விசுவாசம் படத்தின் மூலம் தல அஜித் ரசிகர்களுக்கு 3 சர்ப்ரைஸ் கொடுக்க இருக்கிறார். வீரம், வேதாளம் படங்களைத் தொடர்ந்து சிவா, தல அஜித் கூட்டணியில் மூன்றாவது படமாக உருவாகிறது விசுவாசம். வரும் தீபாவளியை முன்னிட்டு வருகிறது விசுவாசம்.
சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் விசுவாசம் படத்தை பல கோடி ரூபாய் செலவில் தயாரித்து வருகிறது. பில்லா, ஏகன், ஆரம்பம் ஆகிய படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக நயன்தாரா தல அஜித்துக்கு ஜோடியாக நடிக்கிறார். முதல் முறையாக இசையமைப்பாளர் இமான், தல அஜித் படத்துக்கு இசையமைக்கிறார். இப்படி தன் ரசிகர்களுக்கு 3 முக்கிய சர்ப்ரைஸ் கொடுக்கப் போகிறார் தல அஜித்.
விசுவாசம் படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பும் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் ஸ்டுடியோவில் நடைபெறுகிறது. வீரம், வேதாளம் இரு படங்களிலும் வலுவான பிளாஷ் பேக் காட்சிகள் இருப்பதைப் போன்று, விசுவாசம் படத்திலும் அரை மணி நேர பிளாஷ் பேக் காட்சிகள் உண்டாம்.
வீரம் படத்தில் ரயில் ஸ்டண்ட் காட்சிகள் இருந்தது. விவேகம் படத்தில் பைக் சேசிங் காட்சிகள் இருந்தது. தற்போது தயாராகும் விசுவாசத்தில் கார் சேசிங் காட்சிகளும், துப்பாக்கி சுடும் காட்சிகளும் இருக்கும் எனப்படுகிறது. இந்த சண்டைக் காட்சிகளுக்காக வெளிநாட்டு கார் சேசிங் தொழில்நுட்ப கலைஞர்கள் வரவழைக்கப்பட உள்ளார்களாம்.
இப்போதே ரசிகர்கள், விசுவாசம் டீசருக்காக பைத்தியமாகக் காத்திருப்பதாக தங்கள் சமூக வலைத்தளப் பக்கங்களில் குறிப்பிட்டுள்ளனர்.