இத்தாலி நேஷனல் காங்கிரஸ் ஆகிவிட்டதா..?! என்ன பரிதாபம்?!

அடடே... அப்படியா? இந்தியா சற்றுமுன் புகார் பெட்டி லைஃப் ஸ்டைல்
pvsindu tweet congress - 2026

இந்தியன் நேஷனல் காங்கிரஸ் என்ற கட்சி, இப்போது இத்தாலி நேஷனல் காங்கிரஸ் ஆகிவிட்டதா என்ற கேள்விகள் சமூக வலைத்தளங்களில் கேட்கப் பட்டு வருகின்றன.

மோடியை எதிர்ப்பதாகவும், பாஜக.,வின் கொள்கைகளை எதிர்ப்பதாகவும், அரசின் முடிவுகளை எதிர்ப்பதாகவும் கூறிக் கொண்டு, இந்திய நாட்டின் பொது நலனுக்கு எதிரான கொள்கையைக் கொண்டிருக்கிறது காங்கிரஸ் கட்சி என்பது இந்த நாட்டின் மக்கள் நன்குணர்ந்து கொண்ட உண்மை. அதனால் தான் காங்கிரஸ் பல இடங்களில் இந்திய நாட்டின் அபிமானி களால் புறக்கணிக்கப் பட்டு வருகிறது.

இன்று அது தனது நாடு இந்தியா அல்ல என்பதைப் போல் உணர்த்தி யுள்ளது ஒரு டிவிட்டர் பதிவில்!

italiongres - 2026

இந்தியாவைச் சேர்ந்த வீராங்கணை பிவி.சிந்து, இன்று உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார். இதற்கு அரசியல் கட்சியினர், பொதுமக்கள், விளையாடு ரசிகர்கள், அறிஞர்கள், தொழிலதிபர்கள் என பலதரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

பிவி.சிந்துவுக்கு பாராட்டு தெரிவிப்பதாக காங்கிரஸ் கட்சியும் தனது டிவிட்டர் பதிவில் தகவல் வெளியிட்டுள்ளது. அதில், முதல் இந்தியராக உலக சாம்பியன்ஷிப் வென்றுள்ள பி.வி.சிந்துவுக்கு வாழ்த்துகள். நீங்கள் உங்கள் நாட்டை பெருமைப் படுத்தியுள்ளீர்கள் என்று குறிப்பிடப் பட்டுள்ளது.

இந்த டிவிட்டர் பதிவினைக் குறிப்பிட்டு விமர்சனம் செய்யும் பலரும், நீங்கள் நம் நாட்டை பெருமைப் படுத்தியுள்ளீர்கள் என்று சொல்லக் கூடவா காங்கிரஸுக்கு மனம் இல்லை! ஒருவேளை நீங்கள் இத்தாலி தேசிய காங்கிரஸ்தானோ?! அதனால்தான் இந்தியாவை நம் நாடு என்று குறிப்பிடாமல் இருக்கிறீர்கள்!!! என்று பதிவு செய்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.