தில்லி வன்முறைச் செய்திகளை வழங்கும்போது… கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க..!

அடடே... அப்படியா? இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
delhi 4 - 2026

தில்லி வன்முறை தொடர்பாக செய்தி வெளியிடும் போது கடைபிடிக்க வேண்டிய விதிகள் பற்றி மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது!

தில்லி வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக செய்திகளை அளிக்கும் போது, எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அது காட்சி ஊடகங்களைக் கேட்டுக் கொண்டிருக்கிறது.

மத ரீதியான தாக்குதலை ஏற்படுத்தும் விதத்திலோ, இரு குழுக்கள், இரு இனங்களுக்கு இடையிலான மோதல் போக்கை வளர்க்கும் உள்நோக்கம் கொண்ட செய்திகள், படங்கள், வீடியோக்களை வெளியிடுவதில் கவனம் தேவை என்றும், அவதூறான கருத்துகளைத் தாங்கியிருக்கும் செய்திகள், அரைகுறை உண்மைத் தன்மை கொண்ட செய்திகளையோ வெளியிடாமல் பார்த்து கொள்ள அறிவுறுத்தியுள்ளது.

தனியார் சேட்டிலைட் தொலைக்காட்சி நிறுவனங்கள் இதனைப் பின்பற்றுமாறு டிவி சேனல்களை கேட்டுக் கொண்டிருக்கிறது.

delhi violance - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.