் பரத கண்டத்து மக்களுக்காகக் கொடுத்த அரிய அறவுரைகள் நல் வழிகாட்டி. ஆனால் அதற்கு விளக்கம் சொல்லும் பேர்வழிகள், கீதையின் உள்ளர்த்தத்தை சிதைத்து ஆன்மா, அமைதி, தவம் என்று மக்களுக்கு ஏற்கனவே இருக்கும் வீரத்தையும் அழித்து கோழைகளாக்கி விடுகிறார்கள். கீதையின் அர்த்தம் மிகத் தெளிவு. எவரெவர் எந்தெந்தச் செயலில் ஈடுபட்டிருக்கிறார்களோ அவரவருக்குத் தக்க நல் போதனை நல்குவது. இல்லறத்தானுக்கு என்று சில கடமைகள் இருக்கின்றன. பிரம்மச்சாரியான இளைஞனுக்கு என்று சில கடமைகள் வகுக்கப் பட்டிருக்கின்றன. இந்த இருவருக்கும் ஒரு சன்யாசிக்குண்டான சாத்வீகத்தையும் சன்யாசிக்கேயுரிய தன்மைகளையும் போதித்தால்… மக்களின் ஸ்வபாவம் மாறிப்போகுமே! இதுதான் ஆஸ்ரமக் குழப்பம் என்பதோ!
இன்று நடக்கும் பெரும்பாலான கீதை விளக்கவுரை நிகழ்ச்சிகளும், ஆன்மீகவாதிகள் நடத்தும் வகுப்புகளும் இப்படித்தான் மாறிப்போயிருக்கின்றன. போர்க்களத்தில் அதர்மத்திற்கு எதிராக யுத்தம் நடத்த அர்ஜுனனைத் தயார் செய்த கண்ணனின் போதனைகளை ஆஸ்ரமக் குழப்பத்தின் காரணத்தால் எல்லா ஆஸ்ரமத்தார்க்கும் பொதுவானதென்று கருதி, தாம் அறிந்தவற்றை போதிக்கும் ஆன்மிகவாதிகள் செயலால் சாதாரண மக்களிடையே கொடுமையை எதிர்க்கும் நெஞ்சுரமும் வீர உணர்வும் மழுங்கிப் போனதுதான் மிச்சம்!? இந்த நாட்டின் அடையாளம் – பார்த்தனுக்குத் தேரோட்டி, பாரதவாசிகளுக்கு வழிகாட்டியாகி, அவரவர் தர்மத்தைக் கடைப்பிடிக்க ஆணையிட்டு, அவரவர் கடமையை சரியாகச் செய்யச் சொன்ன, வீரமும் வெல்லும் உபாயங்களும் போதித்த கண்ணனே!

உள்ளத்தை வெளிப்படுத்தும் கண்ணாடி

artist maruthi - 2026

கண்கள் – உள்ளத்தை வெளிப்படுத்தும் கண்ணாடி.
அது அழகிய கவிதை!
கண்கள் நேருக்கு நேர் சந்தித்துப் பேசும்போது தெரியும்- உள்ளமும் உணர்வும்!
ஆணோ, பெண்ணோ… ஒருவர் மனதை எடைபோட அந்தக் கண்களே உதவுகின்றன! அதுவே பேசும் உண்மையையும் பொய்யையும் பிரித்துக் காட்டிக் கொடுத்துவிடும்!
எனக்கும்கூட கண்களைப் பார்த்துப் பேசுவதே மிகவும் பிடிக்கும். சிலர் கண் கூர்மைக்கு அஞ்சி பார்வையை அங்கே இங்கே முகம் திருப்பிப் பேசுவர். அப்போது தெரிந்துவிடும்…!
சரி விஷயத்துக்கு வருகிறேன்.
எனக்கு மிகவும் பிடித்த ஓவியர்கள் இங்கே பலர் உண்டு. ஒவ்வொருவரும் ஒரு தனிச்சிறப்பு வாய்ந்தவர்கள். அந்தப் பட்டியலில் எனக்குப் பிடித்த பிரதான இடத்தைப் பிடித்தவர்களில் ஒருவர் ஓவியர் மாருதி! அவருடைய ஓவியங்கள் மாதஇதழ், நாவல்களின் அட்டைகளை அலங்கரித்ததுண்டு.
சிறுவயதில் குற்றால முனிவர் ரசிகமணி டி.கே.சி.யை உணர்வுப் பூர்வமாகப் படித்ததாலோ என்னவோ… கவிதையோ, படமோ, ஓவியமோ.. தெய்வச் சிலையோ… பெண்ணின் அழகு முகமோ… எனக்குள்ளும் ரசிகத் தன்மை புகுந்து விடும். அலங்காரத்தை ரசிப்பேன். அழகுக் கவிதை புனைவேன். பளிச்சிடும் தோடு, அசையும் குண்டலம், ஆடும் ஜிமிக்கி, பளீரிடும் மூக்குத்தி, பார்த்துச் சிரிக்கும் புல்லாக்கு… அட இதெல்லாம் சூடிய முகத்துக்கு ஏற்ற அழகை வெளிப்படுத்துகிறதா என்று தோன்றும். சில ஓவியர்கள் திருத்தமாக இவற்றை வெளிப்படுத்தும்போது… என்ன ஒரு வசீகரம்! அழியாத அழகாக ஓவியம் என்னமாய் மிளிரும்!?
அப்படி ரசிக்கத்தக்க அழகுப் பெண் முகத்தை கண்களிலேயே காட்சிப் படுத்திவிடுவார் மாருதி. பல நேரங்களில் நடிகை மீனாவின் முகத்தை அது நினைவூட்டும்.
மாருதியிடம் படம் வரைந்து வாங்கச் சென்றிருந்த ஒரு தருணத்தில் அவர் கேட்டார்… ஏன் ஸ்ரீராம்… இன்னும் கல்யாணம் செஞ்சுக்கலே?
நான் சொன்னேன்… நீங்க படம் வரைவீங்களே… ஒரு அழகான முகம்..! எத்தனை படம் வரைந்தாலும், அந்த அழகும் வசீகரமும் மட்டும் மாறவே மாறாதே! அதுபோல்… ஒரு முகத்தை இதுவரை நான் பார்க்கவில்லை! பார்த்தால் உடனே செய்துகொள்கிறேன்..!
இந்த பதிலில் இரண்டு வெளிப்படும். ஒன்று என் உளக்கிடக்கை. இரண்டு அவருக்கான பாராட்டு!
அவர் முறுவலிப்பார். ம்… நல்ல அழகுக் கலைஞன். ரசனைக் கலைஞன்.
இந்தப் படமும் அவரிடம் கேட்டு வரைந்து வாங்கியதுதான்! சிலம்புக் காட்சிக்கு அவர் வரைந்த ஓவியம்.
இதிலும் கண்கள் சொல்லும் கவிதையை நான் ஒவ்வொரு கணமும் ரசித்து வருகிறேன். என்ன ஒரு இறுமாப்பு!? கனிவும் காதலும் ஒருங்கே காட்டும் தூரிகையின் நளினம்! பெண்ணுக்கு புருவம் நேராக இருக்கக் கூடாதாம்! வில் போன்று வளைந்த புருவம் – அழகின் வெளிப்பாடு. கருவிழிக்குக் கவிதை உயிர் கொடுக்கும் கருவே இந்தப் புருவம்தானே!
கண்களை அகல விரித்து ஆச்சரியத்தால் அழகை விழுங்குகிறேன்! அது உள்ளத்தின் உண்மையை எனக்கு உணர்த்துகிறது!
கண்களைத் திருப்பிக் கொண்டோ, சுவரைப் பார்த்துக் கொண்டோ, நாம் பேசும்போது வேறு எங்கோ வெறித்துக் கொண்டோ பேசுபவரிடம் நான் பேச்சைத் தொடர்வதில்லை! அவர்கள் உள்ளத்தில் இருந்து உண்மை வெளிவருவதில்லை என்பதால்! உண்மை இல்லாத ஒன்றை எதற்காகக் கேட்டுக் கொண்டு நேரத்தை வீணாக்க வேண்டும்?! அட… இப்போதுதான் புரிகிறது… கிறிஸ்துவ மதப் பிரசாரகர்கள் ஏன் கண்களை மூடிக்கொண்டு எல்லாவற்றையும் அவிழ்த்து விடுகிறார்கள் என்று! கண்களைத் திறந்து கொண்டு பேசினால் கேட்பவர் கண் திறந்துவிடுவாரே!

ஆழ்வார் – நாச்சியாரின் அமுதத் தமிழ் அழகு!

namperumal+upanachimar+panguni+uthiram - 2026

மின்னிலங்கு திருவுருவும் பெரிய தோளும் கரிமுனிந்த கைத்தலமும் கண்ணும் வாயும்,
தன்னலர்ந்த நறுந்துழாய் மலரின் கீழே தாழ்ந்திலங்கும் மகரம்சேர் குழையும் காட்டி
என்னலனும் என்னிறையும் எஞ்சிந் தையும் என்வளையும் கொண்டென்னை யாளுங் கொண்டு,
பொன்னலர்ந்த நறுஞ்செருந்திப் பொழிலி னூடே புனலரங்க மூரென்று போயி னாரே.

 ———————

அரங்கன் தன் பக்கலில் உள்ளதைக் காட்டி என் பக்கலில் இருந்ததைக் கொள்ளை கொண்டு போனானே என்ன திருமங்கை ஆழ்வார் தலைவியானவளாய்ப் புலம்பித் தவிக்கிறார். இந்தப் பாசுரத்துக்கு ஒரு ரஸமான கதையும் உண்டு.
விக்கிரம சோழன். நல்ல தமிழ் ரசிகன். ஒரு நாள் அவன் அவையில் வைணவ, சைவ பண்டிதர்கள் இரு தரப்பும் தத்தமது பாடல்களைக் கூறி அவனை மகிழ்விப்பராம். அவனுக்கு என்ன மனத்தாங்கலோ..? அரசியைப் பிரிந்து அடுத்த தேசம் கிளம்பினானோ அல்லது, பட்டத்து ராணி பாராமுகம் காட்டினளோ என்னவோ? திடீரென ஒரு கேள்வி கேட்டான். தலைவன் பிரிந்திருந்தபோது, தலைவியின் நிலையை ரசமாகச் சொல்லும் பாட்டு ஏதாவது சொல்லுங்கள்.. என்று! வைணவ அறிஞர் இந்த “மின்னிலங்கு” பாசுரத்தைச் சொன்னாராம். சைவ அறிஞர் ஒரு பாடலைச் சொன்னாராம்.. (என்ன பாடல் என்பதை முன்னோர் சமுதாய நலன் கருதி தவிர்த்திருக்கிறார்கள்… இருந்தாலும், சாம்பல் பூசிய மேனி எனும் உவமையைக் காட்டியிருக்கிறார்கள்..) இரண்டையும் கேட்ட சோழன், “அடடா… மின்னிலங்கு திருவுருவும், பெரிய தோளும் நினைந்து நினைந்து நெஞ்சம் நெக்குருகி, தன் நெஞ்சைக் கொள்ளையிட்டுப் போன தலைவனை நினைந்து உருகும் இவளன்றோ தலைவி..! மற்றவளோ பிணந்தின்னி!” என்றானாம்.
இங்கே ஆழ்வார் பெண் தன்மையிட்டு பெருமாளின் திருவுரு அழகைக் காட்டிய இந்தப் பாசுரத்தை விடவும், எனக்கு என்னவோ மிகவும் பிடித்ததாயும், வசீகரிக்கும் தன்மையதாயும் இன்றுவரை தோன்றுவது நாச்சியாரின் வசீகரத் தமிழே!
என்னமாய் ழ-வும் ள-வும் ல-வும் கொஞ்சி விளையாடுகிறது?! அரங்கன் அழகு காட்டி என் உடல் உருக் குலைத்தானே என்று கைவளை கழல, உடல் மெலிவு கண்டு கதறித் துடிக்குமளவும் இயல்பாய் பெண்ணான கோதை காட்டும் உணர்வுபூர்வமான அந்த அழகு…!
எழிலுடைய அம்மனையீர் என் அரங்கத்து இன்னமுதர் – குழல் அழகர்; வாய் அழகர்; கொப்பூழில் எழு கமலப் பூ அழகர்; எம்மானார்! என்னுடைய கழல் வளையைத் தாமும் கழல் வளையே ஆக்கினரே! என்று கதறுங்காலை நம்முள்ளுணர்வு பக்தியின் பாற் கிளர்ந்தெழுமோ? அல்லையாயின் அன்பின் தன்மை உணரச் செய்யுமோ!? எல்லாம்தான்!!

பேரளியும்… பெருங்கதையும்!

பெரம்பலூருக்கு அருகில் உள்ள பேரளி… பெரம்பலூர் – அரியலூர் செல்லும் வழியில் உள்ள சிறிய கிராமம்.
மஞ்சரி இதழாசிரியராகப் பணியாற்றியபோது எனக்கு அறிமுகமான எழுத்தாள நண்பன் சக்ரவர்த்தியின் மூலம் அறிமுகமானவர் நண்பர் ஸ்ரீனிவாசன். இந்தப் பேரளியில் தொழில்முனைபவராகத் திகழ்கிறார். அவருடைய தந்தையார் நீலமேகம் ஐயங்கார் நல்லதொரு ஆன்மிகச் சொற்பொழிவாளராக, ஆன்மிக நிகழ்ச்சிகள், குடமுழுக்கு உள்ளிட்ட விழாக்களை நடத்தி அந்தப் பகுதியில் நற்பெயர் பெற்றவர். நான் எழுதியிருந்த புத்தகங்கள் ஓர் இரண்டைப் படித்துவிட்டு என் மீது நல்ல அபிமானம் கொண்டிருந்தாராம். நண்பர் ஸ்ரீனிவாசன் அடிக்கடி தொலைபேசியில் சொல்லிக்கொண்டே இருப்பார். எனக்கும் அவரைப் பார்த்து நமஸ்கரிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ஆனால் துரதிருஷ்டம், சென்ற வருடம்(2012) அக்டோபர் மாதக் கடைசியில் அதே பேரளியில் ஒரு சாலை விபத்தில் சிக்கிய அவர் பின்னர் மருத்துவமனையில் வைத்து காலமானாராம். தந்தையார் மீது பெருமதிப்பு கொண்டிருந்தது நண்பரின் அந்தக் குடும்பம்.
அப்போது, நண்பர் ஸ்ரீனிவாசன் ஒரு செய்தி சொல்லியிருந்தார். அவர்கள் ஊரில், ஊரை விட்டு சற்றே ஒதுக்குப்புறத்தில், வயல்களின் ஊடே இரண்டு பாழடைந்த கோயில்களை இவர்கள் கண்டார்களாம். முட்புதர்கள் சூழ மிகவும் பாழடைந்து வெளித்தெரியாது இருந்த இரு கோயில்களை ஊர் மக்கள் ஒத்துழைப்பில் முட்புதர்களை அகற்றி உழவாரப் பணி மேற்கொண்டார்களாம். அப்போதுதான் தெரிந்தது, இரு கோயில்களும் சிவன் கோயிலும் பெருமாள் கோயிலும் என!  ஊரில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவு இருந்த அந்தக் கோயில்களில் உழவாரப் பணி செய்து, கோயில்களில் தினமும் விளக்கேற்றி, பூஜை செய்ய முயன்றபோது, எதிர்பாராத விதமாக நீலமேகம் ஐயங்கார் பரமபதித்துவிட, எல்லோருக்கும் ஓர் அதிர்ச்சி.
கோயில் பணிகளில் இருந்து சற்றே பின்வாங்கினார்கள் சிலர். நண்பர் ஸ்ரீனிவாசனுக்கோ அவரது இளைய சகோதரர்களுக்கோ பெரும் துயரம். இனி இந்தக் கோயில்களுக்கு பூஜை செய்யலாமா? கூடாதா? இறைவன் நம்மை ஏன் இப்படி சோதித்தான்… இப்படியாக உள்ளூர எண்ணம் அவர்களுக்கு!
இதனிடையே, கோயில் உழவாரப் பணிகள் குறித்து பரவலாக செய்தி வெளியான போது, சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் வந்து பார்க்கத் தொடங்கியுள்ளனர். தங்கள் பகுதியிலும் பழைமையான கோயில்கள் இருந்துள்ளனவே என்ற ஆச்சரியத்தில்!
ஆனால், இது அருகில் இருந்த வயல், தோப்பு தொரவு உரிமையாளர்களுக்கோ, அல்லது ஊர் நலன் விரும்பாத ஒரு சிலருக்கோ பிடிக்கவில்லையோ என்னவோ? கோயிலில் இருந்து எடுத்து வைத்த கற் சிலைகள் சில திடீரென காணாமல் போயின! இடையில் சிலர், அந்தக் கோயில்களுக்குள் சுரங்கப் பாதைகள் உள்ளன. அவற்றில் அந்தக் கால மன்னர்கள் தங்கம், வெள்ளி, நவரத்தினங்களை புதைத்து வைத்திருப்பார்கள் என்று கட்டி விட, புதையல்  ஆசையில் ஒரு கூட்டம் கோயில்களை நோட்டம் விடத் தொடங்கியது.
விடுவாரா.. நம் ஆவியின் சூவியார்?! இப்படி ஒரு கட்டுரையையும் எழுதி இதழில் வெளியிட்டும் விட்டார்கள்…
——
சுரங்கப் பாதையில் தங்கப் புதையலா?
தங்கப் புதையல் இருப்பதாகப் பரவிய செய்தி பெரம்பலூர் மாவட்டத்தை தகதகக்க​வைத்துள்ளது!  சமீபத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பேரளி – மருவத்தூர் இடையே முட்புதர்களுக்குள் பழைமையான இரண்டு கோயில்களைக் கண்டு​பிடித்தனர் கிராம மக்கள். ‘அந்தக் கோயில்களில் இருந்த சில சிலைகள் திருடப்பட்டுள்ளன என்றும் தங்கப் புதையல் இருக்கிறது’ என்றும் பரபர தகவல்கள் கிடைக்கவே, விசாரணையில் இறங்கினோம். காட்டுப் பாதைக்குள் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட சிவன் மற்றும் பெருமாள் கோயில் திடீர் பிரபலம் ஆகி விட்டதால், ஏராளமான மக்கள் கூட்டம்கூட்டமாக வந்து வணங்கிச் செல்கிறார்கள். கோயிலைச் சுற்றிப் பார்த்த பிறகு, ஊர்ப் பெரியவரான ஆறுமுகத்திடம் பேச்சுக் கொடுத்தோம். ”அந்தக் காலத்துல கோயில்களைச் சுற்றி பேரளி கிராமம் இருந்ததாகவும், அதன்பிறகு, பேரளி மருவத்தூர், பேரளி, பனங்கூர் என்று மூன்று ஊர்களாகப் பிரிஞ்சுட்டதாகவும் சொல்வாங்க. மக்கள் புழக்கம் இல்லாததால், நாளடைவில் கோயில்​களைச் சுற்றி முள்வளர்ந்துடுச்சு. ஒரு கட்டத்தில் கோயில்களையே மறைச்சிடுச்சு. –

என்று கட்டுரை நீண்டுகொண்டே போனது!
ஆட்சியருக்கு செய்தி பறந்தது. தொல்பொருள் இலாகா- தூக்கம் கலைந்தது. ஓடி வந்தார்கள் பேரளியில் பேரணியாக! கோயில்களின் சுவர்களை அளவெடுத்தார்கள். அங்குலம் அங்குலமாக அடியெடுத்து கற்களையும் சிலைகளையும் கணக்கெடுத்தார்கள்…
ஊர் மக்களுக்கு ஒரு நம்பிக்கை! சரி.. அரசு ஏதோ செய்கிறது. நம் ஊர் கோயில்கள் திரும்பவும் ஒரு நல்ல நிலையை அடைந்துவிடுமென்று!
இப்படியாக மூன்று நான்கு மாதங்கள் கழிந்த நிலையில்தான்….
நண்பர் ஸ்ரீனிவாசன் திரும்பவும் என்னை தொலைபேசியில் அழைக்கத் தொடங்கியிருந்தார். எங்கள் ஊருக்கு வாருங்கள். அந்தக் கோயில்களை நீங்கள் அவசியம் பார்க்க வேண்டும். என் அப்பா உங்களைப் பார்க்க ஆசைப்பட்டார்… உங்களை அழைத்துக் கொண்டு அந்தக் கோயில்களுக்குப் போய்க் காண்பிக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தார்… இப்படியாக நண்பர் அவரது அப்பா பெயரைச் (செண்டிமெண்டை) சொன்னதும் எனக்கும் ஆவல் அதிகமாயிற்று! சரி போய் வருவோமே என்று எண்ணி, அவரிடமும் நான் வருவதாகச் சொன்னேன்.
அதற்கு நான் தேர்ந்தெடுத்தது, என் பிறந்தநாளை! மார்ச் 14. ஸ்ரீரங்கத்திலிருந்து காலை கிளம்பி, திருப்பட்டூர் சென்றுவிட்டு, அங்கிருந்து பெரம்பலூர் சென்றேன். (இந்தக் கோயிலை மறு மாதமே தினமணி – வெள்ளிமணியில், தலையெழுத்தை மாற்றித்தரும் பிரம்மா கோவிலாகப் பதிவு செய்தேன்..)
மதியம் பேரளி சென்று அவர் வீட்டை அடைந்தது முதல் அப்பாவைப் பற்றியும், அந்தக் கோயில்களைப் பற்றியுமே சொல்லிக் கொண்டிருந்தார். உண்டு முடித்து சற்று நேரத்தில் அவருடன் அந்தக் கோயில்களைப் பார்க்கலாமே என்று கிளம்பினேன்!
எத்தனையோ பாழடைந்த கோயில்களைப் போய்ப் பார்த்து எழுதியிருக்கிறோம். அவற்றின் அவல நிலையை வெளிக்கொண்டு வந்திருக்கிறோம்… அதுபோல் எண்ணி இந்தக் கோயில்களுக்கும் சென்றேன். கிராமத்துச் சாலையின் இரு புறத்திலும் பார்த்தால்… கீழ்ப் பக்கம் சிவன் கோயிலும் மேற்புறத்தில் பெருமாள் கோயிலுமாக வெளித்தெரிந்தது. கோயில்களைச் சுற்றியிருந்த புதர்களை அப்புறப்படுத்தியிருந்தார்கள். கோயில் நன்றாகவே வெளியில் தெரிந்தது.
சிவன் கோயிலுக்கு முதலில் அழைத்துச் சென்றார் நண்பர். வௌவால்களின் வாசம்… அந்த வாசத்தால் வெளிப்பட்ட வாசம்… எல்லாம்தான்! கையில் எண்ணெய் திரியுடன் சென்ற நண்பர், உள்ளே விளக்கேற்றி, தீப ஆராதனையும் செய்து, கற்பூரத்தைக் கொளுத்தி வெளிச்சத்தை ஏற்படுத்தி வெளியில் வந்தார்.
கோயில் பகுதியைச் சுற்றிப்பார்த்து வந்தேன்.
சுரங்கம் இருப்பதாகச் சொன்ன ஒரு இடம்… பின்னப்பட்டுப்போன விக்ன விநாயகர் சிற்பம், கொடிமரம், இடிந்து விழுந்த நிலையில் அம்பாள் சந்நிதி, சுற்றிவலம் வரும்போது சண்டிகேசர் சந்நிதி, நந்தி, பலிபீடம்… எல்லாம் ஒரு பழமையின் செழுமையை கண்ணில் காட்டியது.
அடுத்து பெருமாள் கோவிலுக்குப் போனோம். நல்ல அமைப்பு. துவஜஸ்தம்பம், விளக்குத்தூண் போல்! பெருமாள் சந்நிதி. நல்ல அமைப்புடன் விக்ரஹம். பன்னிரு ஆழ்வார்கள் விக்ரகங்கள், தாயார் சந்நிதி உரு மாறாமல்.. தாயார் விக்ரஹம் மிகத் திருத்தமாக அழகுடன்! இப்படியே பார்த்து வந்தபோது, பெருமாள் சந்நிதி பின்புறத்தே மேற்சுவரில் ஒரு சிற்பம் மிக அழகாக இருந்ததைக் கண்டேன்.
மூன்று பேர் இருவர் போல்  தோற்றம் அளிக்கும்  வண்ணம் ஒட்டியபடி செதுக்கப்பட்ட சிற்பம், இடது புறத்தை மறைத்தால் வலது புறத்தில் ஒருவர் ஓடுவது போல், வலதுபுறத்தை மறைத்தால் இடது புற நபர் ஓடுவதுபோல், இரண்டு கைகளையும் மறைத்துப் பார்த்தால் நடுவில் ஒருவர் நிற்பதுபோல்… ஆசனத்தில் அமர்வதுபோல் என்று வித்தியாச சிற்பம்…
இப்படியாக இந்தக் கோவில்களைப் பார்த்துவிட்டு வெளிவந்தேன். ஏற்கெனவே இவர்கள் நம்பிக் கொண்டிருப்பதுபோல்….இந்தக் கோயில்களைப் பார்த்துவிட்டு வந்ததால் நம் ராசியும் தலைஎழுத்தும் எப்படி இருக்கப்போகிறதோ என்ற குதர்க்கமான (அல்லது நக்கல் கலந்த) எண்ண ஓட்டத்துடன் வண்டிபிடித்து, பெரம்பலூர் புறவழிச்சாலை அடைந்து, வந்து நின்றவுடனே விருட்டென வந்த சென்னை விரைவுப் பேருந்தில் ஏறி ஊர் வந்து சேர்ந்தேன்…
(ம்ஹும்… அப்பாடா….! ஒரே மூச்சு.. பெருமூச்சு!)

IMG 0004 - 2026
IMG 0005 - 2026

IMG 0006 - 2026

IMG 0007 - 2026

IMG 0008 - 2026

IMG 0009 - 2026

IMG 0011 - 2026

IMG 0012 - 2026

IMG 0014 - 2026

IMG 0015 - 2026

IMG 0017 - 2026

IMG 0016 - 2026

IMG 0018 - 2026

IMG 0021 - 2026

IMG 0022 - 2026

IMG 0023 - 2026

IMG 0024 - 2026

IMG 0025 - 2026

சர்ச்சைகளே! உம் பெயர்தான் ஐ.பி.எல்.லோ..?

ipl - 2026
ஐபிஎல்லும் சர்ச்சைகளும் ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகள் போல் நீங்காமல் இருப்பது அதிசயம் ஒன்றும் இல்லை. சொல்லப்போனால், ஐபிஎல் போட்டிகள் தொடங்கப்பட்டதே சர்ச்சைகளின் பின்னணியில்தானே. தொடர் தோல்விகளால் இந்திய கிரிக்கெட் அணியின் மீதும், இந்திய கிரிக்கெட் வீரர்கள் மீதும், அவ்வளவு ஏன்… கிரிக்கெட் விளையாட்டின் மீதுமே ரசிகர்கள் தங்கள் கோபத்தையும் புறக்கணித்தல் எண்ணத்தையும் வெளிப்படுத்தியபோது, கபில்தேவ் என்ற ஆபத்பாந்தவன் ஐசிஎல் என்ற அமைப்பின் மூலம் மீண்டும் உயிர்கொடுக்க முனைந்தார். ஜீ டிவி தயவில் வர்த்தக ரீதியில் உள்ளூர் கவுண்டி கிரிக்கெட்கள் ஐசிஎல் என்ற பேனரில் மீண்டும் உலா வரத் தொடங்கியபோது, பணக்குவியலில் சுக போக வாழ்க்கையை  நடத்தி வந்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஆடித்தான் போனது. தங்களுக்கு இதனால் பெரும் வர்த்தக இழப்பு வந்துவிடுமே என்ற கவலையில், கவாஸ்கரையும் கபில்தேவையும் மோத விட்டு, ஐசிஎல் அமைப்புக்கு எதிராக போட்டி அமைப்பையும் ஏற்படுத்தி, அதற்கு ஐபிஎல் என்ற நாமகரணமும் சூட்டி… எல்லாம் நடந்துவிட்ட பழங்கதைதான்!
இன்று பணம் பெருக்கெடுத்து ஆறாய் கடலாய் பொங்கி வழியும் ஒரே துறையாக ஐபிஎல் இருப்பது கண்கூடு! எங்கே பணம் மிதமிஞ்சிப் பெருக்கெடுத்துக் குவிகிறதோ அங்கே முறைகேடுகளும் சூதாட்டமும் சமூக விரோதச் செயல்களும் இயல்புதானே! ஐபிஎல் மட்டும் இதற்கு விதிவிலக்கா என்ன? தேர்ந்த நாடகமாக, மூன்று மணி நேரத்  திரைப்படமாக ஐபிஎல் டி20 போட்டிகள் உருவான பின்னே, திரைப்படங்களின் மவுசு எல்லாம் தூசாகிவிட்டது இந்த மே மாதங்களில்! பள்ளிப் பிள்ளிகளில் படிப்பு கெடுகிறது என்றார்கள் பெற்றோர்கள்! இளைஞர்களின் எத்தனை மணி நேர உழைப்பு வீணாகிறது என்றார்கள் சமூகத்தில் அக்கறை உள்ளவர்கள். இரவெல்லாம் விழித்திருந்து சிறுவர்கள் உடல் நலனைக் கெடுத்துக் கொள்கிறார்களே என்று வருத்தப்பட்டார்கள் வீட்டின் பெரியவர்கள். இதெல்லாம் யாருக்குக் கேட்கப் போகிறது..?
சூதாட்டம் பெரும் குற்றம்தான் நம் நாட்டில்! சீட்டுக் கட்டுகளை வைத்து ஆடுகின்ற சிறிய அளவாக இருந்தால் என்ன..? அல்லது ஐபிஎல்,.லில் லட்சக் கணக்கில் பணம் வைத்து ஆடும் பெரிய அளவாக இருந்தால் என்ன…? எல்லாம் குற்றம் தான்! ஆனால், இந்தியாவில் சூதாட்டத்தை சட்டபூர்வமாக்கினால் குற்றங்கள் குறைந்துவிடும் என்கிறார் ஒரு வெளிநாட்டு வீரர். இத்தகைய அறிவுரைகள் நம் நாட்டுக்கு ஒரு வெளிநாட்டு வீரரிடம் இருந்து தேவைதானா?
பணம் பண்ணுவது என்று வந்துவிட்டால், சூதாட்டமும், போட்டி பொறாமைகளும் தலைதூக்காமல் இருக்குமா? பாலிவுட்டில் எடுத்த பணத்தை மேலும் பெருக்கிக் கொள்ள நடிகர்களும் நடிகைகளும் தங்கள் திறனைக் காட்டி வருகிறார்கள் என்றால், இங்கே மலின அரசியல் களத்தில் ஏமாற்று வித்தைகளால் பணம் பெருக்கியவர்கள் டிவி., சினிமா, ஊடகம் என்று கால் பரப்பி ஒரு அணியை பேரம் பேசி எடுத்து நடத்துகிறார்கள் என்றால்..?
இருப்பதைப் பெருக்குவதும், சில நேரம் அதனை இழப்பதும் சூதாட்டத்தில் இயல்புதானே! அப்படித்தான் கொச்சி அணி காணாமல் போனது. டெக்கான் சார்ஜஸ் அணி பெயரும் சரி, உருவமும் சரி கரைந்து போனது. ஊடக உலகில் கோலோச்சிய நிறுவனம் திவாலாகும் அளவுக்கு உரு கரைந்து போனது!
இப்படியெல்லாம் பார்த்துவிட்ட சூதாட்ட ஐபிஎல் குழந்தைக்கு ஆறு வயதுதான் என்றாலும், அதன் அசுர வளர்ச்சி இந்த நாட்டையே கபளீகரம் செய்து விடுமோ என்று தேசப் பற்றாளர்கள் கவலை கொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள்! இந்த அசுரக் குழந்தையின் வளர்ச்சியைப் பார்த்தால் இதன் எதிர்காலப் பரிணாமம் எப்படி இருக்கும் என்பதை
ஐபிஎல் சீஸன் 1 முதல் போட்டி தொடங்கியபோது அனைவரும் ஆச்சரியப் பட்டார்கள். வீரர்களை ஏலம் எடுக்கும் விவகாரம், ஒப்பந்தம் என்ற பெயரில் அடிமை சாசனம் அளிப்பது, அதற்காக விலை போக மாட்டோமா என்று வீரர்கள் ஏங்குவது.. எல்லாம் இந்தியாவுக்குப் புதிதுதான்!
வெளிநாட்டு வீரர்களின் எல்லையற்ற எதிர்பார்ப்பு, அவர்களுக்குக் கிடைத்த வரவேற்பு, இந்திய வீரர்களே ஊர் ஊராக, அணி அணியாக, மாநிலம் மாநிலமாகப் பிரிந்து போய் நின்ற காட்சி  இந்தியர்களுக்கு ஆச்சரியமாகத்தான் இருந்தது.
ரஞ்சி டிராபி போட்டிகளும், கவுண்டி போட்டிகளும், மண்டல அணிகளாகப் பிரிந்து மோதிய போது இல்லாத பிரிவினை எண்ணங்கள் எல்லாம், ஐபிஎல் துளிர்விட்டபோது, கூடவே மக்கள் மனங்களில் துளிர்விட்டன. காரணம், இந்தியாவில் கிரிக்கெட்டும் தேசபக்தியும் பிரிக்க முடியாமல் போய்விட்டதுதான்!
கிரிக்கெட் என்னும் விளையாட்டுக்குக் கொடுக்கும் மரியாதை ஏதோ, நாட்டின் போர்களுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவமாக மாறிப்போன இந்தியாவில், மாநில உணர்வுகளோடு இந்திய தேசிய உணர்வு சிதைந்து போனபோது வருத்தப்படாத நெஞ்சமே இல்லை!
இதற்கு முதல் வித்தாக அமைந்தது –  முதல் ஐபிஎல் போட்டியில் வீரேந்திர சேவாக் மீது கல் எறிந்த நிகழ்ச்சி!
அது 2008 மே 16. முகமெங்கும் பூரிப்புடனும் மகிழ்ச்சிப் பெருக்குடனும் களத்தில் நின்று கொண்டிருந்த டில்லி அணியின் கேப்டன் வீரேந்திர சேவாக், தனது சொந்த மைதானத்தில் சொந்த மக்களால் கல்லடி பெற்றார் என்றால்…? ஆம்.. பெரோஷ் ஷா கோட்லா மைதானத்தில், அன்றைய டெக்கான் சார்ஜஸ் அணியை 12 ரன் வித்தியாசத்தில் பந்தாடி, வெற்றிப் பாதையில் சென்றது டெல்லி அணி. அன்றைய போட்டிக்குப் பிந்தைய செய்தியாளர் சந்திப்பில், வெற்றி பூரிப்பு முகத்தில் தெரிய உற்சாகமாக இருக்க வேண்டிய சேவாக், வருத்தத்தின் உச்சத்தில் காணப்பட்டார். காரணம் அன்றைய 19 வது ஓவரின் போது, களத்தில் எல்லைக்கோட்டின் அருகே நின்று கொண்டிருந்த சேவாக் மீது கல்லை எறிந்து காயப்படுத்தியிருந்தனர் சிலர். உடனே நடுவர் பிரைன் ஜெர்லிங்கிடம் புகார் அளித்த சேவாக், “டெல்லியில் டெல்லி அணி ஆட்டக்காரர் மீது, அதுவும் டெல்லிக்காரரான ஓர் இந்தியர் மீது, கல்லை எறிந்தது துரதிருஷ்ட வசமானது” என்று எச்சரிக்கை மணி அடித்தார்.
அடுத்து, 2008 ஏப்.25ல் ஹர்பஜனுக்கும் ஸ்ரீசாந்துக்கும் இடையே நடந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க களப் போர், இந்திய ரசிகர்களை பெரிதும் காயப்படுத்தியது என்றே சொல்ல வேண்டும். மும்பை அணிக்காக ஆடிய ஹர்பஜன், பஞ்சாப் அணிக்காக ஆடிய ஸ்ரீசாந்த்.. இருவருமே உணர்ச்சி வசப்படுபவர்கள்தான்! ஆனால், அதனை அனைவர் முன்னிலையிலும் களத்தில் காட்டியது, மற்றவர் உணர்ச்சியைத் தட்டியெழுப்பிவிட்டது. இந்திய வீரர்களாக ஒற்றுமையுடன் செயல்பட வேண்டிய இருவரும், பஞ்சாப் அணி 66 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பெருமிதத்தில் ஸ்ரீசாந்த் வாயெடுக்க, தோல்வி சோகத்தில் ஹர்பஜன் கையெடுக்க, ஸ்ரீசாந்தின் கன்னத்தில் ஓர் பளார் அறை விட்டு ஹர்பஜன் தன் வீரத்தைக் காண்பித்து விட்டார். விளைவு – அடுத்து வந்த 11 போட்டிகளில் ஹர்பஜனுக்கு தடை! அழுது தீர்த்த ஸ்ரீசாந்த், மீடியாக்களின் வெளிச்சத்தில்! அனுதாபம் கிடைப்பதற்குப் பதிலாக அறுவெறுப்புதான் மிஞ்சியது!
அதே வருடம் ஏப்.19. மொஹாலி, சென்னை அணிகளுக்கு இடையிலான முதல் போட்டியின் துவக்க நிகழ்ச்சி.  சியர்லீடர்ஸ் என ரசிகர்களை உற்சாகப் படுத்தும் பணிக்கு அமர்த்தப்பட்ட பெண்களில் இருவர் கருப்பாக இருக்கின்றனர் என்ற நிறவேறுபாடு காரணத்தால், மேடையில் அவர்களுக்கு இடம் கொடுக்காமல், கீழே இருத்தி வைத்தது. இந்தச் சர்ச்சை இந்தியாவில் எழுந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது! மொஹாலி அணிக்காக விஸ்க்ராப்ட் இண்டர்நேஷனல் நிறுவனத்தால் பணி அமர்த்தப்பட்ட அந்தப் பெண்கள் இருவரும்,  மொஹாலி மைதானத்தை விட்டே வெளியேறச் செய்த கொடுமையும் நடந்தது!
ஐபிஎல் சீஸன் 2ல் கோல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி உரிமையாளர் ஷாருக் கான் தன் அணி பங்குகளை விற்பனை செய்வது தொடர்பாகப் பேசியதில் எழுந்த சர்ச்சை, தொடர் பிரச்னைகளால் தவித்த கோல்கத்தா அணியில் விளையாட்டு வீர்ர்களிடம் இன வேற்றுமை பாராட்டிய புகார், அதற்கு முன்னாள் இந்திய வீரர் அஜய் ஜடேஜா தன்னிடம் ஆதாரம் இருப்பதாகக் கூறியது, அப்போதைய கேப்டன் கங்குலியை குறிவைத்து புகார் கூறப்பட்டது. அவர் அணியில் பிளவு ஏற்படுத்தினார் என்றார் ஜடேஜா.
ஐபிஎல் சீஸன் 3 சோகமான தொடராக அமைந்துவிட்டது. ஐபிஎல் தலைவர் லலித் மோடியால் வெடித்த விவகாரம் அது. கிரிக்கெட் வாரியம் லலித் மோடியை நீக்கியதுடன், கிரிக்கெட் நிர்வாகத்துக்கு பெரும் அவப்பெயரைத் தந்து விட்டார் என்று வர்ணித்தது. அடுத்து, 2010 ஏப்.23ல் ஐபிஎல் போட்டிகளின் ஒளிபரப்பு உரிமையை வைத்திருந்த வோர்ல்ட் ஸ்போர்ட்ஸ் க்ரூப்புக்கும் சோனி மல்டி ஸ்கிரீன் மீடியாவுக்கும் ஒளிபரப்பு தொடர்பாக நிகழ்ந்த சண்டைகள்! ஏப்.22ல், அரசியல் தொடர்பான சர்ச்சைகள் எழுந்தன. ஐபிஎல்லில் ஆதிக்கம் செலுத்திய வேளாண் துறை அமைச்சர் சரத் பவார், விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரபுல் படேல், சசி தரூர் ஆகியோருக்கு இடையே நிகழ்ந்த பிரச்னைகள் பெரிதும் எதிரொலித்தது.
ஏப்.20ல் லலித் மோடியின் உறவினருக்கு எங்கள் அணியில் எந்தவித மறைமுகப் பங்குகளும் இல்லை என்று ராஜஸ்தான் ராயல்ஸ் உரிமையாளர் மனோஜ் படாலே கூறியதால் எழுந்த சர்ச்சை! 
ஏப்.19ல் ஐபிஎல்- இணையதளத்தில் அதிகாரபூர்வ பெயராக லலித் மோடியின் பெயர் இருந்ததும், அணி உரிமையாளர்களின் பெயர்கள் மறைக்கப்பட்டதும் சர்ச்சையைக் கிளப்பியது. பிசிசிஐக்கும், ஐபிஎல்லுக்கும் என்ன தொடர்பு எனக் கேள்வி எழுப்பினார் ராஜஸ்தான் கிரிக்கெட் அசோஷியேஷன் செயலாளர் சஞ்சய் தீக்‌ஷித். மேலும், 2005-2008 வரை மட்டுமே தலைவராக இருந்த லலித் மோடியின் பெயர் ரூ.800 கோடி மதிப்புள்ள ஐபிஎல் இணையதளத்தில் தொடர்ந்து இடம்பெறுவது ஏன் என்றும் சர்ச்சையைக் கிளப்பினார்.
அதே நாளில் சசிதரூர் அமைச்சரவையில் இருந்து வெளியேற்றப்பட்டார். அரசு அதிகாரத்தை தனது தனிப்பட்ட வியாபாரத் தொடர்புகளுக்குப் பயன்படுத்திக் கொண்ட குற்றச்சாட்டைத் தொடர்ந்து இந்த நடவ்கை மேற்கொள்ளப்பட்டது. கொச்சி டஸ்கர்ஸ் அணி பங்குகளை மனைவி பெயரில் வாங்கிய குற்றச்சாட்டின் கீழ் சசி தரூர் பெரும் சர்ச்சையை அந்த ஆண்டில் கிளப்பியிருந்தார். இவை எல்லாம் அரசியல்வாதிகளால் கிளம்பியது என்றால், அணி உரிமையாளர்களோ தேசியத்தின் மடியில் கைவைத்தனர்.
2010 மார்ச் 22ல் பஞ்சாப் அணியின் உரிமையாளரும் பாலிவுட் நடிகையுமான பிரீத்தி ஜிந்தா, அதன் இன்னொரு உரிமையாளர் நெஸ் வாடியா இருவருக்கும் எதிராக ஐபிஎல் அணி விளம்பரங்களில் பகத் சிங், ராஜகுரு உள்ளிட்ட விடுதலைப் போராட்ட வீரர்களின் படங்களைப் பயன்படுத்தியது தொடர்பாக சண்டிகர் நீதிமன்றம் சம்மன் அனுப்பிய விவகாரம் பெரிதும் பேசப்பட்டது. மக்களின் உணர்வுகளை காயப்படுத்தியதாக எழுந்த சர்ச்சை அது!
அதே ஆண்டு பிப்ரவரியில், சிவ சேனாத் தலைவரான பால்தாக்கரே, ஆஸ்திரேலிய வீரர்களை மும்பை மண்ணில் விளையாட அனுமதிக்க மாட்டேன் என்றார். ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் வரிசையாகத் தாக்கப்பட்டு வருவதால், ஆஸ்திரேலியர்கள் விளையாட வந்தால் ஐபிஎல் நடத்த விட மாட்டோம் என்றார் அவர். இருப்பினும் பின்னர் இந்திய சகோதரர்கள் ஆஸ்திரேலியாவில் வசிப்பதால், இந்த முடிவைக் கைவிடுவதாக அறிவித்தார்.
அதே நேரத்தில், கோல்கத்தா அணி உரிமையாளர் ஷாருக் கான், பாகிஸ்தான் வீரர்களுக்கு தனி சலுகைகளைக் காட்டுவதாக பால் தாக்கரே கூறிய குற்றச்சாட்டும் பெரிதும் எதிரொலித்தது. 
ஐபிஎல் சீஸன் 4ல் பிசிசிஐயுடன் கொச்சி டஸ்கர்ஸ் அணி வைத்திருந்த உறவு பொசுங்கிப் போனது. பண விவகாரத்தால், கொச்சி அணி நீக்கப்பட்டு, இனி ஐபிஎல் சீஸன் 5 முதல், 9 அணிகளே விளையாடும் என்று அறிவிக்கப்பட்டது.
ஐசிஎல்லுக்குப் போட்டியாகத் தொடங்கப்பட்ட ஐபிஎல் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, ஐசிஎல் நடத்தும் போட்டிகளுக்கு மைதானங்களைத் தரக்கூடாது என்று பிசிசிஐ விதித்த கட்டுப்பாடு. அதைத் தொடர்ந்து ஐசிஎல் அமைப்பைத் தடை செய்தது, ஐசிஎல் அமைப்பில் இருக்கும் விளையாட்டு வீரர்கள் பிசிசிஐயின் அணியில் இடம்பெற இயலாது என்ற அறிவிப்பு எல்லாம் சர்ச்சையோ சர்ச்சைகள்தான்! தாங்கள் உருவாக்கிய அமைப்பு என்பதால் பிசிசிஐ, ஐபிஎல்லை மட்டுமே முன்னிறுத்துவது என்று முடிவானது. அதற்காக ஐசிஎல் குறித்து மோடி சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு கடிதம் எழுதிய விவகாரம், அதே வருடத்தில் ஐபிஎல் ஆணையர் பதவியில் இருந்து லலித் மோடி கழற்றிவிடப்பட்ட விவகாரம் எல்லாம் ஐபிஎல்லின் பணத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் மகிமையைப் பறை சாற்றியது.
அதே ஆண்டில், ஐபிஎல் அணிக்காக தேசிய அணியில் இடம்பெறாமல் தவிர்க்க எண்ணிய காம்பிரின் செயல்பாடு, அந்த வருடத்தில் மிக அதிகத் தொகை கொடுத்து வாங்கப்பட்ட காம்பிர், மேற்கு இந்தியத் தீவுகள் சுற்றுப் பயணத்தில் தேசிய அணியில் இடம்பெறாமல் விட்டது எல்லாம் வீரர்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியது. உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் காயம் பட்டபோதும், காயத்துடன் ஐபிஎல் போட்டியில் விளையாடுவேன் என்று காம்பிர் அடம்பிடித்தது… அப்போது, காம்பிரின் உடல் காயம் குறித்த மருத்துவ அறிக்கை கூட விவாதப் பொருளானது.
2011 மே மாதத்தில் தென் ஆப்பிரிக்காவில் இருந்து மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்ற சியர்லீடர் பெண் ஒருவர், பின்னணியில் நடைபெற்ற தனிப்பட்ட அந்தரங்க விஷயங்களைக் குறித்து இணைய வலைப்பூவில் தகவல் வெளியிட்டார் என்பதற்காக அவர் நாட்டுக்கே திருப்பி அனுப்பப் பட்டார். அப்போது அவர், நான் பார்த்த அளவில், கிரிக்கெட் வீரர்கள்தான் விளையாட்டு வீரர்களிலேயே அறிவிலிகளாகவும் மோசமான நடத்தையாளர்களாகவும் அறிகிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்.
ஐபிஎல் சீஸன் 5ல், அனைவரையும் உலுக்கிய சர்ச்சையாக அமைந்தது, பெங்களூர் அணியில் இடம்பெற்ற ஆஸ்திரேலிய வீர்ர் லுக் போமர்ஸ்பெக்கின் செயல். இந்திய அமெரிக்கரான பெண் ஒருவர், தில்லி ஹோட்டல் மௌர்யா ஷெர்ட்டனில் இருந்தபோது, தவறாக நடந்துகொண்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அளவுக்கு போமர்ஸ்பெக்கால் தாக்கப்பட்டார் என்று கிளம்பிய சர்ச்சை. அவருக்கு ஐபிசி சட்டப்படி தண்டனையும் வழங்கப்பட்டது.
2012 மே 18ல் கோக்கத்தா அணியின் உரிமையாளர் ஷாருக் கான் வெற்றிக் களிப்பில் மும்பை வாங்க்டே மைதானத்தில் ரகளையில் ஈடுபட்டு அதிகாரிகளை கேவலப்படுத்தினார் என்பதால், அவருக்கு மைதானத்துக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டது.
மே 15ல் ஐந்து வீரர்கள் மீது ஸ்பாட் பிக்ஸிங் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. டெக்கான் சார்ஜஸ் அணியின் டிபி சுதிந்திரா, புனே அணியின் மோனிஷ் மிஸ்ரா, பஞ்சாப் அணியின் அமித் யாதவ் மற்றும் சுலப் ஸ்ரீவஸ்தவா, தில்லியைச் சேர்ந்த அபினவ் பாலி ஆகியோர் மீது ஸ்பாட் பிக்ஸிங் புகார்கள் முன்வைக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து முறைகேடுகளைக் களைய குழு அமைக்கப்பட்டது. தொடர்ந்து தனியார் தொலைக்காட்சி ஒன்று ஸ்டிங் ஆபரேஷன் என்ற முறையில், ஸ்பாட் பிக்ஸிங்கை அம்பலப்படுத்தியது.
ஏப்.18ல் நடந்த கோல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில், பஞ்சாப் அணியின் உரிமையாளர் ப்ரீத்தி ஜிந்தா, தனது அணியின் பேட்ஸ்மென் ஷான் மார்ஷ் ஆட்டம் இழந்த விதம் குறித்து நடுவருக்கு தன் அதிருப்தியைத் தெரிவிக்கும் விதத்தில் ஸ்ட்ராடஜிக் டைம் அவுட் நேரத்தின் போது, நடந்து கொண்டது, அதைத்தொடந்து, நடுவருக்கு விளக்கம் எதிர்பார்த்து ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா அறிக்கை அனுப்பியது எல்லாம் சர்ச்சை மயமே!
இது அல்லாமல், முனாப் படேல், ஹர்பஜன் சிங் ஆகியோர் சூடான பேச்சுகளால் மைதானத்தில் சண்டையிட்டது போன்ற செயல்களுக்கு அபராதமும் கண்டனமும் விதிக்கப்பட்டது சாதாரண நிகழ்வாகிவிட்டது.
ஏப். 8ம் தேதி, பஞ்சாப் அணியினர் அறையை சேதப்படுத்திவிட்டார்கள் என்று கூறி, மகாராஷ்டிர கிரிக்கெட் அசோஷியேஷன் புகார் பதிவு செய்தது போன்ற சம்பவங்களும் ஐபிஎல்லின் பாரம்பரியத்தை தொடர்ந்து கொண்டு செல்லும் போலும்!