விபத்திலிருந்து தப்பிய விமானம் ! சென்னையில் பரபரப்பு

Published:

air india2 - 2026
file pic

நேற்று அதிகாலையில் பெங்களூரில் இருந்து சென்னைக்கு அந்த இண்டிகோ விமானம் புறப்பட்டுள்ளது. மதியம் அந்த விமானம் சரியாக சென்னையை அடைந்தது.

சென்னை கிண்டி வந்த விமானம் தரை இறங்கும் முன் பிரச்சனை ஒன்று ஏற்பட்டுள்ளது. இதனால் 20 நிமிடம் தாமதமாக அந்த விமானம் தரையிறக்கப்பட்டது,

air india 2 - 2026
file pic

முதலில் சென்னை விமான நிலையத்தில் உள்ள இரண்டாவது ரன் வேயில் விமானம் இறங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதையடுத்து விமானமும் ரன் வேயை நோக்கி வந்துள்ளது. ஆனால் ரன் வே அருகில் வந்து 500 மீட்டர் உயரும் இருக்கும் போது மீண்டும் விமானம் மேலே சென்றது.

அந்த இண்டிகோ விமானம் மீண்டும் டேக் ஆப் செய்து, வானத்தை நோக்கி சென்றது. அதன்பின் 20 நிமிடம் வட்டம் அடித்துவிட்டு அந்த விமானம், சென்னை விமான நிலையத்தை நோக்கி திரும்பியது. பின் மீண்டும் சரியாக இரண்டாவது ரன் வேயில் தரையிறக்கப்பட்டது.

air india 1 1 - 2026

முதல்முறை அந்த விமானம் தரையிறக்கும் போது, அது சரியாக ரன் வேயை நோக்கி வரவில்லை. ரன் வே சாலையை விட்டு விலகி சென்றது. விமானி சரியாக கணிக்காமல் விமானத்தை இயக்கியதால் இப்படி நடந்து இருக்கிறது. இதனால்தான் விமானம் மீண்டும் மேலே சென்றுவிட்டு திரும்பி வந்துள்ளது.

ALSO READ:  ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் - கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

இந்த வேகமான செயல்பட்டால் நேற்று மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவத்தில் யார் மீது தவறு என்று விமான நிலைய அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவத்தால் யாருக்கும் எந்த விதமான அசம்பாவிதமும் நிகழவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related articles

Recent articles

spot_img