அதிர்ச்சி தகவல்! இனி பழைய போன்களில் வாட்ஸ் அப் இல்லை!

அடடே... அப்படியா? தொழில்நுட்பம்
whats app 1 - 2026

பிப்ரவரி மாதத்தில் இருந்து கோடிக்கணக்கான மொபைல் போன்களில் வாட்ஸ்ஆப் செயலியை பயன்படுத்த முடியாது என அதன் உரிமையாளரான ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது..

iOS8 அல்லது அதற்கு முந்தைய மென்பொருளில் இயங்கும் ஆப்பிள் போன்கள், 2.3.7 அல்லது அதைவிடவும் பழைமையான ஆன்டிராய்டு மென்பொருளில் இயங்கும் அனைத்து போன்களிலும் வாட்ஸ்ஆப் கிடைக்காது.

அதே போன்று வின்டோஸ் போன்களில் வரும் 31 ஆம் தேதிக்குப் பிறகு வாட்ஸ்ஆப்பை பயன்படுத்த முடியாது.

whats app - 2026

இந்த வகை போன்களை வைத்துள்ளவர்களால் புதிய வாட்ஸ்ஆப் கணக்குகளை துவக்கவோ, பழைய கணக்குகளை புதுப்பிக்கவோ முடியாத வகையில் ஏற்கனவே தொழில்நுட்ப மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

இதனிடையே அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் தென் அமெரிக்காவின் பல நாடுகளில் வாட்ஸ்ஆப் செயலி முடங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.