மதுவை கடத்திய மாது! போலிசில் சிக்கினார்!

அடடே... அப்படியா? உள்ளூர் செய்திகள் சென்னை தமிழகம் பொது தகவல்கள்
ligar - 2026

சென்னையில் உள்ள காவல்துறையினருக்கு உளவுத் துறை மூலம் ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது. இதை அடிப்படையாகக் கொண்டு, புளியந்தோப்பு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அவ்வழியே இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த பெண்ணை, தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அவரது வாகனத்தில் இருந்து 100 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதையடுத்து அவரைக் கைது செய்து காவல்துறையினர் விசாரணை செய்தனர்.. அதில் அப்பெண்ணின் பெயர் கவிதா என்பதும் அவர் வயது 34 என்பதும், அவர் புளியந்தோப்பு அருகே உள்ள கே.எம்.கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.

criam 1 - 2026

அவர் பெரம்பூர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் இருந்து ஒவ்வொரு பாட்டிலுக்கும் ரூ.5 கொடுத்து மது பாட்டில்களை வாங்கிச் சென்றுள்ளார். இவற்றை கவிதாவும், அவரது தாயாரும் சேர்ந்து சட்டவிரோதமாக கூடுதல் விலைக்கு விற்று வருகின்றனர்.என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

இதுதொடர்பாக இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையில் கவிதாவின் தந்தை துரை, கஞ்சா விற்பனை, கொலை உள்ளிட்டவை தொடர்பாக 20 வழக்குகளில் தொடர்பிருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.