
‘தி அமெரிக்கன் பார்ட்டி’ என்பதுதான் எலான் மஸ்க் தொடங்க உத்தேசித்துள்ள புதிய கட்சியின் பெயர்! இதனை அவர் அறிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்புக்கு பெரும் உதவி செய்து தேர்தலில் வெற்றிபெறக் காரணமானவர்களில் ஒருவராக இருந்த தொழிலதிபர் எலான் மஸ்க், இப்போது டிரம்புடன் உறவு கசந்து போனதால், புதிய கட்சி தொடங்கலாமா என ஆலோசித்து வருகிறார். இது குறித்து அவர் வெளியிட்ட பதிவில்,
அமெரிக்காவில் தற்போதைய சூழலில் புதிய கட்சி தொடங்கலாமா என்று கருத்துக்கணிப்பு நடத்தினேன்; அப்போது நடுத்தர மக்கள் தங்களை பிரதிநிதித்துவப்படுத்த ஒரு புதிய அரசியல் கட்சி தேவை என்று 80 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில் எனது கட்சியின் பெயர் ‘தி அமெரிக்கன் பார்ட்டி’ என்று தற்போது அறிவிக்கிறேன்; உண்மையிலேயே அமெரிக்காவை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியாக இது இருக்கும் – என்று தெரிவித்துள்ளார்.
- அமெரிக்க அதிபர் ட்ரம்புடன் மோதல் போக்கை கையாண்ட டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் இப்போது புதிய கட்சி தொடங்கி, அமெரிக்கத் தேர்தலில் தனக்கென ஓர் இடத்தைப் பெற முயன்று வருவதாகவே கூறப்படுகிறது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கும், டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்குக்கும் அண்மைக் காலமாக மோதல் ஏற்பட்டு வருகிறது. அமெரிக்க அரசு கொண்டு வந்த வரி மற்றும் செலவு மசோதா காரணமாக டிரம்ப்புக்கும், எலான் மஸ்க்குக்கும் இடையிலான நட்புறவில் விரிசல் ஏற்பட்டது. இருவரும் ஒருவரையொருவர் குற்றம்சாட்டி, சமூக ஊடகங்கள் மூலம் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் எலான் மஸ்க், தனது எக்ஸ் வலைதளத்தில் புதிய கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தினார். அதில் அமெரிக்காவில் 80 சதவீத நடுத்தர மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு புதிய கட்சி தேவையா? என்று கேள்வி கேட்டு இருந்தார். இந்தக் கருத்துக்கணிப்புக்கு 80 சதவீத மக்கள் – அதாவது, 56.30 லட்சம் பேர் ‘ஆம்’ என்று பதில் அளித்தனர்.
இதையடுத்து எலான் மஸ்க் அமெரிக்காவில் புதிய கட்சி தொடங்கப்போவதாக அறிவித்தார். மேலும் தான் தொடங்க இருக்கும் புதிய கட்சிக்கு ‘தி அமெரிக்கன் பார்ட்டி’ என்ற பெயரையும் எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எலான் மஸ்க் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறி இருப்பதாவது:-
அமெரிக்காவில் தற்போதைய சூழலில் புதிய கட்சி தொடங்கலாமா என்று கருத்துக்கணிப்பு நடத்தினேன். அப்போது நடுத்தர மக்கள் தங்களை பிரதிநிதித்துவப்படுத்த ஒரு புதிய அரசியல் கட்சி தேவை என்று 80 சதவீதம் பேர் கருத்து தெரிவித்து இருப்பது விதி. கட்சியின் பெயரை ‘தி அமெரிக்கன் பார்ட்டி’ என்று சொல்வது நல்ல தொனியாக உள்ளது. உண்மையிலேயே அமெரிக்காவை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியாக இது இருக்கும். – என்று தெரிவித்துள்ளார்.





