IMG 20190903 WA0034 - 2026

கின்னஸ் ரிகார்ட் பெறப் போகும் மயில்தோகை விநாயகர்.

ஶ்ரீகாகுளம் மாவட்டம் பாலகொண்டா நகரத்தின் காப்பு வீதியில் உற்சவ கமிட்டி இந்த வருடம் களிமண் விநாயகருக்கு இரண்டு லட்சத்துக்கு மேல் மயில் தோகைகளை ஒட்டி அற்புதமான விநாகர் விக்ரகம் தயாரித்துள்ளார்கள். 45ஆயிரம் ரூபாய் செலவில் இருபது நாள் உழைப்பில் உருவான இந்த கணபதி பக்தர்களை அதிக அளவில் ஈர்த்து வருகிறார்.

சுற்றுச் சூழல் மாசு ஏற்படாத வகையில் இது போன்ற புது யுக்திகளோடு விநாயகர் விக்ரகங்கள் உருவாவதை மக்கள் உற்சாகமாக வரவேற்பதாக தெரிவித்தார்கள்.

IMG 20190903 WA0035 - 2026

கின்னஸ் ரிகார்டு பிரதிநிதிகளிடம் இது குறித்து எடுத்துக்கூறியுள்ளதாக தெரிகிறது.

இதேபோல் விஜயவாடாவில் 5000 பூத்தரேக்கு என்னும் இனிப்பு பண்டத்தால் விநாயக விக்கிரம் தயாரித்து மக்களைக் கவர்ந்துள்ளார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending