நடிகர் அஜித்தின் மகன் ஆத்விக்கின் 3வது பிறந்த நாள் மார்ச் 2ஆம் தேதி வெள்ளிக்கிழமை நேற்று அமர்க்களகமாகக் கொண்டாடப்பட்டது.
அஜித்திற்கு எந்த அளவுக்கு மதிப்பும் மரியாதையும் கொடுத்து தங்கள் பாசத்தை அஜித் ரசிகர்கள் காட்டி வெளிப்படுத்துகிறார்களோ அந்த அளவுக்கு அவரின் குடும்பத்தின் மீதும் தங்கள் பாசத்தை வெளிப்படுத்துகின்றனர். அதில், அஜித்தின் ரசிகர்கள் அவரது மகன் ஆத்விக்கிற்கு கொடுக்கும் பாசம் தனி ரகம்தான்! ஆத்விக்கின் பிறந்த நாள் என்றாலே போஸ்டர் அடிப்பது, பேனர் வைப்பது, விருந்தளிப்பது, தலைவர் அளவிற்கு உயர்த்தி வசனங்கள் எழுவது என்பது வழக்கமான ஒன்றாகி விட்டது. காரணம், தமிழக நடிகர்களிலேயே தனித்துவமானவராகவும், தனியானவராகவும் சத்தமில்லாமல் விளம்பரம் ஏதுமின்றி தகுதியான நபர்களுக்கு வலியச் சென்று உதவும் உள்ளம் கொண்டவராகவும் விளங்குபவர் அஜித் என்பதுதான்!
மார்ச் 2ஆம் தேதி ஆத்விக்கின் 3வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அந்த நாள் முழுவதும் அஜித்தின் ரசிகர்கள் ஆத்விக்கை டுவிட்டரில் தெறிக்க விட்டனர். ”HBD PRINCE AADVIK AJITH” என்று டிரண்ட் செய்தனர். குட்டி தலை என்று பதிவிட்டு இருந்தனர். சுவரில் ஆத்விக்கிற்கு வாழ்த்து தெரிவித்து போஸ்டர் ஒட்டியது, வாழ்த்துப் பாடல் பாடி யூ டியூபில் பதிவேற்றம் செய்தது என்று அமர்க்களப்படுத்தி விட்டனர்.
Today Veera Chennai AJITH Fans Club Team Arranged #Vedalam Movie Special Show to Celebrate #AadvikAjith Birthday..
‘AJITH FANS’ – Trendsetters of Kollywood For the Reason..👑 pic.twitter.com/jq2cxPgyIL
— AJITHKUMAR FANS CLUB (@ThalaAjith_FC) March 2, 2018
Today Madurai Temple City Ajith Fans Celebrated #AadvikAjith B’Day By Offered Food & Cakes to Orphanage Childrens
Kudos to the Team.. 👏#ThalaWelfareWorks pic.twitter.com/oF8JYLL7bf
— AJITHKUMAR FANS CLUB (@ThalaAjith_FC) March 2, 2018
https://youtube.com/watch?v=I8RYVDj5y9I