நெல்லையில் கோவில் முன்பு “அல்லாவின் திருப்பெயரால்” போர்டு! இந்து முன்னணி புகாரில் அகற்றம்!

Published:

nellai sidhupooondhurai board - 2026

நெல்லை சிந்துபூந்துறை சொக்கநாத சுவாமி திருக்கோவில் முன்பும் சுவரை ஒட்டியும் கோபுரத்தை மறைத்தும் கோவிலைச் சுற்றி, ‘அல்லாஹ்வின் திருப்பெயரால்’ என தனியார் ஹோட்டல் ஒன்றில் பெயரில் விளம்பரப் பலகை ஊன்றி வைத்திருந்தனர்.

இது, மதக் கலவரத்தைத் தூண்டும் வகையில் உள்ளது என்று கூறி, ஹோட்டல் நியு ரூசி விளம்பர பலகையை அப்புறபடுத்த கோரி பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில், நவ.13 இன்று காலை 12 மணிக்கு சந்திப்பு காவல் நிலையத்தில் இந்துக்கள் திருக்கோவில் பக்தர்கள் சார்பில் இந்துமுன்னணி மூலம் புகார் மனு கொடுக்கப்பட்டது!

இதை அடுத்து, மனு கொடுத்த அரை மணி நேரத்தில் அந்தப் விளம்பர பலகை அகற்றப் பட்டது!

உடனடி நடவடிக்கை எடுத்த மாநகர காவல்துறைக்கு திருக்கோவில் பக்தர்கள் சார்பில் நன்றி தெரிவிக்கப் பட்டது.

Related articles

Recent articles

spot_img