
சென்னை அயனாவரத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு பெற்றோர்களால் திருமண ஏற்பட்டு செய்யப்பட்டு இருந்தது.
இதை தொடர்ந்து மாப்பிள்ளையின் போனிற்கு ஒரு மா்ம நம்பரில் இருந்து சில புகைப்படங்கள் வந்துள்ளது.
அந்த புகைப்படத்தை பார்த்த மாப்பிள்ளை பதறிபோய் தனது பெற்றோரிடம் சென்று தனக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட பெண்ணிற்கு வேறு ஒருவருடம் தொடர்பு இருப்பதாக கூறி அவருக்கு வந்த புகைப்படத்தை மாப்பிள்ளை தனது பெற்றோரிடம் காட்டி உள்ளார்.
அதில் புதுமணப்பெண் வேறு ஒருவருடன் இணைந்து இருப்பதை பார்த்த மாப்பிள்ளையின் பெற்றோர் திருமணத்தை நிறுத்தி அடுத்த மறுநாளே தங்களது உறவுக்கார பெண்ணுடன் தனது மகனுக்கு திருமணம் நடத்தி வைத்து உள்ளனர்.
இதனைதொடா்ந்து புகைப்படத்தை யார் அனுப்பியது என எண்ணி மணப்பெண்ணின் தந்தை போலீசாரிடம் புகார் கொடுத்து உள்ளார்.

மாப்பிள்ளைக்கு வந்த எண்ணை வைத்து விசாரித்த போது ஒரு இளைஞரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் சில அதிர்ச்சியான உண்ணமைகள் வெளியானது.புகைப்படத்தை அனுப்பிய இளைஞரும் , மணப்பெண்ணும் ஒருவரை, ஒருவா் உயிருக்குயிராக காதலித்து வந்து உள்ளனர்.
இவர்களின் காதலுக்கு மணப்பெண்ணின் பெற்றோர் சம்மதிக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால் திருமணத்தை நிறுத்த மணப்பெண் ஒரு திட்டம் தீட்டியுள்ளார்.

அதன்படி மாப்பிள்ளையின் எண்ணை தனது காதலனுக்கு அனுப்பி காதலனுடன் இருவரும் சேர்ந்து இருக்கும் புகைப்படத்தை மாப்பிள்ளைக்கு அனுப்ப சொல்லி இருக்கிறார்.
அதனை தொடா்ந்து காதலன் இருவரும் சேர்ந்து இருக்கும் புகைபடங்களை அனுப்பி உள்ளார்.
இதைத்தொடர்ந்து போலீசார் மணப்பெண்ணையும் ,காதலனையும் அறிவுரை அளித்து அனுப்பி வைத்தனர்.



