krishnasamy - 2026

போராட்டகளத்தில் துப்பாக்கி ஏந்தவே பயம் கொள்ளாதவா்கள் அரசு அதிகாரிகளுக்கா பயப்பட போகிறாா்கள் என்று கேள்வி எழுப்பினார் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி.

மேலும், குடியுரிமைத் திருத்தச் சட்ட விவகாரத்தில் சம்மன் இல்லாமல் ஆஜா் ஆவது போல் சம்பந்தம் இல்லாமல் இஸ்லாமியா்கள் போராடி வருகின்றனா். சில அரசியல்வாதிகள் தங்களின் உள் நோக்கத்திற்காக இஸ்லாமியா்களை தவறாக பயன்படுத்தி வருகின்றனா் என்றார் அவர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் அவர் செய்தியாளா்களிடம் பேசினார். அப்போது அவர், குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாகவும், குடியுரிமைச் திருத்தச் சட்டம் குறித்து பொது மக்களுக்கு விளக்கம் அளிக்கவும் தமிழகம் முழுவதும் 100 பொதுக்கூட்டங்கள் நடத்த உள்ளோம்.

குடியுரிமைத் திருத்தச் சட்ட விவகாரத்தில் சம்மன் இல்லாமல் ஆஜா் ஆவது போல் சம்பந்தம் இல்லாமல் இஸ்லாமியா்கள் போராடி வருகின்றனா். சில அரசியல்வாதிகள் தங்களின் உள் நோக்கத்திற்காக இஸ்லாமியா்களை தவறாக பயன்படுத்தி வருகின்றனா்.

போராட்டக் களத்தில் துப்பாக்கி ஏந்தவே பயம் கொள்ளாதவா்கள் அரசு அதிகாரிகளுக்கா பயப்பட போகிறாா்கள் ? என்று கேள்வி எழுப்பினார்.

ALSO READ:  புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!

தொடர்ந்து, காவிரி டெல்டா பகுதியை வேளாண் மண்டலமாக அறிவித்ததில் எனக்கு உடன்பாடு இல்லை. .. என்றார் கிருஷ்ணசாமி.

மேலும், அரசு நிறுவனங்களில் பணியாற்றும் அதிகாரிகள் சிலர், அந்த நிறுவனத்திற்கு குந்தகம் விளைவிக்கின்றனா். அரசு ஊழியா்கள் தங்களை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
ஓட்டு பயத்தில் சிலா் மத்திய அரசின் திட்டங்கள் மற்றும் அறிவிப்புகளுக்கு கருத்து சொல்வது இல்லை. நாங்கள் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு நல்லதை பொது மக்களுக்கு தெரிவித்து வருகிறோம் என்றார் டாக்டர் கிருஷ்ணசாமி.

One response to “போராட்டக் களத்தில் துப்பாக்கி ஏந்தவே பயம் கொள்ளாதவா்கள் அரசு அதிகாரிகளுக்கா பயப்பட போகிறாா்கள்?”

  1. 400 கத்திக்குத்துக்கள் ஐபி அதிகாரியின் உடம்பில் .சாக்கடைக்குள் மூழ்கடிக்கப்பட்டு இருக்கிறார் . கண்கள் தோண்டப்பட்ட நிலையில் பிணமாக… இவ்வளவு கொடூரம் உள்ளவர்கள் தான் மேற்படி குடியுரிமை போராட்டத்தில் அரசுக்கு எதிராக போராடியவர்கள் செய்த செயல். நீங்கள் சொல்வது போல் துப்பாக்கி மட்டுமல்ல வெடுகுண்டுகள் கூட தூக்க தயங்காதவர்கள் தான். ஆனால்.. இவர்கள் சொல்வது ..செய்வது…சொல்வது எல்லாமே அமைதி மார்க்கமாம். இவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் அரசியல் காட்சிகள் சிந்தித்து பார்க்கவேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending