மறியலில் ஈடுபட்ட முதலைகள்! வைரல் வீடியோ!

அடடே... அப்படியா? உலகம் பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
crocdle - 2026

ஆஸ்திரேலியாவில், சாலையில் சென்ற காரை வழிமறித்து சில முதலைகள் படுத்திருந்த வீடியோ காட்சி வலைதளங்களில் தற்பொழுது வைரலாகி வருகிறது.

ஆஸ்திரேலியாவின் வடக்கு பகுதியில் உள்ள காக்கடு என்ற தேசிய பூங்காவுக்கு செல்ல, சுற்றுலா பயணிகள் சிலர் காரில் அர்ன்ஹெம் லாந்து என்ற பகுதியிலிருந்து புறப்பட்டு சென்றுள்ளனர்.

கார் முதலைகள் அதிகம் வாழும் காஹில்ஸ் கிராசிங் பகுதியை அடைந்தபோது, சில முதலைகள் நடுவில் வழிமறித்து படுத்திருந்தன.

முதலைகளை அப்புறப்படுத்தும் நோக்கில் வாகன ஓட்டி தொடர்ந்து ஒலி எழுப்பியுள்ளார். இதையடுத்து, முதலைகள் ஒவ்வொன்றாக சாலையிலிருந்து அகன்றன வாகன ஓட்டி, அந்த வழியை கடந்து சென்றார்.

இந்த வீடியோ காட்சிகளானது தற்போது வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், பலரும் அது ஆபத்து மிகுந்த இடம் என்றும், எப்போது வேண்டுமானலும், அந்த இடத்தில் நீர்வரத்து அதிகரித்து, முதலைகளால் ஆபத்து ஏற்படக்கூடும் என்பதால், அந்த வழியை தவிர்க்கும்படி எச்சரித்து வருகின்றனர்.

இதற்கு முன் கடந்த 2017ம் ஆண்டு 47வயதான நபர் ஒருவர் அந்த வழியாக கடக்க முயன்றபோது, அவரை 3.5 மீட்டர் நீளம் உள்ள முதலை கவ்வி கொன்றது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.