முதியோர் குறைதீர்க்க உதவி எண்கள் 044-24350375–9361272792; தமிழக அரசு அதிரடி அறிவிப்பு.!

அடடே... அப்படியா? உள்ளூர் செய்திகள் சென்னை தமிழகம் நலவாழ்வு பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்

mobile 2 - 2026

சென்னை ஐகோர்ட்டு உத்தரவுப்படி, முதியோர்களின் பிரச்சினைகள் மற்றும் குறைகளை தெரிவித்து உதவிகள் பெற தொலைபேசி எண்ணை தமிழக அரசு அறிவித்துள்ளது.

மூத்த குடிமக்களுக்கு சட்டரீதியான பாதுகாப்பை உறுதிசெய்யும் பொருட்டு பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச்சட்டம்-2007 தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு அதற்கேற்ப விதிகளும் வகுக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது.

Telaphone 1 - 2026

மேலும், முதியோர்களுக்கு தேவையான உதவிகளை பெற கட்டணமில்லா உதவி எண்ணாக சென்னைக்கு மட்டும் 1253 என்ற எண்ணும்,

சென்னை தவிர பிற மாவட்டங்களுக்கு 18001801253 என்ற எண்ணும் பொது சேவை எண்ணாக ‘ஹெல்ப் ஏஜ்’ இந்தியா என்ற தொண்டு நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

Telibhone 3 - 2026

தற்போது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து முதியோர்களும் பயனடையும் நோக்கில், சென்னை ஐகோர்ட்டு உத்தரவுப்படி, முதியோர்களின் பிரச்சினைகள் மற்றும் குறைகளை தெரிவித்து உதவிகள் பெற 044-24350375 என்ற தொலைபேசி எண்ணும், 9361272792 என்ற செல்போன் எண்ணும் அறிவிக்கப்படுகிறது.

old man 1 - 2026

முதியோர்களின் அனைத்து தேவைகள் மற்றும் குறைகளை தெரிவிப்பதற்கு இந்த உதவி எண்களை தொடர்பு கொண்டு பயனடையுமாறு

old man 2 - 2026

தகவல் தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.