பாகிஸ்தானியர்கள் – ஆபத்தான அச்சுறுத்தல்கள்! இந்தியர்கள் – ஒழுக்கமானவர்கள்: ஒப்பிட்ட துபை அதிகாரி!

அடடே... அப்படியா? இந்தியா உலகம் சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
dhahi khalfan facebook - 2026
  • துபையின் உயர் பாதுகாப்பு அதிகாரி பாகிஸ்தானியர்களை இந்தியர்களுடன் ஒப்பிட்டார்.
  • பாகிஸ்தானியர்கள் வளைகுடா சமூகங்களுக்கு “ஆபத்தான அச்சுறுத்தல்” என்றாலும், இந்தியர்கள் “ஒழுக்கமானவர்கள்” என்று அவர் கூறினார்.

துபையில் உயர் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் பாகிஸ்தானியர்களை இந்தியர்களுடன் ஒப்பிட்டு, பாகிஸ்தானியர்கள் “வளைகுடா சமூகங்களுக்கு ஆபத்தான அச்சுறுத்தல்” என்றாலும், இந்தியர்கள் “ஒழுக்கமானவர்கள்” என்று கூறினார்.

துபையில் போதைப்பொருள் மோசடி சோதனையின் போது, துபை பொது பாதுகாப்புத் தலைவர் தாஹி கல்பான், வளைகுடா நாடுகளுக்குள் பாகிஸ்தானியர்கள் போதைப்பொருட்களைக் கொண்டு வருவதாகக் குற்றம் சாட்டி அரபு மொழியில் தொடர்ச்சியான ட்வீட்களை வெளியிட்டார்.

துபை முன்னாள் போலீஸ் படைத் தலைவரான கல்பன், தனது நாட்டிலுள்ள மக்களுக்கு “பாகிஸ்தானியர்களை வேலைக்கு அமர்த்த வேண்டாம்” என்று அறிவுறுத்தினார். பாகிஸ்தானியர்களை வேலைக்கு அமர்த்துவதை நிறுத்துவது அவர்களின் “தேசியக் கடமை” என்று அவர் கூறினார்.

அவரது டிவீட்களில், மேலும் சூழலை மோசமாக்கும் விதத்தில், இந்தியர்கள் ஒழுக்கமானவர்கள், அவர்களுக்கு வேலைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கல்பான் கூறினார் (அச்சச்சோ!).

சந்தடி சாக்கில், பங்களாதேஷை சேர்ந்தவர்களையும் ஒரு தாக்கு தாக்கியுள்ளார் கல்பான்! பாகிஸ்தானியர்கள் ‘தங்கள் குற்றப் போக்குகளின் காரணமாக’ பங்களாதேஷியர்கள் செய்வது போன்ற விரிவான பாதுகாப்பு சோதனைகளை எதிர்கொள்ள வேண்டும் என்று கூறினார்.

https://twitter.com/zeebahashmi/status/981086058959065088

துபை பாதுகாப்பு அதிகாரியின் இந்தத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாக்கிஸ்தானிய செய்தித்தாள் டானில் ஓர் செய்தி வெளியிடப் பட்டுள்ளது.

அதில், “மற்ற நாடுகளைச் சேர்ந்தவர்களை விட, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் குடியிருக்கும் பாகிஸ்தானியர்களின் குற்றச் செயல்களை நிரூபிக்கும் அரசாங்க தரவுகளும் எதுவும் உடனடியாக கிடைக்கவில்லை” என்று கூறியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.