Home Blog Page 6364

கண் பேசும் வார்த்தை புரிகிறதே!

maruthi art - 2026

கண்கள் – உள்ளத்தை வெளிப்படுத்தும் கண்ணாடி. 
அது அழகிய கவிதை!
கண்கள் நேருக்கு நேர் சந்தித்துப் பேசும்போது தெரியும்- உள்ளமும் உணர்வும்!
ஆணோ, பெண்ணோ… ஒருவர் மனதை எடைபோட அந்தக் கண்களே உதவுகின்றன! அதுவே பேசும் உண்மையையும் பொய்யையும் பிரித்துக் காட்டிக் கொடுத்துவிடும்!
எனக்கும்கூட கண்களைப் பார்த்துப் பேசுவதே மிகவும் பிடிக்கும். சிலர் கண் கூர்மைக்கு அஞ்சி பார்வையை அங்கே இங்கே முகம் திருப்பிப் பேசுவர். அப்போது தெரிந்துவிடும்…!
சரி விஷயத்துக்கு வருகிறேன்.
எனக்கு மிகவும் பிடித்த ஓவியர்கள் இங்கே பலர் உண்டு. ஒவ்வொருவரும் ஒரு தனிச்சிறப்பு வாய்ந்தவர்கள். அந்தப் பட்டியலில் எனக்குப் பிடித்த பிரதான இடத்தைப் பிடித்தவர்களில் ஒருவர் ஓவியர் மாருதி! அவருடைய ஓவியங்கள் மாதஇதழ், நாவல்களின் அட்டைகளை அலங்கரித்ததுண்டு.
சிறுவயதில் குற்றால முனிவர் ரசிகமணி டி.கே.சி.யை உணர்வுப் பூர்வமாகப் படித்ததாலோ என்னவோ… கவிதையோ, படமோ, ஓவியமோ.. தெய்வச் சிலையோ… பெண்ணின் அழகு முகமோ… எனக்குள்ளும் ரசிகத் தன்மை புகுந்து விடும். அலங்காரத்தை ரசிப்பேன். அழகுக் கவிதை புனைவேன். பளிச்சிடும் தோடு, அசையும் குண்டலம், ஆடும் ஜிமிக்கி, பளீரிடும் மூக்குத்தி, பார்த்துச் சிரிக்கும் புல்லாக்கு… அட இதெல்லாம் சூடிய முகத்துக்கு ஏற்ற அழகை வெளிப்படுத்துகிறதா என்று தோன்றும். சில ஓவியர்கள் திருத்தமாக இவற்றை வெளிப்படுத்தும்போது… என்ன ஒரு வசீகரம்! அழியாத அழகாக ஓவியம் என்னமாய் மிளிரும்!?
அப்படி ரசிக்கத்தக்க அழகுப் பெண் முகத்தை கண்களிலேயே காட்சிப் படுத்திவிடுவார் மாருதி. பல நேரங்களில் நடிகை மீனாவின் முகத்தை அது நினைவூட்டும்.
மாருதியிடம் படம் வரைந்து வாங்கச் சென்றிருந்த ஒரு தருணத்தில் அவர் கேட்டார்… ஏன் ஸ்ரீராம்… இன்னும் கல்யாணம் செஞ்சுக்கலே?
நான் சொன்னேன்… நீங்க படம் வரைவீங்களே… ஒரு அழகான முகம்..! எத்தனை படம் வரைந்தாலும், அந்த அழகும் வசீகரமும் மட்டும் மாறவே மாறாதே! அதுபோல்… ஒரு முகத்தை இதுவரை நான் பார்க்கவில்லை! பார்த்தால் உடனே செய்துகொள்கிறேன்..!
இந்த பதிலில் இரண்டு வெளிப்படும். ஒன்று என் உளக்கிடக்கை. இரண்டு அவருக்கான பாராட்டு!
அவர் முறுவலிப்பார். ம்… நல்ல அழகுக் கலைஞன். ரசனைக் கலைஞன்.
இந்தப் படமும் அவரிடம் கேட்டு வரைந்து வாங்கியதுதான்! சிலம்புக் காட்சிக்கு அவர் வரைந்த ஓவியம்.
இதிலும் கண்கள் சொல்லும் கவிதையை நான் ஒவ்வொரு கணமும் ரசித்து வருகிறேன். என்ன ஒரு இறுமாப்பு!? கனிவும் காதலும் ஒருங்கே காட்டும் தூரிகையின் நளினம்! பெண்ணுக்கு புருவம் நேராக இருக்கக் கூடாதாம்! வில் போன்று வளைந்த புருவம் – அழகின் வெளிப்பாடு. கருவிழிக்குக் கவிதை உயிர் கொடுக்கும் கருவே இந்தப் புருவம்தானே!
கண்களை அகல விரித்து ஆச்சரியத்தால் அழகை விழுங்குகிறேன்! அது உள்ளத்தின் உண்மையை எனக்கு உணர்த்துகிறது!
கண்களைத் திருப்பிக் கொண்டோ, சுவரைப் பார்த்துக் கொண்டோ, நாம் பேசும்போது வேறு எங்கோ வெறித்துக் கொண்டோ பேசுபவரிடம் நான் பேச்சைத் தொடர்வதில்லை! அவர்கள் உள்ளத்தில் இருந்து உண்மை வெளிவருவதில்லை என்பதால்! உண்மை இல்லாத ஒன்றை எதற்காகக் கேட்டுக் கொண்டு நேரத்தை வீணாக்க வேண்டும்?! அட… இப்போதுதான் புரிகிறது… கிறிஸ்துவ மதப் பிரசாரகர்கள் ஏன் கண்களை மூடிக்கொண்டு எல்லாவற்றையும் அவிழ்த்து விடுகிறார்கள் என்று! கண்களைத் திறந்து கொண்டு பேசினால் கேட்பவர் கண் திறந்துவிடுவாரே!

பாரதிக்கு அஞ்சலி!

barathi vivekananda - 2026

பாரதிக்கு அடியேனின் அஞ்சலி!
அடியேன் இல்லத்தே மேஜைக் கணினிக்கு சற்று மேலே மாட்டப்பட்டிருக்கும் ஆதர்ஷ புருஷர்களின் படங்கள் இவை. ஒருவர் மகாகவி- பாரதி! மற்றொருவர் வீரத்துறவி விவேகானந்தர். இன்று மகாகவி நினைவாக, அவருக்கு அடியேன் இல்லத்தே ஒரு சிறு நினைவு அஞ்சலி நடத்தினேன். எல்லாம் தனியாகத்தான்!
இந்தப் படத்துக்கு ஒரு சிறப்பு உண்டு. பாரதியின் இந்தப் படத்தை அடியேனுக்கு அளித்தவர், மஞ்சரியில் அடியேனுக்கு முன்னர் ஆசிரியராக இருந்த லெமன் என்கிற லட்சுமணன் ஐயா! பாரதியின் இந்தப் படம் ஆர்யா வரைந்தது என்பது அவர் அடியேனுக்குச் சொன்ன தகவல்.
இன்னொரு சிறப்பு: சென்ற மாதம் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சென்றிருந்தபோது, சந்நிதியில் அடியேனுக்கு அளித்த சுவாமியின் வெட்டி வேர் மாலையினை இல்லத்தில் பத்திரமாக வைத்திருந்தேன். பாரதியின் படத்துக்கு இன்று சூட்டி, வெட்டி வேர் மணம் அறையில் கமகமக்க பாரதியின் தமிழ் அறையில் எதிரொலிக்க அவரின் பாடல்களைப் பாடி, தனியொருவனாக அந்த மகாகவிக்கு அடியேனான் இயன்ற அஞ்சலியைச் செலுத்தினேன்.
வாழ்க தேசியக் கவியின் புகழ்!

பாரதி… யாராம்?!

நான் மயிலாப்பூரில் இருந்த நேரம்… 
வீட்டுக்கு வந்த விருந்தினர் குழாமில் ஒரு பெண்மணி… சற்றே வித்தியாசமாகப் பேசியபடி தொணதொணவென்று இருந்தார். திடீரென்று சுவரில் மேலே பார்த்தவர், பாரதியின் இந்தப் படத்தைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டார். பாரதியின் இந்தப் படத்துக்கு ஒரு சந்தன மாலையை அணிவித்திருந்தேன். மாலையின் நுனியில் இருந்த குண்டலங்கள் மணிகள் காற்றில் அசைந்து கவனத்தை ஈர்த்துக் கொண்டிருக்கும்.
திடீரென அவர் கேட்ட கேள்வியால் நான் நிலைகுலைந்து போனேன். முதலில் இது யார் படம் என்றார் அவர்… அதற்கு எம் அம்மை ’இது பாரதியார் படம்’ என்று பதிலளித்தார்.
உடனே அவர், ‘பாரதியார் உங்க சொந்தக்காரரா?” என்று கேட்டார். என் அம்மைக்கு பதில் ஏதும் சொல்லத் தோன்றவில்லை. உதட்டளவில் சிரித்தபடி என்னைப் பார்த்தார். விட்டுத் தள்ளுங்கள் என்று நான் ஜாடை காட்டினேன்… பேச்சு வேறு புறம் திரும்பியது…
இப்போது எனக்குள் ஒரு எண்ணம் எழுகிறது. நேரு மாமாவாம். காந்தி தாத்தாவாம். இது தேசிய அளவில். இங்கும் ஒரு சிலர் தந்தை, அண்ணா என்றெல்லாம் ஒரு சிலரை சொந்தம் கொண்டாடும்போது, பாரதியை மட்டும் நாம் ஏன் சொந்தம் கொண்டாடாது போனோம் என்று!
சின்னஞ்சிறு வயதில் மரித்து விட்ட பாரதியை சமூகம் எந்த சொந்தத்தில் பார்க்க விரும்பும்?!

அசுரனும் தேவனும் நமக்குள்ளே!

barathi vivekananda - 2026

12 வருடம் முன் நான் எதிர்கொண்ட ஒரு நிகழ்ச்சி! அது 2000 ஆவது வருடம் ஜனவரி மாத 12ம் நாள். சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாள் அன்று. மயிலாப்பூர் ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் அந்த நாளை முன்னிட்டு 40% தள்ளுபடி விலையில் புத்தகங்கள் விற்பனை செய்தார்கள். எனக்கும் புத்தகங்கள் என்றால் அப்போதும் கொள்ளைப் பிரியம்தான்! புத்தகங்கள் வாங்கச் சென்றேன். முதல் முறையாக என்பதால் கையில் 50 ரூபாய் மட்டும் எடுத்துக் கொண்டு சிறு சிறு புத்தகங்களை கொஞ்சம் வாங்கினேன்… 
தைத்ரீயமந்த்ரகோஷம், தைத்ரீய உபநிஷதம் இத்யாதிகளை வாங்கிக் கொண்டு, மனத்தில் கணக்குப் போட்டுப் பார்த்ததில் ரூ.46 சுமாருக்கு வந்தது. சரி போதும் என்று முடிவு செய்து, புத்தகங்களோடு வரிசையில் நின்று பில் போட்டு, கையில் வைத்திருந்த ரூ.50ஐயும் கொடுத்தேன். கூட்டம் அதிகமாக இருந்தது. பேச்சு சுவாரஸ்யத்தில் மடத்தின் அந்த பிரம்மச்சாரி சுவாமி புத்தகங்கள், பில், அதோடு ரூ.50ம் 4 ரூபாய்க்கு நாணயங்களும் மீதி கொடுத்து அவசரப் படுத்தி அனுப்பினார். எனக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. ஆனால், நெருக்குதலால் அந்த இடத்தை விட்டு நான்கைந்து அடி வைத்து புத்தகக் கவரை வாங்கி நகர்ந்தேன். ஓ… அந்த பிரம்மச்சாரி சுவாமி நான் நூறு ரூபாய் நோட்டைக் கொடுத்ததாக நினைத்துக் கொண்டு, ஐம்பது ரூபாயையும் சேர்த்துத் தந்தார் போலும்! எனக்கு நடந்த தவறு புரிந்தது.
என் மனசாட்சிக்குத் தெரிந்து நான் கையில் ரூ.50தானே வைத்திருந்தேன். எனவே நாம் நூறு ரூபாய் நோட்டைக் கொடுக்க வாய்ப்பில்லை. பரவாயில்லை புத்தகம் ஓசிக்குக் கிடைத்து மேலே நமக்கு நாலைந்து ரூபாய் சில்லறையும் கிடைத்திருக்கிறதே! இப்போது என் மூளையின் இரண்டு பக்க பல்புகளும் எரிந்து அணைந்து எரிந்து அணைந்து ஏதோ இம்சைப் படுத்தின.
தர்ம சாஸ்திரம் மண்டையில் ஏறிய ஒரு இளைஞனாக நெல்லை மண்ணில் இருந்தவரை நாம் இப்படி யோசித்ததே இல்லையே! சென்னை மண்ணை மிதித்த சில நாட்களில் இப்படியும் நம் மனம் எண்ணுமா? என் மனம் அடைந்த அவஸ்தையை வார்த்தைகளில் சொல்ல முடியாது! சிறு வயது முதல் சுவாமிஜியின் எழுத்துகளைப் படித்த நான், இப்படியும் நடக்கலாமோ?! மனம் திரும்பிய அதே நேரம் என் கால்களும் பின்னோக்கி நகர்ந்தன. மீண்டும் வரிசையை ஒதுக்கித் தள்ளி, அதே பிரம்மசாரி சுவாமியிடம் போய், சுவாமி நான் கையில் ரூ.50தான் வைத்திருந்தேன். அவசரத்தில் நீங்கள் கொடுத்த சில்லறையைக் கவனிக்கவில்லை… என்று சொல்லிக் கொண்டிருந்தபோது, அவர் ஓ நான் ஏதாவது குறைவாக மீதம் பணத்தைக் கொடுத்துவிட்டேனா என்றார். இல்லை சுவாமி… அடியேன் கொடுத்த பணமே மீண்டும் அடியேனுக்கு வந்துவிட்டது. நான் தான் தவறுதலாக கூடுதல் பணம் வாங்கிக்கொண்டுவிட்டேன் என்று கூறி ரூ.50 ஐ திருப்பிக் கொடுத்து திரும்பினேன்.
இப்போது நான் படித்துக் கடைப்பிடித்த தர்மம் என் மனதை லேசாக்கி உற்சாகப் படுத்தியது. ஆவலுடன் புத்தகத்தைப் புரட்டினேன்… தைத்ரீய உபநிஷத்தில் கண்ணுக்குத் தெரிந்தது. சீக்‌ஷா வ்யாக்யாஸ்யாம… உதட்டளவில் உச்சரித்தேன். கடைசிப் பக்கம் திருப்பினேன். சந்நோ மித்ர சம்வருண: சந்நோ பவத் வர்யமா… வருணன் நண்பனாகட்டும், அர்யமான், இந்திரன், பிருஹஸ்பதி எல்லோரும் நலம் செய்பவர்களாக ஆகட்டும்.. மனதில் யோசித்துக் கொண்டே வந்தேன். புத்தகத்தினூடே புக்மார்க்-வைத்துச் செருகுவதற்காக இலவசமாகத் தந்த சுவாமிஜியின் நின்ற படம் பக்கங்களினூடே தெரிந்தது. என் ஆதர்ஷ புருஷரான சுவாமிஜியின் கண்கள் தீர்க்கமாக என்னை நோக்குவது போல் தெரிந்தது. இப்போது உற்சாக நடை போட்டேன்!

ஆதீனமாகியும் பழைய முரசொலியை மறக்காத அருணகிரியார்!

madurai atheenam - 2026

தமிழ்நாட்டுப் பெண்களும், ஒட்டுமொத்த இந்தியப் பெண்களும் பர்தா அணிய வேண்டும்: மதுரை ஆதினம்!

செய்தி:

இஸ்லாமியப் பெண்கள் எப்படி பர்தா அணிகிறார்களோ அதேபோல தமிழ்நாட்டுப் பெண்களும், ஒட்டுமொத்த இந்தியப் பெண்களும் பர்தா அணிய வேண்டும். இதன் மூலம் ஆண்களின் வக்கிரப் பார்வையிலிருந்து பெண்கள் தப்ப முடியும், பாலியல் குற்றங்களையும் குறைக்க முடியும் என்று மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், இஸ்லாயமிப் பெண்கள் பர்தா அணிவது வழக்கம். கணவரைத் தவிர வேறு யாரும் தங்களது உடலைக் கண்டு விடக் கூடாது என்பதற்காக இந்தக்கட்டுப்பாட்டை அவர்கள் கையாளுகின்றனர்.
இதேபோல தமிழ்நாட்டுப் பெண்களும், இந்தியப் பெண்களும் கூட பர்தா அணிய வேண்டியது அவசியம். இதன் மூலம் ஆண்களின் வக்கிரப் பார்வையிலிருந்து பெண்கள் தப்ப முடியும். மேலும், பாலியல் குற்றங்களையும் குறைக்க முடியும் என்றார் ஆதீனம்.
——————-
என் கருத்து:

பெண்கள் எப்படி உடை உடுத்தினால் என்ன? அவர்கள் குறைந்த அளவு மானத்தை மறைக்கும் அளவுதான் உடையே போட்டுக்கொண்டு வெளியில் உலவ சுதந்திரம் இருக்கட்டுமே! கட்டுப்பாடு ஆணுக்குத்தான் இருக்க வேண்டும்! ஆன்மிகம் பேசும் மனிதர், உடலை துச்சமாக மதிக்க வேண்டும். உயிர் இருக்கும் வரைதான் உடலுக்கு மதிப்பு. உடலுக்கும் காயம், நோய், கிருமிகள் தாக்காதவரைதான் மதிப்பு! ஆதிசங்கரர் பஜகோவிந்தத்தில் பாடியது நினைவுக்கு வருகிறது. ரத்தமும் சீழும் சதையும் கொண்ட உடல்மீது இவ்வளவு பற்று வைப்பதா? என்று! நல்ல குழந்தைகளைப் பெற்று அடுத்த சந்ததியை உலகத்துக்குக் கொடுத்து, உலகம் ஒழுங்காக இயங்க இயற்கைக்கு ஒத்துழைப்பதே ஆண்-பெண்ணின் கடமை! காமத்தால் கண்டதையும் கண்டு மேய்வது- மனிதனுக்கு விதிக்கப்பட்ட தர்மம் அல்ல!
உண்மையில் சொல்லப்போனால், நம் மனத்தையும், நம் கட்டுப்பாட்டையும் சோதிக்கும் களம் இந்த உலகம். வீட்டில் பெண்குழந்தைகள் வளர்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் அவர்களின் வளர்ச்சியைக் கண்டு வருகிறோம். ஒரு சகோதரனாக, தகப்பனாக ஆண் தன் வீட்டுப் பெண்களின் வளர்ச்சியைக் காண்கிறான். அவர்கள் விரும்பிய உடைகளை, விரும்பிய உணவுகளை என்று வாங்கிக் கொடுக்கிறான் அல்லது அந்த சுதந்திரத்துக்கு சம்மதிக்கிறான். வீட்டின் அதே பார்வையை வெளியிலும் பார்க்க வேண்டும் என்பது என் எண்ணம். அந்தப் பக்குவம் வருவதற்கு ஆண்களுக்கு பயிற்றுவிக்க வேண்டும். அதுதான் ஆன்மிகக் கடமையாக இருக்க வேண்டும். தவறுகளை ஆண் செய்துவிட்டு, பெண் மீது பழி போடுவது பாவம்; பாவம்! நீ உடை உடுத்துவது அப்படி, அதனால் தூண்டப் பெற்றேன் என்றால் தவறு செய்பவன் மனோபாவம்தான் தண்டிக்கப்பட வேண்டியதே தவிர, தூண்டுவதாகக் கூறப் படுபவர் இல்லை! கண்முன் பணம் நிறைந்து கிடக்கிறது. கையாடல் செய்யும் நபர்தான் தண்டிக்கப் படுபவரே தவிர, தவறு சூழ்நிலையில் அல்ல! இதை முதலில் ஆதினத்துக்கு உணர்த்த வேண்டும். நம் நாட்டில் இத்தகைய மனோநிலை ஆதி காலத்தில் இருந்து இல்லவே இல்லை! அதெல்லாம் பர்தா போட்டுக் கொண்டு பெண்களை கட்டுப் படுத்தி, அவர்களைக் குற்றவாளிகளுக்கும் ஆணாதிக்க நாடுகளில்தான்! நம் நாட்டில் பெண்ணுக்குப் பாதுகாப்பு ஆண் – ஒரு சகோதரனாக, ஒரு தகப்பனாக, கணவனாக, மகனாக, உறவினனாக! இந்த மனநிலையைத் தகர்த்தவை வெளிநாட்டு ஆணாதிக்க சமுதாய சிந்தனைகளே! மதுரை ஆதினத்துக்கு இந்த சிந்தனை வந்தது வருந்தத் தக்கது!

யலேய்… எதுக்குலே இந்த ஆர்ப்பாட்டம்லாம்?!

2013NewYear - 2026

ஹலோ… வெங்கட்! 
சொல்லுங்க சார்…
வெங்கட் இரண்டாவது முறையா அதே உதவி…
என்ன சார்… சர்க்கரைதானே! 
ஆமாம்.
ஓகே சார் வரும்போது வாங்கிட்டு வந்துடறேன்!
– மணி 10. ஆவடியில் பஸ் ஏறி, அம்பத்தூர் தொ.பே. வந்து, அலுவலகத்துக்குள் நுழைந்த வெங்கட்.டின் கையில் 1 கிலோ சர்க்கரை பொட்டலம்!
அதற்கு உண்டான ரூ.36ஐக் கொடுத்துவிட்டு, ஒரு மன்னிப்பு கேட்டுக் கொண்டேன். இரவு அலுவலக வேலை முடிந்து வீட்டுக்குப் போகும்போது எல்லா கடைகளும் அடைத்து விடுகிறார்கள். ஊரே நிசப்தமாக உறங்குகிறது. நான் எங்கே போய் அப்போது சர்க்கரையை வாங்க முடியும். காலை எழுந்தால், காபி பொடியை பில்டரில் போட்டு, டிகாக்‌ஷன் இறக்கி, காபி குடித்தால்தான் அடுத்த வேலை ஓடுகிறது. கூடவே 2 தமிழ், 2 ஆங்கிலம் என நாலைந்து செய்தித்தாள்களையும் வைத்துக் கொண்டு செய்திகளை மேய வேண்டியுள்ளது. இது மாற்ற முடியாத பழக்கமாகிவிட்டது.
இரண்டு மூன்று நாள்களாக சர்க்கரை டப்பா காலியாகி பல்லிளித்தது. சட்டையைப் போட்டுக்கொண்டு, வீட்டைப் பூட்டி, செல்போனை கையில் எடுத்து, ஒரு துணிப் பையையும் இடுக்கியபடி, தரைத்தளமாக இருந்தாலும் கீழே ஓரிரண்டு படிகள் இறங்கி தெருவில் இறங்கி, தெரு முக்கில் திருப்பத்தில் இருக்கும் கடைக்குப் போய், சர்க்கரை, தோசை மாவு, சேமியா, ரவை, ஏதேனும் காய்கறி என இந்த இத்யாதிகளை வாங்குவதற்குள்… அப்பாடா என்றாகிவிடும். கூட்டம் இருந்தால் ஒவ்வொருவருக்காக பொருளை எடுத்துக் கொடுத்து நம் முறை வருவதற்குள்… கால் மணியில் இருந்து அரை மணி கடந்துவிடும். இதற்கு சோம்பல்பட்டே… காலை நேரம் கடைக்குப் போக பெரும் சோம்பல்.!
வேறு வழி..! அடடே! கல்கண்டு இருக்கிறதே! அதைப் போட்டு காப்பி போட்டுக் குடித்து காலம் போக்கியாச்சு… சரி! காலை நேரம் அலுவலகம் போகும் போதாவது கடையில் வாங்கிக் கொண்டு போகணும்… நினைத்துக் கொண்டு வண்டியைக் கிளப்பினால்… அது நேரே அலுவலகத்தில்தான் போய் நிற்கிறது. ஹெல்மெட் கழற்ற சோம்பல்! சரி… மாலை நேரம் திரும்பும் போது வாங்கிக் கொள்ளலாம் என்றால்… அலுவலகத்தில் நேரம் போவது தெரியாமல்… பதினொன்றும் பன்னிரண்டும் ஆகிவிடுகிறது!
இந்த நிலையில்தான் இரவுப் பணிக்கு வரும் சக பணியாள நண்பர் வெங்கட்டிடம் வாங்கி வரச் சொல்லி, அவரை தொந்தரவு செய்கிறோமே என்ற குற்ற உணர்வு…
சர்க்கரையும் எடுத்துக் கொண்டு, விடைபெற்று மணியைப் பார்த்தால் 11.30. அப்படியே வண்டியை எடுத்துக் கொண்டு தெருவில் வந்தால்… மக்கள் நடமாட்டம்! ஆச்சரியத்தில் யோசித்தால்.. அட ஆங்கிலப் புத்தாண்டு! அதற்குத்தானா இந்த ஆர்ப்பாட்டம் எல்லாம். தெருவெங்கும் வெடியோசை. பாடி சாலையில் கடைகளில் இன்னும் நிறுத்தப் படாத மின்சார வெளிச்சம்! அப்படியே வில்லிவாக்கம் வந்தால்… சூப்பர் மார்க்கெட் கடைகளும் ஓரிரண்டு திறந்து வைத்து வியாபாரம் ஜரூர்… எல்லாம் புத்தாண்டு கொண்டாட்டமாம்!
தீபாவளி என்றால் 10 மணிக்கு மேல் வெடிக்கக் கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கும் நீதித் துறையும், ஜட்ஜ் பெருமக்களும், செயல்படுத்தும் காவல்துறையும் ஆங்கிலப் புத்தாண்டு என்று அலறிக் கொண்டு தெருவெல்லாம் டாஸ்மாக் போதையில் தள்ளாடி இரு சக்கர வாகனங்களில் மூவராய் பயணிக்கும் இளசுகளைக் கண்டும் காணாமல் விட்டுவிட்டு, இந்த ஒரு நாளைக்கு மட்டும் கறுப்புத் துணியை கண்களில் கட்டிக் கொண்டு மூடிவிடுவது ஏன்?
எல்லாம் இந்த மேல்நாட்டுக் கல்வி செய்த மாயம்தானே!? இந்த மாயம் நடக்கும் என்று திட்டமிட்டுத்தானே இருநூறு வருடங்களுக்கு முன்னர் மெக்காலே சொல்லிச் சென்றான்!

கண் பேசும் வார்த்தை புரிகிறதே!

maruthi art - 2026

கண்கள் – உள்ளத்தை வெளிப்படுத்தும் கண்ணாடி. 
அது அழகிய கவிதை!
கண்கள் நேருக்கு நேர் சந்தித்துப் பேசும்போது தெரியும்- உள்ளமும் உணர்வும்!
ஆணோ, பெண்ணோ… ஒருவர் மனதை எடைபோட அந்தக் கண்களே உதவுகின்றன! அதுவே பேசும் உண்மையையும் பொய்யையும் பிரித்துக் காட்டிக் கொடுத்துவிடும்!
எனக்கும்கூட கண்களைப் பார்த்துப் பேசுவதே மிகவும் பிடிக்கும். சிலர் கண் கூர்மைக்கு அஞ்சி பார்வையை அங்கே இங்கே முகம் திருப்பிப் பேசுவர். அப்போது தெரிந்துவிடும்…!
சரி விஷயத்துக்கு வருகிறேன்.
எனக்கு மிகவும் பிடித்த ஓவியர்கள் இங்கே பலர் உண்டு. ஒவ்வொருவரும் ஒரு தனிச்சிறப்பு வாய்ந்தவர்கள். அந்தப் பட்டியலில் எனக்குப் பிடித்த பிரதான இடத்தைப் பிடித்தவர்களில் ஒருவர் ஓவியர் மாருதி! அவருடைய ஓவியங்கள் மாதஇதழ், நாவல்களின் அட்டைகளை அலங்கரித்ததுண்டு.
சிறுவயதில் குற்றால முனிவர் ரசிகமணி டி.கே.சி.யை உணர்வுப் பூர்வமாகப் படித்ததாலோ என்னவோ… கவிதையோ, படமோ, ஓவியமோ.. தெய்வச் சிலையோ… பெண்ணின் அழகு முகமோ… எனக்குள்ளும் ரசிகத் தன்மை புகுந்து விடும். அலங்காரத்தை ரசிப்பேன். அழகுக் கவிதை புனைவேன். பளிச்சிடும் தோடு, அசையும் குண்டலம், ஆடும் ஜிமிக்கி, பளீரிடும் மூக்குத்தி, பார்த்துச் சிரிக்கும் புல்லாக்கு… அட இதெல்லாம் சூடிய முகத்துக்கு ஏற்ற அழகை வெளிப்படுத்துகிறதா என்று தோன்றும். சில ஓவியர்கள் திருத்தமாக இவற்றை வெளிப்படுத்தும்போது… என்ன ஒரு வசீகரம்! அழியாத அழகாக ஓவியம் என்னமாய் மிளிரும்!?
அப்படி ரசிக்கத்தக்க அழகுப் பெண் முகத்தை கண்களிலேயே காட்சிப் படுத்திவிடுவார் மாருதி. பல நேரங்களில் நடிகை மீனாவின் முகத்தை அது நினைவூட்டும்.
மாருதியிடம் படம் வரைந்து வாங்கச் சென்றிருந்த ஒரு தருணத்தில் அவர் கேட்டார்… ஏன் ஸ்ரீராம்… இன்னும் கல்யாணம் செஞ்சுக்கலே?
நான் சொன்னேன்… நீங்க படம் வரைவீங்களே… ஒரு அழகான முகம்..! எத்தனை படம் வரைந்தாலும், அந்த அழகும் வசீகரமும் மட்டும் மாறவே மாறாதே! அதுபோல்… ஒரு முகத்தை இதுவரை நான் பார்க்கவில்லை! பார்த்தால் உடனே செய்துகொள்கிறேன்..!
இந்த பதிலில் இரண்டு வெளிப்படும். ஒன்று என் உளக்கிடக்கை. இரண்டு அவருக்கான பாராட்டு!
அவர் முறுவலிப்பார். ம்… நல்ல அழகுக் கலைஞன். ரசனைக் கலைஞன்.
இந்தப் படமும் அவரிடம் கேட்டு வரைந்து வாங்கியதுதான்! சிலம்புக் காட்சிக்கு அவர் வரைந்த ஓவியம்.
இதிலும் கண்கள் சொல்லும் கவிதையை நான் ஒவ்வொரு கணமும் ரசித்து வருகிறேன். என்ன ஒரு இறுமாப்பு!? கனிவும் காதலும் ஒருங்கே காட்டும் தூரிகையின் நளினம்! பெண்ணுக்கு புருவம் நேராக இருக்கக் கூடாதாம்! வில் போன்று வளைந்த புருவம் – அழகின் வெளிப்பாடு. கருவிழிக்குக் கவிதை உயிர் கொடுக்கும் கருவே இந்தப் புருவம்தானே!
கண்களை அகல விரித்து ஆச்சரியத்தால் அழகை விழுங்குகிறேன்! அது உள்ளத்தின் உண்மையை எனக்கு உணர்த்துகிறது!
கண்களைத் திருப்பிக் கொண்டோ, சுவரைப் பார்த்துக் கொண்டோ, நாம் பேசும்போது வேறு எங்கோ வெறித்துக் கொண்டோ பேசுபவரிடம் நான் பேச்சைத் தொடர்வதில்லை! அவர்கள் உள்ளத்தில் இருந்து உண்மை வெளிவருவதில்லை என்பதால்! உண்மை இல்லாத ஒன்றை எதற்காகக் கேட்டுக் கொண்டு நேரத்தை வீணாக்க வேண்டும்?! அட… இப்போதுதான் புரிகிறது… கிறிஸ்துவ மதப் பிரசாரகர்கள் ஏன் கண்களை மூடிக்கொண்டு எல்லாவற்றையும் அவிழ்த்து விடுகிறார்கள் என்று! கண்களைத் திறந்து கொண்டு பேசினால் கேட்பவர் கண் திறந்துவிடுவாரே!

நீ நீயாக இருப்பதால்!

Dakshinamurthy - 2026

தைரியமாகச் செல் என் சகோதரி! 
உனக்கு என் தோத்திரம்!

மிஷனரிக் கல்வியின் மூளைச் சலவைக்கு மயங்காமல்
இன்றும் நீ நீயாக இருக்கிறாயல்லவா…
உனக்கு என் தோத்திரம்!

எம்என்சி கம்பெனிகள் உன் ஒழுக்க வாழ்வுக்கு எமனாக வந்தபோதும் 
நீ நீயாக இருக்கிறாயல்லவா…
உனக்கு என் தோத்திரம்!

கல்லறைக் காதல் வசனம் சொல்லி மயக்கினாலும் 
சில்லறைப் பசங்களை சீண்டாமல் இருக்கிறாயல்லவா…
உனக்கு என் தோத்திரம்!

ஆனாலும் சகோதரி..,

என் சமூகம் உனக்கு முன்பாகச் செல்லும்!
நீ ஏமாறுவதைக் கண்டு 
கையாலாகாத்தனத்தால் அழுவதற்காக அல்ல!
உன்னை ஏமாற்றுபவனைக்
கல்லெறிந்து விரட்டுவதற்காக!

அருணகிரிநாதரின் முகநூல்

arumugam - 2026

நமது நண்பர் திரு. மறவன்புலவு கே.சச்சிதானந்தன் அவர்கள் ஒரு மின்னஞ்சலை அனுப்பியிருந்தார். அவர் அனுப்பிய விஷயம் மிகவும் சுவாரசியமாக இருந்ததால், அதனை மீண்டும் எடுத்து இங்கே கையாள்கிறேன். அதென்ன முகநூல்… நாம் ஏதோ புதிது புதிதாக சொல்லிக் கொண்டு வருகிறோமே! நம் முகநூல் எல்லாம் தூசுதான்… இந்த அருணகிரிநாதர் கூறும் முகநூல் தரிசனத்தைக் கண்டபின்!
மறவன்புலவு கே.சச்சிதானந்தம் ஐயாவின் மின்னஞ்சல் விவரம் இது…!

அருணகிரிநாதரின் முகநூல்:

Face book created by Arunagirinathar as retold in English by my good friend Prof. S. A. Sankaranaynan who kept the line of succession of Prof. Hensman of Jaffna at Arts College, Kumbakonam,
Prof. Hensman of Jaffna taught English to the famed Silver toungued Srinivasa Sasthiryar.
Prof. Hensman of Jaffna was the first in the island to organise the freedom movement for Tamils in 1905.
Please refer to GG Ponnambalam’s marathon speech at the State Council in 1939.

A face flies the peacock and plays;
ஏறுமயி லேறிவிளை யாடுமுக மொன்றே
Another lisps the WORD with God;
ஈசருடன் ஞானமொழி பேசுமுக மொன்றே
A third undoes all our misdeeds;
கூறுமடி யார்கள்வினை தீர்க்குமுக மொன்றே
One spears the hill that blocks the Way;
குன்றுருவ வேல்வாங்கி நின்றமுக மொன்றே
One slays the many-disguised Soora;
மாறுபடு சூரரை வதைத்தமுக மொன்றே
One weds Valli in bridal joy;
வள்ளியை மணம்புணர வந்தமுக மொன்றே
Six-in-one or six are you, grace me with your Face book!
ஆறுமுக மானபொருள் நீயருளல் வேண்டும்
O! LORD! Abiding on the sun-stone hill of yore!
மாறுபடு சூரரை வதைத்தமுக மொன்றே.

– மறவன்புலவு கே.சச்சிதானந்தன்