குழந்தை இனி இல்லை! முடிவெடுத்த 11 குழந்தைகளின் தாய்!

அடடே... அப்படியா? உலகம் சற்றுமுன்
- 2026

இங்கிலாந்தில் வரிசையாக 10 ஆண் குழந்தைகளைப் பெற்ற தாய் இறுதியாக பெண் குழந்தையைப் பெற்ற சம்பவம் அந்த தம்பதியினருக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தை சேர்ந்த டேவிட் மற்றும் அலெக்சிஸ் தம்பதியினருக்கு இதுவரை 10 ஆண் குழந்தைகள் உள்ளனர். தற்போது அலெக்சிஸ் 11வது முறையாக தாயாகி உள்ளார் . இந்த பிரசவத்தில் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.

அந்த குழந்தைக்கு கேமரூன் என்று பெயரிட்டுள்ளனர். இந்தக் குழந்தை குறித்து பத்திரிகையாளரிடம் பேசிய அலெக்ஸிஸ் இந்த கர்ப்பம் திட்டமிடப்படாதது எனவும் மேலும் இத்துடன் எங்களுடைய குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை முடிவடையும் எனவும் கூறியுள்ளார்.

39 வயதான அலெக்சிஸ் பகுதிநேர உடற்பயிற்சி பயிற்றுவிப்பாளராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 18 ஆண்டுகளில் 8 ஆண்டுகளாக கர்ப்பமாக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தனக்கு மீண்டும் ஆண் குழந்தைதான் பிறக்கும் என்று மருத்துவர்கள் கூறி விடுவார்களோ என்று அச்சம் அடைந்தேன். ஆனால் மருத்துவர்கள் இன்ப அதிர்ச்சி கொடுத்தனர் அந்த வகையில் பதினோராவது அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது என்று கூறினார் அலெக்சிஸ்.

அலெக்சிஸ் , டேவிட் தம்பதியினருக்கு இதுவரை 2 முதல் 17 வயது வரையிலான குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அனைவரும் அழகான குட்டி கேமரூனை சிறப்பாக கவனித்துக் கொள்வதாகவும் இவர்கள் கூறியுள்ளனர். மிகுந்த மகிழ்ச்சியடைந்த அலெக்சிஸ் செய்தியாளர்களிடம், கர்ப்பம் திட்டமிடப்படாதது என்றாலும், தனது குடும்பம் இப்போது முடிந்துவிட்டதாக உணர்கிறேன், மேலும் குழந்தைகளைப் பெற விரும்பவில்லை என்று கூறினார்.

1 thought on “குழந்தை இனி இல்லை! முடிவெடுத்த 11 குழந்தைகளின் தாய்!”

  1. குடும்பத்தை உருவாக்கச் சொன்னால் ஒரு கிராமத்தை உருவாக்கித் தந்தார் எங்கப்பா – இந்த தமிழ் திரைப்படப்பாடல் நினைவுக்கு வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.