பொதுத் தேர்வை விட்டு விட்டு காதல் தேர்வு எழுத ஓட்டம்! பஸ் ஸ்டாண்டில் மாட்டிக் கொண்ட பட்சி!

அடடே... அப்படியா? தமிழகம் பொது தகவல்கள்

love - 2026

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் பகுதியில் ஒரு அரசு உயர்நிலைப்பள்ளியில் 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் சம்பவத்தன்று வீட்டிலுள்ள இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு வெளியில் சென்றுள்ளார்.

நீண்ட நேரமாகியும் மாணவி வீட்டிற்கு வராததால், அவரது பெற்றோர் பள்ளி, அதன் சுற்றுவட்டாரப் பகுதி என பல இடங்களில் தேடியுள்ளனர். இதையடுத்து இதுகுறித்து பெருமாநல்லூர் காவல்துறையில் புகார் அளித்தனர்.

bus stand - 2026

அப்போது அந்த மாணவி பள்ளிக்கும் போகவில்லை என தெரியவந்தது. இதனால் பள்ளி முடிந்ததும் அந்த மாணவியுடன் உடன் படிக்கும் மாணவிகளை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதுகுறித்து அறிந்த மற்ற மாணவிகளின் பெற்றோர் காவல்நிலையம் வந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

விசாரணையில் மாணவியுடன் உடன் படிக்கும் மாணவன் ஒருவனும் காணாமல் போனது தெரியவந்தது.இதனால் பள்ளி மாணவர்களை தீவிரமாக தேடியதில் அவர்கள் திருப்பூர் புதிய பஸ் நிலையத்தில் இருப்பது தெரியவந்தது.

police station 1 - 2026

இதையடுத்து அவர்கள் இருவரையும் பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். அதில், இருவரும் காதலிப்பதாகவும், நண்பரின் அறையில் மாணவனுடன் தங்கியிருந்ததும், ஊரைவிட்டு ஓடிச்செல்ல முடிவெடுத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து இருவரின் பெற்றோரையும் வரவழைத்த காவல்துறையினர், மாணவர்களுக்கு அறிவுரை கூறி பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.