பிரபல சினிமா இயக்குனர் ராஜசேகர் காலமானார்!

அடடே... அப்படியா? சினி நியூஸ் சினிமா பொது தகவல்கள்
rajasekar - 2026

பிரபல இயக்குநர் மற்றும் நடிகர் ராஜசேகர் உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலை காலமானார்

தமிழில் ‘பாலைவனச்சோலை’ உள்ளிட்ட படங்களை இரட்டை இயக்குநர்கள் ராபர்ட் – ராஜசேகர் இயக்கியுள்ளனர். அவர்களில் ராஜசேகர் முக்கியமானவர்.

பின்னர் அவர் தனித்து சின்னப்பூவே மெல்லப்பேசு, மனசுக்குள் மத்தாப்பு மற்றும் பறவைகள் பலவிதம் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.

பின்னர் நடிகராகவும் மாறிய அவர் பாரதிராஜா இயக்கிய ‘நிழல்கள்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தமிழ் திரையுலகில் கவிஞர் வைரமுத்துவின் முதல் பாடலான ‘இது ஒரு பொன்மாலைப் பொழுது’ பாடலில் இவர் நடித்திருந்தார்.

சமீபமாக அவர் தொலைக்காட்சி நாடகங்களில் நடித்து வந்தார். சரவணன் மீனாட்சி தொடரில் நடித்து மேலும் பிரபலமானார். உடல்நலக்குறைவால் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலன் இன்றி இன்று காலை காலமானார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.