
- முரு. தெய்வசிகாமணி
அக்னி வீரர்களின் அட்டகாசம்! கொல்லன் வீதியிலேயே ஊசி விற்ற இந்தியா!
இந்திய, பாகிஸ்தான் போரில் பல அருமையான நிகழ்வுகள் நடந்ததும் அது ஒன்றன்பின் ஒன்றாக வெளிவந்துகொண்டு உள்ளது.
1970 களில் இந்தியா ஸ்வீடனின் போஃபோர்ஸிடம் விமான எதிர்ப்பு பீரங்கிகளை வாங்கியது. அன்றைய காலகட்டத்தில் விமானங்கள் மெதுவாக பறந்ததால், அதை சுடுவதற்கு L70 என்ற பீரங்களை இந்தியா வாங்கியது. அதன் செயல்பாடுகள் மிக சிறப்பாக இருந்தது. அதனால் அதை இந்தியாவில் உற்பத்தி செய்யும் உரிமையை வாங்கி இங்கேயே உற்பத்தியும் செய்தோம்.
ஆனால் போர் விமானங்களின் மேம்பாடுகளாலும், அதன் வேகம் அதிகரிப்பாலும் அந்த டாங்குகள் அதன் இலக்கை அடைவதில் தொய்வு ஏற்பட்டு, அது தேவை அற்றதாகிப் போனது. அதனால் அது அவுட்டேட்டட் என்று அதன் உரிமத்தை சொற்ப விலைக்கு ஸ்வீடனின் ஃபோபார்ஸ் நமக்கு விற்றுவிட்டது.
அது அப்போதைக்கு மேன்யூல் ஆபரேஷனில் இருந்தது, அதை கொஞ்சம் கொஞ்சமாக ஆட்டோமேட் செய்து அதை நவீனமாக்கி, அதில் கணினியின் இணைப்புடன் மேம்படுத்தி, அதில் சில அறிவுசார் (Artificial Intelligence) விஷயங்களையும் புகுத்தி அதிநவீனமாக்கிவிட்டது.
சமீபத்தில் பாகிஸ்தான் ஏகப்பட்ட சிறிய, பெரிய ட்ரோன்களை ஏவி, நமது S-400 போன்ற முக்கிய வான் தடுப்பு பேட்டரிகளை வீணடிப்பது என்பது அவர்களது திட்டம். அதாவது ஒரு பேட்டரியின் விலை பில்லியனில் என்றால் அதம் திட்டம் என்ன என்பதை யோசித்தால் புரியும்.
ஆனால் நமது வான்பாதுகாப்பு என்பது நான்றடுக்கு கொண்டதாக மாற்றி அதில் கடைசி அடுக்காக S-400 பயன்படுத்தப்பட்டது. அதுவும் அதன் எடை, வேகம், போன்றவற்றை Artificial Intelligence மூலம் அதை ட்ரெய்ன் செய்து, வித்தியாசப்படுத்தி அதற்கு ஏற்ப தாக்கும் திறனை ஏற்படுத்தி இருந்தது.
அதனால் ஒரு சாதாரண ட்ரோன், சைசில் பெரியதாக இருந்தால் அது சில லட்சங்களில் வாங்கிவிடலாம். ஆனால் அதற்கு கோடிக்கணைக்கில் உள்ள ராக்கெட் ஏவுகணை பயன்படுத்துவது எப்படி முட்டாள்தனமோ, அதை செய்வார்கள் என்று சீனா, பாகிஸ்தான் எதிர்பார்த்தது.
ஆனால் இந்தியா அவற்றை இனம் பிரித்து சரியான கைனெடிக் சிறுரக ஏவுகணைகள் அல்லது L70+ பீரங்கிகளை அல்லது நான்-கைனெடிக் ஆயுதங்களை பயன்படுத்தி அதன் செயல்பாடுகளை எலெக்ட்ரானிக் வார்ஃபேர் மூல குளப்பி அழித்தது.
இதில் நிறைய விஷயங்கள் வீடியோ கேம்போல நவீன L70+ பீரங்கி குண்டுகளை பயன்படுத்தி அழித்தது. அதற்கு.
முந்தைய தலைமுறை இராணுவ வீரர்கள் பொறுத்தமில்லாதவர்கள் என்பதால் அக்னிவீரின் மூலம் இராணுவத்தில் சேர்ந்த பப்ஜி விளையாண்டவர்களை பயன்படுத்தி பாகிஸ்தானின் ட்ரோன்களை விளையாட்டாக நாசப்படுத்தி விட்டது இந்தியா.
அதாவது பாகிஸ்தான் எதிர்பார்த்த பெரிய ராக்கெட்டுகளை பயன்படுத்தாமல், சாதாரண பீரங்கி குண்டுகளை பயன்படுதேதி பெரிய ட்ரோன்கள், ராக்கெட்டுகளை அழித்துவிட்டது. அதுவும் நிறைய ட்ரோன்கள் நான்-கைனெடிக் எனும் எலெக்ட்ரானிக் வார்ஃபேர் மூலம் லட்சங்கள் விலை கொண்ட அந்த குண்டுகள் கூட பயன்படுத்தவில்லை..
அதற்கு மேற்சொன்ன L70 பீரங்கியின் மேம்பாடு அதை தயாரித்த ஸ்வீடன் கம்பெனிக்கு சர்ப்ரைஸை கொடுத்து சபாஷ் சொல்ல வைத்தது மட்டுமல்ல அதை வாங்கவும் தூண்டியது. ஆனால் அதற்கு ஒரு சிக்கல், இப்போது அதை வாங்க வேண்டுமென்றால், அதன் உரிமம் இந்தியாவிடம் உள்ளதால் செலவு அதிகமாகுமே என்று யோசிக்கவைத்துள்ளது. அதாவது கொல்லன் வீதியில் இந்தியா ஊசி விற்கிறது என்றால் மிகையில்லை!
அதுமட்டுமில்லாமல் D4 (Drone, Detect, Deter, Destroy) என்ற வான்பாதுகாப்பும், இந்தியாவில் Make In India மூலமும், நிறைய ஸ்டார்ட்டப்களில் செய்யும் நவீன ட்ரோன் வார்ஃபேர் உற்பட பல விஷயங்கள் உலகை ஆச்சரியத்தில் மட்டுமல்ல, நம் அண்டை எதிரிகளுக்கு பயத்தையும் ஏற்படுத்திவிட்டது.
அதைவிட தைவான், பிலின்பைன்ஸ் போன்று சீனாவால் பாதிக்கப்பட்ட நாடுகள் தீபாவளியே கொண்டடி விட்டது. ஏனென்றால் இந்த போர் என்ற சட்டை மட்டும்தானே பாகிஸ்தாப், அதன் பின்னஅல் இருந்தது சீனாதானே! அதுவும் அவர்கள் சேட்டிலைட் டேட்டா முதல், அவர்கள் டெக்னீஷியன்களே பாகிஸ்தானில் இருந்து இயக்கி இருக்கிறார்கள்.
இதில் அக்னிவீர்கள் இளைஞர்களாக இருப்பதால் இதுபோன்ற லேட்டஸ்ட் புரிதல் சிறப்பாக உள்ளது. ஆனால் அறிவியல் மாற்றங்கள் வேகமாக நடப்பதால் அவர்களே சில வருடங்களுக்கு பிறகு அவுட் டேட் ஆகிவிடுவார்கள். அதனால்தான், அடுத்த சில ஆண்டுகளில் (5?)அவர்கள் பணி முடிந்து 75% ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்று வெளியே வந்துவிடுவார்கள்.
அப்போது அவர்களுக்கு நல்ல ஓய்வூதியம் கிடைக்கும். அவர்களுக்கு தொழிலும் தெரிந்திருப்பதால், அவர்கள் ஆயுத தொழிற்சாலைகளில் புதிய ஆயுத சோதனைகளை செய்வதற்கு மிகவும் தகுதியுடையவர்கள் ஆகிவிடுவார்கள். அவர்களுக்கு நல்ல சம்பளத்தில் வேலையும் கிடைக்கும்.
அதே சமயம் புதியவர்கள் மீண்டும் பணியில் அமர்த்தப்படுவார்கள். இப்படி ஓய்வு பெற்ற இராணுவ வீரர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். அதனால் இந்தியாவிற்கு ஒரு போர் ஏற்பட்டு அதிக இராணுவ வீரர்கள் தேவைப்பட்டால், ஏற்கனவே நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட இவர்களை இந்திய ராணுவம் பயன்படுத்திக்கொள்ளும்..
புதிய டெக்ன்லாஜியை, அதில் ஏற்படும் மாற்றங்களை பயன்படுத்த இளைஞர்கள் தேவை. அதனால்தான் எந்த ராணுவத்தின் சராசரி வயது குறைவாக உள்ளதோ அதன் செயல்பாடுகள் சிறப்பாக இருக்கும். அக்னிவீரருக்கு முன்பு நமது இராணுவத்தின் சராசரி வயது மிகவும் அதிகமாக இருந்தது. இப்போது அது வெகுவாக குறைய தொடங்கி உள்ளது.
அதுமட்டுமல்ல, இராணுவத்தின் ஒரு மிகப்பெரிய செலபினம் என்பது ஓய்வூதியம். ஆனால் இந்த அக்னிவீர்களுக்கு ஐந்தாண்டு பணி முடிந்தபின்னர் ஒரு பெரிய தொகை கொடுக்கப்படுகிறது, ஆனால் ஓய்வூதியம் இல்லை என்பதால் வருங்காலத்தில் இராணுவத்தின் ஓய்வூதிய செலவு தொகை வெகுவாக குறையும் என்கிறார்கள்.
ஆம், 25% அக்னி வீரர்கள் அல்லது தேவையான அளவிலான சிறந்தவர்களை இராணுவம் தொடர்ந்து நீண்ட பணியில் எடுத்துக்கொள்கிறது என்றால், அவர்கள் பணி ஓய்வுக்கு பின் அவர்களுக்கு மட்டும் ஓய்வூதியம் கொடுக்க வேண்டும் என்பதால் அடுத்த 30 ஆண்டுகளில் இந்திய ராணுவத்தின் ஓய்வூதிய செலவினம் பெருமளவில் குறையும்.
எனவே இந்தியாவின் பாகிஸ்தானுடான போரில், இந்தியாவின் போர் யுக்திகள் மட்டுமல்ல, அதன் பொருளாதாரா யுக்திகள் இப்போது நமது எதிரியான சீனா உற்பட மேற்கத்திய நாடுகளால் உற்று பார்க்கப்பட்டு ஆராயப்படுகிறது.
இந்த இந்திய- பாகிஸ்தான்(சீன) போர் உலகிற்கு பல புதிய யுக்திகளை கடந்த 10 ஆண்டுகளாக புகுத்தியது வெளிவர துவங்கியுள்ளது.
இந்தியா பற்றி தெரிந்ததாலும், இதன் முக்கியத்துவம் அறிந்ததால், சீனா, அக்னிவீர் வந்தபோது அதற்கு எதிராக போராட கோடி கோடியாய் கொட்டி போராட வைத்தது ஏன் என்பது நமக்கு இப்போது புரியுமல்லவா? எனவே இந்திய அரசின் நிலைப்பாடுகளை எமோஷனால பார்ர்க்க கூடாது.
இந்தியா இந்த 88 மணி நேர போரில் 88 ஆண்டுகளாக பயன்படுத்திய போர் யுக்திகளை மாற்றி, ஒரு மகத்தான சாதனையை எல்லா துறைகளிலும் செய்தது என்பதை நாம் மட்டுமல்ல உலகமே புரிந்துகொள்ள தொடங்கி இருக்கிறது.
அதன் விளைவாக மேற்கத்திய நாடுகளின் ஆயுதங்கள் குப்பைகளாக மாற துவங்கிவிட்டது. ஆனால் அந்த குப்பை ஆயுதங்களின் உரிமத்தை இந்தியா கேட்டால் கொடுக்குமா என்றால், போஃபோர்ஸ் அனுபவத்தில் சந்தேகம் என்றாலும், அவர்கள் பொருளாதார நிலை, விற்கும் நிலையில் நிறுத்திவிட்டது.
காலம் ஒரு நாள் மாறும், கவலைகள் யாவும் தீரும்! இப்போது வண்டியில் ஓடம்!





