ஆரோக்கிய சமையல்! உடல் இளைக்க இதை சாப்பிடுங்க

Published:

thinai rice - 2026

திணை அரிசி உப்புமா

தேவையானவை:

திணை அரிசி – ஒரு கப்,

வெங்காயம், கேரட், குடமிளகாய் (சின்னது) – தலா ஒன்று,

பச்சைப் பட்டாணி – அரை கப்,

காய்ந்த மிளகாய் – 2,

கடுகு – அரை டீஸ்பூன்,

உளுத்தம்பருப்பு – ஒரு டீஸ்பூன்,

பெருங்காயத்தூள் – சிறிதளவு,

மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை,

கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு,

எண்ணெய் – ஒரு டீஸ்பூன்,

உப்பு – தேவையான அளவு.

thinai uppuma - 2026

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் தாளிக்கவும். நறுக்கிய வெங்காயம் சேர்த்து, வதங்கியதும் பச்சைப் பட்டாணி, பொடியாக நறுக்கிய கேரட், குடமிளகாயை சேர்க்கவும்.

இதில், ஒரு கப் திணை அரிசிக்கு இரண்டு கப் என்ற விகிதத்தில் தண்ணீர் ஊற்றவும். கொதித்ததும் உப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லி, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் போட்டு, திணை அரிசியை போட்டு மூடி, அடுப்பை ‘சிம்’மில் வைக்கவும். 10 நிமிடம் கழித்து கிளறி இறக்கவும்.

ALSO READ:  தமிழர்கள் பெருமைப்பட வேண்டிய தருணம்!

Related articles

Recent articles

spot_img