தர்ஷனா இது ? வைரலாகும் புகைப்படம் !

Published:

dharshan - 2026
file pic

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்கும் போட்டியாளர் தர்ஷன் இலங்கை தமிழர் ஆவார். இவர் யாரையும் சாராமல் இருக்கின்ற குணம் மற்றும் தவறை தட்டிக்கேட்கும் தைரியம் முதலியவற்றால் மக்களின் மனதை ஈர்த்துள்ளார்.

பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களில் அதிக ரசிகர்களைக் கொண்டவர் என்றே சொல்லாம். அந்தளவுக்கு நேர்மையாக விளையாடி வருகிறார் தர்ஷன்.

tharshan - 2026
file pic

மேலும் டாஸ்க்கின் போதும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். தர்ஷனுக்கு வனிதாவை பிடிக்கவில்லை என்பதும், அவரின் பேச்சை கேட்காமல் இருக்கிறார் என்பதும் மக்களுக்கு அவரை பிடிக்கும் காரணங்களில் முக்கியமான ஒன்று.

கடந்த வாரம் பிக்பாஸ் கொடுத்த பள்ளிக்கூட டாஸ்க்கின் போது தர்ஷன் தனது பள்ளி ஆசிரியர் தூசிதரன் குறித்து உருக்கமாக பகிர்ந்துகொண்டார். இந்நிலையில் நேற்றைய எபிசோடில் கமல், போட்டியாளர்கள், குறிப்பிட்ட ஆசிரியர்களை நிகழ்ச்சியில் பேச வைத்தார்.

dharshan 1 - 2026
file pic

தர்ஷன் குறிப்பிட்ட அவரின் தூசிதரன் ஆசிரியர் அவருடன் பேசினார். அப்போது நிகழ்ச்சியில் வெற்றிப்பெற வேண்டும் என்று தர்ஷனை வாழ்த்தி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

ALSO READ:  அருந்தமிழ் 50: திறனாய்வு!

இந்நிலையில் தர்ஷன் பள்ளிக்கூட நாட்களில் அத்லெட்டிக் போட்டியில் வெற்றி பெற்றபோது அதற்கான சான்றிதழுடன் பள்ளி ஆசிரியர் தூசிதரனுடன் எடுத்த போட்டோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

Related articles

Recent articles

spot_img