இதுவரை யாரும் மோடி பதவி விலகணும்னு கேட்கல… ஏன் தெரியுமா?!

அடடே... அப்படியா? நகைச்சுவை லைஃப் ஸ்டைல்
modi amitsha - 2026

நாட்டில் இவ்வளவு களேபரங்கள் நடந்த நிலையிலும் இதுவரையிலும் யாரும் மோடி பிரதமர் பதவி விலகணும்னு கோரிக்கை வைக்கவில்லை. அவ்வளவு ஏன்… ஒரு கோஷம் கூட எழுப்பவில்லை. காரணம், மோடி போனால்… அடுத்து அமித் ஷா வந்துவிடுவாரே என்ற அச்சம்தான் காரணம்!

இத்தகைய காமெடிகள் இப்போது சமூகத் தளங்களில் வைரலாகி வருகின்றன.

குடியுரிமை திருத்த சட்டம், அயோத்தி தீர்ப்பு, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது என்பன போன்ற, மோடியின் நடவடிக்கைகளின் பின்னே, முழுக்க முழுக்க காரணகர்த்தாவாக இருந்தவர் அமித் ஷா.

முன்னர், மோடியை அடுத்து பாஜக.,வுக்கு உபி.,முதல்வராக இருக்கும் யோகி ஆதித்யநாத் வருவார் என்று கூறப் பட்டது. ஆனால், அதைவிட வலிமையான ஆயுதமாக பாஜக.,வால் கூர் தீட்டப் பட்டவராக அமித் ஷா விளங்குவதால்… இப்போதெல்லாம் எவருமே மோடியே தேவலாம் என்று அவரது ஆதரவாளர் ஆகிவருகிறார்களாம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.